அசோகனுடைய சாஸனங்கள்/அசோகன் தர்மம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

III. அசோகன் தர்மம்

அசோகனால் கூறப்படும் தர்மம் எப்படிப்பட்டது, புத்தரின் மதத்தைப் பிரசாரம் செய்வதில் அவன் எவ்வளவு தூரம் பயனடைந்தான் என்ற விஷயங்களை நாம் தனியாக ஆராய்வது அவசியம். பௌத்த மதத்தின் வளர்ச்சியில் மட்டுமல்ல, இந்தியாவின் ஸமய சரித்திரத்தில் அசோகனுடைய ஸ்தானம் மிக முக்கியமானது,

அசோகன் மதங்களுக்கெல்லாம் ஸர்வ சம்மதமான காலங்கமார்க்கத்தையே தர்மம் என்ற சொல்லினால் 
சோகன்
காலத்தில்
பெளத்த மதத்
தில் ஏற்பட்ட
மாறுதல்கள்

குறிக்கிறான். ஆயினும் அவன் புத்தருடைய காலத்தில் மதத்தில் விசேஷ பற்றுள்ளவனாயிருந்தானென்பதில் ஐயமில்லை. அவன் எட்டுப்படிகளுடைய ஸம்போதி என்ற ஞானமார்க்கத்தை வழிபட்டதாக ஓரிடத்தில் கூறப்பட்டிருக்கிறது (எட்டாம் சாஸனம்). மற்றோரிடத்தில் அரசன் பௌத்தமதத்தின் மும்மணியாகிய புத்தன், தர்மம், ஸங்கம் என்பதைத் தான் சரணமடைவதாகச் சொல்லப்படுகிறது (பாப்ரு சாஸனம்). இதே சாஸனத்தில் அரசன் சில பௌத்தக் கிரந்தங்கள் விசேஷ ஒளியுடையனவென்று தான் மதிப்பதாகக் கூறுகிறான், ஒன்பதாவது பட்டாபிஷேக வருஷத்தில் அரசன் புத்தரின் கொள்கை மிகச் சிரேஷ்டமென்று உணர்ந்து பதின்மூன்றாம் ஆண்டில் ஸங்கத்தில் சேர்ந்துகொண்ட விவரங்களை முன் சொன்னோம்.

அரசன் பௌத்த ஸங்கத்தின் ஓர் அம்சமானதும் அதுபற்றி அவனுக்குப் பௌத்த ஸங்கத்தின் தலைமை ஸ்தானம் ஏற்பட்டதென்று நாம் ஊகிக்கலாம். பௌத்த மகா ஸபைகளில் எல்லாருடைய வாக்கும் சமமான மதிப்புள்ளதென்றாலும், அசோகன் தனது ஏகாதிபத்தியத்தின் செல்வத்தையும் செல்வாக்கையும் பௌத்த ஸங்கத்துக்கு உரிமையாக்கியதால் அவனுக்கு ஸங்கத்தில் விசேஷ கௌரவம் ஏற்பட்டிருக்கவேண்டும். அரசனின் சகோதர சகோதரிகளும் புத்திரரும் புத்திரிகளும் ஸங்கத்தைச் சேர்ந்தனரென்று ஐதிஹ்யத்தில் சொல்லப்படுகிறது. அதனால் பௌத்த மதத்துக்கு அதிக மகிமையுண்டாயிற்று. இப்போது பூமியில் பௌத்த மதம் கோடிக்கணக்கான ஜனங்களின் மதமாயிருப்பது அசோகனுடைய உழைப்பின்றி நடந்திராது. புத்தரின் மரணத்துக்குப் பின் அவருடைய ஸங்கம் கொஞ்சங் கொஞ்சமாக வட இந்தியாவில் பரவி வந்தது. அசோகனது உழைப்பின் பயனாக அது இந்தியா முழுமைக்கும் முக்கிய மதமாயிற்று. இந்தியாவுக்குப் புறமேயும் ஆயிரக்கணக்காக ஜனங்கள் புத்தரின் மதத்தைச் சரணமடைந்தனர். 'எங்கும் தர்மத்தின் ஜயபேரிகை முழங்கிற்று. பல நூற்றாண்டுகளாக ஒருபோதும் சம்பவியாத விசேஷம் பியதஷி அரசன் தர்மத்தைப் பின்பற்றியதால் சம்பவித்தது தர்மத்தின் வெற்றி எங்கும் தெரியவந்தது' (ஐந்தாம் சாஸனம்) இவ்வசனங்கள் தனது காலத்துக்குப் பின் பௌத்த மதம் அடையப்போகும் கீர்த்தியையும் புகழையும் தனது அகக் கண்ணால் அரசன் உணர்ந்து கூறியவைபோலிருக்கின்றன.

