உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் தலைமை உரைகள்/அண்ணாவின் அறிவு மொழி

விக்கிமூலம் இலிருந்து


அண்ணாவின் அறிவு மொழி அகர வரிசை

அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், கசப்புணர்ச்சியை வளர்க்கக் கூடாது. 50

ஆசிரியர்களுக்குச் சிந்தனை துணை ஏடாக இருக்க வேண்டும். 47

இனிமேல் சொல்வதுடன், செய்து காட்டவும் வேண்டும். 20

எந்தெந்தச் சிக்கல்களிலோ, தேசியம் பேசுகிறீர்கள், காங்கிரஸ் நண்பர்களே. மது ஒழிப்பை ஒரு தேசியச் சிக்கலாக முதலிலே மேற்கொள்ளுங்கள். 68

என்னிடம் இருப்பதாகச் சொல்லப்படும் திறமைகளுக்கெல்லாம் காஞ்சிபுரம்தான் காரணம். 108

ஒரு தலைநகரிலேயே, எல்லா அதிகாரங்களும் குவியும் நிலை நீடிக்கக் கூடாது. 103

ஒரு தலைமுறை தன்னை தியாகம் செய்து கொண்டால்தான், இன்னொரு தலைமுறைக்குப் பலன் கிடைக்கும். 94

ஒரு நபரின் அதிகார வரம்பிற்குள், அநேக ஓட்டுகள் உள்ளன. 15

ஒரு நாட்டின் நிலையான பெருமைக்கும், செல்வத்துக்கும் ஊன்றுகோலாக இருப்பது கல்வியே. 98

ஒருமைப்பாடு என்பது உளப்பூர்வமாக உருவாக வேண்டும்; மொழியால் அல்ல. 70

ஒருவருக்குரிய பொருளை எடுத்தாலும், ஒருவருக்குரிய உரிமையை எடுத்துக் கொண்டாலும் திருட்டு திருட்டுதான். 86

ஒருவரை நாம் மதிக்கும் நேரத்தில், மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் மதிக்கிறார்கள் என்பதை அறியும் போது, ஏற்படும் இனிமையை விட வேறு ஓர் இனிமை இருக்க முடியாது. 56

ஒவ்வொரு சர்க்கார் அலுவலகமும், ஜனநாயகப் பயிற்சிக் கூடமாக ஆக வேண்டும். அப்பொழுதுதான் ஜனநாயகம் வளரும். 100

கடல் விதைக்காமலேயே, பயன் தருவது. 100

கருத்தாழமிக்க நூல்கள் வளரப் பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். 47

கலந்துரையாடியே, பிரச்சனைகளுக்குப் பரிகாரம் காண வேண்டும். 87

கல்விகளுக்கெல்லாம் அடிப்படையானது தொடக்கக் கல்வி. 20

கல்வியில் முன்னேற்றம் அடையா விட்டால், நாடு முற்போக்கை அடைய முடியாது. 91

கலை என்பது மக்களைக் கட்டியாள்வது; அரசியல் என்பது மக்களைக்கட்டியாண்டு திருத்துவது. 74

காமராசர் கட்சி அளவில் கருத்து வேறுபாடு உடையவர் என்றாலும், நான் மதிக்கத் தக்க அளவுக்குப் பெருமை படைத்தவர். 49

சர்க்கார் வேறு, கட்சி வேறு. 10

சர்வாதிகார நாட்டில் ஒரு தலைவரின் சமாதியை, இன்னொரு தலைவர் கட்டி முடிப்பார். 50

செல்வமோ, செழிப்போ மக்களால் உணரப்பட வேண்டும். 88

தமிழக அரசினுடைய எல்லா வளமுமே, இன்று காவிரி ஆற்றில்தான் இருக்கிறது. 53

தமிழகத்தின் நிதி நிலை என்னைப் போல் உயரம் குறைவாக உள்ளது. 38

தமிழ்ப் பண்பாடு உலகத்தில் எல்லா மனிதர்களையும் சகோதரர்களாகவும், தோழர்களாகவும் ஏற்றுக் கொள்ளும். 83

தாமத நிலையைத் தவிர்த்திடும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டால், உண்மையான ஜனநாயகத்தின் பலனை மக்கள் அனுபவிக்க முடியும். 105

