அந்தி நிலாச் சதுரங்கம்/கேரளத்தின் பூஞ்சிட்டு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

 
அந்தி நிலாச் சதுரங்கம்

4. கேரளத்தின் பூஞ்சிட்டு!

மகேஷ்...!

அன்பே வடிவமாக அமைந்திட்ட இன்னுயிர்த் துணைவர் ரஞ்சித்தை வேடிக்கையானதொரு குதூகலத்துடன் முந்திக் கொண்டு, ஓட்டமும் நடையுமாக வெளிப்புறம் வந்து நின்ற ரஞ்சனிக்கு, இப்பொழுது இனம் விளங்காக ஒரு தவிப்பு மேலிட்டது; தவிப்பின் சல்லாபமான-வாத்சல்ய மான மன உணர்வுகளுடன் முகப்பு மண்டபத்தின் பிரதானமான வாசற் கதவுகளைத் திறந்ததுதான் தாமதம்: சூறைக்காற்றில் எதிர்பாராமல் சிக்கிக்கொண்டவளாக ஒர் அரைக் கணம் தட்டித் தடுமாறினாள்: மூச்சுத் திணறிற்று; வேர்த்துக் கொட்டியது!--- எல்லாம் அரைக் கணம்தான்!-மறு இமைப்பில், அவள் சுயப் பிரக்கினையைச் சாமர்த்தியமாக மீட்டுக்கொண்டாள். மீட்டுக்கொள்ள வேண்டியவள் ஆனாள்:-“மகேஷ், வாங்க, வாங்க!”

என்று அன்போடு வரவேற்றாள். உடன் நின்றுகொண்டிருந்த அந்தப் புதிய பெண்ணையும் அன்பிற்குக் கட்டுப்பட்ட தமிழ்ப் பண்பாடு குலுங்க இன்முகத்துடன் உள்ளே வரும்படி அழைத்தாள். எதிர்ப்புறத்துப் புல்வெளிக்குக் கரைகட்டிக் கண்சிமிட்டிச் சிரித்த பூச்செடிகளைத் தழுவித் தவழ்ந்து வந்த வாடைக் காற்று அவளுக்கு அப்பொழுது வெண்சாமரம் வீசத் தொடங்கியது நல்லதாகப் போப் விட்டது!-உள் மனத்தின் குறுகுறுப்பு அடங்கிக்கொண்டிருக்கவேண்டும்!

இந்தப் புதுமைப் பெண்யாராம்? வெளிக் காற்றில் சூடு கூடுகிறது.

மகேஷ் ஏனே தலையைத் தாழ்த்தியவராக நின்றார் : கண்களும் தாழ்த்துவிட்டிருந்தன.

ரஞ்சனியின் மனத்தை என்னவோ செய்தது. கல் பட்டு, நீரலைகள் சிதறுவது உண்டல்லவா?- அப்படி, அவள் மனத்தில் என்னவெல்லாமோ நினைவுகள், எப்படி யெல்லாமோ சலனம் கண்டன: சலனம் அடைந்தன. மனச்சலனத்தைத் திசை திருப்பவோ என்னவோ, காலடிக் சத்தம் கேட்கவே, அவள் திரும்பினாள், ரஞ்சனியின் ஊகம் என்றைக்குத்தான் பொய்த்ததாம்?-"அத்தான் , தம்ம மகேஷ் வந்திட்டாருங்க, ‘ என்று சொன்னாள்.

தமது அருமை ரஞ்சனியைப் பார்த்த அதே கண் களால் மகேஷையும் பார்த்தபடி, ரஞ்சித் “வாங்க, வாங்க,’ என்று சவனச் சிரிப்புடன் முகமன் மொழிந்தார்; பெண் ஒருத்தி உடன் நின்ற விவரத்தை அப்போதுதான் அவரால் உணரமுடிந்தது; அந்தப் பெண்ணப் பார்த்ததும், எடுத்த எடுப்பில் அவள் கேரளத்துப் பூஞ்சிட்டு என்பது அவருக்குப் புரிந்தது. அவள் பக்கம் பார்வையை மடக்கி, வரணும் என்று அவளேயும் தம் பங்குக்கு வரவேற்றார். கல் பட்டால், நீரலைகள் சலனம் அடைவது இயல்பு. ரஞ்சித் சலனம் அடைந்த மனத்தை அவருக்கே உரியதான் முனைப்புடன் கட்டுப்படுத்திக் கொண்டவராக, இல்லறத்துக் கூட்டாளியை நோக்கி, "ர...ஞ்! விருந்தாடிங்களை அழைச்சிட்டுப்போய் உள்ளே உட்கார வையேன்", என்றார்,

மகேஷ் தலையை உயர்த்தி, வசீகரமான புன்னகை ஒன்றையும் வெளியிட்டார்; பிறகு, ஆதரவானவருடைய நலத்தையும் குடும்பத்தினர் நலத்தையும் நேரிலும் விசாரித்தார்.

மகேஷின் நலன் பற்றிய விவரங்களை ரஞ்சித் நேரிடையாகவும் அறிந்து கொண்டார்.

"வாங்க, உள்ளே போகலாம். வாங்க மகேஷ்; நீங்களும் வாங்க வந்த காலோடு நின்னுக்கிட்டு இருக்கிறது விருந்தினர்களுக்கும் அழகில்லை; வந்தவங்களை நிற்க வைககிறது எங்களுக்கும் அழகில்லே; வாங்க, வாங்க!'க என்று சொல்லிக்கொண்டே, அவர்களுக்கு வழிகாட்டுவது மாதிரி, முன்னே நடக்கலானாள் ரஞ்சித்தின் ரஞ்சனி.

வரவேற்புக் கூடம்.

