அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி/1

விக்கிமூலம் இலிருந்து

A

a-battery : (மின்.) சேமிப்பு மின் கலத் தொகுதி : மின்கலத் தொகுதியால் இயங்கும் வானொலியில் உருகாது ஒளிவிடும் மின்குமிழ் இழைக்கு மின்விசை வழங்கும் ஆதாரம்.

ablation : (வானூ.) வெப்ப நீக்க உருகல் : ஒரு விண்வெளிக்கலம் மீண்டும் வாயுமண்டலத்திற்குள் நுழையும்போது, அதன் வெப்பக் கேடயத்திலுள்ள தனி வகை வெப்பச் சிதறல் பொருள்கள் உருகுதல்.

abomasum = (விலங்.) நான்காம் இரைப்பை : பசு போன்ற புல்லுண்ணி விலங்குகளுக்கு உள்ள நான்காம் இரைப்பை, இவற்றின் சீரணம் முக்கியமாக இதில்தான் நடைபெறுகிறது.

நான்காம் இரைப்பை

abortion : (உயி.) கருச்சிதைவு : முதிரா உருவமைந்த கரு, சூல் கொண்ட மூன்று மாதங்களுக்குள் சிதைதல்.

abrasion : உராய்வு : பொருள்களைக் கருவி கொண்டு வெட்டு வதற்குப்பதிலாக, உராய்பொருள் கொண்டு தேய்த்துக் குறைத்தல்.

abrasive : உராய்பொருள் : தேய்ப்பதற்கு அல்லது மெருகேற்று வதற்குப் பயன்படுத்தப்படும் மணற்கல், குருந்தக்கல், தோகைக் கல் போன்ற பொருள்கள். வைரம், குருந்தக்கல், குருந்தம், மணல், செம்மணிக்கல் தூள், படிகக்கல், தேய்ப்புபுக்கல், மெருகு மாக்கல் போன்றவை இயற்கை உராய் பொருள்கள். சிலிக்கன் கார்பைடு, அலுமினியம் ஆக்சைடு ஆகியவை செயற்கை உராய்பொருள்கள்.

abrasive paper : (உப்புத்தாள்) உராய்தாள் : சக்கிமுக்கிக்கல், செம் மணிக்கல், குருந்தக்கல், குருந்தம் போன்ற உராய்பொருள்கள் கோந்தினால் அல்லது வேறு ஒட்டுப்பசையினால் ஒட்டப்பட்டுள்ள காகிதம் அல்லது துணி.

abreaction : (உள. ) அக எதிரியக்கம் : மனநோயைக் குணப் படுத்துவதில் ஒரு செயல்முறை. இதில், மனநோயாளி தான் மறக்க முயலும் கசப்பான நினைவுகளை நினைவு கூர்ந்து அவற்றை நேரடியாக எதிர்நோக்கி அவற்றைத் துடைத்தழிக்கும்படி செய்கிறார்கள்.

abscess : (உட.) கழலை : உடலில் தோலுக்குக் கீழே பாக்டீரியாவால் உண்டாகும் சீழ்க்கட்டி.

abscissa : (கணி) மட்டாயம் (கிடையச்சுத்தூரம்) : ஒரு புள்ளியிருந்து நிலையச்சுக்குச் செங்குத்துக் கோணத்திலுள்ள நேர் தொலைவு.

மட்டாயம்

absolute altitude : (வானூ.) முழுக் குத்து உயரம் : பூமிக்கு மேலே ஒரு விமானத்தின் செங்குத்து உயரம்

absolute motion : (இயற்) முழு இயக்கம் : விண்வெளியில்,நிலையானதொரு புள்ளியிலிருந்து அடுத்தடுத்து ஏற்படும் நிலை மாறுதல்கள்

absolute unit : (மின்) முதல் அலகு : மின்னோட்டம், மின்னழுத்தம் போன்ற மின்னியல் அலகு. இது சென்டிமீட்டர் - கிராம்-வினாடி முறை அடிப்படையில் அமைந்தது. நடைமுறை அலகு என்பது இந்த முதல் அலகின் மடங்கு

absolute zero (இயற்.) உறை வெப்பநிலை : ஒரு சென்டிகிரேடு வெப்பமானியில் 0°C என்பது நீர் உறையும் வெப்பநிலையாகும். ஆனால், பனிக்கட்டியில் சிறிது வெப்பம் இருக்கும்; அதாவது, நீரைவிடப் பனிக்கட்டி சற்று வெப்பமுடையதாக இருக்கும்.

மூலக்கூறுகளின் இயக்கத்தால் வெப்பம் உண்டாகிறது. மூலக் கூறுகளின் இயக்கம் ஒரு வெப்ப நிலையில் அடியோடு நின்றுவிடும். அந்த வெப்பநிலை -273.13°C என்று மதிப்பிடப்பட்டுள்ளது இந்த் வெப்பநிலையேயாகும்

absorbent : (குளி.) ஈர்க்கும் பொருள் : திரவத்தை அல்லது ஆவியை ஈர்த்துக்கொண்டு இயற்பியல் முறையிலோ வேதியியல் முறையிலோ உருமாறுதலடையும் ஒரு கூட்டுப் பொருள் அல்லது ஒரு பொருள்

absorptien dynamometer : (மின்.) ஈர்ப்புத் திருக்கை மானி : இது ஒருவகைத் திருக்கை மானி. இதில் அளவு ஆற்றலை உராய்வுத் தடை ஈர்த்துக் கொண்டு, வழக்கமான பணிகளைச் செய்வத்ற்கு மற்றப் பொறிகளுக்கு அனுப்பாமல் விட்டு விடுகிறது

absorption system : (குளி.) ஈர்ப்புச் சாதனம் : ஒரு குளிர்பதன அமைப்பிலுள்ள ஈர்ப்புச் சாதனம். இதில் ஆவியாக்கியிலிருந்து குளிர்பதன மூட்டும் பொருள் ஈர்த்துக்கொள்ளப்பட்டு, வெப்பம் அளிக்கப்படும்போது மின்னாக்கியில் வெளியிடப்படுகிறது

absorption wavemeter: (மின்.) ஈர்ப்பு அலை மானி : ஒர் ஒத்திசைவுச் சுற்று வழியை அதன் சுற்று வழியிலிருந்து உச்ச அளவு ஆற்றல் ஈர்த்துக் கொள்ளப்படும் வரையில் இசைவிப்புச் செய்வதன் மூலம் அலைவெண்ணையும் அலை நீளத்தையும் அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு மின் கருவி

abstract design : (கணி.) அருவவடிவமைப்பு : வடிவ கணிதக்கோடுகள், உருவங்கள் அடிப்படையிலான வடிவமைப்பு

abutment : (க.க; பொறி.) உதைவுக்கால் : ஒரு வில்வளைவு, தூலம், அல்லது பாலத்தைத் தாங்கி நிற்பதற்கு அண்டைக் கொடுத்து அமைக்கப்பட்டுள்ள உதைவுக்கால்

உதைவுக் கால்

acacine gum : வேலம்பிசின் : கருவேல மரப் பாலிலிருந்து கிடைக்கும் பிசின்

accelerated motion : (எந்.) முடுக்கு இயக்கம் : விரைவு வீதம் ஒரே அளவாக இல்லாதிருக்கிற இயக்கம். ஏறுமுக அல்லது இறங்கு முக விரைவு வீதத்தை இது குறிக்கிறது. இறங்குமுக விரைவு வீதத்தை 'எதிர் முடுக்கு இயக்கம்' என்றும் கூறுவர்

accelerating electrode : (மின்.) முடுக்கு மின்முனை : ஒர் எதிர்முனைக் கதிர்க்குழலிலுள்ள ஒரு மின் முனை, ஒளிக்கற்றையின் விரைவு வேகத்தை அதிகரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனை 'முடுக்கு மின்முனை'என்கின்றனர். accelerating jet : (தானி.எந்.) முடுக்கத் தாரை: உட்புகும் காற்று விசையினுள் முடுக்க விசையினை உட்செலுத்துவதற்கு வாயிலாகப்பயன்படும் எரி-வளி கலப்பித் தாரை(carburetor jet).

accelerating pump: (தானி.எந்.)முடுக்க இறைப்பி :கலவையின் செறிவினை அதிகரித்து, பளுவேற்றிய ஊர்தியினை விரைவாகக் கிளப்புவதற்கு (pickup) உதவும் நோக்கத்திற்காக எரி-வளி கலப்பியுடன் இணைக்கப்பட்டுள்ளதும் பாய்ந்திடும் வகையைச் சேர்ந்ததுமான இறைப்பி (pump)

accelerating - pump piston : (தானி. எந்.) முடுக்க இறைப்பி உந்து தண்டு : முடுக்க இறைப்பிமுசலகம் முடுக்க இறைப்பியிலுள்ள நீள் உருளையிலிருக்கும் (cylinder) தோலினாலான சிறிய கிண்ணம் போன்ற வளையம் (washer) அல்லது புழையுள்ள உள்ளீடற்ற பித்தளை உந்து தண்டு

acceleration : (எந்.) முடுக்கம்: ஊக்குவிசை: ஒர் இயங்கும் பொருளின் வேக வளர்ச்சி வீதம்

accelerator : (தானி. எந்.) முடுக்கி: (1) வழக்கமாகக் காலால் இயக்கப்படும் எந்திரத்தினுள்பொறியினுள் (engine) செலுத்தப்படும் வாயுக் கலவையின் அளவினை முறைப்படுத்துவதற்கான ஒர் எந்திர்வியல் சாதனம் (2) குழைமவியலில்(plastic) குறிப்பாகப் பிசின் (resin) உறைவதை விரைவுபடுத்தும் வினையினைத் துரிதமாக்கும் ஒரு வேதியியற் பொருள். 'ஊக்கி' என்றும் அழைக்கப்பெறும்

accelerator - pump system : (தானி.) முடுக்கி இறைப்பு முறை : உள்வெப்பாலையில் எரிபொருளாவியோடு காற்றைக் கலக்கச் செய்யும் அமைவில்(carburetor) உள்ள ஒர் இறைப்பி. இது காற்று எரி பொருள் கலவையை எந்திரத்தினுள் செலுத்தி ஒரு விரைவான வேகம் பெறச் செய்கிறது

accelerometer: (வானூ.)முடுக்க மானி; முடுக்களவி : முடுக்கங்களைப் பதிவு செய்வதற்கான, அளவிடுவதற்கான அல்லது சுட்டிக் காட்டுவதற்கான (indicator) ஒரு கருவி

accelerometer:(மின்னி.)முடுக்க மானி: முடுக்கத்தை அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

accent : (கணி.) மின் அழுத்தக் குறியீடு: பகா எண்ணைக் (prime) குறிக்கும் 'a' போன்ற, ஒரே மாதிரியான குறியீடுகளின் வரிசையின்ன (order) அல்லது மதிப்பினை (value) வேறுபடுத்திக் காட்டுவதற்கான குறியீடு அல்லது குறியீடுகள்

acceptor circuit : (மின்.)ஏற்புச் சுற்றுவழி : ஒரு மின் சுற்றுவழியில் (குறிப்பாக வானொலியில்) ஒரு கொண்மியும், ஒரு மின்கம்பிச் சுருளும் இருக்கும். இந்த மின் சுற்றுவழியில் மின்விசை பாயத் தொடங்கியதும், அது மின்சுற்று வழியைச் சுற்றி முன்னும் பின்னுமாகப் பாயும். கொண்மி, கம்பிச் சுருள் இரண்டின்வடிவளவுகளைப் பொறுத்து, இந்த ஊசலாட்டத்தின் அலைவெண் அமையும்.இது சுற்றுவழியின் அலைவெண்ணை இயல்பான அளவுக்கு வைத்திருக் கும். ஆதார அலைவெண் சுற்று வழியின் இயல்பான அலைவெண்களுக்குச் சமமாக இருப்பின் பெருமளவு மின்னோட்டம் பாய்கிறது. அந்தக் குறிப்பிட்ட அலைவெண்களுக்கு அந்தச் சுற்றுவழி ஏற்புச் சுற்றுவழியாக அமைகிறது. நாம் வானொலியைத் திருப்பும்போது: அதனை ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான அலைவெண்ணுக்குரிய ஏற் புச் சுற்று வழியாக மாற்றுகிறோம்.

acceptor impurity : (மின்.) ஏற்புமாசு : மின்னோட்ட ஊர்திகளுக்காகத் துவாரங்களை உண்டாக்குகிற, தாழ்ந்த வெப்பநிலையிலும், தாய்நிலையிலும் மின்கடத்தாஜ் திண்மப் பொருளுடன் சேர்க்கப்படும் மாசுப் பொருள்

acceptor : (மின்னி.) ஏற்பான் காப்புறுதி : ஒரு கணிப்பொறியின் நினைவாற்றல் குதியிலிருந்து ஒரு சொல்லைப் பெறுவதற்குத் தேவைப்படும் நேரம்

accessibility; (எந்.) சரியமைவுத் திறன்; அணுகு திறன் : எளிதான சரியமைவு, பழுதுபாாத்தல், ஒருங்கிணைத்தல், உறுப்புக்களைப் பிரித்தெடுத்தல் போன்றவற்றுக்கு இடமளிக்கும் வகையில் உறுப்புகளை வசதியாக ஒருங்கமைக்கும் திறனளவு

accessory : (எந்.) துணைக்கருவி; துணைச் சாதனம்; துணையுறுப்பு; உதவிப் பொறி : ஓர் எந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு இன்றியமையாத ஒர் உறுப்பாக இல்லாமல், ஆனால் அதன் பணி விச்செல்லையை விரிவாக்குவதற்கு அல்லது மேம்பட்ட செயல்திறனுக்கு (performance) துணைபுரியக்கூடிய ஒர் எந்திர உறுப்பு அல்லது இணைப்புக் கருவி

access time : (மின்னி.) அணுகுநேரம் : ஒரு கணிப்பொறியின் நினைவுச் சேமப்பகுதியிலிருந்து ஒரு சொல்லைப் பெறுவதற்கு தேவைப்படும் நேரம்

accordion : (க.க.) துருத்திக்கதவம்; அக்கார்டியன் : 'அக்கார்டியன்' என்னும் இசைக் கருவியிலுள்ள விரிந்து சுருங்கும் காற்றுத் துருத்தி இங்குவது போன்று விக்கிவும், திறக்கவும், மூடவும் ஏற்ற வகையில் அமைந்த ஒருவகைக் கதவு அல்லது இடைத் தடுப்பு

accumulator : (குளி.) சேமக்கலம் : ஒரு கீழ்நிலைத் திரவ உறைகுளிரூட்டியைத் தொகுத்து வைப்பதற்குரிய ஒரு கருவி

accumulator : (மின்னி.)மின்சேமக்கலம் : ஒரு கணிப்பொறியின் ஒரு பகுதி. இதில் உள்ளிட்டு முனைகளுடன் மாற்றமைவு செய்த ஈரிலக்க எண் காட்டி அமைந்திருக்கும். இந்த உள்ளீட்டு முனைகளில் எண் காட்டியில் ஓர் அதிர்வு அலையினைப் பயன்படுத்தும் ஒவ்வொரு தடவையும் சேமிப்புக் கணிப்பு ஒரு புதிய கூட்டுத் தொகைக்கு அதிகரிக்கும்

மின் சேமக்கலம்

accumulator : (எந்.) சேமிப்புத் தேக்கு கலன்; தேக்கி : (1) பல்வேறு வகை நீரியல் எந்திரங்களில் (hydraulic machines) உந்துவிசையினை (motive power) அளிப்பதற்காக நீர் செலுத்தப்ப்டும் ஒரு நீள் உருளை (cylinder).

(2) (மின்னியல்) மின்சேமக் கலம்

(3) (வேதியியல்) சேமக் கலம்.

accurate : துல்லியமான; செம்மையான : தவறில்லாத; சரிநுட்பமான; வழுவற்ற; சீர்மைவாய்ந்த: செம்மையான தரத்திட்ட அளவுக்கு இயைந்த

acetate callulose : (குழை.) அசிட்டேட் செல்லுலோஸ் : காந்த விசையுள்ள ஒலிப்பதிவு நாடா தயாரிப்பதில் பயன்ப்டுத்தப்படும் ஒரு பிளாஸ்டிக் ஆதாரப்பொருள்

acetone : (வேதி.) உயிரியக்கப்படிக நீர்மம் : சிலவகை மரம், புளிங்காடிகள், பல்வேறு கரிமக் கூட்டுப் பொருள்கள் (organic compounds) ஆகியவற்றைச் சிதைத்து வாலை வடித்தல் வாயிலாகப் பெறப்படுவதும், எளிதில் தீப்பற்றக்கூடியதுமான ஒரு திரவம் (CH3COCH3); இது கசப்புச் சுவையுடையதாகும்

'acetylene cylinder ; (பற்.) அசிட்டிலின் நீள் உருளை : அசிட்டிலினைச் சேமித்து வைக்கவும், கொண்டு செல்லவும் i.c.c. தரத் திட்டங்களுக்கிணங்கச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட கொள்கலம். இதனைச் "சேமிப்புக் கலம்" அல்ல்து "புட்டி" என்றும் அழைப்பர்

acetylene gas : (உலோ.) அசிட்டிலின் வாயு : கால்சியம் கார்பைட் நீருடன் கலப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஒருவகை ஒளிரும் வாயு. இதனை ஆக்ஸி ஆசிட்டிலின் வார்ப்படப் பணிகளில் பயன் படுத்துகின்றனர்

acetylene gas : (வேதி.) ஒள்வளிமமும், சுண்ணக் கரியகையும், உன்டாக்கும் ஒளியுடை வளிமம் நீரும் சேர்ந்து கரியகையை உண்டாக்கும் ஒளியுடை வளிமம் (C2H2) உயிரக ஒள்வளிப் பற்ற வைப்பிலும் பயன்படுகிறது

acetylene generator : (பற்.) ஒள்வளிம ஆக்கி : சுண்ணக் கரயகையில் நீர் வினைபுரிவதால்_உண்டாகும் ஒளிர்வளிமத்தை ஒரே சீரான அழுத்தத்துடன் - அளிப்பதற்குப் பயன்படும் ஒரு கொள்கலம்

acetylene regulators : (பற்.) அசிட்டிலின் ஒழுங்கியக்கி : அசிட்டில்லின் நீர் உருளையின் அழுத்தங்களை மின் விளக்கின் அழுத்தங்களின் அளவுக்குக் குறைப்பதற்கும் அழுத்தத்தை நிலையாக வைத்திருப்பதற்கும் பயன்படும் ஒரு தானியங்கி ஒரதர்

acetylite : (வேதி.) அசிட்டிலைட் : சுண்ணக் கரியகையைச் சர்க்கரையுடன் (glucose) சேர்த்துப் பயன்படுத்துவதன் வாயிலாகக் கிடைப்பது. இதைப் பயன்படுத்துவதால். அவ்விதம் பதப்படுத்தாத சுண்ணக் கரியகையிலிருந்து கிடைப்பதைவிட மெதுவாகவும், ஒரே சீராகவும் ஒளிர் வளிமத்தை உற்பத்தி செய்ய முடியும்

achromatic (lens) நிறமற்ற ஆடி : நிறம்காட்டாத ஆடி. எல்லா வண்ணங்களின் ஒளியையும் சமமாகக் கோட்டமுறச் செய்வது நிறமற்ற ஆடி ஆகும்

acetic acid : (வேதி.) புளிங்காடி; அசெட்டிக் அமிலம் : நிறமற்ற கார நெடியுடைய திரவம்(CH3COOH); வழக்கமாக, மரத்தைச் சிதைத்து வாலை வடித்தல் (destructive distillation) வாயிலாகவோ, சாராயத்தை (alcohol) நொதிமங்களுடன் (ferments) சேர்த்து உயிரக இணைவுறுத்தல் (oxidation) வாயிலாகவோ இது பெறப்படுகிறது. கொடி முந்திரிக்காடி (vinegar) என்பது தூய்மை செய்யப்படாத ஒரு புளிங்காடியாகும்

acid : அமிலம் : (1) நீரில் கரையும் போது ஹைட்ரஜன் அயனிகளை உண்டாக்குகிற ஒரு பொருள்

(2) அமிலம் என்பது ஒரு ஹைட்ரஜன் கூட்டுப் பொருள். இந்தக் கூட்டுப் பொருளின் நீர்கலந்த கரைசலில் ஹைட்ரஜன் அயனிகள் மட்டுமே அடங்கியிருக்கின்றன; வேறெந்த நேர்மின் அயனிகளும் அடங்கியிருக்கவில்லை

acid bath : (உலோ.) அமிலமுழுக்கு : மின் முலாம் பூசுதலுக்கு ஆயத்தம் செய்யுங்கால் உலோகப் பொருள்களைத் தூய்மைப்படுத்துவதற்காகப் பயன்படும் அமில ஊறல்

acid blast etching : (அச்சு.) அமில ஊதுலைச் செதுக்கு வேலை : ஒளிச்செதுக்குத் தகடுகளில் எந்திர முறையில் செதுக்கு வேலை செய்வதற்கான ஒரு செய்முறை

acid colour : (சாய.) அமில வண்ணம்; அமிலச் சாயம் : செயற்கையான கரிமச்சாயப்பொருள். சாயந்தோய்க்கப்படும் இழைக்கும் இந்தச் சாயப் பொருளுக்கும் இணைப்பு ஏற்படுத்துவதாக அமிலம் பயன்படுத்தப்படுவதால் இந்தப் பெயர் பெற்றது. 75% கம்ப்ள இழைகளுக்கு இதைப் பயன்படுத்தியே சாயந்தேர்ய்க்கப்படுகிறது

acid cure : (தானி.) அமிலப்பதனம் : வெப்பமின்றித் துரிதமாகக் கந்தக வலிவூட்ட்ம் செய்வதன் வாயிலாக டயர்களைப் பழுது பார்ப்பதற்காகக் கந்தகக் குளோரைடைப் பயன்படுத்துதல்

acidproof paint : (மின்.) அமில எதிர்ப்பு வண்ணச் சாயம் : அமிலம் வினைபுரிவதை எதிர்க்கிற ஒரு வகை வண்ணச் சாயம்

acidulated water: (மின்.) அமிலமாக்கிய நீர் : நீர் கலந்து திட்பம் குறைக்கப்பட்ட அமிலக் கரைசல்

acieral : (உலோ.)இரும்பு முலாம் : எடை குறைந்த ஓர் உலோகக் கலவை. 6.4% செம்பு. 0.4% துத்த நாகம், 0.9% நிக்கல், 0.1% இரும்பு 0.4% சிலிக்கன் மீதம் அலுமின்யம் அடங்கியது. இது முன்னர் உந்து வண்டிகளின் உறுப்பு செய்வதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.

aclinic line : (மின்.) சரிவற்ற கோடு : பூமியைச் சுற்றியுள்ள இரு கற்பனைக் கோடு. இது ஏறத்தா ஆழ்த்திய ரேகையில் உள்ளது. இதில் எல்லாப் புள்ளிகளும் ஒரு பூஜ்யக் காந்தச் சரிவினை உடையனவாக இருக்கும்

acme thread : (எந்.) முடித்திருகிழை : ஒருவதைத் திருகு இழை. இதன் திருகு இழிையின் பகுதி, சதுர இழைக்கும், V-இழைக்கும்


முடித்திருகிழை

இடைப்பட்டதாக இருக்கும். ஊட்டுத் திருகுகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் இடைக்கோனம் 25o தேசியத் திருகிழை அல்லது அமெரிக்கத் திரு கிழை எனப்படும் திருகிழையில் இடைக்கோணம் 60° ஆகும்

aconit: (மருந்.)அக்கோனிட் : 'மங்க் ஷுட்' எனப்படும் தாவரத்திலிருந்து பெறப்படும் ஒரு நச்சு மருந்து. இது மிகவும் நஞ்சுத்தன்மைவாய்ந்த வெடியக் கலப்புடைய வேதியின் மூலப்பொருள். இதனைத் தோலில் வலியைக் குறைக்கப் பயன்படுத்துகிறார்கள்

acorn tube : (மின்.) கருவாலிக் கொட்டை வடிவக் குழாய் : கருவாலிக் கொட்டை வடிவிலுள்ள ஒரு சிறிய எலெக்ட்ரான் குழாய். இதில் அடித்தளம் இல்லை. தனிமங்களுடனான இணைப்புகள் இழாயிலிருந்து ஆரைகளைப் போல் நீண்டிருக்கும் ஊசிகள் வழியாகச் செய்யப்படுகின்றன. இது உயர் அதிர்வலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது

acoustics : (இயற்.) ஒலியமைப்பியல்; ஒலி ஆய்வியல் : ஒலி தொடர்பான அறிவியல். செவிப்புலனின் ஒலியின் தாக்குறவுகளை ஆராயும் அறிவியல். ஓர் அறையில் இருப்பவர்களுக்கு ஒலி தெளிவாகக் கேட்பதைப் பொறுத்து அந்த அறையின் ஒலி அமைப்பு நன்றாகவோ, மோசமாகவோ இருப்பதாகக் கூறப்படுகிறது


acquired character: (உயி.) ஈட்டுப் பண்பு : விலங்கின் அல்லது தாவரத்தின் ஆயுட்காலத்தின் போது, அதன் உடலில் நோய் அல்லது உணவின் காரணமாகப் பரம்பரையாக ஏற்படும் மாறுதல்


acre : ஏக்கர் : ஒரு நில அளவுக் கூறு. 160 சதுர முழம் அல்லது 4840 சதுரகெஜம் அல்லது 43,560 சதுர அடி அல்லது 4425.696 சதுரமீட்டர் கொண்ட நில அளவு


acriflavine : (மருந்.) அக்ரிஃபிளேவின் : கரிஎண்ணெயில்(கீல்)இருந்து தயாரிக்கப்படும் மஞ்சள் நிறமான் நச்சுக் கொல்லி மருந்து. இது மிகவும் ஆற்றல் வாய்ந்தது. குருதி நிணநீர் மூலம் இதன் செயல் வலிவடைகிறது


acrobatics : (வானு.) விமானக்கரண வித்தை : விமானம் வானத் தில் குட்டிக்கரணங்கள் போட்டு கரண வித்தைகள் செய்து காட்டுதல்


acromegaly: (நோயி.) கபச் சுரப்பி நோய் : கபச்சுரப்பியில் (pituitary gland) ஏற்படும் ஒரு நோய். இதனால தலை, கைகள், பாதங்கள் அளவுக்குமீறி பருத்து விடுகின்றன


acromion process : (நோயி.) தோள் திருகு நோய் : தோள்பட்டை எலும்பின் ஒரு பகுதி சற்றே பின்புறமாகத் திருகி இருத்தல்


acroteria : (க.க.) உச்சிநிலை மேடை : அடித்தளமோ அடிப் பீடமோ இல்லாத வரிமுக்கோண முகப்பு முகட்டின் உச்சியிலும் இறுதி முனைகளிலும் வைக்கப்பட்டுள்ள சிறிய நிலைமேடை


acrylic resins: (வேதி. குழை.) கண்ணாடிப் பிசின் : மெதில்-மெத்தாக்கிரிலேட் பிசின் என்றும் இதற்குப் பெயர். பிளெக்சிகிள்ஸ், லூசைட் போன்ற கண்ணாடிப் பிசின்வகையைச் சேர்ந்தது. இந்தப் பிசின்களில் கண்ணாடியை விட அதிக அளவில் ஊடுருவக் கூடியது. விண் பயனவாகன கவிகை மூடிகளிலும், ஒளிச் சிதறிகளிலும்தனி வகைப் பலகணிகளிலும், காட்சிப் பெட்டகங்களிலும் இப் பிசின்கள் பயன்படுகின்றன். செயற்கருவிகளிலும், வழியொட்டுக்கண்ணாடிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பிசின் மூலைக் கோணங்களிலும் ஒளியைப்பாய்ச்சுகிறது (பார்க்க: குழைமவியல்)


actinic rays : வேதியியல் விளைவு ஒளிக்கதிர்கள் : ஒளிப்படப் பால் மங்களின்மீது வினைபுரியக்கூடிய ஒளிக்கதிர்கள்


actinic: (விண்.) ஒளிக்கதிர் விளைவுடைய : வேதியியல் விளைவு தரும் ஒளிக்கதிர்களை ஒட்டியது. வேதியியல் ஒளிக்கதிர் விளைவுகளை உண்டாக்கக்கூடிய மின்காந்தக் கதிரியக்கத்துடன் தொடர்புடையது


actinium : ஆக்டினியம் : கதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில் ஒன்று. இது அணு எண் 89 கொண்ட ஒரு தனிமம்.


actinomyces : (தாவ.) நட்சத்திரக் காளான் : நட்சத்திர வடிவிலுள்ள ஒரு வகைக் காளான். இது தரையடி அறைகளிலும், மழைக்குப் பிறகு பூமியிலும் ஈரநெடின்ய உண்டாக்குகிறது


actinomycosis : (நோயி.) மரநாக்கு நோய் : நட்சத்திரக்காளான்கள் அல்லது அவை போன்ற உயிரிகள் கார ணமாக உண்டாகும் ஒருவகை நோய். இது கால்நடைகளின் நாக்கில் கெட்டியான வீக்கத்தை ஏற்படுத்துகிறது

activated alumina : (குளி.) செயலூக்கிய அலுமினிய உயிரகை : இது ஒர் அலுமினியம் ஆக்சைடு. இது ஈர்க்கும் பொருளாகப் பயன்படுகிறது

active conductor: (மின்.) செயல் முனைப்பு மின் ஊடு கடத்தி: மின்னோட்டம் பாய்ந்து செல்லக்கூடிய ஊடுகடத்தி

active current : (மின்.) செயல் முனைப்பு மின்னோட்டம் : மாறு மின்னோட்டத்தில் மின்னழுத்த நிலையிலுள்ள ஒரு பகுதி; அல்லது வாட் இல்லாத அல்லது பயனில்லாத ஆற்றலிலிருந்து விளைவுறு ஆற்றலை வேறுபடுத்திக் காட்டக்கூடியது

active immunization:தீவிரத் தொற்றுத் தடை காப்பு:இறந்த வலிமை குன்றிய பாக்டீரியாக்களை தீங்கற்றவையாக்கி, அதே சமயம் அவை குருதியில் பாதுகாப்பாகச் செயற்படும் படி செய்து, தொற்றுநோய்களுக்கு எதிரான தடைகாப்பாக ஊசிமூலம் உடலில் செலுத்துதல். எடுத்துக்காட்டு: அம்மை குத்துதல்

active material: (மின்.) செயல் முனைப்பு மூலப்பொருள்:ஒரு சேமக் கலத்தில், மின்கலத்தின் நேர்மின் தகட்டில் (வலை) உள்ள பச்சைக் குழம்பு என அழைக்கப்படுவது

active pressure : (மின்.) செயல் முனைப்பு அழுத்தம் : மாறு மின்னோட்டத்தில் ஒரு மின்னோட்டத்தை உண்டாக்கும் விளைவுறு மின்னழுத்தம். ஒரு மின் சுற்றின் செறிவூட்ட மின்னழுத்தத்திலிருந்து வேறுபட்டது

actuate :துண்டு இயக்கு : இயக்குதல், இயங்கும்படி செய்தல். தானியங்கி எந்திரங்களின் ஒரதர்கள், இயக்குத் தண்டின் இயக்கத்தின் காரணமாக இயங்குவதற்குத் தூண்டப்படுகின்றது.

acute angle : (கணி.) குறுங்கோணம் : ஒரு செங்கோணத்திற்கு அதாவது, 90° கோணத்திற்குக் குறைந்த கோணம்

ad : (அச்சு.) விளம்பரம் :விளம்பரத்தைக் குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் சுருக்கக் குறியீடு

adam : 'ஆடம்' அறைகலன்:ஆடம் சகோதரர்கள் (1728-1792) புகுத்திய ஒருவகை ஆங்கிலேய அறைகலன் அலங்கார முறை. பொதுவாகப் பண்டைய ரோமானிய அணிகலன்களுடன் சேர்த்து அலங்கரிக்கப்படுவது

adam's apple : (உட.) குரல் வளை : மனிதரின் தொண்டைப் பகுதியின் முன்புறம் இருக்கும் ஒரு சிறிய எடுப்பான திரட்சி. இதுவே குரல் உண்டாக்கும் உறுப்பு

adaptability: (இயற்) நெகிழ்வுத் திறன் :தறு வாய்க்கேற்ப இயைவு கொள்ளும் திறன்; தற்போதுள்ள சூழ்நிலைக்கு உகந்தவாறு எளிதில் பொருந்தக்கூடிய திறன் அளவு

adapter : மாற்றமைவுப் பொறி : வெவ்வேறு வடிவளவுகளிலுள்ள கருவிகளை ஒன்றுக்கொன்று மாற்றிப் பயன்படுத்திக் கொள்வதற்கு உதவும் துணைப்பொறி

adapter plate : (குழை.) மாற்றமைவுப் பொறித் தகடு: உட்செலுத்து வார்ப்படப் பணியில், உரு அழுத்துப் பொறியுடன் அல்லது அச்சுத்தாள் அழுத்துத் தகட்டுப் பாளத்துடன் இணைந்திருக்கிற தகட்டுப் பிடி வார்ப்படம்

addendum : (பல்.) புறம் :ஒரு பல்லிணைச் சக்கரத்தில், பற்சக்கர வட்டத்திற்கு வெளியேயுள்ள பல்லின் முனை அல்லது பகுதி

addendum (உலோ.) புற இணைப்பு: ஒரு புல்லிணையில் பல் இடைவெளிக் கோட்டிலிருந்து புற விட்டம் வரையுள்ள தூரம்

addendum circle: (பல்.) புற வட்டம்: ஒரு பல்லிணைச் சக்கரத்தின் புறச் சுற்றளவு

adder: (மின்னி.) கூட்டல் பொறி: மின்னணுவியல் கணிப்பொறியிலுள்ள மின்சுற்றுவழியில், இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட இலக்கங்களின் கூட்டுத் தொகையைப் பதிவு செய்வதற்கான சாதனம்

addision’s disease (நோயி.) தோல் கருமை நோய் :வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதா நிறம் படர்விக்கும் ஒருவகை நோய். இது குண்டிக்காய்ச் சுரப்பியில் ஏற்படும் நோயினால் உண்டாகிறது

a d d i t i on polymerization: (குழை.) சேர்மான மீச்சேர்ம இணைவு: இடைவிளைவுப் பொருள் எதனையும் பிளந்திடாதவாறு, பூரிதமடையாத குழுமங்களின் எதிரெதிர் வினையின் வாயிலாக மூலக்கூறுகள் ஒருங்கிணைகின்ற ஒரு வேதியியல் வினை

additive compound (வேதி.) சேர்மானக் கூட்டுப்பொருள் : இரு பொருள்கள் ஒன்று சேர்வதால் உண்டாகும் கூட்டுப் பொருள். எடுத்துக்காட்டாக, எத்திலீன் குளோரின், எத்திலீன் குளோரைடு ஆகிய இருபொருள்கள் இணைவதால் ஒரு கூட்டுப்பொருள் உண்டாகிறது

additive method of colour photography:வண்ணம் ஒளிப்படச் சேர்மான முறை: ஒளிப்படங்கள் சிவப்பான பகுதிகள் அனைத்தும் மிக நுண்ணிய புள்ளிகளைக் கொண்டிருக்கும். அதேபோன்று, நீலம், பச்சை வண்ணப் பகுதிகளிலும் இருக்கும். மற்ற வண்ணப் பகுதிகளில் சிவப்பு, நீலம், பச்சை நிறப்புள்ளிகள் கலந்திருக்கும் (எ-டு : கருஞ் சிவப்பில், சிவப்பு, நீலப்புள்ளிகள்) வண்ணத் தொலைக்காட்சிகளிலும் இதனைக் காணலாம்

additives : சேர்மானப் பொருள்கள் : எண்ணெயின் பிசுபிசுப்புத் தன்மையைக் குறைப்பதற்காகவும் உணவுக்கு வண்ண மூட்டுவதற்காகவும் எண்ணெயுடன் சேர்க்கப்படும் பொருள்கள்

additives : (தானி.) சேர்மானப் பொருள்கள் : ம ச கு எண்ணெய்களில், தேவையான பண்புகளைக் கொண்டு வருவதற்காகச் சேர்க்கப்படும் வேதியியல் பொருள்கள்

adductor muscle: (உட.) முன்னிழுப்புத் தசை: முன்னிழுக்கும் இயல்புடைய தசைநார். கையை உடலை நோக்கிக்கொண்டு வருவது இந்தத் தசைதான்

adhesive: (க.க.) ஒட்டுப்பசை: இரண்டு பொருள்களை ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்படி செய்யும் சாந்து, பசை அல்லது வேறு பொருள்

adiabatic: (குளி.) மாறா வெப்பநிலை சார்ந்த: வெப்பநிலை மாறாமல், கன அளவில் அல்லது அழுத்த நிலையில் ஏற்படும் ஒரு மாறுதல்

adiabatic process: (குளி.) மாறா வெப்பநிலை நிகழ்ச்சி: வெப்பநிலை குறையாமல் அல்லது கன அளவில் ஒரு மாறுதலை உண்டாக்கும் ஒரு நிகழ்ச்சி

adherence : ஒட்டுதல் : மாறுபட்டதுகள்கள் ஒன்றையொன்று பற்றிக்கொண்டிருக்கிற அல்லது ஒட்டிக் கொண்டிருக்கிற தன்மை

adhesion or adhesive power: (எந்.) அயற்பரப்பொட்டு அல்லது ஒட்டுந்திறன்: (1) எந்திரத்தின் பிற உறுப்புகளை இயங்க வைக்கும். அது தொட்டுக் கொண்டிருக்கும் பரப்புக்குமிடையில் இருந்து வருகிற உராய்வு

(2) ஒரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தனமை.
(3) குழைமவியலில், இரு முகப்புகள். ஒரு கரைசலினால் மெருகூட்டப் பெற்றபின்பு, ஒரு குழைமத்தினால் இணைக்கப்பட்டிருக்கும் நிலை

adjacent: angle: (வரை) அண்டைக்கோணம்: வடிவ கணிதத்தில், இரு கோணங்களுக்கு ஒரு பக்கம் பொதுவாக இருக்குமானால், அந்த இரு கோணங்களும் அண்டைக் கோணங்கள் எனப்படும்

adjacent-channel interference (மின்.) அண்டை அலை வரிசை இடையீடு : தொலைக்காட்சி போன்றவற்றில் உள்ள அதிகாரம் பெற்ற அண்டை அலை வரிசையிலிருந்து எழுகிற ஒரு சைகையினால் உண்டாகும் இடையீடு

adjust : சீரமைவு செய் : தொடர்பு நிலை, இருப்பு நிலை, பொருத்த நிலை போன்றவற்றுக்குத் தக்கவாறு உறுப்புகளைப் பொறுத்தமாக அமைத்துக் கொள்ளுதல்

adjustable boring tool: (எந்.) சீரமைவு செய்யத்தக்க துணைக் கருவி : வெட்டுக் கருவியையும், கைப்பிடியையும் மாற்றாமலே வெவ்வேறு பணிக்கேற்ப வெட்டுக் கருவியைப் பொருத்தக்கூடிய கருவி

adjustable condenser : (மின்.) சீரமைவு செய்யத்தக்க மின் விசையேற்றி : இயங்கக்கூடிய தகடுகளின் வாயிலாக, மாறுபட்ட தேவைகளுக்கேற்ப விசையேற்றும் திறனை மாற்றியமைக்கக்கூடிய ஒரு மின் விசையேற்றி

adjustable parallels : (எந்.) சீரமைவு செய்யத்தக்க இணைக்கம்பிகள் : ஆப்பு வடிவ இரும்பு இணைகம்பிகள். இதில் ஒரு கம்பியின் மெல்லிய முனை மற்றொன்றின் தடித்த-மூனையுடன் பொருத்தப்பட்டிருக்கும், மேல் கம்பியின்

இணைக்கம்பிகள்

முகப்பும், கீழ்க்கம்பியின் அடி முகப்பும் இணையொத்ததாக அமைந்திருக்கும். எனினும், இரு முகப்புகளுக்குமிடையிலான தூரத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இவ்விரு கம்பிகளும் விலகி விடாமல் தடுப்பதற்காக, இரண்டும் ஒரு திருகாணி வாயிலாகப் பூட்டப்பட்டிருக்கும்

adjustable pitch propeller; (வானூ.) சீரமைவு செய்யத்தக்க உந்து சுழல் விசிறி : இந்தச் சுழல் விசிறியின் குடத்தில், இயங்காத நிலையில், தேவையான எந்த உந்துதலுக்கும் ஏற்ப அலகுகளை இணைத்துக் கொள்ளலாம்

adjustable reamer : (எந்.) சீரமைவு செய்யத்தக்க துனைச் சீர்மி : ஒரு மைய மரையாணி அல்லது திரு காணி வாயிலாக வடிவளவினைப் பெரிதாக்கக்கூடிய துளைச் சீர்மி. மரையாணியை அல்லது திருகாணியை முடுக்குவதன் மூலம் துளைச் சீர்மி விரிவடைகிறது

adjustable resistance: (மின்.) சீரமைவு செய்யத்தக்க மின் தடை : இதனை மாறுபடும் மின்தடை என்றும் அழைப்பர். உயர்வை அல்லது குறைவை அனுமதிக்கக்கூடிய மின் தடை

adjustable speed motor: (மின்.) சீரமைவு செய்யத்தக்க வேக மின்னோடி : மிகுதியான அளவுக்கு வேகத்தை மாற்றியமைக்கக் கூடிய மின்னோடி. இதில் வேகத்தை ஒரு முறை சீரமைவு செய்துவிட்டால், பாரம் எத்துணை அளவு இருப்பினும், வேகம் ஒரே சீராக இருந்து வரும்

adjustable tap: (எந்.) சீரமைவு செய்யத்தக்க வடிகுழாய் : ஆரப்போக்கில் மாற்றியமைக்கக் கூடியவாறு அலகுகள் அல்லது செதுக்குக் கருவிகள் பொருத்தப்பட்ட வடி குழாய்

adjustable wrench: சீரமைவுத் திருகுக் குறடு : தக்கவாறு அமைத்துக் கொள்ளக்ககூடியதாகத் திறந்த வாயினைக் கொண்ட ஒரு திருகுக் குறடு

adjusting screw: (எந்.) சீரமைவு செய்யத்தக்க திருகாணி : ஒருவகை ரம்பப் பற்சாய்வுத் திருகாணி. இதனைப் பயன்படுத்தி, எந்திரங்களின் உறுப்புகளைப் பரிமாணங்களுக்குச் சரியமைவு செய்வதைவிட அதிகத் துல்லியமாகச் சீரமைவு செய்யவோ ஒழுங்கமைவு செய்யவோ முடியும்

adjustment: (எந்.) சீரமைவு: ஒரு பொறியின் அல்லது எந்திரத்தின் உறுப்புகளைப் பொருத்தமான நிலைகலில் சீராகப் பொருத்தி அமைத்தல்

adjustment strips: (எந்.) சீரமைவு உலோக வார்ப்பட்டைகள் : இந்த ஆப்பு வடிவ உலோக வார்ப்பட்டைகள் வாயிலாக, நழுவுமேற்பரப்புகளின் சரியான, தாங்கியினைச் சீரமைவு செய்யலாம். ரம்பப்பற்சாய்வுத் திருகாணிகளை அல்லது சீரமைவு செய்யத்தக்க திருகாணிகளைக் கொண்டு துல்லியமான இணைப்பினை ஏற்படுத்தமுடியும்

adman: (அச்சு.) விளம்பரக்காரர்: விளம்பரச்சாதனங்களைத் தயாரிப்பவர்

admittance: (மின்.) விடுப்புவிடை: மறிப்புக்கு நேர் எதிரானது. மாறுமின்னோட்டச் சுற்றுப் பாதைகளில் பயன்படும் ஓர் அலகு. இது ஓம்களில் அளவிடப்படுகிறது

adobe construction:(க.க.) உணக்கிய செங்கல் கட்டுமானம் : வெயிலில் காய்ந்த பச்சைக் செங்கல்லால் கட்டப்பட்ட புறச்சுவர்களைக் கொண்ட கட்டிடம். இந்தச் செங்கற்கள், மண்ணும் வைக்கோலும் கலந்த கலவையால் செய்யப்பட்டு வெயிலில் உணக்கியவையாகும்

adrenal glands: (உட.) குண்டிக்காய்ச் சுரப்பி : இவை சிறுநீரகத்தை அடுத்துள்ள சுரப்பிகள். இந்தச் சுரப்பியின் உட்பகுதியான உட்கருவிலிருந்து ஊறும் "அட்ரினலீன்" என்ப்படும் சுரப்பு நீர் இரத்தத்தில் பாய்ந்து, திடீர் அச்சம் அல்லது கோபத்தின்போது விரைவான இதயத் துடிப்பு, வெளுத்த முகம் போன்ற விளைவுகளை உண்டாக்குகிறது. இந்தச் சுரப்பியின் புறப்பகுதி உள்ளுறுப்பு மாறுதல்களை உண்டாக்குகிறது. பறவைகளிலும், மீன்களிலுமுள்ள இந்தச் சுரப்பிகள் முற்றிலும் வேறானவை

adulteration: கலப்படம்: மட்டமான அமைப்பான்களையோ அயற் பொருள்களையோ கலந்து தூய்மையைக் கெடுத்தல்

advance: (தானி:மின்.) முன்னீடு: (1) உந்துதண்டு நிலையின் உச்சிநிலை மையத்தின் நேரத்தைப்பொறுத்து மின்பொறி உண்டாகும் நோத்தைச் சீரமைவு செய்தல்

