அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/பூச் செருகும் பழக்கம்
Appearance
(22) பூச் செருகும் பழக்கம்
இளவரசர் ஆல்பர்ட், விக்டோரியா மகாராணியை மணந்து கொள்வதற்காக முதன் முதலில் பிரிட்டனுக்கு வந்து சேர்ந்ததும், அவருக்கு மகாராணி பூச் செண்டு ஒன்றைக் கொடுத்தார். -
ஆல்பர்ட் மிகவும் இங்கிதம் தெரிந்தவர். பூச் செண்டிலிருந்து ஒரு பூவை எடுத்து தன்னுடைய கோட்டின் காலரின் மடிப்பில் துவாரம் இட்டு அந்தப் பூவைச் செருகிக் கொண்டார்.
அதிலிருந்து எல்லோருமே தங்கள் கோட்டில் பூச் செருகும் துவாரம் போட்டுக் கொள்ளத் தொடங்கிவிட்டனர்.