உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4

கம்புக்கள்; அதை விட இனியதும் அழகானதும் வேறு எதுவுமே கிடையாது.'

      'செப்புக் காசுகள், வெள்ளிக் காசுகளை விட மிக முக்கியமானது உழைப்பு. அதற்காக நீங்கள் பெறக் கூடிய ஊதியத்தை விட அதிக மதிப்பு வாய்ந்தது உழைப்பு. பணம் மறையும்; உழைப்பின் பலன் நிலைத்து நிற்க்கும்.
       இவ்விதம் மனித மாண்புகளை அழகுபடுத்திக் காட்டும் - வாழ்வின் வளர்ச்சிக்கு ஒளி சிந்தும் - சில கதைகளை இங்கு தமிழாக்கியிருக்கிறேன்.
       இதனுல் 'உலகநீதிக் கதைகளையோ, 'பஞ்ச தந்திரக் கதை' வாரிசுகளையோ தான் இப்புத்தகத்தில் எதிர்பார்க்க முடியும் என்று எண்ண வேண்டியதில்லை.
       இப்புத்தகத்தில் உள்ளவை கார்க்கியின் சிறந்த சிறு கதைகளில் சில. அழகும், உணர்வும், இனிமையும் உயிர்ப்பும் கலைநயமும் காம்பீர்யமும் நிறைந்த எழுத்துக்கள் இவை. உண்மையான இலக்கியத்திற்குச் சரியான எடுத்துக்காட்டுமாகும்.
      'பெப்பி' கதையைப் படித்ததுமே இதை நீங்கள் உணர முடியும். புத்தகம் பூராவையும் படித்தவுடன் என் கூற்றை நீங்கள் ஆமோதிப்பீர்கள். இதில் எனக்குச் சந்தேகமே கிடையாது.

திருவல்லிக்கேணி } வல்லிக்கண்ணன்

 நவம்பர் 1951