அன்பு வெள்ளம்/அன்பு நெறியில்

விக்கிமூலம் இலிருந்து

அன்பு நெறியில் நடத்தல்

ன்பு நெறியில் - நடப்பது என்பதும் கடவுளில் வாழ்வது என்பதும் ஒன்றே.

"என்னைப் பின்பற்றி நடந்தால், என் சொற்கள் உன்னில் இருக்கும் அல்லது அன்பில் நீ வாழ்ந்து வருவாயேயானால் அன்பும் உன்னில் வாழும்? நீ கேட்பது உனக்கு அருளப் பெறும்".

மறைமொழி மேம்பட்டு நிற்கும் எல்லைப் பரப்பில் பற்றார்வம் செயல்படுகிறது. பற்றார்வம் என்பதும் பற்று, நீதி, அன்பு பரவியுள்ள சூழலில் வளரும். உள்ளபடியே அன்பாட்சி நடைபெறுகிறபோது, விஞ்சி நிற்கும் புதிய படைப்பாற்றலாக விளங்குகிறது பற்றுறுதி எனப்படும் அன்பார்வம்.

அன்பு வாழ்க்கையில் இனிப்பானது ஒன்று உண்டு. அதுதான்் தோழமை - கூட்டிணைவு - கூட்டிணக்கம்.

ஐயப்பாட்டிற்கு இடமில்லாமல், கடவுளின் அன்புடன் நாம் ஒன்றானோம் - தன்னலமற்ற பாங்கில் நம்மால் ஆன அனைத்தையும் அளித்திட கடவுள் அன்போடு நாம் ஒன்றானது நம்மையே வேண்டுமாயினும் மற்றவர் நலனுக்காக வழங்கிட!

பிறரிடமிருந்து வாங்கிடுவதைப் பழக்கமாகக் கொண்டவர் மேலும்மேலும் வாங்கினால் தான்் முடியும் என்கிற நிலைக்கு வறுமையில் உழன்றுவிட நேர்கிறது.

தம்மிடம் இருப்பதை மற்றவர்க்கு, ஏதும் அற்றவர்க்கு வழங்குவோம் என்பதை விடுத்து, வாங்கிக் கொள்வதையே நற்பணியின் பரிசாகக் கருதி எப்போதும் கனவுலகில் இருந்து வந்த எண்ணற்ற கிறித்துவ ஊழியம் செய்தவர்கள் - ஊழியத்தின் வாழ்க்கையின் அழகினை நறுமணத்தை இழந்திருக்கிறார்கள் என்பது மிகையன்று! மற்றவர் நலனுக்காக - வாழ்க்கைக்காகத் தன்னையே இழக்கவும் கூடிய இயேசுவின் அன்பினைப் போன்ற அன்புப் பேருலகில் வாழ்ந்து வருவோம் என்றால், தூய ஆவி நம்மை உண்மையினையும் மேன்மையினையும் அறிந்து உணர்ந்து கொள்ள வழி நடத்தும் என்பது நம்பிடற்குரியது.

அன்பினில், நாம் நடந்திடத் தொடங்கினால், இயேசுவின் மொழி - மறை மொழி நம்மில் இருந்து நம்மோடு உரையாடத் தொடங்குகிறது. இயேசுவின் வாய்மொழியில் கடவுள் இருக்கிறார். அதனால் இயேசுவின் திருவாய் மொழிகளை நாம் படிக்கப் படிக்க நம் நெஞ்சத்தில் இன்பமும் மகிழ்ச்சியும் நிரம்புகின்றன. அன்பெனும் பேருலகின்கண் ஒத்திசைந்து நிற்கும்வரை 23வது பாசுரம் (Pslam)தனைப் புரிந்து கொண்டிருப்பீர்களா என்று கேட்கிறேன்.

மெல்ல அதனைச் சொல்லிப் பாருங்கள் "கடவுள் என் மேய்ப்பராக இருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்” எபிரேய மொழியில் "Lord" இறை என்னும் சொல்லுக்கு செகோவா என்று பொருள். 'செகோவா முக்காலத்தை - நேற்று - இன்று - நாளை என்னும் மூன்று காலத்தையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் சொல்!

செகோவா கடந்த காலத்தவர். நிகழ்கால இன்றைய கடவுள்; வருங்கால - நாளைய கடவுளும் அவரே!

"கடவுள் என் மேய்ப்பர்; நான் தாழ்ச்சியடையேன்” என்னும் மறைமொழி அவருடைய மொழியை, அன்பென்னும் அற்புத வயல்களில் காணுகின்றோம். அந்த அற்புத அன்பு வயல்களில் 'தெய்வத் தோழமை என்னும் வளமார்ந்த - பசுமையான மேய்ச்சலுக்கு நம்மை வழி நடத்திச் செல்கிறார் நம் மேய்ப்பர்.

