அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/மறுபடியும் தொடங்கலாமா?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


(39) றுபடியும் தொடங்கலாமா?ஐரோப்பாவில், பதினெட்டாம் நூற்றாண்டில் ராஸினி என்ற நாடக நடிகர் ஒருவர் இருந்தார்.

அவருடைய நண்பர் ஒருவர் தன் விட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார்.

விருந்திலே பரிமாறப் பட்டிருந்த பண்டங்கள் கால் வயிற்றுக்குக் கூடப் போதாமல் வைக்கப்பட்டிருந்தன.

விருந்து முடிந்து எழுந்தபோது, நடிகரிடம் உபசாரமாக, “நண்பரே, தாங்கள் மறுபடியும் கூடிய சீக்கிரம் என் வீட்டிற்கு விருந்து உண்ண வரவேண்டும்” என்று கூறினார் நண்பர்.

“ஆகா, அதற்கு என்ன? தடையின்றி உண்ண வருகிறேன். ஏன்? இப்பொழுதே அதைத் தொடங்கி விடுகிறேனே" என்றார் நடிகர்.

பல விருந்துகளிலே, வயிறு நிறைவதே இல்லை!