அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/அதுவும் ரப்பர் பொம்மையா?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


(67) துவும் ப்பர் பொம்மையா?இளம் தாய் ஒருத்தி, தன் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்.

பக்கத்து வீட்டுச் சிறுமி, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். சிறுமியின் இடுப்பிலே ரப்பர் பொம்மை ஒன்று இருந்தது. அந்தப் பொம்மைக்கு ஒரு காலும் இல்லை; ஒரு கையும் இல்லை. உடலும் நசுங்கிப் போயிருந்தது. -

இளந் தாயைப்பார்த்து, ‘மாமி இந்தப்பாப்பா உங்ககிட்ட வந்து எத்தனை நாள் ஆச்சு?” என்று கேட்டாள் சிறுமி ஆவலோடு.

மூன்று மாதம் என்றாள் தாய்.

"அம்மாடியோ, மூன்று மாதங்களாக, அதை இவ்வளவு பத்திரமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, எப்படி?” என்று வியப்போடு கேட்டாள் சிறுமி.