தூய ஆவியினை வெளிப்படுத்திக் காட்டும் மொழியாம் ஆதிமொழி, அன்பினை வெளிப்படுத்திக் காட்டும் தன்மையது. அவர் தம்மைக் காணும் பொருட்டு ஆதிமொழியான மிறை மொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நம் தந்தையாக, அன்பராக, ஆற்றுப்படுத்துவராக, வெற்றி கொள்ளும் ஒருவராக நாம் அவரைக் காண்கிறோம்.

அன்பின் வழியில் நடக்கின்றவர்களின் பின்னால் வாழ்க்கையில் அடைய வேண்டிய வளர்ச்சி காண வேண்டிய முன்னேற்றம், பெற வேண்டிய உரிமை, கிறித்துவில் நாம் பெற்றிட வேண்டிய தனிச் சலுகைகள் ஆகிய அத்தனையும் அணிவகுத்து வருதலைக் காணலாம்.

அருளாளர் இயேசு நம்முள்ளே இருக்கிறார் - வாழ்கிறார் என்னும் உண்மையை அறிகிறோம்; அதனால் நமக்குள்ளே மாபெரும் இறையாற்றல் திறன் இருப்பதையும் நினைவு கூருகிறோம். அத் திறனைப் பயன்படுத்தும் வகைமுறை நம்மிடம் தான் உள்ளது.

நமது உதடுகளில் தவழும் இயேசுவின் வாய்மொழி - வாய்மை மொழி அனைத்தையும் விஞ்சும் உரிமத்தைக்கொண்டுள்ளது என்பதையும் நினைத்துப் பார்க்கிறோம். அன்பு வழியில் நடப்பதால், நாம் நமக்கு வந்துறும் நோய்களையும், பல்வேறு சூழ்சிலைகளையும் அடக்கி ஆளும் ஆற்றலர் களாகிறோம். ஆகவே, இயேசு காட்டிய அன்பு எனும் இடத்தை அடைந்து அவர் பேசிய அன்புமொழி பேசி, பேசி.படியே பணியாற்றியும் வருகிறோம்.

என்றும் வாழும் மொழியாகிய மறை மொழியில் விளக்கப் பெறும் இயேசுவின் திறனின் மெய்ம்மை விளக்கம் பெற நம்மை இணைக்கிறது அன்பு.

நம்மிடையே உள்ள பலர் இதனைக் கருத்தில் கொள்வதில்லை. அதனால் ஆதிச் சொல்லான மறை மொழியில், நோயுற்றவர்களைக் குணமாக்கும் ஆற்றல் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திலர். இறைவனைப் பாடித் துதிச் செய்யும்போதும், வேண்டுதல் - வழிபாடு செய்யும்போதும், திருமொழி எத்துணை வல்லமை பெறுகிறது! அதனை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?

இயேசு இயம்பிய மொழியினை ஏற்று அதன்படி நடக்க முடியுமா? நாம் அன்புடன் விரும்பும் ஒருவர் ஒன்றைச் சொன்னால்போதும் உடனே அதனை விரைந்து செய்கிறோமே அதுவும் நம்மையறியாமலேயே! அதைப் போலே, உள்ளபடியே இயேசுவில் அன்பு கொள்ளுங்கள், பிறகு பாருங்கள். உடனே அவருடைய மொழி என்னவோ அதனை நம்மையும் அறியாமல் செய்கின்றோமா இல்லையா என்று பாருங்கள்!

இயேசுவை நம்ப வேண்டும்; அவரில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதற்கென்று ஒரு முயற்சி தேவையா? மனம் தேவை! மனம் இல்லாதார் யார்? மனம் உள்ளவர் நம்பினால் என்ன? நம்பிக்கை வையுங்கள்! அன்புள்ளம் நம்பிட முயன்று கொண்டிருக்காது; அன்பார்விம் கொள்ள முயற்சி செய்யாது. அன்பு எனும் சொல்லே பற்றார்வம் கொள் என்றுதான்் வலியுறுத்துகிறது. அன்பு நாம் இயேசுவில் கொண்டுள்ள பற்றார்வத்தினை அளவற்ற தாகக்குகிறது.

எல்லாம் வல்ல கடவுளோடு அருளாளர் இயேசு கிறித்து வோடு இரண்டற - ஒன்றாதல் என்ன என்பதைப் பற்றி, இதற்கு முன்னால் தெரிந்திருந்தைவிட இப்போது நன்கு தெரிந்து கொண்டுள்ளோம். இறையோ இரண்டற அல்லது ஒன்று பட்டிருப்பது என்னும் ஓர் ஒப்பற்ற நிலை; நம்மை மற்றவர்களுக்குப் பயன்படவும் உதவிடவும் உள் நின்று ஊக்கம் தருகிறது என்பது உறுதி.

அன்பு பெறுவதும் கொள்வதும் வாழ்க்கையின்
இன்புறும் பேரின்ப மாம்.