(2) மின்னியற் கருவி வேலைக்குப் பயன்படுத்தப்படும் செம்பும் நிக்கலும் கலந்த ஒர் உலோகக் கலவை (உலோகவியல்)

advertising: விளம்பரம் செய்தல்: பொது அறிவிப்புகளைத் தயாரித்துப் பொது மக்களிடையே பரப்பும் செயல்

adz: செங்கோண வெட்டுக் கருவி: கைப்பிடிக்குச் செங்கோணத்தில் வெட்டுக் கத்தி அமைந்துள்ள ஒரு வகை வெட்டுக் கருவி

adz-eye hammer: (மர.வே.) செங்கோண முகப்புச் சம்மட்டி : ஆணி பற்றி இழுக்கும் அமைவுடைய வார்சுத்தியல்.இதில் முகப்பு, மற்ற சுத்தியல்களைவிடக் கூடுதலாக நீண்டு கைப் பிடிவரை அமைந்திருக்கும்

aerated water: (வேதி.) காற்றுட்டிய நீர் : காற்றினைச் செலுத்தித் தூய்மையாக்கப்பட்ட நீர்

aeration: (வேதி.) காற்றுட்டல்: (1) நீரினை அல்லது வேறு திரவத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக. அதனுள்ளே காற்றினைச் செலுத்துதல்; காற்றின் வேதியியல் வினைக்கு உட்படுத்துதல்

(2) சாக்கடையை அகற்றும் சாதனத்தில், தொட்டியின் அடிமட்டத்திலிருந்து, ஒர் எந்திர சாதனத்தின் மூலம் கழிவு நீரின் மட்டத்தை உயர்த்தி, நீரை வெளியேற்றுவதற்குப் பயன்படும் ஒரு துணை நிலைத் தொட்டி

aerial:வான்கம்பி:(மின்.) கம்பியில்லாத் தந்தியில் பயன்படும் ஒரு சொல். இதில் தனியொன்றான அல்லது தொகுதியான மின்ஊடு கடத்திகள் அமைந்திருக்கும். சைகைகளைத் தாங்கி வரும் மின்காந்த அலைகளை விண்வெளியிலிருந்து ஏற்றிணைத்துக் கொள்வதற்கு அல்லது விண்வெளியில் அவற்றைப் பரப்புவதற்காக, கட்டிடங்கள், கோபுரங்கள், உயர்ந்த கம்பங்கள் ஆகியவற்றின் உச்சியில் இரு முனைகளுக்கிடையே தொங்கவிடப்பட்டிருக்கும். 'வானலைக் கொடி' (antenna) என்றும் இதனை அழைப்பர்

aerial metal : (உலோ.) வான்கம்பி உலோகம்: அலுமினியமும் விதியமும் கலந்த மிக வலுவான உலோகக்கலவை, ஆனால் இதன் கனம் மிகக் குறைவு

aeroballistic missile: (விண்.) விண்வழி ஏவுகணை: பூமியின் வாயுமண்டலத்திற்குள் ஒலியினும் விஞ்சிய வேகத்தில் பறப்பதற்கான உந்து விசையினையும் தொடர்ச்சியான சுழற்சி உத்தியினையும் கொண்ட ஒர் இறகற்ற விண்கலம்

aerodynamic balanced surface : (வானூ.) வளியியக்கத் சமநிலைப் பரப்பு : கீல் அச்சினை அல்லது சுழல் முனையைச் சுற்றி இணைவாக்க விளைவு நெம்பு திறனை மிகச் சிறிய அளவில் ஏற்படுத்துகிற அல்லது இல்லாமலே செய்கிற வகையில் அந்தக் கீல் அச்சின் சுழல் முனையின் இருபக்கங்களிலும் நீண்டிருக்கிற அல்லது அதனுடன் துணைச் சாதனங்களை அல்லது விரிவாக்கங்களை சாய்ந்த எழுத்துக்கள்கொண்டிருக்கிற ஒரு கட்டுப்பாட்டும் பரப்பு

aeration: (குளி.) காற்றூடல்: காற்றோட்டம் மூலமாகக் குளிர்விக்கும் கலவை செய்யும் செய்முறை

aerodynamic center, wing section: (வானூ.) வளியியக்க மையம், சிறகுப் பகுதி: நிரல் கோட்டின் நாண் மீது அல்லது அதனருகே அமைந்துள்ள ஒரு மையம். இது, விமானச்சிறகின் முன்விளிம்பிற்குப் பின்னருள்ள நாணின் நீளத்தில் ஏறத்தாழ கால் பகுதி இருக்கும். இந்த மையத்தைச்சுற்றி, நெம்பு திறன் குணகம் நடைமுறையில் மாறாமலே இருக்கும்

aerodynamics: (வானூ. ) வளியியக்கவியல்: இயங்கும் வளிமங்கள் அவற்றின் எந்திரவியல் விளைவுகள் ஆகியவை பற்றிய அறிவி யல் பிரிவு

aerodynamic volume: (வானூ.) வளியியக்கக் கன அளவு: ஒரு வான் கூண்டின் பிதுக்கப் பகுதிகள் உட்பட அதன் மொத்தக் கன அளவு

aerodyne: (வானூ): காற்றினும் எடைமிக்க வான் கலம்: பறக்கும் போது முக்கியமாக வளியியக்க விசைகளிலிருந்து பறக்கும் ஆற்றலைப் பெறும் வானூர்தியைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல்

aeroelasticity: (விண்.) மிகுவிசை வான்கல அதிர்வியக்கம்: நெகிழ்திறன் வாய்ந்த பொருள்களின்மீது வளியியக்க இயற்பியல் விசைகளின் விளைவு

aerogroph: வண்ணப்பூச்சு தூரிகைக்குப் பதிலாக வண்ணத்தைப் பீச்சியடிக்கும் கருவி

aerolite: (உலோ.) விண் வீழ்கல்: ஏரோலைட்: 96% அலுமினியம் அடங்கிய ஓர் அலுமினிய உலோகக் கலவை.வீதஎடைமானம் 2.74. வானூர்தியும் தானியங்கிகளின் உறுப்புகளும் தயாரிக்கப் பயன்படுகிறது

aeronautics: வானூர்தியியல்: வானூர்தி பறத்தல் தொடர்பான அறிவியல்

aerosol: (குளி.) தூசிப்படலம்: காற்றில் மிதக்கும் சிறு சிறு துகள்கள். எடுத்துக்காட்டு: தூசி, மூடுபனி, புகை

aerospace: (விண்.) விண்வெளி: பூமியின் மேற்பரப்புக்குப் புறத்தேயுள்ள அகன்று விரிந்த பிரம்மாண்டமான ஊடகம்

aeroforces: (விண்.) விண்வெளி விசைகள்: இராணுவ நோக்கங்களுக்காக விண்வெளியில் செயற்படுகிற ஊர்திகள் அனைத்தையும், பொருத்தமான இடங்களில் ஆயுதங்களையும், அவற்றைக் கையாளும் இயக்குநர்களையும் இது உள்ளடக்கும்

aerospace vehicle: (விண்.) வான்வெளிக் கலம்: வாயு மண்டலத்திலும் விண்வெளி மண்டலத்திலும் இயங்கக்கூடிய ஒரு கலம். வான்வெளிச் சூழ்நிலையில் தானாகவோ மனிதர் இயக்கியோ இயங்குகிற ஊர்தியையும் குறிக்கும்

aetiology, etiology: (நோயி.) நோய்முதல் ஆய்வியல்: நோய்க்கான காரணம் பற்றி ஆராயும் துறை

afferent nerve: (உட.) உணர்ச்சி நரம்பு: மூளைக்கும், தண்டுவடத்திற்கும் உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற நரம்பு

aerostat: (வானூ.) வான்கூண்டு: வான்கலம் அல்லது பலூன் போன்ற காற்றினும் எடை குறைந்த வானூர்தியைக் குறிக்கும் ஒரு சொல்

aerostatics: (வானு.) வளிச்சூழல் சமநிலையியல்: வளிமப் பாய்மங்கள், அவற்றில் அமிழ்ந்திருக்கும் பொருள்கள் ஆகியவற்றின் சமநிலை பற்றிய அறிவியல்

aerostation: (வானு.) வான்கூண்டு செலுத்துதல்: வான்கூண்டுகளைச் செலுத்துங்கலை

african mahogany: (மா.வே.) ஆஃப்ரிக்கச் சீமை நூக்கு: சீமை நூக்குக் குடும்பத்தைச் சேர்ந்த ஒர் அரிய மரவகை. முக்கியமாக ஆஃப்ரிக்காவில் காணப்படுவது. மிகுந்த உயரமும் அகலமும் உடைய இந்த மரம் நல்ல மெருகேற்றும் கட்டுமான மரவகை. நுட்பமான அறைகலன்கள் செய்யப் பயன்படுகிறது

after birth: (உட.) பேறுகால இளங்கொடி: பிறக்காத குழ்ந்தை தாயிடமிருந்து உணவும், ஆக்சிஜனும் பெறுவதற்கு உதவும் உறுப்பு. குழந்தை பிறந்த பின்பு இது தாயிடமிருந்து வெளியே வந்துவிடும். இதனுடன் குழந்தை உருவாகும் கருப்பையின் உள்படலமும் வெளிவரும். இவை இரண்டும் சேர்ந்து பேறுகால இளங்கொடி எனப்படும்

after-damp: (வேதி. ) சுரங்க நச்சு வளி: ஒரு சுரங்கத்தில் சுரங்க வெடி விபத்துக்குப் பின்னால் உண்டாகும் கார்பன்டையாக்சைடு என்னும் நச்சு வளி

after-image: (வண்.) பின்தோற்றம்: ஒரு பொருளைப் பார்த்த பிறகு மனதில் சிறிது நேரம் பதிந்திருக்கும் உருவம்

agar-agar: கடற்கோரைக் கூழ்: கடற்கோரை வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகைக் கூழ். ஆய்வுக்கூடத்தில் இவற்றில் பாக்டீரியாவை வளர்க்கின்றனர்

agaric: (தாவ.) நிலக்குடை: நச்சுத் தன்மையுள்ள காளான் போன்ற நாய்க்குடைவகை.

நிலக்குடை

agate:(களி.) படிகக் கல்: (1) ஒரு வகைப் பலவண்ணப் படிகக் கல். இதில் வண்ணங்கள் பொதுவாகப் பட்டைக் கோடுகளாக இருக்கும் (2) நவமணிகளில் ஒன்று. (3) (அச்சுக்கலை) சுமார் 51/2 அலகுகள் வடிவளவுள்ள ஒர் அச்செழுத்துரு

agfacolour: ( வண்.) அக்ஃபா வண்ணம்: இது ஒருவகை வண்ண ஒளிப்படக் கலை வகை. இதில் மூன்று ஒளியுணர் சுருள்கள், ஒரே செல்லுலாய்டு ஆதாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இந்தச் சுருள்கள், நீல ஒளியுணர்வு, பச்சை ஒளியுணர்வு, சிவப்பு ஒளியுணர்வு கொண்டவை. ஒளிப்பட உருவிளக்கப் பொருளுடன் இணைந்து சுருளில் பொருத்தமான வண்ண உருக்காட்சியை உண்டாக்கக் கூடிய பொருள்கள் இச்சுருள்களில் அடங்கியுள்ளன

agglutination: (உட.) குரிதியணு ஒட்டுத்திரள்: குருதியிலுள்ள அணு உயிர் ஒட்டுத்திரள். இது குருதியில் இருக்கும்போது அதிலுள்ள நச்சுப் பொருள்களை உட்கொள்கிறது. ஆரோக்கியமான மனிதரிடமிருந்து நோயுற்ற மனிதருக்குக் குருதியைப் பாதுகாப்பாகச் செலுத்த முடியுமா என்பதைச் சோதித்துப் பார்க்க இது உதவுகிறது

aggregate: ஓரினத் தொகை: கலவைப் பொருள்: ஒரே இயல்புள்ள அணுத் துகள்களின் திரட்சி aging: (உலோ.) முதிர்ச்சி: இயற்க்கை வெப்பம், குளிர்ச்சி காரணமாகச் சில உலோகங்களில் அல்லது உலோகக் கலவைகளில் காலப் போக்கில் ஏற்படும் மாறுபாடு

aging of incandescent lamp: (மின்.) வெண்சுடர் விளக்குத் தளர்ச்சி: வெண்சுடர் விளக்கிலுள்ள இழையும் விளக்குக்குமிழின் உட்புறமுள்ள பூச்சும் உயிரக இணைவு காரணமாகப் படிப்படியாக ஒளி குன்றுதல்

aging of magnet: (மின்.) காந்தத் தளர்ச்சி: ஒரு காந்தத்தினுடைய காந்த நிலைப்பாட்டுத் திறனை மிகுதியாக்கும் செய்முறைக்கு அந்தக் காந்தத்தை உட்படுத்துதல்

agitator: (எந்.) கலக்குக் கருவி: பெரிய அண்டாக்களில் அல்லது பெருந்தொட்டிகளுள்ள அமைப்பான்களை ஒன்றாகக் கலைப்பதற்காகப் பயன்படுத்தபடும் ஓர் எந்திரக் கலக்குச் சாதனம்

agonic line: (மின்.) கோணம் படாத கோடு : பூமியின் மேற்பரப் பினைச் சுற்றி வடக்கு-தெற்குத் திசையிலுள்ள ஒரு கற்பனைக்கோடு. இதில் எல்லாப் புள்ளிகளும் பூஜ்யச் சரிவினையே கொண்டிருககும்

agricultural bolt: (பட்.) வேளாண்மை மரையாணி: உருட்டுச் செய்முறை மூலம் அமைந்த திருகு, சுருள் பட்டைகளை உடற்பகுதியில் கொண்டுள்ள ஒரு மரையாணி


agravic: (விண்.) புவிஈர்ப்பு இன்மை: புவிஈர்ப்பு விசை இல்லாத ஒரு நிலை, எடையின்மை நிலை

agriculture: வேளாண்மை, உழவு: பயிர்களைச் சாகுபடி செய்து விளைப்பொருள்களை விளைவித்தல், கால்நடையைப் பேணி வளர்த்தல் ஆகியன தொடர்பான அறிவியல்

aileron: (வானூ.) வானூர்திச் சிறகின் ஓரமடக்கு : ஒரு வானூர்திச் சிறகின் இழுவை முனையுடன் கீல்அச்சு அலலது சுழல்முனை மூலம் இணைக்கப்பட்டுள்ள ஒரு துணைப் பரப்பு. வானூர்தியின் மீது உருள்கிற சுழற்சியை ஏற்படுத்துவது இதன் முக்கியப் பணியாகும்.

ஓரமடக்கு

ailerol angla: (வானூ.) வானூர்திச் சிறகின் ஓரமடக்குக் கோணம்: வானூர்திச் சிறகின் ஓரமடக்கு, அதன் நடுநிலையிலிருந்து கோண இடப்பெயர்ச்சி பெறுதல், வானூர்திச் சிறகின் ஓரமடக்கினுடைய இழுவை முனையானது.நடுநிலைக்குக் கீழிருந்தால், அது நேர்படியானது எனப்படும்

aileron roll: (வானூ.) வானூர்திச் சிறகின் ஓரமடக்கு உருளை: வானூர்திச் சிறகின் ஓரமடக்கு இடபெயர்ச்சியினால் உண்டாகும் விசைகளினால் இயக்கம் பேணப்படுகின்ற ஓர் உருளை

ainico: (மின்.) ஜனிக்கோ: சிறியதான நிரந்தரக் காந்தங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒரு தனிவகை உலோகக் கலவை

air: காற்று மண்டலம் : 'வளிமண்டலம்', 'காற்று மண்டலம்' என்பது பொதுவாக வளிமண்டலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் குறிக்கப் பயன்பட்ட போதிலும், பூமியின் புறணியை மேலோட்டமாகச் சூழ்ந்திருக்கும் வளிமங்களின் கலவையை இது குறிப்பாகக் குறிக்கிறது air-acetylene welding: காற்று ஒளிர்வளிம வார்ப்படம்: ஒரு வகை வளிம வார்ப்பட முறை. இதில் காற்றும் ஒளிர்வளிமமும் எரிவதன் மூலமாக வார்ப்பட வெப்பம் பெறப்படுகிறது

air blast: (குளி.) காற்றுத் துருத்தி: வலிந்து ஊட்டும் காற்று விசை

air blast transformer: (மின்.) காற்று வெடிப்பு மின்மாற்றி: இந்த வகை மின்மாற்றியில் அதன் சுருணைகளைச் சுற்றி வலிந்த சுற்றோட்டத்தின் வாயிலாக மிகுதியாக வெப்பமடைதல் தடுக்கப்படுகிறது

air bleed: (தானி;எந்.) காற்றுக் கசிவு: எரிபொருள் கலவையிலுள்ள காற்றின் அளவினை மாற்றியமைக்கும் வகையால் சீரமைவு செய்யத்தக்க ஒரு சிறிய காற்று ஒரதர்

air bound: (வானூ.) காற்று வரம்பு: காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ வானூர்தி சட்டென்று இறங்கும் "காற்று வெறுமை" (air pocket) காரணமாக, வானூர்தியின் உறுப்புகளில் எதுவும் இயங்குவதைத் தடை செய்யும் வரம்பு.

air brake: (தானி: எந்) காற்றுத் தடுப்பி: அழுத்தம் பெற்ற காற்றினால் இயக்கப்படும் முட்டுக் கட்டை அல்லது வேகத்தடைக் கருவி

air breakup: (விண்.) காற்று மண்டலத் தகர்வு: ஒரு பொருள் விண்வெளியிலிருந்து பூமியின் காற்று மண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்ததும் உடைந்து சிதைந்து போதல்

air breather: (விண்.) காற்று வாங்கி: வாயு மண்டலத்திலிருந்து உள்ளிழுக்கப்படுவதன் வாயிலாக ஆக்சிஜனுடன் இணைவுற்ற எரிபொருள் வாயிலாக முன்னோக்கிச் செலுத்தப்படும் ஏவுகணை அல்லது விண்கலம்

air brush lettering: (ஓவியம்) காற்றுத் தூரிகை எழுத்துரு: அழுத்தப்பட்ட காற்றின் வாயிலாக மையினையும் வண்ணங்களையும் தெளிப்பதற்குப் பயன்படும் காற்றுத் தூரிகை என்ற கருவியைக் கொண்டு எழுத்துருக்களைத் தீட்டுதல் அல்லது எழுத்துருக்களுக்கு நிழற்படி வண்ணம் தீட்டுதல்

air capacitor: (மின்.) காற்று மின்னியல் உறைக்கலம்: மின்அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பொருளாகப் பயன்படுத்துகிற ஒரு மின்னியல் உறைகலம்

air cell: (மின்.) காற்று மின்கலம்: மின்காந்த முனைப்பியக்கம் அகற்றப்பட்ட வகையைச் சேர்ந்த ஒர் அடிப்படை மின்கலம். இதில் ஒரு தனிவகை கரிம மின் முனையானது மின்காந்த முனைப்பியக்க அகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. அது, காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்தெடுக்கிறது

air chamber: (பொறி.) காற்றறை: நீர் விசைப் பொறிகளின் சம அழுத்தத்திற்குரிய காற்றறை. இறைக்கப்படும் திரவத்தின் அதிர்வுறு வெளியேற்றத்தை இயன்ற அளவு குறைப்பதற்காக உந்து இறைப்பிகளின் அமைக்கப்பட்டுள்ள ஒரு கலம். இந்த அறையில், அழுத்தப்பட்ட நிலையில் காற்று இருக்கும். இதன் அடிப்பகுதியில் ஒரு வடிகுழாய் பொருத்தப்பட்டிருக்கும். உந்துதண்டினை அடித்து இயக்குவதன் மூலம், இறைப்பியிலிருந்து சிறிதளவு திரவம் இந்த வடிகுழாய் வழியாக வலிந்து செலுத்தப்படுகிறது.உந்து தண்டின் உறிஞ்சு அடிக்கும் வெளிப்பாட்டு அடிக்குமிடையில் திரவம் பாய்வதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான ஒரு மெல்லணையாக இதில் காற்று செயற்படுகிறது

air clamp: (எந்.) காற்றுப் பிடிப்பான்: காற்றழுத்தத்தின் வாயிலாக இயக்கப்படும் பற்றுக் கருவி

air cleaner: (தானி; எந்.) காற்றுத் தூய்மையாக்கி: தூசு மற்றும் பிற அயற்பொருள்கள் காற்று மண்டலத்தில் புகுவதற்கு முன்பு அவற்றைத் தனியே பிரித்தெடுக்கும் ஒரு சாதனம்

air compressor: (தானி.) காற்றழுத்தி: டயர்களில் காற்றடைப் பதற்கும், பல்வேறு தொழில் துறைப்பயன்பாடுகளுக்கும் அழுத்திய காற்றினை வழங்கும் பொறி

air condenser: (மின்.) காற்று மின்விசையேற்றி: வட்டத் தகடுகளிடையிலான காற்று இடைவெளிகளிலுள்ள ஒரு வகை மின்விசையேற்றி. மின்னேற்றங்களிடையே ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மின் பாயாமல் காப்பிடுவதற்கு இது பயன்படுகிறது

air conditioning: காற்றுப் பதனாக்கம்: காற்றுத் தூய்மையாக்கம், ஈரநயப்பு நீக்குதல் ஆகிய மூன்று வெவ்வேறு செயல் முறைகளைக் குறிப்பது

air control: (வானூ) காற்றுக் கட்டுப்பாடு: வானூர்தியின் கட்டுப்பாட்டு பரப்புகளை இயக்குவதற்குப் பயன்படும் சாதனம்

aircooled engine: (தானி; எந்.) காற்றில் ஆறிய பொறி: எந்திரத்தின் முன்புள்ள ஓர் ஊர்தியானது, நீள் உருளைகளுக்கு மேலாக, அடைப்புள்ள இடைவெளிக்குள் காற்றினை உட்செலுத்துகிறது. அதிலிருந்து அந்தக் காற்று, நீள் உருளைகளையும், மற்ற உறுப்புகளையும் கடந்து அடியிற்செலுத்தப்படுகிறது. நீள் உருளைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கும். மிகப் பெரும்பாலும் கதிர் வீச்சுப் பரப்பினை ஏற்படுத்தும் வகையில் பரிதியைச் சுற்றி செதிலமைப்புத் தொடர்களுடன் அமைக்கப்பட்டிருக்கும்

air-cooled transformer:(மின்.) காற்றில் ஆறிய மின்மாற்றி: இந்த வகை மின்மாற்றியில், சுருள்களின் சூடாக்கமானது, ஒரு காற்றோட்டச் சுழற்சியை ஏற்படுத்துகிறது

air-core inductor: (மின்.) காற்று மைய மின்னோட்டத் தூண்டு கருவி: ஓர் உலோக மையமாக இல்லாத ஒரு மின்காப்பு அமைவில் சுற்றப்பட்டுள்ள ஒரு மின்னோட்டத் தூண்டுகருவி; ஒரு மையத்தைக் கொண்டிராமல் தன் ஆதாரத்தைக் கொண்ட ஒரு தூண்டுச் சுருள்

air-core solenoid: (மின்.) காற்று உள்ளீட்டுக் கம்பிச்சுருள்: திட உள்ளீடு இல்லாமல், உட்புழையைக் கொண்டுள்ள ஒரு கம்பிச்சுருள்

aircraft: (வானூ.) வானூர்தி/விமானம்: காற்றில் எழும் திறன் அல்லது இயக்கவினை காரணமாக, காற்றின் ஆதாரத்துடன் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, சுமையேற்றிச் செல்லும் சாதனம்

aircraft carrier: (வானூ.) வானூர்தி தாங்கிக் கப்பல் விமானம் தாங்கிக் கப்பல்: வானூர்திகளை ஏற்றிச் செல்லவும், வானூர்திகள் வந்திறங்கவும், புறப்பட்டுச்செல்லவும் ஏற்றவகையில் மேல்தளம்வடி வமைக்கப்பட்ட ஒரு கப்பல் (விமானதளக் கப்பல்)

air cushion: காற்று மெத்தை: அதிர்ச்சி தாங்கியாக அல்லது இயக்கத்தை முறைப்படுத்தும் அல்லது தடுக்கும் சாதனமாகச் செயற்படும் வகையில் அமைக்கப்பட்ட காற்றடைக்கப்பட்ட ஒர் உருளை

air-dried: காற்றில் உலர்ந்த: சூட்டடுப்பிலிட்டு உலர்த்துவதற்கு மாற்றாக காற்றில் உலரவிடுவதன் மூலம் வெட்டு மரங்களைப் பக்குவப்படுத்துதல்

air drill: (எந்.) காற்றுத் துரப்பணம்: அழுத்தப்பட்ட காற்றின் வாயிலாக இயக்கப்படும் ஒரு துரப்பணம்

air duct: (வானூ.) காற்றுக்குழாய்: காற்றைவிடப் பளு குறைந்த வான் கூண்டின் (வான் கலம்) காற்றடைத்த உறுப்புகளில் காற்றை நிரப்புவதற்கு அல்லது அவற்றில் காற்றழுத்தத்தைப் பேணுவதற்குக் காற்றினை வழங்குகிற ஒரு குழாய். இது பெரும்பாலும் கட்டிணைப்புப் பொருளாக இருக்கும்

air flow: (தானி.எந்.) காற்றுப்பாய்வு: காற்று உராய்வு மிகக் குறைந்த அளவுக்குதக் குறைக்கப்பட்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சிலவகைத் தானியங்கிகளின் மீது காற்றுப் பாய்ந்து செல்வதைக் குறிக்கிறது

airfoil: (வானூ.) காற்றுத்துருத்தி: பயனுள்ள இயக்க எதிர்வினையை உண்டாக்கும் வகையில் காற்றில் துருத்திக் கொண்டிருக்குமாறு வடி வமைக்கப்பட்டுள்ள மேற்பரப்பு

airfoil profiles: (வானூ.) காற்றுத் துருத்தி வடிவம்: ஒரு காற்றுத் துருத்திப்பகுதியின் பக்கத்தோற்ற உருவரைப் படிவம்

airfoil section: (வானூ.) காற்றுத் துருத்திப் பகுதி: குறித்துரைக்கப்பட்ட ஒரு சமதளத்திற்கு நேரிணையாக ஒரு வானூர்தியால் ஏற்படுத்தப்பட்ட காற்றுத் துருத்தியின் குறுக்கு வெட்டுத் தோற்றம். இந்தச் சமதளத்திற்குச் செங்குத்தாக உள்ள ஒரு கோடு காற்றுத் துருத்தி அச்சு எனப்படும்

airframe: (விண்.) காற்றுச் சட்டகம்: ஒரு விமானத்தின் அல்லது ஏவுகணையின் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுமான மற்றும் வளியியக்கம் சார்ந்த அமைப்பான்கள். இவை அந்த விமானத்துடன் அல்லது ஏவுகணையுடன் இணைந்த பல்வேறு அமைப்புகளுக்கும் ஆதாரமாக இருக்கின்றன

air-fuel ratio: ( தானி.) காற்று எரிபொருள் விகிதம்: உள்ளெரி எஞ்சினுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் கலவையில் பெட்ரோலும், காற்றும் எந்த அளவுகளில் கலந்திருக்க வேண்டுமோ அந்த அளவுகளின் விகிதம் (அவற்றின் எடையின் அளவுகளில்) எடை விகிதம் — 15 : 1 கன அளவு விகிதம் -9600 : 1

air furnace: (வார்.) காற்று உலை: நெகிழ்வு இரும்பு வார்ப் படங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படக்கூடிய ஒரு வகை உலை.

air glow: காற்றுப் பிறங்கொளி: மேல்வாயுமண்டலத்தில் ஏற்படும் இயற்பியல்-வேதியியல் வினைகள் காரணமாக எழும் காற்றுத் தூசியிலிருந்து வெளிப்படும் மங்கலான ஒளி

air gap: (மின்) காற்று இடைவெளி: முற்றிலும் காற்று நிறைந்துள்ள ஒரு சுற்றோட்டத்தில் உள்ள ஒர் இடைவெளி. ஒரு மின்விசைப் பொறியிலுள்ள ஒரு காற்று இடைவெளியைப் போன்றது

air gap: (மின்.) காற்று இடைவெளி நெறி: உந்து பொறி-உள் வெப்பாலைகளில் அனற்பொறியூட்டும் அமைவுகளிடையிலான காற்று இடைவெளி;மின்பேராற்றலைக் கட்டுப்படுத்தும் துணையாற் றல் அமைவின் மின்னகத்திற்கும் மின் சுருளுக்குமிடையிலான இடைவெளி

air gun: (க.க.) காற்றழுத்தத் துப்பாக்கி: அழுத்தம் பெற்ற காற்றின் உந்து விசையால் இயக்கப்படும் துப்பாக்கி, இது மேற்பரப்பில் பசைப் பொருள்களை ஒட்டச் செய்யப் பயன்படுகிறது

air hammer: (எந்.) காற்றுச் சுத்தியல்: அழுத்தப்பட்ட காற்றின் வாயிலாகச் சுத்தியலின் தலை முனை இயக்கப்படும் ஒரு கருவி. இந்தக் கருவியினுள் ஒரு நெளிவு குழாய் வழியாகக் காற்று செலுத்தப்படுகிறது. இச்சுத்தியலுக்குள் காற்றைச் செலுத்தவும் நிறுத்தவும் ஒரு விசை வில் உண்டு

air hardening: (எந்.) காற்றுவழிக் கடினமாக்கல்: மிக விரைவு எஃகினைக் காற்றூதி மூலமாகக் கடினமாக்குதல்

air hoist: (எந்.) காற்று உயர்த்தி: அழுத்தப்பட்ட காற்றின் மூலம் இயக்கப்படும் ஒர் உயர் சாதனம்

air horn: (எந்.) காற்று நுழை முனை: உள் வெப்பாலையில் எரி பொருளாவியோடு காற்றினைக் கலக்கச் செய்யும் அமைவில் காற்று நுழைவதற்குரிய முனை

air inductor: (மின்.) காற்று மின்னோட்டத் தூண்டுகருவி : ஒரு காந்த மையம் இல்லாத மின்னோட்டத் தூண்டுகருவி

air line: (வானூ.) வானூர்திப் போக்குவரத்து:

(1) வானூர்திப் போக்குவரத்திற்காக நிறுவப் பட்ட ஒரு நிறுவனம், அதன் சாதனங்கள் அல்லது வானூர்திப் போக்குவரத்தினை உடைமை கொண்டிருக்கின்ற அல்லது இயக்குகின்ற நிறுமம்

(2) இரு முனைகளுக்கிடையிலான பெரும் வட்டப் பாதை.

air lock: (தானி.) காற்றுத் தடை: நீர் அல்லது வாயு செல்லும் குழாயில் ஏதோ ஓரிடத்தில் காற்றுக் குமிழ் தேங்குவதால் உண்டாகும் தடை

air log: (வானூ.) காற்று அளவு மானி: காற்றை எதிர்த்துப் பயணம் செய்யும் ஒரு வானுர்தியின் நீள் பயணத்தை அளவிடும் கருவி

airometer: காற்றுமானி: காற்று வீச்சின் விகிதத்தை அளவிடுவதற்கான கருவி

air plane: (வானூ.) வானூர்தி: காற்றைவிடக் கனமான ஒரு வானூர்தி. இதற்கு நிலையான இறகுகளும், எரியாற்றலால் இயங்கும் செலுத்தியும் பொருத்தப்பட்டிருக்கும்

airplane dope: (வானூர்.) வானூர்தி வண்ண மெருகு: வானூர்திகளில் கட்டுமான மேற்பரப்புகளில் பூசப்படும் ஒருவகைத் திரவப் பொருள். இப்பொருளால் மேற்பரப்பின் வலிமை அதிகரிக்கிறது: சுருங்குதல் மூலமாக விறைப்பினை உண்டாக்குகிறது; காற்றிறுக்கத்தை நிலைப்படுத்தும் ஒரு நிரப்பியாகவும் செயற்படுகிறது

airplane tail: (வானூ.) வானூர்திவால்: ஒரு வானூர்தியின் பிற்பகுதி சாதாரமாக நிலைப்படுத்தக்கூடிய நிமிர் நேர் விளிம்புடைய தகடுகளைக் கொண்டு, இதனுடன் உயர்த்திகள், சுக்கான்கள் போன்ற கட்டுப்பாட்டுப் பரப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

air pocket: (வானூ.) காற்று வெற்றிடம்: காற்றழுத்துக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலே வானூர்தி சட்டென்று இறங்க நேரிடும் காற்று வெறுமை

airport beacon: (வானூ.) வானூர்தி நிலையத்து வழிகாட்டி ஒளிவிள்க்கு: வானுர்தி நிலையத் தின் பொதுவான அல்லது திட்டவட்டமான அமைவிடத்தைக் குறித்துக் காட்டும் நோக்கத்திற்காக வானூர்தி நிலையத்திலோ, அதன் அருகிலோ அமைக்கப்பட்டுள்ள மிகுந்த விளக்கொளி வாய்ந்த ஒரு வழிகாட்டி ஒளிவிளக்கு

air resistance: (தானி.) காற்றுத்தடை: ஒர் ஊர்தி காற்றை ஊடுருவிச் செல்வதைத் தடுக்கும் விசை

air scoop: (வானூ.) காற்றுவாரி: வானூர்தியிலுள்ள காற்றறைப் பை; உள்ளெரி எஞ்சின்கள், பல்கணிகள் ஆகியவற்றில் காற்றழுத்தத்தை நிலைப்படுத்துவதற்காகவும், காற்றினைப் பிடித்து வைத்துக் கொள்வதற்காகவும் அமைந்துள்ள காற்றுவாரி அல்லது கவிகை

airship: (வானூ.) விண்வெளிக்கலம்: வானூர்தியைவிட எடை குறைந்த ஒரு விண்வெளிக்கலம். இதில் இயக்குப்பொறியும், கட்டுப்பாட்டு அமைப்பும் அமைக்கப்பட்டிருக்கும். இதன் இயக்குப் பொறி இயங்காதபோது அது ஒரு சுதந்திரமான பலூன் போன்று செயற்படுகிறது


airship station: (வானூ.) விண்வெளிக்கல நிலையம்: விண்வெளிக்கலங்களை இயக்குவதற்கும் அவற்றின் தேவைப்பாடுகளை நிறைவுசெய்வதற்கும் தேவையான சாதனங்களையும், கூடாரங்கள், பாய்மரங்கள், வாயுப்பொறிகள், பட்டறைகள், தரையிறங்கும் களங்கள் ஆகியவற்றையும் உடைய ஒரு நிலையம்

air shower: (விண்.) காற்றுத்தாரை: வாயுமண்டலத்தில் காணப்படும் மின்காந்த நுண்ணலைத்துகள்களின் ஒரு தொகுதி

air slaked lime: (வேதி.) காற்றில் நீற்றிய சுண்ண நீர்க்கலவை: காற்றில் திறந்து வைத்து ஹைட்ராக்சைடாகவும், கார்பனேட்டாகவும் மாற்றப்பட்ட சுண்ண நீர்க் கலவை. நீரில் நீற்றிய சுண்ண நீர்க் கலவை பயன்படுத்தப்படும் பல காரியங்களுக்கு இது பெரிதும் பயன்படக் கூடியது

air space: (மின்.) காற்று இடைவெளி: ஒரு நேர் மின்னாக்கியில் (டைனமோ) அல்லது மின்னோடியில்(மோட்டார்) உள்ள, காந்தப்புலத்தின் முனை முகங்களுக்கிடையிலான திறந்த இடைவெளி

air speed: (வானூ.) காற்றுவேகம்: காற்றை எதிர்த்து வானூர்தி செல்லும் வேகம்

air speed head: (வானூ.) காற்று வேகத் தலைமுனை மானி: காற்றினை எதிர்த்துச் செல்லும் வானூர்தியின் வேகத்தை அளவிடுவதற்கு ஒர் அளவியுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி

air-speed indicator: (வானூ.) காற்று வேகம் காட்டும் கருவி: காற்றினை எதிர்த்துச் செல்லும் வானூர்தியின் வேகத்தைச் சுட்டிக் காட்டும் ஒரு கருவி

air spring: (தானி:எந்.) காற்று வில்சுருள்: மிகுந்த திறன் வாய்ந்த அதிர்ச்சி தாங்கிக்கு மற்றொரு பெயர். எண்ணெயும் காற்றும் அடங்கியுள்ள ஒரு நீள் உருளையில் ஒரு குண்டலம் இயங்குகிறது

airtight: காற்று இறுக்கம்: காற்று உட்புகவோ வெளியேறவோ இயலாதபடி இறுக்கமாக அமைக்கப்பட்டது அல்லது அடைப்பிடப்பட்டது air tunnel: (குளி.) காற்றுப் புழை வழி: வலிந்து காற்றோட்டம் ஏற்படுத்தப்பட்ட ஒரு குளிர் பதனாக்கப் புழைவழி. இதன் வழியாகப் பொருள்களைச் செலுத்தும் பொழுது பொருள்கள் விரைவாகக் குளிர்ச்சியடைந்து உறைந்து விடுகின்றன

air washer: காற்று அலம்பி: காற்றைத் தூய்மைப்படுத்தவும், ஈரப்பதமாக்கவும் பயன்படும் நீர் தெளிக்கும் அமைவு

airway : (வானூ.) வானூர்தித்தடம்: சட்டப்படி நிலை நாட்டப்பட்ட வானூர்தி வழித்தடம்

airway beacon: (வானூ.) வானுர்தித் தட வழிகாட்டி: ஒளி விளக்கு: வானுர்தித் தடத்தின் அமைவிடத்தைக் குறித்துக் காட்டும் நோக்கத்திற்காக ஒரு வானூர்தித் தடத்தில் அல்லது அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள மிகுந்த விளக்கொளி வாய்ந்த வழிகாட்டி ஒளிவிளக்கு. இது வானூர்தி நிலையத்து வழிகாட்டி ஒளிவிளக்கிலிருந்து வேறுபட்டது

air worthiness:(வானூ. ) வானில் பறக்கும் தகைமை: வழக்கமான பறக்கும் நிலைமைகளில் வானில் இயங்குவதற்கு ஒரு வானூர்தியின் பொருத்தமுடைமையினையும் பாதுகாப்புடைமையினையும் குறித்துக் காட்டும் இயல்பு

aisle: (க.க.) இடைக்கழி: தேவாலயத்தில் அல்லது கூட்டம் நடைபெறும் அறையில் சூழிருக்கைகளுக்கு அல்லது இருக்கைகளுக்கு இடையில் உள்ளது போன்ற ஊடுவழி

alabaster: (கனி.) நிலாக் காந்தக் கல் அல்லது வெண் சலவைக் கல்: வெண்ணிறமான அல்லது வழ வழப்பாக மெருகேற்றிய கனிமக் கல் மணி

albany sand: (உலோ.) வெண்மணல்: வார்ப்பட வேலைக்குப் பயன்படும் ஒருவகை மணல்

albedo:(விண்) ஒளிபரப்பும்திறன்: கோளங்களின்மீது படும் ஒளியின் அளவுக்கும் மின்காந்தக் கதிர்வீச்சு மூலம் அது திருப்பியனுப்பும் ஒளியின் அளவுக்குமுள்ள விகிதம்

albertite: (கனி) ஆல்பெர்ட்டைட்: பளபளப்பான மையின் கரு நிறமுடைய, உடையத்தக்க, இயற்கைப் புகைக் கீல் (கருங்காரை)

albino: பாண்டு நோய்: தனது உடலில் வழக்கமான கருநிறமூட்டும் பொருளைக் கொண்டிராத மனிதர். இவருடைய முடி வெண்மையாக இருக்கும். கண்கள் கருஞ் சிவப்பாகும். இவர்களுக்கு ஒளிரும் வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசும், விலங்குகளுக்கும் இந்நோய் பிடிப்பதுண்டு

album: சேகர ஏடு: ஒளிப்படங்கள், கையெழுத்துள்ள மேற்கோள்கள், அஞ்சல் தலைகள் முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்குரிய செருகேடு

albumen plate: வெண்கருந் தகடு: கல்லச்சுக்கலையில் பயன்படுத்தப்படும் இரு குருமிகையேற்றிய முட்டைக் கரைசலினால் ஒளியுணர்வூட்டப்பட்ட ஒரு தகடு

albuminoids : ஊன்புரதம்: கருப்புரதம் போன்ற, ஆனால் கரையாத பொருள். தலைமுடி நகங்கள் போன்றவை இதனாலானவை. சிறுநீரில் கருப்புரதம் இருந்தால், சிறுநீரக நோய் இருப்பதற்கு அறிகுறியாகும்

alchemy: (வேதி.) இரசவாதம்: மத்திய காலத்தில் புழக்கத்திலிருந்த ஒருவகை வேதியியல் முறை. மட்ட உலோகங்களை பொன்னாக மாற்றுவதும், நோய்களைக குணப்படுத்துவதும் இந்த வேதியலின் நோக்கம் alcohol: (வேதி.) வெறியம்; சாராயம்; ஆல்கஹால்: C2H2OH. இது தானியங்களிலிருந்து தயாரிக்கப் படும் மெதில் ஹைட்ராக்சைடு அல்லது மெத்தனால் என்பதிலி லிருந்து வேறுபட்டது.

