உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டார்க்டிக் பெருங்கடல்/தென்கடல்

விக்கிமூலம் இலிருந்து

8. தென்கடல்

அண்டார்க்டிக் கடலுக்குத் தென்கடல் என்னும் பெயரும் உண்டு. இதன் நீர்கள் பற்றிய முக்கிய இயல்புகள், ஆராய்ச்சி மூலம் வெளியாகியுள்ளன. அவைபற்றி இங்குக் காண்போம்.

குளிர் நீர்கள்

இக்கடலின் நீர்கள் மேலடுக்கு, வெப்ப அடுக்கு, குளிர் அடுக்கு என மூன்று அ டு க் கு களைக் கொண்டவை. இதன் கரைகளில் தோன்றும் குளிர் நீர்கள் அடியில் வடக்கே வரை பரவுகின்றன. நில நடுக்கோட்டுக்கு வடக்கேயுள்ள அட்லாண்டிக் கடலிலும் இந்நீர்கள் காணப்படுகின்றன. இந்நீர்கள் இக்கடற்கரையின் பல பகுதிகளில் தோன்று கின்றன என்று உற்று நோக்கல்கள் உறுதிப் படுத்தியுள்ளன. இவை மாரிக் காலத்தில் கண்டத் திட்டு(continental shelf) சென்று செறிவாகி, அங்கு அடியிலுள்ள நீர்களோடு கலக்கின்றன. இவ்வாறு நடைபெறுவதில் உள்ள பொறி நுட்பம் என்ன என்பது திட்டமாகத் தெரிய வில்லை.

நீரோட்டங்கள்

ஆற்றல் வாய்ந்த அண்டார்க்டிக் வளைய நீரோட்டத்திற்குக் கிழக்குப்பெரு நகர்வு நீரோட்டம் (the great eastern drift) என்று பெயர். ஈர்ப்பைப் பொறுத்துள்ள கடல் மட்டச் சாய்வால், இந் நீரோட்டம் உண்டாகிறது. தெற்குப் பகுதியிலுள்ள மேல் நீர்கள் ஆர்க்டிக் வளைய ஓட்டத்திற்குச் செல்கின்றன. அவை கூடுமிடத்தில் முகப்பு மண்டலம் (frontal zone) உருவாகிறது. இங்கு அண்டார்க்டிக்காவின் இயற்கை எல்லைகள் அமைந்துள்ளதால், இதைப்பற்றி ஆராய அதிக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாவது நீரோட்டம் மேற்கு நீரோட்டம் இது அண்டார்க்டிக்கின் கரை கெடுகச் செல்வதாக நம்பப் படுகிறது. இங்கு முழுமையான நீர் ஒட்டம் இல்லை. அதற்குள் இருக்கும் நீர்களே சுற்றிச் சுழன்று கொண்டு இருக்கின்றன. இந்த உள்நீர் ஓட்டங்கள் புயல்களால் உருவாகின்றன. இச்சுழற்சியில் குளிர் நீர் அடியிலிருந்து மேல் வருகிறது. இக் குளிர் நீர் வடக்கேயுள்ள வெப்ப நீர்களுக்குப் பனிக் கட்டிகளையும், பனிப் பாறைகளையும் எடுத்துச் செல்கிறது. .

பனிப் பாறைகள்

இவை தென்கடலின் இயல்புகளில் ஒன்று; கரைகளில் உண்டாகி, வடக்கே சென்று கடலில் கலக்கின்றன. கண்டத்திலிருந்து கனிப் பொருள் களைச் சுமந்து செல்கின்றன. 1965-இல் 160 கி. மீ. நீளமும், 72 கி. மீ. அகலமும் உள்ள பனிப்பாறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது அலாஷெயவ், லீனா ஆகிய விரிகுடாக்களுக்குத் தடையாக இருந்தது. ஆற்றல் வாய்ந்த புயல்கள் அடிக்கும் பொழுது, கண்டத் திட்டு பனிக்கட்டியிலிருந்து (shelf ice) பனிப்பாறைகள் உடைகின்றன.

தவிரப் பனிப் பாறைகளால் க ட லு க் கு க் கொண்டுவரப்பட்ட படிவுகள் 500-1000 கி. மீ. வளையத்தைக் கண்டத்தைச் சுற்றித் தோற்றுவிக் கின்றன.

கடல் ஒலிகள்

தென்கடலில் விலங்கு இரைச்சலின் கூச்சல் பற்றி அறிய ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன, இதிலுள்ள இருண்ட நீர்களில் இந்த ஒலிகள் உருவாகின்றன. அவை சீழ்க்கை ஒலியாகவும், இரைச்சல் ஒலியாகவும், பீப் ஒலியாகவும், கீச் ஒலியாகவும் உள்ளன. இவற்றிற்கு வெடல் கடலின் சீல்களே காரணமாகும். இவை கடல் விலங்குகளாகும். டாக்டர் வில்லியம் வழிவில் திமிங்கில-சீல் ஒலி ஆராய்ச்சியில் வல்லுநர் ஆவர். செய்தி தெரி விக்கவே இவ்வொலிகளைச் சீல்கள் எழுப்புகின்றன என்று அவர் கூறுகின்றார்,

தனிக் கடலா?

திட்டமான எல்லைகள் இல்லாததால், தென் கடலைத் தனிக் கடலாகப் பிரிக்கக்கூடாது எனச் சில கடல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இக்கருத்தைச் சோவியத்துக் கடல் ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குள்ள தனித் தன்மைகளைச் சுட்டிக்காட்டி, அவ்வாறு செய்யக் கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர். விந்தைக்குரிய இயற்கைச் செயல்கள், பனி மூட்டம், தட்பவெப்ப நிலை முதலியவை அதன் தனித் தன்மைகள் ஆகும். அண்டார்க்டிக் வளைய ஓட்டத் தின் வடபுலமே தென் கடலின் வடக்கு எல்லை களாகக் கொள்ளப்படவேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.