மகேஷ் நேர்கொண்ட பார்வைகொண்டு ரஞ்சித்தைப் பார்த்துவிட்டு, பிறகு, கண்களைத் தாழ்த்தியவாறு ரஞ்சனியைப் பார்த்துக்கொண்டே, ‘இவள்தான் ரதி: என்னோட கூட்டுக்காரியாக்கும்,’ என்று புன்னகையும் புது நிலாவுமாக, கேரளத்து மண்ணுக்கே உரித்தான செழிப்புடன் காட்சி தந்த ரதியை அறிமுகம் செய்து வைத்தார்; புன்னகை விளையாட்டில் வெட்கம் கூடுதல் ஆளவில் விளையாடிற்று.

அஞ்சலி முத்திரையை ரதி விலக்கிக்கொண்டாள்.

"ரொம்ப சந்தோஷம்!”

ரஞ்சித்-ரஞ்சனி ஜோடி, ஜோடியாகவே முறுவல் பூத்தனர்.

உச்சிப் பொழுது நெருங்கிவிட்டது.

இயற்கையின் இயல்பான அன்பிற்கு வாய்த்த ஒர் உறுத்தலாக வெயில் கோயாவேசமாகக் காய்கிறது; அந்தியில் மழை வந்தாலும் வரலாம்.

மகேஷ்-ரதி ஜோடி, ஜோடி சேர்ந்தும் ஜோடி சேர்த்தும் சோபாவில் அமாந்தார்கள்.

ரஞ்சித்தும் உட்கார்ந்துகொண்டார்; நெற்றி “விண், விண்ணென்று தெறிக்கிறது. உயிர்கொண்டவளை ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்த நேரத்தில், அவரது நெஞ்சத்தின் அடியில் அனுதாபம் பொங்கி மேலெழத் தொடங்கியது: ‘பாவம், ரஞ்...!- விழிகள் எரிச்சலுடன் நிறைந்தன. பதற்றத்தோடு அன்றையச் செய்திப் பத்திரிகைத் தாளை எடுக்கின்ற பாவனையில் கண்களை மறுபுறம் திருப்பிக் கொண்டார். இனிமேல் கவலை கிடையாது. ரஞ்சனியிடம் இப்போதைக்கு நான் அகப்பட்டுக் கொள்ளவே மாட்டேன. பூவின் கிரிப்பில் அவருடைய உதடுகள் உறவாடத் தலைப்பட்டன. ‘ரஞ், நீயும் உட்காரேன்,’ என்று உபசாரம் செய்தார். அவரது உள்மனம் எதையோ நினைவுகூர்ந்து துடித்தது!-சோதனையின் விதியாக அமைந்த அந்தப் பொல்லாத மாலைப்பொழுதின் நிகழ்ச்சியை மீண்டும் எண்ணிப் பார்க்கக்கூட அவர் அஞ்சினர். எங்கேயோ சூன்யத்தை வெறுத்து நோக்கியவண்ணம் நின்ற மனைவியை உட்காரும்படி மறுபடியும் கேட்டுக்கொள்ளவும் தவறிவிட வில்லைதான்! .

இடதுகை நடுவிரலால் நெற்றியை லேசாகத் தடவிக் கொண்டே ஆற்றாமையுடன் கணவரைப் பார்வையிட்டான் ரஞ்சனி, ‘அத்தான், ! இவங்களோடே சற்று நேரம் பேசிக்கிட்டு இருப்பிங்களாம்; நான் போய் டிஃபனுக்கு ஏற்பாடு பண்ணிட்டு வந்திட்றேனுங்க," என்றாள்: டி. வி. பெட்டிக்கு அடியில் பிரத்தியேகமாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்த வனிதா மலையாள இதழை எடுத்து அதை ரதியிடம் பான்மையுடன் கொடுத்தாள்.

‘நன்னி' பறைந்தாள் ரதி. கண்களிலும் உதடுகளிலும் நன்றியறிவு துலாம்பரமாகப் பளிச்சிடுகிறது. அம்மா, ராவிலேயே நாங்க டிஃபன் கழிச்சிட்டோம்; ரொம்ப ஹெவியான சாப்பாடு; எங்க கேரளத்து நட்சத்திரம் மிஸ் மாலினி வச்ச விருந்தின்னா, சாமான்யமா இருக்குமா? மணி இப்ப பந்துரெண்டு ஆகப்போறது; டின்னரை நாங்க இங்கேயேதான் முடிச்சுக்கப் போறோம்,’ என்றாள் அவள்.

“ஆமாங்க, ரஞ்சனி," என்று மகேஷ் ஆமோதித்தார்.

ரஞ்சனிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது!-ரதியின் பேச்சிலே, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாகத் தமிழும் மலையாளமும் எவ்வளவு அழகாகவும் பாசமாகவும் கூடிக் குலாவுகின்றன!-ரதி எங்க வீட்டுக்குப் புதுசு; இங்கே காலப் பலகாரம் சாப்பிடுறத்துக்கு ஏதோ சாக்குப்போக்கு சொல்ருங்க சரி, ஆனா. மகேஷ் ஏன் தயங்கவேணும்?ரதியோடே சேர்ந்து அவரும் “ஆமாம், சாமி போடுகிறரே?--ஏன்?

வீட்டுக்கு வந்திருந்த அந்நியப் பெண்ணுன ரதியோடு சேர்ந்து கொண்டு, அந்நியோன்யமாகப் பழகிய மகேஷ் ஆமாம் போட்டுக் காலை வேளைச் சிற்றுண்டி சாப்பிடாமல் தப்பிவிட முயற்சி செய்ததை ரஞ்சித் விரும்பவில்லை. *மகேஷ்,” என்று அழைத்தார்; நீங்க காலம்பற டெலிஃ போனிலே என்கிட்ட பேசின தாக்கல் தெரிஞ்சதுமே, என்ளுேட அன்பு ரஞ்சனி உங்களுக்காக இட்டிலியெல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டாளாக்கும்; நீங்களான, உங்க ரதியோடு சேர்ந்துக்கினு டிமிக்கி கொடுக்கப் பார்க்கறிங்க: ஆனா, நாங்க ரெண்டு பேரும் உங்க ரேண்டு பேரையும் அவ்வளவு சுலபமாய்த் தப்பிச்சுக்கிட விட்டுடுவோமா, என்ன?’ என்று சற்றே துர்க்கலான குரலில் பேசினார்.