alcove: (க.க.) கவிகை மாடம்: ஒரு பெரிய அறையின் ஒதுக்குப்புறம். இது பொதுவாக ஒரு வில் வளைவு மூலம் பிரிக்கப்ப்ட்டிருக்கும்

aldehyde : (வேதி.) ஆல்டிஹைடு: CH2CHO. இது ஒர் அடிப்படைச் சாராயத்தின் முதலாவது உயிரக இணைவுப் பொருள்

algae: கடற்பாசிகள்: மலர்களோ வேர்களோ இல்லாத தாவர வகை. எனினும், கடற்கோரை போன்ற சில தாவரங்களில் பாறையைப் பற்றிக் கொள்வதற்கு உறுப்புகள் உண்டு. இவற்றில், தாவரங்கள் கார்பன்டையாக்சைடிலிருந்தும் நீரிலிருந்தும் சர்க்கரையைத் தயாரித்துக் கொள்ள உதவும் பச்சையம் உள்ளது. ஈரணு நுண் பாசி போன்றவை மிகச்சிறியவை; கடல் தாவரங்கள் போன்றவை மிகப்பெரியவை. தேங்கிய நீர் நிலைகளில் மிதந்து செல்லும் மிக நுண்ணிய பாசி வகைகளில் பச்சையம் உண்டு

algebraic symbols : (கணி) இயற்கணிதக் குறியீடுகள் : கணிதத்தில் சில செயற்முறைகளையும், கணக்கீடுகளையும் குறிப்பதற்குப் பயன்படும் மரபுக் குறியீடுகள். எழுத்துகள், அடைப்புக் குறிகள் முதலியன

alginates : ஆல்ஜினேட் : ஒரு வகைக் கடற்கோரையிலிருந்து தயாரிக்கப்படும் பொருள். இது குளிர்பாலேடு, முகக்குழம்பு, தீப்பிடிக்காத பொருள்கள், செயற்கைப்பட்டு போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது

align : (தானி.) வரிசைப்படுத்து: உருளைகளை ஒன்றோடொன்று பொருந்துமாறு வரிசைப்படுத்துதல்

alignment : (எந்.) வரிசைப்படுத்துதல் : கடைசல் எந்திரத்தின் மையங்கள் நீண்டவாக்கில் துல்லியமாகவும், ஒரு சீராகவும் ஒருங்கிணைவாகவும் அமையுமாறு வரிசைப்படுத்துதல். எந்திரச் சுழல் தண்டின் மற்றும் சுழல் தண்டு தாங்கிகளின் ஊடச்சுத் தொடர்ச்சிக்கும் பொருந்தும். இரண்டு அல்லது மூன்று முனைகளின் வழியாக ஒரே நேர்கோட்டில் சரியமைவு செய்தல்

alignment : ஒருநிலைப்படுத்துதல் : எந்திரங்களில் உறுப்புகளை ஒரே வரிசையில் ஒரு நிலைப்படுத்துதல்

alignment (வரை.) சரியமைவு: பல்வேறு வடிவளவுள்ள எழுத்துருக்களை அவற்றின் முகப்புகள் ஒரே வரிசையில் அமையுமாறு சரியமைவு செய்தல்

alignment tool: (மின்.) சரியமைவுச் சாதனம் : ஒத்தியைவுறுத்தப்பட்ட சுற்றுவழிகளைச் சரியமைவு செய்யும் போது மையச் சலாகைகளையும் மின்னியல் உறைகலன்களையும் சரியமைவு செய்வதற்கான, மின்கடத்தாத, திருகுவகையிலான ஒரு சாதனம்

alive : (மின்.) இயக்கமுள்ள (1) மின்சாரம் பாயும் சுற்றோட்டத்தை அல்லது வெவ்வேறு அளவு ஆற்றலுள்ள, அண்டையிலுள்ள் இரண்டு தொடர்புகளைக் குறிக்கும் சொல் (2) கலைக்கப்படாமல் வைத்திருக்கப்பட வேண்டிய அச்சுக்கோத்த பொருட்கூறு

alizarin : (வேதி.) செஞ்சாயப் பொருள் : பருத்தி, கம்பளி, பட்டு முதலியவற்றுக்குச் சாயமிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் பளிங்கு போன்ற வண்ணக் கூட்டுப் பொருள். இது மஞ்சள் முதல் ஆரஞ்சு வரையிலான வண்ணத் தில் இருக்கும்

alkali : (வேதி.) காரப்பொருள் : இது ஒரு வலுவான உப்பு மூலம். ஒரு உப்பு மூலம், நீரில் கரையும் போது ஹைட்ராக்சில் என்ற மின் மியத் துகள்களை (அயனிகள்) உண்டாக்குகிறது

alkaline battery; (மின்.) கார மின்கலம்: இதனை 'எடிசன் மின் கலம்' என்றும் கூறுவர்.இதில் சோடியம் அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு மின்பகுப்புக்கு உதவும் நீர்மப்பொருளாகப் பயன்படுகிறது. வினைத்திட்பம் வாய்ந்த நிக்கல் ஆக்சைடு துணுக்குகளும், இரும்புத்தூளுங்கூட இதில் பயன்படுகின்றன

alkaloids: . வெடியக் கலப்புப் பொருள்: தாவரங்களிலிருந்து பெறப்படும் கரிம ஆதாரமுடைய பொருள்களின் வகை. புகையிலிருந்து கிடைக்கும் நிக்கோட்டின், ஊமத்தையிலிருந்து பெறப்படும் ஹயோசின், கோக்கைன், கொய்னா, அபினி, எட்டிச்சத்து போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை. இவை மனித உடலில் முக்கிய விளைவுகளை உண்டாக்குகின்றன. இவற்றால் தாவரத்திற்கு என்ன பயன் என்பது சரியாகத் தெரியவில்லை

alkanet:- (வேதி.) செஞ்சாயச் செடி: இது செஞ்சாயம் தரும் வேரையுடைய செடிவகை. மத்திய தரைக் கடற்பகுதியிலும், ஹங்கேரியிலும், மேற்கு ஆசியாவிலும் பயிராகும் இந்தத் தாவரம், ஒருவகைச் சிவப்பு வண்ணப் பொருளை விளைவிக்கிறது

alkyd resins: (வேதி. குழை.) ஆல்கிட் ரோசணம்: அரக்குச்சாயம், வண்ணங்கள், உலோக மெருகெண்ணெய்கள் ஆகியவற்றில் இந்த வகை ரோசணம் பயன்படுகிறது

allagation: (கணி.) கலவை மதிப்புக் கூற்றுக் கணிப்பு: ஒரு கலவையில் அடங்கியுள்ள அமைப்பான்களின் விலைகள், அவற்றின் விகிதங்கள், கலவையின் விலை ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினைக் கண்டறிவதற்கான முறை அல்லது விதி

allen screws: (எந். ) ஆலன் திருகு: தலைமுனையில் அறுகோணமுடைய குதை குழிகளைக் கொண்ட தலைமுகட்டுத் திருகுகளும், செங்கோண முக்கோண திருகுகளும்

allen wrench: (தானி.) ஆலன் திருகுக் குறடு: தலைப்பகுதியில் புழையிட்ட அறுகோண வடிவத் துவாரத்துடன் தொடர் திருகுகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தனி வகைத் திருகுக் குறடு

allergy: ஒவ்வாமை; உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவாக வீக்கம், இழைம அழிவு ஆகியவை உண்டாதல். சிலருக்குப் பூச்சிகடிகள் ஒத்துக்கொள்வதில்லை. சிலருக்கு குதிரை மயிர் ஒத்து வராது

all-geared drive : (எந்.) அனைத்துப் பல்லிணை இயக்கி : வார்ப்பட்டைகளுக்கும் கிப்பிகளுக்கும் பதிலாக முற்றிலும் பல்லினைகளைக் கொண்டே ஒர் எந்திரத்தில் ஊட்டத்திற்கும் வேகத்திற்கும் ஆற்றலை அனுப்புதல்

alligator clip : முதலை தாடைப் பிடி ஊக்கு : தற்காலிக மின்கம்பி இணைப்புகளைக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் முதலைத் தாடை போன்றிருக்கும், விற்சுருளால் இயங்கும் பிடிப்பு ஊக்கு alligator, wrench : முதலைத் தாடைத்திருகுக் குறடு: முதலைத் தாடை போன்று V-வடிவத் தாடை கொண்ட திருகுக் குறடு

alligatoring : (வண்ணம் மற்றும் ஆரக்குச் சாயம்) கீறல் வெடிப்பு: மேற்பரப்பு அடுக்கில் மட்டுமுள்ள கீறல் வெடிப்புகள். வெப்பநிலையில் திடீரென ஏற்படும் மாறுதல் காரணமாக உண்டாகும் சுருக்கம். பிணிப்பு இன்மை, ஒரு படலத்திற்கும் இன்னொரு படலத்திற்குமிடையில் உலர்வதற்குப் போதிய நேரம் இல்லாமை, போதிய அளவில் ஊடுருவாமை, மென்மையான படலத்தின் மீது கடினமான படலத்தைப் பூசுதல் போன்றவை காரணமாக இந்தக் கீறல் வெடிப்புகள் மேன்மேலும் விரிவடைகின்றன

allotropic : (உலோ.) அனுத் திரிபுள்ள : பொருண்மை மாறாமல் அணு அமைப்பு மட்டும் மாறும் மறுவடிவம்; ஒரு தனிமம் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வெல்வேறு வடிவங்களில் இருக்கும் நிலை

allotropic : (வேதி.) அனுத் திரிபுள்ள : ஒரே பொருள் ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களையுடையனவாக இருத்தல் எடுத்துக்காட்டு: கரிமத்தின் வடிவங்களான வைரம் மற்றும் நிலக்கரி

allover pattern : (கலை.) முழு மயப்பாங்கம்: ஒரு மேற்பரப்பு முழுவதிலும் ஒரே பாங்கம் திரும்பத் திரும்ப வருமாறு அமைத்தல்

allowance (எந்.) கழிவிடையீடு: கரட்டுத்தள உருளைகளிடையே வேண்டுமென்றே விடப்படும் குறும இடைவெளி அல்லது பெரும இடையீடு

allowance : ( உலோ.) இசைவளவு : இணையும் உறுப்புகளிடையிலான பரிணாமங்களில் வேண்டுமென்றே அமைந்த வேறுபாட்டளவு

alloy:( உலோ.)உலோகக் கலவை:

(1) வெள்ளை உலோகம். உராய்வு தடுப்பு உலோகக் கலவை

(2) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களின் ஒரு சீரான கலவை. பொதுவாக ஒர் உயர்ந்த உலோகத்துடன் ஒரு மட்ட உலோகத்தைக் கலத்தல்

(3) செயற்கை ரோசணங்களின் கலவை (குழைமவியல்)

alloy steel : ( உலோ. வே.) கலவை எ.கு: மாங்கனிஸ், நிக்கல், டங்ஸ்டன், மாலிப்டினம், வனேடியம், குரோமியம் போன்ற உலோகங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களுடன் எஃகைக் கலந்து தயாரிக்கப்படும் எஃகுக் கலவை. இந்தக் கலவை எஃகு, வலுவாகவும் கடினமாகவும் இருக்கும்

all - rowlock wall : (க. க. ) அனைத்து உலகமிண்டுச் சுவர்: இரு புறமும் சுவர் முகப்பு நீளவாட்டுக் கிடைச் செங்கற்களால் கட்டப்பட்டுள்ள ஒரு சுவர். இதில் முனை மாற்றி மாற்றிச் சுவரின் முன் பகுதிக்குச் செங்கோணத்தில் கல் அல்லது செங்கல் பொருத்தப்பட்டிருக்கும்

alluviul : வண்டல் மண் : ஆறுகளில் படியும் வண்டல்மண்

almandite : ( கனி.) செம்மணிக்கல்: செந்நிற ஒண் மணிக்கல். கனிமத்தில் ஒருவகை. காகிதத்திலும் துணியிலும் தேய்த்து மெருகேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுவது

alnic : (உலோ.) அல்னிக்: அலுமினியம் நிக்கல், கோபால்ட் ஆகியவற்றின் கூட்டிணைவினால் உண்டான ஒர் உலோகக் கலவை. சிறிய நிரந்தர்க் காந்தங்கள் செய்யப் பயன்படுகிறது. இந்தக் கூட்டிணைவு இந்த உலோகக் கலவைக்கு மிக அதிகமான தேக்கி வைப்பாற்றலை அளிக்கிறது

alnico: (மின்.) அல்னிக்கோ : சிறிய நிரந்தரக் காந்தங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒரு தனிவகை உலோகக் கலவை

alpaca : அல்பாகா (விலங்.) ஒட்டக இனத்தைச் சேர்ந்த தென் அமெரிக்க விலங்கு வகை. இதற்கு நீண்ட பட்டுப் போன்ற முடி உண்டு

alpha : ஆல்ஃபா :

(1) கிரேக்க நெடுங்கணக்கில் முதலெழுத்து

(2) இணைந்துருவாகிய ஒரு வடிவம் (வேதியியல்) ஒரே எடையுடன் ஒரே வகைத் தனிமங்களை ஒரே சீரான வீதங்களில் ஆனால் வெவ்வேறு தொகுப்புகளாகக் கொண்டுள்ள சமநிலைக் கூட்டிணைவுகள் அல்லது மாற்றமைவுகளிலிருந்து மாறுபட்டது

alpha particle : ஆல்ஃபா துகள் : கதிரியக்கப் பொருள்களிலிருந்து வெளியேற்றப்படும் அணு நுண்மம். ரேடியம், யுரேனியம், புளுட்டோனியம் போன்ற கதிரியக்கப் பொருள்கள் இத்தகைய அணுத்துகள்களை வெளியிடுகின்றன. ஆல்ஃபா துகள் என்பது, ஹீலியம் அணுவின் கருமையம் போன்றது

alpha particle : (மின்.) ஆல்ஃபா துகள் : கதிரியக்கச் சிதைவின் போது கதிரியக்கப் பொருள்களிலிருந்து வெளியேற்றப்படும் இரண்டு புரோட்டான்களும் இரண்டு நியூட்ரான்களும் கொண்ட அணுத்துகள்

alpha particle : (வேதி; இயற்.) அணு நுண்மம் : கதிரியக்கப் பொருள்களிலிருந்து வெளியேற்றப்படுவது. இதில் இரு நியூட்ரான்களும், இரு புரோட்டான்களும் அடங்கியிருக்கும்

alpha rays : (வேதி; இயற்.) அல்ஃபா கதிர்கள் : கதிரியக்கப் பொருள்களிலிருந்து வெளிவரும் அணு நுண்ம வரிசைகள். கதிரியக்கப் பொருள்கள் வெளிப்படுத்தும் மூன்று வகைக் கதிர்களில் இதுவும் ஒன்று

altar : (க.க.) பலி பீடம் : இக்காலத்தில், தேவாலயங்களிலுள்ள வழிபாட்டுத் திருவினைக்குரிய இடம். பண்டைக் காலத்தில் தெய்வங்களுக்குப் பலியிடுவதற்கும் காணிக்கைகளைப் படைப்பதற்கும் பயன்பட்ட பீடம்

alternating current or a.c. : (மின்.) மாற்று மின்னோட்டம் : விரைவாகவும், ஒழுங்கான இடைவெளிகளிலும் மின்னோட்டத் திசையை மாற்றிக்கொண்டு மாறி மாறிப்பாய்கிற மின்னோட்டம். பொதுவாக வினாடிக்கு 120 தடவைகள் இந்த மாற்றம் நடைபெறும்

alternating-current arc : (மின்.) மாற்று மின்னோட்டச் சுடர் : மாற்று மின்னோட்டத்தினால் உண்டாகும் ஒரு சுடர். இந்தச் சுடரில் கார்ப்ன்கள், மொத்தமாக எரியாமல், மெழுகுதிரியின் இழையைப் போல் எரிகின்றன. இது ஒளி, கிடைமட்டத்தில் பரவ அனுமதிக்கிறது

alternating current arc welding : மாற்று மின்னோட்டச் சுடர்ப் பற்றவைப்பு : மாற்று மின்னோட்டம் மூலம் உண்டாகும் சுடரில் பற்றவைக்கும் முறை.

alternating current motor : (மின்.) மாற்று மின்னோட்ட மின் னோடி : தனிநிலை அல்லது பன்னிலை வகையைச் சேர்ந்ததும், மாற்று மின்னோட்டத்தினால் இயக்கப்படுவதுமான ஒரு வகை மின்னோடி

alternating Current transformer : (மின்.) மாற்று மின்னோட்ட மின்மாற்றி : மாற்று மின் சுற்றின் மின்னழுத்தத்தின்ன் கூட்டவும் குறைக்கவும் பயன்படும் ஒரு சாதனம்; இதில் ஒரு அடிப்படைச் சுருணையையும், ஒரு துணை நிலைச் சுருணையையும் உடைய ஒரு துரண்டு சுருள் இருக்கும். அது ஓர் இரும்பு உட்புழையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்.

alternating current transmission: (மின்.)மாற்று மின்னோட்டச் செலுத்தீடு: மாற்று மின்னோட்டத்தைப் பயன்படுத்தி மின் விசையை செலுத்தீடு செய்தல்

alternation: (மின்.) மாறி மாறித் தொடர்தல்: மாற்று மின்னோட்டத்தினால் உண்டாகும் மாறுதல்கள். இதில், மின்னழுத்தம், மிகக் குறைந்த அளவிலிருந்து மிக அதிகமான நேர்முனை அழுத்தத்திற்கு உயரும் பின்னர் பூச்சியத்திற்கு இறங் குழ் மறுபடியும் மிக அதிகமான எதிர்முனை அழுத்தத்திற்கு உயரும். இவ்விதம், இருமுறை முழு மையாக மாறுவதே ஒரு சுழற்சி அலைவு எனப்படும்

alternator (மின்.) மாற்று மின்னாக்கி : மாற்று மின்னோட்டத்தை உண்டாக்கும் ஒரு மின்னாக்கி

altimeter : (விண்.) உயரமானி : வாயுமண்டல அழுத்தத்தின் மூலம் உயரத்தைக் காட்டும் உயரமானி

altigraph : (வானூ,) உயர வரையமைவு : பதிவு செய்யும் பொறியமைவினையுடைய ஒர் உயர மானி. இப்போதுள்ள சாதனங்கள் அனிராய்டு வகையின. இதில், கடிகார இயக்கத்தின்மூலம் பதிவாகும் வரைபடம். அடி அல்லது மீட்டர் கணக்கில் பகுக்கப்பட்டிருக்கும். இது உயரங்களைக் கணக்கிடுவதற்குரிய ஒர் அழுத்த வரைவியாகும்

altitude : குத்துயரம் : செவ்வுயர அளவு, மிக உயர்ந்த சிகரம்

alum : (வேதி.) படிக்காரம் : ஒரு கடுத்தமான கனிய உப்பு. அலுமினியம், பொட்டாசியம் ஆகியவற்றின் சல்பேட்டு அடங்கிய இரட்டைச் சல்பேட்டு

alumen : (உலோ.) அலெமென் : வலுவான அலுமினிய உலோகக் கலவை. இதனை காய்ச்சி உருக்கி, வடிவங்கள் உருவாக்கலாம். எந்திரத்தினால் இயக்கலாம். இது 88% அலுமினியமும், 10% செம்பும் கொண்டது. இது அலுமினியத்தைவிடக் கனமானது

aluminium oxide; அலுமினியம் ஆக்சைடு : அலுமினியத் தாதுவாகிய பாக்சைட்டை உயர்ந்த வெப்ப நிலையில் உருக்குவதன் மூலம் கிடைக்கும் கடினமானதும் கூர்மையானதுமான உராய்பொருள்

alumina, or oxide of aluminium : (வேதி.) அலுமினிய உயிரகை அல்லது அலுமினியம் ஆக்சைடு: தூய்மையற்ற அலுமினியக் கணிமக் கலவை மண் வகையில் ஒரு முக்கியமான அமைப்பான். இது, செங்கற்சூளை, உலைப் பூச்சுகள் ஆகியவற்றின் தகுதிறத்தை நிருணயிக்கக்கூடியது. 'அரக்கு வண்ணம்' எனப்படும் வண்ணப் பொருள் செய்யவும் பயன்படுகிறது. சாயவேலைகளிலும், காலிக்கோ அச்சு வேலைகளிலுங்கூடப் பயன்படுகிறது. உராய் பொருளாகவும் பெரிதும் பயனாகிறது. மிக அதிக விறைப்பாற்றல் வாய்ந்த உலோகங்கள், உலோகக் கலவைகளை வெட்டுவதற்கும், அவற் றுக்கு மெருகூட்டுவதற்கும் பயன்படுகிறது

aluminium: (கனி.) அலுமினியம்: மிக இலேசான, வெண்மையான உலோகம். இது தனியாகவும், செம்புடன் கலந்த உலோகக் கலவையாகவும் பயன்படுத்தப்படுகிறது

aluminium alloys : அலுமினியம் உலோகக் கலவைகள் : அலுமினியமும், செம்பு, நிக்கல், டங்ஸ்டன் முதலிய உலோகங்களும் இணைந்த கலவைகள். வலிமையுடன் கனமின்மையும் தேவைப்படும் வார்ப்புருவங்களையும், தகடுகளையும் தயாரிக்கப் பயன்படுபவை. இந்த உலோகக் கலவைகள். தூய அலுமினியத்தை விட மதிப்புடையவை

aluminium bronze : அலுமினிய வெண்கலம் : செம்பை அலுமினியத்துடன் பல்வேறு வீத அளவுகளில் கலந்து தயாரிக்கப்படும் ஒர் உலோகக் கலவை

aluminium bronze powder: (வண்.) அலுமினிய வெண்கலத்தூள் : கனிம உலோகங்களை நொறுக்கித் தூளாக்கும் ஆலையில் தயாரிக்கப்படும் நுண்ணிய அலுமினியத் தூள். வண்ண மெருகெண்ணெய் அல்லது நேந்திர எண்ணெயுடன் கலந்து, உலோகச் சாயமாகப் பயன்படுத்தப்படுகிறது

aluminium hydroxide : (வேதி.) அலுமினியம் ஹைட்ராக்சைடு AI(OH)2, ஊன் பசை போன்ற வெண்மையான திடப்பொருள் நீரைப் பயன்படுத்துவதற்கும், சாயந்தோய்ப்பதில் சாயத்தைக் கெட்டிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

aluminium stearate : (வண்; அரக்கு. வண்) அலுமினியம் ஸ்டியரேட் : வழவழப்பான சமதளத்தை உண்டாக்குவதற்காக அரக்குச் சாயங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது

alum leather : படிக்கத் தோல் : படிகாரத்தைப் பயன்படுத்திப் பதனிடப்பட்ட தோல்

amalgam: (கணி.) இரசக் கலவை: பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை

amalgamation : (மின்.) கூட்டுக் கலவை : வேதி மின்கலத்திலுள்ள துத்தநாகத் தகட்டுக்குப் பாதரசம் முலாம் பூசி, துத்தநாகத்திலுள்ள அசுத்தங்களிலிருந்து உண்டாகும் வினைகளைத் தடுக்கக்கூடிய ஒர் உலோகக் கலவையை உருவாக்குதல்

amber : (மின்.) அம்பர் : மஞ்சள் நிறமான அல்லது செம்பழுப்பு நிறமான, ஒளி ஊடுருவக்கூடிய ஒரு பிசின். இது மற்றொரு பொருளுடன் உராயும்போது உராய்வினால் மின்னேற்றம் பெறுகிறது

ambo : (க.க.) சொற்பொழிவு மேடை : தொடக்கக் காலக் கிறித்தவக் கோயில்களில் காணப்படும் சொற்பொழிவு மேடை.இதிலிருந்து வழிபாடுகளும், வழிப்பாட்டுப் பாடல்கள் பாடுவதும் நடைபெறும்

amboine: அம்போய்னா: கிழக்கு இந்தியாவில் காணப்படும் ஒரு மரம். இதிலிருந்து அழகிய வண்ண மரக்கட்டைகளும், பலகைகளும் தயாரிக்கப்படுகின்றன

ambroin : அம்பிராய்ன்: ஒருவகை மின் கடத்தாப் பொருள், குங்கிலியத்திலிருந்தும், சிலிக்கேட்டுகளிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. இது வலிமையானது; வெப்பத்தைக் கடத்தாதது; ஈரத்தை உறிஞ்சாதது; இது வார்ப்பு மின்காப்புகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது இது வன் கந்தகத்தைவிட மலிவானது

ambry : (க.க.) திருக்கலமாடம் : கிறித்தவக் கோயிற்சுவர்களில் வழிபாட்டுக் கலங்களை வைப்பதற்காக அமைந்துள்ள மாடம்

American bond : (க.க.) அமெரிக்கக் கவிகைப் பிணைப்பு : சாதாரணக் கவிகைப் பிணைப்புப் போன்றதே இதுவும். இதனை விரைவாக அமைக்கலாம். இந்த வகைக் கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகை மற்ற வகைக் கவிகைப் பிணைப்புகளை போலவே வலுவானது. ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறாவது வரிசையிலும் சுவரின் முன்பகுதிக்குச் செங்கோணத்தில் கல் அல்லது செங்கல் பொருத்தப்பட்டிருக்கும். மற்ற வரிசைகளில் சுவர் முகப்பு நீளவாட்டுக் கிடைச்செங்கல் அமைக்கப்பட்டிருக்கும்

American Screw gauge : (உலோ.) அமெரிக்கத் திருகுக் கடிகை : மரத்திருகுகள், எந்திரத்திருகுகள் ஆகியவற்றின் விட்டத்தைக் கணக்கிடுவதற்கான ஒரு அளவுத் திட்டக் கடிகை

American Standard Pipe Threads : அமெரிக்கச் செந்திறக் குழாய்த் திருதிழை : (முன்னர் பிரிக்ஸ் குழாய்த் திருகிழைச் செந்திறம் என அழைக்கப்பட்டது.) தேனிரும்பு அல்லது எஃகு, நீராவி, வாயு, நீர்க்குழாய்களில் இந்தத் திருகிழை பயன்படுத்தப்படுகிறது

American wire gauge: (உலோ. ) அமெரிக்கன் கம்பி அளவி : செப்புக் கம்பி, பித்தளைக் கம்பி, ஜெர்மன் வெள்ளிக் கம்பி ஆகியவற்றின் வடிவளவை அளவிடுவதற்கும், இந்தப் பொருள்களினாலான தகடுகளின் கனத்தை அளவிடுவதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்ட அளவு கருவி

amethyst : (கனி.) செவ்வந்திக் கல் : தெளிவான ஊதா அல்லது செங்கருநீல நிறப்படிகக் கல். நவரத்தினங்களில் ஒன்று amino : (குழை,) அமினோ : அம்மோனியாவிலிருந்து பெறப்பட்ட NH2, குழுமம் இருப்பதைக் குறிக்கும் வேதியியல் கூட்டுப் பொருளின் கூட்டிணைவு வடிவம்

amino plast : (வேதி. குழை.) அமினோ பிளாஸ்ட் : அமினோ அல்லது அமினோ கூட்டுப் பொருள்களிலிருந்து கிடைக்கும் செயற்கைப் பிசின் வகையைக் குறிக்கும் சொல். யூரியா-பார் மால்டிஹைடு இவ்வகைப் பிசினுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு

ammeter : (மின்.) மின்னாற்றல் மானி : ஒரு மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அழுத்தத்தினை அளவிடப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம்

ammonia : (வேதி.) நவச்சார ஆவி : நிறமற்ற, நெடி மிகுந்த, மூச்சைத் திணறடிக்கும் ஒரு வாயு (NH3). நிலக்கரி போன்ற நைட்ரஜன் பொருள்களை உலர் வாலை வடித்தல் மூலம் இதுபெறப்படுகிறது, நைட்ரஜனையும், ஹைட்ரஜனையும் இரும்புடன் சேர்த்து உயர் அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் இணைப்பதன் மூலம் அம்மோனியா பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது

ammonites : அம்மோனைட் : மரபிறந்து போன கடல் புதை படிவ நத்தை வகையின் தோடு

ammonium chloride: (வேதி.) அம்மோனியம் குளோரைடு : சாதாரணமாக நவச்சாரம் என அழைக்கப்படுகிறது. இது நீரில் கரைக்கப்பட்டு, சில அடிப் படை மின்கலங்களில் மின்பகுப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது

amnesia : மறதிநோய் : மூளையில் காயம்படுவதனாலோ, தீவிர உணர்ச்சிப் பெருக்கத்தினாலோ ஏற்படும் நினைவிழக்கும் நோய்

amnion : கருச்சவ்வு : குழந்தை பிறப்பதற்கு முன்பு கருவை அடுத்துள்ள இரு சவ்வுகளின் உட்பகுதி

amoeba : அமீபா : ஒரே உயிரணுவுடைய நீர்வாழ் உயிரினம். இது 1/100" குறுக்களவுடையது. இது தன் உடலின் ஒரு பகுதி வெளியே தள்ளி நகர்கிறது. இது தன்னைத் தானே பிளவு செய்து இனப்பெருக்கம் செய்கிறது


amorphous: வடிவமற்ற : (1) திட்டவட்டமான வடிவம் இல்லாதது; ஒழுங்கற்றது (2) (வேதியியல் குழைமவியல்) மணி உறுப்பெறா நிலை

ampere : (மின்.) ஆம்பியர் : மின்னோட்ட அலகு. ஒரு மின்னகம் ஒர் 'ஓம்' மூலமாகச் செலுத்தக்கூடிய மின்னோட்டம்

Ampere Andre Marie : ஆம்பியர் ஆண்ட்ரே மாரி : ஃபிரெஞ்சு இயற்பியலறிஞர் : அறிவியல் எழுத்தாளர் (1775-1836). மின்னோட்டத்தின் வலிமையை அளவிடுவதற்கான அலகுக்கு இவருடைய பெயர் (ஆம்பியர்) சூட்டப்பட்டுள்ளது

ampere hour : (மின்.) ஆம்பியர் மணி : சேமக் கலங்களின் திறன்வீதத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒருமணி நேரத்தில் ஒர் ஆம்பியர் மின்னோட்டம் பாய்வதை இது குறிக்கிறது

ampere-hour capacity : (தானி.) மணித் திறம்பாடு : ஒரு சேமக் கலத்தின் கொள்திறனைக் குறிக்கப் பயன்படும் சொற்றொடர். 100 ஆம்பியர் மணித் திறம்பாடுடைய ஒரு சேமக்கலம். ஒருமணி நேரத்தில் 100 ஆம்பியர் மின்னோட்டம் வழங்கக்கூடியதாக இருக்கும்

ampere meter : (மின்.) ஆம்பியர் மானி : மின்னாற்றல் மானி (ammeter) போன்ற ஒரு சாதனம், பாயும் மின்னோட்டத்தின் அடர்த்தியைப் பதிவு செய்வதற்குப் பயன்படுகிறது

ampere turn : ஆம்பியர் சுற்று : ஒரு மின் காந்தத்தின் வலிமையை அளவிடும் அலகு. காந்தத்தைச் சுற்றியுள்ள கம்பிச் சுற்றுகளின் எண்ணிக்கையை, அதன் வழியே பாயும் ஆம்பியர்களின் எண்ணிக்கையால் பெருக்கினால் இந்த அளவு கிடைக்கும்

amphibia : நிலநீர் வாழுயிர் : தவளைகள், தேரைகள, சலாமான்டர் போன்று நிலத்திலும் நீரிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள்


amphibian : (வானு.) நிலம், நீர் ஊர்தி : நிலம், நீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம். நிலத்திலிருந்து அல்லது நீரிலிருந்து உயரே எழுந்து பறக்கும் வகையில் அமைக்கப்பட்ட வானூர்தி

amplidyne : மின்திறன் பெருக்கி : ஒரு மாற்று மின்னோட்டப் பணிப்பு மின்னோடியை இயக்குவதற்கு, ஒரு நேர் மின்னாக்கியின் கள மின்னோட்டத்தில் ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டாலும் மின் உற்பத்தி அளவில் பெரும் மாறுதலை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப் பாட்டு அமைவு. இது பெருமளவு பாரத்தைப் போதிய அளவு முறுத்கத்துடன் நகர்த்துவதற்குப் பயன்படுகிறது

amplification factor : மிகைப்புக் கரணி : ஒரு மின்னழுத்தத்தை அதிகமாக்குகிற ஒரு வெற்றிடக் குழலின் தன்மை

amplifier : (மின்.) மிகைப்பி : வலுக்குறைந்த ஒலி அல்லது மின்னோட்டத்தின் ஆற்றலை அதிகப்படுத்தும் கருவி

amplitude : (கணி.) வீச்சு : (1) சில கணிதச் சமன்பாடுகளின் மதிப்பினை மாற்றக்கூடிய ஒரு கோணம். (2) (இயற்பியல்) ஒரு துகள் ஒரு முழு அதிர்வை முடிப்பதற்குச் செல்லும் தூரத்தின் அளவு

amplitude modulation : (மின்.) வீச்சின் ஏற்ற இறக்கம் : மின்விசைச் செலுத்தியில் மின்தாக்குதலின் ஆற்றலை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்தல்

ampoule : மருந்துச்சிமிழ் : தோலினுள் செலுத்தப்படும் ஊசி மருந்தினையுடைய சிறிய கண்ணாடிக் குப்பி


anacoustic zone : (விண்) ஒலியிலாமண்டலம் : 162 கி.மீ. உயரத்திற்கு மேலே விண்வெளியில் ஒலியில்லாமல் இருக்கும் அமைதி மண்டலம்

anaemia : குருதிச்சோகை : இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுவதால் உண்டாகும் இரத்தசோகை நோய். இந்த நோய் கண்டவர்கள் வெளிறிய தோற்றமுடன் நலிந்தும், சோர்ந்தும், தளர்ந்தும் காணப்படுவார்கள்

anaesthesia : உணர்ச்சியின்மை : உடலில் அறுவைச் சிகிச்சை செய்யும்போது உணர்ச்சி மயக்கமூட்டுதல் அல்லது உடலின் ஒரு பகுதியில் வலியை உணராதவாறு உணர்விழக்கச் செய்தல். மயக்கமடைவதற்குக் குளோரோஃபார்ம் போன்ற மயக்க மருந்துகளும், உடல் உறுப்பை உண்ர்விழக்கச் செய்ய கோக்கைன் போன்ற உணர்வின்மை ஊட்டும் பொருள்களும் பயன்படுகின்றன

anaesthetics : மயக்க மருந்து : உணர்விழக்கச் செய்திடும் மருந்து. குளோரோஃபார்ம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர்விழக்கச் செய்யும் மருந்தும் உண்டு. இதனை உறுப்பெல்லை உணர்வு நீக்கி என்பர். எடுத்துக்காட்டாக, ஒரு பல்லைப் பிடுங்க வேண்டுமானால், அந்தப் பல் இருக்கும் பகுதியை மட்டும் உணர்விழக்கச் செய்ய இந்த மருந்து கொடுக்கப்படும். பொது மயக்க மருந்து கொடுத்தால், நோயாளி மயக்கமடைந்துவிடுவார்

analogous colours : ஒப்புடை வண்ணங்கள் : ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடைய வண்ணங்கள். எடுத்துக்காட்டு: சிவப்பு, செம்மஞ்சள் நிறம், மஞ்சள், செம்மை நிறம் முதலியன

analog signal : ஒத்திசைவுச் சைகை : கணக்கிடுவதிலும், கட்டுப்பாடுகளிலும் பயன்படுத்தப்படும் ஒருவகைச் சைகை. இந்தச் சைகை காலத்தில் நுண்ணியதாகவும் அது குறித்திடும் மாறியல் மதிப்புருவின் விகிதாசாரத்திலும் அமைந்திருக்கும்

analogy : (மின்.) ஒத்திசைவு : பழகிப் போன நடைமுறையை அல் லது செய்முறையைத்தெளிவு கருதி ஒப்பிட்டுப் பார்த்தல்

analysis : (வேதி.) பகுப்பாய்வு : (1) ஒரு கூட்டுப் பொருளை அதன் தனித்தனிப் பகுதிகளாக அல்லது தனிமங்களாகப் பிரித்தல் (2) விவர அறிக்கையை அட்டவணைப்படுத்துதல்; ஒரு கணக்கை அதன் முதல் தொகைக்குக் கூறுபடுத்தித் தீர்த்தல்

analytical geometry : (கணி.) பகுப்பாய்வு வடிவ கணிதம் : வடிவ கணித உருவங்களை இயற்கணித முறையில் பகுப்பாய்வு செய்யும் முறை

analyzer : (தானி.) பகுப்பாய்வு கருவி : (1) உந்து ஊர்தியின் மின் சுற்று வழிகள், எஞ்சின், சுடரூட்டும் கருவி போன்றவற்றில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டு பிடிக்க உதவும் தானியங்கிச் சோதனைக் கருவிகளின் தொகுதி (2) மின்னணுவியல் சாதனங்களுடன் பொருத்தி பல்வேறு பணிகளைச் செய்யக்கூடிய பல அடிப்படைக் கருவிகளைக் கொண்ட சோதனைக் கருவிகளின் தொகுதி. இது தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது

anatomy: (உட.) உடற் கூறியல் : உடலின் எலும்புகள், தசைகள், நரம்புகள் போன்ற உள்ளுறுப்புகளைப் பகுத்தாராய்தல்

anchor : (க.க.) நங்கூரம் (தொல் பொருளியல்) : (1) நங்கூரத்தின் அல்லது அம்புகளின் இடையே வார்ப்படத்தாலான முட்டை வடிவப் பொருள்களை ஒன்றையடுத்து ஒன்றாகப் பதித்தமைத்த கூர்மையான அணிவகை

(2) நங்கூரம் தாங்கியுடன் இணைந்திருக்கிற வலிமைமிக்க குறுங்கணை அல்லது கொளுவி மாட்டுகிற சாதனம்

(3) ஓர் இரும்புச் சலாகையினை ஓரிடத்தில் பற்றி வைத்துக்கொள்வதற்கான ஒர் உலோக ஆதாரம்

anchor : (மின்.) பற்றுக்கோடு : தரையில் முளையிட்டு அடிக்கப்பட்ட ஒரு கோல் அல்லது மரமுளை. இதில் ஒரு கோபுரத்திற்கான ஆதாரக் கம்பிகள் பிணைக்கப்படும்

anchor bolt : (க.க.) நங்கூர மரையாணி : ஒரு முனை கான்கிரீட்டில் பதிக்கப்பட்டுள்ள ஒரு மரையாணி. இது, மரம், எஃகு உறுப்புகளை கான்கிரீட்டுடன் இணைப்பதற்குப் பயன்படுகிறது

anchorage : நங்கூரத் தளை : கட்டழைப்பு முழுவதற்கும் அதிக உறுதிப்பாட்டினை ஏற்படுத்துவதற்காக, ஒரு கட்டமைப்பின் அடித்தள அங்கங்கள் இணைக்கப்படலாகும் ஒரு நிரந்தரக் கட்டமைபபு

and circuit : (மின்.) மற்றும் மின்சுற்று வழி : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட உட்பாடுகளைக் கொண்ட ஒரு மின்சுற்று வழி. இதில் ஒரு வெளிப்பாட்டுச் சைகையினை உண்டுபண்ண உட்பாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும்

andiron : அடுப்பணைக்கோல் அல்லது விறகு தாங்கி : அடுப்பில் விறகுகளை ஏந்திவைப்பதற்குரிய ஒர் உலோகச் சட்டம். சில சமயங்களில் இது 'அடுப்புக் கட்டை' 'விறகு அணைக்கோல்' என்றும் அழைக்கப்படும்

anemometer : காற்று வேகமானி :

ஒரு காற்றோட்டித்தின் வேகத்தை அளவிடுவதற்குரிய ஒரு கருவி

arteroid altimeter : (வானூ.) நீர்மம் வழங்கா உயரமானி : அழுத்த வேறுபாடுகளைத் துல்லியமாகத் காட்டும் ஒரு மூலகத்தின் கோட்டத்தின் வாயிலாக உயரத்தை அளந்து காட்டும் உயரமானி

aneroid barometer : நீர்மம் வழங்கா பாரமானி : காற்று நீக்கப்பட்ட ஓர் உலோகப் பெட்டியின் நெகிழ் திறம்வாய்ந்த உச்சிமுனையின் அல்லது இடையீட்டுத் திரையின் அசைவுகளின் வாயிலாக வாயு மண்டலத்தின் அழுத்தத்தினைத் காட்டக்கூடிய சாதனம். கடல் மட்டத்திற்குமேல் உயரங்களைக் கண்டறிவதற்கும், வானிலை மாற்றங்களை முன்னறிவதற்கும் பயன்படும் கருவி

aneurism : (நோயி.) குருதிநாள அழற்சி : குருதி நாளத்தின் சுவர் வலுவிழந்து விடுவதால் குருதி நாளத்தில் ஏற்படும் அளவுக்கு மீறிய வீக்கம்

angina : (நோயி.) தொண்டை வீக்கம் : தொண்டையை நெறிப்பது போல் ஏற்படும் மூச்சுத் திணறல்

angina pectoris: (நோயி.) இடது மார்பு வலி : இதயத்திற்கு இரத்தம் வழங்கும் குருதி நாளம் குறுகலாவதன் காரணமாக இடது மார்பு வேதனை தரும் கடும் இதயவலி

angioma (நோயி.) குருதிக்கட்டி : இரத்த நாளங்களில் ஏற்படும் இரத்தக்கட்டு

angio spermaa : (தாவர.) மூடு விதைச் செடி : பெரும்பாலான பூக்குந் தாவரங்களைப் போன்று ஒரு விதைக் கூட்டினுள் விதைகள் முதிர்ச்சியடையும் தாவரங்கள்

angle (கணி.) கோணம் : இரு நேர்கோடுகளின் திசையிலுள்ள வேறுபாடு: ஒன்றையொன்று சந்திக்கும் இரு நேர்கோடுகளுக்கிடையிலான இடைவெளி. சுற்றுவட்ட இயக்கத்தை அல்லது சுழற்சியை அளவிடுவதற்குக் கோணங்கள் பயன்படுகிறது

angle bead: (க.க.) கோணமணி : இரண்டு சுவர்கள் செங்கோணங்களில் சந்திக்கும்போது ஏற்படும் ஒரு கோணத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வார்ப்படப் பட்டை

angle brace: (க.க.) கோண குறடு : ஒரு சட்டத்தின் மூலையில் துளையிடும் போது பயன்படுத்தப்படும் இடுக்கித் திருப்புளி

angle bracket: (க.க.) கோண ஏந்தற் பலகை : ஒன்றுக்கொன்று செங்கோணங்களிலுள்ள இரு முகங்களைக் கொண்ட ஒருவகை வளைவு தாங்கி, இதில் ஒரு வலையினைச் சேர்க்க, வலிமை மிகுதிப்படும்

angle dividers : (மர:வே.) கோணக் கவராயம் : கோணங்களை ஒத்த இரு பகுதிகளாகப் பிரிப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி. சில சமயம் மூலமட்டப் பலகையாகவும் பயன்படுத்தப்படுகிறது

angle of attack : (வானூ.) தாக்கு கோணம் : விமானதளத்தின் காற்றழுத்தத் தளத்தின் நாணுக்கும் அதன் இயக்கத்திசைக்குமிடையிலான கூர்ங்கோணம்

angle of compensation : (மின்.) சரியீட்டுக் கோணம் : வட்டாரக் காந்த ஆற்றலை ஈடுசெய்வதற்காக ஒரு திசையறி கருவியின் அளவீட்டில் பயன்படுத்தப்படும் ஒரு திருத்த கோணம் angle of compensation: சரியீட்டுக் கோணம்: ஒரு திசைகாட்டியில் உட்காந்த விளைவுகளைச் சரி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு திருத்த கோணம்

angle of deadrise : (வானூ.) நிலை எழுச்சிக்கோணம்: உடற் பகுதியின் அடித்தளத்தினை முதுகுத் தண்டுடன் இணைக்கும் ஒரு குறுக்கு வெட்டுக் கோட்டினால் கிடைமட்டத்துடன் உண்டாகும் கோணம்

angle of declination : (மின்.) பிறழ்ச்சிக் கோணம் : மாறுபாட்டுக் கோணம். ஒர் இடத்தின் பூகோள நெடுக்கு வரைக்கும் காந்தவியல் நெடுக்கு வரைக்குமிடையிலான கோணம்

angle of dip : (மின்.) இறக்க கோணம்: செங்குத்தான மட்டத்தளத்தில் திரும்புகிறபோது ஒரு காந்த ஊசி காந்தவியல் நெடு வரைக்கு நேரிண்மையாக வருகிற போது தொடுவானத்துடன் அந்தக் காந்தஊசி ஏற்படுத்துகிற கோணம்

angle of heel : (வானூ.) சாய் நிலைக்கோணம் : ஒரு கிடைமட்டத்தளத்திற்கும் நீரில் கடல் மட்டத் தளத்தின் பக்க அச்சுக்குமிடையிலான கோணம்

angle of incidence : (வானூ.) படுகோணம்: வீழ்தடத்தில் பரப்பின் செங்கோட்டுடன் தொடு கோடு கொள்ளும் கோணத் தொலைவு

angle of inclination : (எந்.) சாய்வு கோணம் : ஒரு திருகுபுரி அதன் அச்சுடன் கொள்ளும் கோணத் தொலைவு

angle iron: (எந்.) கோண இரும்பு: ஒரு கட்டுமான இரும்புப் பட்டை. இதன் ஒரு பகுதி ஒரு செங்கோண வடிவில் அமைந்திருக்கும்

angle of lag (மின்.) பின்னடைவுக் கோணம் : மாற்று மின்னோட்டச் சுற்றில் செயல்திற அமைப்பானின் இயக்கப் படிநிலை. மொத்த மின்னோட்டத்தைவிட எந்த அளவுக்குக் குறைகிறது என்பதைக் காட்டும் கோணம்

angle of lead : (மின்.) முந்து கோணம்: திசைமாற்றித் தொடுவிகள், தீப்பொறியைத் தவிர்ப்பதற்காக இயல்பான தளத்திலிருந்து எந்தக் கோணத்தில் திருப்பப்படு கின்றனவோ அந்தக் கோணம்

angle of mandible : (உட.)கீழ்த்தாடைக் கோணம்

angle of pitch : (வானூ.) சாய் வீழ்வுக் கோணம் : இரு சமதளங்களுக்கிடையிலான கூர்ங்கோணம். ஒரு தளம் விமானத்தின் பக்க அச்சினையும் காற்றின் திசையினையும் உள்ளடக்கியிருக்கும்; இன்னொரு தளம், பக்க அச்சினையும், நீள் கோட்டு அச்சினையும் உள்ளடக்கியிருக்கும். விமானம் இயல்பாகப் பறக்கும்போது, சாய் வீழ்வுக் கோணம் என்பது, நீள்கோட்டு அச்சுக்கும் காற்றின் திசைக்குமிடையிலான கோணம் ஆகும்

angle of reflection : (மின்.) பட்டெறி கோணம்; பிரதிபலிப்புக் கோணம்; உருத்தெரி கோணம் : முட்டி மீண்ட கதிர்ப்பரப்பின்செங்குத்துக் கோட்டுடன் இயங்கும் கோணம். பட்டெறி கோணமும் படுகோணமும் சமமானவையாகும்

angle of refraction : ஒளிவிலகு கோணம் : ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான கோட்டிற்குமிடையிலான கோணம் ஒளிவிலகு கோணம் எனப்படும்

angle of repose, Or angle of friction :(எந்) குவிநிலைக் கோணம் அல்லது உராய்வுக் கோணம் : ஒரு சமதள மேற்பரப்பு தொடு வானுடன் கொண்டுள்ள கோணம். இந்தக் கோணத்தில், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஒரு பொருள் சரியத் தொடங்கும். அந்தத் தொடர்பில் வைக்கப்பட்டுள்ள பொருள்களின் தன்மைக்கேற்ப இந்தக் கோணம் மாறுபடுகிறது

angle post : நடுத்தூண் சுழற்படிக்கட்டின் நடுத்தூண்

angle post :(க.க.) கோண ஆதாரக்கோல் : ஒரு படிக்கட்டின் கோணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சுழற்படிக்கட்டு ஆதாரக்கால்

angle of roll ;(வானூ) சுழற்சிக் கோணம் : ஒரு விமானத்தின் பக்க அச்சினை அதன் கிடைமட்டத் தளமாகக் கொண்டு வருவதற்கு அதன் நீள்கோட்டு அச்சினைச் சுற்றிச் சுழற்றப்பட வேண்டிய கூர்ங்கோணம். இது, ஒருபுறச் சாய்வுக் கோணம்' என்று அழைக்கப்படும்

angle of stabilizer setting : (வானூ.) விமானச் சமநிலையமைவுக் கோணம் : ஒரு விமானத்தின் உந்துவிசைக் கோட்டிற்கும் சம நிலையமைவு நாண் வரைக்குமிடையிலான கூர்ங்கோணம்

angle of thread ; , (எந்) திருகிழைக் கோணம் : ஓர் ஊடச்சு சமதளத்தில் அளவிடப்படும் திருகிழையின் பக்கங்களுக்கிடையிலான கோணம்

angle of wing setting: (வானூ) இறகு அமைப்புக் கோணம் :இறகு நாண் வரையின் சமதளத்திற்கும், உந்துவிசைக் கோட்டிற்குமிடையிலான கூர்ங்கோணம்.ஒவ்வொரு இறகிற்கும் இந்தக் கோணம் வேறுபடலாம்

angle of yaw : (வானூ) விமான வழி விலகீட்டுக் கோணம் : காற்று வீசும் திசைக்கும், விமானத்தின் செவ்வொழுங்குச் சமதளத்திற்குமிடையிலான கூர்ங்கோணம். விமானம் வலப்புறம் திரும்பியிருக்கும் போது இக்கோணம் நேர் எண்ணாக இருக்கும்

angle plate : (எந்) கோணத் தகடு : பொதுவாக எந்திரங்களை அமைக்கும் பணிக்குப் பயன்படுவது வார்ப்பிரும்பினாலானது ; ஒன்றுக்கொன்று நேர் கோணங்களில் அமைந்த இரு உலோகத் தகடுகளினால் அமைந்து, மரையாணிகளுக்காகத் துளைகளைக் கொண்டிருப்பது


angstrom unit. (இயற்) ஆங்ஸ்டிராம் அலகு : ஒளி அலைகளின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக் கூறு. ஒரு கோடி ஆங்ஸ்டிராம் என்பது ஒரு மீட்டருக்குச் சமம்

angular cutter : (எந்) கோண வடிவு வெட்டுக்கருவி : துளைவெட்டுங் கருவி. இதில் வெட்டு முகம், வெட்டுக் கருவியின் அச்சிலிருந்து ஒரு கோணத்தில் இருக்கும்

angular diameter: கோண விட்டம் : ஒரு வட்டமான பொருளின் வடிவளவு, (1) அதன் உள்ளபடியான விட்டம், (2) கண்ணிலிருந்து அதன் தொலைவு ஆகிய இரண்டையும் பொறுத்ததாகும்

