உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டார்க்டிக் பெருங்கடல்/அண்டார்க்டிக் ஆராய்ச்சி

விக்கிமூலம் இலிருந்து
3. அண்டார்க்டிக் ஆராய்ச்சி

உண்மை

18ஆம் நூற்றாண்டு வரை அண்டார்க்டிக் ஒரு பெரிய கண்டம் என்று மக்கள் எண்ணி வந்தனர். ஆனால், ஆர்க்ட்டிக் கண்டம்போல் அல்லாமல், இது அதிக அளவுக்கு நிலப்பகுதி யைக் கொண்டிருக்கிறது. இந்த உண்மை கேப்டன் குக்கின் பயணத்திற்கு முன்பே உறுதி செய்யப்பட்டது.

குக்

அண்டார்க்டிக் ஆராய்ச்சியின் வரலாறு கேப்டன் குக்கின் கடற்பயணங்களோடு தொடங்குகிறது. 1772-75 ஆம் ஆண்டுகளுக்கிடையே இவர் ரெசல்யூசன், அட்வென்ச்சர் என்னுங் கப்பல்களில் தம் பயணங்களை மேற்கொண்டார். இவர் 1773-ஆம் ஆண்டில் ஜனவரி 17-இல் அண்டார்க்டிக் வட்டத்தைக் கடந்தார்; ஆள் நட மாட்டமில்லாத வெறும் தீவுகள் பலவற்றைக் கண்டார்.

ராஸ்

இவர் எரிபஸ், டெரர் என்னுங் கப்பல்களில் 1839-1843 ஆம் ஆண்டுகளுக்கிடையே சென்று,அண்டார்க்டிக்கை ஆராய்ந்து பல தீவுகளுக்குப் பெயரிட்டார்.

நேர்ஸ்

இவர் தலைமையில் சேலன்ஜர் பயணம் 1874-இல் தொடங்கிற்று. சேலன்ஜர் என்னுங் கப்பல் அண்டார்க்டிக் வட்டத்தை முதன் முதலா கக் கடந்தது, நேர்ஸ் என்பவர் திரட்டிய அண்டார்க்டிக் கடல் பயிர் வகைகளும், எடுத்த ஒலிப்பு அளவுகளும் சர் ஜான் முரே என்பாருக்கு மிகவும் துணை செய்தன. சர் ஜான் முரே என்பார் அவற்றைக் கொண்டு, அண்டார்க்டிக் கண்டம் என்னும் ஒரு கண்டம் உள்ளது என்று முடிவு கட்டினர்.

கிறிஸ்டன்சன்

இவர் தம் குழுவினருடன் முதன் முதலில் அண்டார்க்டிக் கண்டத்தில் காலடி எடுத்து வைத்தார். தெற்கே அண்டார்க்டிக் கடலில் கப்பல் செல்லுவதற்கு இயலும் என்று இவர் அறிந்தார்.

ஷேக்கிள்டன்

இவர் 1908-1909-ஆம் ஆண்டுகளுக்கிடையே சிறந்த கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்து, வீரர் பட்டம் பெற்றார். கண்டுபிடிப்புக்கள் விஞ்ஞானம், நில நூல் முதலிய துறைகள் தொடர்பானவை.

அமுண்ட்சன்

இவர் புகழ் பெற்ற வடமுனை ஆராய்ச்சியாளர். இவர் நார்வே நாட்டைச் சார்ந்தவர் ; முதன் முதலில் தென்முனையை அடைந்தவர். 1911-ஆம் ஆண்டு டிசம்பர் 14-இல் இவர் தென் முனைக்கு வந்தார். அங்கு இவர் 10,000 அடி உயரமுள்ள அகலமான பனிச்சமவெளி இருப்பதை அறிந்தார்.

ஸ்காட்

இவர் 1911-ஆம் ஆண்டு ஜனவரி 18-இல் தென் முனையை அடைந்தார். கப்பலுக்குத் திரும்பி வரும் பொழுது கடும் உறை பனிப் புயலினால் இவர் தம் குழுவினருடன் உயிர் நீத்தார்.