மகேஷ் திகைத்தார்; முகம் மாறியது: “நடந்த நடப்பை ததி சொன்னுள்: அதனுலேதான், நானும் “ஆமாம்” போட்டேன்; எங்க வார்த்தைகளே நீங்க தம்பாமல் தவருக எடுத்துக்கிடுறதானால், நானும் சரி, ரதியும் சரி, மதுபடியும் உங்க வீட்டிலேயும் காலைப் பலகாரத்தைச் சாப்பிட்டு வைக்கிறோம், மிஸ்டர் ரஞ்சித்!’ என்று இதமான குரலில் இணக்கம் தெரிவித்தார்.

“அப்படி வாங்க என் வழிக்கு ரஞ்சனி தமாஷ் பேசினாள்; சிரித்தாள்; “நான் உங்களுக்கோசரம் ரிசர்வ் செஞ்சு வச்சிருக்கிற இட்டிலி உங்களுக்காகவே இன்னமும் காத்துக்கிட்டு இருக்குதுங்க, மகேஷ். இப்ப அந்த இட்டிவிகளை நீங்க ரெண்டு பேரும் பாகம் பிரிச்சுக்கிடலாம்; அத்தோடே ரவா உப்புமாவும் உங்களுக்குச் சூடாகக் கிடைக்கும்; ஒரு நிமிஷம், எல்லோருமாய்ப் பேசிக்கிட்டு இருங்க: இல்லே. ரேடியோவைப் போடுங்க. இதோ வந்திடுறேன். மகேஷ்,’ என்று “படபட"வென்று சொல்லிவிட்டு, இரண்டாம் கட்டைத் தாண்டி ரேழியில் மடங்கிச் சமையல் கடத்தின் உள்ளே மறைந்தாள் ரஞ்சனி.

அர்த்தமுள்ள புன்னகைப் பரிவர்த்தனையில் மூவரும் ஈடுபட்டிருந்தனர்.

வன்னிசாகப் பத்து நிமிஷங்களேத் தேயவிட்ட பிற்பாடுதான், ரஞ்சனி மீண்டாள்; அவளுக்கே உரித்தான பரபரப்புடன், அடுத்திருந்த உணவுக் கூடத்திலே சுழன்றாள்: தட்டுக்கள் தாளம் தட்டின; கரண்டிகள் சுருதி கூட்டின. பூந்திரை விலக்கிப் பூமணம் சொரித்த மதுர கீதத்தின் இனிமையில் அவள் வெகு சுறுசுறுப்பாகவே இயங்கினாள். "வாங்க, ரதி; நீங்களும் வந்திடுங்க, மகேஷ்!” மறு மூன்றாவது நிமிஷத்தில் அழைத்தாள்.

ரதிதான் முதலில் எழுந்தாள்.

மகேஷ் இரண்டாவதுதான்.

"நீங்களும் வாங்க, ரஞ்சித்," என்று கூப்பிட்டவர் மகேஷ்.

“கணக்குக்கு மீறி காலையிலே இட்டிலி சாப்பிட்டாச்சுங்க. இனி, வயிற்றிலே இடம் கிடையாதுங்க!" என்றார் பாங்கர்.

"விருந்துசாப்பிடுறவங்களோட, விருந்து கொடுக்கிறவங்களும் கூடமாட உட்கார்ந்து சாப்பிடுறதுதானே நம்மோட சம்பிரதாயமாக இருந்து வருது?-சும்மா வாங்க; எங்களுக்கு மட்டும் பசிக்குதா, என்ன? ரஞ்சனி கோவிச்சுப்பாங்களேன்னு தான் 'கட்சி'ப்னு எந்திருச்சிட்டோம்," என்று சொல்லி, ரஞ்சித்தின் கைகளைப் பற்றி அழைத்துச் செல்ல வேண்டியவர் ஆனார் மகேஷ்.

ரஞ்சித்துக்குத் தர்ம சங்கடமாகப் போயிற்று; ‘'நானும் வந்தாச்சு, ரஞ்!" என்று மென்று விழுங்கினார். திரிசங்கு சொர்க்கம் என்கிறார்களே, அது இப்படித்தான் இருக்குமோ? கைகளே உதறிக் கொண்டார்.

