உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டார்க்டிக் பெருங்கடல்/உலகின் ஆராய்ச்சிக்கூடம்

விக்கிமூலம் இலிருந்து

9. உலகின் ஆராய்ச்சிக்கூடம்

உலகின் மிகப் பெரிய ஆராய்ச்சிக்கூடம் அண்டார்க்டிகா ஆகும். 1961-ஆம் ஆண்டிலிருந்து அனைத்துலக ஆராய்ச்சிக்கென்றே அது ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, உருசியா, கனடா முதலிய பன்னிரண்டு நாடுகள் அதில் ஆராய்ச்சிகள் நடத்தியவண்ணம் உள்ளன. அது தனிச்சிறப்பு வாய்ந்த இயற்கையான உற்றுநோக்கு ஆராய்ச்சி நிலையமாகும். இதைக்கொண்டு உலகினையே ஆராயலாம்.

ஆராயப்படும் துறைகள்

வானிலை இயல், காற்று மேல் வெளி, காஸ்மிக் கதிர்கள், புவிக்காந்தம், நில நடுக்கவியல், தாவர இயல், விலங்கியல், உடலியல், மருத்துவ அறிவியல்கள் முதலிய துறைகள் இங்கு ஆராயப்படுகின்றன.

பனிக்கட்டி

அண்டார்க்டிக் கண்டம் உலகின் மிக உயர்ந்த ஆறாவது கண்டமாகும். இதன் பனிக்கட்டி உறை, உலகப் பணிக்கட்டி உறையில் 90 பங்கு உள்ளது; 70,00,000 கனமைல் உள்ளது. இது உருகுமானால் உலகக் கடல்களை 250 அடிக்கு உயர்த்தவல்லது! இதன் நிலத் தொகுதியில் 98% பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. இக்காரணத்தால் இதற்கு வெண்பனிக் கண்டம் என்னும் பெயருமுண்டு. இக்கண்டம் கடல் மட்டத்திற்குமேல் சராசரி 1.6 கி. மீ. உள்ளது. இதன் மிக உயர்ந்த பகுதி 16,860 மீட்டர் உயரமுள்ள வின்சின் மேசிஃப் ஆகும். இக்கண்டத்தின் மேற்கு முனையிலுள்ள விக்டோரியாலாந்து பகுதிகள் கடல் மட்டத்திற்குக் கீழ் 330 மீட்டர் ஆழத்தில் உள்ளன. ஆனால் அவை 3,300 மீட்டர் தடிமனுள்ள பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளன என்று அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கரையிலுள்ள பணியாறுகளோடு சேர்க்க இக் கண்டத்தின் பனி உறைவு 1710 மீட்டர் தடிமனாகும். அவையில்லாமல் அதன் தடிமன் 1860 மீட்டர் ஆகும்.

கொள்கை

450 ஆண்டுகளுக்கு முன்பு தென்முனை, வெப்பச் சகாராவில் கண்ட நகர்வு விளைவினால் (continental drift) காணப்பட்டது என்னும் ஒரு கொள்கை நிலவுகிறது.

மேலும் நில நடுக்கோட்டிற்குத் தெற்கேயுள்ள கண்டங்கள் மிகப்பெரிய கண்டமான டாண்ட் வானாலாந்தின் பகுதியாக ஒரு காலத்தில் இருந்தன என்னும் கொள்கைக்கும் அண்மைக் காலக் கண்டுபிடிப்புகள் அரவணைப்பாக உள்ளன. அண்டார்க்டிக் கடல், அதன் தரைகள், தரையின் காந்தப்புலம் ஆகியவற்றை ஆராய்ந்ததின் வாயிலாக ஒரு புதுக்கொள்கை உருவாகியுள்ளது. கடல்தரை பரவுகிறது என்பதே அக்கொள்கையாகும்.

தட்ப வெப்பநிலை

பயங்கரக் காற்றுகள், கடுங்குளிர், பனிப்புயல் முதலிய இயற்கைக் கொடுமைகளுக்கு எதிராக நடைபெறும் போ ரா ட் ட மே அண்டார்க்டிக் வாழ்க்கையாகும். இவ்வாழ்க்கை ஆராய்ச்சியாளர் களுக்கு மட்டுமே உரியது.

சூறாவளிக் காற்றின் விரைவு வினாடிக்கு 40 மீட்டர். பனிப் புயல்களின் விரைவு ஒரு வினாடிக்கு 50 மீட்டர். சில சமயங்களில் அது 60 மீட்டர் விரைவையும் அடையும். காற்றின் விரைவு ஒரு வினாடிக்கு 15 மீட்டர். காற்றழுத்தம் 560 மில்லி மீட்டர், உறை பனி வெப்பநிலை -56°C.

