அன்பு வெள்ளம்/ஒரு புதிய

விக்கிமூலம் இலிருந்து

ஒரு புதிய ஆணை வந்துள்ளது

ரு புதிய நாள் புலர்ந்தது. அந்தப்புதிய நாள் அன்பு நாள்: ஒரு பெண்மணி சொன்னார் 'எங்கள் வீட்டில் ஏற்பட்டுள்ள நிலை மாற்றம் பற்றிச் சொன்னாலும் உங்களால் அதனைப் புரிந்து கொள்ள முடியாது என்றே கருதுகிறேன்; இருந்தாலும் சொல்லு கிறேன். எப்போதும் எங்கள் வீட்டில் கொள்கைப் பிணக்கும் சின மூட்டலுமே இருந்து வந்தன. அதன் விளிைவினால், கடுமையான சொற்கள், சில சமயம் வெறுப்பும் வெளிப்ப்ட்டன. நிலை பேறுடைய வாழ்வறம் ஏற்ற பின்பு, எங்கள் வீட்டில், அமைதியும் அழகிய வாழ்க்கையும் மென்நயம் வாய்ந்த கடைப்பிடியும் இனிய சொற்களும் நடமாடுகின்றன. குழந்தை என்னிடமும் என் கணவரிடமும் அந்த இனிய சொற்களின் பரிமாற்றம் எல்லை யில்லாத இன்பத்தைத் தருகின்றன. காரணம், நாங்கள் இப்போது அன்பெனும் இன்பப் பேருலகில் வாழ்ந்து வருகிறோம்.

"அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு இரவு வந்த என் கணவர் எங்கள் எல்லாரோடும் அளவளாவிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, என்னைப் பார்த்து:

"நம் வீடு இப்போது எவ்வளவு அழகியதாக மாறிவிட்டது பார்த்தாயா? ஏன் தெரியுமா? ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் கொடுத்துப் பெறுகின்றதால், குழந்தைகள் அனைவரும் சிந்தைத் தெளிவோடு இருக்கிறார்கள்! அன்பில் புதிய இன்ப மயமான சூழலில் அவர்கள் இருப்பதை உணர்கிறார்கள், உணர்ந்து மகிழ்கிறார்கள்" என்றார். தாயாகிய நான் மட்டும் என்ன? பிள்ளைகளின் இன்பச் சூழலை உணர்ந்து மகிழ்கிறேன்; ஏன் அந்தக் குழந்தைகளைப் போலவே அவர்களுடைய தந்தையும் அல்லவா அன்பில் புதிய இன்பச் சூழலில் மகிழ்ந்து திளைக்கிறார் என்று சொன்னார் அந்தப் பெண்மணி.

அந்த வீட்டில் உள்ள சிறுபிள்ளை ஒருவன் அவன் தந்தையைப் பார்த்து, அப்பா இன்று வானொலியில் திரு. தங்கப்பா நமக்குச் சொன்னதைக் கேட்ட படியினால், அம்மாவும் நானும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் தெரியுங்களா? என்று சொன்னானாம்!

இப்படிப்பட்ட பண்பாளரின் அன்பின் மறுபதிப்பான அன்பு ஒன்றுதான்!

குழந்தையின் அழும் நெஞ்ச ஒலியினாலும், இளைஞரின் நெஞ்சக் குமுறலானாலும், ஆடவர் மகளிர் மற்றும் முதியவர் அனைவருடைய மனக் குமுறலுக்கும் தக்க மருந்தாக விடையாக அமைவது அன்புதான்.

நம் மனத்தில் குடி கொண்டுள்ள வெறுப்பினை - வன்மத்தை அகற்றுவது அன்பு! அகத்தில் உள்ள வெறுப்புணர்ச்சியினைக் காட்டும் கண்ணாடியாம் முகத்தில் தோன்றும் கடுகடுப்பான உணர்ச்சி வரிகளைத் துடைத்து, அழகின் ஒளிக்கீற்றுப் பதிப்பதும் இந்தப் புதிய அன்புதான்! அதே புதிய அன்புதான் ஒரு கணவன் மனைவி இருவரிடையே ஒர் ஒற்றுமை உணர்வை, இல்லாதனவற்றை விடுத்து இருப்பதைக் கொண்டு "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற மொழிக்கேற்ப மனநிறை வினையும் தருவது.

அன்புதான் இல்லறம் தழைக்கச் செய்யும் இன்ப மழை! அதே அன்புதான் நல்லறப் பயிரைப் பேணிக்காக்கும் அறமழை!

சுருங்கச் சொன்னால், நல்லறம் ஒங்கும் இல்லறம் வாழும் இல்லத்தைக் குடும்ப மாளிகையைக் கட்டி முடிப்பதும் அன்பு! கட்டி முடித்த குடும்ப மாளிகையை நிலைக்க வைப்பதும் பேணிக் காப்பதும் அன்புதான்!

திருமணத்தைச் செய்துவைப்பதற்கும் திருமணமான பிறகு பிறக்கும் குழந்தைகளையும் குழந்தைகளைப் பெற்ற தாயினைத் தாய்மையைக் காப்பதற்கும் அமைக்கப்பட்ட வழி அன்பு வழி ஒன்றே!

ஒரு கணவன் மனைவி நெஞ்சத்தில் இயேசுவின் அன் பினைப் போன்ற அன்பு இடம் பெற்றுவிட்டால் போதும் அவர் களுடைய இல்லறத்தைப் பேணிக்காத்திட வேறு சட்டமோ திட்டமோ தேவையில்லை.

        அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
        பண்பும் பயனும் அது. - குறள் 45

"https://ta.wikisource.org/w/index.php?title=அன்பு_வெள்ளம்/ஒரு_புதிய&oldid=1516717" இலிருந்து மீள்விக்கப்பட்டது