அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/சோதிடரின் நடுக்கம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


(55) சோதிடரின் டுக்கம்இந்த உலகையே ஒரு சமயம் பரபரப்பு அடையச் செய்த நாஜித் தலைவர் ஹிட்லர் ஒரு நாள் சோதிடரிடம் நான் எப்போது இறப்பேன்!" என்ற விசித்திரமான கேள்வி ஒன்றைக் கேட்டார்.

திடீரென ஹிட்லர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டவுடன் சோதிடர் கொதிப்படைந்தார். ஏறுமாறாக ஏதேனும் சொல்லி வைத்தால், ஹிட்லரின் சினத்துக்கு ஆளாக நேரிடுமே என

அஞ்சினார் சோதிடர். ஆனால், அவர் கேட்ட கேள்விக்கு விடைகூறாமல் இருந்தால், அவர் விடவும் மாட்டார்.

சில சோதிட நூல்களைப் புரட்டியபடி, “நீங்கள் ஒரு யூதர் விடுமுறை நாளில் மரணம் அடைவீர்கள்” என்றார் சோதிடர்.

ஹிட்லரோ சோதிடரை விடவில்லை. “அது எந்த நாள்?” என்று மறுபடியும் கேட்டார். - .

“அது....அது.”.. என்று சோதிடர் திணறி, திக்கு முக்காடி, 'எனக்குத் தெரியாது.” என்று கூறினார் நடுக்கத்தோடு.