இக்கண்டத்தின் மேற்கே ஆண்டுச் சராசரி வெப்பநிலை 0°F. உள்ளே 400 மைல் சென்றால் -30°F. 900 மைல் சென்றால்-60°F. ஜனவரித் திங்களில் கோடை மிக உச்சமாக இருக்கும். அண் டார்க்டிக்கின் மொத்த மழையளவு ஆண்டுக்கு 4 முதல் 6 அங்குலமாகும்.

தாவரங்கள்

மூன்று பூக்கா தாவரங்களே உள்ளன. ஆல்காக்களும், லைக்கன்களும் காணப்படுகின்றன.

விலங்குகள்

சீல்கள், எம்பரர், அடிலிஸ் பென்குயின் பறவைகள், திமிங்கிலங்கள், அண்டரண்டப் பறவை, கழுகு, புறாக்கள் முதலியவை நீரில் வாழ்பவையே. நிலத்தில் வாழும் முதுகெலும்பு விலங்குகள் இல்லை. சிறகில்லாத சுருள் வால் பூச்சிகள், மற்றும் சிறு பூச்சிகள் பாறைகளுக்குக் கீழ் வாழ்கின்றன. ஷிரிம்ப் என்னும் புரதச்சத்து மிகுந்த விலங்குகள் வெடல் கடலில் நிறைய உள்ளன.

படிவுச் சான்று

2 அங்குல நீளமுள்ள தவளை இன விலங்கின் தாடை எலும்பு ஒன்று படிவாக அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப்படடுள்ளது. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தென்முனைக்கு அருகிலுள்ள துணை வெப்ப மண்டலக்காடுகளில் வாழ்ந்த விலங்காகும் இது. இப்பகுதியில் ஒரு காலத்தில் முதுகெலும்புள்ள விலங்குகள் வாழ்ந்தன என்பதற்கு இது சான்றாகும். தாவர, விலங்குத் தோற்றமுள்ள படிவுகளும் தென்கடலின் அடிப் பகுதியில் காணப்படுகின்றன.

மலையும் மலைத் தொடர்களும்

அண்டார்க்டிகாவில் நீரில் மூழ்கியுள்ள மலைகள், மலைத்தொடர்கள், வடிநிலங்கள் ஆகியவற்றின் எல்லைகள் ஆராயப்பட்டுள்ளன இரு எரி மலைகளைக் கொண்ட 30-130 மைல் அகலமுள்ள மலை முகடு ஆப்பிரிக்காவின் தெற்கே கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இம்முகடு 5000 மீட்டர் ஆழங் களுக்கு மேல் உள்ள இகோல்னி விரிகுடாவின் (Igolny Bay) அருகேயுள்ள வடி நிலத்தின் மையத்தில் உளளது.

அண்டார்க்டிக் பெருந்தொகுதி (horst) மலைத் தொடர்களாலானது. இவை அதனைக் கிழக்குக் கண்டம், மேற்குக் கண்டம் எனப் பிரிக்கின்றன.

கிழக்குக் கண்டம் கடல் மட்டத்திற்குமேல் 500-1000 மீட்டர் உயரம் தொடர்ச்சியாக உள்ளது; பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. பனிக்கட்டி 2-2.5 கி. மீ. தடிமனுள்ளது. அதன் மையத்தில் காம்பர்ட்சவ் மலைத்தொடர் (Gamburtzev Muntain Range) காணப்படுகிறது. அதன் கிழக்கே தென் முனையிலிருந்து கடற்கரை வரை பள்ளம் ஒன்று உள்ளது. மற்றொரு துணைப் பணியாற்றுக் குழிவு (Subglacial bowl) கம்பர்ட்சவ் மலைக்கு மேற்கே வரை பரவியுள்ளது குயின்மா.ஃட்லாந்திற்கும் (Queen Maud Land) தென் முனைக்கும் இடையே மற்றொரு குழிவு (bowl) இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். இக் கண்டம் ஒரு காலத்தில் மற்றத் தென்கண்டங்களோடு சேர்ந்து இருந்தது.

