அமிழ்தின் ஊற்று/அழுகை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அழுகை


வாகனத் தேனை யுண்டு
வையகம் வாழும்; நின்றன்
ஊனகத் தன்பும் பண்பும்
உயிர்வளர் எழிலும் என்றன்
ஞானகம் உண்டு வாழும்
நலம்பல கண்டேன்; இந்நாள்
தேனகம் வருந்து வானேன்
சேதிசொல் அழாதே டாநீ!


செழித்தெழும் பயிர்க்கு லத்தைச்
சிதைத்திடும் பூச்சி யைப்போல்
செழிந்திருநி துயர்வு கொண்ட
திராவிடர் நாட்டில் மேளுள்
கழிசடை ஆரி யர்கள்
கலந்தபாம் தீமை எண்ணி
அமுதனை போலும்; வேண்டாம்
ஆரியம் அழுத லைப்பார்.

முப்பாலைத் தொட்டி லாக்கி
முத்தமிழ் மஞ்சம் வேய்ந்திங்
கெப்பாங்கும் புறஅ கத்தின்
எழில்மணிக் கவி இழைத்துக்
கப்புகழ் பத்துப் பாட்டின்
காட்சியைத் தொங்க விட்டேன்
அற்புதக் கலித்தொ கைப்பால்
அளித்தேன்நான் அழாதே டாநீ!