அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/சிரிக்கவைப்பவர் அழுகிறார்
Appearance
(56)
சிரிக்கவைப்பவர் அழுகிறார்
டாக்டரிடம் ஒருவர் வந்தார். "எனக்கு என்னவோ மனசே சரியில்லை; தூக்கமும் வருவதில்லை; தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது” என்று புலம்பினார்.
வந்தவரை நன்றாகப் பரிசோதித்தார் டாக்டர். “நீங்கள் ஏதாவது வேடிக்கை நகைச்சுவை முதலானவற்றைப் பார்த்தால் நல்லது. நகைச்சுவை நடிகர் க்ரிமால்டி எங்கேயாவது நடித்தால் போய்ப் பாருங்கள். அதுதான் நல்லது. வேறு எந்த மருந்தும் உபயோகமில்லை” என்றார் டாக்டர்.
வந்தவர்,"ஐயோ! நான்தானே ஐயா, அந்தக் க்ரிமால்டி!" என்றார்.
மற்றவர்களைச் சிரிக்க வைப்பவர்கள் தங்க்ளுடைய சொந்த வாழ்க்கையில் அழுவதோடு, கஷ்டப்படுவார்கள் போலும்!