ஒரு பொருள் எந்தக் கோணத்தில் கண்ணில்படுகிறதோ அந்தக் கோணத்தின் விட்டம் ஆகும். கண்ணிலிருந்து ஓரடி தூரத்திலுள்ள ஒரு வட்டத்தின் கோணவிட்டம் 5° மட்டுமே. நிலவின் கோண விட்டம் 1/2°

angular gears : (எந்) கோண வடிவப்பல்லிணைகள் : நேர் கோணம் அல்லாத வேறு கோணங்களில் இயங்குவதற்கென வடிவமைக்கப்பட்ட சரிவுப் பல்லிணைகள்

angular momentum : கோண இயக்கு விசை: திரும்புகிற ஒரு பொருளின் இயக்குவிசை. இரண்டு பொருள்கள் ஒரே சமயத்தில் சம ஆற்றல்களின் மூலம் நிலைக்குக் கொண்டு வரப்படுமானால் அவை சமமான கோண இயக்குவிசை உடையவையாகும்

angular phase : (மின்) கோணப் படிநிலை: ஓர் ஆதாரக் கோட்டினைப் பொறுத்து ஒரு சுழல் நேறியம் அமைந்திருக்கும் நிலை

angular velocity: (மின்) கோண வேக வீதம் : ஒரு வினாடியில் ஒரு சுழல் நேறியத்தின் வேகம், இது ரேடியன்களில் குறிக்கப்படும்

angular velocity : (எந்) கோண வடிவ வேக வீதம் : ஒரு மையத்தை ஆதாரமாகக் கொண்டு சுழலும் ஒரு பொருளினால் அல்லது புள்ளியினால் ஒரு வினாடி நேரத்தில் வரையப்படும் வளைவரைக்கும் ஆரத்திற்குமிடையிலான விகிதம்

anhidrotics : (உட) வியர்வைத் தணிப்பிகள்

anhydride : (வேதி)நீர் நீக்கிய காடி: ஒரு கூட்டுப்பொருளிலிருந்து நீரை அகற்றி விடும்போது எஞ்சி நிற்கும் பொருள். H2SO4一H2O=SO3

anhydrous : (வேதி) நீரில்லாத : நீர் நீக்கப்பட்ட உலர்ந்தது; வற்றி வதங்கியது

anhydrous ammonia : (வேதி) நீரற்ற அம்மோனியா/நவச்சார ஆவி: குளிராலும், அழுத்தமூட்டுதலாலும் திரவமாக்கப்பட்டுத் தூய்மைப்படுத்தப்பட்ட அம்மோனியா வாயு (நவச்சார ஆவி)

amiline : (வேதி.) அனிலைன்: நிறமற்ற, எண்ணெய்ப் பிசுக்கான கூட்டுப்பொருள் (C6H5NH2) பல்வேறு கீல் எண்ணெய்ச் சாயப் பொருட்கள் இதனை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ரப்பர் தொழிலுக்கு இது பயன்படுகிறது

anion : (மின்.) எதிர்மின்மம்: மின் பகுப்பாய்வில், நேர் மின்முனையை நோக்கி நகர்கிற ஓர் எதிர் இயனி (மின்மயத்தூள்)

aniridia :(உட.) விழிச் சுருக்குத் தசையின்மை

anischuria : (உட) சிறுநீரை அடக்க இயலாவண்ணம் கட்டற்ற முறையில் ஒழுகிக் கொண்டிருப்பது

anisotropic : (மின்) திசை மாறு பாட்டுப் பண்பு: ஒரு பொருள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருத்தல். எடுத்துக்காட்டாக, திசைமாறு பாட்டுப் பண்புடைய ஒரு படிகம், செங்குத்துக் கோணத்திசையை விட இன்னொரு திசையில் மின்விசை பாய்வதை அதிக அளவில் தடையுடையதாக இருக்கும் ankylourethria : (உட) சிறுநீர் வடிகுழாய் அடைப்பு அல்லது சிறுநீர் வடிகுழாய் குறுகியிருப்பது

anneal : (உலோ.) கடும்பதமாக்கல் : கண்ணாடி, உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கடும்பதப்படுத்துதல்

annealed tubing : (உலோ) பதப்படுத்திய குழாய் அமைப்பு : உலோகக் குழாய்கள், பகுதி பதப்படுத்தியும் வாணிக முறையில் வழங்கப்படுகின்றன. இந்தக் குழாய்களை வளைக்க வேண்டியிருக்கும் போது, முற்றிலும் பதப்படுத்திய குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன

annealing : (உலோ) பதனாற்றல்: கண்ணாடி, உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆற வைப்பதன் மூலமாகவோ, மென்மையாக்கி உடையாதபடி பதப்படுத்துதல்

annual ring : (தாவர) ஆண்டு வளைய வரை :வெட்டு மரத்தில் மரத்தின் ஆண்டு வளர்ச்சியைக் குறிக்கும் வளைய வரை

annelida : (உயி..) வளையக்கணு உடலி : மண்புழுக்கள் போன்று, வளையங்களாலான உடல்களைக் கொண்ட பிராணிகள்

annular ball bearing : (எந்) வளையக் குண்டு வாங்கி: ஒரு வளையம் போன்ற பிடிப்பானில் குண்டுகளைத் தாங்கியுள்ள ஒரு தாங்கி

annulareclipse : (இயற்) வளையக் கிரகணம்:சூரியனைச் சந்திரன் முழுவதுமாக மறைக்காமல் சந்திரனைச் சுற்றி ஓர் ஒளிவளையம் மட்டுமே தெரியும் கிரகணம்

annular vault : (க.க) வளையக் கவிகை மாடம் : உருளை வடிவக் கவிகை மாடம் போன்று இணையான இரு சுவர்களை ஆதாரமாகக் கொண்டு எழுகின்ற ஒரு கவிகை மாடம்

annular wheel : (பல்) வளையச் சக்கரம்: இது ஒரு வளையப் பல்லிணை, இதன் பற்கள் அதன் உட்புறப் பரிதியுடன் பிணைக்கப்பட்டி ருக்கும். இதனை உட்புறப் பல்லிணை என்றும் கூறுவர்

annulated columns : (க.க) வளையமிட்ட தூண்கள் : வளையங்களால் அல்லது இணைப்புத் தகடுகளால் ஒன்றாகப் பிணைக்கப் பட்ட தூண் வரிசைக் கட்டமைவு

annulat : (க.க.) குறுவளையம் : மற்றவற்றைப் பிரிப்பதற்குப் பயன்படும் ஒரு சதுரவடிவ வார்ப்படம்

annulus: (உயி..) வளை வடிவ அமைப்பு:குறிமறையினத் தாவரத்தில் சிதல் உறைவிரிய உதவும் வளைய வடிவமான உயிர்மத் தொகுதி, ஒரே மையத்தைக் கொண்ட இரு வளையங்களுக்கிடையேயான இடைவெளி

annunciator: (மின்) ஏவல் மணிப் பொறி : ஒளி, ஒலி வாயிலாகப் பணிநாடிய இடம் சுட்டிக்காட்டுவதற்கான ஏவல் மணியின் பொறி அமைப்பு

annuuciator wire: (மின்) ஏவல் மணிப்பொறிக் கம்பி : மென்மையான செப்புக் கம்பி. இதில் இரு அடுக்குப் பஞ்சு நூல் எதிர்த் திசைகளில் சுற்றப்பட்டு, மென்மெழுகு பூசப்பட்டிருக்கும்

anode : (மின்.) நேர் மின்வாய் : எதிர்மின் வாய்க்கு எதிரானது காற்று நீக்கப்பட்ட வெற்றுக் குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்னோடி

anodise : (உலோ.) முலாம்பூசுதல்: மின்பகுப்பாய்வு மூலம் அலுமினியத்திற்கு அலுமினியம் ஆக்சைடு முலாம் பூசுதல். இதில் குரோமிக் அமிலம் அல்லது கந்தக அமிலம் திரவமாகப் பயன்படுத்தப்படுகிறது. இத்திரவத்திலிருந்து ஆக்சிஜனை மின்னோட்டம் விடுவித்து, அலுமினியம் ஆக்சைடு ஒரு படலமாக உலோகத்தின்மீது படிகிறது. இந்தப் படலம் உலோகத்தைப் பாதுகாக்கிறது. இந்தப் படலத்திற்குப் பல்வேறு வண்ணங்களில் சாயமேற்றலாம்

anopheles : (நோயி.) மலேரியாக் கொசு : மலேரியாக் காய்ச்சலை உண்டாக்கும் ஒருவகைக் கொசு

anorexia : பசியின்மை ; உணவு உண்பதில் அவா இல்லாமலிருத்தல

anoxia : (உட.) ஆக்சிஜன் குறைபாடு: இரத்தத்தில் அல்லது திசுக்களில் ஆக்சிஜன் போதிய அளவு இல்லாதிருத்தல்

anta : (க.க.) கவர்ப்பட்டிகைக் கல் : வாயிலருகே அல்லது மூலை ஒரமாகச் சுவரில் குறுக்காகப் பதிப்பிக்கப்பட்டிருக்கும் பட்டி கைக்கல்

ante fix : (க.க.) முன்னிலைக் கட்டு : அடித்தள எழுதகங்களின் மூலைகளில் பொருத்தப்பட்டுள்ள நிலைக்குத்தான அலங்கார வேலைப்பாடு

antenna (மின்) வானலை வங்கி : கம்பியில்லாத் தந்தியில் வானலைகளை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு

antenna efficiency : (மின்.) விண்ணித் திறன்: ஒரு கிலோவாட் ஆற்றலுள்ள ஒரு விண்ணியினால் தரைவழியே 1.6 கி.மீ. நீளத்திற்க்கு உண்டாக்கப்படும் தள வலிமை). இது ஒரு தரத்திட்ட விண்ணியின் கள வலிமையிலிருந்து வேறுபட்டது

antenna: (வானொலி, தொலைக்காட்சி.)வானலை வாங்கி/விண்ணி) வானலைக் கொடி: கம்பியில்லாத் தந்தியில் வானலையினை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு

antenna gain: (மின்.) விண்ணிப் பெருக்கம் : விண்ணி மின்னோட்த்தின் வர்க்கத்தினால் பெருக்கப்பட்ட விண்ணித் தடை

antennas : (வின்.) விண்ணிகள்: ஒர் உத்தரத்தின் நெடுகிலும் இடைமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு, அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கம்பிகளினாலான விண்ணி. கதிர்வீசியாக இல்லாத கம்பிகள் பிரதிபலிப்பான்களும் இயக்கிகளும் ஆகும். இந்த விண்ணி, திசை காட்டுந்தன்மையது; இதில் சுழல்வதற்கான ஒர் அமைவு உள்ளது

anthemion : (க.க.) சித்திரபடிவம் : பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி_வசைகளில் பனையோலைப் பாணியிலமைந்த கிரேக்க அலங்கார வடிவமைப்பு

anthracene : (வேதி.) ஆந்திரசீன் : கீலிலிருந்து வடித்தெடுக்கப்படும் சாய மூலப்பொருள் சாயப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

anthracite : (கனி.) மட்கரி: நிலக்கீல் சத்தில்லாத நிலக்கரி படிக வடிவ உலோகத் தனிமம். இதனைக் கடின நிலக்கரி என்றும் கூறுவர். இதன் குறியீடு Sb, வெள்ளியத்துடன் அல்லது ஈயத்துடன் கலந்திடும் போது கடினத் தன்மையளிக்கிறது

anthrax : (நோயி,) நச்சுப்பரு : கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான சீக்கட்டு இது கால்நடைகளின் தோலில் கரும்புள்ளிகளை உண்டாக்கும்

antibiotic: (வேதி) உயிர் எதிரி': பெரும்பாலும் உயர் வகை உயிரினங்களுக்குத் தீங்கு செய்யாமல், மற்ற உயிரிகளைக் கொல்கிற அல்லது அவற்றின் வளர்ச்சியைக் குன்றச்செய்கிற அல்லது முழுமையாகத் தடை செய்கிற பூசணம் அல்லது பூஞ்சைக் காளான் உயிர் எதிரி எனப்படுகிறது. இந்தப் பொருளை வேதியியல் முறையில் செயற்கையாக அல்லது ஒரு நுண்ணுயிரியிலிருந்து தயாரிக்கலாம்

antibody : (நோயி.) நோய் எதிர்ப் பொருள் : தீங்குதரும் அயற் பொருளுக்கு எதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்

anticathode : (மின்) எதிர்மின் கதிர்க் குவியம் : ஊடுகதிருக்குரிய (எக்ஸ்-ரே) வெற்றுக் குழாய்களின் மின்னோட்ட இலக்கு

antidote. (மருந்.) மாற்று மருந்து: நச்சுப் பொருளை முறிப்பதற்குக் கொடுக்கப்படும் மாற்று மருந்து. எடுத்துக்காட்டாக, அமில நஞ்சினை முறிக்க சோடியம் பைக்கார்பனேட் போன்ற காரப் பொருள்களைக் கொடுத்தல்.

antidrag wire (வானூ) முன்னேற்றத்தடை எதிர்ப்புக் கம்பி : ஒரு விமானத்தின் இறகினுடைய நாண் வரைக்கு இணையாகவும், அது பறந்துசெல்லும் அதே திசையிலும் செயற்படுகிற விசைகளை எதிர்ப்பதற்கு அடிப்படையாக வடிவமைக்கப்பட்ட ஒரு கம்பி. இது பொதுவாக இறகில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்

antifebrin : (மருந்து) காய்ச்சல் எதிர்ப்பு மருந்து: காய்ச்சலைக் குணப்படுத்திக் கொடுக்கப்படும் அசிட்டானிலைடு என்ற மருந்து. இது அசிட்டிக் அமிலம், அனிலின் இரண்டும் கலந்து பெறப்படுகிறது

antifreeze : (தானி) உறை எதிர்ப்புக் கரைசல் : குளிர்விக்கும் சாதனத்தில் உறை வெப்ப நிலையைக் குறைக்க நீருடன் சேர்க்கப்படும் கரைசல்

antifreeze mixture: (தானி; எந்.) உரைதல் தடுப்புக் கலவை : உறைவதைத் தடுப்பதற்கான குளிரூட்டும் அமைப்பிலுள்ள நீருடன் கலந்த ஆல்கஹால், கிளிசரின் அல்லது ஏதேனும் வேதியியல் தயாரிப்பு

antifriction metal : (உலோ) உராய்வுத் தடுப்பு உலோகம் : தண்டுகள், இருசுகள் ஆகியவற்றின் அடிப்படிவுகள், தாங்கிகள் போன்ற சுழலும் உறுப்புகளுக்கும் உள்வரிப் பூச்சுக்காகப் பயன்படுத்தப்படும் மென்மையான உலோகக் கலவை. இது உராய்வைத் தடுக்கும் மசகுப் பொருளாகப் பயன்படுகிறது. தகரம், செம்பு, அஞ்சனம் முதலியவற்றின் கலவை. விலை மலிவானது; திறன் வாய்ந்தது

antigen : (நோயி..) காப்பு மூலம் : அயற்பொருளிலிருந்து உயிரினைக் காக்கும் உயிர்த் தற்காப்புப் பொருளை உண்டு பண்ணும் பொருள்மூலம். இது இரத்தத்தில் உற்பத்தியாகும் நோய் எதிர் பொருளை உண்டாக்குகிறது

antigravity : (விண்) புவிஈர்ப்பு எதிர்விசை' : ராக்கெட் கலங்கள், மனிதவுடல்கள் போன்ற பொருண் மைகள் மீதான விளைவு. இந்த விளைவினால் (இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய) சில ஆற்றல் புலங்கள் பூமியின் ஈர்ப்புவிசையினை நீத்தறவு செய்துவிடும் அல்லது குறைத்துவிடும்

antihunt device: (மின்) நடுக்கத் தடைச் சாதனம் : நடுக்கத்தைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் அல்லது மின்சுற்று வழி

னுக்கேற்ப தரம் பிரித்தல் கல்லெண்ணெயின் (பெட்ரோல்) ஆக் டேன் (தர அளவீட்டு எண்)

antilogarithm : (கணி,) எதிர் அடுக்கு மூலம்: ஒரு குறிப்பிட்ட அடுக்கு மூலத்திற்கு இணையான எண்

antimíssile missile : (விண்,) ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை : பறந்துவரும் மற்ற ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கக் கூடிய ஒரு தற்காப்பு ஏவுகணை

antimonial lead : (உலோ. ) ஆன்டிமணி ஈயம்: 90%-96% ஈயமும், 4%-10% ஆன்டிமணியும் அடங்கிய ஓர் உலோகக் கலவை. இது சேம மின்கலத் தகடுகளுக்குப் பய்ன்படுத்தப்படுகிறது

antimony: (உலோ) ஆன்டி மணி: நீலச்சாயல் வாய்ந்த வெண்ணிறப் படிக உலோகத் தனிமம். இது எளிதில் உடையும் தன்மையுடையது. வெள்ளீயத்துடன் அல்லது ஈயத்துடன் கலக்கும் போது கடினத் தன்மை பெறுகிறது. இது பெரும்பாலும் உலோகக் கலவையாகப் பயன்படுத்தப்படுகிறது

antimony - (வரைக.) அஞ்சனக்கல் : எளிதில் உடையும் இயல்புடைய நிலச்சாயல் வாய்ந்த வெண்ணிறத் தனிமம். இது குளிர்விக்கும்போது சுருங்குவ்தில்லை. எனவே இது எழுத்துருக்களுக்கு வலிமையூட்டப் பயன்படுத்தப்படுகிறது

antinode : (மின்) நள்ளிடைக் கணு: மின்னோட்டத்தின் அல்லது மின்னழுத்தத்தின் உச்ச அளவு அலைப்புடைய மையப்பகுதி

antipercolator: (தானி): கசிவுத் தடுப்பான்: ஓர் எரி-வளி கலப்பியின் உயர்வேக மின்சுற்று வழியில், அளவுக்கு மீறிய வெப்பம் காரணமாக உண்டாகும் ஆவி அழுத்தத்தினைத் தளர்த்துவதற்குரிய ஒரு சிறிய இடைவெளி

antique : தொன்மைக் காகிதம் / திண்மை அச்சுரு: (1) முட்டையின் வெண்தோடு போன்ற மெருகிடப்படாத முரட்டு ரகக் காகிதத் தயாரிப்பு (2) முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுரு வகை (அச்சுக் கலை) பொதுமுறை அச்சுரு வகை, சாய்ந்த அச்சுருவகை இரண்டிலும் திண்மையான முகமுடைய அச்சுரு

antisatellite missile :(விண்) செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணை: வட்டப்பாதையில் சுற்றி வரும் ஒரு செயற்கைக் கோளை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஓர் ஏவுகணை

antiseptic: (நோயி) நோய் நுண்மத் தடை : காயங்கள் முதலியவற்றில் நோய் நுண்மங்கள் உருவாவதைத் தடுக்கப் பயன்படும் பொருள். அயோடின், கார்பாலிக் அமிலம், அக்ரோஃப்ளேவின் முதலியவை நோய் நுண்மத் தடைப் பொருள்கள் ஆகும்

antisiphon : (கம்) உந்து தடுப்பு வடிகுழாய் : ஒருவகை நீர்காப்புப் பொறியமைப்பு. இதில் முத்திரையை உடைக்கக்கூடிய வடிகுழாய் இயக்கத்தைத் தடுப்பதற்குப் போதிய கனஅளவு திரவத்தை உள்ளடக்குவதற்கான வடிகாலின் விட்டம் அதிகரிக்கப்படுகிறது

antitoxin : (நோயி..) எதிர் நச்சு : உடலில் பாக்டீரியாவினால் உண்டாகும் நச்சுப் பொருளுடன் கலந்து அதனைத் தீங்கற்றதாக்கு வதற்கு உடல் உற்பத்தி செய்யும் பொருள்

antrum : (உட.) தாடைக் குழிவு: மேல் தாடை உள் வளைவு. இது பற்களுக்கு மேலே நெற்றிக்குள்ளே கண்களுக்குச் சற்று மேலே காதின் பின்புறமுள்ள எலும்பில் அமைந்திருக்கும்

anvil : (உலோ.) பட்டடைக்கல்/அடைகல்; ஓர் எஃகு அல்லது இரும்புப்பாளம் இதன் மீது உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்குதல் நடைபெறுகிறது

anvil block: (உலோ) பட்டைக்கல் பாளம்/ அடைகல் பாளம் : ஒரு மிகப் பெரிய வார்ப்பிரும்புப் பாளம். இது நீராவிப் பட்டடைக் கல், மற்றக் கனமான சம்மட்டிகள் ஆகியவற்றுக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும்.இது அடிப்பதால் உண்டாகும் அதிர்வினைத் தாங்கிக் கொள்ளும். இது பெரும்பாலும் காரை அல்லது கான்கிரீட்டில் பதிக்கப் பெற்றிருக்கும்

anvil vise : பட்டடைக்கல் குறடு : நிலையான கிடுக்கியின் மீது ஒரு பட்டடைக் கல்லினைக் கொண்ட ஒரு குறடு

aorta: ( உட. ) பெருந்தமனி :இதயத்தின் இடது ஏற்றறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக் குழாய்

aperture: (இயற்.) ஒளிபுகு இடைவெளி : 1) ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம். 1/6 ஒளிபுகு இடைவெளி கொண்ட ஆடியுள்ள ஒளிப்படக் கருவியின் ஆடியின் விட்டம் அதன் குவி மையத் தூரத்தின் 1/6பகுதியாகும் (2) கட்டிடத்தில், ஒரு சுவரில் கதவுக்காக அல்லது சன்னலுக்காக விடப்படும் இடைவெளி

aperture mask: (மின்,) இடையிட மூடி: ஒரு மூவண்ணப் படக் குழாயின் பார்வைத் திரைக்கு நேராகப் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ள துளையிட்ட ஒரு மெல்லிய தகடு

apex: (கணி.) மேல் நுனி / மேல்: உச்சி : முக்கோணம், வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு

aphelion : (விண்.) ஞாயிற்றின்சேண்: சூரியனின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம் (பூமியின் சேண், சூரியனிலிருந்து சுமார் 15,20,50,500 கி.மீ.தொலைவில் உள்ளது)

aphtha : (நோயி.) கொப்புளம் :வாயின் உட்பகுதியை மூடியிருக்கும் சளிச்சவ்வு வழியாக, சில நஞ்சுடைய அல்லது எரிச்சலூட்டும் பொருளிலிருந்து வெளிப்படும் கழிவுப் பொருளினால் வாயில் உண்டாகும் கொப்புளம்

apnoea : (உட.) மூச்சு நிற்றல் : மூச்சு விடுவதைத் தூண்டிவிடுவதற்குத் தேவையான கார்பன்டையாக்சைடு இரத்தத்தில் மிகவும் குறைந்து போவதால் மூச்சு நின்று போதல்

apogee: (வானூ. விண்.) புவிச்சேணிலை / பூமி உச்சநிலை: ஞாயிறும், திங்களும், கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந் தொலைவாயிருக்கும் நிலை

apomorphine: (மருந்.) அப்போமார்ஃபின்: வாந்தி உண்டாகும்படி செய்வதற்குப் பயன்படும் மருந்து. இருமலைக் குறைப்பதற்கும் இதனைச் சிறிதளவு கொடுப்பதுண்டு

apparent e.m.f.: (மின்,) வெளிப்படை மின்னியக்கு விசை: தடையின் வழியாக மின்னோட்டம் பாய்வதன் வாயிலாக ஏற்படும் மின் அழுத்தக் குறைவினால் சுட்டிக்காட்டப்படும் மின்னழுத்த அலகு எண்ணிக்கை அளவு

apparent power: (மின்.) வெளிப்படைத் திறன் : ஒரு தூண்டு மாறு மின்னோட்டச்சுற்று வழியில் ஆம்பியரையும் மின்னழுத்த அலகு எண்ணிக்கை அளவினையும் (ஓல்ட்) பெருக்குவதால் கிடைக்கும் பெருக்குத் தொகை திறனளவி காட்டும் உண்மைத் திறனிலிருந்து இது வேறுபட்டது

apparent watts : (மின்.) வெளிப்படை மின்னாற்றல் விசை : ஒரு மாறு மின்னோட்டச் சுற்று வழியில் மின்னழுத்த அலகு எண்ணிக்கையினை ஆம்பியர்கள் எண்ணிக்கையினையும் பெருக்குவதால் கிடைக்கும் பெருக்குத் தொகை

appendage: துணையுறுப்பு : முதன்மையான அல்லது பெரியதான ஒரு பொருளுடன் இணைக்கப்பட்டுள்ள அல்லது சேர்ந்திருக்கிற, ஆனால் அதற்கு இன்றியமையாதிருக்கிற ஒரு பொருள்

appendicitis : (நோயி.) குடல் முளை அழற்சி : குடல் முளையில் ஏற்படும் வீக்கம்

appendix : (அச்சு.) பிற்சேர்க்கை ஒரு அச்சிட்ட நூலுக்குக் கூடுத லாக அல்லது துணையாகச் சேர்க்கப்பட்டுள்ள பகுதி இது. பெரும்பாலும் கடைசி அத்தியாயத்திற்குப் பின்னர் இணைக்கப்பட்டிருக்கும்

appendix: (உட.) குடல் முளை : குடலின்மேற் புறத்தி னின்றும் தோன்றும் சிறு முளை

படிமம்:அதொ1


aperture : (மின்.) இடைவெளி : துளை இடையிடம்

appliances : (மின்.) துணைக் கருவிகள் : வீடுகளில் உழைப்பினை மிச்சப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிற வாட்டு மின்கலம், கலவைச் சாதனம், துப்புறவுக் கருவி போன்ற சாதனங்களைப் பொதுவாகக் குறிப்பிடும் சொல்.

application : பயன்படுத்துகை : ஒரு விதியினைப் பயன்படுத்துதல்; நடைமுறையில் பொருந்தச் செய்தல்; நடைமுறைச் செயல் விளக்கம் செய்து காட்டுதல்.

applied design : (நுண்.க) செயல்முறை வடிவமைப்பு : பயனுள்ள பொருள்களை மேலும் எழிலுடன் தோன்றும்படி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் வடிவமைப்பு.

applied mechanics: (இயற்) செயல்முறை எந்திரவியல்: எந்திரவியலின் விதிமுறைகளை பயனுள்ள கைவினைகளில் பயன்படுத்துதல்.

applied moulding: செயல்முறை வார்ப்படம்: 17ஆம் நூற்றாண்டு முதலாம் ஜேம்ஸ் அரசர் காலத்திய அணிகலன்களிலுள்ள பொட்டிப்பு விளைவினை அளிப்பதற்காக செய்யப்படும் வார்ப்படம்.

apprentice: தொழில் பழகுநர்: ஒரு தொழிலைக் கற்றுக்கொள்பவர். பொதுவாக, ஓர் ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை வாயிலாக, அந்த உடன்படித்கைக் காலத்தின் போது, ஒன் படைகளைக் வர்.

'apprentices : பயிற்சிக் காலம்: வேலை தொழில் பயிற்சிக் கொள்ளப்பட்டக் கால அளவு தருநர் தமது ஒப்படைகளை கற்பிக்க உறுதி அளிப்பவர். அமெரிக்காவில் இது பொதுவாக மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஆகும்; பல அயல் நாடுகளில் இது ஐந்தாண்டுகள் அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கால அளவு.

approach light: (வானூ) அணுகு விளக்கு: பொதுவாக ஒரு பச்சை விளக்கு, இது விமானங்கள் தரையிறங்குவதற்கு சாதகமான திசையினைச் சுட்டிக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட்து.

approximately : (எந்) தோரியமாக : ஏறத்தாழ ஒத்திருக்கிற; மிக நெருங்கிய அளவின தான

ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவிட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாக இருக்கிற

எந்திரங்களின் திறம்பாடுகளையும், அவற்றின் அளவீடுகளையும், கப்பல்களின் தோராய எடைகளையும் குறிப்பிடப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

apron : (உலோ.) காப்புத்தளம் : ஒரு கடைசல் பொறியின் (கடை வான்) சகடத்தின் அடிப்பகுதி. இதில் உள்ளிடுவதைக் கட்டுப் படுத்துவதற்கான புல்லிணைகளும் பூட்டுப் பொறியமைப்புகளும் அடங்கியிருக்கும்.

apron (வானூ.) முன்புறக் கடுந்தரைப் பரப்பு : (1) வண்டிகள், மானங்கள் முதலியவை தங்கிடத் தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப் பரப்பு. தெளிவான தட்ப வெப்ப நிலையில் விமானத்தைக் கையாள்வதை அல்லது பழுது பார்ப்பதை இது எளிதாக்குகிறது. (2) அரங்கமேடைகளில் முதல் திரைக்கு முன்புள்ள பகுதி. (3) மேசையின் மேற்புறத்திற்கு ஆடுத்துக் கீழுள்ள பலகை. இது மேசையின் கால்களைப்பிணைத்து மேற்புறத்திற்கு வலிமையூட்டுகிறது. மேசையின் தோற்றத்திற்குப் பொலிவூட்டுகிறது. (4) ஒரு திருகுவெட்டுக் கடைசல் பொறியின் சகடத்தின் முன்பகுதி யிலுள்ள செங்குத்தான தகடு.

apse : (க.க.) பலி பீடக் கவிகை : திருக்கோவில் கவிகைக் கூரையுள்ள அரைவட்ட ஒதுக்கிடம்.

apseline (இயற்.) சூரியச் சேணிலைக் கோடு: சூரியனின் நெடுஞ் சேய்மையில் அல்லது மிக அண்மையில் அந்தக் கிரகத்தின் இடத்தைக் குறிக்கும் கோடு.

aqua ammonia : (வேதி) நீர்ம அம்மோனியா: NH4OH கரைசல். அம்மோனியம் ஹைடிராக்சைடு பொதுவாக அம்மோனியா நீர் என அழைக்கப்படுகிறது. வீடு களில் துப்புரவுப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது.

aqua dag: (வேதி) நீரியல் மிதவை: நீரிலுள்ள காரீயகத்தின் கரைநிலையுடைய மிதவைப் பொருள்.

aquamarine : (வண்) கடல் வண்ணம் : வெளிர் ஊதா நிறம் முதல் வெளிர்ப்பச்சை நிறம்வரை.

aqueduct : கட்டுக் கால்வாய் : உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய்.

aqueous : நீர்த்த.

arabesque : (க.க. ) அராபிய வண்ணச் சித்திர வேலை : முன்படைப்பியலில் தாவரங்கள்,துணிகள்,மனிதர்-விலங்கு உருவங் கள் போன்ற விசித்திர வேலைப்பாடு களைக் கொண்ட ஒரு செதுக்கு அலங்காரம்.அராபிய முறையில் செய்யப்பட்ட வண்ணச் சித்திர வேலைப் பாடு.

Arabic numbers : (கணி) அரபு எண்மானம் : தற்காலத்தில் பயன் படுத்தப்பட்டுவரும் 1,2,3,4,5,6,7, 8,9,0 என்ற இலக்கமுறை. இது I,II,III,IV என்ற ரோமானிய இலக்கமுறைக்கு மாறுபட்டது.

arbor : (க.க.) பொறி முதன்மை ஆதாரம் : (1) தொடர்பற்ற மின்னல் வேலை; நங்கூரம்; மூலைப் பகுதி.

(2) சக்கரம் சுழலும் இருசு அல் லது கதிர்.

arbor press : (எந்) பொறி முதன்மை ஆதார அழுத்தக் கருவி; பொறி முதன்மை ஆதாரத்தை அலலது தண்டினை ஒரு பொருளின் துளையில் அல்லது துவாரத்தில் வைத்து அழுத்துவதற்குப் பயன்படும் சாதனம். இது அந்தப் பொருளைக் கடைசல் கருவியில் பொருத்தவும் பணிமுடிந்தபின் எடுக்கவும் உதவும்.

arcback : ( மின்.) பின்னோக்கிப் பாயும் சுடர் : ஓர் இரு முனையத் தில் தகடு மிக உயர்ந்த எதிர் மின்னழுத்தம் கொண்டிக்கும்போது, எதித்திசையில் பாயும் மின்னோட்டம்.

arc blow : (பற்.) சுடர் ஊதல் : சுடர் வார்ப்படத்தின்போது ஒரு சுடர் அதன் போக்கிலிருந்து திரிபுறுகிற அல்லது வெட்டி வீசுகிற போக்கு.

arc brazing : சுடர்ப் பித்தளை முலாமிடுதல் : ஒர் அடிப்படை உலோகத்திற்கும் ஒரு மின் முனைக்குமிடையே அல்லது இரு மின் முனைகளுக்கிடையே அமைந்த ஒரு மின் சுட்ரிலிருந்து வெப்பத்தினைப் பெறுவதற்கான மின் முறைப் பித்தளை முலாமிடும் முறை.

arc cutting : (பற்) சுடர் வெட்டல் : பொதுவாக கார்பன் மின் முனைகளைப் பயன்படுத்தி ஒரு மின் சுடர் மூலமாக உலோகங்களை வெட்டுதல்.

archimedean drill : ஆர்க்கிமீடியத் துரப்பணம் : ஒரு கருள் திருகியின் முனையில் பொருத்தப்பட்டுள்ள வெட்டுமுனை.

arcing : மின் விசையில் அல்லது மின்னாக் தொடர்புகளின் சுடரினை அமைத்தல்.

arc furnace : (மின்.)சுடர் உலை : ஒரு மின்சுடர் வாயிலாக வெப்பம் உண்டாக்கப்படும் ஒர் ஊதுலை.

arc jet engine : (விண்.) ஒளிவில் தாரை ஏஞ்சின் : இது ஒருவகை ராக்கெட் எஞ்சின். இதில் ஒளி வில்லைச் செலுத்துவதன் மூலம் செலுத்துவாயு சூடாக்கப்படுகிறது.

arc voltage : (புற்.) ஒளிவில் மின்னழுத்தம் : ஒளிவில்லினுள்டே செல்லும் மின் விசையின் அழுத்தம்.

arch : (க.க.) வில்வளைவு கவான் : பாலம், தளம் முதலியவற்றைத் தாங்கும் வில்வளைவு போன்ற வடிவமுள்ள கட்டுக்கோப்பு.

arch bar: (க.க.) கவான் தண்டு: ஒரு தட்டையான கவானைத் தாங்கும் ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் ஒரு தட்டையான இரும்புத் தண்டு அல்லது பாளம்.

arch buttress : (க க) கவான் செங்கல்: ஒரு கவானின் ஆரத்திற்குப் பொருந்துகிற வகையில் தயாரிக்கப்பட்ட ஆப்பு வடிவச் செங்கற்கள்

archimedean principle : ஆர்க்கிமிடிஸ் தத்துவம் : ஒரு பாய்மத்தில் முழுழையாக அலலது பகுதியாக மூழ்கியிருக்குழ், ஒரு பொருள். அதனால் வெளியேற்றப்படும் பாய்மத்தின் எடைக்குச் சமமான ஒரு விசையின் மூலம் மிதக்கச் செய்யப்படுகிறது.

architect : (க.க.) கட்டிடக் கலைஞர்: கட்டிடங்களைத் திட்டமிட்டு, விடிவமைத்து, கட்டுமானம் செய்யும் உத்திகளில் தேர்ச்சி பெற்ற வல்லுநர் கட்டிடத்தைக் கட்டுவதை மேற்பார்வையிடுவதிலும் தேர்ச்சி பெற்ற நிபுணர். architecture: கட்டிடக்கலை: கட்டிடம் தொடர்பான கலையும் அறிவியலும்

architrave: (க.க.) தூலம்: தூணின் உச்சியிலுள்ள பர்ற்கட்டையின்மீது தங்கியிருக்கும் முதன்மையான தூலம்: வாயிற்படி சன்னலைச் சுற்றியுள்ள பகுதியும் ஆகும்

architrave cornice: (க.க.) தூல எழுதகம்: ஒரு காலம், ஓர் எழுதகம் என்ற இரு உறுப்புகளை மட்டுமே கொண்ட ஒரு தூண் தலைப்பு அமைவு. இதில் ஒப்பனைப்பட்டை விட்டுவிடப்பட்டிருக்கும்

archives: ஆவணக் காப்பகம்: தொன்மை ஆவணங்களை அல்லது பழஞ்சுவடிகளைப் பாதுகாப்பாகப் பேணிக்காக்கும் ஒரு களஞ்சியம்

archivolt: (க. க.) கவான் உள்வளைவு: கவானின் உள்வளைவினை அழகு செய்யும் அச்சுருக்க்ள்

archway: (க. க.) கவான் வழி: வில்வளைவான விதானம் கவிந்துள்ள வழி

arcing: (மின்.) சுடர் அமைப்பு: ஒரு நேர்மின்னாக்கியில் அல்லது ஒரு துண்டிக்கப்பட்ட சுற்று வழியிலுள்ள தொடுவிகளைப்போன்ற ஒரு சுடரினை அமைத்தல்

arc-lamp carbon: (மின்.) சுடர் விளக்குக் கார்பன்: ஒரு சுடர் விளக்கில் இரு கார்பன் தண்டுகளில் ஒன்று. இவ்விரு கார்பன் தண்டுகளுக்கிடையில் சுடர் தோன்றுகிறது

arc of contact: (எந்.) பற்றிணைப்புச் சுடர்: பல்லிணையில், தனியொரு இணைச் சக்கரப் பற்கள் தொட்ங்கி, முடிகிற இரு புள்ளிகளுக்கிடையில் அமைந்த இடைவெளி

arc-jet engine: (விண்.) சுடர் தாரை எஞ்சின்: இது ஒரு ராக்கெட் எஞ்சின். இதில் செலுத்தும் வாயு, ஒரு மின்சுடர் வழியாகச் செலுத்தப்பட்டு சூடாக்கப்படுகிறது

arc voltage: (பற்ற.) சுடர் மின்னழுத்தம்: மின்சுடரின் குறுக்கேயுள்ள மின்னாற்றல் (அழுத்தம் அல்லது விசை

arc weldings: சுடர் பற்றவைப்பு: எந்தத் துண்டினைப் பற்ற வைக்க வேண்டுமோ அந்தத் துண்டு நேர்மின் முனையாக்கப்படுகிறது. நேர்மின்னோட்டம் பயன்படுத்தப்படுகிறது. பற்றவைப்புத் தண்டு எதிர் மின் முனையாகிறது. அந்தத் துண்டினால் தொட்டுத் தொட்டு எடுக்கும்போது சுடர் உண்டாகிறது

arc welding: (உலோ.) சுடர் பற்றவைப்பு : ஒரு மின்முனை, ஒரு மின்னோட்டம் மூலமாகப் பற்ற வைத்தல். பற்றவைக்க வேண்டிய பொருளை மின்முனையால் தொடுவதன் மூலமும், பின்னர் மின் முனைக்கும் அந்தப் பொருளுக்கும் இடையிலான வாயு ஊடகத்தின் வழியாக மின்னோட்டம் தொடர்ந்து பாயும் வகையில் ஒரு தூரத்திற்குப் பிரித்தெடுப்பதன் மூலமாகவும் மின்சுடர் உண்டாக்கப்படுகிறது. மின்சுடரில் மின்னாற்றல் வெப்பமாக மாற்றப்பட்டு ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்குள் ஒரு முகப்படுத்தப்படுகிறது

area : (க.க.) பரப்பிடம் : ஒரு திறந்தவெளி அல்லது களம்; மூடப்படாத இடைவெளி ஒரு மேற்பரப்பின் அளவிடப் பட்டபரப்பு (கணிதம்)

area drain : (கம்.) பரப்பிட வடிகால்: வேறுவகையில் நீரை வெளியேற்ற முடியாதிருக்கிற ஒரு நில வரையின் நுழைவாயிலில், அல்லது சிமென்ட் பூசிய ஒடுபாதையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால். இத்தகைய வடிகால் பொதுவாக 4" அல்லது அதற்கு அதிகமான வார்ப்பிரும்புக் குழாயினால் அமைக்கப்பட்டிருக்கும். இது ஒரு வடிநீர்க்காலுடன் இணைக்கப்பட்டிருக்கும்

arena : (க. க.) வட்டரங்கு : ரோமில் இருந்தது போன்று, திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம். இங்கு பெரும்பாலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்

argon : (வேதி.) மடியம்: வளிமண்டலத்தின் அணுஎடை எண் 18 உடைய இயக்கத் திறனற்ற வாயு. இது நிறமற்றது; நைட்ரஜனை ஒத்திருப்பது; சாதாரணக் காற்றில் 0.9% அளவுக்குக் கலந்திருக்கிறது. திரவக் காற்றினை வடித்துப் பிரித்தல் மூலம் பெறப்படுகிறது. வெண்சுடர் மின் விளக்குகளில் நிரப்புவதற்காக இந்த வாயு பயன்படுகிறது

armature : (மின்.) மின்னகம்: ஒரு மின் ஆக்கப் பொறியின் கருப் பகுதி

armature coil : (மின்.) மின்னகச் சுருள்: ஒரு திசைமாற்றுப் பகுதியிலிருந்து இன்னொரு திசைமாற்றுப் பகுதிக்குச் செல்லும் சுருணையின் பகுதி; அல்லது, மின்னகத்தின் மைய உட்புரியின் காடிகளுக்குள் பொருந்துமாறு செய்வதற்குத் தேவையான துல்லியமான வடிவில் தயாரிக்கப்பட்ட மின்னகச் சுருணையின் ஒரு பகுதி

armature core (மின்.) மின்னக மைய உட்புரி: கம்பி போன்ற ஒரு சூழ்ந்த உலோகத்தின் மைய உட்புரி, இது ஒரு காந்தத்தின் துருவங்களின் அருகே சுழன்று கொண்டிருக்கும்

armature current : (மின்.) மின்னக மின்னோட்டம்: பார்க்க: (Current) மின்னோட்டம்

armature disks : (மின்.) மின்னக வட்டத் தகடு: பார்க்க: (Laminated core) மென் தகட்டு மைய உட்புரி

armature of a magnet : (மின்.) காந்த மின்னகம்: காந்தத் தன்மையைப் பாதுகாப்பதற்காக ஒரு குதிரை லாட வடிவக் காந்தத்தின் துருவங்களுக்கிடையே வைக்கப்பட்ட இரும்பு அல்லது எஃகுத் துண்டு; அல்லது ஒரு மணியின் மின்னகத்தைப் போன்று, ஒரு மின் காந்தத்தின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட ஓர் அசையும் இரும்பு அல்லது எஃகுத் துண்டு

armature reaction : (மின்.) மின்னக எதிர்வினை: ஒரு மின்னாக்கியின் காந்தச் சுற்றுக்கு எதிரான ஒருவகை எதிர்வினை. இது மின்னகத்தைச் சுழற்றுவதன் மூலம் ஏற்படுத்தப்படுகிறது

armature shaft : (மின்.) மின்னகத் தண்டு: ஒர் இயக்கியின் அல்லது மின்னாக்கியின் மைய உறுப்புகளின் அமைப்புப் பகுதிகள் இந்தத் தண்டினைச் சுற்றி ஒருங்கிணைக்கப்படுகின்றன

armature slots : (மின்.) மின்னகக் காடிகள்: மின்னகத்தின் சூழகங்கள் அல்லது உட்புழைகள். இவை ஒரு சுருளினைச் சுற்றுவதற்கு இடமளிக்கிறது

armature spider : (மின்.)மின்னக எண்காலி: ஆரைக்கதிர்க் கைகளமைந்த சட்டகம். இது ஒர் இயக்கியை அல்லது மின்னாக்கியை அதன் தண்டில் தாங்கி நிற்கிறது armature varnish: (மின்.) மின்னக வண்ண மெருகு: ஈரம் பதிப்பதற்கு எதிரான ஒரு பாதுகாப்பாக மின்னகச் சுருணைகளுக்குப் பூச்சு இடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மின்காப்பு வண்ண மெருகு

armature winding: (மின்.) மின்னகச் சுருணை: பார்க்க: (coil) சுருள்

armored cable (மின்.) கவசக் கம்பிவடம்: நெகிழ் திறனுடைய உலோக உறையினுள் அமைந்த மின் காப்பிடப்பட்ட கம்பி