மேற்கு அண்டார்க்டிக் கண்டமும் பனிக்கட்டியால் மூடப்பட்டுக் கடல் மட்டத்திற்குக் கீழ் 1500 மீட்டர் ஆழத்தில் உள்ளது. மலையுச்சிகளில் சில பனிக்கட்டியைத் தாண்டி, அதற்கு மேலும் வருகின்றன. பனிக்கட்டி உறை உருகுமானால், நீரின் மேற்பரப்பில் ஒரு பெரிய தீவுத் தொகுதி (archipe1lago) தோன்றும். இம்மேற்குக் கண்டம் தோற்றத்தில் எரிமலைச் சார்புடையது. 10 மில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றியது.

அண்டார்க்டிக் கண்டத்தில் பனிக்கட்டி உறைவு உள்ள பகுதி 12 மில்லியன் சதுர கிலோ மீட்டர் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். சராசரி அதன் தடிமன் 2,200 மீட்டர். மேரி பேர்ஃட்லாந்தில் (Mary Birdland) அது 4 கி.மீ.

நீர் வளம்

அண்டார்க்டிக் பனிக்கட்டி அள விலா நீர் வளம் உடையது. ஓராண்டிற்கு 1,00,000 ஓல்கா ஆறுகள் நீரை அது தாங்கவல்லது. உலகின் தண்ணிர்ப் பஞ்சத்தை அது நீக்கும்.

கனி வளம்

1973-இல் ராஸ் கடலில் ஈத்தேன் மீத்தேன் இருப்பதற்குரிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப் பட்டன. இயற்கை வாயுவும், எண்ணெய்ப் படிவு களும் இருப்பதற்கு இவையே அறிகுறிகள். அண் டார்க்டிக் கண்டத் திட்டுகளில் 45 மில்லியன் பீப் பாய்கள் எண்ணெயும், 115 டிரில்லியன் இயற்கை வாயும் உள்ளன என்று அமெரிக்க நில அமைப்பு அளவைத் துறையினர் உறுதி செய்துள்ளனர். கடற்படுகையின் பெரிய பகுதிகளில் மாங்கனிஸ் முண்டுகள் கோலிக்குண்டு அளவிலிருந்து காற்பந்து அளவுவரை உள்ளன.

பனிக்கட்டி இல்லாத மலைகளை நில அமைப்பு நூல் அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். அண்டார்க்டிக்கில் இத்தகைய மலைகளின் பரப்பு 70,000 சதுர கிலோ மீட்டர். தங்கம், பெரிலியம், வயிரங்கள், இரும்புத்தாது, செம்பு, நிக்கல் தாது, கதிரியக்கக் கனிப் பொருள்கள், மைக்கா, பாறைப் படிகம், கிராபைட் முதலியவை இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களாகும். வெடல் கடல், ராஸ் கடல் ஆகியவற்றிற்கிடையே உள்ள மணற்கல் பகுதிகளில் எண்ணெய் கிடைக்க வாய்ப்புள்ளது. மாலிப்டினம், காரீயம், துத்தநாகம் முதலியனவும் கிடைக்க நல் வாய்ப்புள்ளது.

முதல் அட்லஸ்

அண்டார்க்டிக்கின் முதல் அட்லசைச் சோவியத்து ஒன்றியம் உருவாக்கியுள்ளது. உலக அறிவியலார் திரட்டிய செய்திகளிலிருந்து இப்படம் வரையப்பட்டுள்ளது. தீவுகள், மேட்டுச்சமவெளிகள், மலைத் தொடர்கள், ஏரிகள், பனியாறுகள், புவி முனைகள், நீரோட்டங்கள், வனச்சோலைகள், தீவக்குறை ஆகியவை படங்களில் குறிக்கப்பட் டுள்ளன. அட்லசிலுள்ள படங்கள் பனிக் கண்டத்தை மட்டுமல்லாமல், தென்கடலைச் சூழ்ந்துள்ள பகுதிகளையும் காட்டுகின்றன.

அண்டாக்டிக் சோலைகள்

உயிரற்ற வெண்மையே அண்டார்க்டிக்கை அணி செய்வது. வான ஊர்தியில் செல்லுகின்ற பொழுது இந்த வெண்மைக்கிடையே பனி மூடிய குன்றுகள் தெரியும். கறுத்த மாநிற அல்லது துருப்பிடித்த கறுப்பு நிறமுள்ள பாறை ஒட்டுகள் தெரியும். இவற்றிற்கிடையே பசுமையான குட்டைகளும், ஏரிகளும் கண்ணுக்குப்படும் இவையே அண்டார்க்டிக் சோலைகள். திங்களில் கடல்கள் ' இருப்பது போன்று இவை அண்டார்க்டிக்கில் உள்ளன.