அரசனுக்கு ஸங்கத்தின் தலைமை ஸ்தானம் ஏற்பட்டதால் பல விசேஷக் கடமைகள் ஏற்பட்டன, ஸங்கத்தின் காவலனாக அவன் அதில் கட்சிகளும் கொள்கை வேறுபாடுகளும் வராமல் காக்கவேண்டியதாயிற்று. ஆசாரங்களைக் காப்பாற்றவும், புத்தரின் வாக்கியங்கள். எவையென்று தீர்மானஞ்செய்யவும், மதக்கொள்கைகளை ஆராயவும் அரசன் ஒரு மகாஸபை கூட்டிய விஷயம் முன்னமே சொன்னோம். அதல்லாமல், பிஷுக்களை எச்சரிக்கை செய்தல், ஸ்தூபங்களைக் கட்டுவித்தல், விஹாரங்களைப் பாதுகாத்தல், காட்டுஜாதியாருக்குத் தர்மத்தைப் போதித்தல், நாட்டிலுள்ள பௌத்த ஸங்கங்களைப் பரிபாலித்தல், அதன் கிளைகளில் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்தல் இவையெல்லாம் அரசன் கவனிக்கவேண்டிய விஷயங்களாயின.

அசோகன் காலத்துக்கு முன்னுள்ள பௌத்தசங்க சபைகளின் வரலாற்றை இங்கே சுருக்கிக் கூறுவது தகும்.

கௌதம புத்தர் வாழ்ந்திருந்த நாளளவும் அவர்தாமே பௌத்த 
பௌத்த சங்க
சபைகள்

ஸங்கத்தின் அதிபதியாகவும் குருவாகவும் எல்லா பௌத்தத் துறவிகளுக்கும் மலையிலக்காகவும் இருந்தார். அவர் ஸங்கத்தைச் சேர்ந்தோருடைய நடையுடைபாவனைகளை நேர்வழியில் நிறுத்தப் பல விதிகளை ஏற்படுத்தினாராயினும் துறவிகளின் சுதந்திரத்தை அனாவசியமாய்க் கட்டுப்படுத்தவில்லை. பிக்ஷுக்கள் சதா ஆசாரியர்களை வழிபட்டு அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது தான் நன்றென்று கௌதமர் நினைக்கவில்லை. எவரும் தாமே தமக்கு வழிகாட்டியாயிருக்கவேண்டுமென்று அவர் தமது சரமோபதேசத்தில் எல்லோரையும் வற்புறுத்துகிறார். ஸங்கத்தைச் சேர்ந்தோர் யாவரையும் ஒரு சமூகத்தாராகக் கட்டுப்படுத்தவேண்டுமென்று அவர் முயற்சி செய்யவில்லை ; ஆயினும் ஒற்றுமை உணர்ச்சியை உண்டு பண்ணக்கூடிய ஏற்பாடுகள் ஸங்கத்தில் இல்லாமலிருக்கவில்லை. தங்களுக்கிடையில் பரஸ்பர வெகுமானமும் நம்பிக்கையும் வளருவதற்காக “பாடிமோக்ஹம்" என்ற சடங்கு ஒவ்வொரு பௌர்ணமியன்றும் நடந்து வந்தது, பௌர்ணமியன்று இரவு ஓரிடத்தில் தங்கியிருக்கும் பிக்ஷுக்கள் எல்லோருங்கூடி தங்கள் தங்கள் நடத்தையில் சம்பவித்த குற்றங் குறைவுகளை மற்றோருக்குக் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொள்வது வழக்கம்; இதன்றி வேறு விதத்தில், ஒரு துறவி மற்றத் துறவிக்குக் கீழ்ப்படியவேண்டிய அவசியமிருக்கவில்லை.

