26
ஆட்சியில் வாழக் கொடுத்து வைத்த பதினாறு வயது இளைஞனுக்கு அது இயல்பு தானே.
'கிடோனி, இக்கே வா' என்று அழைத்தார், என் தத்தை கொஞ்சம் பெஸ்னோனி பிடித்து வரப் போவோம் என்பர். பெஸ்ஸோனி என்பது, ஹின்யார், மிக மிருதுவான ருசி மிகுந்த ஒரு வகை மீன் இளஞ் சிவப்பு நிறச் செதில்கள் இருக்கும் அதற்கு அடியிலே வெகு ஆழத்திலே பவளக் கொடிகளிடையே வசிப்பதனால் அதைய பவள மீன் என்றும் சொல்வார்கள். நங்கூரமிட்டுப் படகை நிறுத்திக் கொண்டு, ரொம்பப் பாசமான தூண்டில் போட்டுத் தான் அதைப் பிடிக்க வேண்டும். அழகான மீன் அது.
ஆகவே, வெற்றிகரமான மீன் பிடிப்பு நிச்சயம் என்று எதிர்பார்த்துக் கொண்டே தாங்கள் கிளம்பினோம், என் தந்தை பலசாலி. அனுபவம் நிறைந்த மீனவர். ஆனால் இந்தப் பயணம் கிளம்புவதற்குக் கொஞ்சநாள் முந்தித் தான் சீக்கிலே கிடந்தார். நெஞ்சிலே வலி; வாத நோயினால் விரல்கள் திருகி முறுகிப் போயின. செம்படவர்களுக்கு வரக்கூடிய வியாதிதான் இது.
இப்போ கரையிலேயிருந்து தாலாட்டுகிற மாதிரி நம்ம மேலே வீசுகிறதே, லேசாக நம்மைக் கடலை நோக்கி முன்னுக்குத் தள்ளிக் கொண்டு பாய்கிறதே, இந்தக் காற்று ரொம்பக் கபடு நிறைந்த கெட்டபய காற்று. நீர் எதிர்பாராத நேரத்திலே குபீர்னு கிளம்பிப் பாயும் அங்கே. நீர் அதுக்கு எதோ தீங்கு செய்துவிட்டது போல, அது வாரிச் சுருட்டிக் கொண்டு உம்ம மேலே பாயும். உமது படகைப் பறக்கடிக்கும்; சில சமயம் நீர் தண்ணீரிலேயிருக்கும்படி தோணியைத் தலைகுப்புறச் சுழற்றியடிக்கும். கண் சிமிட்டுகிறதுக்குள்ளே நடக்கிற காரியம் இது. சபிக்கவோ, கடவுள் பெயரைச் சொல்லவோ உமக்கு நேரம் கிடைக்கிறதுக்கு முன்னாடி செயலற்று அந்தரடிக்கும்படியாக நீர் ரொம்பத் தொலைவிலே எறியப்பட்டு விடுவீர். இந்தக்