அண்டார்க்டிக் பெருங்கடல்/அண்டார்க்டிக் பயணம்

விக்கிமூலம் இலிருந்து

4. அண்டார்க்டிக் பயணம்

பெயர்

காமன்வெல்த் சார்பில் அண்டார்க்டிக் கண்டத்தைக் கடப்பதற்காக ஒரு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு இனிது நிறைவேறியது. இதற்குக் காமன்வெல்த் அண்டார்க்டிக் கடப்புப் பயணம் என்று பெயர்.

காலம்

நில இயல் நூல் ஆண்டுத் திட்டத்தோடு ஒத்து அமைந்தது; ஆனால், தனியாக அமைக்கப் பட்டது; நிறைவேற்றப்பட்டது இப்பயணம். ஆகவே, இதன் காலம் 1957-58 ஆண்டுகளுக்கு இடையிலுள்ள காலம் ஆகும்.

சிறப்பு

இப்பயணம் கூட்டு முயற்சியால் நடைபெற்ற ஒரு திட்டமாகும். இதற்கு ஆங்கில நாட்டு அரசியார் புரவலராக இருந்தார். தனியார் முயற்சியாலும், பல அரசுகளின் கூட்டு முயற்சியினாலும் கடைபெற்ற பயணம் இது. இதற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் பண உதவி செய்து ஆதரித்தன. முழுப் பயணத்திற்கும் 500,000 பவுன்கள் செலவழிஙந் தது. தனியார் தொழில் நிறுவனங்களும் இதற்கு உதவி செய்தன.

நோக்கம்

அண்டார்க்டிக் கண்டம் நன்கு ஆராயப் படாத கண்டம். ஆஸ்திரேலியாவை விட இது இரண்டு மடங்கு பெரியது. இருப்பினும், அதன் தரையை யாரும் கடக்கவில்லை. அதன் தரையைக் கடந்து செல்வதும்; செல்லும் பொழுதே பல வகை ஆராய்ச்சிகள் நடத்துவதும் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

வானிலை நூல், பனி நூல், நில அமைப்பு நூல் முதலிய துறைகளில் ஆராய்ச்சிகள் நடந்தன. இவை அண்டார்க்டிக் கண்டத்தின் அறிவை மேலும் பெருக்க உதவி செய்தன.

வரலாறு

1775 ஆம் ஆண்டிலிருந்தே அண்டார்க்டிக் கண்டத்தில் ஆங்கிலேயர் ஆர்வம் காட்டிவர லாயினர். இந்த ஆண்டில் கேப்டன் குக் என்பார் முதன் முதலாக அண்டார்க்டிக் வட்டத்தைக் கடந்தார். அங்குப் பனிக்கட்டிகளுக்கிடையே பாசறை அமைத்துத் தங்கினர்.

19 ஆம் நூற்றண்டின் முற்பகுதியில் ஆங்கிலக் கப்பலோட்டிகள் முதன் முதலில் அண்டார்க்டிக்கில் நிலப்பகுதியைக் கண்டுபிடித்தனர். அதன் கடற்கரையின் எல்லைகளையும் அறிந்தனர்.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நாடுகளின் விஞ்ஞானிகளால் தொடர்ந்து பல பயணங்கள் அண்டார்க்டிக்கிற்கு மேற்கொள்ளடிப்பட்டன.

1908 இல் சர் ஏர்னஸ்ட் ஷேக்கிள்டன் என்பார் தென்முனையில் 90 மைல் அளவுக்குச் சென்றார். இரு தடவைகள் இக்கண்டத்தைக் கடக்கவும் முயற்சி செய்தார். ஆனல், முயற்சி கைவிடப் பட்டது. இரண்டாவது முயற்சியின் பொழுது (1922 இல்) இவரே இறக்க நேரிட்டது. இவர் சிறந்த ஆங்கிலேய துருவ ஆராய்ச்சியாளர்.

1911 இல் நார்வே நாட்டைச் சார்ந்த அமுண்ட்சன் என்பார் தென் முனையை அடைந்தார். இதற்குப் பின் யாரும் அக்கண்டத்தின் தரையைக் கடக்கவில்லை. இவருக்கு முன் சென்ற ஸ்காட் என்பார் இறக்க நேரிட்டது.

