அன்பு வெள்ளம்/அன்பு நோக்குடன்
அன்பு நோக்குடன் மாந்தரைக் காணுதல்
எந்தை நம் மக்கள் அனைவரையும் மாறாத மெய்ம்மை - பற்றார்வம் என்னும் கண்ணோட்டத்தில் பார்த்தார் என்பதில் உறுதியாக இருக்கிறேன். பற்றார்வம் கொண்டு பார்ப்பது என்பது வேறொன்றுமில்லை, அன்பென்னும் கண்கொண்டு பார்ப்பது என்பதுதான்.
இயேசு கிறித்துவில் காணப் பெற்ற ஈகத்திற்கு மாந்த இனம் கடமைப்பட்டிருக்கிறது.
வாழ்வில் தோல்வி என்பது ஆடிய களியாட்டங்களை வென்று பெற்ற வெற்றியும்; துன்ப துயரங்களே ஆட்சி செய்த இடத்தில் எல்லையற்ற மகிழ்ச்சியும் நிறைந்த நிலைபேறுடைய வாழ்க்கையே வேண்டும் என்று மானுடம் விரும்பும் என்று கட்வுள் நம்புகிறார்.எல்லையற்ற தம் அன்பினுக்கு மாந்த இனம் வேட்கை கொண்டு மெய்யான அன்பு நெறிக்குத் திரும்புவர் என்று எல்லாம்வல்லார் நம்புகிறார். தீயவனாயினும் அவனை மீண்டும் புதிதாகப் படைக்கப் பட்டவனாகக் காண்கிறவர், அவரில் நம்பிக்கைக் கொண்டவரைப் பற்றினரை ஒரு வெற்றியாளனாகக் காண்கிறார். அவன் அன்பு நெறியில் நடந்திடக் காண்கிறார்.
யார் எவரைக் கண்டாலும் வெறும் பொறிபுலன்களைக் கொண்டு பார்க்காமல், கடவுள் எல்லா மனிதரையும் பார்ப்பது போல நெஞ்சக் கண்கொண்டு பார்த்திடல் வேண்டும்.
கடவுளின் அன்புப் பார்வைபட்டு ஏழைகள் செல்வர் ஆகின்றனர். கந்தல் உடுத்தியவர் கவின்மிகு ஆடை உடுத்து கின்றனர்; தன்னலம் மிக்கவர் அன்பு மிக்கவர் ஆகின்றனர்.
நாமும் அப்படி மற்றவரை உயர்த்த வேண்டும் என்றால் நம்மில் இருக்கும் இறைப்பற்று பல்கிப் பெருகி அவ் இறையின் பற்றினைப் பற்றிடல் வேண்டும். அதன் பிறகே நாமும் இல்லார்க்கு உதவிடலாம்.
புலன் உணர்வு கொண்டு காணும் வெற்றுக் கண்ணுடன் பார்த்தோமானால் அந்தக் கண்ணோக்கால் இயேசு பார்த்த அன்புப் பார்வையை நாம் பெறுவது முடியாது. இயேசு அருளார்வம் கொண்டு ஆற்றிய அன்புப் பணியும் நம்மால் ஆற்றிட இயலவே இயலாது.
இயேசுவில் புதிதாகப் படைக்கப்பட்டவர் அன்பு உணர்வுள்ளவராக இருத்தல் வேண்டும். கடந்து சென்ற ஆண்டுகளில் தன்னலம் என்னும் திகைப்பூட்டும் சிக்கல் நிலையில் போராடிக் கொண்டிருந்த நம்மை நல்வழிப்படுத்த இருப்பது அன்பு. நம் வாழ்க்கைப் போராட்டங்களைச் சந்திக்கவும் எதிர்த்துப் போராடி வெற்றி பெறவும் செய்திட வல்லது அன்புதான்.
இதுவரை நாம் விழிப்பற்ற நிலையில்தான் இருந்து வந்தோம். நமக்குள்ள தன்னையறியும் நெஞ்சம் வலுவற்றது, நோயுற்றது. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் பற்றார்வம் - நம்பிக்கை பற்றுறுதி என்பது இடம் பெறும் என்று எண்ணவே இடம் இல்லை. எப்பொழுது நாம் நம்மைத் தெய்விகப் பேரன்புக்கு ஒப்படைக்கிறமோ அப்பொழுதுதான் தன்னல வலையில் நம்மைப் பிணைக்கக் கூடிய கயிற்றினை அறுத்தெறிய முடியும். நாம் யார் என்று உணர்த்தக்கூடிய மனச்சான்றும் உள்ளவராக ஆக்கும் - மாற்றும் அன்பு. நினைவுப்படுத்திப் பாருங்கள். நமது அடி மனத்தைத் தொடும் சொற்றொடர் எபே. 2:10. "ஏனெனில், நற்செயல்களைச் செய்வதற்கு நாம் கிறித்து இயேசுவுக்குள் படைக்கப்பட்டுத் தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்.....”.
அப்படி என்றால், நாம் கடவுளின் படைப்பு. அதாவது படைப்பு என்பது இறைமை படைத்தளிக்கும் திறன்.
முதலில் படைக்கப் பெற்றதனால் செம்பொருளாகிய கடவுள், மனத்திற்கு இன்பமுறச் செய்தது; அதுவே போதும்; அதனை நாம் அறிவோம்!