விஷமச் சிரிப்புப் பயின்றாள் ரஞ்சனி. "உங்க விருந்துக்கு நீங்க இல்லாமலா? உட்காருங்க, அத்தான்," என்று அன்பை வாரி வழங்கினாள். பிறகு விருந்தினரையும் அமரச் சொல்லி, பஞ்சு மெத்தை ஆசனங்களைச் சுட்டினாள். ‘எண்ணி நாலு இட்டிலிக்கு மேற்கொண்டுதான் நீங்க சாப்பிடுற பழக்கம் இல்லையேன்னு, உங்களுக்காக நாலே நாலு இட்டிலியை எடுத்துப் பத்திரப் படுத்தி வச்சிருந்தேன். நீங்களும் உங்க ரதியுமாய் ஆளுக்கு ரெண்டு மேனி சாப்பிடுங்க’, என்று சொல்லி குளிர்ப்பதன அறையைத் திறத்து இட்டிலிகளைப் பங்கு வைத்து, அவரவர் தட்டுக்களில் வைத்தாள் ஆவி பறந்த ரவை உப்புமாவில் ஒவ்வொரு கரண்டி போட்டாள். தக்காளிச் சட்டினி என்றால் மகேஷாக்கு உயிரும் பிராணனும், என்ன செய்யட்டும்?- நேரமாகிவிட்டதால், இப்போது அதன் சுவை கெட்டுவிட்ட மாதிரி தோன்றியது. ஆகையால், புதினவையும் பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்து வைத்து அரைத்துத் தாளித்துத் அருமையான துகையல் தயார் செய்து வைக்கச் சொல்லியிருந்தாள். எடுபிடிக் குட்டி க்கு நல்ல கைப்பதம் உண்டு. ஆகவே, துகையல் வாய்க்கு உணக்கை'யாகவே அமைந்திருந்தது. ஒரு சிட்டிகை துள் உப்பையும் தூவி, பேருக்கு இரண்டு ஸ்பூன் வீதம் போட்டாள். ஊத்துக்குளி நெய் என்றால், மகேஷ் இஷ்டப்படுவார். ஊற்றினாள்! "ரதி, இனி உங்களுக்கும் இந்த வீடு சொந்தம்தான். வெட்கப்படாமல் சாப்பிடுங்க” மனசிலாயி...?? என்றாள்.

"சரி!"

"நீங்களும் 'செரி' சொல்லுங்க," என்று கேட்டுச் கொண்டு மகேஷ் பக்கம் பார்வையைப் பரப்புகிறாள் ரஞ்சனி,

“இப்பவெல்லாம் நான் 'செரீ'ன்னு சொல்றதில்லையே ரஞ்சனி?"

பெருமையாக நகை சிந்திய கையோடு, தாலி கொடுத்த தயாளரை நாடினாள். ரஞ்சித்தின் முறை அல்லவா? ஒரு கரண்டி உப்புமாவைக் கொட்டினாள் ரஞ்சனி.

“போதும், ரஞ், போதும்! இரண்டாவது கரண்டியையும், அதாகப்பட்டது. உப்புமாவையும் நான் ஆசைப்பட்டுச் சாப்பிட்டு வச்சா, அப்பாலே, உனக்குத் தானே வீண் சிரமம்?" கையை அமர்த்தினார் தொழில் பிரமுகர். கண் ஜாடைகள். மிளகாய்ப் பொடியையும் நெய்யையும் கொணர்ந்தன. வேட்டியைத் தளர்த்தி விட்டுக் கொள்ளவும் அவர் மறக்கவில்லை; 'என் மகாராணி கை பட்டால் மிளகாய்ப் பொடிகூட மனக்குதே? இப்பவே கணக்குக்கு மிஞ்சிச் சாப்பிட்டிட்டேன்; போதும், போதும்!' வேகமாக உண்டு முடித்து, வேகமாகவே எழுந்தார். பேஸினில் கையை அலம்பி, அருகில் கம்பியில் கிடந்த துருக்கித் தேங்காய்ப் பூத்துவாலேயில் கையைத் துடைத்துக் முகத்தை நிமிர்த்தி, நிலைக்கண்ணுடியில் நிலை பாய்ந்திருந்த முகத்தை ஊடுருவிப் பார்த்துச் சலனம் கண்ட நிலையில், தமது இருப்பிடத்தில் வந்தமரலானார் ரஞ்சித்.

எதிரே:

சீமாட்டி டவ ரதியிடம் நீட்டினாள் ரஞ்சனி.

மகேஷாக்குக் கொடுக்கப்பட்ட ஜோஸ் துண்டு கை நழுவியது.

‘பார்த்துக் கொடுக்கப்படாதா, ரஞ்?’ என்று கேட்டார் ரஞ்சித்.

ரஞ்சனியின் அழகு வதனம் சிறுத்தது.

மகேஷ் பிரமித்தார்.

‘ரஞ்சனி, ஏன் ஒரு மாதிரி ஆயிட்டே?-சும்மாதான் கேட்டேன்; சாதாரணமாகத்தான் சொன்னேன். நீ துண்டை நீட்டினதையும் பார்த்தேன்; நீ நீட்டின துண்டை மகேஷ் வாங்கினதையும் பார்த்தேன்; நீங்க ரெண்டு பேருமே அளவுக்கு மீறின எச்சரிக்கையோடேதான் நடந்துக் கிட்டிங்க; ஆனலும், உங்க ரெண்டு பேரையும் மீறி, துண்டு என்னவோ கீழே விழுந்திடுச்சுது! பரவாயில்லே! வெகு அமெரிக்கையாகவேதான் ரஞ்சித் இவ்வாறு கூறினார்.

ஆனால்-

ரஞ்சனியின் வதனம் ஏனோ கறுத்தது. மகேஷின் முகம் ஏனோ கருங்கியது. ஒரு மாத்திரைப் பொழுது கழிந்திருக்கவேண்டும்.

தலையைக் குனிந்தபடி, துண்டை எடுக்க முனேந்தாள் ரஞ்சனி.

அதற்குள், மகேஷ் எடுத்துக் கொண்டார்.

"ரஞ், என்ன யோசனையிலே மூழ்கிட்டே?- டேக் இட் ஈஸி, டியர் !...ஊம், எல்லாருக்கும் காஃபி கொண்டாந்து கொடேன்!”

வரவழைத்துக் கொண்ட புன்சிரிப்பைச் செவ்வதசங்களில் சதுரங்கம் ஆடச் செய்தவளாக, ஊம் கொட்டி நகர்ந்தாள் இல்லத்தரசி.

