அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/எதிர்பாராத பரிசுத்தொகை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

(27) திர்பாராத ரிசுத்தொகை


நியூயார்க் குதிரைப் பந்தயத்தில் ஒருவன் இரண்டு டிக்கட்டுகள் வாங்கியிருந்தான்.

அந்தப் பந்தயம் முடிந்ததும் தான் கட்டிய நம்பருக்குள்ள குதிரை வெற்றி பெறவில்லை. ஆகையால், தன் பையிலிருந்த டிக்கட்டுகளை வெறுப்போடு கிழித்து எறியப் போனான். அதற்குள் அந்த டிக்கட்டுகளை ஒரு முறை பார்த்தான்.

அவை தான் நினைத்து வாங்கிய நம்பர்கள் இல்லை என்றும், தவறுதலாக தனக்கு வேறு நம்பர்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், தெரிய வந்தது. அந்த நம்பர்களை ஒரு முறை ஞாபகப்படுத்திப் பார்த்தபோது, அவை வெற்றி பெற்ற கரைகளுக்கான நம்பர்களாக இருந்தன. அவற்றைக் கொண்டு போய்க் கொடுத்த போது அன்றையப் பந்தயத்தில் அடித்த பெரிய பரிசு 5000 பவுன்கள் அவனுக்குக் கிடைத்தன.