உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் தலைமை உரைகள்/தமிழாலும் இயலும்

விக்கிமூலம் இலிருந்து


12. தமிழாலும் இயலும்


தமிழ் மொழியைப் பயிற்சி மொழியாக்கும் பணியில், வளர்ச்சி அடைந்து வரும் கட்டமாக இன்று ஆசிரியர் கல்லூரியில் தமிழ்ப் பயிற்று மொழித் தொடக்க விழா தொடங்குகிறது. என்னுடைய நண்பரும், கல்லூரி முதல்வருமான பெருமாள் அவர்களுக்கு இந்த விழாவில், தமிழ்ப் பெரும் புலவர் என்று பட்டம் வழங்கியது பாராட்டுக்குரியதாகும்.

நாம் எல்லாம் தமிழ் ஆர்வத்தைப் பெறத் தக்க விதத்தில், என்னுடைய நண்பர்கள் இருவரும் நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். நாம் எண்ணியதைச் செயல்படுத்த, முதலில் ஆர்வம் வேண்டும். ஆர்வம் இருந்தால்தான், நம்பிக்கை பிறக்கும். பிறகு, அதற்கான வழி வகைகளை ஆராய வேண்டும். அதைச் செயற்படுத்த ஆற்றல் வேண்டும். நாம் மட்டும் ஆற்றல் பெற்றால் போதாது. அந்த ஆற்றல், மற்றவர்களுக்கும் வரும்படிச் செய்ய வேண்டும். இத்தனக்கும் பிறகுதான், நாம் எண்ணியதைச் செயல்படுத்த முடியும்.

தமிழில் பாட மொழி இருக்க வேண்டும் என்பது-என்று சொல்வது இந்த நாட்டில்தான் தேவைப் படுகிறது. ஆங்கில நாட்டில் ஆங்கிலந்தான் பாட மொழி என்று சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை. எந்த நாட்டிலும் இல்லாத விந்தை இங்கேதான் இருக்கிறது.

45-

"தமிழில் கற்பிக்கலாமா?” என்னுங் கேள்வியும், " முடியுமா?’ என்னும் எதிர்ப்பும், பார்க்கலாம்” என்னும் சந்தேகமும், தமிழ்மொழிப் பயிற்சி பெறு பவர்கள் என்ன ஆவார்கள் ? இதுவரைப் பெற்ற வர்கள் என்ன ஆனார்கள்?’ என்று இந்தநாட்டிலே தான் பேசப்படுகிறது.
இதற்குக் காரணம் அந்நிய ஆட்சியில் இந்த நாடு இருந்தது. அ ப் போது தமிழ் நாட்டங் கொண்டவர்களைப் பார்க்க முடியாது. நாட்டங் கொண்டிருந்தவர்களும் புலவர் என்னும் பட்டத் தோடு சரி.
இப்போது நிலை அப்படியல்ல. தமிழ்மொழி மீது நாளுக்குநாள் அக்கறை ஏற்பட்டுவருகிறது. இது தேவைதானு என்று பேசப்பட்ட காலத்தில் நான் படித்தவன். தமிழை எங்கே பார்க்கலாம் என்று தேடித் தேடிப் பார்த்தால் அங்காடியில் பார்க்கலாம். அதை விட்டுவிட்டு ஆவலோடு வீட்டுக்குப்போல்ை பார்க்கலாம். வீட்டிலே போய்த் தமிழில் பேசில்ை பெற்றேர்கள், இதற்குத்தான் இவ்வளவு பணங் கொடுத்துப் படிக்க வைத்தேனு ?” என்று சொல் வார்கள்.

“ என்னுடைய வீட்டில் என் சி ன் ன ம் மா ஆங்கிலத்தில் பேசு ’ என்று சொல்வார்கள். " பேசில்ை உனக்குப் புரியுமா ?” என்று கேட் டால், புரிகிறதோ இல்லையோ, பேசு” என்பார்கள்.

