அமிழ்தின் ஊற்று/மழலை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மழலை


உயர்மலை அருவிக் கூத்தின்
ஒருகாதல் அமுதப் பாட்டும்
நயமிகு வேய்ங்கு ழல்தன்
நவநவ கனவுப் பாட்டும்
துயரமா உலக மிக்கும்
தூய்தமிழ் விணைப் பாட்டும்
மயல்தரூஉம் டிமலைக் கிங்கே
இணையிலை குல்வா போநீ!மண்ணுல கின்ப மெல்லாம்
மகிழ்ந்துட்ட வந்த வாழ்வே.
விண்ணெலாம் தோற்க; இன்பப்
பழச்சுவை எலாம் ஒதுங்க
விண்ணுலா புள்ளி னத்தின்
விழைமன இசை மறக்க
எண்ணிலா மழ்லைப் பேச்சில்
இணைத்தனை இசைமின் சோதி!

நினதெழில் மழலை ஞாலம்
நிறைந்திடும் புளக மூட்டும்!
நினதுயிர் மழலை விண்ணில்
நிறைந்திடும் கால் மணக்கும்
நினதுயிர் மழலை, கல்லை
நிகரிலா தங்க மாக்கும்!
நிணதொளிக் கனவில் வாழ
நிதமும்நீ மிழலை தாராய்!