அவர் அன்பர்; அன்புடையவர்; அன்பாக இருப்பவர். ஆகையினால்தான்் அன்பினால், நம்மைப் படைத்தருளின்ார். நம்மில் அவர் அன்பினை உள்ளுடம்பாக அமைத்துள்ளார். இயேசுவில் இருந்து வெளிப்பட்ட அன்பு மொழிகள், அன்புச் செயல்கள் அனைத்தினையும் நம்மில் நம் அகவுடம்பாக ஆக்கி அளித்திருக்கிறார்.இதனை ஏற்று உள்ளார்ந்த பற்றுடன் பற்று றுதியுடன் நாம் நடப்போமானால் அதுவே, நம்மின் அகமாக அங்கமாக ஆகிவிடும்.
கடவுள் நம்மைச் சூழ்நிலை அடிமைகளாகவோ, தீம்புடையவர்களாகவோ படைக்கவில்லை. உலகின் விளை பயனுக்கு கெல்லாம் அடிபணிய ஏவல் புரிய நம்மை இயேசு கிறித்துவுக்குள் புதுப் படைப்பாக படைக்கப்படவில்லை. வெற்றி வீரராக இருந்து இயேசுவுடன் சேர்ந்து நம்மை நாம் ஆட்சி புரிதற்கென்றே இயேசுவில் நம்மைப் புதிதாகப் படைத்துள்ளார் - கடவுள்.
நாம், இயேசு விடுத்துச் சென்ற இடத்தில் இருந்து அன்பினில் நடைபோடவும் செயல்படவும்தான்் சரியானபடி திட்டமிட்டுள்ளார் தேவன்.
இயேசுவுடன் நாம் இணைந்தால் - இரண்டறக் கலந்தால் அவர் வாழ்ந்த அன்பு வாழ்க்கையே நம் வாழ்க்கையாகிறது. அதன் அழகுதான் என்னே! நம்மில் இயேசு இருந்து கொண்டு நம் மொழி, செயல்களின் மூலம் நம் மேல் அன்பைப் பொழிகிறார்.
திருத்துதர் நடபடிகள் 1:8ல் குறிப்பிடப்பட்டுள்ள (Power) வலிமை என்னும் சொல் (Dunamis) என்பதைனை (Ability) திறமை என்று பொருள் கொள்ள வேண்டும். அனைத்திற்கும் மேற்பட்ட அனைவருக்கும் மேலானவரிடமிருந்து தனித்தொரு வலிமை - திறமை வரப் பெறும் வரையில், செருசலேமில் காத்திருக்குமாறு தம் சீடர்களிடம் இயேசு பணித்தார்.
அவ் வலிமை - திறமை என்பது அன்புதான். அவ் அன்பு தான், உரோமப் பேரரசினை - இயேசுவை குறுக்கையில் அறைந்த சனன்செரீன் (Sanchedrin) சங்கத்தினையும் வென்றது.
அன்பினைக் கடவுளிடமிருந்து வரப் பெற்றோம் என்றால் கடவுளின் திறமும் நம் கை வரப்பெற்றோம் என்று கொள்ள வேண்டும். நாம் கடவுளின் திறமையினால் மிக மேன்மை நிலைக்கு உயர்த்தப் பெற்றுள்ளோம்.
மாந்தருக்குள் ஏதோ ஒன்று வந்தடைந்துள்ளது. என்னது அது? மாந்தனின் அடிமனத்துள் தோல்வியும் தாழ்வு மனப் பான்மையும் தான் அது. ஆனால் அது கல்லி எறியப்பட்டுவிட்டது.
உண்மையில் நாம் நினைப்பதற்கும் வேண்டிக் கொள் வதற்கும் மேலாக, நாம் மிக அதிகமாகச் செயற்படும் அளவுக்கு அன்பு, நமக்கு அருளப் பெற்றுள்ளது. நம்மில் நிறைந்துள்ள அளவுக்கு அன்பின் திறன் நம்மில் செயல்படுகிறது.
அந்தப் பேரன்புக்கு நம் இயலாமையை - வலுவின்மையை ஒப்படைத்துவிடப் போகிறோம். அந்த அன்பின் திறனால் நாம் எடுத்த, காரியம் எதிலும் வெற்றி பெறச் செய்வோம்.
நம்மை எதிர்த்து வரும் அனைத்தையும் எதிர்த்து முறியடிக்கும் மாபெரும் அன்பு நம்மில் இருக்கிறது. அவ் அன்பே நம்மை இன்று வெற்றி வீரர்களாக்கியுள்ளது.
அச்சத்தாலும், ஐயத்தாலும் நம் வாழ்க்கையில் அலுத்துப் போன நிலையிலிருந்து நம்மை அப்புறப்படுத்தி, எல்லாம் வல்ல கடவுளின் கருணை என்னும் மணமிக்க கவின்மிக்க செம்மலர் தூவிய பாதைக்கு நம்மை வழி நடத்திச் சென்றுள்ளது அன்பு.
எல்லாம் வல்ல கடவுளின் அருளால் இயேசு அன்பால், இறுதியில் நாம் அனைத்திலும் வென்றவர்கள் ஆனோம்; ஆம்! இறுதியில் அனைத்திலும் வெற்றி வீரர்களாகிவிட்டோம்.