அய்யன் திருவள்ளுவர்/எனக்குப்

விக்கிமூலம் இலிருந்து

எனக்குப் பொறாமையாக
இருக்கிறது

கவிஞர் வாலி


கொண்டையா - ராஜூவும் -
கோபுலுவும்-
வரைந்த தெல்லாம்
வர்த்தகச் சந்தையில்
கிடைக்கும் - கவின்மிகு
கடைச் சித்திரங்கள்!

வி.ச. காண் டேகரும்
வ.ரா. வும் -
வரைந்த தெல்லாம்
வாசக சாலையில்
கிடைக்கும் - கருத்துமிகு
நடைச் சித்திரங்கள்!

ஆனால்...
என் இனிய நண்பர்
எழுத் தோவியர் -
என்.வி. கலைமணி!
எழில் கொஞ்ச வரைந்திருப்பது.
கடைச் சித்திரமுமல்ல, நடைச் சித்திரமுமல்ல.

தன் -
நூல்வகை களையே
நால்வகைச் சேனையாய்க் கொண்டு.
தமிழர்களுக்காக - ஒரு
தங்கத் தலைவன் நடத்திய -
தர்ம யுத்தம் பற்றிய
படைச் சித்திரம்!

தென் பொதிகையில்

தோன்றி...
புலவர்கள்
நெய்தளித்த
‘நூல்’ புடவைகளை
உடுத்தி -
உலகெலாம்
உலா வந்த
பூந்தமிழ் அன்னை...

வேட்டியும்
சட்டையும்
மேல் துண்டும்
அணிந்து.. -

அழகுமிகு காஞ்சியில்

ஆண் மகனாய்
அவதரித்தாள்!
அந்நாள் வரை
அனைவர்க்கும்
அன்னையா யிருந்தவள்...

ஆடவனாய்ப் பிறந்ததால்.
அனைவர்க்கும்
‘அண்ணா’ ஆனாள்!

அண்ணாவாகப் பிறந்த
அருந்தமிழுக்கு
அஞ்சலி செய்வதால்...

இன்னூல்
‘தமிழஞ்சலி’
எனும்
இடுகுறிப் பெயரை
ஏற்று இலங்குகிறது.

அடியேன் - அறிஞர் பெருந்தகை
அண்ணாவால் ஆதரிக்கப் பெற்றவன்
என் படவுலகப்

பிரவேசத்தின் போது -
'நல்லவன் வாழ்வா'னுக்காக
நான் எழுதிய
பாட்டை படித்துப்
பரவசப்பட்டு....

'உன்னுள்
ஒரு பொறியிருக்கிறது.'
என்று ..
உளமாரச் சொல்லி
உள்ளிருந்த பொறியை
ஊதிக் கனல் வளர்த்த





ர்

ந்



மனித கோபுரம் -
அந்த மாமேதை!

அந்தக்
கோபுரத்திற்குக்
கும்பாபிஷேகம்
நடத்தியிருக்கிறாா
நண்பர் கலைமணி!

இந்த நூலை....
ஆசை ஆசையாக
வாசித் தேன்,
அனைத்து வரிகளும்
வண்ணத்தமிழ் பிலிற்றும்
வாசத் தேன்!
எத்திணை
உவமைகள்!
எத்துணை
உருவகங்கள்.
எத்துணை

சித்தாந்தங்கள்!
எத்துணை வேதாந்தங்கள்!
தொட்ட இடங்கள் லெலலாம்
தத்துவப் பாதாகைகள் -
பட்டொளி வீசித் -
தகத்தகாயமாகப் பறக்கின்றன!

வரிக்கு வரி...,
வரிக்குதிரை போல் -
தெள்ளு தமிழ்
துள்ளு நடை போடுகிறது - நம்
நெஞ்ச வீதியில்
உலா வந்து -
நர்த்தனம்
ஆடுகிறது!

கடந்து
உள்ளிருப்பவனைக்

கடவுள்
என்கிறோம்.

இவரைக்
கடந்து
உள்ளிருப்பதால் -

இவருக்குக்
காஞ்சித் தலைவனே
கடவுள் ஆகிறார்.

அண்ணா என்னும் -
அந்த அன்பு தெய்வத்தை - இவர்
பண்ணார் தமிழில்
பூசிக்கும் போது -
வாசிக்கும்
என் நெஞ்சம் -
நிறைய இடங்களில்
நெகிழ்கிறது.

நெகிழ்ந்து
மகிழ்கிறது!

படிக்கப் படிக்க -
வார்த்தைகள்
இனிக் கின்றன,
விழிகள்கள்
பனிக் கின்றன!

அண்ணாவை இவர்
காதலித் திருக்கிறார்,
அதன் காரணமாக - மனம்
பேதலித் திருக்கிறார்!

கட்சிகளைக் கடந்து
ஆதரித்திருக்கிறார்! - அண்ணா
மூதறிஞர் என்பதைப்
பல பக்கங்களில்
மூதரித் திருக்கிறார்!

கலைமணி
கைத்தட்டி அழைத்தால்
கைக் குழந்தை போல் - தமிழ்
கை கட்டி -
முன் வந்து நின்று - அவர்
மெய் கட்டி
மெல்லக் கொஞ்சுகிறது.

சிலர்
கவிதையை
உரை நடையாக
எழுதுங் காலத்தில் -
கலைமணி
உரை நடையைக்
கவிதையாக
வரைகிறார்!

எவரும்
படித்துப்
புலவ ராகலாம்

கவித்து வத்தைக்
கடவுளின்
கொடையாகப் பெற்றவன்தான் -
கவிஞனாக முடியும்!

புலவனாகவும் -
கவிஞனாகவும் -
மலர்ந்து நிற்பவர் -
கலைமணி!

நிறையக்
கற்றிருந்தும்
நிறை குடமாக
நிற்பதாலேயே -
கலைமணியை
நான்
காதலிக்கிறேன்!

இந்த நூல் -
நூல் நிலையங்களில் மட்டும்
கால் பரப்பப்
படைத்தது அல்ல -

நம் -
நெஞ்ச அலமாரியில்
நெடுங் காலம் -
வைத்திருந்து

அவ்வப்போது
வாசித்துப் பார்க்க வேண்டிய
வண்ணக் காவியம்!

இந்த நூலைப்
படித்து விட்டு
எனககுச
சொல்லத் தோன்றுவது
இதுதான்.


33 முதல் தெரு, கற்பகம் அவின்யூ,
சென்னை - 28

அன்பன்
வாலி