உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டார்க்டிக் பெருங்கடல்/அண்டார்க்டிக் கண்டம்

விக்கிமூலம் இலிருந்து

2. அண்டார்க்டிக் கண்டம்

இருப்பிடம்

உலகிலுள்ள நிலப் பகுதிகள் பலவற்றில் மக்கள் வாழ்கிறார்கள். அப்பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பனி மறைந்து விட்டது. ஆனால், உலகின் தென்கோடியில் இன்னும் ஒரே ஒரு நிலப்பகுதி உள்ளது. அதிலிருந்து பனி இன்னும் நீங்கவில்லை. அதுதான் அண்டார்க்டிக் கண்டம் ஆகும். பொதுவாக, அண்டார்க்டிக் என்னும் சொல் நீர் என்னும் நிலையில் அண்டார்க்டிக் கடலையும், நிலம் என்னும் நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தையும் குறிப்பதாகும்.

இக்கண்டம் நிலவுலகின் தென் முனையைச் சுற்றி அமைந்துள்ளது. இதன் பரப்பு 55 இலட்சம் சதுர மைல்கள். ஒரே பனியும் பனிக் கட்டியும் நிறைந்த கண்டம். மக்கள் நடமாட்டம் இல்லாதது. பனிப் படலம் தெற்கேயும் வடக்கேயும் 1,000 மைல் அளவுக்குப் பரவியுள்ளது. இது உயரமான கண்டம்; கடல் மட்டத்திற்குமேல் 1 மைல் உயரமுள்ளது.

இதைச் சூழ்ந்துள்ள அண்டார்க்டிக் கடலில் மட்டும் பனிக்கட்டி 2 இலட்சம் சதுர மைல்கள் பரவியுள்ளது. கண்டத்தின் சராசரி உயரம் 6,500 அடி. தென் முனையிலுள்ள மேட்டுச் சமவெளி மட்டும் 11,000 அடி உயரம் உள்ளது. இச்சமவெளி, அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சேர்த்தால் எவ்வளவு பெரியதாக இருக்குமோ, அவ்வளவு பெரியதாக இருக்கும். இக்கண்டம் வட்ட வடிவமானது. ஆஸ்திரேலியாவைவிட இரு மடங்கு பெரியது.

மலை

அண்டார்க்டிக் கண்டம் உலகில் மிகக் குளிர்ந்த கண்டம். இதில் பல மேட்டுச் சமவெளிகளும், உயர்ந்த பனி படர்ந்த மலைகளும் உள்ளன. 15,000 அடி உயரமுள்ள மலைகளும் இங்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதிலுள்ள ராஸ் பனித் திட்டு மட்டுமே மிதக்கும்பனிக்கட்டியாலானது. பனிக்கட்டியின் தடிமன் 600-1,000 அடி. இத்திட்டின் பரப்பு பிரான்சின் பரப்பைவிடப் பெரியது. இத்திட்டு கடலை நோக்கி ஒரு நாளைக்கு ஐந்து அடி வீதம் ககர்ங்து கொண்டிருக்கிறது.

இக் கண்டத்தில் இரு எரிமலைகள் உள்ளன. ஒன்று மவுண்ட் எரிபஸ். இதன் உயரம் 13,350 அடி. நிலையான செயலாக்கம் உள்ளது. இதை அடைய முயற்சிகள் நடைபெற்றவண்ணம் உள்ளன; மற்றொன்று மவுண்ட் டொர். இதன் உயரம் 900 அடி. தற்பொழுது இது ஒய்ந்து ஒழிந்துள்ளது.

இதிலுள்ள பனிப்பாறைகளின் அளவு, மிதக்கும் பனிக்கட்டியின் மட்ட உயர்வு ஆகியவற்றி லிருந்து இங்கு நில கடுக்கங்கள் நிலவலாம் என்று நம்பப்படுகிறது.

கடற்கரையைச் சுற்றிலும் உலர்ந்த பள்ளத் தாக்குகள் உள்ளன. இங்குப் பனியாறுகள் பின் வாங்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும், அவற்றில் சில நாக்கு போ ல் பள்ளத்தாக்குகளில் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

பள்ளத்தாக்குகளின் கரிய தரை முழு அள வுக்கு உலர்ந்தது அல்ல. இத்தரை கதிரவன் வெப்பத்தைப் பெற்றுப் பனியாறுகளை உருக வைக்கின்றன. பெய்யும் பனி தரையை அடை வதற்கு முன்பே ஆவியாகும். சில பள்ளத்தாக்கு களில் பனியா று க ள் வளர்ந்த வண்ணமும் தேய்ந்த வண்ணமும் உள்ளன.

