அன்பு வெள்ளம்/செம்மலர் போன்ற

விக்கிமூலம் இலிருந்து

செம்மலர் போன்ற மலர்

ளமற்ற காடும் வறண்ட நிலமும் மகிழ்ச்சி தரும் மலர் வனமாகும். பாலைவனமும் உவகை தரும் செம்மலரை நிகர்த்த பூவாக மலர்ந்து மலராகும். முல்லையும் குறிஞ்சியும் பூத்துக் குலுங்கும். அங்கே உவகையும் தன்னை மலர்ந்து பாடும், பாட்டிசையும் கேட்கும். அதாவது பாழ்பட்ட வாழ்க்கையும் பண்படாத வாழ்க்கை கூட இயேசு கிறித்துவின் அருளால் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும். இன்ப எழிற் பூங்காவாக மாறும் என்பதுதான் அப்படிச் சொல்லப்பட்டது. புரிந்தும் புரியாதபடி மறைபொருள் வைத்துச் மொழிவதுதான்் மறைமொழி இந்த மறைமொழியின் பொருள் இன்னதென்று அண்மைக்காலம் வரையில் நமக்குப் புரியாத ஒன்றாகத்தான்் இருந்தது.

அந்த மறைமொழி தீவினைப்பட்ட பாழ்பட்ட அல்லற்பட்ட மக்களை விடுவித்து நல்வாழ்வளிக்கும் மீட்பரின் மொழியாகும்.

வளமற்ற காடும் களர் நிலமும் பாலைவனமும் கூட செம் மலர், நீலமலர் அனைய பூக்கள் பூத்துக் குலுங்கும், அத்தகைய மாற்றத்தை உண்டுபண்ணும் புதிய அன்பினை உலகுக்கு அருளிச் செய்தவர் மீட்பர் இயேசு. அதுதான்் கிறித்தவத்தின் அற்புதம்! அதுதான்் இயேசு கிறித்து வாழ்வின் வியத்தகு தனிச்சிறப்பு: அறிவுலகுக்கு விடப்படும் மிகப்பெரிய அறை கூவல்.

இயேசுவின் வாழ்க்கை, நம்மை விழிப்புறச் செய்வது, அவர் ஆற்றிய அற்புதம் பற்றி அறியும்படிக்கில்லை. அவருடைய அன்பினைப் பற்றி அறியும்படிக்குத் தான்் அவர் ஆற்றிய அற்புதங்கள்.

மானுடத்தின் அன்பால் அளவிடத்தக்க அன்பில்லை இயேசு வின் அன்பு; அது தனித்தன்மை வாய்ந்தது; அது வேறுபட்ட பண்புடையது.

கடவுள் அன்பாக இருக்கிறார். கடவுளாகிய அருளாளரே பிறப்பெடுத்து வந்த மானுடப் பேரன்பு வடிவமே இயேசு. தம்மில் இருக்கும் கடவுள் அன்பினைத்தான் உலக மக்களின் நெஞ்சத்தில் நிலைநாட்டி இயக்கும் ஆற்றல் ஆக விளங்கச் செய்தார் இயேசு.

மனித குலத்தின்பால் இயேசு கொண்ட பழக்கமும் பரிவும், குறுக்கையில் மரித்தும் சித்தரித்துக் காட்டும் அவ் அன்பினை என்னென்பது! அவ் அன்புதான் கிறித்தவ சமயத்துறைப் புத்தெழுச்சி யைத் தனிச்சிறப்புகளால் அவ்வப்போது விரித்துரைப்பதாகும்.

பழைய மானிட அன்பு என்பது தன்னலத்தின் அடிப் படையில் அமைந்தது. அத் தன்னலம், பகைமை, பொறாமை, வெறுப்பு, மட்டும் அன்று கொலை புரிவதில் கூட கொண்டு விடும், கொடியது.

எல்லா வகையான அட்டுழியங்களையும் துன்பங்களையும் புதிய அன்பு ஏற்றுக் கொள்ளும். ஆனால், அத்தனைத் துன்பங்களையும் ஆறாத் துயரங்களையும் கொடுத்தவரின் நிலைக்கு என்றுமே அன்பு தாழாது; விழாது.

பகை, போர், வல்லந்தம், உரிமை மீறல் போன்ற சூழ்நிலையில் உலகம் சுழன்று வரும் போது, இந்தப் புதிய அன்பு, மலைமுகட்டில் சுடரும் ஒளிவிளக்கு போல ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. மலை மேல் சுடரும் அந்த அன்பு விளக்குத் தன் ஒளிக்கைகளை நீட்டி, இன்றைய நிலையினை விடுத்து, உயர்ந்த சிறந்த நாகரிகத்தை அடைந்திட வருக வருக என்று மானுடத்தை அழைத்தபடி ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

அந்த அன்பு, நம்மைச் சுற்றி அழுத்திவிட்டிருக்கும் இழிந்த கீழ்த்தரமான வாழ்க்கையிலிருந்து கை தூக்கிவிட்டு நல்வாழ்வளிக்கிறது. உயர்ந்த வாழ்வளிக்கிறது. பகைமையைப் பூசல்களை, நம்மில் தோற்றுவிக்க நம்மை வற்புறுத்தும் தன்னலத்திற்குள் நாம் சிக்கிடாமல் மேலோங்கி நிற்கச் செய்கிறது புதிய அன்பு; புது வகையான அன்பு!