Armstrong Edwin Howard: ஆம்ஸ்டிராங், எட்வின் ஹோவர்ட் (1890-1954): வானொலித் துறையில் புகழ்பெற்ற அமெரிக்கப் புத்தமைப்பாளர். கேளா மிகு உயர்விசை அலை வானொலி, எஃப். எம். வானொலி போன்ற ஒலியுணர்வை மேம்படுத்தும் பின்னுாட்ட அலைப்பு மின்சுற்றுவழிகளைக் கண்டுபிடித்துப் புகழ் பெற்றவர்

aromatic: நறுமண மருந்துப் பொருள்: நறுமணமும், இன்சுவையுமுள்ள மருந்துப் பொருள். இவை வேதியியல் கூட்டுப் பொருள்கள். இவற்றின் மூலக்கூறுகளில் கார்பன் அணுக்கள் சிலசமயம்வேறு அணுக்கள் வளைய வடிவில் அமைந்திருக்கும். சாம்பிராணி எண்ணெய் (பென்சீன்) இந்த வகையில் மிக எளிமையான கூட்டுப் பொருள்

arras: ஓவியத்திரை: அலங்காரச் சுவர் மறைப்புச் சீலை

arrester: (எந்.) தடுப்புப் பொருள்/தடுப்பான்: இயக்கத்தை நிறுத்துவதற்கு அல்ல்து மெதுவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் எந்திரவியல் சாதனம்

arresting gear: (வானூ.) தடுப்புப் பல்லிணை: விமானம் ஒரு குறிப்பிட்ட இடப்பகுதிக்குள் தரையிறங்குவதற்கு இயல்விப்பதற்காக விமானத்திலும், தரையிறங்கும் பகுதியிலும் இணைக்கப்பட்டுள்ள பல்லிணை

arresting hook: (வானூ.) தடுப்புக் கொக்கி: விமானம் தரையிறங்கும்போது தடுப்புப் பல்லிணையில் மாட்டிக்கொள்ளும் வகையில் விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள கொக்கி

arris: (வானூ.) இணை விளிம்பு வரை: ஒரு வட்டவடிவத் தூணின் இரு இடை வழிகளிடையிலான மேல்விரை. ஒரு புறக்கோணம், விளிம்பு அல்லது மேல்வரை

arrow heads: அம்புத் தலை: பரிமாணக்கோடுகளின் இறுதி முனைகளின் கூர்நுனிகள். இவை, அளவீடு குறிக்கின்ற இடத்தைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டுவன

arsenal process: (உலோ.) படைக்கொட்டில் செய்முறை: இது ஈயப்பூச்சுக்குரிய ஒரு செய்முறை. இதில் ஈயம் பூசவேண்டிய எஃகுத் தகடு, முதலில் கந்தக அமிலமும், நீரும் கலந்த ஒரு கலவையில் ஊறவைக்கப்படுகிறது; பின்னர் துப்புரவாக்கப்படுகிறது. அடுத்து, துத்தநாகமும், ஹைடிரோகுளோரிக் அமிலமும் கலந்த ஒரு கலவைப் பொருளில் தோய்க்கப்படுகிறது. அதன்பின் 80% ஈயமும், 20% வெள்ளீயமும் கலந்த உருகிய கலவையில் நன்கு முலாம் பூச்சு உண்டாக்கும் வரையில் தோய்க்கப்படுகிறது

arsenic: (வேதி.) உள்ளியம்: வெள்ளி போன்ற நிறமுடைய, படிக வடிவிலான உலோகத்தின் தோற்ற வடிவுடைய பொருள். இது சில சமயம் இயற்கையில் கிடைக்கிறது. வதங்கிய உள்ளியத் தாதுக்களைக் காய்ச்சி வடித்து இது பெறப்படுகிறது. மருந்துகள், பூச்சிக்கொல்லிகள், உள்ளிய உப்புகள், உலோகக் கலவை ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது

artefact : கை வேலைப்பாடு : இயற்கையாக அல்லாமல் மனிதன் கருவி கொண்டு செய்த கலைத் தொழில் கை வேலைப்பாட்டுப் பொருள்

செயற்கைத் திசு: நுண்ணோக்காடியால் பார்க்கும்போது ஒரு திசுவில் காணப்படும் இயற்கையாக அல்லாமல் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள ஒரு பொருள்.

arterioles : (உட) குருதிநாடி: தமனிகளிலிருந்து குருதிநாளங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறிய இரத்த நாடிகள். பின்னர் சிரைகள் மூலம் இரத்தம் இதயத்திற்குச் செல்லும்

artesian well ; ஆழ்க்குழாய்க் கிணறு : பூமிக்குள் தண்ணிர் ஊற்றெழுந்து மேலெழுந்து வரும்வரை ஆழமாகக் குழாய்களை இறக்கி, அமைக்கப்படும் குழாய்க் கிணறு. இதில் நீர் தன் சொந்த அழுத்தம் காரணமாக நீர் மேலெழுந்து வருகிறது

arthropoda : (உயி) தோட்டு உடலிகள் : நண்டுகள், சிலந்திகள், தேள்கள் போன்ற ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்கள்

articulated-type connecting rod: (தானி.) மூட்டு வகை இணைப்புத்தண்டு: V.Y.X அல்லது ஆரை எஞ்சின்களில் பயன்படுத்தப்படும் ஒரு வகைத் தண்டு. இதில் தண்டுகளின் திருகுழுனை, ஒரு பிரதானத் தண்டுடன் இணைக்கப்படுகிறது

artificer: கைவினைஞர்: புதியன புனையும் ஆற்றலுள்ள ஒரு பொறிவலர்; கருவிகளைக் கையாள்வதில் தேர்ந்தவர்

artificial: செயற்கையானது: பொய்யானது அல்லது இயற்கையல்லாதது போலியானது

artificial horizont (வானூ.) செயற்கைத் தொடுவானம்: (1) உண்மையான அடிவானத்தைப் பொறுத்து ஒரு விமானம் எவ் வளவு உயரத்தில் பறக்கிறது என்பதை குறிக்கும் ஒரு சாதனம்

(2) ஒரு நீர்வழிச்செலுத்து கருவியில், ஒரு திரவ மட்டம் போன்ற ஓர் இயற்கையான தொடுவானத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் சாதனம்

artificial magnet (மின்.) செயற்கைக் காந்தம்: இயற்கையான காந்தத்திலிருந்து மாறுபட்டு, காந்தத் தனமை ஏற்றப்படட ஒரு காந்தம்

artificial stone: செயற்கைக் கல் : கல் போன்று தோன்றும் வகையில் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட ஓர் உற்பத்திப் பொருள். கல்லைத் தூளாக்கி சிமென்டுடன் கலந்து தயாரிக்கும் கல். சாதாரணமாகத் தயாரிக்கப்படும் ஒருவகைச் செயற்கைக் கல்

artillery-type wheel: (தானி.எந் ) பீரங்கி வகைச் சக்கரம் : உலோகக் குடத்துடனும். புறவட்டப் பகுதியுடனும் இணைக்கப்பட்ட மர ஆரைகள் பொருத்தப்பட்ட சக்கரம்

artisan : கம்மியர் : கைவினைஞர் கைகளைப் பயன்படுத்தி உலோகங்கள்,மரம் முதலியவற்றில் பொருள்களைத் தயாரிக்கும் தொழிலாளி

art metal: கலை உலோகம்: கலையழகுமிக்க வடிவங்களாக வடிவமைக்கப்பட்ட உலோகம் asafoetida: (மருந்.) பெருங்காயம்: சதகுப்பைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடியிலிருந்து கிடைக்கும் பிசின். இது மிகவும் காரமணம் கொண்டது. இது நரம்புக் கோளாறுகளுக்கான மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது

asbestine : (வண்.) கல்கார் இயல்புடைய :வர்ணங்கள் தயாரிப்பதில் மிகுதியாகப் பயன்படுத்தப்படும் ஒருவகை மக்னீசியம் சிலிக்கேட்டு கரைசலில் வண்ண நிறமியை நிலை நிறுத்தி வைத்துக் கொள்ளவும், வண்ணப் படலங்களைக் கட்டுறுத்தி வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. "ஃபிரெஞ்சுச் சுண்ணம்" 'டால்க்' என்ற பெயர்களிலும் இது விற்பனையாகிறது

asbestos : கல்நார் : இழை வகையைச் சேர்ந்த தகட்டியல் கணிப்பொருள் வகை. இது மிக அதிக வெப்பத்தையும் தாங்கக் கூடியது. அதனால் தீக்கிரையாகாதது. அமிலங்களாலும் இது பாதிக்கப்படுவதில்லை. இதனைக் கொண்டு தீக்கிரையாகாத ஆடைகள் தயாரிக்கிறார்கள். வாணிக முறையில் கிடைக்கும் கல்நாரில் பெரும்பகுதி கனடா நாட்டிலிருந்து கிடைக்கிறது. தீப்பிடிக்காத ஆடைகள், நாடக அரங்குகளின் திரைகள், கட்டுமானப் பொருள்கள், தடைகள் உள்வரிப் பூச்சு முதலியவற்றுக்கு இது பயன்படுகிறது

asbestos shingles : (க.க.) கல்நார் மரப்பாவோடு : மரப்பாவோடுகளின் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட தீப்பிடிக்காத கூரை ஒடு. இதில் கல்நார் முதன்மையான பகுதியாக அமைந்திருக்கும்

ascaris : (உட.) சிறுகுடற்புழு: குடலிலுள்ள வளையப் புழுக்கள் போன்ற புழுக்கள்

ascender : (அச்சு) ஏறுமுகம் :அச்சுத் துறையில் ஆங்கில நெடுங் கணக்கில் b,d,h போன்ற சிற்றெழுத்து வடிவங்களில் எழுத்தின் உடற்பகுதியிலிருந்து மேல்நோக்கி நீண்டிருக்கும் எழுத்தின் பகுதி

ash : சாம்பல் (1) நிலக்கரியிலுள்ள எரியத்தக்க தாதுப்பொருள்களில் எரிந்தவைப் போக எஞ்சியிருக்கும் பகுதி. இது நிலக்கரியிலுள்ள கரிம்ப் பொருளாகும். இதற்கு வெப்ப ஆற்றல் எதுவுமில்லை

(2) அசோக மரம்: (fraxinus) தேவதாரு இனத்தைச் சார்ந்த கட்டுமானத்திற்குச் சிறந்த மர வகை இது. இளவண்ணமுடையது. சொர சொரப்பானது. சக்கரங்களின் ஆரைக் கால்களுக்கும் குடங்களுக்கும், சம்மட்டிக் கைபிடி களுக்கும், பொதுவாக நெகிழ்திறனும் வலிமையும் வாய்ந்த மரப்பொருள்களைத் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது

ashing : (குழை.) மெருகேற்றல்: இது மெருகேற்றுவதற்கான ஒரு முறை. ஒரு சொரசொரப்பான உராய்வுப் பொருள் பூசிய மெருகேற்றும் சக்கரத்தின் உதவியால் இது செய்யப்படுகிறது

ashlar : (தச்சு.) மேவுகல் : செங்கல் போலச் சதுக்கமாகச் செதுக்கப்பட்ட கட்டுமானக் கல்

aspect ratio: பார்க்கும் கோணவிகிதம் : விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் நடுநிலை நாண் வரையில் இடையகல அளவின் விகிதம் . அதாவது விமானத்தின் காற்றழுத்தத்தளத்தின் மொத்தப் பரப்பளவில், பெரும் இடையகல அளவின் வர்க்கத்தின் விகிதம் aspen: (மர.) காட்டரசு: இது ஒரு மர வகை. இதனை பாப்புலஸ் டிரிமுலாய்டெஸ்(populus tremuloides) அல்லது பர்ப்புலஸ் கிராண்டிடன் அட்டா (populus grandiden tatac) எனும் அறிவியல் பெயரில் அழைப்பர். இது அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் காணப்படும். ஒரு மரம். இது ஊசியிலை மரம் 'ஹெம்லாக்' என்ற தாவரம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக காகிதக்கூழ் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. மற்றவகையில் இதற்கு வாணிக மதிப்பு எதுவுமில்லை. இந்த மரம் 12-15 மீட்டர் உயரம் வளரும். இது எளிதில் முறியக்கூடியது. ஒருகன அடி மரத்தின் எடை 11-3 கிலோ அளவு இருக்கும்

asphalt: (கனி.) புகைக்கீல்: இது ஒரு கனிம நிலக்கீல்; இது நிலக்கீலார்ந்த தன்மையுடையது. இதனை தளத்திற்கும், கூரைக்கும் பயன்படுத்துகிறார்கள்

asphalt oil : (வேதி.) புகைக்கீல் எண்ணெய்: புகைக்கீல் அல்லது ஒரு புகைக்கீல் ஆதாரப்பொருள் அடங்கிய ஒருவகை எண்ணெய். இது கன்மெழுகை ஆதாரப்பொருளாகக் கொண்ட எண்ணெயிலிருந்து வேறுபட்டது

asphaltum: (கனி.) ஆஸ்பால்ட்டம்: இது ஒரு நிலக்கீல். இது எளிதில் தீப்பற்றக்கூடிய கனிமப் பொருள். இது கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்; எளிதில் உடையக் கூடியது: பளபளப்பானது; ஆஸ்பால்ட், ஆஸ்பால்ட்டம் ஆகிய இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று மாற்றாகப்பயன் படுத்தப்படுகின்றன. இது முக்கியமாக டிரினிடாடிலும், வெனிசூலாவிலும் கிடைக்கிறது. நிலக்கரி போல் தோற்றமளிக்கும் ஒருவகை ஆஸ்பால்ட்டம் ஊட்டாவில் கிடைக்கிறது. இது 'கில்சோ னைட்' என அழைக்கப்படுகிறது

alphaltum varnish: ஆஸ்பால்ட்டம் வண்ண மெருகெண்ணெய்: இதில் மிகச் சிறந்த தரம் வாய்ந்தது 'கில்சோனைட்' எனப்படும். இது கருப்பு நிறமுடையது; விலை சற்று அதிகம். இது விரைவாகக் காய வேண்டியதாக இருக்கும் நேர்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஜப்பானிய மெருகு போன்ற விளைவினைக் கொடுக்கும். சாதாரண ஆஸ்பால்ட்டம் வண்ண மெருகெண்ணெய் முக்கியமாக வெப்பத்தையும் அமிலத் தன்மையையும் எதிர்க்கும் இயல்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மரம் போன்ற ஈர்க்கும் பொருள் மீது இதனைப் பூசினால் இதன் நிறம் கருப்பாகும். ஆனால், உலோகப் பரப்பின் மீது பூசும் போது அதன் நிறம் பழுப்பாக இருக்கும். மின்கலங்கள் தயாரிப்பதற்கு இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது

asphyxia: (நோ.) மூச்சுத்தடை: இரத்தத்தில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால் ஏற்படும் மூச்சுத் திணறல்

assay: கலவை அளவு மதிப்பீடு: தாதுப்பொருளில் விலையுயர்ந்த உலோகம் எந்த அளவு அடங்கியிருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காகத் தாதுப் பொருள்களைப் பகுப்பாய்வு செய்தல்

assemble: (பட்.) (ஒன்றிணைத்தல்): ஒர் எந்திரத்தின் உறுப்புகளை அல்லது வேறு உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் பகுதிகளை அதனதன் இடத்தில் ஒருங்கிணைத்து வைத்தல்

assembled car: (தானி.) ஒன்றிணைத்த உந்து: எஞ்சின்கள், அச்சுகள், இயக்குபிடிப் பல்லிணை, உடல் போன்ற பல்வேறு உறுப்புகளை தனித்தனித் தயாரிப்பாளர் களிடமிருந்து விலைக்கு வாங்கி, ஒரு தொழிற்சாலையில் ஒருங்கிணைக்கப்பட்ட உந்து

assembling: ஒன்றிணைத்தல்: ஓர் எந்திரவியலில் அடங்கிய உறுப்புகளை அந்தந்த இடத்தில் சரியாகப் பொருத்தி ஒன்றிணைத்தல்

assembly line: ஒருங்கிணைப்புப் பிரிவு: பகுதி பகுதியாக உறுப்புகளைத் தயாரித்துப் பின்னர் ஒருங்கிணைத்து உந்துகளைத் தயாரிக்கும் முறை முதன்முதலில் உந்து தயாரிப்புத் தொழிலில் புகுத்தப்பட்டது. இன்று இந்த முறை ஏராளமான தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இந்தப் பிரிவு இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும். அது இயங்கும் போதே தொழிலாளர்கள் உறுப்புகளை இணைத்து விடுவார்கள்

assets: சொத்துடைமை: கடன்கள் முதலியவற்றை அடைப்பதற்குக் கிடைப்பனவாகவுள்ள பணத்தொகை அல்லது மாற்றத்தக்க சொத்து

assimilation: (உட.) செறிமானம் : உணவை உட்கொள்வதும், அதனை உடல் சத்துகளாக்கி எடுத்துக் கொள்வதும் செறிமானம் எனப்படும்

assume : புனைந்துகொள்: ஆராயாது ஊகஞ் செய்து கொள்ளுதல்

A-stage rasins: (குழை.) நிலை நிறுத்துப் பிசின்கள் : சூட்டால் நிலையாக இறுகிவிடும் தன்மையுடைய பிசின்கள். இவை கரையக் கூடியனவாகவும், எளிதில் உருகி இளகக் கூடியனவாகவும் இருக்கும். தொடக்க நிலையில் மட்டுமே வினை புரியக்கூடியவை. செறிவுறுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பிசினின் இயல்பான நிலை இதுவாகும்

astatic galvanometer : (மின்.) நிலையற்ற மின்னோட்ட மானி : நிலையற்ற ஊசிகளைப் பயன்படுத்தி பூமியின் காந்தத் தன்மையின் விளைவினை மட்டுப்படுத்தக் கூடியதும் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் காட்டக் கூடியதுமான ஒரு மின்னோட்ட மானி

asteroid: (விண்.) விண்கற்கள்: செவ்வாய்க்கும், வியாழனுக்குமிடையே கோள்களுடன் உடனொத்துக் கதிரவனைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் நுண்கோள்கள்

asthma: (நோயி.) மூச்சு இழைப்பு நோய் (ஆஸ்த்மா): நுரையீரல்களுக்குச் செல்லும் குழாய்கள் திடீரெனச் சுருங்குவதால் ஏற்படும் மூச்சுத் தடையுடன் கூடிய இருமல் நோய்

astigmatism : (நோயி.) உருட்சிப்பிழை: கண்பார்வையின் முனைப்பமைதிக் கேடு

astragal : (க. க.) கண்ணறைத் தாங்கி: ஒரு சிறிய அரைவட்ட வடிவ வார்ப்படம். இது அலங்கார வேலைப்பாடுகளுடனோ இல்லாமலோ இருக்கும்.பெரும்பாலும் கதவுகளுக்கிடையிலான இணைப்புகளைத் தாங்குவதற்குப் பயன் படுத்தப்படுகிறது

astrobiology: வான்கோள் உயிரியல் : வான்கோளங்களிலுள்ள உயிர்களைக் கண்டுபிடித்து, அவற்றின் உயிர்வாழ்க்கை பற்றி ஆராய்ந்தறியும் அறிவியல் துறை

astrogation: விண்வெளி மீகாமம்: விண்வெளியில் விண்வெளிக் கலங்களை அவற்றுக்குரிய திசைகளில் செலுத்துதல்

astronaut: விண்வெளி வீரர்: விண்வெளியில் பயணம் செய்யும் வீரர். இவர் 'அண்டவெளி வீரர்' என்றும் அழைக்கப்படுவார் astronics: (விண்) விண்வெளி மின்னணுவியல்: விண்வெளிப் பயணங்களின் தேவைகளுக்கேற்ப மின்னணுவியலை மாற்றியமைக்கும் அறிவியல்

astrophysics (இயற்) வான்கோளவியல்; வான்கோளங்களின் இயற்பியல், வேதியியல் பண்புகளை ஆராயும் அறிவியல், விண்மீன் களின் இயல்பு, அவற்றின் வேதியியல் தனிமங்கள், வெப்பநிலை, ஒளியாற்றல் முதலியவற்றை ஆராய்தல்

asymmetrical : (மின்) பன்மடி அதிர்ப்பி:ஏற்றத்தாழ்வான மின் கடத்திக் கால அளவுகள் காரணமாக ஒவ்வொரு குழலிலிருந்தும் சமமில்லாத அலைகளை உண்டாக்கும் பன்மடி அதிர்ப்பி

asymptote :(கணி.) தொடர் வரை: வளைகோட்டுடன் இணையாது அணுகிக் கொண்டே செல்லும் நேர்க் கோடு

asynchronous : (மின்.) கால இசை வின்மை :ஒரே அலைவெண் கொண்டிராமல்,இசைவு ஒவ்வாக் காலப் பண்பளவுடைய நிகழ்வு

atheroma : (நோயி) தமனி வீக்கம்: தமனிகளின் உட்படலம் தடித்தும் வீங்கியும் இருத்தல்

athlete's foot : (நோயி) பாதத் தடிப்பு நோய்:ஒரு வகைப் பூஞ்சணத்தினால் விளையாட்டு வீரர்களின் பாதத்தோலில் முரட்டுத் தனமும் எரிச்சலும் உண்டாக்கும் நோய்

atlas bone : (உட) கழுத்தெலும்பு: மண்டை ஓட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப் பூட்டு

atmosphere : . (இயற்) காற்று மண்டலம் : பூமியையும், வேறு சில கோளங்களை சூழ்ந்திருக்கும் வாயுக்கள் சூழ்ந்த மண்டலம்

atmospherics : (மின்) இடையோசைகள்: வானொலி, தொலைபேசி போன்றவற்றில் ஏற்புகளைத் தடைப்படுத்தும் இடை யோசைகள்

atmospheric pressure : (இயற்) வாயு மண்டல அழுத்தம் : பூமிக்கு மேலே உள்ள காற்றின் எடையினால் ஏற்படும் அழுத்தம். இந்த அழுத்தம் கடல் மட்டத்தில் ஒரு சதுர அங்குலத் திற்கு 14.7 இராத்தல் என்ற விகிதத்தில் இருக்கும். 14.7 இராத்தல் வாயுமண்டல அழுத்தமானது 29.92" உயரத்தில் பாதரசப்பத்தியைத் தாங்கி நிற்கும்

atom : அணு : ஒரு வேதியியல் மாற்றத்தில் பங்கு கொள்கிற ஒரு தனிமத்தின் மிகச் சிறிய துகள் என ஓர் அணுவைக் கருதலாம். இது 'புரோட்டான்' எனப்படும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர் மின்னாற்றல் கொண்ட ஒரு கரு மையத்தைக் கொண்டிருக்கும் இந்த புரோட்டான்களைச் சுற்றி 'எலெக்டிரான்கள்' எனப்படும் எதிர்மின்னாற்றல் கொண்ட உள்ளணுத் துகள்கள் சுழன்று கொண்டிருக்கும். ஓர் அணு, சமநிலை மின்னாற்றல் உடையதாக அமைந்திருக்கும்

atomic arc welding : (பற்) அணுச்சுடர் பற்ற வைப்பு: ஒரு வகைச்சுடர் பறற வைப்பு முறை. இதில் ஹைட்ரஜன் செல்லும் போது அணு ஹைட்ரஜனாக மாறி, மறுபடியும் மூலக்கூற்று ஹைட்ரஜனாக மாறுவதால் பற்ற வைப்பதற்கான வெப்பம் உண்டாகிறது Atomic bomb : அணுகுண்டு: இது ஒரு வெடிக்கும் சாதனம். யுரேனியம் 235 அல்லது புளுட்டோனியத்தின் அணுக்களின் மையக்கரு சிதைவுறுவதன் மூலம் அந்தப் பொருள் எரியாற்றலாக மாறுகிறது. இது முதன்முதலில் 1945இல் நியூ மெக்சிக்கோவில் பயன்படுத்தப்பட்டது

atomic clock: (விண்) இயக்கக் கடிகாரம் : இது மிகத் துல்லியமாக நேரம் காட்டும் கடிகாரம். இது ஒரு மின்னியல் அலைப்பி மூலம் இயக்கப்படுகிறது. ஓர் அணுவியல் அமைப்பின் இயற்கையான அதிர்வு அலைவெண் மூலம் முறைப்படுத்தப்படுகிறது

atomic energy : அணு ஆற்றல்: பார்க்க: அணுவியல் ஆற்றல்

atomic hydrogen welding : (பற்). அணு ஹைட்ரஜன் பற்ற வைப்பு: இது ஒரு மாற்று மின்னோட்ட மின் சுடர் பற்ற வைப்பு முறை. இதில் ஒரு ஹைட்ரஜன் சூழலிலுள்ள இரு மின் முனைகளுக்கிடையிலுள்ள ஒரு மின் சுடரிலிருந்து வெப்பம் பெறப்படுகிறது

atomic number : (வேதி) அணு எண்: ஓர் அணுவில் உள்ள கோளக எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை

atomic theory : (வேதி) அணுக்கொள்கை : அனைத்துப் பொருள்களும் நுண்ணிய அணுக்கள் என்னும் உள்ளணுத் துகள்களாலானவை என்னும் கொள்கை

atomic weight : (வேதி) அணு எடை : மற்றொரு தனிமத்தைத் தர அளவுத் திட்டமாகக் கொண்டு ஒப்பிடும்போது ஒரு தனிமத்திலுள்ள அணுவின் எடை. பொதுவாக அந்த மற்றொரு தனிமம், ஹைட்ரஜனாக இருக்கும்; அதன் அணு எடை 1

atomization : (தானி) அணுவாக்குதல்: நீர்மங்களை நுண் திவலைகளாக மாற்றுதல்

atomize : (குளி) அணுக்களாகக் குறை : நீர்மம் எதனையும் புகை அல்லது தூசு போன்று தோன்று மாறு நுண் திவலைகளாக்குதல்

atomizer : அணுவாக்கக் கருவி : நீர்மங்களை நுண் திவலைகளாக்கும் ஒரு கருவி

atrium : (க.க.) வாயில் முகப்பு : திருக்கோயில் மேடிட்ட வாயில் முகப்பு

attachment : (எந்) இணைப்புக் கருவி: ஓர் எந்திரத்தின் செயல் திறனை அல்லது செயல் தரத்தை மேம்படுத்துவத்ற்கு அதனுடன் இணைத்துக் கொள்ளத்தக்க ஒரு சாதனம்

attachment plug : (மின்) இணைப்பு முனை : நெகிழ் திறமுடைய ஒரு கட்டிழையின் நுனியில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய முனை இதனைக் குதை குழியில் ஆதாரப் பலகையில் பொருத்தி ஒரு சாதனத்தில் மின்னோட்டம் பாயுமாறு செய்யலாம்

attenuation : (மின்) செறிவுக் குறைவு : செறிவு வீச்சு குறைதல்

attenuator : (மின்) . செறிவுக் குறைப்பான் :மின்அழுத்தம், மின் விசை அளவு, மின்னோட்டம் ஆகியவற்றின் செறிவினை வேண் டிய அளவுக்குக் குறைப்பதற்குப் பயன்படும் தடைகளின் தொகுதி

attic : (க.க.) மேன்மாடச் சிற்றறை: இக்காலத்துக் கட்டுமானங்களில் மேல் மாடத்தின் கூரைக்கும் முகட்டுக்கும் இடையிலுள்ள இடைவெளி. பண்டையக் கட்டு மானங்களில், கட்டிட உச்சியின் சிற்ப வேலைப்பாடு அமைந்த பிதுக்கத்திற்கு மேல் நீட்டிக் கொண்டிருக்கும் பகுதி

attic fan :(குளி.) புறம் போக்கி விசிறி: கட்டிடத்திலிருந்து சூடான காற்றை வெளியேற்றி அக்கட்டிடத்தைக் குளிர்விப்பதற்கு கட்டிடத்தின் மேற் பகுதியில் உள்ள புறம் போக்கி விசிறி

attitude : (வானூ) ஏற்றக் கோணம்: ஒரு விமானம் தனது ஊடச்சின் சார்வு மட்டத்திலிருந்து அடிவானத்திற்கு மேலெழும் கோணத்தின் அளவு

attitude indicator : (வானூ) ஏற்ற கோணங்காட்டி: அடிவானத்திற்கு மேலே விமானத்தின் நிலையை விமானிக்குக் காட்டக்கூடிய ஒரு சுழல்மானிக் கருவி. இதனை உயரங்காட்டி என்றும் அழைப்பர்

attraction : (மின்) கவர்ச்சி : மாறுபட்ட இரு காந்தத் துருவங்களுக்கு (வடதுருவம், தென்துருவம்) இடையே, அல்லது மாறுபட்ட இரு நிலையான மின்னேற்றங்களுக்கு (+ , -) இடையே செயற்படும் இழுப்புவிசை அல்லது விசை

audio (i hear) : கேட்பொலி : கேட்கும் ஒலியினைக் குறிப்பது. ஒலித்தகவல்களைக் கொண்டு செல்லும் மின்தூண்டு விசை

audio - frequency : (மின்) கேட்பொலி அலைவெண் : மனிதரின் காதுக்குக் கேட்கக்கூடிய அளவுக்கு மின்சுற்றுகளில் ஏற்றப்படும் மின்னேற்ற ஓட்டத்தின் விகிதம். இது வினாடிக்கு 16 முதல் 16,000 வரையிலான அதிர்வுகளைக் கொண்டிருக்கும்

audiometer : (மின்) ஒலிமானி: ஒலி அலைகளின் செறிவினை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி

audion : (மின்.) ஆடியோன் : டாக்டர் லீ டிஃபாரஸ்ட் கண்டுபிடித்த முதலாவது மூன்று மின் முனைக்குழல்

auger: (க.வே.) துரப்பணம்: மரத்தைத் துளைக்கக்கூடிய ஒரு பெரிய கருவி. இதில் கருவிக்கும் செங்கோணத்தில் கைப்பிடி அமைந்திருக்கும். வெவ்வேறு நோக்கங்களுக்காக பல்வேறு வகை துரப்பணங்கள் செய்யப்படுகின்றன

auger bit: தமருசி : கைப்பிடியில்லாத ஒரு துளைக்குங் கருவி. இது இடுக்கி திருப்புளியில் பயன்படுத்தப்படுகிறது

aurai transmitter: (மின்) காற்று மின்செலுத்தி : தொலைக்காட்சி நிலையத்திலுள்ள ஒலிச்செய்திகளை ஒளிப்ரப்புவதற்கான செலுத்தி

auricle : (உட.)

(1) காது மடல்: நுரையீரலுக்கு உயிரினங்களின் அடிக்காது மடல். (2) இதய மேலறை: இதயத்தின் மேலறைகள் இரண்டனுள் ஒன்று. இரண்டு கீழ றைகளும் இறைப்பான்கள் போன்று செயற்படுகின்றன

auriferous : பொன் தருகிற; பொன் விளைகிற : தங்கம் தருகிற அல்லது தங்கத்தை உட்கொண்டிருக்கிற ஒரு பொருள்

aurora : (விண்.) துருவ மின்னொளி: இதனை வடதுருவ, விண்ணொளி (aurora borealis) என்றும், தென்துருவ விண்ணொளி (aurora austratis) என்றும் கூறுவர். பூமியின் காந்தப்புலத்திலுள்ள புரோட்டான்கள் போன்ற மின்னேற்றிய துகள்கள், பூமியின் வாச மண்டலத்துடன் வினைபுரிவதன் மூலம் மிக உயரத்தில் உண்டாகும் மின்னொளி

austenite : (உலோ.) ஆஸ்டினைட்: பியர்லைட் உலோகம் வெப்பப் பெருக்கத் தாழ்நிலைக்கு மேல் உருமாறியிருக்கும் நிலை

austenitic alloy steels: (உலோ.) ஆஸ்டினைடிக் உலோகக் கலவை : எஃகு படிக வகையினைச் சேர்ந்த இரும்பிலுள்ள கார்பனின் ஒரு திடக்கரைசலாகிய ஆன்டீனைடிக் என்ற உலோகக் கலவையை முழுவதுமாகவோ, பெருமளவிலோ கொண்ட எஃகு. இத்தகைய எஃகு குறைந்த அளவு விறைப்பு விசையுடையது; மென்மையானது; எளிதில் வளைந்து கொடுக்கும் தன்மையுள்ளது; காந்தத் தன்மையற்றது. புகழ்பெற்ற பிரிட்டிஷ் உலோகவியல் வல்லுநரான சர் ராபர்ட்ஸ் ஆஸ்டீன் என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது

autodyne receiver: (மின்.) தன் விசையழுத்த வானொலி : மின்னலைத் தடங்காண் கருவியையும். மின் அலைப்பியையும் பயன்படுத்தும் வானொலி அலைவாங்கி மின் சுற்றுவழி

autogenous welding : (பட்.) தன் முனைப்புப் பற்றவைப்பு : அழுத்தமூட்டுதலோ சம்மட்டியால் அடித்தலோ இல்லாமலும், எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப் பொருள் இல்லாமலும் கடும் வெப்பத்தினால் உருக்கி இளக்குவதன் மூலமாகவே உலோகங்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு வகைப் பற்றவைப்பு முறை. எளிதில் உருகுவதற்காகச் சேர்க்கப்படும் கலவைப் பொருளும் பற்றவைப்புக் கோலும் பயன்படுத்தப்படுகின்ற வாயுப் பற்றவைப்பு முறைக்கும் இச்சொல்லமைப்புப் பொருந்தும்

autogiro : (வானூ.) சுழல் விமானம் : இது ஒரு வகைச் சுழல் விமானம். இதில் ஏறத்தாழ ஒரு செங்குத்தான அச்சில் காற்றியக்க விசைகளின் மூலமாகச் சுழல்கின்ற காற்றழுத்தத் தளங்களிலிருந்து விமானத்திற்கு பறக்கும் போது ஆதாரம் கிடைக்கிறது. அத்துடன் சமச்சீரான எதிர்ப்புறங்களிலுள்ள மேல்நோக்கிய தூக்காற்றல்

auto-intoxication : (உட.) தன்னஞ் சூட்டல்: உடலில் உற்பத்தியாகும் பொருள்களினாலேயே உடலில் ஏற்படும் நச்சுத் தன்மை

autolysis : (உட.) உயிரணு அழிவு : உடலிலுள்ள உயிரணுக்கள் உடலினின்றும் வடியும் ஊன் நீரால் அழிதல்

automatic : தானியங்கி: இயக்க விசை இணைப்புகளை எந்திரம் தானாகவே இயக்கிக் கொள்ளும் முறை. கையினால் இயக்கப்படாமல் ஒர் எந்திரம் தானாகவே இயங்கும்போது அது தானியங்கி எனக் கூறப்படுகிறது

automatic center punch : (எந்.) தானியங்கி மைய அழுத்து பொறி: இதில், கைப்பிடிக்குள் அமைந் துள்ள விற்கருளால் கட்டுப்படுத்தப்படும் சம்மட்டியானது அழுத்தப்படும் போது போதிய விசையுடன் விடுபட்டு, உலோகத்தில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கி அதன் முத்திரையைப் பதிக்கும்

automatic choke : (தானி.எந்.) தானியங்கி அடைப்பு : உந்தினைக் கிளப்பும் போது தானாகவே அடைப்பு இயங்கக்கூடிய மின் விசையால் கட்டுப்படுத்தப்படும் ஒரு சாதனம்

automatic circuit breaker : (மின்.) தானியங்கி மின் முறிப்பான்: மின்னோட்டத்தின் வலிமையானது, முன்னரே தீர்மானிக்கப்பட்ட தகவான வரம்பினைத் தாண்டும் போது மின் சுற்றினை முறித்திடக்கூடிய ஒரு தானியங்கிச் சாதனம்

automatic clutch : (தானி.எந்.) தானியங்கி இறுக்கி : இயங்குறுப்புகளை வெற்றிடம் வாயிலாக ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைவு

automatic cognition : (தானி) தன்னுணர் திறன் : ஓர் எந்திரம் உற்பத்தி செய்யும் பொருளைப் பாதிக்கும் மாறியல் மதிப்புருக்களை உணர்ந்து கொள்ள அந்த எந்திரத்திற்குள்ள திறன்

automoticity . (தானி.) தானியங்கு திறன் : மனித ஆற்றலும் மூளையின் கட்டுப்பாடும் தேவைப்படும் கையால் இயங்கும் கருவிகள் போன்றவை தானாக இயங்குவதற்கு தேவையான குறைந்த அளவு திறன்

automatic cutout : (மின்) தானியங்கி வெட்டுவாய் : ஒரு மின் சுற்றிலிருந்து தக்க தருணத்தில் மின்னியல் உறுப்பு அலலது இணைப்பு எதனையும் அகற்றுவதற்கான ஒரு மின்னியல் அமைவு

automatic pilot : (வானூ) தானியங்கி வழிகாட்டி : ஒரு விமானம் பறப்பதைத் தானாகவே கட்டுப்படுத்தக்கூடிய ஓர் அமைப்பு முறை. இது முன்விசையும் எந்திர நுட்பமும் ஒருங்கிணைந்து இயங்கக் கூடியது

automatic propeller : (வானூ ) தானியங்கி விமான உந்து விசிறி : பறப்பதற்குரிய பல்வேறு சூழ்நிலைகளில், ஒரு விமானத்தின் உந்து விசிறியின் அலகுகளை மிகவும் உகந்த அளவு விசையுடன் தானாகவே சுழலும்படி செய்வதற்குரிய ஓர் எந்திர அமைவுடன் அலகுகள் இணைக்கப்பட்டுள்ள உந்து விசிறி