கௌதமபுத்தர் வாழ்ந்திருந்த நாளளவும், அவருடைய அடுத்த சீஷர்கள் காலத்திலும் புத்தரின் பெருமையும் பரிசுத்தமும் பௌத்த ஸங்கத்தைப் பிளவுகளிலிருந்து காப்பாற்றின. காலக்கிரமத்தில் இந்த ஒற்றுமை உணர்ச்சியின் வலி குன்றியது, நூறு வருஷங்களுக்குள் பௌத்த ஸங்கமானது பன்மையிலேயே, ‘ ஸங்கங்கள்,' என்று கூறவேண்டிய ரீதியில் பல பிரிவுகளாய் மாறிற்று, பல பிரமுகர்கள் இந்த ஸ்திதியைக் கண்டு வியசனமடைந்தனர். கொள்கை வேறுபாடுகளை நீக்கவும் ஜீவிதத்தில் ஒற்றுமையையும் ஒழுங்கையும் ஏற்படுத்தவும் பல முயற்சிகள் செய்யப்பட்டன. இவற்றுள் மகா ஸபைகளைக் கூட்டியது மிகவும் முக்கியமானது.

முதலாவது மகாஸபை புத்தர் இறந்தவுடன் ராஜக்கிருஹம் என்ற நகரில் நடைபெற்றது. புத்தர் சரமாரியாய்ப் பொழிந்த தர்மோபதேசங்களையும் நுட்பவாதங்களையும் இனிய சம்பாஷணைகளையும் உலகம் ஒரு போதும் இழந்துவிடாவண்ணம் காப்பாற்ற வேண்டுமென்று ஸபை தீர்மானஞ் செய்தது. இவற்றைத் திரட்டுவதற்காக புத்தருடன் நெருங்கிப் பழகிய சீஷர்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர். பௌத்த தர்மத்தின் தத்துவங்களைப்பற்றி அப்பொழுதே அபிப்பிராய பேதங்கள். ஏற்பட்டனவென்று நாம் அனுமானிக்க இடமிருக்கிறது. ஆனால் அவை பகிரங்கமாகவில்லை. ஸங்கத்தை ஒன்றாகக் கட்டுவதற்கேற்ற ஏற்பாடுகளும் சில செய்யப்பட்டன. ஸபையானது எல்லா பிக்ஷுக்களும் அனுசரிக்கலேண்டிய சட்டங்களைப் பிரசுரஞ்செய்தது. ஸங்கத்தில் சேர்ப்பதற்குள்ள சடங்கு (இதற்கு உபஸம்பதம் என்று பெயர்) நிச்சயிக்கப்பட்டது. ஆயினும் ஸங்கத்தை ஏகோபிக்கச்செய்த ஏற்பாடுகள் கைகூடவில்லை.

புத்தருக்குப் பின் அவருடைய ஆப்த சீஷர்கள் ஞானப்பொக்கிஷமென்று மற்றோரால் கருதப்படுவது இயல்பே, இவர்கள் கூறியவை புத்தரின் சுய வசனங்களாககக் கருதப்பட்டு, இந்தப் பிரதம சீஷர்களின் சீஷர்களால் மனப்பாடஞ் செய்யப்பட்டன. இந்து மதக் கிரந்தங்களைப் போலவே பௌத்தப் பிரபந்தங்களும் வாய்மொழியாகக் குருசிஷ்ய பரம்பரையில் நிலைநின்று வந்தன. ஆனால் பிரதம சீஷர்களுக்குள்ளேயே அபிப்பிராய பேதங்கள் இருந்தமைபற்றி பௌத்தருக்குள் பிளவுகள் ஏற்படத்தொடங்கின. கௌதமரிறந்த நூறு வருஷங்களுக்குப் பிறகு கொள்கை வேறுபாடுகளும் ஆசார வேறுபாடுகளும் உண்மையான மதப் பிரபந்தங்கள் எவையென்ற சமுசயமும் மேலிட்டிருந்தன. இக்குறைகளைப் பரிகாரஞ்செய்ய மதத் தலைவர்கள் மற்றொரு மகா ஸபை கூட்டினர். இந்த இரண்டாவது பௌத்த மகா ஸபை வெய்சாலியில் நடந்தது. ஸங்கத்தில் ஏற்பட்டிருந்த பல உட்பிரிவுகளால் ஸபையின் நடவடிக்கைகள் முற்றுப்பெறவில்லை. அதன் வேலை சிதைந்தது ; பல எதிர் ஸபைகள் கூடின ; பிரபந்தங்களை நிச்சயிப்பதும் திரட்டுவதும் சாத்தியமில்லாமல் போயின. இரண்டாவது ஸபையால் குழப்பம் அதிகரித்ததல்லாமல் வேறு குண முண்டாகவில்லை.

