உள்ளடக்கத்துக்குச் செல்

அட்லாண்டிக் பெருங்கடல்/கடலின் புதிய பயன்கள்

விக்கிமூலம் இலிருந்து


11. கடலின் புதிய பயன்கள்


கடலாராய்ச்சியின் விளைவாக வருங்காலத்தில் கடலின் புதிய பயன்கள் பின்வருமாறு:--

1) நீர்த்தேக்கங்கள், காற்று வெளியேறா அறைகள் அமைக்கப்படும்.
2) கடல் மேற்பரப்பில் மக்கள் வாழும் நகரங்கள் நிறுவப்படும். இது மக்கள் நெருக்கத்தைக் குறைக்கும்.
3) கடலுக்கடியில் மன மகிழ் பூங்காக்கள் அமைக்கப்படும். இவற்றிற்கு மக்கள் சென்று வர இயலும்.
4) போக்குவரத்துக்குக் கடல் ஊர்திகள் பயன்படும்.
5) உணவுக்காகக் கடல் பூண்டுகளும் தாவரங்களும் வளர்க்கப்படும். கடல் பூண்டுகள் ஆக்சிஜனையும் ஆற்றலையும் அளிக்கும்.
6) அலைகளில் இருந்து ஆற்றல் உற்பத்தி செய்யப்படும்.
7) நன்னீருக்காகவும், பனிக் கட்டிக்காகவும் நீண்ட தொலைவுகளுக்குப் பனிப்பாறைகள் நீரில் இழுத்துச் செல்லப்படும்.
8) வானிலையினைக் கண்காணிக்கவும், அதனை முன்னறிவிக்கவும், திருத்தவும் கடல் பயன்படும்.

.