திமுக படித்தவர்களின் பாசறை. 6

தொடக்கம் தூய்மையாக இருந்தால்தான், தொடுப்பும், முடிப்பும் சரியாக அமையும். 20

பண்பாடுடைய ஒருவரைப் பாராட்டுவது தமிழ்ப் பண்பாடு ஆகும். 50

புத்தகம் எழுதுவோரை, ஏனைய நாடுகளில் எல்லாம் வித்தகர்களாகப் போற்றுகிறார்கள். 60

புத்தகம் வாங்குகிற பழக்கம் வேண்டும். 47

போலீஸ் படை நன்றாக நேர்த்தியாகச் செயல்படுகிறது என்றால், அது சமுதாயத்தின் தன்மையைக் காட்டும். 107

நம் ஆவலின் அளவு, சாதனைகளின் அளவை மீறியதாகும். 86

நம் நாட்டில் அஜந்தா ஓவியத்திற்கும், சித்தன்னவாசல் ஓவியத்திற்கும் அழியாப் புகழுண்டு. 97

நம்மால் மதிக்கத் தக்கவர்களின் வாழ்க்கை வரலாறு முழு அளவுக்குத் தமிழகத்தில் இல்லை. 60

நாட்டிலுள்ள நிதி நிலைமை, மூலப் பொருள், தொழில் நுட்ப அறிவு முதலியன ஒருங்கிணைந்து ஏற்படும் ஒருமைப் பாடே உண்மையானதாக இருக்க முடியும். 40

நாடு என்பது நிரந்தரமானது. 10

நல்லவர்கள் குடிப்பதில்லை, குடிப்பவர்கள் நல்லவர்கள் அல்லர். 68

மதுப்பழக்கம் வாழ்க்கை முறைகளை மட்டுமல்ல, வாழ்க்கை நெறிகளையும் கெடுக்கிறது. 62

மரபு என்பது இப்போது மறதி என்றாகி விட்டது. 60

மருந்தை விடக் கனிவுதான் நோய்க்கு மருந்தாகும். 93

மாணவர்கள் பிரச்சினைகளில் ஆர்வங் காட்டுவது வேறு, பங்கு பெறுவது வேறு. 14

மாநில அரசாங்கங்களுக்கு மதிப்பில்லாமல் போனதற்கு, மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும். 35

மாற்றுக் கட்சியினராக இருந்தாலும், அவர்களுடைய அனுபவங்கள் நமக்குப் பயன்பட வேண்டும். 10

மாறுபட்ட கருத்துடையவர்களும், தமிழ் மொழிப் பிரச்சினையில் இன்று ஒன்று படுகிறார்கள். 58

மேலை நாடுகளில் ஒரே புத்தகம் எழுதினாலே, ஒருவர் தம் வாழ்நாளைக் கழித்து விட முடியும். 59

மொழி பெயர்க்கும் பொழுது, கருத்துக்களைத் திரட்டித் தர வேண்டும். 47

வரலாற்றுச் சிறப்பு மிக்க காஞ்சியில், இன்று வறுமை தாண்டவமாடுகிறது. 104

ஜனநாயகத்திற்கு மக்களால் எந்தவித ஆபத்தும் இல்லை. 72

ஜனநாயகமானது, பல்வேறு பிரச்சினைகளைக் கிளறி விடுகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை அவைகளில் ஒன்று. 109



அய்யாவுக்கு ஓர் அன்புப் பரிசு

நெடுந்தொலைவு போன மகன் திரும்பத் தந்தையைப் பார்க்க வரும் போது, கையில் கிடைத்ததை வாங்கி வந்து தருவான்.

அதே போல, இன்று பெரியாரைப் பார்க்க வந்திருக்கின்ற நானும் ஓர் அன்புப் பரிசை—கனியை—ஏதோ, என்னால் இயன்றதைக் கொண்டு வந்திருக்கிறேன்.

சுயமரியாதை இயக்கத் திருமணங்களை நடத்திச் சாதி ஒழிப்புக்காகப் பெரியார் பாடுபட்டு வருகிறார்.

பகுத்தறிவுத் திருமணங்களும், கலப்புத் திருமணங்களும் நாட்டில் ஏராளமாக நடைபெற்றிருக்கின்றன.

இந்தத் திருமணங்களைச் செல்லுபடியாக்கச் சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வரப் போகிறோம் என்ற நல்ல செய்தியை—அன்புப் பரிசை—கனியை—பெரியாரிடம் அளிக்கிறேன்.

அண்ணா, 1967