ஆகவே அசோகன் சிங்காதனமேறிய காலத்தில் பௌத்த ஸங்கத்தில் குற்றங்கள் மலிந்திருந்தன. ஆசாரங்களிலும் கொள்கைகளிலும் வியவஸ்தை இருக்கவில்லை. மகப் பிரபந்தங்கள் எவையென்று தீர்மானமாகவில்லை. இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்த பிக்ஷுக் சுட்டங்கள் தங்களுக்கு உசிதமென்று தோன்றிய செய்கைகளையும், சரியென்று தோன்றிய கொள்கைகளையும் கைக்கொண்டிருந்தனர். பாடிமோக்ஹம் என்ற சடங்கு கூடச் சரியாக எங்கும் நடைபெற்று வரவில்லையென்று ஸார்நாத் சாஸனத்திலிருந்து நாம் ஊகிக்கலாம்.

மூன்றாவது பௌத்த மகா ஸபை அசோகனுடைய கடைசிக்காலத்தில் பாடலிபுரத்தில் குக்குடாராமம் என்று 
மூன்றாவது
சங்க சபை

பெயர் வழங்கிய பௌத்த மடத்தில் மோகலீ புத்திரதிஸ்ஸன் என்ற ஆசாரியனின் தலைமையின் கீழ் நடைபெற்றது. இந்தியாவில் எல்லாப் பாகங்களிலிருந்தும் பிக்ஷுக்கள் வரவழைக்கப்பட்டனர். ஸபையின் நடவடிக்கைகள் முற்றுப்பெற ஒன்பது மாதங்கள் சென்றன. ஸபையின் அங்கத்தினர் எல்லோரும் சமம் என்ற விதியின் படி காரியங்கள் தீர்மானிக்கப்பட்டனவாதலால் இத் தீர்மானங்களில் அசோகனுடைய சுய அபிப்பிராயங்கள் காணப்படுகின்றனவென்று நாம் எண்ண இடமில்லை. ஆயினும், அரசனும் பிக்ஷுவானது பற்றி ஸபையின் நடவடிக்கைகளில் அவன் சம்பந்தப்பட்டிருக்கலாம்.

இந்த ஸபையில் மிக முக்கியமான காரியங்கள் செய்யப்பட்டன. தீய ஆசாரங்களும் தப்பான கொள்கைகளும் கண்டனஞ் செய்யப்பட்டன. மதக்கிரந்தங்கள் எவையென்று தீர்மானஞ் செய்யப்பட்டு த்ரிபிடகம் என்று பெயருடைய மூன்று பௌத்தப் பிரபந்தத் தொகுதிகளும் இச்சமயம் வரிசைபடுத்தப்பட்டன. தப்பான கொள்கைகளைத் தவிர்க்கும் பொருட்டு கதாவஸ்து என்ற கிரந்தம் ஸபைத் தலைவரால் இயற்றப்பட்டது. திரட்டப்பட்ட கிரந்தங்கள் முற்றிலும் பாராயணஞ் செய்யப்பட்டன. இப்புவியின் பல பாகங்களுக்கும் தர்மத்தைப் போதிக்கப் பிராசாரர்களை அனுப்பவேண்டுமென்று தீர்மானித்து ஸபையோர் அதற்கவசியமான போதகர்களையும் தெரிந்தெடுத்தனர்.

