உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

நின்றார்கள். அவனும் கூலிக்கு வேலை செய்வது போல அவர்கள் கொடுக்கும் பொருளை நச்சிப் போர் செய்தான்.

புலவர்:-அப்படிச் சொல்வது நியாயம் ஆகாது. அவன் கூலிக்குப் போர் செய்யவில்லை. அவன் தங்களுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தான் என்பதை நினைந்து அரசர்கள் அவனுக்குப் பரிசில் தந்தார்கள்; காணிக்கை செலுத்தினர்கள் என்று சொன்னல்கூடத் தவறாகாது. அவன் அந்தப் பொருளை என்ன செய்தான்? தன் இன்ப வாழ்க்கைக்காகச் செலவிடவில்லை. என் போன்ற புலவர்களுக்கு வாரி வாரி வழங்கினான்.

அரசன்:-(கைகொட்டிச் சிரித்து) ஆகா! இப்போது தெரிகிறது உண்மை. அரசர்கள் தந்த பணத்துக்காக மலையமான் போரிட்டான். அவன் தந்த பொருளுக்காக நீங்கள் அவனைப் புகழுகிறீர்கள்; நீர் என்னுடன் சொற்போரிடுகிறீர்.

புலவர்:-அரசே, நான் கைக்கூலி வாங்கிக்கொண்டு ஒரு சார்பாகப் பேசுகிறேனென்று தாங்கள் எண்ணுவது அறம் அன்று. மலையமான் இன்று உயிரோடு இல்லை. அவன் தயையை எதிர்நோக்கி நான் அவன் புகழைப் புனைந்துரைக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. எங்களுக்கு எல்லாரும் நம்பினர். யாரும் பகைவர் இல்லை. உண்மையைச் சொல்வது எங்கள் அறம். இது அரசர்பிரானுக்கு இப்போது கசப்பாக இருக்கும். ஆராய்ந்து பார்த்தால் என்னுடைய வார்த்தைகளின் உண்மை விளங்கும். அதிகமாகப் பேச்சை வளர்த்த நான்தான் காரணமானேன். இதோ நான் விடிை பெற்றுக் கொள்கிறேன்.

(புலவர் விரைவாகப் போகிறார்,தடியை
ஊன்றிக்கொண்டு.)

இ. கதை-8 -