அமிழ்தின் ஊற்று/சிற்றில் சிதைத்தல் !

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

சிற்றில் சிதைத்தல் !

பூவாத தாம ரைக்கா
புதுமலர் பேதைப் பெண்கள்
நாவாரப் பாடி வீதி
நாப்பணில் கனவார் வத்தைக்
கோவாநல் இல்ல மாக்கிக்
குடும்பத்தை நடத்து வார்கள்
நோவாத இளம்நெஞ் சங்கள்
நோந்திடும் ! சிதையேல் சிற்றில் !குடும்பநல் விளக்கை ஏந்தி,
குடித்தன முறையில் வெற்றி
கொடுததிடும் துணைந லங்கள்
ஆயமோ டுறவு கொண்டிங்(கு)
எடுப்பார்கள், பிஞ்சுள் ளத்தில்
இனிவ ரூஉம் வாழ்வில் லத்தை
கொடுப்பவன் ; எடுப்ப வன்நீ!
கொள்கைபோல் சிதையேல் சிற்றில் !

அழகினுக் கழகாய் ஆவி
அள்ளிடும் மாணிக் கப்பொன்
அழலினில் அமுதம் கொட்டி
அமைத்திவண் உவமை இன்றி
சுழன்றுலா பேதைச் சிற்ப
கற்பகத் தோட்டத் துள்ளே
நுழைந்துநீ சிதையேல் சிற்றில்
நொந்திடும் அரும்பு நெஞ்சம் !