ஸபையின் தீர்மானங்களை உறுதி செய்ய அரசனுடைய செல்வாக்குத் தாங்குதலாய் இருந்ததனால் இம்மூன்றாவது மகாசபை முந்திய சபையைப்போல் சண்டையிலும் குழப்பத்திலும் முடியவில்லை. ஸார்நாத் ஸ்தம்பத்திலுள்ள சாஸனம், இந்த ஸபையின் தீர்மானத்தை அமுலுக்குக் கொண்டுவரவே என்பது தெளிவு. ஸாஞ்சி ஸ்தம்பத்திலும் பிரயாகை ஸ்தம்பத்திலும் இதே கட்டளை பிரசுரஞ் செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும் இந்த மூன்றாவது மகா ஸபையின் நடவடிக்கைகள்கூட பௌத்தரிடையில் ஸர்வசம்மதமாயிருக்கவில்லைபோலும். ஏனென்றால் இந்த ஸபை கூடிய விஷயமேனும் வட இந்திய ஐதிஹ்யத்தில் கிடையாது. இதிலிருந்து மிகப் பிரபலமான அபிப்பிராய பேதங்கள் பௌத்தருக்குள் இருந்தனவென்று நாம் ஊகிக்கலாம். இது ஹீன யானம் மஹா யானம் என்ற இரு பெரும் மதப்பிரிவுகளின் தொடக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றது.

மஹாயானம், ஹீனயானம் என்ற சொற்கள் முறையே பெருங்கப்பல் என்றும் சிறுகப்பல் என்றும் பொருள்படும். மஹாயான மதத்தார் தமது மதத்தை, பிறவிக்கடலைக் கடப்பதற்கு முற்றிலும் நம்பக் கூடிய பெருமரக்கலத்தோடு ஒப்பிட்டு, எதிர்க் கக்ஷியாரின் சமயத்தை, வேகமாய்ச்செல்வதும் ஆனால் அபாயகரமானதுமான சிறு படகோடு ஒப்பிட்டதிலிருந்து இச் சொற்கள் உண்டாயின.

எல்லா மதங்களும், ஜீவன், பிரகிருதி, ஈசுவரன், புனர் 
ஸன்மார்க்க
போதனையே
திபெளத்த மதத்
தின் சாரமெனல்

ஜன்மம், கர்மபந்தம், மோக்ஷம் என்ற விஷயங்களைப்பற்றிப் பிரத்தியேக அபிப்பிராயங்களுடையன. அசோகனுடைய சாஸனங்களில் அவன் இவற்றைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அசோகனுடைய அபிப்பிராயப்படி தர்மம் என்பது இப்படிப்பட்ட மதக்கொள்கைகளன்று, “எல்லோரையும் காப்பாற்றக்கூடியது எதுவோ அதுவே தர்மம்”, என்ற அச்சொல்லின் உட்கருத்தே தர்மத்தின் லக்ஷணமென்று அசோகன் உணர்ந்தான்.அவன் கொள்கைப்படி புத்தபகவானின் மகிமை என்னவென்றால், எல்லா மனிதருக்கும் உயர் நன்னெறியை வழிபடுதல் அவசியம் என்று வற்புறுத்தியதே. நன்னடக்கையும் நல்லெண்ணங்களுமே கடவுள் வழிபாடு, மற்ற மதங்களுடையவும் ஸாராம்சம் ஸன்மார்க்கபோதனை தானென்று அசோகன் எண்ணினதால் மதச்சண்டைகளின் இழிவையும் அந்தியமதங்களைத் தூஷிப்பதின் கெடுதலையும் அவன் நன்குணர்ந்தான்.

அசோகன் தர்மம் என்ற சொல்லினால் என்ன கருத்தைக் குறிப்பிடுகிறானென்று ஐந்து ஆறு சாஸனங்களில் கூறப்பட்டிருக்கிறது. தாய் தந்தையருக்கு வெகு மதிப்பு, வயோதிகர் ஞானசிரேஷ்டர்களுக்கு மரியாதை, ஏழைகளுக்கும் பிராமணர் சமணர் முதலானோருக்கும் ஈகை, அடிமைகள் சேவகர்களிடம் அன்பு, ஜீவ ஜந்துக்களிடத்தில் இரக்கம், அஹிம்ஸை , அதாவது சகல ஜீவராசிகளிடத்தும் அனுதாபம், புலால் உண்ணாமை, வாய்மை, பிறர் மதங்களைத் தூஷணைசெய்யாமை, சமரஸபாவம், இவைதான் தர்மமென்று அசோகன் வற்புறுத்துகிறான்.

