அமிழ்தின் ஊற்று/சிரிப்பு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சிரிப்பு


இயற்கையின் சிரிப்பில் நாங்கள்
இருவரும் மெய்ம்ம றந்து
கயனத்தின் பாசக் கூத்தால்
நலங்காண உளமி ரண்டும்
பயின்றன தமிழின் காதல்!
பண்பட்ட காதல் வாழ்வின்
பயனுக வந்த கண்ணே
பவளவாய்ச் சிரிப்பைக காட்டாய்!

முத்தெழிற் காட்சி கொல்லோ!
மோகன முல்லைப் பாட்டோ !
புத்தெழில் நிலாப் புகுந்து
புறப்படும் கனவும் ஈதோ !
தித்திக்கும் மின்னல் ஆமோ!
தண்டலை மயில்அ ரும்போ !
முத்தமிழ்ச்செல்வா நின்றன்
பாற்கடல் முறல் காட்டாய் !

உன்அன்னை மேனுள் காதல்
உளங்கவர் சிரிப்பை ஈங்காள்
நன்றென்று காதல் கொண்டேன்.
ஐம்புல நலன்க ளெல்லரம்
கொண்டுட்டும் போதும், பின்னைல்
குடிதாங்கி மகிழ்ந்த போதும்
உணமையில் உன்சி ரிப்பைக்
காண்கிலேன் சிரிப்பாய் கண்ணே!