புயல்கள்

இங்குப் புயல்களும் உண்டாகின்றன. அதனால், இதை விரிவாக ஆராய முடியவில்லை. இங்கு அடிக்கும் பயங்கரக் காற்றுகளின் விரைவு மட் டும் 1 மணிக்கு 200 மைல். இங்குக் காந்தப் புயல் களும் அடிக்கின்றன.

ஒளிகள்

கண்ணையும் கருத்தையும் கவரும் பல வண்ண ஒளிகளான தென்முனை ஒளிகள் இங்கு உண்டாகின்றன. வான்வெளிக் கப்பல்களில் செல்வோர் இக்கண்கொள்ளாக் காட்சியைக் கண்டுகளிக்கலாம். 


தட்பவெப்ப நிலை

அங்குப் பருவ காலங்களும் உண்டு. அவை கோடைக் காலமும் மாரிக்காலமும் ஆகும். கோடை குளிர்ந்தது; குறுகியது. மாரி மிகக் குளிர்ந்தது; நீண்டது.

மாரிக் காலத்தில்--70° F வெப்பகி2ல பதி வாகி உள்ளது. இக் காலத்தில் எங்கும் ஒரு நாள் முழுதும் கதிரவனே தலைகாட்டாது. ஆண்டின் எந்த மாதமும் 32° F வெப்ப நிலையில் இருப்ப தில்லை. 32° F என்பது நீர் உறையும் வெப்ப நிலையாகும். பொதுவாக, ஆர்க்டிக் கண்டத்தின் வெப்ப நிலைகளைவிட இக்கண்டத்தின் வெப்ப நிலைகள் 5' குறைவு இவ்வெப்ப நிலைகள் பயிர் கள் வளர்வதற்கு ஏற்றதல்ல.

இங்குப் பணி பெய்தலும் மழை பொழிதலும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி, அவற்றின் அளவு, ஒர் ஆண்டில் 30 அங்குலம் மழை பெய்வதற்குச சமமானது.

நில இயல்நூல் ஆண்டின் பொழுது அண் டார்க்டிக்கில் ஆராய்ச்சி நடைபெற்றது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகளாவன: உலகம் வெப்பம் அடைந்துகொண்டு வருகிறது. இக் கண்டத்தி லுள்ள பனிக்கட்டி உருகுவதே, வெப்ப உயர் வுக்குக் காரணமாக இருக்கலாம். 


தென் முனை உலகிலேயே அதிக வெப்பத்தை பெறும் இடமாகும்; மிகக் குளிர்ந்த இடமும் ஆகும்.

நில இயல்நூல் ஆண்டின் பொழுது சோவி யத்து ஆராய்ச்சியாளர்கள் அண்டார்க்டிக்கில் வாஸ்தோக் என்னும் நிலையத்தில் வெப்ப நிலை யைப் பதிவு செய்தனர். அவ்வாறு பதிவு செய் தது 1958 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடை பெற்றது. இவ்வெப்ப நிலையே உலகில் மிகக் குறைந்த வெப்ப நிலையாகும். அதன் அளவு –87.4°C (–126°F).

இவ்வெப்ப நிலையில் எஃகுக் குழாய்களைச் சம்மட்டியால் அடித்துக் கண்ணாடியை உடைப் பது போல் உடைக்கலாம். இங்குத் திரவ உணவைச் சமைக்கவே ஐந்து மணி ஆயிற்று!

தென் முனை அதிக வெப்பத்தை டிசம்பர் மாதத்தில் பெற்ற போதிலும், அவ்வாற்றலில் 89 பங்கு அளவு, பனி உறையினால் பிரதிபலிக்கப் படுகிறது. இதனால், வெப்ப இழப்பு உண்டாகிறது.