Automatic screw machine : தானியங்குத் திருகுப் பொறி: மரை யாணிகள், திருகாணிகள், செருகு வகைக் கப்பிகள் போன்ற சிறு உறுப்புகளை விரைவாகவும் துல்லியமாகவும் செய்வதற்கான ஒரு பொறியமைவு. இதில், உலோகச் சலாகை, தேவையான எந்திரத்திற்கு ஏற்றவாறு எந்திரத்திற்குள் செலுத்தப்படுகிறது அவ்வாறு செலுத்தியபின் எந்திர இயக்கம் தானாகவே நடைபெறுகிறது

automatic shift : (தானி.எந்) தானியங்கி திசை திருப்பி : பல்லிணைப்புகளை ஒரு வேகத்திலிருந்து மற்றொரு வேகத்திற்கு மாற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள, செலுத்துப் பல்லிணைப்புக் கட்டுப் பாட்டு அமைவு. இது பெரும்பாலும் இறுக்கி மிதி கட்டையினை அமுக்குவதன் மூலம் செய்யப்படுகிறது

automatic spark control : (தானி; எந்,) தானியங்கி பொறி வினைக் கட்டுப்பாடு : மின்விசை அல்லது எந்திர விசையிலான வெற்றிடம் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு விசை அமைவு. இதன் வாயிலாக ஒவ்வொரு நீள் உருளைக்கும் நேரம் சீராக அமைக்கப்படுகிறது

automatic stability : (வானூ) தானியங்கி உறுதிநிலை : தானாக இயக்கப்படும் இயக்கக் கட்டுப்பாடு மேற்பரப்புகளைப் பொறுத்ததாக இருக்கும் உறுதிநிலை

automatic switch : (மின்) தானியங்கி இணைப்பு விசை : தேவையான நேரங்களில் தானாகவே திறந்து மூடுகிற ஓர் இணைப்பு விசை

automatic telephone : (மின்) தானியங்கித் தொலைபேசி : ஓர் இயக்குபவரின் துணையின்றித் தானாகவே இயங்கும் இணைப்பு விசைகள் மூலம் ஒரு தொடர்பினை முழுமையாக்க அனுமதிக்கின்ற ஒரு வகைத் தொலைபேசி

automatic welding: (பற்) தானியங்கிப் பற்றவைப்பு : பற்றவைக்க வேண்டிய உறுப்புகளையும், ஒளிச் சுடரையும் தானாக இயங்கச் செய்யும் பற்றவைப்புச் சாதனம்

automation : தானியக்கம்: செய் பொருளாக்கத்தின் எல்லாப் படிகளையும் தானே இயங்கும் எந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முறைமை. இது மனித முயற்சியை மிச்சப்படுத்தும் அமைவு ஆகும்

automation: தானியங்கும் பொறி: வாழும் உயிரினங்களின் செயல்களைத் தானாகவே, போலச் செய்யும் ஒரு சாதனம் அல்லது எந்திர முறை

auto mechanics : உந்தூர்தி எந்திரவியல்: உந்துார்திகளைப் பழுது பார்க்கவும் பராமரிக்கவும் பயனாகும் நடைமுறை அறிவியல்

automobile : உந்தூர்தி : நீராவி பெட்ரோல் அல்ல்து மின்விசை மூலமாகச் செலுத்தப்படும் ஓர் ஊர்தி .களிப்பு உந்துகள், வாணிக உந்துகள், வழங்கு உந்துகள், சரக்கு உந்துகள் ஆகியவற்றையும் உள்ளடக்கும்

automobile battery:(தானி; மின்.) ஊர்திச் சேமக்கலம் :உந்து ஊர்தியின் இயக்கத்தையும், விளக்கு அமைவுகளையும் இயக்கக் கூடிய சேம மின்கலத் தொகுதி. மின்னியல் முறையில் இயங்கும் ஊர்திகளுக்கான மின்னோட்டத்தை வழங்கும் சேம மின்கலத் தொகுதி

automotive engineer : உந்தூர்திப் பொறியாளர் : உந்தூர்திகளை வடிவமைப் பதிலும், உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் தேர்ச்சி பெற்ற பொறியாளர். பொதுவாக எந்திர விசையால் இயங்கும் அனைத்து உந்தூர்திகளின் பொறியாளரையும் இது குறிக்கும்

autonomic : தன்னியக்க உறுப்புகள் : மூச்சு மண்டலம், ஜீரண மண்டலம், இதய மண்டலம் போன்ற தன்னைத்தானே கட்டுப் படுத்திக் கொண்டும் இயங்கும் உடலுறுப்புகள்

autoplate : (அச்சு) தானியல் அச்சுபாளத் தகடு : உருவ அச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப் பொருள்களில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் வளைவான தகடுகளை வார்ப்படம் செய்து இழைத்து செவ்வொழுங்கு செய்து பயன்படுத்து வதற்கு ஆயத்தமாகத் தரக்கூடிய ஒரு பொறி அமைவு

auto pulse magnetic fuel pump: (தானி எந்.)தானியியங்கி அதிர்வுக் காந்த எரிபொருள் இறைப்பி : உந்தூர்தியிலுள்ள எரி-வளி கலப் பியில் எரிபொருள் அளவினைப் பராமரிப்பதற்காக மின்விசையினால் இயக்கப்படும் ஒரு சாதனம் auto-suggestion : உள் தூண்டுதல் : ஒருவரின் உள்ளத்தில் உண்டாகும் தற்றுாண்டல். ஒருவர் தான் நோயுற்றிருப்பதாகவும், நோயுறப் போவதாகவும் கருதுதல்

auto transformer : (மின்) ஒற்றைச் சுருணை மின்விசை மாற்றி : இது மாற்றிக் கொள்ளத் தக்க ஓர் ஈடுகட்டுச் சாதனம்.இதில் மின்னோட்ட வேகத்தைத் தடுத்தாலும் திருகு கம்பிச் சுருள் ஒன்று மாறுமின்னோட்டச் சுற்றுகளில் செலுத்தப் பட்டு, அதன் மூலம் அதன் சுருணைகளில் வெவ்வேறு முனைகளில் வேறுபட்ட மின்னோட்டங்கள் பெறப்படுகின்றன. ஒரு கம்பிச் சுருள் மின் விசைமாற்றியிலிருந்து முதல் நிலை மாற்றும் துணை நிலை மின்னோட்டம் பெறலாம்

anxiliary : துணைவினை : பொதுவாக, சார் நிலையான அல்லது துணை நிலையான உதவியை அல்லது ஆதரவினை அளிக்கும் செயல் இழுத்திடும்போது துணைமையான செயல்

auxiliary air intake : (தானி) துணை காற்று உள்வாய் : உந்தூர்தி அதிவேகத்தில் இயங்கும் போது எரி-வளி கலப்பிக்குள் கூடு தலான காற்று செல்வதை அனுமதிக்கும் ஒரு திறப்பு வாய்

anxiliary airport beacon: (வானூ.) விமான நிலையத் துணை வழிகாட்டி ஒளி : இது விமான நிலையங்களிலுள்ள பிரதான வழி காட்டி ஒளிவிளக்குகளை விடக் குறைவான ஒளியாற்றல் கொண்ட ஒரு மான வழிகாட்டி ஒளி விளக்கு, இது விமான நிலைய மனையில் விமான நிலையத்தின் குறிப்பிட்ட இருப்பிடத்தைக் குறித்துக் காட்டுவதற் காக விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும். இது தொலைதூரத்திலிருந்து பார்க்கும் போது விமான நிலைய இருப்பிடத்தைக் காட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பிரதான வழிகாட்டி ஒளிவிளக்கிலிருந்து வேறுபட்டது

auxiliary air-valve carburetor: (தானி. எந்.) துணை நிலைக்காற்று ஒரதர் எரி-வளி கலப்பி : எரிபொருள் கலவையின் திண்மையினைக் கட்டுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு காற்று ஒரதர் கொண்ட எரி.வளி கலப்பி

auxiliary airway beacon : (வானூ.) வான்வழித் துணை வழிகாட்டி ஒளி : இது வான் வழியிலுள்ள முதன்மையான வழிகாட்டி ஒளிவிளக்கு. இது வான் வழியிலுள்ள நிலப்பகுதியின் சிறப்பு அம்சங்களைக் குறித்துக் காட்டுகிற, அல்லது முதன்மை ஒளிவிளக்குக்குத் துணையாக இருப்பது

average : சராசரி நிரலளவு: இடைநிலையான ஒரு தொகை தர அளவு, பல எண்களுக்குச் சரி சமமான இடைநிலையிலுள்ள நிகர அளவு

aviation : (வானூ.) வான்பயணக் கலை : விமானங்களை இயக்குவதற்கான கலை அல்லது அறிவியல்

aviator : (வானூ) வானூர்தியாளர்/வானோடி: காற்றைவிடக் கனமான வானூர்தியின் வலவர்

avodire : (மர) ஆவோடை மரம் : பெட்டிகள் செய்வதற்கேற்ற நேர்த்தியான மரம். இதன் தாயகம் ஆஃப்ரிக்க மேற்குக் கடலோரம். இது 1925இல் அமெரிக்காவில் புகுத்தப்பட்டது. இதன் வண்ணம் மங்கலான வெண்மையிலிருந்து பொன் மஞ்சள் நிறம் வரை இருக்கும். இதற்கு அமெரிக்காவில் மிகுந்த கிராக்கி இருந்து வருகிறது avionics : (மின்னி.) வான்பயண மின்னணுவியல் : வான்பயண மின்னணுவியலைக் குறிக்கும் சொல்

A. w. G. (American wire gauge): அமெரிக்கக் கம்பி அளவி; மின்னியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் கம்பிகளின் வடிவளவினைக் கணக்கிடுவதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு தர அளவு

awi : தமருசி : ஆணிகளிலும் திருகாணிகளிலும் இழையாகப் பயன்படும். தோலிலும் துளையிடுவதற்கான ஒரு சிறிய கூர்நுனியுடைய கருவி

awl haft : தமருசிக் கைப்பிடி

axial force : (பொறி.) ஊடச்சு விசை: பட்டக வடிவிலான ஒரு பொருளின் பகுதியின் மீது ஒரே சீராகச் செயற்படுகிற ஒரு விசை. இதனால், அதன் இணைவாக்க விளைவு, அந்தப் பொருளின் ஊடச்சுக்கு ஒருங்கிணைவாக இருக்கிறது

axial leads :(மின்.) ஊடச்சு முனைகள்: ஓர் உள்ளுறுப்பின் ஊடச்சுடன் இணைக்கப்பட்டுள்ள முனைகள்

axial pitch :ஊடச்சு இடை வெளியளவு : இதனைப் பொதுவாக 'இடை வெளியளவு' என்று அழைப்பர். ஒரு சுற்றுக்கு முன்னேறும் தூரத்தின் அளவு

axial - type engine: (வானூ) ஊடச்சு வகைப் பொறி : பிரதான சுழல், தண்டுக்கு இணையாகவும்,அதிலிருந்து சமதூரத்திலும் உள்ள நீள் உருளைகளைக் கொண்ட ஒரு பொறி.இதில் ஒரு அரைவட்டத் தகடு, அல்லது சுழல் பல்வெட்டுத் தகடு அல்லது பல்லிணைப்புகள் வாயிலாக சுழல் தண்டுக்கு விசை மாற்றப்படுகிறது

axiom:(கணி.) வெளிப்படை உண்மை : உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மைத் தத்துவம்

axis : (கணி.) செங்கோடு; சில வடிவ கணித அல்லது எந்திரவியல் தொடர்புகளுக்கு இணையாகக் கருதப்படும் ஒரு நடுக்கோடு. ஒரு பொருள் எந்தப் புள்ளியைச் சுற்றி அல்லது எந்தக் கோட்டின் மீது சுழல்கிறதோ அந்தப் புள்ளி அல்லது கோடு

axis of symmetry: (வடி) செவ்வொழுங்கு அச்சு: இது ஒரு கற்பனையான மையக்கோடு. இதனைச் சுற்றி செவ்வொழுங்கான வடிவ உருவம் உருவாக்கப்பட்டு, அதில் புவியீர்ப்பு மையம் குறிக்கப்படுகிறது

axis of a weld: பற்றாசு ஊடச்சு : பற்றவைப்பு உலோகத்தின் புவியீர்ப்பு மையத்திற்கு நெடுகிலும், பற்றவைப்பு உலோகத்தின் குறுக்கு வெட்டுப் பகுதிக்குச் செங்குத்தாகவுள்ள ஒரு கற்பனைக் கோடு

axle: இருசு; உந்துார்தி, பாரவண்டி. தள்ளுவண்டி முதலியவை போன்ற ஊர்திகளின் சக்கரங்களை தாங்கியுள்ள சுழல் தண்டு அல்லது சாதனம்

axon : (உட.) நரம்பணு வால்: ஓர் உறுப்பில் நரம்பு முடிவடையும் இடத்திலுள்ள அல்லது மற்றொரு நரம்புடன் அது இணையும் இடத்திலுள்ள நரம்பு உயிரணுவுக்குச் செல்லும் நரம்பு இழை ayrton galvenometer shunt : (மின்.) அயர்ட்டன் மின்னோட்ட மானி இடைக் கடத்தி: சுருணைகளின் பெருக்க விசை எப்போதும் ஒரே அளவில் இருக்குமாறு சுருணைகள் அமைக்கப்பட்ட ஒர் இடைக் கடத்தி

azimuth of a line : கோட்டு முகட்டு வட்டை : வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு

azusa : (விண்.) சுழல் நெறித் தொடர் அமைவு : ஒரு குறுகியவீச்சு சுழல் நெறித் தொடர் அமைப்பு. இது, பின் தொடரப்படும் ஒரு பொருளின் நிலையினையும் விரைவு வேகத்தையும் காட்டுகிறது
B


b.x. : (மின்.) பி. எக்ஸ். : நெகிழ் திறமுடைய ஒரு கவச வடத்தின் வாணிகப் பெயர்

babbitt : (தானி.) பாபிட் : வெள்ளியம், ஆன்டிமணி, செம்பு, ஈயம் ஆகியவை அடங்கிய ஒர் உலோகக் கலவை. தாங்கிப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

babbitts metal : (உலோ.) மென் உலோகக் கலவை : உராய்வினைத் தடுக்கும் மசகுப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக் கலவை. இது, 50 பங்கு வெள்ளியம், 2 பங்கு செம்பு, 4 பங்கு அஞ்சனம் கலந்து தயாரிக்கப்படுகிறது. மிகுந்த உராய்வுக்கு உள்ளாகும் எந்திரங்களிலும், பொறிகளிலும் தாங்கிகளுக்கு மசகு ஊட்டுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது

back முதுகுப் பகுதி :

(1) ஏடு முதலியவற்றின் மூட்டுப் பகுதி (2) விலங்கினத்தின் மேற்பகுதி

backband : (க.க.) பின்கட்டுத்தளை : ஒரு கட்டுமானச் சுவருக்கும் ஒரு சன்னலின் அல்லது கதவுக் கவிகையின் புறமுகப்புக்கும் இடையிலான இணைப்பை மூடியிருக்கும் வார்ப்படம் அல்லது மறைப்பு

backed up : (அச்சு.) பின்னிடைவுத் தாள் : இருபுறங்களிலும் சீராக அச்சிடப்பட்ட தாள்கள் "தவறான பின்னிடைவு" எனக் குறிப்பிடுவது தவறாக அச்சிட்டிருப்பதைக் குறிக்கும்

back electromotive force : (மின்.) எதிர்மின்னியக்கு விசை : அழுத்தப்பட்ட மின்னோட்டத்திற்கு எதிர்மாறான திசையில் ஒரு மின்னோட்டத்தைப் பாய்ச்ச முனைகிற அல்லது பாய்வதை எதிர்க்கிற மின்னியக்க விசையினை இது குறிக்கிறது

back filling : (க.க) : பின்னடைதூர்ப்பு (தொல் பொருளியல்) : வடிகால் அமைப்பதற்காக ஒர் அடித்தளத்திற்கு அல்லது நில்வறைக்கு வளியேயுள்ள உடைந்து போன கல்லின் அல்லது மற்ற கரடுமுரடான பொருளின் இடைவெளியை இட்டு நிரப்புதல்

back fire : (தானி; எந்.) தவறித் தீப்பற்றுதல் : உள்வெப்பாலை முதலியவற்றில் குறைபாடுடைய ஒரதர்கள், காலத் தாமதம், எரி பொருள் கலவையிலுள்ள குறைபாடு ஆகியவை காரணமாகக்கால இடந்தவறித் தீப்பற்றுதல், பல் புழைவாய் எந்திர அறையில் உண்டாகும் வெற்றிடம், பின்னோக்கிய பயணத்திற்காகத் தீப்பற்றச் செய்கிறது

backfire : (பற்.) எதிர் அனல் பொறி : உள் வெப்பாலை முதலியவற்றில் தூலம், இடந்தவறித் தீப்பற்றுதல்

back flow : (கம்.) பின்னோட்டம் : நீர் அல்லது சாக்கடை நீர் அதன் வழக்கமான போக்கிலிருந்து மாறி நேர் எதிர்த்திசையில் பாய்தல்

backflow valve : (கம்.) பின்னோட்ட ஓரதர் : சாக்கடை நீர் பின்னோக்கிப் பாய்ந்துவிடாமல் தடுப்பதற்காக வீடுகளின் அல்லது பிறகட்டிடங்களின் வடிகால்களில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சாதனம். வடிகாலில் சாக்கடை நீர்ப் பெருக்கம் ஏற்படும்போது அந்த நீர் பின்னோக்கிப் பாய்ந்து வீட்டுக்குள் புகுந்துவிடாமல் காப்பதும் வடிகாலுக்குச் சேதம் ஏற்படாமல் காப்பதும் தடுப்பதும் இதன் முக்கிய வேலை

back gear : (எந்.) பின்பல்லிணை : இது பல்லிணைச் சக்கரங்களின் ஓர் அமைப்பு முறை. ஒரு கடைசல் எந்திரத்தின் தலைப்பாகில் உள்ளது போன்ற இயக்கும் வார்ப்பட்டையின் விசையை இதன் மூலம் அதிகரிக்கலாம்

backhand welding: (பற்.) பின்புறப் பற்றவைப்பு : வாயுச்சுடர் எட்டும் திசைக்கு எதிர்த்திசையில் பற்றவைத்தல்

backing : (அச்சு.) பின்னிடைவு :

(1) நூலின் பின்பகுதியை அதன் உறையினுள் பொருந்த அமையுமாறு வலுப்படுத்தி வடிவாக்கம் செய்தல்

(2) மின் அச்சு முறையில், செப்புக் கலத்தைத் திண்மையாக்குவதற்காக அதில் உலோகத்தை இட்டு நிரப்புதல்

backing brick : (க.க.) பின்னிடைவுச் செங்கல் : ஒரு செங்கற்சுவரின் உட்பகுதி. இது பெரும்பாலும் சுவரின் முகப்புப் பகுதிக்காகப் பயன்படுத்தப்படும் செங்கல்லை விட மலிவானதாகவும், செம்மையற்றதாகவும் உள்ளது

backing lamp : (தானி; எந்) பின்னிடைவு விளக்கு : பொதுவாக மின் விளக்கும், தடுப்பு விளக்கும் ஒருங்கிணைந்துள்ள ஒரு வகை விளக்கு. இது சீருந்து பின்னோக்கிச் செல்லும்போது மட்டுமே எரியும்

backing of a joist or rafter : (மர; வேலை.) துலாக்கட்டை அல்லது இறைவாரக்கைமர ஆதாரம் : துலாக்கட்டைகளின் அகலம் மாறுபடுவதால் சமமட்டமுள்ள தளங்களை அல்லது முகடுகளை அமைப்பதற்காக, மேல் மட்டங்கள் அனைத்தும் ஒரே மட்டத்திற்கு வரும் வரையில் குறுகலான கட்டைகளைச் சம சதுக்கக் கட்டைகளாககுதல

backing of a wall : சுவரின் பின்னிடைவு : ஒரு சுவரின் கரடுமுரடான உள்முகப்புகாரை உடைந்துபடாமற் காக்கும் அணை சுவருக்குப் பின்னால் படுக்கையமைப்பாக இடப்படும் நிரப்புப் பொருள்

backing off : (பட்.) பின்னிடைவு நீக்கம் : வெட்டும்போது ஏற்படும் உராய்வினைக் குறைப்பதற்காக, வெட்டு முனையின் பின்புறமுள்ள உலோகத்தை அகற்றி விடுதல். குழாய்களில் அல்லது உலோகத் துளைப்பான்களில் இதனைக் காணலாம்

backing out : ( உலோ; வே.) பின்னிடைவு நீட்டம் : ஒரு குழாயில் அல்லது வார்ப்புருப்படிவக் கட்டையில் புரியை வெட்டி எடுத்தபிறகு எஞ்சியிருக்கும் பகுதி

backing plate : (குழை.) பின்னிடைவு தகடு : உட்புகுத்திப் பள்ளம் நிரப்பிச் செய்யப்படும் வார்ப்படத்தில், உட்புழையுள்ள அச்சுக்கட்டைகள் இயக்கு முளை, இருசு உருளைகள் முதலியவற்றுக்கு ஆதாரமாக இருக்கும் ஒரு தகடு

backing-up : (க.க)

(1) பின்னிடைவு ஆதாரம் : ஒரு சுவரின் உள் முகப்புக்கு குறைந்த தரமுடைய செங்கற்கற்களைப் பயன்படுத்தி ஆதாரம் அமைத்தல்

(2) பின்புற அச்சு : (அச்சுக்கலை) ஒரு காகிதத்தில் இரண்டாம் பக்கத்தில் அச்சடித்தல் backlash : (தானி; எந்.) பின்னுதைப்பு : இயக்கும் அழுத்தம் மாறுபடும் பொழுது பல்லிணைகளின் ஒர் இணை அல்லது ஒரு தொடர் பின்னோக்கி நகருதல். இது பற்களுக்கு இடையில் விடப்படும் இடைவெளியின் அளவுக்குச் சமமானதாக இருக்கும்

back light : பின்புற ஒளி : ஒரு பொருளுக்கு அதன் பின்புலமுள்ள ஓரிடத்திலிருந்து ஒளியூட்டுதல்

backout : (விண்.) எதிர்முகக்கணிப்பு : ஏற்கெனவே செய்து முடித்த செயல்களை எதிர்முகமாகச் செய்தல்

back pressure : (தானி; எந்.) எதிர் அழுத்த விசை :

(1) எந்திரவியல் ஒர் எஞ்சினில் தவறான காலத்திட்ட அமைப்பு, கரிமம் படிதல், அழுக்கடைந்த ஒசை மடக்கத் திண்டு ஆகியவை காரணமாக அந்த எஞ்சின் அதன் முழு ஆற்றலுடன் இயங்கத் தடை ஏற்படுகிறது. இதனால், எஞ்சினுடைய நீள் உருளைகளில் எதிர்முகமான விசை உண்டாகிறது. இதுவே எதிர் அழுத்த விசையாகும்

(2) குழாய்களிலுள்ள காற்றழுத்தம் வாயு மண்டல அழுத்தத்தை விட அதிகமாக இருத்தல்

back - rake : (எந்.) பின்சரிவு வறண்டி : நுனியிலிருந்து பின்னோக்கிச் சரிந்து செல்லும் சாய்வினைக் கொண்ட வெட்டுகருவி

backrest : (எந்.) பின்னடை ஆதாரம் : கடைசல் செய்தல் அல்லது பட்டையிடுதல் போன்ற வேலைகளின்போது நுட்பமான பொருள்களுக்கு அமைக்கப்படும் ஆதாரம்

backsaw (மர.வே.) தடித்த புற முடை ரம்பம் : கத்திக்கு வலுவேற்றுவதற்கு முதுகுப்பகுதியில் விளிம்புடைய உலோக ரம்பம். இது மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு ரம்பத்திற்த்துணை செய்யும் ஒர் அமைவு ஆகும். இதனைப் பொருத்து முனை ரம்பம் அல்லது இசைப்புக் கூர் ரம்பம் என்றும் கூறுவர்

ரம்பம்

back siphonage . (கம்.) எதிர் தூம்புக்குழாய் இயக்கம் : தும்புக் குழாய்களில் அழுத்தம், வாயு மண்டல அழுத்தத்திற்குக் குறைவாக எதிர்மறை அழுத்தமாக இருத்தல்

backup : (அச்சு.) பின்புற அச்சு : ஏற்கெனவே ஒரு புறம் அச்சிடப்பட்ட தாளின் மறுபுறத்தில் அச்சிடுதல்

backup side : (அச்சு.) பின்புற அச்சுப் பக்கம் : ஏற்கெனவே ஒரு புறம் அச்சிடப்பட்ட தாளின் எதிர்ப்புறம்

back wave : (மின்.) எதிர் அலை : தவறாகச் சமனமாக்கப்பட்ட மின் பெருக்கச் சுற்று வழிகள் காரணமாகத் தொடர்பற்ற நிலையில் ஒரு தொடர் அலை செலுத்தி முறையின்றி அலைகளை வெளிப்படுத்துதல்

bacteriology : (உயி.) பாக்டீரியாவியல் : பாக்டீரியா என்ற நுண்மங்கள் பற்றி ஆராயும் உயிரியல்.

bacteriolysion : (உயி.) நுண்ம அழிப்புப் பொருள் : நுண்மங்களை அழிக்கும் உயிரின் தற்காப்புப் பொருள்

bacteiolysis : (உயி.) நுண்ம அழிவு : உயிரின் தற்காப்புப் பொருளால் தோன்றும் நுண்ம அழிவு

bacteriosis : (நோயி.) நுண்ம நோய் : நுண்மங்களால் ஏற்படும் செடியின் நோய்.  bacteriostasis : (நோயி.) நுண்ணுயிர் அடக்கி/நுண்ம வளர்ச்சித்தடை பாக்டீரியா போன்ற நுண்மங்கள் உடலில் வளர்வதைத் தடுத்தல்

bacteriostatic : (நோயி.) நுண்மவளர்ச்சித் தடைப்பொருள் : பாக்டீரியா போன்ற நுண்மங்கள் வளர்வதைத் தடுக்கும் பொட்டாசியம் குளோரேட் போன்ற பொருள்கள்

bacteriumi (உயி.) பாக்டிரியம் : மிக நுண்ணிய உயிரி. இவை பெரும்பாலும் ஒரணுவால்ஆனது. இவற்றுள் சில நகர்ந்து செல்லக் கூடியவை. இவை தாவர இனங்களில் உண்டாகும் பூஞ்சணத்தை ஒத்த உயிர் வடிவங்கள். இவற்றுள் சில சிதைவினையும், நோய்களையும் உண்டாக்குகின்றன. எனினும், பெரும்பாலானவை பயனுடையவை. சில பாக்டீரியாக்கள் மண்ணில் வீழும் இறந்த உயிர்களை மட்கச் செய்து மண்ணோடு கலந்துவிடச் செய்கின்றன. வேறு சில பாக்டீரியாக்கள் காற்றிலிருந்து நைட்ரஜனை நிலைப்படுத்தித் தாவரங்கள் பயன்படுத்திக் கொள்ள உதவுகின்றன. பாக்டீரியா பற்றி ஆராய்வது பாக்டீரியாவியல் எனப்படும்

bad colour : (அச்சு.) தவறான வண்ணம் : அச்சிட்ட தாளில் அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக மை படிந்து உண்டாகும் தோற்றம்

bad copy: (அச்சு.) சீர்கேடான எழுத்துப்படி : எளிதில் படிக்க முடியாத அளவுக்குச் சீர்கேடாகவுள்ள எழுத்துப்படி

badger : (1) கரடி மயிர்த் துரிகை : கரடியின் மயிராலான ஒவியத் தூரிகை

(2) அகல்தளப்பரப்பு : சாய்வான வாயை உடைய அகன்ற மூலைப் பொருத்துவாய் கொண்ட தளப் பரப்பு

baffle (தானி.) தடுக்குத் தகடு : நீர், காற்று, வாயு, ஒலி போன்றவற்றின் போக்கினைத் தடுக்கிற அல்லது ஒழுங்குபடுத்துகிற தகடு

baffle plate : போக்கு மாற்றத் தகடு : நீர்த்தன்மையுள்ள பொருளின் அல்லது வாயுவின் போக்கினைத தடுக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் தகடு

bagasse : (குழை.) கரும்புச்சக்கை : கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும்போது கிடைக்கும் கழிவுப் பொருள். இது காகித அட்டைகள் தயாரிக்கப் பயன்படுகிறது

bag moulding : (குழை.) புடைப்பு வார்ப்படம் : இருபுறமும் வழவழப்புடைய முப்பரிமாணமுள்ள செயற்கையான பிசின் வகை. மெருகேற்றிய தாள்படலங்களை வானிக முறையில் தயாரிக்கும் ஒரு முறை. இதில் நெகிழ்வுடைய ரப்பர் அல்லது பிசின் பை வார்ப் படத்திற்குள் இறக்கப்பட்டு, பொருத்தப்பட்டு, காற்றழுத்தம் அல்லது வெற்றிடம் மூலமாகத் கட்டுறுதி வாய்ந்த வார்ப்படத்தில் அழுத்தப்பட்டு, வார்ப்பு வடிவம் தயாரிக்கப்படுகிறது

bail : அரை வளையம் : வண்டி குடை சாய்வதைத் தடுக்கக்கூடிய குதிரை லாட வடிவிலான ஒர் அரை வளையம்

bail out : (வானூ.) வெளியிறங்குதல் : வானூர்தியிலிருந்து குடை மிதவை மூலமாகக் கீழே இறங்குதல்

bakelite : (குழை.) பேக்கலைட் : சூட்டால் நிலையாக இறுகிவிடுந் தன்மையுடைய குழைமைப் பொருள்களின் ஒரு தொகுதியைச் சேர்ந்த ஏதேனும் பொருளுக்கான வாணிகப் பெயர். இது கடினமான ரப்பருக்கு அல்லது செல்லுலாய்டுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கைப் பிசின்.

baker - nunn camera : (விண்.) செயற்கைக்கோள் தடக்கண் காணிப்பு ஒளிப்படக்கருவி : செயற்கைக் கோள்களின் தடத்தைப் பின் தொடர்ந்து கண்காணிப்பதற்குப் பயன்படும் ஒரு பெரிய ஒளிப்படக் கருவி.

balance : (வானூ.) சமநிலை : (1) வான் (பயணவியல்) வானூர்தி சீராக வானில் பறக்கும்போது இணைவாக்க விசைத் திறனும், நெம்புதிறனும் பூஜ்ஜியமாக இருக்கின்ற ஒருநிலை.

(2) (கலை.) கண்ணுக்கு மிகவும் கவர்ச்சியாக அமையும் வகையில் ஒரு கலைப்படைப்பின் உறுப்புகள் அமையுமாறு செய்தல்.

(3) (அச்சுக்கலை.) அச்செழுத்துக் கோப்பு பல்வேறு பகுதிகளைக் கொண்டிருக்கும் போது, அவை பொருண்மையில் சமநிலையில் இருக்குமாறு அமைத்தல்.

(4) (எந்திரவியல்) எடைகளை நுண்ணியதாக நிறுத்திடக்கூடிய துலாக்கோல்.

balanced amplifier : (மின்.) சமநிலை மின்பெருக்கி : தள்ளுவிசை இழுப்பு விசை மின்பெருக்கியாக அல்லது தள்ளுவிதை, தள்ளுவிசை-மின்பெருக்கியாக இரு குழல்களை பயன்படுத்தும் மின்பெருக்கி

balanced backflow valve : (கம்.) சமநிலை பின்னோக்கப்பாய்வு ஓரதர் : பின்னோக்கிப் பாய்வதற்கான வாயில் உள்ள ஒரதர்

balanced circuit : (மின்.) சமநிலைச் சுற்றுவழி : ஒன்றுக்கொன்டான தூண்டலின் விளைவினைத் தவிர்ப்பதற்காக அருகிலுள்ள மின்னோட்டச்சுற்று வழிகளுக்கிணங்க சரியமைவு செய்யப்பட்ட ஒரு மின்னோட்டச் சுற்றுவழி. ஒரு நிலைக் கம்பியின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரே அளவு மின்விசையைக்கொண்ட ஒரு முக்கம்பி அமைப்பு

balanced core : (வார்.) சமநிலை உள்ளகம் : ஒரு முனையில் மட்டுமே ஆதாரமுடைய ஒர் உள்ளகம்

balanced modulator : (மின்.) சமநிலை அலைமாற்றி : தள்ளுவிசை இழுப்பு விசையில் ஆல்லது தள்ளு விசை-தள்ளுவிசையில் இரு குழல்களைப் பயன்படுத்தும் அலை மாற்றி. இதில் ஊர்தி அலைவெண் நீக்கம் செய்யப்படுகிறது. ஊர்திகள், ஒலி அலைமாற்றிச் சைகை ஆகியவற்றின் அலைவெண்களின் கூட்டுத் தொகையினையும்_வேறு பாட்டின்னையும் மட்டுமே வெளிப்பாடு கொண்டிருக்கும்

balanced pulleys : சமநிலைகப்பி : தாங்கிக்ளின் மீது அளவுக்கு மீறி தளர்ச்சி ஏற்படுவதைத் துடுப்பதற்காக, செயலிண்மையின் போதும் இயங்கும்போதும் சம நிலைவில் இருக்குமாறு அமைக்கப்பட்ட ஒரு கிப்பி

balanced surface : (வானூ.) சமநிலை மேற்பரப்பு : சுழல் முனையின் இரு பக்கங்களிலும் நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு கட்டுப்பாட்டு மேற்பரப்பு. சுழல் முனையைச் சுற்றிக் காற்றின் இயக்கத்தைக் குறைக்கும் வகையில் இது அமைக்கப்பட்டிருக்கும்

balance dynamic or running : (பட்.) சமநிலை விசையியக்க அல்லது ஓட்டமுறை : சுழல்தண்டுகளை அல்லது கிப்பிகள் அதிர்வு இல்லாத முறையில் ஒடுவதற்கு எற்ற வகையில் எடையினை உரியவாறு பகிர்ந்து வைத்தல் balance, static or standing : (பட்.) சமநிலை அசைவற்ற அல்லது நிலைபெற்ற : கப்பிகளை அல்லது சுழல் தண்டுகளை கத்தி முன்னகளில் வைக்கும்போது, அவை எந்த நிலையிலும் நின்று கொள்ளும் வகையில் அவற்றின் எடைகளைப் பகிர்ந்து வைத்தல். சமநிலை இல்லாவிடில், கனமான பகுதி, அடிமட்டத்திற்கு உருண்டு சென்றுவிடும்

balance weight : சமநிலை பேணும் எடைமானம் : முழுமையான சமநிலை கிடைக்கும் வகையில் ஒரு சக்கரத்தின் உள் விளிம்பில் வைக்கப்படும் எடை. இந்த எடைமானம், ஒரு நெம்புகோலின் முனையின் மீது சறுக்கிச் செல்லும். இயங்கும் பகுதி ஒன்றின் சரிசம எதிர் எடையாக அதனுடன் இது இணைக்கப்பட்டிருக்கும்

balance wheel : எந்திர இயக்குச் சக்கரம் : இது எந்திரத்தின் விசையைச் சீராக இயங்கும்படி கட்டுப்படுத்தும் ஓர் அமைவு ஆகும்

balancing machine : சமன்செய் பொறி : ஒரு சுழலும் தண்டு, சம நிலை பிறழ்ந்து இயங்கும்போது அது எந்த அளவுக்குச் சமநிலை பிறழ்ந்துள்ளது என்பதைக் கணக்கிட்டுக் காட்டி, அதனை எந்த அளவுக்குச் சீர்படுத்தவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு பொறியமைப்பு

balancing way : (பட்.) சமன்செய் தடம் : சுழல் தண்டுகள் அல்லது கப்பிகள் நிலைபெற்ற சம நிலையில் இருக்கின்றனவா என்பதைச் சோதிப்பதற்காக அமைந்த தள மட்ட வார்ப்பட்டை அல்லது கூரிய முனைத் தகடு. இந்தத் தகடு பொதுவாகக் குண்டு தாங்கிகளில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும்

balcony : மாடி முகப்பு : மாடிக் கட்டிடத்தின் சுவரிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு மேடை அல்லது மாடம், இதனைச் சிறுதுண் வரிசைத் தொகுதி அல்லது கைப்பிடிச் சுவர் சூழ்ந்திருக்கும்

balk : (மர. வே.) தூல விட்டம் : ஒரு சதுர உத்தரம் அல்லது மரத்தூலம்

balk ring : (தானி; எந்.) தூல வரி வளையம்: பல்லிணைப்புகள் சீராக இயங்குவதற்கு உராய்வினை முறை படுத்தக்கூடிய அடைகோல் அல்லது குண்டலம்

ball and claw foot : பந்து மற்றும் வளைநகக் கால் : ஒரு வளை நகத்தால் பற்றிக் கொள்ளப்பட்ட ஒரு பந்தினைப் போன்று செதுக்கப்பட்ட கால்

ball and socket joint : (உL.) பந்துக் கிண்ண மூட்டு : எலும்புகளுக்கிடையிலான மூட்டு. இதில் ஒர் உறுப்பின்முனை உருண்டையாகவும், இன்னொரு உறுப்பின் முனை கிண்ணம் போன்றும் அமைந்து, உருண்டை முனை கிண்ணத்திற்குள் பொருந்திக் கொள்வதாக இருக்கும். இதனால் மூட்டுகளைச் சுதந்திரமாக அசைக்க முடிகிறது

பந்து கிண்ண மூட்டு

ballast : சரளைக் கல் : சாலை இருப்புப் பாதையின் உடைகல்லாலான அடிபரப்பு

ball bearing : (தானி; எந்.) குண்டு தாங்கி : உராய்வு படாமல் தடுக்க உதவும் எஃகினாலான நுண்ணிய உருள் குண்டுகள்

ball check valve : குண்டுத் தடுப்பு ஓரதர் : இத்தகைய ஒரதர் இயங்கும் பகுதி ஓர் இருக்கையில் பொருந்தியுள்ள ஒரு குண்டு ஆகும். அழுத்தம் ஏற்படும்போது இந்தக் குண்டு அதன் இருக்கையினின்றும் எழுந்து ஒரு திசையில் பாய்வதற்கு வழிவிடும். அழுத்தம் நீங்கியதும் அல்லது அழுத்தம் எதிர்த்திசைக்கு மாறும்போது இந்தக் குண்டு தன் இருக்கையில் மீண்டும் பொருந்தி அடைப்பினை உண்டாக்கும்

ball clay : உருண்டைக் களிமண் : மண்பாண்டம் செய்பவர் தமது சுழல் சகடத்தின் மையத்தில் உருண்டையாகத் திரட்டி வைக்கும் களிமண். இந்தத் திரள் களி மண்ணிலிருந்து அவர் பல்வேறு வடிவங்களில் மண்பாண்டங்களைச் செய்கிறார்

ball cock : (கம்.) குண்டு அடைப்யான் : நீரின் மேற்பரப்பில் ஒரு குண்டு விழுவதால் அல்லது எழுவதால் திறக்கப்படுகிற அல்லது மூடப்படுகிற ஒரு திறப்படைப்பக் குழாய்

balling : (உலோ) பந்துருவாக்குதல் : எஃகுக் குழம்பில் குமிழி போக்கும் எந்திரக் கருவியினுள் செலுத்துவதற்காக, ஊதுலையில் மெல்லிரும்பினை உருண்டைகளாக மாற்றுதல்

ballistics : ஏவுகணைகள் : சுடு கருவிகளிலிருந்து அல்லது பீரங்கி களிலிருந்து செலுத்தப்படும் உந்து விசைப்படைக்கலங்கள்; அல்லது விமானத்திலிருந்து வீசப்படும் குண்டுகள்

ballistic missile early warning system : (மின்னி.) ஏவுகணை முன்னெச்சரிக்கைக் கருவி : எதிரிகள் கண்டம் விட்டுக்கண்டம் செல்லும் ஏவுகணைகளைச் செலுத்தி தாக்குதல் நடத்த விருப்பதைக் கண்டுபிடித்து முன்னதாக எச்சரிக்கை விடுக்கும் ஒரு மின்னணுவியல் சாதனம்

ballistic missile interceptor: (மின்.) ஏவுகணை இடைத்தடுப்பான் : பறந்துவரும் ஏவுகணையை இடைமறித்து அழிக்க கூடிய வெடிக்கவல்ல ராக்கெட் ஏவுகணை

ball mill : கோளகை அரைவை எங்திரம் : காய்ந்த பொருளை பெரும்பாலும் பீங்கானைத்தூளாக்குவதற்கான அல்லது கலவை செய்வதற்காகப் பயன்படும் நீள் உருளை வடிவான ஒர் அரைவை எந்திரம். இதில் பெரும்பாலும் அறைப்பதற்காக் கடினமான கூழாங்கற்கள் பயன்படுத்தப்படும். எனவே, இதனைக் கூழாங்கல், அரைவை எந்திரம் என்றும் கூறுவர்

ballonet: (வானூ.) காற்றறைப்பை : புகைக்கூண்டு அல்லது விண்கலத்திலுள்ள அறைபோன்ற ஒரு பகுதி. இதில் காற்றை அடைத்தும், இதிலிருந்து காற்றை வெளியேற்றியும் வாயுவின் அழுத்தத்தினை நிலைப்படுத்தி வரலாம்

baloon : (வானூ.) ஆவிக்கூண்டு : இது காற்றைவிடப் பளு குறைந்த வான்கலம். இதில் செலுத்தும் பொறியமைவு இராது

ballon framing : (க. க.) கூண்டுக் கட்டுமானம் : அடித்தளத்திலிருந்து கூரை வரையில் கண்டமாகக் கட்டப்படும் குமிழ் முகப்பு

துலாக்கட்டைகள், சாரப்படி மரப்பலன்கயின் ஆதாரத்துடனுங்கூடி குமிழ் முகப்புடன் தளர்வாக இணைக்க்ப்பட்டிருக்கும்

ballon tire : (தானி; எந்.) கூண்டுச் சூழ்பொதி : குறைந்த காற்றழுத்தங்களுக்காக வடிவமைககப்பட்ட பெரிய, நெகிழ் திறனுடைய கவரும், குறைந்த அழுத்தமும் இருப்பதால் எளிதில் சவாரி செய்ய முடிகிறது

balbpeen hammer : குண்டு நுனிச்சுத்தி : எந்திர இயக்கவல்லுநர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் ஒரு வகைச் சுத்தி. இதன் தலைப்பகுதியின் ஒரு முனை வட்டவடிவத்தின் அல்லது குண்டு வடிவத்தில் ஆணியால் பிணைப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும். மறு முனையின் பரப்புத் தட்டையாக இருக்கும்

குண்டு துணி சுத்தி

ball race : (எந்.) ஒட்டப்பாட்டை : குண்டு தாங்கியில் குண்டு ஒடுவதற்காக உள்ள வரித்தடம்

ball reamer : (எந்.) (5sin(9# துளைச் சீர்மி : ஒரு குண்டு இணைப் பிற்காக உட்புழை அமைப்பதற்காக பயன்படுத்தப்படும் அரைக் கோள வடிவிலான புழை முக முடைய சீர்மி

ball stake : கூண்டு வடிவ முளை : வளைவான பொருள்களை வடிவமைப்பதற்கும், அவற்றில் வேலை செய்வதற்கும் பயன்படும் காளான் வடிவிலான முளை

கூண்டு முனை

ball tool : (தோல்.) குண்டு முனைக் கருவி : குண்டு முனையை உடைய ஒரு சிறிய நீளமான கருவி. தோல் பொருள்களில் புடைப்பு வடிவழைப்புகளை உண்டாக்குவதற்கு இது பயன்படுகிறது

balsa : (மர.) தக்கைமரம் : மேற்கிந்தியத் தீவுகளிலும், மத்திய அமெரிக்காவிலும் வளரும் ஒரு வகை மரம். இதன் கட்டமைப்பு ஒரளவுக்கு எலுமிச்சை மரத்தையும் நெட்டிலிங்க மரத்தையும் ஒத்திருக்கும். இது மிகவும் இலேசானது; அதேசமயம் வன்மை வாய்ந்தது. எனவே, இது விமானங்கள் செய்வதற்கு உகந்த மரமாகப் பயன்படுகிறது

balsam fir : (மர.) குங்கிலிய ஊசியிலை மரம் : இது நடுத்தரவ4. வளவுடையது; என்றும் பசுமையாக இருப்பது:12-15 மீட்டர் உய ரம் வள்ர்க் கூடியது. இதன் மரம் எளிதில் முறியக்கூடிய்து இது நெடு நாள் நீடித்திருக்காது. இது கிறிஸ்துமஸ் மரமாக மட்டுமே பெருமளவில் விற்பனையாகிறது. இதற்கு வாணிக மதிப்பு ஏதுமில்லை

balsams : (வேதி; குழை.) பொன் மெழுகு : விரைந்து ஆவியாஇற எண்ணெய்ப் பொருளுடன் கலந்து கிடைக்கும் பிசின்கள் அடங்கிய இயற்கையான பொன் மெழுகின் இயற்பியல் பண்புகளைக் தோண்ட பொருள்களையும் இது குறிக்கும்

baluster : (க.க.) கைப்பிடிச்சுவர்த் தூண் : ஒரு திறப்பான மாடிப்ப்டியில் கைப்பிடிச் சுவரினைத் தாங்கும் மரத்தினாலான சிறுதூண் அல்லது கம்பம்; சிறு துர்ண் வரிசைத் தொகுதியின் ஓர் அலகு. கைப்பிடிச் சுவர்த் தூணின் புறக் கோட்டச் சாய்வு

balustrade : (க.க.) தூண் வரிசை : மாடிக் கைப்பிடிச் சுவர் அல்லது மதிலின் சாய்வான மேல் முகடு ஏறி நிற்கின்ற சிறிய தூண்களின் அல்லது சதுரத் தூண்களின் வரிசைத் தொகுதி

bamboo : மூங்கில் : வெப்ப மண்டலங்களில் வளரும் மரம் போன்ற புல்வகை. அரைகலன்கள். பிரம்புகள், தூண்டிற் கோல்கள் முதலியவை செய்ய இது பயன்படுகிறது

banana oil : (மர. வே) வாழை எண்ணெய் : இது "அமில ஆசிட்டேட்" என்ற நச்சுப்பொருளாகும். இது வேதியியல் வடிவில் சிறிதளவு கிடைக்கிறது. இதன் மணம் காரணமாக இப்பெயர் பெற்றது. இது மரம், உலோகம் முதலியவற் றுக்கு மெருகூட்டுவதற்குப் பயன்படுகிறது

bancatin : பங்க்கா வெள்ளியம் : இது ஓர் உயர்தரமான வெள்ளீயம், இது மலாக்காவிலும் பங்க்காவிலும் கிடைக்கிறது

band (க.க.) வண்ணக்கரைப்பட்டை :

(1) ஒரு கட்டிடத்தின் கோபுரத்தை அல்லது பிற பகுதிகளைச் சுற்றியுள்ள தளமட்டமான அகன்ற பட்டையுள்ள சிற்பம் அல்லது சிற்பத் தொகுதி. இதன் மேற்பகுதியிலும், கீழ் விளிம்புகளிலும் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்

(2) அறைகலன்களின் மேற்பரப்புக்கு மெருகூட்டுவதற்கு வண்ணத்தில் அல்லது அரிமணிகளில் புட்டையாக அமைக்கப்படும் சுற்று வரிப்பட்டை

(3) புத்தகக் கட்டுமானத்தில், புத்தகத்தின் முதுகுப் பகுதியிலுள்ள மூட்டு வார்

banding : (க.க.) (அச்சு.) (மர.வே.) வண்ணக்கரைப் பட்டையிடுதல் : வண்ணக்கரைப் பட்டை அல்லது சுற்று வரிப்பட்டை மூலம் அலங்காரம் செய்தல்

band iron : சிப்பத்தகடு : கப்பலில் கொண்டு செல்லும் சிப்பங்களைப் பாதுகாப்பதற்குப் பயன்படுத்தப்படும் மெல்லிய இரும்புத் தகடு

band saw : வட்டப்பல் வாள் : போன்று அறுப்பதற்குரிய பற்களிணைந்த வட்டச் சங்கிலி, இது கப்பித் தொகுதிகளின் மேல் இடி மரங்களை வெட்டும்

band switching : (மின்.) பட்டைமின் இணைப்பு விசைவானொலிப் பெட்டியின் ஏற்பு அலை வெண் வீச்சினை மாற்றிக் கொள்ளக் கூடிய மின் இணைப்புவிசை

band twisting : (பட்.) பட்டைத்திருக்கு : வட்டப்பல் வாளினைச் சுருட்டி மடக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள நூதனத் திருக்கு மறுக்கம்

bandwidth : பட்டை அகலம் : தொலைக்காட்சியில் கண் அல்லது செவிப்புலன் சைகைகளை அனுப்புவதற்குத் தேவைப்படும் அதிர்வுப் பட்டையில் ஒரு வினாடியில் சுழற்சிகளின் எண்ணிக்கை. தற்போது தொலைக்காட்சியில் ஆறு மெகா சைக்கிள் அகலமுள்ள அலை வரிசைகளில் ஒளி-ஒலிச் சைகைகள் அனுப்பப்படுகின்றன

bandy leg : வளைகால் : கலன்களில் வளைகாலுள்ள அல்லது கோணற்காலுள்ள அறை கலன் தட்டுமுட்டுப் பொருள்களின் வளைகால் பாணி

banister : கைப்பிடி : படிக்கட்டுக் கைப்பிடிக் கம்பித் தொகுதி

banister back : கைப்பிடி மேற்புறம் : கைப்பிடிபோல் அமைக்கப்பட்டுள்ள, நாற்காலியின் சாய் பகுதி போன்ற மேற்பகுதி

bank: (வானூ.) ஒரு புறச்சாய்வு : (1) விமானத்தைத் திருப்புவதற்காக அல்லது அதன் திசையை மாற்றுவதற்காக அதனைப் பக்க வாட்டில் ஒருபுறமாகச் சாய்த்தல். வலப்புறச்சாய்வுக்கு விமானத்தின் வலது இறகு கீழே இறக்கப்படும்

banker : அடைகல் : மணிக்கற்களில் வேலப்பாடுகள் செய்வதற்குப் பொற்கொல்லர்கள் பயன்படுத்தும் அடைகல்

banking transformers : (மின்.) மின்மாற்றித் தொகுதி : மின்மாற்றிகளை ஒரு தொகுதிகளாக ஒருங்கு சேர்த்து வைத்தல்

bank of lamps : (மின்.) விளக்குத் தொகுதி : ஒரே அடித்தளத்தின் மீது பொருத்தப்பட்டுள்ள பல மின் விளக்குகளின் தொகுதி. ஒரு சுற்றில் இணைக்கப்படவிருக்கும் ஒரு மின்னாக்கி. மின் மின்னழுத்த அளவினைக் குறிக்க இது பயன்படுகிறது

bar : சலாகை : (உலோ.)