ஆயினும் அசோகனின் மதம் சில விஷயங்களில் 
மூடநம்பிக்கை
களைக்
கண்டித்தல்

பாமர ஜனங்களுடைய கொள்கைகளோடு முரண்பட்டது. “மனிதனின் மனப்போக்கும் இச்சைகளும் பலவிதமாக வேறுபட்டிருக்கின்றன: சில மதஸ்தர் என்சாஸனைகளை முற்றிலும் பின்பற்றலாம், மற்ற வகுப்பார் என்சாஸனைகளின் சில பாகங்களைப் பின்பற்றலாம்.“ என்று ஏழாம் சாஸனத்திலும், “ஸ்திரீஜனங்கள் இழிவும் அர்த்தமற்றதும் நிஷ்பிரயோஜனமுமான நானாவித சில்லறைச் சடங்குகளைச் செய்கிறார்கள்.” என்று எட்டாம் சாஸனத்திலும் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றிலிருந்து மற்றமதங்கள் எவ்வளவு தூரம் ஸன்மார்க்க போதனையை அனுஸரிக்கின்றனவோ அவ்வளவே அவை உண்மையென்றும், ஸ்திரீ ஜனங்கள் வீடுகளில் செய்யும் மந்திர கருமங்கள் இழிவென்றும் அரசன் மதித்ததாக நமக்குத் தெரியவருகிறது. ஆனால் அசோகன் இந்த அபிப்பிராயங்களை அடிக்கடி எடுத்துரைத்து ஜனங்களின் மனத்தைப் புண்படுத்தவில்லை. அதுமட்டுமன்று, அவன் எல்லா மதங்களைச்சேர்ந்த துறவிகளுக்கும் ஞானிகளுக்கும் பூஜை மரியாதைகள் செய்தான்.

அசோகனுடைய நோக்கங்கள் நாளடைவில் விரிந்து 
ஜீவ இம்சை
நிவாரணம்

கொண்டே வந்தனவென்பதும் முன் சொல்லிய விவரங்களிலிருந்து நாம் ஊகிக்கலாம். ஜீவவதையைப்பற்றி அரசன் கொண்டிருந்த அபிப்பிராயங்களும் மாறுதல் அடைந்தனவென்று தோன்றுகிறது. அரசனின் ஆளுகையின் தொடக்கத்தில் ஜீவவதை பலியிடுதல் முதலிய வழக்கங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டனபோலும், தான் அமிதமான உற்சாகத்துடன் இவ்விதம் பிரவர்த்தித்ததாகப் பின் உணர்ந்து இருபத்தேழாவது பட்டாபிஷேக வருஷத்தில் அரசன் ஜீவ வதையைக் குறைப்பதற்கும் அனாவசியமான ஜந்து இம்ஸையை நிவாரணஞ் செய்வதற்கும் மட்டுமே எத்தனித்தான்.

சாஸனங்களில், மனிதன் சுவர்க்கத்தை அடைய 
சுவர்க்கத்தில்
நம்பிக்கை

வேண்டுமென்றும், எவருக்கும் இம்மை யில் செய்யவேண்டிய கடமையை நம்பிக்கை நிறைவேற்றுவதின் பயன் மறுமையில் சுவர்க்கசுகமென்றும் திரும்பத் திரும்பக் கூறப்பட்டிருப்பது வியப்பாயிருக்கிறது. புத்தர் போதித்த சதுர் ஆர்ய ஸத்தியமும், எட்டுவகைத்தியானங்களும் மனித வாழ்வின் முடிவாகிய நிர்வாணமும் அசோகனால் மறக்கப்பட்டனவா ? இல்லை. ஆனால் காலக்கிரமத்தில் பௌத்த மதத்தில் உண்டான மாறுதல்களுக்கு அசோக சாஸனங்கள் அறிகுறியாயிருக்கின்றன. அசோகன் தனது பிரஜைகளுக்கு நற்குண நற்செய்கைகளின் அவசியத்தை வற்புறத்த எண்ணியதால் அவ்வழியில் நடப்பதின் பயனான சுவர்க்கத்தைப் பற்றியும் அவனுக்கு எடுத்துரைப்பது அவசியமாயிற்று. சுவர்க்கமென்பது தான் பாமர ஜனங்களின் பிரவிர்த்திகளுக்கு ஏற்ற தூண்டுதல் என்று அசோகன் உணர்ந்தான்போலும். கௌடல்யனுடைய அர்த்தசாஸ்திரத்திலும் இக்கொள்கை விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