அந்த டவல்கள் நினைவூட்டிய மலையாளச் சீமைச் சுற்றுலாவில் ரஞ்சித்தின் மனம் சுற்றி, பின்பு, திரும்பும் வழியில் பழனி மயிைல் நடந்த பாபுவின் கோபாவேசப் படலத்தில் நிலைக்கத் தொடங்கியது; பாவம், மகேஷிடம் அன்று தினம் என்னுடைய பாபு எத்தனை நிரத்தாட்சன்யமாக நடந்து கொண்டு விட்டான்!. அவரது இதயத் தின் இதயம் தன்னுடைய செல்வத்திருமகன் பாபுவின் சார்பிலே மீண்டும் ஒரு தரம் மகேஷிடம் பாவமன்னிப்புக் கோருகிறது!...

சாப்பாட்டு மேஜையில் காப்பி-டபரா அடுக்குகளைப் பரப்பினுள் ரஞ்சனி, உரிமையுடன் அண்டி வந்த சதியிடம் அவளுக்குரிய காப்பியைக் கொடுத்துவிட்டு, அவள் நண்பர் மகேஷிடம் “டிகாக்ஷன் கம்மியாகப் போட்டிருந்த காப்பியைக் கொடுக்கும்படி வேண்டினாள். சர்க்கரை போடாமல் கலக்கியிருந்த காப்பியைக் கணவரிடம் ஜாக்கிரதையாகவே நீட்டினாள்.

மண்வியின் எச்சரிக்கைப் பண்பு ரஞ்சித்தின் கண்களில் கண்ணிரை வரவழைத்தது. மனம் அடைந்த ஆதங்கத்தில் காப்பி வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாகக் ககந்து தொலைத்தது. ‘ரஞ்,” என்று துணையை அழைத்து, அவள் காலை வேளை இட்டிலிகளைச் சாப்பிட்ட விவரத்தைக் கேட் டறிய முற்பட்ட போது, தான் நந்தினி, பாபு சகிதம் சாப்பீட்டு விட்டதாகப் பொய் சோன்னதை அவள் தம் பாமல் போகவே, கடைசியில் அவள் சாப்பிடவில்லே என்னும் உண்மையை அறிந்து வருத்தி, அவளுக்காக வருந்தி, அவளோடு உடன் சென்று அவளைச் சாப்பிட வைத்த பிற்பாடுதான், நல்ல மூச்சுவிடலாளுர்; அவன் குடித்த எச்சில் காப்பியில் அவருக்கும் துளி கிடைத்ததில் அவர் புதிதான அமைதியை அடைந்தார்: அந்த அமைதிகூட இனித்தது.

ரஞ்சனி விருந்து தயாரிப்பதில் விசேஷமான அக்கறை யோடும், தனியான ஆர்வத்தோடும் முன்னிந்திருக்கின்றாள். ரதி ஏதாகிலும் ‘ஒச்சம் சொல்லிவிடக் கூடாது அல்லவா? கடைசிப்பட்சமாக, அவியல் கறியிலாவது தேங்காய் எண் ணெயைத் தாளிப்பதற்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும், அன்றைக்கு எர்ணுகுளத்தில் ஹோட்டல் இன்டர் நேஷனலில் வைத்திருந்த அவியலைச் சுவைத்தும் ருசித்தும் மகேஷூடன் சேர்ந்துகொண்டு போட்டி போட்டுச் சாப்பிட்டதை இப்பொழுது அவள் நினைத்துப் பார்க்க வேண்டிய வள் ஆனாள். .

வெய்யவில் வினாடிகள் ஊர்கின்றன.

ரஞ்சனி இல்லாமல், வரவேற்புக் கூடம் வெறிச் சோடிக் கிடந்தது.

பாங்கருக்கு உறக்கம் சொக்கியது; வேண்டியதும் வேண்டாததுமான நினைவுகளின் உளைச்சலில், மன உலைவு 'டென்ஷன் மிகுதியடைய, அதன் எதிர்விளைவாக, ஒர் அயர்ச்சி மிஞ்ச, இப்போது தூங்கி ஏழ வேண்டுமென்ற உந்துதலே ஏற்படுத்திற்று. ஆனால், மீண்டும் அந்தப் பொல்லாத அந்தி மாலைப் பொழுது அவருடைய உள்மனத்தில் உட்புயலை ஏற்படுத்திவிடவே, சாய்மானத்தில் கற்சிலையாகச் சாய்ந்தார்!-மனம் எடுப்பார் கைப்பிள்ளே என்பது சரியாய்த்தான் இருக்கிறது!- ரஞ்சனியை, உயிரினும் இனியவளான ரஞ்சனியை நினைத்த நெஞ்சிலே, கேள்வி முறையில்லாமல் மகேஷசம் பாயவே, ரத்த நாளங்கள் துடிக்கலாயின. ஈஸ்வரா!'- தியானநிலை நீடித்தது. மனத்துக்குச் சற்றே மாறுதல் கிடைத்தால் தேவலாம். ரேடியோவைத் திருப்பினால், அங்கே கங்கைக் கரையோரமும், கன்னியர்கள் கூட்டமும் நீர்த்துளிப்படுகிறது! முற்பகலில் அன்றைக்குப் பார்த்த கேட்ட அனுபவித்த பாரதாஞ்சலியின் ஒளி - ஒலிச் சிதறல்களும் அவருக்கு ஆறுதல் தரவே செய்கின்றன.

படு நாசூக்காகக் கொட்டாவி விட்டார் மகேஷ்.

பொன்னான் சந்தர்ப்பம்,

இனி ஒரு வினாடிகூட தூங்காமல் தப்ப இயலாது தான். ரஞ்சித்தின் கெட்டி அற்ப சொற்பமானதல்லவே!- "மகேஷ், நான் ஒரு பத்து நிமிஷம் மாடிக்குப் போய்த் திரும்புவேன். நீங்க ஒரு காரியம் செய்யுங்க: நீங்க கீழே என்னேட ரூமிலே, என்னேட மெத்தையிலே கொஞ்ச நேரம் படுத்து எழுந்திருங்க, உங்களோட மிஸ் ரதி அடுத்த அறையிலே என்னுடைய ரஞ்சனியின் பட்டு மெத்தையிலே சற்று நாழி ஓய்வு கொள்ளட்டும்! எப்படி என் ஐடியா?”