(1) அகலத்தைவிட நீளம் அதிகமாகவுள்ள ஒர் உலோகத் துண்டு

(2) அச்சுக்கலையில், அச்செழுத்துகளை பிணைத்துப் பிடிக்கும் இரும்புச் சட்டத்தின் குறுக்கே அதுபரவி விடாதவாறு தடுப்பதற்கு மையத்தில் வைக்கப்படும் உலோகத் துண்டு

bare faced tenon : (மர.வே.) மூடியில்லாப் பொருத்து முளை பிரம்புகள், தூண்டிற் கோல்கள் முதலியவை செய்ய இது பயன்படுகிறது

bar folder : (உலோ.) சலாகை மடிப்பான் : உலோகத் தகடுகளில் வேண்டிய கோணங்களில் மடிப்பதற்குப் பயன்படும் ஒரு சாதனம்

barge board : (க. க.) அலங்கார மறைப்பு : மஞ்சடைப்புத் தூலங்களுக்கான அலங்கார மறைப்பு. 19ஆம் நூற்றாண்டின் கடைசி 25 ஆண்டுகளில் இத்தகைய மறைப்பு பெரும்பாலும் அலங்காரத்திற்காகவே அமைக்கப்பட்டன

bar iron : (பட்.) சலாகை இரும்பு : அடித்து வடிப்பதிலும் பட்டறைகளிலும் பயன்படுத்தப்படும் தட்டையான செவ்வக வடிவமான இரும்புத் துண்டு

barite : (வேதி.) பாரைட்டு : (Ba SO4) : வெண்படிகங்களாகக் கிடைக்கும் ஒருவகைக் கனிமம். இது நுண்மணிகள் வடிவிலும் கிடைக்கிறது. இதன் கெட்டியான வடிவம் பளிங்குக்கல் போன்றிருக்கும்

barium : (வேதி.) பெரியம் : (Ba); இது வெண்மையான உலோகத் தனிமம். இது சற்றே ஒளிரக் கூடியது; இது ஒரளவுக்கு வளைந்து கொடுக்கக் கூடியது. பேரியம் உப்புகளிலும், உலோகக் கலவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது

barium titanate : (மின்.) பேரியம் டைட்டானேட் : மின் பாய்வு இயல் மாற்றியில் பயன்படுத்தப்படும் ஒரு கூட்டுப் பொருள்

bark tannage : (தோல்.) மரப்பட்டைத்தோல் பதனிடுதல் : கருவாலி போன்ற மரவகைகளின் பட்டையைப் பயன்படுத்தித் தோலினைப் பதனிடுதல்

bark : (தாவர.) மரப்பட்டை : மரத்திற்குக் காப்பாக இயற்கையாக அமைந்துள்ள பட்டை

barley twist : சுருள் வட்டத்திருக்கு : சுருள் வட்டமான சுழற்சி

bar magnat : (மின்.) சலக்கைக்காந்தம் : (1) வளையாத நிரந்தரக் காந்தம் (2) சலாகை வடிவில் செய்யப்பட்ட ஒரு நிரந்தரக் காந்தம்

barograph : (வானு.) அழுத்தவரைவி : காற்றழுத்தத்தைதானாகவே பதிவு செய்யக்கூடிய ஒரு காற்றழுத்த மானி

barometer : காற்றழுத்த மானி : வாயுமண்டலத்தில் காற்றழுத்தத்தினைக் குறித்துக் காட்டுவதற்கான ஒரு கருவி. வானிலை முன்னறிவதற்கும், கடல் மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிவதற்கும் இக்கருவி பயன்படுகிறது

baroque : விசித்திர பாணி : 17, 18 ஆகிய நூற்றாண்டுகளில் கட்டிடக் கலையில் மனம்போன போக்கில் கையாளப்பட்ட விசித்திரமான கலைப் பாணி barrel vault : (க.க.) பீப்பாய் வடிவக் கவிகை மாடம் : உட்குழி வான நீள் வடிவமுடைய கவான்கள் கொண்ட வில் வளைவான முகடு

bar stock : (உலோ.) உலோகச் சலாகை : ஒழுங்கான வடிவளவுகளிலும் நீளங்களிலும் உள்ள, செய்து உருவாக்கிய உலோகச் சலாகைகள்

basal metabolism: (உயி.) அடிப்படை உயிரியல் மாறுபாடு : உயிர்களின் உடலினுள்ளே இயற்பொருளான உணவுச் சத்து, உயிர்ச் சத்தாகவும், உயிர்ச்சத்து மீண்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் அடிப்படையான உயிர்ப் பொருள் மாறுபாடு. ஒருவர் குறிப்பிட்ட வெப்ப நிலையிலும் சூழ்நிலைகளிலும் முழு ஒய்வில் இருக்கும்போது அவரது உடலில் ஆக்சிஜன் பயன்படுத்தப்படும் அளவு, கார்பன்டையாக்சைடு உற்பத்தியாகும் அளவு ஆகியவற்றைக் கொண்டு அவருடைய அடிப்படை உயிரியல் மாறுபாட்டு வீதம் கணக்கிடப்படுகிறது

basalt : (மண்.) தீக்கல் : எரிமலைப் பாறையினாலான, திண்னிய பசுமை நிறமுடைய ஒரு வகைப் பாறை. இது சாலைப் படுக்கைகள், சாலை-இருப்புப் பாதையின் உடைகல்லான அடிப் பரப்புகள் முதலியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது

bascule bridge : இயங்கு பாலம் : எடைக் கட்டியினால் உயர்த்தவும் தாழத்தவும் படுகிற ஒருவகைப் பாலம்

இயங்கு பாலம்

base : (வேதி.) உப்பு மூலம் : (1) நீரில் கரையும்போது ஹைட்ரஜன் ஆயணிகளை உண்டாக்கும் ஒரு பொருள்

(2) வேறெந்த எதிர்மின் அயனிகளையும் கொண்டிராமல், (OH) அயனிகளை மட்டுமே கொண்டிடிருக்கும் நீர்க்கரைசல் உண்டாக்க உதவும் ஒரு பொருள்

(3) அமிலங்களுடன் இணைந்து அவற்றின் அமிலத் தன்மைகளை இழந்திடச் செய்யும் திறனுள்ள ஒரு கூட்டுப் பொருள்

(4) அடித்தளம் : அறைகலன் வகையில் அவற்றின் அடிப்பகுதி

(5) பீட அடிக்கட்டை : இறைச்சிக் கொட்டிலில் பீடமாகப் பயன்படும் மர அடிக்கட்டை

(6) விதானத் தொங்கல் : படுக்கையின் கீழ்ப்பகுதியிலுள்ள இருக்கை தட்டுமுட்டுப் பொதிவுப் பட்டாடை

base boards (க.க.) அடிப்பலகை : சாந்து பூசிய சுவர் தரையைத் தொடுமிடத்தை மறைக்கும் ஒரப்பலகை

base circle : (பல்.) அடித்தள வட்டம் : பல்லிணைப்பு இழுத்தலில் உள்முகமாகத் திரும்பிய பல்லானது எந்த வட்டத்தின் மீது அமைந்துள்ளதோ அந்த வட்டம்

base course : (க.க.) அடித்தள வரிசை : கட்டிடத்தின் பிற பகுதிகளைத் தாங்கி நிற்கக்கூடிய முதல் தள வரிசை அல்லது அடித்தள வரிசை

base line : (க.க.) அடிமூவரை : நில அளவை வகையில் முக்கோண நில அளவைக்கு அடிப்படையான அடிமூலவரை

basement : (க.க.) நிலவறை : ஒரு கட்டிடத்தின் பிரதான தளத்திற்கு அடியில் அமைந்துள்ள அடித்தளப் பகுதி basemetal : (உலோ.) இழிந்த உலோகங்கள் : விலை மதிப்புக் குறைந்த உலோகங்கள், செம்பு, ஈயம், துத்தநாகம் போன்ற உலோகங்கள் காற்றில் சூடாக்கப்படும்போது எளிதில் நிறம் மாறி விடும். இவை இழிந்த உலோகங்கள், தங்கம், வெள்ளி போன்றவை உயர்ந்த உலோகங்கள்

base molding : அடித்தளச் சித்திரவேலைப்பாடு : சுவர், தூண் அல்லது அடிப்பீடத்தின் அடித்தளத்திற்கு அடுத்து மேலுள்ள சித்திர வேலைப்பாடு

base of a column : (க.க.) தூணின் அடிக்கட்டு : தூணின் முனை முகட்டுக்கும் அடிப்பீடத்திற்கும் இடையிலுள்ள பகுதி

base plate or bed plate : (எந்.) அடியடுக்குத் தகடு : ஒர் எந்திரத்திற்கான அடித்தளத் தகடு அல்லது ஆதாரம்

base trim : (க.க.) அடிபீடம் : அடிப்பலகையில் இருப்பதுபோல், ஒரு வேலையைச் செய்வதற்கான அடிக்கட்டையாகப் பயன்படக் கூடிய ஒரு பலகை அல்லது பீடம்

basic load : (வானூ) அடிப்படைப் பளு : விமானம் நிலையில் நிற்கும்போது அதிலுள்ள பளு. இந்த அடிப்படைப் பளு, தகை வினைப் பகுப்பாய்வு செய்வதற்குத் தேவை

basic slag: (உலோ.) காரச்சிட்டம் : எஃகு தயாரிக்கும்போது ஊதுலைகளில்படியும் சுண்ணாம்பு, பாஸ்வரம் கலந்தகூட்டுப்பொருள். இது பயிர் வளர்ச்சியை மேம்படுத்த உரமாகப் பயன்படுகிறது

basic steel : (உலோ.) அடிப்படை எஃகு : இது பெஸ்ஸமர் முறைப்படி செய்யப்பட்ட எஃகு, காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடகக் காற்றோட்டக் கீற்றுகளைப் பிரியவிட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்கும் முறை இதுவாகும். இதனைத் "திறந்த உலை முறை" என்னும் ஆழமற்ற மூட்டு அனல் உலை முறை மூலமும் செய்யலாம். கடந்த 20 ஆண்டுகளில் பெஸ்ஸ்மர் முறைக்குப் பதிலாகத் திறந்த உலை முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது

basic weight : (அச்சு.) அடிப்படை எடை : குறிப்பிட்ட வடிவளவுள்ள குறிப்பிட்ட தாள் எதற்காகவுமான குறிப்பிட்ட தர அளவு எடை, இது ஒரு ரீமுக்கு இத்தனை கிலோ கிராம் என்று குறிப்பிடப்படும்

basil : (எந்.) சாய்கோண முனை : துரப்பணத்தின் அல்லது உளியின் சாய்கோண முனை

basket : (வானூ.) கூண்டு : ஆவிக் கூண்டின் அடியில் பயணிகளையும் அடிச்சுமையினையும் ஏற்றிச் செல்வதற்காகத் தொங்கவிடப்பட்டுள்ள ஊர்தி

bas-relief : புடைப்புச் செதுக்கோவியம் : பின்னணி அரை அகழ் வான புடைப்புருச் செதுக்கோவியம்

bass boost : (மின்.) உகைப்புமின் சுற்றுவழி : குறைந்த அலை வெண் ஒலியை செறிவுறுத்தி அதிகரிப்பதற்குப் பயன்படும் ஒலி மின்சுற்றுவழி

bass compensation : (மின்.) ஒலிச் சரியீடு : தாழ்ந்த அலைவெண் ஒலியைக் குறைந்த தொனியிலும் உயர்ந்த அலைவெண் ஒலியினை அதே தொனியிலும் கேட்பதற்கு மனிதரின் காது இயலாதிருப்பதைச் சரியீடு செய்வதற்கான் ஒரு மின்னணுவியல் மின் சுற்றுவழி basset table : சீட்டாட்ட மேசை : ஆன் அரசி காலத்திய சீட்டாட்டத்திற்குரிய ஒருவகை மேசை

bassi-net : பிரம்புத் தள்ளுவண்டி : கூடைவடிவில் அமைந்த குழந்தைகளுக்கான மூடாக்கமைந்த சிறு பிரம்புத் தொட்டில்

bass reflex : (மின்.) ஒலிபெருக்கி அடைப்பான் : தாழ்ந்த அலை வெண் ஒலிகளை மீண்டும் உண்டாக்கி ஒலியின் விளைவினை அதிகரிப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் ஒலி பெருக்கி அடைப்பான்

bass response : (மின்.) ஒலி மின் பெருக்குத்திறன் : தாழ்ந்த அலை வெண் ஒலிவீச்சினைப் பெருக்குவதற்கு ஓர் ஒலி மின் பெருக்கிச் சாதனத்திற்குள்ள திறன்

basswood : எலுமிச்சை மரம் : (tilia americana) 18-2.மீட்டர் உயரம் வரை வளரும் ஒரு பெரிய எலுமிச்சை இன மரவகை. இதன் மரம் நுண்துளைகளையுடையது; ஒளியைச் சிதற வைக்கத்தக்கது. இதன் நிறம் இலேசான பழுப்பு முதல் முழு வெண்மை நிறம் வரையில் இருக்கும். இதன் எடை - ஒரு கன அடிக்கு 14 கிலோ. இதில் நுண்ணிய வேலைப்பாடுகள் செய்வது எளிது. இது காகிதக் கூழ், அறைகலன்கள், ஒரளவுக்கு விமானங்கள் செய்யப் பயன்படுகிறது

bast: (பட்.) உள்மரப் பட்டை : எலுமிச்சை இன மரத்தின் நாரியல் வாய்ந்த உள்மரப்பட்டை. இது கயிறுகள், கப்பல் வடங்கள், பாய்கள் செய்யப் பயன்படுகிறது. இதன் வெட்டுமரம் உயர்ந்த தரம் வாய்ந்தது

bastard-sawed :(உலோ.) வெட்டு அரம் : சொர சொரப்பான பகுதிகளை வெட்டுவதற்கான ஒர் அரம்

bat : (க.க.) செங்கல்துண்டு : செங்கல்கல் உடைந்த ஒரு துண்டு

batch : தொகுதி : வார்ப்புருக்களின் ஒரு தொகுதி போன்று முழுமையானதெனக் கருதப்படும் ஏதேனும் ஒன்றின் அளவு. கற்காரைத் தொகுதி போன்றது; ஒரு கலவையின் அளவு

batter : பாத்திக் முறைத் துணி அச்சு : துணியில் சாயம் போட வேண்டியிராத பாகங்களுக்கு மெழுகு பூசி எஞ்சிய பாகங்களில் வண்ணப்படங்களை அச்சிடும் கீழை நாட்டு முறை

battery clip : (மின்.) மின் இணைப்பு ஊக்கு : ஒரு சேம மின்கலத் தொகுதியின் முனைகளுக்குத் தற்காலிக இணைப்புகள் கொடுப்பதற்கான பெரிய விற்சுருள் பிடிப்பு ஊக்கு

battery resistance : (மின்.) மின் கலத்தடை : ஒரு மின்கலத் தொகுதியில் உள்ள தகடுகளுக்கும் மின் பகுப்புக் கரைசலுக்குமிடையிலான உள்முகத் தடை

battery : தளம் பரவு பலகை :

(1) தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை.

(2) கப்பலில் ஆராய்தலைத் தடுப்பதற்குத் துலத்தின் மேல் ஆணியடித்துப் பொருத்தப்படும் மரத் துண்டு. கப்பல் பாய்மரத்திலுள்ள ஆப்பு முனையும் இப்பெயரால் அழைக்கப்படும்

(3) பட்டுத்தறியில் ஊடு நூலைச் செறிவாகத் தள்ளும் இயங்கு சட்டம்

batten door : (க.க) அள்ளுகதவு வரிக் கண்டங்களைக் குறுக்காக வைத்து ஆணி அடித்து மடக்கி இறுக்கிய மேற்கவசமிட்ட ஒரு கதவு

batten down : அள்ளுகன் அமைத்தல் : கரும் கித்தான், வரிக்கண்டங் கள் அல்லது அள்ளுகள் கொண்டு வலுவாகப் பொருத்துதல்.

battening : (குழை.) அள்ளு வேலைப்பாடு : சுவர் அல்லது சட்டத்தின் பேரில் அள்ளுகள் அமைந்த மர வேலைப்பாடு

batter : (க. க.) உள்பக்கச் சாய்வு

(1) ஒரு சுவரின் முகப்பு குத்துக் காட்டிலிருந்து உள்பக்கமாகச் சாய்ந்திருத்தல்; ஒரு சுவர் நிலத் தளத்திலிருந்து மேல்நோக்கிப் பாய்ந்திருத்தல்

(2) அச்சுக்கலையில் ஓர் எழுத்துரு முழுமையாக அச்சாகாம்லிருப்பதற்காக அதன் முகத்தினை அடித்து நசுக்கிப் பள்ளமாக்கி விடுதல்

battery : (மின்.) மின்கலத் தொகுதி : அடிப்படை அல்லது சேம மின்கலங்கள், மின் விசையேற்றிகள் அல்லது நேர்மின்னாக்கிகள் பலவற்றை மின்விசை உற்பத்திக்கான ஒரே ஆதாரமாக, ஒரே தொகுதியாக அடுக்கி வைத்தல்

தனியொருமின்கலத்தையும் இதே பெயரால் தவறாக அழைக்கின்றோம்

battery acid : (மின்.) மின்கலம் அமிலம் : ஒரு சேம மின்கலத் தொகுதியில் மின்பகுப்பானாகப் பயன்படும் அமிலம். இது பெரும்பாலும் கந்தக அமிலமாக இருக்கும்

battery capacity : (மின்.) மின்கலத்திறன் : ஒரு சேம மின்கலத் தொகுதியிலிருந்து கிடைக்கும் மின்னோட்டத்தின் அளவு. இது ஆம்பியர் மணி அளவாகக் கணக்கிடப்படும்

battery charger : (மின்.) மின் கலத்தொகுதி மின் செறிவூட்டி : ஒரு மின்கலத் தொகுதியில் மின் விசைச் செறிவூட்டுவதற்கான ஒரு மின்னியல் சாதனம். இது பெரும்பாலும் மாறு மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுகிறது

battery container or battery case : (மின்.) மின்கலக் கொள்கலம் : தனிமங்களும் மின் பகுப்பான்களும் வைக்கப்படும் கனமான ரப்பர் அல்லது பிளாஸ்டிக் பொதியுரை

battery ignition system : (தானி; எந்.) மின்கலச் சுடர் மூட்டும் முறை : மின்கலத்தொகுதி மூலமாகத் தொடக்க நிலையில் மின்னோட்டம் செலுத்திச் சுடர் மூட்டும் முறை

battery voltage : (தானி; எந்.) மின்கலத் தொகுதி மின்னழுத்தம் : ஒரு மின்கலத் தொகுதியின் முனைகளின் ஊடே உள்ள மின்விசை அழுத்தம்

battlement : (க.க.) கொத்தளம் :

(1) படைகள் மறைந்து சுடுவதற்கு பீரங்கி வாய்களுக்கான வெட்டுத் தடங்கள் கொண்ட கைப்பிடிச் சுவர். இது இரண்டு அரண்புழைச் சாய்வுகளுக்கிடையேயுள்ள கைப் பிடிச்சுவரின் பகுதியுமாகும்

(2) அறைகலன்களில் இத்ககைய வடிவமைப்பு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது

baume scale : 'பாமே' அளவி : திரவங்களில் குறிப்பாகப் பெட்ரோலியப் பொருள்களின் வீத எடைமானத்தினை அளவிடுவதற்கான ஒரு சாதனம். இந்த சாதனத்திற் பதில் இப்பொழுது அமெரிக்கப் பெட்ரோலிய நிறுவனத்தின் அளவி பெரும்பாலும் பயனுக்கு வந்துவிட்டது

bauxite : (கணி.) பாக்சைட் : இது அலுமினியம் கலந்துள்ள அலுமின்யம் ஹைட்ராக்சைடு என்னும் தாதுப் பொருளாகும். இது வெள் ளை முதல் சிவப்பு வண்ணத்தில் மண்ணிலிருந்து தோண்டியெடுக் கப்படுகிறது. அலுமினிய உலோகத்திற்கு இதுவே முதன்மையான ஆதாரம். இது அலுமினியம், அலுமினா தயாரிக்கவும். அதிவெப்பத்திற்குச் சூடாக்கப்படும் ஊதுவைகளின் உள் பூச்சுக்காகவும் பயன்படுகிறது

bay : (வானூ.) இடைவெளி :

(1)மாணத்தின் கட்டுமானச் சட்டத்தின் ஆதாரத் கட்டுமானத்தின் முகப்புப்ப்குதியின் ஒரு பகுதி. இது அண்டை அறைத் தடுப்புகளுக்கு அல்லது அண்டை விட்டக்காழ்வுகளுக்கு இடையில் இருக்கும்

(2) கட்டிடக் கலையில் இரு தூண்களுக்கு அல்லது மதில்கலுக்கு இடையிலான இடைவெளி

bayonet socket : (மின்.) ஈட்டி வடிவக் குதைகுழி : பக்கங்களில் நீளவாக்கில் இரு வடிவளவுத் தடங்கள் அடியில் செங்கோணத் திருப்ப முடையனவாக இருக்கும். இதனால், இரு செருகிகள் கொண்ட ஒரு விளக்கினை இந்தத் தடங்களுக்குள் செலுத்தி அதற்குச் சற்றுத் திருப்பத்தைக் கொடுக்கலாம்

baywood : புன்னைமரம் : சீமை நூக்கு போன்ற, ஆனால் அதைவிட மிகவும் இலேசான ஒரு மென் மரம். இது புனை வடிவங்கள் செய்யப் பயன்படுகிறது. இதனை 'பிலிப்பைன் நூக்கு" என்றும் அழைப்பர்

bazooka : உந்துகலம் : ராக்கெட்டுகளை விண்வெளியில் உந்தித்தள்ளுவதற்கான ஒரு துப்பாக்கி. இது இரு முனைகளிலும் திறந்திருக்கும். தோளில் வைத்துக் கொண்டு இதனைப் பயன்படுத்துவர்

beaching gear : (வானூ.) உருள்பல்லிணை : ஒரு கடலூர்தியின் உடற்பகுதியுடன் இணைந்த சக்கரங்களின் அமைவு. இது அந்த ஊர்தியைக் கரையிலிருத்துவதற்கு அனுமதிக்கும்

beacon (க.க.) : கலங்கரை விளக்கம் : கப்பல் அல்லது விமானங்களுக்கு ஒளி விளக்கு அல்லது ஒளிவிளக்குகளின் தொகுதி அல்லது வேறு வழி காட்டு சாதனம்

bead : (க.க.) : குமிழ் மணி :

(1) கட்டிடக் கலையில் குமிழ் மணி வரிசை உருவ அழகு வேலைப்பாடு

(2) சக்கரப் புறத்தோட்டின் குமிழ் புடைப்பு

beading : (உலோ.) மணியுரு அமைவு : அலங்கார வேலைப்பாட்டிற்காக மணியுரு அமைத்தல்

beading machine : (உலோ.) மணியுரு அமைப்புப் பொறி : உலோகத் தகடுகளில் பல்வேறு வடிவங்களிலும் வடிவளவுகளிலும் மணியுரு அமைப்பதற்கு உதவும் பொறியமைவு. இது பாத்திரங்களில் அலங்கார வேலைப்பாடுகள் செய்வதற்கும் அவற்றை வலுப்படுத்துவதற்கும் பயன்படுகிறது

bead plane : (மர. வே.) மணியுருதளம் : மணியுருக்களை அமைப்பதற்குப் பயன்படும் தனிவகைத் தளம்

beaker : (வேதி.) மூக்குக் குவளை : ஆய்வுக் கூடங்களில் பயன்படுத்தப்படும் மூக்குடைய ஊற்று கலம். இது பெரும்பாலும் கண்ணாடியாலானது

beakhead : (க.க.) கொடு மூக்கு முகடு : கட்டிட உச்சியின் சிற்ப வேலைப்பாடு அமைந்த பிதுக்கமாகிய எழுதகத்தின் மிகத்தாழ்ந்த உறுப்பில் பயன்படுத்தப்படும் சித்திர வேலைப்பாடமைந்த விளிம்பு beakhorn stake : (உலோ.) : கொடுமூக்குக் கொம்பு வடிவமுளைஒரு முனை உருண்டையான நுனி நோக்கிச் சிறுத்துச் செல்வதாகவும் மறு நுனி நீளமாகவும், செவ்வக வடிவிலும் அமைந் ததாகவும் உள்ள ஒரு முளை. இதனைச் சதுரமானதும், கூம்பு வடிவுடையதுமான பொருள்களை வளைத்து வடிவுருக்கள் உண்டாக்கப் பயன்படுகிறது


beam . (வானூ.) (1) வானொலித் திசைகாட்டி : விமான மீகாமத்தில் திசைகாட்டிச் செல்லக்கூடிய ஒரு வானொலிச் சாதனம்

(2) ஓர் இறகின் பிரதான குத்துக் கோல்.

(3) ஒரு விமானத்தின் பக்கத்தின் உருவ்ரைத் தோற்றம்.

(4) உத்தரம்|துாலம்.

beam anchor: (க.க.) தூல ஆதரம் : தளத் துலங்களைச் சுவர்களுடன் பிணைப்பதற்குப் பயன்படும் ஒர் ஆதாரம்

beam ceiling : (க.க.) தூல முகடு : இதில் தூலங்கள் அவை போலியாயினும் உண்மையான வையாயினும், வழக்கமாகக் கிடை மட்டத்தில் பார்வைக்குப் புலப் படுமாறு அமைக்கப்பட்டிருக்கும்

beam compass : (பட்.) தூலத் திசைக்காட்டி : முனைகளைத் தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்த ஒரு பெரிய திசைகாட்டி. இது ஒரு நூலகத்துடன் அல்லது ஒரு மர அல்லது உலோகச் சலாகையுடன் இணைக் கப்பட்டிருக்கும். பெரிய வட்டங்களை அல்லது வளைவுகளை வரைந்து காட்டுவதற்கான அறைகளிலும், பட்டறைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது

beam drill : (எந்.) தூலத் தூரப்பணம் : இது ஆரைக்கால் துரப் பணம் போன்றது. இதில் இரு முனைகளிலுமுள்ள புயங்கள், இழைப்புப் புளியின் குறுக்குக் கைப்பிடி போன்று ஆதாரம் கொண்டிருக்கும்

beam pattern : (தானி; எந்;) தூலத் தோரணி : முகப்பு விளக்குகளின் ஒளி படரும் பரப்பின் வடிவளவு அல்லது பரப்பளவு

beam power tube : (மின்.) மின் கதிர்க் குழல் : எதிர்மின் முனையிலிருந்து செறிவுறுத்திய மின் கதிர்க் கற்றையாகப் பாயும் எலெக்ட்ரான் கள் மின்கம்பி வலை வழியாகத் தகட்டுக்குச் செல்லும் வ்கையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு குழல்

bearer : (அச்சு.) தாங்கு தகடு : ஒரு தகட்டின் அச்சிடும் பரப்புக்குள்ளே அல்லது அதனைச் சுற்றி உள்ள மிகை உலோகம்; கையினால் மை தடவி, அச்சுப் பார்வைப் படி எடுக்கும்போது ஒரு தகட்டின் பக்கததில் வைக்கப்படும் ஒர் உலோகத் தகடு

bearing : (க.க.) தாங்குத் தளம் : (1) ஆதாரங்களின் மீது நிற்கும் தூலம், தாங்கணைவு முதலியவற்றின் பகுதி. (2) எந்திரவியலில் சுழலும் தண் டுக்கான ஆதாரக் கட்டு அல்லது ஊர்தி bearing cap : (எந்.) தாங்கு தலை : ஒரு சுழ லோட்டத் தாங்கியின் மேற்பாதி

தாங்கு தலை

bearing metal : (உலோ.) உராய்வு தாங்கு உலோகம் : சுழலோட்டத் தாங்கிகளைச் செய்வதற்கு அல்லது அதில் உள்வரிப் பூச்சுக்குப் பயன்படக்கூடிய, உராய் தலைத் தாங்கக் கூடிய வெண்மையான உலோகங்கள் மற்றும் பித்தளை, வெண்கலம் போன்ற பல்வேறு உலோகக் கலவைகள்

bearing partition : (க.க.) தாங்குநிலைத் தடுப்புச் சுவர் : சுவருக்குச் சுவராக இடும் தளக் குறுக்குக் கட்டைகளையும் அவற்றின் மேலுள்ள மற்றத் தடுப்புச் சுவர் களையும் தாங்கி நிற்கும் ஒரு ஒரு தடுப்புச் சுவர்

bearing plate : (பொறி.) தாங்கு தகடு : ஒரு சுவரின் மேல் நிற்கும் ஒரு துாலத்தின் தட்டையான விளிம்பின் கீழுள்ள ஒரு தகட்டினைப் போன்று, ஒரு குறிப்பிட்ட பளுவினைப் பிரித்துப் பரப்புவதற்குத் தேவையான அளவு கனமும் பரப்பளவும் கொண்ட ஒரு தகடு. இந்தத் தகடு 5 செ.மீ. கனத்திற்கு மேற்பட்டதாக இருந்தால் அதனைப் பாளம் என்பர்

bearing projector : (வாணூ.) தாங்கு நிலை ஒளி எறிவு கருவி : நில எல்லைக் குறிகாட்டும் விளக்குகளுடன் இணைந்து பயன்படுத்தப்படும் ஒரு நிலையான திசையில் அமைந்துள்ள ஒளி எறிவு கருவி. இதன் ஒளிக்கற்றையின் திசையினைக் கொண்டு விமானம் தரையிறங்கும் நிலப்பகுதியின் திசையினைக் கண்டு கொள்ளலாம்

bearing surface: (பொறி.) தாங்கு நிலை மேற்பரப்பு : பளு பிரித்துப் பரப்பப்படும் ஒரு மேற்பரப்பு.

bearing wall : (க.க.) தாங்கு சுவர் : ஒரு பாரத்தைத் தாங்குகின்ற சுவர்.

beat frequency : (மின்.) ஒலி அலைவெண் : ஒழுங்கான இன்டவெளிகளில் எழும் இரு சைகைகளின் செறிவினைக் கூட்டவும் குறைக்கவும் செய்வதன் மூலம் உண்டாகும். அலை வெண். இரு சைகைகளை ஒன்றாக இணைப்பதன் வாயிலாகக் கூட்டு விளைவு அலைவெண் பெறப்படுகிறது

ஒலி அலைவெண்

beat frequency oscillator : (மின்.) ஒலி அலைவெண் அலைப்பி : ஒலி அலைவெண் உண்டாக்குவதற்குத் தொடர்ச்சியான ஒலி அலையை உண்டாக்கும் ஒர் அலைப்பி

beat note : (மின்.) ஒளிச்சுரம் : இரண்டு வேறுபட்ட அலைவெண்கள் ஒன்றாக ஒலிக்கும்போது கிடைக்கும் மாறுபட்ட அலை வெண்

bed: (எந்.) படுகை :

(1) ஒரு கடைசல் பொறியில் தலைமுனை தாங்கி, வால்முனை தாங்கி, ஊர்தி ஆகியவற்றைத் தாங்கி நிற்கும் பகுதி

(2) கட்டுமானத்தில் சுவரின் செங்கற்களை அல்லது கற்களை அவற்றின் வரிசைமுறைப்படி வைப்பதற்கான கிடைமட்ட மேற்பரப்புகள்

bed charge : (வார்.) படுகைச் செறிமானம் : இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பின் அடிப்பரப்பில் உள்ள கல்கரி அடுக்கு. முதல் அடுக்குச் செறிமானத்தை அச்சுருச் செறிமானம் என்றும் அழைப்பர்

bedding : (வார்.) அடையடுக்கு : இழுவைக் குடுவையில் மண் அடைத்து, தோரணியான நிலையில் நிறுத்துவதற்கான ஒரு வார்ப்படச் செய்முறை. இதில் தோரணியைச் சுற்றி மணல் உறுதியாகத் திணிந்து, இறுகிக் கொள்ளும்

bedford limestone : பெட்ஃ சுண்ணாம்புக்கல் : அமெரிக்காவில் கிடைக்கும் மிக நேர்த்தியான சுண்ணாம்புக்கல் வகை. இந்தியானா மாநிலத்திலுள்ள பெட்ஃபோர்டு என்னுமிடத்திலிருந்து இது மிகுதியாகக் கப்பலேற்றப்படுவதால் இந்தப் பெயர் பெற்றது

bed moulding : (க.க.) அடையடுக்கு வார்ப்படம் : புறந்துருத்தி மேலே நீட்டிக்கொண்டிருக்கிற பகுதியின் அடியில் இறுதி நிலையாகப் பயன்படுத்தப்படும் வார்ப் படம். அதாவது, இறவாரங்களின் இணைப்பிலும், சுவருக்கு வெளிப் புறத்திலும் பயன்படுத்தப்படும் வார்ப்படம்

bed plate : (க.க.) படுகைத் தகடு

(1) ஏதேனும் கட்டுமானப்பகுதிக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப் படும் ஒர் உலோகத் தகடு

(2) ஒர் எந்திரத்தின் அடித்தளமாக பயன்படுத்தப்படும் ஓர் உலோகத் தகடு

bedrock : (க.க.) அடிநிலப் பாறை : பூமியின் மேற்பரப்புக்கு அடியிலுள்ள கெட்டியான பாறை

beech (மர.) (fagus) : புங்கமரம் : இது ஒரு பெரிய மரம். இது சில சமயம் 30 மீட்டர் உயரம்வரை வளரும். இதன் குறுக்கு விட்டம் 60 செ.மீ முதல் 90 செ.மீ. வரை இருக்கும். இதன் மரம் கடினமானது; வலுவானது; முரடானது; ஆனால், நீடித்து உழைக்கக்கூடியதன்று. விறகுக்கு ஏற்றது. இதற்கு வாணிகப் பயன்பாடு ஏதுமில்லை

bees wax : தேன்மெழுகு : தேன் கூட்டிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை மெழுகு. இதுகலை வேலைப் பாடுகளில் பல வகைகளில் பயன்படுகிறது. உலோகத் தோரணி மணலிலிருந்து விடுவிப்பதற்கான உள்பூச்சாகவும் பயன்படுகிறது

beige : (வண்.) கம்பளித் துணி : சலவை செய்யப்படாமலும், சாயமிடப்படாமலும் உள்ள கம்பளித் துணி

belfry : (க.க.) மணிக் கூண்டு : திருக்கோயில் கோபுரத்தில் மணிகளைத் தொங்கவிடுவதற்கான இடம்

bel1 : (மின்.) மின் மணி : மின் காந்தம், மணியின் நா, சேமக்கலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இயக்கப்படும் ஒரு மின் சைகைச் சாதனம்

Beliminator : (மின்.) 'B' மின்னழுத்தக் கருவி : மின்கல வானொலிப்பெட்டி இயங்குவதற்காக 'B' மின்கலத்திற்குப் பதிலாக தேவையான 'B' மின்னழுத்தம் உண்டாக்கக்கூடிய ஒரு சாதனம்

Bell, Alexander Graham : பெல், அலக்சாண்டர் கிரகாம் (1847-1922) : தொலைபேசியைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி. இவர், "குரலைக் கம்பிகள் மூலம் கொண்டு செல்லலாம்" என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர். இவர் ஸ்மித்சோனிய ஆய்வுக் கூடத்தின் ஆட்சியாளராகவும், தேசியப் புவியியல் கழகத்தின் தலைவராகவும் இருந்தவர்

bell-and-spigot joint : (கம்.) மணி-மற்றும்-ஆப்பு இணைப்பு : வார்ப்பிரும்புக் குழாயின் ஒவ்வொரு பகுதியும் ஒருமுனை பெரிய அல்லது மணிவாய் வடிவிலும், இன்னொரு முனை ஆப்பு வடிவிலும், அமைந்திருக்கும். ஒரு பகுதியின் ஆப்பு முனை, அடுத்தப் பகுதியின் மணிவாய் முனையுடன் பொருந்த இணைந்து கொள்ளும்

bell crank : மணி வளைவு : 90° கோணத்தில் சந்திக்கும் இரு புயங்களைக் கொண்ட ஒரு நெம்புகோல் அல்லது வளைவு

மணி வளைவு

bell-glass : கவிகை : செடிகளை மூடிவைப்பதற்கான மணி வடிவக் கண்ணாடிக்கலம்

bell metal : வெண்கலம் : செம்பும் வெள்ளியமும் கலந்த மணி செய்வதற்கான கடினமான ஆனால் எளிதில் உடையக்கூடிய ஒர் உலோகக் கலவை

bell mouthed : மணிவாய் : ஒரு முனையில்மணியின் வாய் போன்ற திறப்புடையது

bell or hub : (கம்.) மணி அல்லதுலது குடம் : ஒரு குழாயின் முனையை அதே விட்டமுடைய மற்றொரு குழாயுடன் இணைத்துப் பொருத்துவதற்கு, போதிய அளவுக்குக் குடம் போல் பெரிதாகவுள்ள பகுதி

bellows : (வார்.) உலைத் துருத்தி :

(1) காற்றையும் நெகிழ் திறனுள்ள பக்கங்களையும் உடைய ஒரு சாதனம். இது காற்றோட்டத்தை உண்டாக்குவதற்குப் பயன்படுகிறது

(2) வார்ப்படத்தில் தோரணிகள் முதலியவற்றின் முகப்புகளிலிருந்து மணலை ஊதி அப்புறப்படுத்துவதற்குப் பயன்படும் கையினால் இயக்கப்படும் சிறு உலைத்துருத்தி

உலைத் துருத்தி

bells palsy : (நோயி.) முகமுடக்கு வாதம் : முகத்தின் ஒரு பக்கத்துத் தசை செயலற்றுப் போதல்

bell-ringing transformer : (மின்.) மணியடிப்பு - மின்மாற்றி : சாதாரண வீட்டு மின்சுற்றில் மணியடிப்பதற்காக மின்னழுத்தத்தைக் குறைக்கின்ற ஒரு சிறிய மின்மாற்றி

bell switch : (மின்.) மணி மின்விசை : ஒரு மின்சுற்றிலிருந்து மணியைத் துண்டிப்பதற்கும் அல்லது அதில் மணியை இணைப்பதற்கும் பயன்படும் ஒரு மின்விசை

belly : புடைப்பு :

(1) வார் பூட்டிக் கட்டுதல், கயிறு கட்டி இழுத்தல் மூலம் விளைவிக்கப்பட்ட புடைப்பான ஒரு பரப்பு

(2) அச்சுருவின் ஒரு வரியின் மையத்தில் படிப்படியாக அமைந்த பள்ளம்

belt : (க.க.) தளவரிசை :

(1) தளத்திலிருந்து தளம் மீது படிவிக்கப்ப்டும் ஒரு எறிவுப் படிவத்தின் இணைப்புக் கட்டு அல்லது வெவ்வேறு வகைச் செங்கலினால் கட்டப்பட்ட ஒரு தளவரிசை

(2) வார்ப்பட்டை : எந்திர உறுப்பு இணைத்தியக்கும் தோல் பட்டை வார்

belt clamp : (எந்.) வார்ப்பட்டைப் பற்றுக்கட்டை : ஒரு வார்ப்பட்டையின் இருமுனைகளையும் பிணைக்கும்போது இருமுனைகளையும் பிடித்துக் கொள்வதற்கான ஒரு சாதனம்

belt conveyor : வார்ப்பட்டை ஊர்தி : தொழிலகத்தில் தொழிற்படும் பொருள்களைக் கொண்டு செல்லப் பயன்படும் அகலமான வார்ப்பட்டை belt dressing : வார்ப்பட்டை மெருகு : எந்திர வார்ப்பட்டையில் பிடி சறுக்கி விடாமல் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பல்வேறு கூட்டுப் பொருள்களில் ஒன்று

belt hook : (பட்.) வாரப்பட்டைக் கொக்கி : வார்ப்பட்டைகளைக் கையால் இயக்கி இடம் பெயரச் செய்வதற்கான ஒரு சாதனம். இது ஒருநீளமான கொக்கியுடன் நீண்ட கோலினை அல்லது கழியினைக் கொண்டிருக்கும்

belt laeing : (எந்.) வார்ப்பட்டை இழைவார் : ஒரு வார்ப்பட்டையின் முனைகளைக் கோத்திறுக்குவதற்குப் பயன்படும் ஒரு குறுகலான தோல் வார்ப்பட்டை. கம்பிக் கொக்கிகள் போன்ற வேறுவகைக் கட்டுவார்களும் தவறாக வார்ப்பட்டை இழைவார் என அழைக்கப்படுகின்றன

belt sandar : (மர.வே.) வார்ப்பட்டை மெருகேற்றி : மரத்தில் மெருகு வேலைப்பாடு செய்வதற்காக ஒரு பட்டைச் சீலை வார்ப்பட்டையினையுடைய, மின்னோடியால் இயங்கக்கூடிய ஒரு பொறியமைவு

belt shifter : (பட்.) வார்ப்பட்டைப் பெயர்ப்புக் கருவி : பெயர்ப்பு விரல்கள் அல்லது புயங்கள் இணைக்கப்பட்டுள்ள 120 செ.மீ அல்லது 5 அடி நீளமுடைய ஒரு தட்டையான மரத்துண்டு. இறுக்கமான கப்பிகளிலிருந்து தளர்வான கப்பிகளுக்கு ஒரு வார்ப்பட்டையினை மாற்றுவதற்குப் பயன்படுகிறது

bench : (பட்.) விசிப் பலகை : தச்சர் முதலியோர் வேலை செய்வதற்காக பட்டறைப் பிடிப்புக் குறடு போன்ற கருவிகள் பொருத்தப்பட்ட மரத்தினாலான வலுவான ஒரு நீண்ட பலகை

bench assembly : (பட்.) விசிப்பலகை இணைப்பு : ஒரு விசிப்ப லகையின் மீது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகளை வைத்து ஒன்றாகப் பொருத்தி இணைக்கும் முறை. இவ்வாறு இணைக்கும் பணியில், அராவுதல், மெருகிடுதல், துளையிடுதல், பற்ற வைத்தல், துரப்பணமிடுதல், திருகாணிகள் முதலியவற்றால் பிணைத்தல் ஆகியவை அடங்கும்

bench dog : (பட்.) விசிப்பலகை வளையிருப்பாணி : விசிப்பலகையின் விளிம்பு அருகேயுள்ள தடத்தில் அல்லது துளையில் செருகப்பட்டுள்ள மரத்தாலான அல்லது உலோகத்தாலான ஒருமுளை. இது பிடி நழுவி விடாமல் தடுப்புதற்குப் பயன்படுகிறது. இது விசிப்பலகை நிறுத்தியிலிருந்து வேறுபட்டது

bench hook : (மர. வே.) விசிப்பலகைக் கொக்கி : விசிப்பலகையில் சில வேலைகளைச் செய்யும் போது, விசிப்பலகையின் மேற்பகுதிக்குச் சேதமேற்படாத வகையில் இரு முனைகளிலும் பொருத்தப்பட்டுள்ள முனைகளுடன் கூடிய ஒரு தட்டையான மரத்துண்டு

bench lathe : (எந்.) விசிப்பலகை கடைவான் : 'இலேசான வேலைகளைச் செய்வதற்காக ஒரு விசிப்பலகையின் மேல் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிறிய கடைவான்

bench plane : விசிப் பலகை இழைப்புழி : சமதளப் பரப்புகளை இழைத்து வழவழப்பாக்குவதற் ஒரு விசிப்பல்கையின் மீது பொருத்தப்பட்டுள்ள இழைப்புழி

benzene ring : சாம்பிராணி எண்ணெய் வளையம் : நிலக்கரிக் கீலிலிருந்து எடுக்கப்படும் நறுமண நீர்க்கரிமப் பொருளாகிய சாம்பிராணி எண்ணெயின் (பென்சீன்) மூலக்கூற்றில் 6 கார்பன் அணுக்கள் கொண்ட ஒரு வளையம் அடங்கியிருக்கும். அந்த 6 கார்பன் அணுக்களுடனும் ஒரு ஹைட்ரஜன் அணு இணைந்திருக்கும்

bench stop : (மர.வே.) : விசிப் பலகை நிறுத்தி : ஒரு விசிப்பலகையின் மேற்பகுதியில் அதன் விளிம்பின் அரு பொருத்தப்பட்டுள்ள வெட்டுத் தடங்கொண்ட, தக்கவாறு அமைத்துக் கொள்ளக் விசைப் கூடிய ஒர் உலோகச் பல சாதனம். ஒரு பொருளை திறத்தி சார்த்தி இழைத்து வழவழப்பாக்குவர்