உலக நாடுகளிடையே போர் நிகழ்வதன் காரணம் என்ன? தன்னலம்தான்! உழைப்பவர் நெஞ்சங்களைச் உரிமையின்றி அடக்கியாளும் தன்னலம் தான்் முதலுக்கும் தொழிலுக்கும் இடையே ஏற்படும் போராட்டத்துக்குக் காரணம். உழைப்பவர்களின் உள்ளங்களை உரிமை ஒலி எழாமல் செய்யும் முதலாளியப் போக்குக்கும் காரணம் தன்னலமன்றி வேறென்ன?

அழிவுக்குக் காரணமான போரினைத் தடுக்க வல்லது அன்பு - புதிய அன்பு. பேராசை மத சாதிகளிடையே வேற்றுமை, பகைமை, மக்கள் சமுதாயத்தினிடையே கலாம் விளைத்தல் ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கும் தன்னலத்தை அடியோடு அழித்தொழிப்பதும் புதிய அன்பு.

அவ் அன்பு, பொருளாதாரப் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து வைக்கும். இயேசுவின் அன்பினை ஒத்த அன்பு எங்கெங்கு ஆட்சி புரிகிறதோ, அங்கெல்லாம் வேலை நிறுத்தம் என்பது நடவாது.

இயேசுவின் அன்பினால் ஆளப்படும் மக்களிடையே வழக்குகள் நடைபெறா. நீதிமன்றக் கூடங்கள் எல்லாம் இயேசுவின் வழிபாடுகள் செய்யப்படும் திருச்சபைகளாக, நற்செய்திப் பணி ஆற்றுவோரின் அவைகளாக மாறிவிடும்.

இயேசுவின் அன்பார்ந்த அன்பு ஒங்கி நிற்கும் இல்லங்களில் கணவன் மனைவியிடையே மனமுறிவு ஏற்படாது.

இந்த உலகிற்குப் புத்தம் புதிய அன்பினை இயேசு கொண்டு வந்தார். அதற்கு ஒப்புமை காட்டிட முடியாது. அவ் அன்பினைச் சுட்டிடச் சரியான சொற்களில்லை. அந்த அன்பினுக்குச் சரியான பொருளின் பண்பு விளக்கம் ஒன்று உண்டென்றால் இயேசு கிறித்துவே ஆவார்!

ஏதும் விளையாத வறள் நிலம் போன்ற வாழ்க்கையை, மணம் கமழும் அழகிய செம்மலர் பூத்திடும் நல்ல கொல்லையாக - பண்ணையாகச் செய்திட வல்லது புதிய அன்பு.

வளமற்ற வறண்ட காட்டு வழியே என் நண்பர் தங்கப்பா வோடு சென்று கொண்டிருந்தபோது"

"மனிதவாடையற்ற, ஏதும் விளையாத இந்தப் பாலை வனத்தை என்ன வென்று சொல்வது?" என்று சொன்னேன்.

"அது சரி, ஆனால் பெருமழை பெய்யுமானால், அழகின் உறைவிடமாக மாறுமே பாலையில் ஆங்காங்கு உள்ள மணல் மேடுகள் எல்லாம் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் அல்லவா?” என்றார் நண்பர்!.

உண்மைதான்! கடவுளின் அன்பு மழை பெய்த களர் நிலம் கூட விளைநிலமாக மாறுமே அடடா அன்புறையும் வாழ்க்கை தான்் எப்படிப்பட்ட பெருமை வாய்ந்தது? என்று எண்ணிக் கொண்டேன்.

தங்கப்பாவுடன் உறவு கொண்ட பின்பு எங்கள் பாலை வனம் போன்ற வாழ்க்கை, மணம் கமழும் அழகிய செம் மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைவனம் ஆக்கிவிட்டது. வாழ்க்கையில் நிரம்பி வ்ழிவது அன்பு. அன்பு வந்தபிறகு, வாழ்க்கையில் வெறுமையும் இல்லை, இன்பம் விளையாத வாழ்க்கையும் இல்லை. நண்பரின் அன்பு திகழும் இடம்மெல்லாம் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம் ஆகிறது. கடவுள் அதனை அவ்வாறு ஆக்கி அளிக்கிறார். அவரால் தான்் அது முடியும்.

இப்ப்டி இன்பம் மருவும் மலர்ச் சோலையாக ஒவ்வொரு வருட்ைய் வாழ்க்கையும் உருவாக்கிடத் தேவை இயேசுவை நம் தோழராக்கிக் கொள்வதும் நம் விாழ்க்கையின் மீட்பராக அவரைப் போற்றி.ஏற்கக் செய்வதும் தான்். ஆப்படிச் செய்துவிட்டால், பிறகு நம் உள்ளத்தில் எழும் இன்னிசை என்னவாக இருக்கும். கேளுங்களேன்..

"கடவுள் என் மேய்ப்பர் எனக்கென்ன குறை? என் நெஞ்சத்தில் அன்பு நிரம்பி வழிகிறது; என் இத்ழ்களில் அவரைப் புகழ்ந்து பாடும் பண்ணும் பாடலும் தவழ்கின்றன"

காய்ந்து தீய்ந்து போன வாழ்க்கையாக உங்கள் வாழ்க்கை யிருந்தாலும் அதனை, கவின் மிக்க செம்மலர்ப் பூக்கள் பூத்துக் குலுங்கும் எழில் மிக்க இன்பத் தென்றல் உலவும் பூங்காவாகச் செய்திட வல்லது இயேசுவின் அன்பாம் புதிய அன்பு.

        அன்பே அறநெறி.ஈகத் திறவுகோல்
        அன்பே அறிவின்சுடர்.