பயர்டு

1929-இல் இவர் அண்டார்க்டிக் பகுதிக்குச் சென்றார், ஆராயப்ப்டாத நிலம் ஒன்றிற்குச் சிறிய அமெரிக்கா என்று பெயரிட்டார்.

இவர் அமெரிக்கப் பயணத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார், அண்டார்க்டிக்கில் வேல்ஸ் விரிகுடாவில் (Bay of Whales) தளம் அமைந்து விரிவான ஆராய்ச்சி நடத்தினர். விமானங்களில் பறந்தார். தென்முனை மேல் பறந்து, வியக்கத்தக்க படங்கள் எடுத்தார். வானிலைநூல் நில அமைப்பு நூல் தொடர்பாகச் செய்திகள் திரட்டினார்.

1933-1934ஆம் ஆண்டுகளுக்கிடையே இவர் தம் குழுவினருடன் அண்டார்க்டிக் கண்டத்தில் மாரிக் காலத்தைக் கழித்தார். பனிக்குக் கீழ் ஆழத்தில் வலுவாக அமைக்கப்பட்ட வீடுகளில் இவர் மாரிக் காலத்தைக் கழித்தார். தென் முனையிலிருந்து 200 மைல் தொலைவுக்கு முக்கிய நிலக்கரிப் படிவுகள் இருப்பதாக இவர் கூறினர்.

வில்கின்ஸ், எல்ஸ் வொர்த் முதலியோர் அண்டார்க்டிக்கிற்குப் பயணங்களை மேற்கொண்டனர்.

1935-1937 ஆம் ஆண்டுகளுக்கிடையில் டிஸ்கவரி-2 என்னும் ஆங்கிலக் கப்பல் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி வந்தது. அது கடந்த தொலைவு 50,000 மைல். அண்டார்க்டிக் பகுதியில் திமிங்கிலங்கள் எ வ் வா று பரவியுள்ளன என்பதைக் கப்பலில் சென்று ஆராய்ந்தனர். தவிர, ராஸ் கடலைப்பற்றி, உயிர் நூல் தொடர் பாகவும், நீர் நூல் தொடர்பாகவும் செய்திகள் திரட்டினர்.

பலநாடுகள்

1939 ஆம் ஆண்டிலும், 1946-1947 ஆம் ஆண்டுகளுக்கிடையிலும் ப ய ர் டு என்பவர் தலைமையில் பல பயணங்களுக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்தது. பயணங்களின் நோக்கம் அண்டார்க்டிக்கின் கனி வளங்களை ஆராய்வதாக இருந்தது. உருசியா, நார்வே, பிாான்சு, ஜெர்மனி முதலிய பல நா டு களு ம் அண்டார்க்டிக்கில் பயணங்களை மேற்கொண்டு ஆராய்ச்சி நடத்தியுள்ளன. இன்றும் அமெரிக்காவும் உருசியாவும் அண்டார்க்டிக்கில் ஆராய்ச்சிகள் ந ட த் தி ய வண்ணமே உள்ளன.

ஏன் முடியாது?

அண்டார்க்டிக் வரலாற்றிலேயே, சிறப்பாக ஆராயப்பட்டது நில நூல் ஆண்டுத் திட்டத்தின் பொழுது ஆகும். இத்திட்டம் 1957-1958 ஆம் ஆண்டிற்கிடையே செயற்பட்டது. உலக அளவில் பல விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியினால் நடைபெற்ற திட்டமாகும் இது. பன்னிரண்டு நாடுகள் அண்டார்க்டிக் ஆராய்ச்சியில் கலந்து கொண்டன. வானிலைக்கு வேண்டிய செய்திகள் முதன்மையாகத் திரட்டப்பட்டன. ஆராய்ச்சிக்காக 60 உற்று நோக்கு நிலையங்கள் அமைக்கப்பட்டன. எதிர்காலத்தில் அண்டார்க்டிக் கண்டம் வளமுள்ள பகுதியாக்கப்படலாம்; மனிதன் வாழலாம். சந்திர மண்டலத்திலேயே மனிதன் வாழ நினைக்கும் பொழுது, ஏன் அவன் அண்டார்க்டிக் கண்டத்தில் வாழமுடியாது?