பக்கம்:ஆதி அத்தி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி § 3 மருதி: உங்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சி உண்டாகும் படி நான் ஆடக்கூடிய பயிற்சி பெற்றதற்காக நான் எல்லையில்லாத இன்பம் அ ைட கி றே ன்...நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது. தெரியவும் வேண் டாம்...ஆனலும் நீங்கள் மகிழ்ச்சியடைந்தால் எனக்குப் போதும்... அத்தி: மருதி, என் கண்ணே... மருதி: கண்ணே என்று என்னை அன்போடு அழைக் கிறீர்களா? அத்தனை பாக்கியம் நான் செய்திருக்கிறேன? ஆஹா, என் உள்ளம் காட்டாற்று வெள்ளம்போல... மலையிலிருந்து துள்ளிக் குதித்துவரும் வெள்ளம்போல... துள்ளிக் குதிக்கின்றது. அத்தி (துணுக்குற்று): காட்டாற்று வெள்ளமா? (அவன் தலை சுழல்கிறது. அவன் ஆதிமந்தியின் வார்த்தைகளை நினைந்து கலங்குகிருன். தலை யிலே இரு கைகளையும் சேர்க்கிருன்.) மருதி: ஏன் அப்படிக் கலவரத்தோடு பார்க்கிறீர்கள்? ஆற்று வெள்ளம் என்ற்வுடனே பயந்துவிட்டீர்களா? அடியாளுடைய இல்லத்திலே இருக்கும்போது இனி ஆற்று வெள்ளம் உங்களை ஒன்றும் செய்யமுடியாது... அத்தி: மருதி, நான் நாளேக்குப் புறப்பட்டுப் போய்வரட்டுமா? மருதி (திடுக்கிட்டு): ஏன் மறுபடியும் இப்படிச் சொல்லுகிறீர்கள்? உங்களை விட்டுப் பிரிந்து எனக்கு இங்கே வாழ்வேது? (கண் கலங்குகிருள்.) அத்தி (சிந்தனையோடு திகைத்து நின்று): நீ கவலைப் படாதே மருதி...நீ கவலைப் படும்படியாக நான் என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/92&oldid=742485" இலிருந்து மீள்விக்கப்பட்டது