பனிக்கட்டியின் மேல் அடுக்கில் நேர்த்தி யான மணல்துளிகள் படிந்துள்ளன. இதனால், வெப்பம் உறிஞ்சப்படுதல் மெதுவாக நடைபெறு கிறது. இந்த அடுக்குக் கடினமாக இருப்பதால், அதன் மீது அடிச்சுவடுகள் படியாமலே கடக்க லாம். அப்படி அடிச்சுவடுகள் படிந்தால், அவை மறைவதற்குப் பல வாரங்கள் ஆகும். இச்செயல் ஆவியாதல் குறைவாக நடைபெறுவதைக் காட்டு கிறது!

உயிர்கள்

மிகக் குளிர்ந்த கண்டமாகையால், உ ய ர் வகைப் பயிரினங்கள் இங்கு வளர்வதில்லை. தாழ்ந்த பயிர் வகைகளான புல், பாசி, லைகன் முதலியவை இங்கு வளர்கின்றன.

விலங்குகளில் பென்குயின் என்னும் பறவை கள் இங்குள்ளன. பூச்சிகளும் உள்ளன. மீன், கடல் நாய், திமிங்கிலம் முதலியவை கடல் விலங் குகள், கரைப் பகுதிகள் திமிங்கில வேட்டைக்குச் சிறந்தவை. உலகின் திமிங்கில விளை பொருள் களில் 90 பங்கு அளவு இங்கிருந்து கிடைக்கிறது. இதனால் அண்டார்க்டிக் கடலில் திமிங்கிலங்கள் அதிகம் என்பது தெரிகிறது.

இது மக்கள் வாழும் இடமாக இன்னும் ஆக வில்லை. விஞ்ஞானிகள் மட்டுமே த ள ங் க ள் அமைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

ராஸ் திட்டின் மீது உறைந்த மீன்கள் 1,100 ஆண்டுகாலமாக அதன் மீதே கிடக்கின்றன. நூற்றாண்டுகளுக்கு முன் பனிக் கட்டிக்குக் கீழ் அகப்பட்டுப் பின் மேல் வந்தவை அவை.

கனிவளம்

பனிக்கட்டிக்குக் கீழ் நிலக்கரிப் படிவுகளும், தாதுக்களும் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவை இனிதான் ஆராய்ச்சி செய்து, தோண்டி எடுக்கப்பட வேண்டும்.

நாடுகள்

இங்கு நிலையான குடியேற்றங்கள் இல்லை. இருப்பினும், நிலப்பகுதியில் பல பிரிவுகள் உண்டு. பிரிட்டன், நார்வே, அமெரிக்கா, உரு சியா முதலியவை இக்கண்டத்தில் அக்கறை காட் டும் நாடுகளாகும்.

ஆராய்ச்சி

இதை ஆராய்ச்சிக்குச் சிறந்த இடமாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பனிக்கட்டி இயக்கம், வானிலை நிலைமைகள், நில அமைப்பு நூல் வரலாறு முதலியவற்றைப் பற்றி இங்கு ஆராயலாம்.

அண்டார்க்டிக் பனிக்கட்டியிலிருந்து அறிய வேண்டியவை அதிகம். அதிக ஆழங்களிலிருந்து அதன் உட்பகுதிகள் வெளிக் கொண்டுவரப்படு கின்றன. இந்த உட்பகுதிகளில் எல்லா வகைத் துகள்களும், இறுகிய காற்றுக் கொப்புளங்களும் காணப்படுகின்றன. இவை இரண்டும் நூற்றாண்டுக் கணக்காகப் பெய்யும் பனியால் பிடிபட்டு உள்ளே சென்றவை.

1883 இல் ஜாவாவில் எரிமலை ஒன்று வெடித்தது. இந்த வெடிப்பில் சாம்பல் வெளித்தள்ளப் பட்டது. இச் சாம்பல் கிரீன்லாந்து பனிக்கட்டியிலும் காணப்படுகிறது. இச் சாம்பல் அண் டார்க்டிக் கண்டத்திலும் இருக்கின்றதா என்று. தேடவேண்டும். இச் சாம்பல் மட்டம் இருக்கும். ஆழத்தை அறிவதால், அங்கிருக்கும் பனிக்கட்டி யின் காலத்தை உறுதி செய்ய இயலும்,

வேறுபடும் ஆ ழ ங் களி ல் காணப்படும் காற்றுக் கொப்புளங்களின் இயைபை அறிய வேண்டும். அவ்வாறு அறிவதால், காற்று வெளி யில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடு என்னும் கரிக்காற்றின் அளவை உறுதி செய்ய இயலும்,