பக்கம்:ஆண் சிங்கம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கவிதை வாழ்வு

கிருஷ்ண பிள்ளை ஒரு கவி.

உண்மை. அவர் இதுவரையில் ஒரு கவிதை கூட எழுதவில்லைதான். அவர் கவிதைகள் இயற்றியிருந்தால் இன்னும் வெறும் கவிஞராகவா இருப்பார்? கவிகள் போற்றும் கவிச் சக்கரவர்த்தியாக, கவிச் சக்கர வர்த்திகள் தொழுதேற்றும் மகாகவியாக, மகாகவிகள் வணங்கும் கவிதைக் கடவுளாக அல்லவா வளர்ந்திருப் பார்

ஆனல், கவிதை எழுதினால் தானா கவிஞர்? இல்லை, கவிஞர் என்றால் சதா கவிதை எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? ஒன்பது, பத்துக் கவிதைகள் எழுதி விட்டு, வாழ்நாள் முழுதும் கவிஞர் கவிஞர் என்று தம்மைத் தாமே பெருமையோடு விளம்பரப்படுத்திக் கொண்டு திரிகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார் களே!

கிருஷ்ண பிள்ளை கவிஞர்தான். இதுவரை ஒரு கவிதை கூட எழுதாவிட்டாலும் - கவிதை எழுதும் எண்ணம் அவருக்கு இல்லாவிட்டாலும் - அவர் கவி தான். வாழ்க்கையையே கவிதையாகச் சுவைத்து ரசித்து அனுபவித்து வாழ்கிறவர் அவர். அவருக்கு அவருடைய வாழ்க்கை தனிப்பெரும் கவிதை ஆகும். வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் சிறு சிறு மணிக் கவிதை தான் அவருக்கு.

இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் - புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள் கிருஷ்ண பிள்ளையைக் கிருஷ்ண பிள்ளையாக மதிப்பதில்லை. ‘அந்த லூஸ்’ என்றும், ‘செமி’ என்றும், ‘அரைக் கிறுக்கு'‘பைத்தியம்’ ‘அப்பாவி’ என்றும் குறிப்பிடுவார்கள். இப்படிப் பல பொருள்களையும் குறிக்க உபயோகப்படும்.

117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/119&oldid=1071229" இலிருந்து மீள்விக்கப்பட்டது