அந்தமான் கைதி/முன்னுரை
Appearance
தமிழகத்தின் முதலமைச்சர்,
அறிஞர் திரு. சி. என். அண்ணாதுரை
கோட்டை
சென்னை-9
27—5–67.
நண்பர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 'அந்தமான் கைதி’ என் உள்ளத்தைத் தொட்டீர்த்த ஏடுகளில் ஒன்றாகும். பொருந்தா மணத்தின் கொடுமையையும், சமூக சீர்திருத்தவாதிக்கு நேரிடும் கஷ்டத்தையும் உருக்கமாக விளக்கிக் காட்டும் இந்நூல்.......... படித்திட மட்டுமல்லாது நடித்திடவும் ஏற்றதோர் நாடக நூல். திரைப்படமாகவும் இதனைக் கண்டு களித்திட வாய்ப்புக் கிடைத்தது.
கற்பனைச் செறிவுடன் அமைந்துள்ள ‘அந்தமான் கைதி’ புதிய பதிப்பாக வெளியிடுவது அறிந்து மகிழ்கிறேன். மனித இயல்பு விளக்க ஏடான இந்நூல் ஏற்கனவே மக்களின் நல்லாதரவைப் பெற்றிருப்பதுடன் மேலும் பேராதரவு பெற்றிடும் என்று நம்புகிறேன். நண்பர் கு. சா. கி. அவர்களுக்கு என் பாராட்டுதலை வழங்கி மகிழ்கிறேன்.
அன்பன்
அண்ணாதுரை.