அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/நண்பர் அளித்த உதவி
Appearance
(21) நண்பர் அளித்த உதவி
பிரெஞ்சு நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸ், நாவல் எழுதுவதில் புது முறையைக் கையாண்டவர்.
அவருக்கு மோக்வெட் என்ற நண்பர் ஒருவர் இருந்தார். அவர் நாவலின் அடிப்படை அமைப்பை டூமாஸிடம் கூறுவார். டூமாஸ் அதை விரிவுபடுத்தி எழுதிக் கொண்டே போவார்.
“நண்பர் மோக்வெட்டின் உதவியோடுதான் என் இலக்கியம் வளர்ந்தது”என்று டூமாஸ் நன்றியோடுகூறுகிறார். “என் நண்பர் கதை கூறினார்; நான் எழுதினேன்” என்று பெருமை கொள்கிறார் அந்தப் பிரபல ஆசிரியர்.
பிறருடைய கூட்டுறவில் தன் நாவல் பிறந்ததை, டூமாஸ் கண்ணியக் குறைவாகக் கருதவே இல்லை.