1952 இல் வேடிக்கிள்டன், ஸ்காட் ஆகிய இருவருடனும் பணியாற்றிய சிலர் அண்டார்க்டிக் கண்டத்தைக் கடக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன் விளைவாகக் காமன் வெல்த் அண்டார்க்டிக் கடப்புப்பயணம் மேற்கொள்ளப் பட்டது. இதற்குத் தலைவராக டார்க்டர் விவியன் பக்ஸ் எ ன் பார் தேர்ந்தெடுக்கப்பட்டார் இவருக்குத் துணையாக எவரெஸ்ட் புகழ் ஹில்லாரி இருந்தார். இவர் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந் தவர். அவ்வாறு கூட்டு முயற்சியுடன் திட்ட மிட்ட பயணம் 1957-58 இல் இனிது நிறைவேறியது. 1952-1956 வரை அதற்குரிய முயற்சி களும் முன்னேற்பாடுகளும் நடைபெற்றன.

பயணம்

பயண வழியின் தொலைவு 2,000 மைல். பயணவழி காமன்வெல்த் நிலப்பகுதியிலேயே அமைந்தது. அதாவது வழி வெடல் கடலிலுள்ள வேசல் விரிகுடாவிலிருந்து ராஸ்கடலிலுள்ள மக்மர்டோ சவுண்டுவரை அமைந்திருந்தது.

பயணத்தின் முன்செல்லும் குழு இலண்டனை விட்டு 1955 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கப்பலில் புறப்பட்டது. வெடல் கடலின் பனிக்கட்டியின் வழியாகக் கப்பல் கடினப் பயணத்தை மே ற் கொண்டு வேசல் விரிகுடாவின் கரைகளை 1956 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடைந்தது.

இங்கு முக்கிய தளம் அமைக்கப்பட்டு, அதற்கு ஷேக்கிள்டன் எனப் பெயரிடப்பட்டது. எட்டுப் பேர் அடங்கிய குழுவினரை இங்கு விட்டு விட்டு, மேற்கொண்டு ஆகவேண்டிய வேலைகளைக் கவனிக்க டாக்டர் பக்ஸ் இங்கிலாந்திற்கு வந்தார். திரும்பவும் 1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வேடிக்கிள்டன் தளத்திற்கு வந்தார்.

சர் எட்மண்ட் ஹில்லாரி தம் குழுவினருடன் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்தை விட்டுப் புறப்பட்டார். 1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மக்மர்டோ சவுண்டை அடைந்தார்.

வெடல் கடலில் இருந்து பக்ஸ் தம் குழுவின ருடன் கிளம்பினார். ராஸ் கடலில் இருந்து ஹில் லாரி தம் குழுவினருடன் கிளம்பினர். இவ்விரு குழுவினரையும் மற்றொரு அமெரிக்கக் குழுவினர் விமானத்தில் பறந்து வந்து தென் முனையில் சந்தித்தனர். இவர்கள் அண்டார்க்டிக் கண்டத்தின் தரையைக் கடந்து தென் முனையை அடைந்தது நில இயல்நூல் ஆண்டின் பகுதி யாகவே அமைந்தது.

பயணம் தாழ்ந்த வெப்ப நிலைகள், உயர்ந்த மலைகளின் குறுக்கீடு மு த லி ய இன்னல்களுக் கிடையே நடைபெற்றது. 30 மைல்களுக்கு ஒரு தடவை நிலநடுக்க ஒலிப்பு அளவீடுகள் எடுக்கப் பட்டன. பனிக்கட்டியின் அடர்த்தியைக் கண்டு பிடிக்க இந்த அளவீடுகள் எடுக்கப்பட்டன.

இதுவரை கண்டறியப்படாத இரு மலைத் தொடர்கள் இருப்பதாகவும்; உலகின் பெரிய பனி யாறுகளில் ஒன்று இருப்பதாகவும் ஆராய்ச்சி களின் மூலம் தெரிய வந்தது.

பனிக்கட்டி அடர்த்தியைக் கணக்கிட்டதில் இருந்தும்; மற்றும் நில இயல்நூல் ஆண்டுத் தொடர்பாகச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந் தும், அண்டார்க்டிக் கண்டம் ஒரு தனி நிலத் தொகுதி அல்ல, தீவுகளும் மலைகளும் அடங்கிய தொகுதி என்பது தெரிய வருகிறது.