"அருமையானதுங்க, ரஞ்சித்: ரெண்டு கல்லிலே ரெண்டு மாங்காய் அடிச்சிட்டீங்க! உங்களுக்கும் உறங்கிறதுக்கு சான்ஸ் அடிச்சிட்டுது எங்களுக்கும் ஓய்வுக்கு வழி கிடைச்சிட்டுதுங்க!’ -

"ஆனா. ஒண்ணு...!”

"ஒண்னு என்னங்க, ரெண்டாகவே சொல்லுங்க!”

"உங்க ரெண்டு பேரோட ஓய்வும் இப்போதைக்கு சென்ட் பர்சன்ட் தனிமையானதாக்கும்: . . ஆமாம், இப் போதைக்குத்தான்!”

"ஒஹோ! அங்கிட்டுப் போயிட்டீங்களா நீங்க?”

"நான் எங்கிட்டும் போயிடல்லே; போயிடவும் மாட்டேன்; என்னோட வழியே, அலாதி!-அந்த வழியிலே எந்த ஒரு சோதனையிலும் தப்பிதமே ஏற்படாது: ஏற்படவும் விட்டுவிட மாட்டேனாக்கும்!”

“மக்கள் குரல்' பொங்கல் சிறப்பிதழை ரதியிடம் நீட்டி, அதில் கடைசிப் பக்கத்தைப் பிரித்து, ரத்தியின் பொங்கல் வாழ்த்துக் கட்டுரையை வாசிக்கச் சொன்ன மகேஷ் திடுக்கிட்டுப் போனார்!... -

ரதி: “நான் இந்திக்குப் போனாலும், என் தாய்த் தமிழ்ப் படஉலகம் நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்!”

"அய்யொடா!...ரத்தி மாதிரி என் ரதியும் நடிகை ஆயிட்டாளா, என்ன?”

உற்சாகமான நாணம் ஏந்துகிறாள் ஏந்திழை: என்னை இப்படிக் கலாட்டா பண்றதுக்கோசரம்தான் என்னை அப்படி வாசிக்கப் பண்ணிணேளாக்கும்?’

“சும்மா ஒரு தமாஷ்: அவ்வளவுத சன், ரதி!"

காதல் எனும் எழிற்கனவின் இனிய மயக்கத்தில் லயித்துக்கிடந்த அவ்விருவரின் ஆனந்தப் புரவசம் நின்று நிலைத்திடவேண்டுமென்று அந்தரங்க சுத்தியோடு கவலைப் பட்டார் ரஞ்சித். 'மகேஷ் தனது முதல் காதலிலேதான் தோல்வி அடைஞ்சிட்டார்: பாவம், இரண்டாவது காதலிலேயாவது அவர் முழு வெற்றி அடைஞ்சால்தான் நல்லது. ரதிக்கும் மகேஷீக்கும் ஜோடிப் பொருத்தம் சரியாக அமைந்திருக்கிறதா என்கிற பரிசோதனையில் ஈடுபட்டவர்மாதிரி, அவர்கள் இருவரையும் உன்னிப்பாகவும் உறுத்தும் பார்த்தார்; பார்வையிட்டார். எடுத்த எடுப்பிலேயே, இருவருக்கும் ஊடே தாரதம்மியம் துலாம்பரமாகவே தெரிந்துவிடும்; மகேஷின் நரைமுடிகளால் வன வாசம் செய்யமுடியவில்லைதான்; ஆனாலும், அவருடைய இடது கன்னத்தில் ஏதோ ஒரு வடு விகாரமாகப் பளிச்சிடுகிறதே?-அதை ஒரு பொருட்டாக மதித்து அவரிடம் பிரஸ்தாபிப்பது அவ்வளவு நாகரிகமாக அமைய இயலாதென்கிற கண்ணியப் பண்புடனே அதைப்பற்றி இன்றையத் தேதிவரை அவரிடம்-மகேஷிடம் கேள்வி ஒன்றையும் கேட்கவில்லை ரஞ்சித்!-ஆனால், ரதி உச்சியில் நின்றாள்! அவள் அழகின் உச்சி ஆயிற்றே?-ஆமாம்; நேற்று மலர்ந்த புத்தம் புதிய ரோஜாப்பூ அவள்! ரோஜாப்பூவை அவள்! ரோஜாப் பெண் ரதி!...

மகேஷ் ஏன் அப்படி முகம் கறுத்துப் போய்விட்டாராம்?-இன்னமும் ரஞ்சித்தின் சொற்கள் அவரது நெஞ்சிலே சுட்டுக்கொண்டிருந்தனவோ? -

ரஞ்சித் மார்பகத்தைத் தடவி விட்டுக்கொண்டார்; என்னவோ ஒர் ஆறுதலான அமைதி இப்போது அவர் நெஞ்சில் ஒட்டியிருந்ததாக அவர் உணர்ந்தார். ‘பாவம், மகேஷ்! ஈரம் விழிகளிலும் நிழலாடிற்று. ‘"நான் புறப்படறேன், மகேஷ்,’ என்று எழுந்தார். சாயந்தரம் முதல்வர் புரட்சித்தலைவரைச் சந்தித்தாக வேண்டும்!

ரஞ்சனியின் முகம் தெரிகிறது.

"ரஞ்...!”

“ஒண்ணுமில்லேங்க: சும்மாத்தான் வந்தேன்.”

"கொஞ்ச நாழி ஒயவெடுக்கணும் போலிருக்கு.”

"எனக்காகக் காத்திருந்தீங்களா?’’

