அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/தேசிய கீதம் பாடிய நடிகர்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


.(26) தேசிய கீதம் பாடிய டிகர்


“என்னை முத்தமிடு', என்ற படத்தில், ஜாக் டயமண்ட் என்பவர் நடித்திருக்கிறார்.

அந்தப் படத்தில் நடிப்பதற்காக முதலில் அவர் விண்ணப்பம் அனுப்பியிருந்தார். டைரக்டரைப் பேட்டி காணச் சென்றார் டயமண்ட்.

“உமக்குப் பாடத் தெரியுமா?” என்று கேட்டார், டைரக்டர்.

“தெரியும்; பாடிக் காட்டுகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை! என்னுடைய பாடல் உங்களுக்குப் பிடித்தால், ஒன்றும் சொல்லாமல் எழுந்து நின்றால் போதும்' என்றார் டயமண்ட்.

'நட்சத்திர புள்ளி போட்ட கொடியே என்ற அமெரிக்க தேசீய கீதத்தைப் பாடினார் டயமண்ட். -

நிபந்தனைப்படியும், தேசீய கீதத்தின் மரியாதைக்காகவும் டைரக்டர் எழுந்து நின்றுவிட்டார்.

டயமண்டுக்கு நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது.

புத்திசாலித்தனம் எப்பொழுதும் வெற்றி பெறும்.