94 ஆதி அத்தி நடந்துகொள்ள மாட்டேன்...நான் புறப்பட்டுப்போவது பற்றி இப்பொழுது நாம் பேசவேண்டாம்...நாளேக்கு அதைப்பற்றி மீண்டும் யோசிப்போம்...இப்போ நீ இன்னுமொரு பாட்டுப்பாடு. மருதி: நீங்கள் நேற்று ஒரு பாட்டுப் புனைந்தீர்களே, அதையே பாடட்டுமா? கணவனைப் பிரிந்த தலைவியின் சோகமெல்லாம் அதிலே அற்புதமாகப் பொங்குகிறது. அத்தி: அது வேண்டாம், மருதி. அந்தப் பாட்டு உனக்கு உகந்ததல்ல. இப்பொழுது புதிதாக நான் ஒரு பாட்டுப் பாடுகிறேன். அதற்கு அபிநயம் பிடிக்கிருயா? மருதி: என்ன பாட்டு? அத்தி: வஞ்சிநாட்டு இளவரசன் உனது ஆடலேக் கண்டு மெச்சி தனது உயிரையே உனக்காகப் பரிசாகக் கொடுக்கப் போகிருன். இந்தக் கருத்தைக் கொண்ட பாட்டு. மருதி: வஞ்சிநாட்டு இளவரசர் உயிர் எனக்கு எதுக்கு வேனும்?...இருந்தாலும் நீங்கள் அப்படிப் பாடுவதானுல் நான் அதற்கு அபிநயம் பிடிக்கச் சம்ம தந்தான். (மருதி பாட்டை எதிர்பார்த்து நிற்கிருள். அத்தி பாடத் தொடங்குகிருன். இராகத்தின் ஆளத்தி தொடங்குகிறது.) திரை காட்சி ஐந்து (மறுநாட் காலை. மருதியின் இல்லத்திற்கு வெளியே பொன்னி நின்றுகொண்டிருக்கிருள். மருதி மிகுந்த மகிழ்ச்சியோடும் உள்ளத் துடிப் போடும் வெளியே வந்து அவசரமாக்க் காவிரியை நோக்கிப் புறப்ப்டுகிருள். பொன் ளிையை அவள் கவனிக்கவில்லை.)
பக்கம்:ஆதி அத்தி.pdf/93
Appearance