கௌதம புத்தரும் சுவர்க்கானுபவத்தைப் பற்றிக் கூறுவது தப்பிதமாக நினைக்கவில்லை. ஆனால் அவருடைய முக்கியமான உத்தேசம், ஆசை மோகம் முதலிய கட்டுக்களை அறுத்துத் தள்ளக்கூடிய பலவான்களை ஒன்று சேர்த்துத் திரட்டி அவரை ஒரு சங்கமாகச் சேர்க்க வேண்டுமென்பது, அதற்கிணங்க அவர் வெகுவாகப் பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி என்ற துக்கங்களையும் அவற்றின் கொடுமையையும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கு ஏற்ற நிவிர்த்திமார்க்கத்தையும் பற்றிப் போதித்தார். ஆனால் அவர் சாதாரண ஜனங்களிடம் இவ் விஷயங்களைப்பற்றிப் பேசாமல் அன்பு, வாய்மை, ஈகை என்ற குணங்களின் மேன்மையைப்பற்றிப் பேசினார்.

புத்தர் காலத்துக்குப் பின் அவர் சிஷ்யர்கள் பிரவிர்த்தி நிவிர்த்தி என்ற இருவிதமார்க்கங்களின் வேற்றுமையைப் பொருட்படுத்தாமல் தர்மம் என்பது 
அசோகனுக்
க்கு பின் பௌத்
த மதத்தில் ஏற்
பட்டமாறுதல்கள்

நிர்வாணத்தையடையும் வழியென்று ஸ்தாபித்தனர். அதனால் பௌத்த ஸங்கத்தில் இல்லறத்தாருக்கு இடமில்லாமற் போயிற்று. அசோகன் இக்குறையை உணர்ந்தான்போலும். அதனால் அவன் தர்மம் என்பது ஸன்மார்க்கவழியே யன்றி வேறில்லையென்று முறையிட்டான். ஆயினும் அவன் இல்லறத்தாருக்குப் பௌத்தர் என்ற பெயர்கொடுத்து அவரை ஒரு பிரத்தியேக சமூகத்தாராகச் செய்யவில்லை, தற்காலம் கிறிஸ்து முகம்மதிய மதங்களைப்போல பௌத்தமதம் பல குடும்பத்தாருக்குப் பிறப்பு இறப்பு கலியாணம் முதலிய சடங்குகளை நடத்திவைக்கப் புரோகிதர்களைத் தயார் செய்யவில்லை. அதனால் நாளடைவில் பத்தருடைய லன்மார்க்க போதனை மட்டும் இந்தியாவின் ஜனங்களுடைய வாழ்வில் ஊள்ளூறப்பரவி யதனுடன் கலந்து போயிற்று.

இந்தியாவின் புறத்தில் புத்தருடைய மதம் வேறு விதம் விகஸித்தது. திபெத் சீனா ஜப்பான் என்ற நாடுகளில் பௌத்தமதம் நிரீச்வரவாதம் அனாத்மவாதம் முதலிய கொள்கைகளை இழந்து கடவுளிடம் நம்பிக்கையுள்ள மதமாய் மாறிற்று. பத்தன் என்ற பதம் முன் ஒரு காலத்திலிருந்த ஞானியின் பெயராயிராமல் யாவரும் தமது முயற்சியால் அடையக்கூடிய ஆன்மீய நிலைமையின் பெயராக சேர்ந்தது. கௌதம புத்தருக்கு முன்னும் பின்னும் அநேகர் புத்தராயிருக்கின்றனர் என்ற கொள்கை பரவிற்று. பூர்வபுத்தர் இருந்த விஷயத்தை அசோகனும் ஒப்புக்கொண்டான் என்பது முன்னே சொன்னோம். இப்படி, படிப்படியாக மஹாயானம் என்ற பௌத்தமதபேதம் உண்டாயிற்று. புத்தன் என்ற பதம் கடவுளின் வேறு ஒரு பெயராகவும் பரிணமித்தது. சிலோன் தீவிலும் பர்மாவிலும் தற்காலம் பரவியிருக்கும் பௌத்தமதத்துக்கு ஹீனயானம் என்று பெயர். ஹீனயானமதத்தார் மனோதத்துவங்களைப் பற்றியவரையிலும் பிராசீன பௌத்தக் கொள்கைகளையே போதித்து வருகின்றனர்.