"நேரம் கெட்ட இந்த நேரத்திலேயா உன்னை எதிர் பார்ப்பேன்?

ரஞ்சனியை வெட்கம் தழுவியது.

ரதி புன்னகை செய்கிறாள்!

"ரஞ்சித், ஒரு நிமிஷம் உட்காருங்க: ரதியைப் பற்றி-என்னோட அன்பான ரதியைப்பற்றிச் சொல்லிடுறேன். என்கூடவே ‘ஸ்பீட் வே' கம்பெனியிலே பணி செய்கிறாள் ரதி; ஸ்டெனோ டைப்பிஸ்ட். சொந்த நாடு பாலக்காடு; இங்கே எர்ணாகுளத்திலே பானர்ஜி சாலையிலே இருக்கக்கூடிய ஏலக்காய் வாரியத்துக்குச் சமீபமாய், கச்சேரிப்படிப் பக்கம் சொந்தக்காரங்க வீட்டிலே தங்கியிருக்காள்!-அலுத்துச் சலித்துப் போயிட்ட பாலைவனமான என் மனசிலே ஒரு குளிர்ச்சோலையை உண்டு பண்ணினதே ரதியோட மகத்தான-மாண்புமிக்க அன்புதான்!-ஆகவே தான். இந்த ரதியையே என் உயிர் வாழ்க்கைக்கு உயிர்த் துணையாக ஆக்கிக்கிடவேணும்னு முடிவு செஞ்சிருக்கேன்!. ஊர் உலகத்தைப்போல நானும் குடியும் குடித்தனமுமாய் ஆகிப்பிடவேணும் என்கிறது. ரஞ்சனியோட ரொம்ப நாளையக் கவலை; என்னை மணவறையிலே சந்திச்சாத்தான், ரஞ்சனிக்கு மெய்யாகவே ஒரு சாந்தி ஏற்படுமென்கிறதையும் நான் அறிவேனுங்க!”

இருமல் செருமியது.

'ஃபில்டர் வில்ஸ்’ ஓடி வந்தது.

"நான் ஊகிச்சது சரியாய்ப் போயிடுச்சுங்க, மகேஷ், நீங்க சொன்னமாதிரி, நிஜமாகவே நான் சந்தோஷப்படுறேனுங்க. உங்க கலியாணம் நல்லபடியாகவே முடிஞ்சிட்டா நான் உண்மையாவே அமைதியும் அடைவேணுங்க, மகேஷ்!”. உணர்ச்சி வயப்பட்டவளாகப் பேசினவள் ரஞ்சனியாகத் தானே இருப்பாள்?

"உங்களோட இந்த நல்ல முடிவிலே, நானும்தான் ஆறுதலடைகிறேன். மிஸ்டர் மகேஷ்!” என்றார் ரஞ்சித்.

மகேஷ் சற்றே திரும்பி, ரஞ்சனியை நோக்கி, அமைதி கெடாமல் புன்னகை செய்தார். "உங்க ரெண்டு பேரோட மகத்தான அன்பையும் அற்புதமான பாசத்தையும் நான் இன்றைக்கு நேற்றைக்குத்தான புரிஞ்சுக்கப் போறேன்?-ஆனாலும், நாம என்னதான் நெருங்கியும் நெருக்கமாகவும் பழகினால்கூட, உள்ளன்பை வெளிப்படுத்திப் பரஸ்பரம் பரிமாறிக்கிடுறதிலே மெய்யாகவே மனசுக்கும் சரி, உடம்புக்கும் சரி, ஆரோக்கியமாகத்தான் இருக்குது! இப்படிப்பட்ட சமயங்களிலே, மரபார்ந்த சம்பிரதாயங்களுக்குக்கூட புதுசான அர்த்தம் கிடைச்சிடுறது போலவும் நமக்கு நாமே உணர்ந்துக்கிடுறதுக்கும் வாய்ப்பு வசதி ஏற்படவும் செஞ்சிடுது!-இல்லீங்களா, ரஞ் ...?" என்றார்.

“ரஞ்’ என்றவுடன், ரஞ்சித்தும் மகேஷை ஏறிட்டு நோக்கினார், -

அதுபோன்றே, ரஞ்சனியும் கோலமதர் விழிகளை நிமிர்த்திக் குடும்பத்து நண்பரைப் பார்க்கலானாள்.

ரஞ்சித்தின் கண்களிலே கலக்கம்.

ரஞ்சனியின் நயனங்களிலே சலனம்.

மகேஷ் திடுக்கிட்டார் ; விம்மிப் புடைத்திட்ட நெற்றியின் நரம்புகளை மூர்க்கத்தனமான ஆத்திர வெறியுடன் அழுத்தி அழுத்தித் தேய்த்துக் கொண்டார்; முகமண்டலத்தில் கவிழ்ந்த துயர மேகங்களுக்கு மத்தியில் அந்த வடு, அசிங்கமான அந்தக் கரும்புள்ளிச் சாயல், வழக்கத்தை விடவும் கூடுதலான அலைக்கழிவோடு பளிச்சிட்டது. மறு வினாடியில், பித்துக் கொண்ட நிலையில், கண்களை மூடிக் கொண்டு சிந்தனை வயப்பட்டார். எதை நினைத்தார்? எதையோ நினைத்தார்!-நேத்திரங்கள் நனைந்தன; கண்ணீரின் நிறம் சிவப்புத்தானே?- நான் புத்தி கெட்டவன்; அநியாயக்காரன், துரோகி; பாவி, ஆத்திரக்காரன்! சே! தெய்வத்தைக் கூவிக் கூப்பிட்டார்:‘தெ ... ய்...வ...மே!’’- தெய்வம் எங்கே?... எங்கே தெய்வம்?...

"மகேஷ்!"-ரஞ்சனி.

