அமிழ்தின் ஊற்று/கொட்டு!

விக்கிமூலம் இலிருந்து



கொட்டு!

தேனலை துளும்பும் அல்லி
தூயமு திதம்தி றந்து
மீனலைக் குமின்சி ரிப்பைக்
கொட்டுவை மின்னல் தோற்கும்!
வானக நிலவோ வாயுள்
பாலொளிக் கலைவ ளர்க்கும் !
ஞானப்ப்பொன். கவிபோல் பாடி
களிர்மலர்க்கரங்கள் கோட்டு !



புதையுண்ட வைரச் சிற்பம்
புத்தெழில் பெற்ற தைப்போல்
புதைந்திட்ட காதல் உள்ளப்
பூரிப்பில் பிறந்த பொன்னே !
மதுவூறும் உணர்ச்சிப் பொய்கை
மாறிய வடிவம் நீயோ ?
புதுவான வில்போல் குந்தி
பொங்கிரீகரங்கள் கொட்டு!

வாழ்க்கையைப் பாட லாக்கி
வகைவகைத் தாளங் கொட்டு !
வாழ்க்கையைப் பண்ப டுத்த
வள்ளுவன் முப்பால் கூட்டி
வாழ்க்கையை இன்ப மாக்க
வன்னக்கை இரண்டும் கொண்டு!
வாழ்க்கையை வீணை யாக்கி
வாரிசை முழங்கக் கொட்டு!