பேசில்ை அண்டை வீட்டுக்காரர்களை அழைத்து வந்து காட்டிப் பெருமைபட்டுக் கொள்வார்கள். 46-
தமிழால் முடியும் என்னும்நிலை ஏற்படுவதற்குக் காரணம் தம்பி கருணநிதி சொல்லியதைக் கேட்டீர்கள். நாம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு விட்டோம் ; முன்னேறி வருகிறோம். த மி ழ ல் முடியும் என்று காட்டுவோம், அதற்குரிய நம்பிக்கை நிரம்ப ஏற்பட்டிருக்கிறது. இதிலே வெற்றி பெறுவதற்கு இப்போது இல்லாத அளவிற்கு நமக்கு ஆங்கில மொழியில் தொடர்பு வேண்டும். இரும்பு இல்லாமல் கருவிகள் இல்லை. தமிழ் இருப்பதால் மட்டும் காரியம் முடிந்து விடாது.
இன்று மா லே என்னிடத்தில் அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த சிலர் வந்து நாற்பத்தேழு ஆங்கிலப் புத்தகங்களைக் கொடுத்தார்கள். அவற் றில் பொருளாதாரத்தில் மட்டும் பத்துப் புத்தங்கள் இருந்தன. பொதுப் .பொருளாதாரம், தனிப் பொருளாதாரம், விலைவாசி என்று பல கூறுகளாகப் பிரித்து ஒவ்வொன்றைப் பற்றியும் ஓராயிரம் ஏடுகள் எழுதி இருக்கிறார்கள்.
நீங்கள் நூலகத்திற்குச் சென்று பார்த்தால் சரித்திரம் பூகோளம் என்று தனித்தனியாக ஏராள மான புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருப்பதைப் பார்க்கலாம். இவையெல்லாம் தமிழ் மொழியில் வர வேண்டும். பல்வேறு மொழியின் கருத்துக்களைத் திரட்டித் தரவேண்டும்.
அவர்கள் அறிவை விரிவாக்கி, வகைப்படுத்தி வரிசைப்படுத்தி இருக்கிருர்கள். நாம் பொருளா தாரத் துறையில் அடையும் முன்னேற்றத்தைப் 47-
பொறுத்து இவை அமைய இருக்கின்றன. மொழி பெயர்க்கும் பொழுது கருத்துக்களைத் திரட்டித் தர வேண்டும். அப்படியே மொழி பெயர்த்த ல் இது தானு தமிழ் ?” என்னும் கசப்பு ஏற்படும்.
நூல்கள் ஏற்பட நிரம்பப் பொருளாதாரம் தேவை. அதற்கு இந்தியப் பேரரசு உதவி செய்ய உறுதியளித்திருப்பாகக் கல்வியமைச்சர் கூறினுலும், அதற்கும் த மி ழ க அர சு துணை நின்ருலும் அது மட்டும் போதாது. கருத்தாழமிக்க நூல்கள் வளரப் பொதுமக்கள் ஆதரவு வேண்டும். புத்தகம் வாங்குகிற பழக்கம் வேண்டும். வாங்குகிற பழக்கம் என்ருல் இரவல் வாங்கிப் படிப்பதை தான் சொல்ல வில்லை. அது நிரம்ப இருக்கிறது. புத்தகம் வாங்கு கின்ற பழக்கம் வளர்ந்தால்தான் புதிய புதிய புத்தகங்கள் வெளிவரும்.
தப்பித் தவறி ஒருவர் எழுத ஆரம்பித்தால், ஆறு மாதத்திற்கு ஒரு வீடு பார்க்கவேண்டியது தான், ஏனென்ருல் பழையபாக்கிக்காரன் தேடு வான். ஓராண்டுக்கு ஓர் அச்சகக்காரர் துணை நிற்க வேண்டும். இங்கே அதிகமாக விற்பனையாபவை அந்தந்த ஆண்டு பஞ்சாங்கமும், இரயில்வே கைடுந் தான். மற்றவை அதிகமாக விற்பதில்லை. ஆதாயம் இல்லை என்று சோர்வு அடைந்து விடுகிருச்கள்,
நம்முடைய ஆசிரியர்களுக்கு நல்ல கற்பனைத் திறன் உண்டு. அவர்களுக்குச் சிந்தனை, துணை ஏடாக இருக்கவேண்டும். 

நான் கல்லூரியில் படிக்கும்பொழுது ஒரு பேராசிரியர் வந்ததும், பாடத்துக்குக் குறிப்புகளேக் கொடுப்பார். அதை அப்படியே எழுதி மனப்பாடம் சேய்து தேர்வு எழுதுவார்கள். நான் எழுதாமல் உட்காட்ந்திருந்தேன். ஆசிரியர் ஏன் எழுதவில்லை ?’ என்று கேட்டதும், நீங்கள் எழுதியதை படித்தால் 40 மதிப்பெண் கிடைக்குமென்றால் நானாக எழுதினால் அதைவிட அதிகமாகக் கிடைக்கும்’ என்று பதில் சொன்னேன். அதைப் போலவே அந்த ஆண்டு நம்முடைய மாநிலத்தில் நான் முதல் மாணவன் என்னும் பரிசைப் பெற்றேன்.

பரிசு பெற்றதும் அந்த ஆசிரியரிடத்திலே போய்ப் "பார்த்தீர்களா ? நானாகப் படித்ததன் விளைவு " என்று கூறினேன். அதை அப்படியே எல்லோரும் கையாள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆசிரியர்கள் உற்சாகமாகப் பணியாற்ற வேண்டும். சோர்வடையக் கூடாது. இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை நாம் பார்க்க முடியும்.

தமிழில்தானே கண்ணகி வாதாடினாள். அவள் கூறிய வாதங்களே ஆங்கில மொழியாலும் அளிக்க முடியாது. அரசர் ஆணைகளைத் தமிழில்தானே பிறப்பித்தார்கள்.

நாம் புதியதாக எதையும் செய்ய வேண்டியதுமில்லை. இழந்ததைப் பெற்றால் போதும். ஆப்பிரிக் கண்டத்தில் விடுதலை பெற்ற நாடுகள் புதிய நாடுகள் தமக்கென்று புதிதாய் மொழிகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. நாம் அவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள். எல்லாக் கல்லூரிகளிலும், தமிழே பயிற்று மொழியாக வேண்டும்.

வகைப்பாடு : கல்வி—பயிற்றுமொழி.
(27-7-67 அன்று சென்னை சைதாப்பேட்டை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் வாயில் வகுப்புகளைத் தொடங்கி வைத்து, ஆற்றிய தலைமை உரை.)