"மிஸ்டர் மகேஷ்!" என்றார் ரஞ்சித்,

ரதி: "ஆ!. என்டே மகேஷ்!"

மகேஷ் இப்பொழுதுதான் பூமிக்குத் திரும்பியிருக்கிறார். சொப்பனம் கண்டு விழித்தவராக விழித்தார்.

“ஏன் இப்படி உங்க பாட்டுக்குக் கண்ணீர் விடுறீங்க?” என்று ஆதரவாகக் கேட்டார் சீமான்: “புள்ளி'க்குக் கண்கள் கலங்கியிருந்தன.

ரஞ்சித்தைப் பரிதாபமாக ஏறிட்டுப் பார்க்கலானார் மகேஷ்.

ரஞ்சனிக்கு இப்போது நெஞ்சை என்னவோ செய்திருக்க வேண்டும்; தடவிக் கொடுத்தாள்; மெளனமான அதிர்வோடு, மகேஷின் அருகில் வந்து மெளனச் சிலையாக நின்றாள். மனப்பாம்பு ஏதேதோ நினேவுகளைப் படம் காட்டிப் படம் எடுத்தது; மகேஷின் ஒலத்திற்கான காரண காரியத்தை உணர்ந்தவள் போலவும், அதற்குத் தன்னால் ஒன்றும் சமாதானம் செய்ய முடியாதது போலவும் வாயடைத்து நின்றாள்.

"மகேஷ். மகேஷ்!” ரதி தவித்தாள்.

ரஞ்சித். ரஞ்சனி, ரதி ஆகிய மூவரையும் மாறிமாறி, மாற்றி மாற்றிப் பார்த்தார் மகேஷ். "என்னவோ, தெய்வத்தைக் கூவி அழைச்சு அழவேனும் போலத் தோணிச்சு: அழுதேன்; என்னோட உயிர்மூச்சு நின்னுத்தான், இந்த அழுகை நிற்குமுங்க. ரஞ்சித். அது போகட்டும்.!" என்று கூறிப் பேச்சைத் துண்டாடினார்; பிறகு, ரஞ்சனியின் பக்கம் திரும்பி, "என்னமோ ஞாபகத்திலே, ரஞ்சித் கூப்பிடுற மாதிரி உங்களை 'ரஞ்' அப்படின்னு தெரியாத்தனமாக கூப்பிட்டிட்டேனுங்க எனக்கு “மாப்பு' கொடுத்திடுங்க,’’ என்று கெஞ்சினார்.

அழகான அன்பும், கவர்ச்சியான அழகும் ஆரோகளித்திருந்த அதரங்கள் துடித்திட, “பரவாயில்லேங்க, மகேஷ்,’ என்பதாக ஆறுதல் சொன்னாள் ரஞ்சித்தின் ரஞ்சனி, கண்களின் தொங்கலில், சுடுநீர் முத்துக்கள் தொங்கட்டான்கள் மாதிரி இரு முனைகளிலும் முனைப்புடன் ஊஞ்சலாடின.

ரஞ்சித் மார்பகத்தினின்றும் கைகளை விடுவித்துக் கொண்டவராகக் கண்ணியமானதொரு புன்முறுவலைக் கண்ணியமாக வெளியிட்டார், “நீங்க போய்க் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கங்க; டின்னர் ரெடியானதும் ரஞ்’ வந்து எழுப்புவாள்; நீங்களும் போங்க, ரதி,’’ என்றும் கூறினார். பட்டுச் சொக்காயைக் கையில் எடுத்துக் கொண்டார்; எழுந்தார்.

“அது சரி; நம்ம பாபுவை எங்கே காணோம்? இன்னிக்கு லீவு தானே? இங்கே வந்திருப்பானே?" என்று விசாரணை செய்தவரும் மகேஷ்தான். விசாரிப்பைத் தொடங்கிய போது அவரது தொனியில் ஒலித்த தைரியம், கேள்வியை முடித்தபோது அடங்கி விட்டிருந்தது.

"பாபு அவனோட ரூமிலே தாங்கிக்கிட்டிருப்பான்னு நினைக்கிறேன்," என்றாள் பாங்கர். "பாபுவைப் பார்க்கணுமா?" என்று வினவினார்.

'ஊம்’, கொட்டினார் மகேஷ்.

தேள் கொட்டின பாங்கில் ஒரு துடிப்பு ரஞ்சித்தின் மேனியில் ஊடுருவியது: "அதுக்கென்ன?--பாபு தூங்காமல் முழிச்சுக்கிணு இருந்தால், தாராளமாகப் பாருங்களேன், மகேஷ்!" என்று நல்ல குரலெடுத்து அனுமதியை வழங்கினார். ‘பாபுவுக்கு உண்டான இடம்தான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே?-புறப்படுங்க: போனதும் வந்ததுமாய்த் திரும்பிடுங்க, நீங்க திரும்பினதும்தான், நான் மேலே மாடிக்குப் போகவேணும், மகேஷ்!" இப்போது அவரது கண்டத்தில் சற்றே கடுமை ஊடாடியது.

“இதோ. வந்திடுறேன், ரஞ்சித்!" என்று ஒரு புதிய தெம்புடன் கிளம்பினார் மகேஷ்.

"மகேஷோடு நீ வேணுமானலும் போயேன், ரஞ்சனி?"

“நான் போகல்லீங்க, அத்தான்; நேரம் நெருங்கிக் கிட்டிருக்குதுங்களே?-விருந்துக்கு ஏற்பாடு செஞ்சாக வேணுமுங்களா?" ரஞ்சனி சமத்காரமாகவும் சமர்த்தாகவும் பேசிவிட்டாள்.

“ஒ!. உன் இஷ்டப்படி நட, ரஞ்!”

மகேஷசம் ரஞ்சனியும் எதிரெதிர்த் திசைகளில் மடங்க வேண்டும் போலும்!