விசைப் பலகை நிறுத்தி

bench vise : (எந்.) விசிப்பலகைக் குறடு : எந்திரங்களை இயக்குபவர்கள் பயன்படுத்தும் சாதாரணப் பட்டறைப் பிடிப்புக் குறடு. இது சமதளமாகவோ, சுழல் மூட்டாகத் திருகுடையதாகவோ இருக்கும்

bench work : (மர.வே.) விசிப் பலகை வேலை : இது விசிப்பலகையில் பிடிப்புக் குறட்டால் பிடித்து நிறுத்திச் செய்யப்படும் வேலை. இது எந்திரத்தால் செய்யப்படும் வேலையிலிருந்து வேறுபட்டது

bend : பதனத்தோல் : மிகக்சிறந்த தரமுடைய கால்டித் தோலினைக் கொண்ட விலங்குத் தோலின் பிற் பகுதி அல்லது பதனிட்ட தோல்

Ben Day Process : (அச்சு.) பென் டே செய்முறை : பென் டே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு செய்முறை. இதனை ஒளிச் செதுக்கு வேலைப்பாடு செய்பவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த முறையில் பசைப் படலங்களிலிலிருந்து உலோகத் தகடுகளுக்கு வடிவமைப்பை மாற்றி, அதன் பின் செதுக்குவேலை செய்யப்படுகிறது

bending moment : (பொறி.) வளைவு நெம்புதிறன் : இது பளு ஏற்றிய ஒரு தூலத்தின் ஒரு பகுதியின் வளைவு நெம்புதிறன் என்பது தூலத்தின் எடை உட்பட அதில் ஏற்றப்பட்டுள்ள பாரங்கள் அனைத்தின் கூட்டுத்தொகையும், அந்தப் பகுதியின் எந்த ஒரு புள்ளியையும் பொறுத்து அப்பகுதியின் இடப்புறத்தில் அல்லது வலப்புறத்தில் எதிர்வினைகளும் ஆகும்

bending pin or iron : (கம்.) வளைக்கும் ஊசி அல்லது இரும்பு : ஈயக் குழாய்களை நிமிர்த்துவதற்கு அல்லது விரிவாக்குவதற்குப் பயன்படும் ஒரு கருவி

bend test : (பொறி.) வளைவுச் சோதனை : ஒர் உலோகத் தண்டினை 90 வரை வளைத்து அல்லது ஒரு வளைவு ஊசியில் வளைத்து அது எந்த அளவுக்கு முறியக்கூடியது என்பதை சோதனை செய்தல்

bent : (பொறி.) வளைவு : ஒர் எஃகுச் சட்டகக் கட்டிடத்தின் ஒரு பகுதி. ஒரு சாரக்கட்டின் ஒரு தூண் வரிசைகளின் மீது நிற்கும் தூலம் அல்லது தூலக்கட்டை

bent gouge : (மர. வே.) வளைவு அலகு உளி : தச்சு வேலையிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய நகவுளி

bent lever : (தானி; பொறி.) வளைவு நெம்புகோல் : உள்ளேயே உட்சாய்வுடைய ஒரு நெம்புகோல்

benzene : (வேதி.) சாம்பிராணி எண்ணெய் : நிலக்கரிக் கீலிலிருந்து பெறப்படும் நறுமண நீர்த் கரிமப் பொருள். இது கார்ப்பாலிக் அமி லம், அனிலின் சாயங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. இது 'பென்சைன்’ எனப்படும் கரிநீர்மக் கலவையிலிருந்து வேறுபட்டது

benzine : (வேதி.) கரி நீர்மக் கலவை பென்சைன் : நில எண்ணெயிலிருந்து பெறப்படுவதும் கொழுப்புக் கறையை நீக்குவதற்குப் பயன்படுவதுமான கரிநீர்மக் கலவை. இது கரைப்பானாகப் பயன்படுகிறது

benzol : (வேதி.) பென்சால் : (C6H6) விசை வண்டி எண்ணெயாகப் பயன்படும் செப்பமற்ற சாம் பிராணி எண்ணெய் வகை. இது நிறமற்ற கரைப்பான். இது வண்ணங்களை நீக்குவதற்குப் பயன்படுகிறது

beri beri : (நோயி.) தவிட்டான் நோய் : ஊட்டத்சத்துக் குறைவு காரணமாக, மூளை உட்பட உடலின் அனைத்து உறுப்புகளிலு முள்ள நரம்புகளை வீங்கச் செய்யும் ஒருவகை நோய். அரிசியைத் தீட்டுவதால் அதிலுள்ள 'பி' வைட்டமின் நீங்கி விடுகிறது. அவ்வாறு 'பி' வைட்டமின் நீங்கிய அரிசியை உண்பதால் போதிய 'பி' வைட்டமின் இல்லாமல் இந்நோய் உண்டாகிறது

beryllium : (உலோ.) பெரிலியம் : இது மிகவும் இலேசான, ஆனால் மிகக் கடினமான உலோகங்களில் ஒன்று. இது கெட்டியான வெள்ளை உலோகத் தனிம வகை. இது அலுமினியத்துடன் எளிதாகக் கலந்து உலோகக் கலவையாகக் கூடியது

Bessemer steel : (உலோ) பேஸ்ஸமர் எஃகு : பெஸ்ஸமர் முறைப்படி செய்யப்பட்ட எஃகு. இது பெஸ்ஸமர் மாற்றுக் கலத்தில் தேனிரும்பிலிருந்து நேரடியாகத் தயாரிக்கப்படுகிறது

Bessamer process : (உலோ.) பெஸ்ஸமர் முறை : சர் ஹென்றி பெஸ்ஸமர் என்பவர் எஃகு செய்வதற்குக் கண்டுபிடித்த செய்முறை. இதில், காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பின் ஊடாகக் காற்றோட்ட கீற்றுகளைப் பாய விட்டு, அதிலுள்ள மாசுப்பொருள்களை நீக்கி எஃகு தயாரிக்கப்படுகிறது

beta : (மின்.) பீட்டா : கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது எழுத்து. இது ஒரு மின்மப் பெருக்கியுடன் (டிரான்சிஸ்டர்) இணைந்துள்ள ஒரு பொது உமிழ்வியின் மின்னோட்ட ஈட்டத்தினைக் குறிக்கப்பயன்படுத்தப்படுகிறது

beta rays : (இயற்.) பீட்டாக் கதிர்கள் : கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் விரை செலவுடைய எதிர் மின்மங்களின் வரிசை

beta particle : (வேதி.) கதிரியக்கத்துகள் : பல கதிரியக்கப் பொருள்களினால் வெளிப்படுத்தப்படும் நேர் மின்னாற்றலோ, எதிர் மின்னாற்றலோ உடைய ஒர் எலெக்ட்ரான்

beta ray : (வேதி.) கதிரியக்கப் பொருள் : கதிரியக்கப் பொருள்களால் உமிழப்படும் விரை செலவுவுடைய எதிர்மின்மங்களின் மூன்று வகைகளில் ஒன்று

beta-tron : (மின்.) எதிர் மின்ம ஆக்கக் கருவி : விசைவேக எதிர் மின்மங்களின் கதிரலையை நிலையான மண்டல நெறியில் இயக்கி அதன்மூலம் மிகையாற்றலுடைய அணுக்களைப் பெறவைக்கும் கருவி

beta-transformation : பீட்டா-உருகிலைமாற்றம் : ஒரு தனிமத்தை ஒர் அணு உலையில் இட்டு அதனுடன் ஒரு நியூட்ரானைச் சேர்த்தால், அந்தத் தனிமம் கதிரியக்கம் உடையதாக மாறுகிறது. அது பின்னர் பீட்டாத்துகள்களை அனுப்பி அடுத்த உயர்ந்த அணு எண்ணுடைய தனிமமாக மாறுகிறது. எடுத்துக்காட்டாக, யுரேனியம், இதே முறையில், யுரேனியத்தை விட அதிக அணு எடையுள்ள தனிமமாக மாறுகிறது

beton : (அச்சு.) பீட்டான் : ஜெர்மனியில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட ஒருவகை அச்செழுத்துருவின் பெயர்

bevatron : (மின்.) எலெக்ட்ரான் மின்னழுத்தப் பெருக்கி : அணு மின்மங்களுக்கு நூறு கோடிக்கணக்கான மடங்கு ஆற்றல் பெருக்கும் அணு ஆற்றல். விசைவியக்க அமைவு

bevel : சாய்தளம் :

(1) ஒரு பரப்பின் பிற பகுதியுடன் செங்கோணத்தில் இல்லாத ஒரு பரப்பு சாய்வு 45° இருக்கும்போது உள்ள சாய்தளம். அது மிட்டர்' (Miter) எனப்படும்

(2) கோண அளவு கருவி : சாய் தளத்தின் கோணத்தை அளக்கும் கருவி. பாகை அளவுகளுடன் இணைந்திருக்கும்போது "சாய்நீளக் கோண்மானி' என அழைக்கப்படுகிறது

கோன அளவு கருவி

beveled rule : (அச்சு) சாய் கோண வரித்தகடு : அச்சுக்கலையில் முகப்பு ஒரு சாய்கோணப் பரப்பிலுள்ள ஒரு வரித்தகடு

beveled sticks : (அச்சு.) சாய் கோண அச்சுக்கோப்புக் கட்டை : அச்செழுத்துகளை அடுக்கும் நீண்ட தட்டில் அச்சுருக்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்படும் அச்சுருப்பற்றாப்புகள் அல்லது செருகு தண்டுகள் கொண்ட மரத்தாலான அல்லது உலோகத்தாலான கட்டை

bevel gaars : (பொறி.) சாய்வுப் பல்லினை : பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயங்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு

beveling in walding : சாய்வாக்கம் : பற்ற வைப்பதில், பற்றவைக்கும் உறுப்புகளின் முனைகளைத் தட்டையாக்குதல் அல்லது, தேய்த்துக் கூர்மையாக்குதல்

bevel protractor : சாய்தளக் கோணமானி : கோணங்களை அளவிடுவதற்குத் தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய ஒரு கருவி.

bevel washer : சாய்தள வளயம் : புரியுள்ள ஒரு தண்டினை ஒரு தூலத்தின் வழியாகச் செலுத்தப்படும்போது திருகாணிக்கு ஒரு தட்டையான தோற்றத்தைக் கொடுப்பதற்குக் கட்டுமானப்பணியில் பயன்படுத்தப்படும் ஒரு வளையம்

Bezel :(1) முகப்பு வளையம் : ஒரு கடிகாரத்தின் முகப்புக் கண்ணாடியைச் சுற்றியுள்ள ஓர் உலோக வளையம்

(2) சாய்பக்கம் : பட்டை தீட்டிய மணிக்கற்களின் சாய்பக்கம்

(3) தவாளிப்பு உளியின் வாயிலுள்ள தவாளிப்பு

bias volt : (மின்.) சார்பு மின்னழுத்தம் : ஒர் எலக்ட்ரான் குழலின் உட்பாட்டு மின்கம்பி வலைக்குள் செலுத்தப்படும் நேர் மின்னோட்டம்

bib : (கம்.) திறப்புக் குழாய் : மீடாவின் திறப்படைப்புக் குழாய்

bible paper : (தாள்.) திருமறைத் தாள் : மெல்லியதான, ஒளி ஊடுருவிச் செல்லவிடாத, வலுவான ஒருவகைப் புத்தகத் தாள்.

bichloride of mercury : (வேதி.) பாதரச இருபாசகை : (H2Cl2) இதனை "இரசப்பாசிதை" என்றும் அழைப்பர். இது காயங்களைக் கழுவுவதற்கும், அறுவைச் சிகிச்சையிலும் நோய் நுண்மத் தடைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இரசங்கலந்த உறைப்பான கொடிய நஞ்சு. இதற்கு மாற்று மருந்து முட்டையின் வெண்கருவாகும்

bichromate of potassium : (வேதி.) பொட்டாசியப் பைக்ரோ மேட் (K2Cr2O7) ஒளிப்படக்கலை, நிலத்தில் வெண்கோடாக உருவப் படிவமுறும் ஒளிப்பட அச்சுமுறை ஆகியவற்றில் பயன்படும் செம்மஞ்சள் நிறப்படிகங்கள். பகுப்பாய்வு வேதியியலில் இது ஆக்சிகரணியாகப் பயன்படுகிறது

biennially : ஈரட்டையான : இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை நிகழ்கிற

bifilar coil : (மின்.) ஈரிழைச்சுருள் : ஒரு மின்கம்பிச் சுருளை ஒர் இரட்டைக் கம்பி கொண்டு சுருணை செய்யும் முறை. இதில் மின்னோட்டம் ஒரு திருப்பத்தில் 180° அளவில் இருக்கும். அடுத்த திருப்பத்தில் மின்னோட்ட நிலை இருக்காது. இதனால், மின்தூண்டல் நீங்கிவிடுகிறது

bilateral tolerance : இருபுறப் பொறுதி : அடிப்படை பரிணாமத்திற்கு உயர்வாக அல்லது தாழ்வாக உள்ள நுண் மட்டமைதி (உ-ம்) 5.250 ± .002 அங்

billet : (குழை.) உருளைப் பாளம் :

(1) ஒரு நீரழுத்த உந்து எந்திரத்தின் அழுத்தும் அறையில் வைக்கப்பட்டுள்ள நீள் உருளை வடிவான ஒரு பெரிய பாளம்

(2) எஃகு உருட்டு ஆலையின் இறுதியாக்கம் செய்த இரும்பின் சிறு சிறு துண்டுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படும் செவ்வக இரும்புச் சலாகை அல்லது துண்டு

billhead : (அச்சு.) முகப்புப்பட்டி : பெயர் முகவரி உடைய வாணிகக் குறிப்பு முகப்பு

billion : (1) இலட்சங்கோடி : ஆங்கில நாட்டு வழக்கில் இலட்சங் கோடி

(2) நூறுகோடி : அமக்ரிக்க, ஃபிரெஞ்சு நாடுகளின் வழக்கில் நூறுகோடி

bill of meterial : பொருட்பட்டி : சில இயக்கு முறைக்கு அல்லது எந்திரத்திற்குத் தேவைப்படும் உறுப்புகளையும், அளவுகளையும் கொண்ட ஒரு பட்டி

bimetalic element : (குளி.) இருமாழைக் கருவி : இரு மாறுபட்ட வெப்ப விரிவாக்கக் குணகங்களைக் கொண்ட, இரு உலோகங்களைக் கொண்ட வெப்பக்கட்டுப்பாட்டுச் சாதனம்

bimetal - thermostat : (தானி.) இருமாழை வெப்பச் சீர்நிலைக் கருவி : இருமாறுபட்ட உலோகத் துண்டுகளை ஒன்றாகப் பற்றவைத்து உருவாக்கிய சாதனம். சூடாக்கும்போது ஏற்றத் தாழ்வான விரிவாக்கம் ஏற்படுவதால் இச்சாதனம் வளைகிறது

binary : (மின்.) ஈரினை : 0, 1, என்ற இரு குறியீடுகளை மட்டுமே பயன்படுத்துகிற 2 ஆதாரத்தைக்கொண்ட ஒர் எண்மான முறை binary theory : இருமூலகக் கோட்பாடு : எல்லா வேதியியல் பொருள்களும் எதிரெதிர்ப் பண்புகளுடைய இரு மூலப்பொருள்களால் ஆனவை என்னும் கொள்கை

binary alloys : (உலோ.) ஈரினை உலோகக் கலவைகள் : இரண்டு உலோகங்களை மட்டுமே கொண்ட உலோகக்கலவை

binary digits : (கணி.) ஈரிலக்க எண்கள் : எண் கணிமிகளில் பயன்படுத்தப்படும் முழு எண்கள்

binaural : இருசெவிக்கருவி : இரு செவிகளையும் சார்ந்த கருவி. மருத்துவர்கள் பயன்படுத்தும் இதயத் துடிப்பு மானியில் ஒவ்வொரு செவியாலும் கேட்பதற்கான இரு குழல்கள் உள்ளன

binder : (வார்.) கடுங்கட்டு : உள்மையப்பகுதிக்கு வலுவூட்டுவதற்காக உள்மைய மணலைக் கட்டிறுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். இதில் ஆளி விதை எண்ணெய், கருப்பஞ்சாறு, மற்றும் பல வாணிகத் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன

binders board : நூல் கட்டுமான அட்டை : கலவைக் காகிதங்களாலான கனமான அட்டை. புத்தகங்களைக் கட்டுமானம் செய்து அட்டையாக இணைக்கப் பயன்படுகிறது

bindery : நூல் கட்டுமானச் சாலை : புத்தகங்கள், மடக்கு அறிக்கைகள், துண்டு வெளியீடுகள் போன்றவற்றை ஒருங்கிணைத்துக் கட்டுமானம் செய்யும் இடம்

binding post : கட்டுமான முளை :

(1) காகிதத்தில் துளைகள் வழியாகச் செலுத்தி தனித்தனித் தாள்களை கட்டிணைக்கப் பயன்படும் உலோகத்திலான முளை

(2) மின்கம்பியைப் பிணைப்பதற்கு ஒரு திருகுடன் கூடிய ஒர்உலோக முளை

binoculars : இரட்டை தொலை நோக்காடி : இரு கண்களாலும் நோக்குவதற்கேற்ற இரட்டைத் தொலை நோக்காடி

bio chemistry : உயிர் வேதியியல் : உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆராயும் துறை

bioastronautics : (விண்.) உயிர்விண்வெளியியல் : விண்வெளிப் பயணத்தின்போது விலங்குகள் அல்லது தாவரங்கள் மீது ஏற்படும் விளைவுகள் பற்றி ஆராயும் அறிவியல்

biological control : (உயி.) உயிரியல் கட்டுப்பாடு : தீங்கிழைக்கும் நுண்மங்களின் எதிர் நுண்ம்ங்களைப் பெருக்குவதன் மூலம் இயற்கைக் கோளாறுகளைக் கட்டுப் படுத்தும்முறை. எடுத்துக்காட்டு : களைகளைக் கட்டுப்படுத்த பூச்சிகளைப் பயன்படுத்துதல்

biological shield : (உயி.) உயரியல் காப்பு : அணு உலை போன்ற அணுவியல் எந்திரங்களில் பணியாற்றும் ஆட்களை அணுக்கதிர் ஆதாரமுடைய ஒரு வட்டப் பாதுகாப்புச் சுவரை அமைத்தல்

biological shield : உயரியல் காப்பு : அணு உலை போன்ற அணுவியல் எந்திரங்களில் பணியாற்றும் ஆட்களை அணுக்கதிர் ஆதாரமுடைய ஒரு வட்டப் பாதுகாப்புச் சுவரை அமைத்தல்

biological warfore : (உயி.) உயிரியல் போர்முறை : நோய்களை உண்டாக்கும் நுண்ம்ங்களைப் பயன்படுத்தும் போர்முறை

bionics : (விண்.) ஒப்பு உயிரியல் : உயிர் மண்டலங்களைப் போன்று செயற்படுகிற அமைப்பு முறைகளை ஆராய்தல்.

(2) உயிர் மின்னியல்

bionomics: (உயி.) Gipso உயிரியல் : சூழல் தொடர்பான பழக்க வழக்கங்களை ஆராயும் அறிவியல்

biophysics : உயிர் இயற்பியல் : இயற்பியல் விதிமுறை சார்ந்த உயிரியல் ஆய்வு

biopsy : (உயி.) உயிர்ப் பொருள் ஆய்வு : உயிருள்ள உடலிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட நோயுற்ற வளர்ச்சி போன்ற பொருளை அறிவியல் முறையில் ஆராய்தல்

biotaxy : (உயி.) இயற்கை இனவகுப்பு : இயற்கை உருவ அமைப்புக்கேற்ப இனங்களை வகைப்படுத்தல்

biotic : (உயி.) உயிர்சார் பொருள் : பெனிசிலின் போன்ற நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள்கள். இவை, ஓர் உயிர்ப் பொருளை மற்ற உயிர்ப் பொருள்களிடமிருந்து பாதுகாக்கிறது. மருத்து வத்தில் பாக்டீரியாக்களை அழிக்கப் பயன்படுகிறது

biotin : பயோட்டின் : ஊட்டச் சத்து B-2 கலவைக் கூட்டில் அட்ங்கியுள்ள 'எச்' (H) என்ற ஊட்டச்ச்த்து. இது நொதியின் (ஈஸ்ட்) நொதிப்பு நடவடிக்கைக்கு இன்றியமையாதது. சிலவகைப் பாக்டீரியாக்களுக்கும், மனித உடல்நலத்திற்கும் இது தேவை. இது இல்லை எனில் தேரல் நோய்கள் உண்டாகின்றன. முட்டையின் சமைக்கப்படாத வெண்கரு இதனை அழிக்கிறது

bipack : நிறப்பகுப்பு முறை : வண்ணத் திரைப்படங்கள் எடுப்பதற்குப் படச்சுருள்களை ஒளிப்படக் கருவியில் முறைப்படுத்தி வைக்கும்முறை. நீலச் சுருளும், சிவப்புச் சுருளும் அவற்றின் ஒளியுணர் பரப்புகளைத் தொட்டுக் கொண்டிருக்கு மாறு ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும். நீலச்சுருள் முன்புறத்தில் ஒரு சிவப்புப்படலத்துடன் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் சிவப்பு ஒளி மட்டுமே சிவப்புச் சுருளை அடையும். பச்சைச் சுருள் தனியாக இருக்கும். ஆடியிலிருந்து வரும் ஒளியானது நீலம் சிவப்புபச்சைச் சுருள்கள் மூன்றிலும் விழும்படியாகப் பகுக்கப்படுகிறது

biplane : (வானூ.) இருதள விமானம் : ஒன்றன் மேல் ஒன்றாக இரு முதன்மையான ஆதாரத் தளங்களையுடைய விமானம்

bipolar : (மின்.) இருமுனையுடைய : நேர் எதிரான துருவ முனைப்புகளைக் கொண்ட இருகாந்தத் துருவங்களையுடையது

bipolar receiver : (மின்.) இருமுனை தொலைபேசி ஒலிவாங்கி : இரு துருவத் தொலைபேசி ஒலி வாங்கி. இதில் இரு துருவங்களும் இடையீட்டுத் தகட்டின் மீது செயற்படுகின்றன

bird’s-eye maple : (மர.) எழில் வண்ணக்காட்சி : அழகுடைய நிழல்தரும் 'மாப்பிள்' என்ற மரவகையின் கரணையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பலகைகள் அல்லது மேலடைகள் மூலம் கிடைக்கும் மிக அழகிய வண்ணக் காட்சி

bird's mouth : (தச்சு.) புள் வாய் : இறைவாரக்கை மரத்தின் அடிப் பகுதியில் கவர்த் தகட்டில் பொருந்தி நிற்பதற்கேற்ப வெட்டப்படும் இறைவாரக்கை மரத்தில் எழுதகத்திற்காக வால் முனை விரிவாக்கம்

புள்வாய்
அமைக்கும்போது பயன் இது படுத்தப்படுகிறது.

birmingham or stubs wire gauge : (எந்) பர்மிங்காம் அல்லது அடிக்கட்டைக் கம்பி அளவி : மெல்லிய கம்பிகளின் அடிக்கட்டைகளை வடிவமைக்கும் கருவி. இரும்புக் கம்பி, சூடான மற்றும் குளிர்ந்த உருட்டுத் தகட்டு எஃகினை அளவிடுவதற்குப் பயன்படுகிறது. அடிக்கட்டை எஃகுக் கம்பி அளவியிலிருந்து வேறுபட்டது

biscuit : பீங்கான் துண்டு : முதல் சூடாக்கத்திற்குப் பிறகு மெருகு வராத நிலையிலுள்ள் பீங்கான் துண்டு

bisect : இரு சமவெட்டு : ஒத்த இரு சம கூறுகளாகப் பிரித்தல் அல்லது வெட்டுதல்

bismuth : (வேதி.) நிமிளை : இது ஓர் உலோகத் தனிமம். குறைந்த உருகு நிலையுடைய உலோகக் கலவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. நீராவிக் கொதிகலன்கள், மின் உருதிகள், தானியங்கித் தெளிப்பான்கள், தீ எச்சரிக்கைக் கருவிகள் முதலியவற்றில் காப்பு முனைகளாகப் பயன்படுகிறது. தீயின் வெப்பநிலை மாறும் போது, கருவியிலுள்ள உலோகக் கலவை உருகி, நீர்த் தெளிப்பானை இயங்கச் செய்கிறது

bismuth meal : (மரு.) நிமிளை உணவு : சீரண உறுப்புகளின் ஊடு கதிர் (எக்ஸ்-ரே) படங்களை எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் உணவுடன் கலந்த நிமிளை உப்பு

bistoury : ஒடுங்கு கத்தி : மருத்துவத்தில் பயன்படும் ஒடுங்கிய அறுவைக் கத்தி

ஒடுங்கு கத்தி

bit : (மின்.) : துணுக்கு : ஒரு கணிப் பொறியின் சேமிப்புத் திறனின் ஒர் அலகாகிய ஈரிலக்க எண். இருவகை எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தும் ஒரு மொழியின் தனியொரு எழுத்து

bit brace : துண்டு பற்றிருக்கி : துண்டு துணுக்குகளை இறுகப் புற்றிக்கொள்ளும் ஒரு சாதனம், நெம்பித் திருப்புவதற்கு ஏற்றவாறு இது அமைக்கப்பட்டிருக்கும்

துண்டு பற்றிறுக்கி

bite : அரிமான வேலை : உலோகத் தகட்டில் அரிமானம் மூலம் செய்யப்படும் செதுக்கு வேலை

bit file : துரப்பண அரம் : துரப்பணத்தின் கடிவாயினைக் கூர்மையாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒர் அரம்

bit gauge : துரப்பண அளவி : "துரப்பணத் தடை" எனப் பொதுவாக அழைக்கப்படும் சாதனத்தின் சரியான பெயர்

bit stop : துரப்பணத் தடை : தேவையான ஆழத்திற்குத் துரப்பணம் செய்வத்தை அல்லது தோண்டுவதைக் கட்டுப்படுத்துவதற்காகத் துரப்பணத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம்

bitumen : நிலக்கீல் : எளிதில் தீப்பற்றக் கூடிய கணிப்பொருள்களில் ஒன்று

bituminous coal : நிலக்கிலார்ந்த நிலக்கரி : சாதாரனமான மென்மையான நிலக்கரி

black annealing : (உலோ.) கருமைப் பதனாக்கும் : உலோகத் தகடு கள் சிம்புகளின்றியும், நிறம் மாறாமலும் இருக்க வேண்டிய அவசியமில்லாதபோது, அவற்றைச் செய்வதற்கான ஒரு முறை

black bean : (மர.) கருங்தேக்கு : தேக்கு மரத்தைப் போன்றே வெட்டு மரம் தரக்கூடிய ஒர் ஆஸ்திரேலிய மரவகை. நேர்த்தியான உட்புற ஆலங்காரத்திற்கு இது பெருமளவில் பயன்படுகிறது

black birch : கரும் பூர்ச்ச மரம் : இது 15-18 மீ. வரை வளரக் கூடியது. இதன் விட்டம் 30-90 செ.மீ. இருக்கும். இதன் வெட்டுமரம் கடினமானது, வலுவானது. சீமை நூக்கு மரத்திற்குப்_பதிலாக உட்பகுதி அலங்காரத்திற்கும் அறைகலன்கள் தயாரிப்புக்கும் பயன்படுகிறது

black body : கரும்பொருள் : தன்மீது விழும் வெப்பக்கதிர்கள், ஒளிக்கதிர்கள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஒரு பொருள். இதனைச் சூடாக்கும் போது இது அந்த வெப்ப நிலையில் மிக அதிக அளவிலான வெப்பத்தை வெளியிடுகிறது

black box : (வானூ.) கறுப்புப் பெட்டி : விமானத்தின் இயக்கம் தொடர்பான சமிக்கைகளையும் உரையாடல்களையும் பதிவு செய்து கொள்ளும் ஒர் அடையாளப் பெட்டி

black copper : கருஞ்செம்பு : 75% செம்பு அடங்கியுள்ள ஒருவகை உலோகம். தரங்குறைந்த செம்பினை மீண்டும் உருக்கி இதனைப் பெறலாம்

blackdamp : (வேதி.) கரும் நச்சாவி : சுரங்கங்களில் காணப்படும் கார்பன்டையாக்சைடு என்ற நச்சாவியின் பெயர் (பார்க்க: சுரங்க நச்சாவி அல்லது சுரங்க நச்சு வாயு.)

black gum (மர.) கரும்பிசின் மரம் : இதனைப் புளிப்புப் பிசின் மரம் என்றும் கூறுவர். இது நடுத்தர வடிவளவுடைய மரம். இதன் வெட்டுமரம் கடினமானத்ன்று; ஆனால், சொர சொரப்பானதாகவும், எளிதில் பிளக்க முடியாததாகவும் இருக்கும். சமையலறைப் பொருட்கள் மரச்சீவல் கூடைகள், அழிப்பெட்டிகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது

blacking : கருமெருகிடுதல் : ஒரு வார்ப்படத்தின் மேற்பரப்பில் தூவப்படும் மரக்கரி அல்லது நிலக்கரி அல்லது கல்கரியின் தூள். இது மணல் தீய்ந்துவிடாமல் தடுக்கிறது

black lead : கருவங்கம் : வார்ப்பிரும்புக் குளிர்பதன வார்ப்பட முகப்புகளிலும், வண்ணப் பூச்சுத் தோரணிகளிலும் பயன்படுகிறது

black letter : (அச்சு.) கரும் அச்செழுத்துரு : ஜெர்மன் எழுத்துப் போன்ற பழைய ஆங்கில அச்சு எழுத்து வடிவம்

blacker than black (மின்.) கருமையினும் கருமை : தொலைக் காட்சியில் உரிய கருமை அளவுக்கு மேல் படம் கருமையாகத் தோன்றுதல். இந்தப் பகுதியில் ஒளிக்கற்றை பின்வாங்கிச் செல்கிறது

black level : (மின்.) கருமை அளவு : தொலைக்காட்சியில் கருமைப் பகுதியைக் குறிக்கும் கூட்டுத் தொலைக்காட்சி சமிக்கை

black light : (மின்.) கருமை ஒளி : புற ஊதா ஆற்றலை உமிழும் ஒளி

bladder worm : (உயி.) சவ்வுப் புழு : நாடாப்புழுவின் முட்டைப்படிவம்

blade : அலகு : ஒரு கத்தியின்வெட்டுவாய். விமானச் சுழல் விசிறியின் அலகு போன்ற ஒரு கருவியின் அல்லது சாதனத்தின் தட்டையான தீவிர இயக்கப் பகுதி.

blade angle : (வானூ.) அலகு முதுகு : ஒரு முற்செலுத்தும் சுழல் சிறியின் பக்கப்பகுதி. இது விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் மேற்பரப்பிற்கு நரிணையாக இருக்கும்

blade back : (வானூ.) அலகுக் கோணம் : முற்செலுத்தும் சுழல் விசிறியின் அல்லது சுழல் இறகு அமைப்பின் ஆரத்திற்கும், சுழல் அச்சுக்குச் செங்குத்தான ஒரு சம தளத்திற்குமிடையிலான கூர்ங் கோணம்

blade face : (வானூ.) அலகு முகப்பு : விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் கீழ்ப்பரப்பிற்கு நேரிணையாக இருக்கும் முற்செலுத்துச் சுழல் விசிறி அலகின் மேற்பரப்பு. இதனை அழுத்த முகப்பு அல்லது இயக்க முகப்பு என்றும் அழைப்பர்

blacksmith : கருமான்; கொல்லன் : உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்கும் கைவினைஞர்

blacksmith drills : கருமான் துரப்பணம் : 1.27 செ.மீ. விட்டமுடைய, சாய்வுத்திருகுக்கான ஒரு சமதளத்தைக் கொண்டு ஒர் எந்திரத் தண்டின் மூலம் செய்யப்படும் துரப்பணம்

black spruce : (மர.) கரும் ஊசியிலை மரம் : இது எடை குறைந்தது; சிவப்பு வண்ணம் உடையது; இதன் இழை கடினமானதாயினும் வேலைப்பாடு செய்ய எளிமையானது. இது அமெரிக்காவின் வடமாநிலங்களிலும், கனடாவிலும் காணப்படுகிறது

black varnish : கரும் அவலரக்கு : புகைக்கரியிலிருந்து செய்யப்படும் கருவண்ணம் சேர்க்கப்பட்ட சாதாரண அவலரக்கு. இது தோரணிகள் செய்பவர்களுக்குப் பயன்படுகிறது

black walnut : (மர.) கரு வாதுமை மரம் : இது கனமானது; கடினமானது. நுண்துளைகளுடையது; பழுப்பு நிறம் வாய்ந்தது, சிறு மரப்பெட்டிகள், துப்பாக்கிச் சட்டங்கள் செய்யவும், உட்பகுதி அலங்கார வேலைப்பாடுகளுக்கும் பயன்படுகிறது

blade-width ratio : (வானூ.) அலகு-அகல விகிதம் : எந்த ஒரு புள்ளியிலும் முற்செலுத்துச் சுழல் விசிறியின் அலகின் முழு அகலத்திற்கும், அந்தச் சுழல் விசிறியின் அச்சிலிருந்து அந்தப் புள்ளிக்கு உள்ள தூரத்தை ஆரமாகக் கொண்ட ஒருவட்டத்தின் சுற்றளவுக்கும் இடையிலான விகிதம்

blanc fixe : வெண்காடி : இது பேரியம் சல்ஃபேட்டு ஆகும். இது வண்ணங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. பாரைட்ஸ் என்ற தாதுப் பொருளை நுண்ணிய தூளாக்கி இது தயாரிக்கப்படுகிறது. இது செயற்கையாகத் தயாரிக்கப்படும் போது இதன் நிறமி மிக நேர்த்தியாக இருக்கும். இதுவே 'வெண்காடி' என் அழைக்கப்படுகிறது

blanch : (குளி.) வெண்மையாக்கம் : புட்டியிலடைக்கப்படும் சில வகைக் காய்கறிகளைச் சூடான நீரில் அமிழ்த்திக் கிருமி நீக்கம் செய்தல்

bland fluids : பானத்திரவம் : வயிற்றுக்கு எரிச்சலுண்டாக்காத பால், பார்லி நீர் போன்ற பானங்கள்

blank : தட்டைத் தகடு : தட்டை உலோகத் தகட்டிலிருந்து வெட்டி எடுக்கப்படும் துண்டு எந்த ஒரு வடிவத்தையும் அமைப்பதற்கு முன்பு இல்வாறு எடுக்கப்படுகிறது

blank and center-punch die : (உலோ.) வெற்றிடமைய அழுத்த வார்ப்புப் படிவம் : துளையிடப்பட வேண்டிய துளைகளின் நிலைகளை ஒரே செயல் முறையில் துளையிட்டு மைய அழுத்தம் செய்கிற ஒரு வார்ப்புப் படிவம்

blankand pierce die : (உலோ.) வெற்றிடத்துளை வார்ப்புப் படிவம் : ஒரே செயல்முறையில் ஒரு வெற்றிடத்தையும், ஒன்றுக்கு மேற்பட்ட துளைகளையும் வெட்டுகிற ஒரு கூட்டிணைவான வார்ப்புப் படிவம்

blank book : வேற்றுப் புத்தகம் : முழுவதுமாகவோ பகுதியாகவோ எழுதப்படாமல் அல்லது அச்சிடப்படாமல் இருக்கும் ஒரு புத்தகம்

blank case : (அச்சு.) வேற்று அச்செழுத்துத் தட்டு : புகுதிப் பிரிவுகள் இல்லாத ஒர் அச்செழுத்துத்தட்டு

blank cut : (அச்சு.) எழுதாப் பக்கம் : ஒரு அத்தியாயத்தின் கடைசியில் உள்ள எழுத்து அச்சிடப்படாத பக்கம்

blanket : (வரை.) மூடு திரை : துணியுடன் சேர்த்து வலுவாக்கிய ரப்பர் பாளம். இது மாற்று அச்சடிப்பு உருளையைச் சுற்றிப் பிணைக்கப்படுகிறது. இது தகட்டிலிருந்து தாளுக்கு மையை மாற்றுகிறது

blanking die : (பட்.) துளையிடு வார்ப்புப் படிவம் : அழுத்துவதற்குரிய சாதனங்கள் அனைத்திலும் பெருமளவில் பயன்படுத்தக்கூடிய கருவி. உலோகத் தகட்டுத் துண்டினை ஒரு பிரித்தெடுப்பானில் செலுத்தித் துளையிடலாம். ஒரே துளையில் பல் அழுத்தங்களைக்கொடுத்து ஒரே சமயத்தில் பல துண்டுகளைச் செய்யும் போது, அது "பலமுனைத் துளையிடு கருவிகள்" என் அழைக்கப்படும்

blank-out : ஒளித்தடை : தொலைக் காட்சியில் படம் வருவதற்காக ஒளி வாங்கியைச் சரி செய்யும் போது, எதிர்மின் கதிர்க்கொடியைத் திருப்பி ஒளியியக்கத் திரை மீது விழச்செய்ய உதவும் அமைவில் படம் "அழிந்து போவதை" அல்லது "தடைபடுவதை" இந்தச் சொல் குறிக்கிறது

blast : (வார்.) வார்ப்பு வெடியுலை : வெப்பக் காற்றுாட்டப்பட்ட உலையில் செலுத்தப்படும் காற்றின் கன அளவு. இது வெடிப்பினைத் துரிதப்படுத்தும்

blast furnace : (வார்.) ஊதுலை : இரும்புத் தாதுக்களிலிருந்து இரும்பினை உருக்கியெடுக்கப் பயன்படும் உலை

blast gate (supercharger) : (வானூ.) மீவிசைக் காற்றடைப்பான் : உந்துகலம், விமானம் முதலியவற்றின் வகையில் மீவிசைக் காற்றடைப்புக் குழாய்

blast heater : (குளி.) காற்றுச் சூடேற்றி : சூடாக்கப்பட்ட கம்பிச்சுருள்கள் வழியே செலுத்தப்படும் அனல் கர்ற்றினைப் பயன்படுத்தும் சூடேற்று கருவி

blasting : வெடிவைத்துத் தகர்த்தல் : கற்சுரங்கம் போன்ற சுரங்கங்களில் சுரங்கமிட்டு வெடி பொருள் வைத்து வெடிக்கச் செய்து தகர்த்தல்

blasting powder : வெடிமருந்து : (பார்க்க:சுரங்கவெடி)

blaugas : (வேதி.) அனல்வாயு : இது ஓர் எண்ணெய் வாயு. இது பெட்ரோலியத்தைச் சிதைத்து வடித்தல் மூலம் பெறப்படுகிறது. இது விளக் சுேற்றுவதற்கும், சூடாக்குவதற்கும், எஃகினை வெட்டுவதற்கும் பயன்படுகிறது

bleaching : (மர. வே.) நிறமகற்றுதல் : ஆக்சாலிக் அமிலம் போன்ற வதியியல் பொருள்களின் துணையால் வண்ணம் போக்குதல் அல்லது வெண்மையாக்குதல்

bleaching powder : வெளுப்புக்காரம் : குளோரின், சுண்ணம், கால்சியம் குளோரைடு (CaOCl2) ஆகியவற்றினாலான பொருள். இதனை சுண்ணக் குளோரைடு என்றும் கூறுவர். இது துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது

bleed : (தானி.) கசிவமைப்பு : நீரியல் தடுப்பு அமைப்பிலிருந்து திரவத்தை வடித்தெடுப்பதற்கான அமைபபு

bleeder : கசிவு வடிப்பான் : இது ஒரு சிறிய வடிகுழாய். ஒரு பக்க வழி ஒரதரையும் இவ்விதம் கூறுவர்

bleeding : (மர. வே.) கசிவு மெருகு : சீமை நூக்கு போன்றவற்றில் அவலரக்கு போன்ற விரைவாக உறையும் பொருள்களைக் கரைத்து மெருகேற்றும் பொருள்

blemish : கறை : ஒரு மேற்பரப்பினை களங்கப்படுத்துகிற ஒரு கறை அல்லது களங்கம்

blending : (குழை.) கலப்பு : ஒரு வார்ப்பட அமைப்புப் பொருளில் எல்லாத் துகள்களும் ஒரு சீராகப் பகிர்ந்தமையுமாறு பல்வேறு அமைப்பான்களை எந்திர முறையில் கலவை செய்தல். நிலைமைகளைப் பொறுத்து உலர்கலப்பு அல்லது ஈரக்கல்ப்பு என அழைக்கப்படும்

blimp : (வானூ.) (1) சிறு வேவு விமானம்

(2) ஓசைத்தடை : பேசும்படத்தில் ஒலிப்பதிவுக் கருவிக்குரிய ஒசைத் தடைக் காப்புடைய சாதனம்

blind : மறைதிரை : ஒளியை அல்லது பார்வையை மறைக்கிற ஒரு திரை அல்லது தடுப்பான்

blind coal : அழலில் நிலக்கரி : அழல் இல்லாமல் எரியும் நிலக்கரி வகை

blind forces : இயற்கையாற்றல்கள்

blind flying : நிலங்காணாது பறத்தல் : நிலங்காணாது அல்லது சமிக்கைக் குறிகள் கேளாது பறத்தல்

blindgut : (உயி.) குடல்வால் : குடல் முனை

blind hole : முட்டுத் துவாரம் : முழுவதுமாக ஊடுருவிச் செல்ல முடியாதபடி ஒரு பக்கம் முடியுள்ள துவாரம். இது இருபுறமும் திறப்புடைய துவாரத்திலிருந்து வேறுபட்டது

blind mortise and tenon : (மர. வே.) முட்டுத்துளைச் சட்டம் மற்றும் பொருத்துமுளை : ஒரு துளைச் சட்டத்துடன் பொருத்தப்பட்டுள்ள ஒரு குறுகிய பொருத்து முளை. இது துளையினுள் முழுமையாகச் செல்லாது. அதனால் அதன் மறுமுனை வெளியில் தெரியாது

blind tooling : மழுங்கு கருவி : புத்தக மேலட்டைகளில் மெருகிடாமல் அல்லது வண்ணமிடாமல் அழுத்தம் செய்து அலங்கார வேலை செய்தல்

blinker light : (வானூ.) வேன்ளொளி விளக்கு : நிமிடத்திற்கு 20 முறை வெள்ளொளி காட்டும் விளக்கு

blip : (விண்.) சேனியக்கச் சைகை : சேணியக்க மானியின் திரையில் காணப்படும் பொருளின் வடிவம் blister : (வானூ.) கொப்புளிப்பு :

(1) ஒரு மிதவையின் அல்லது கப்பலின் உடற்பகுதியின் தாக்கத்தினால் கொப்புளித்து எழும் நீர்

(2) சாந்து பூசிய மேற்பரப்பில் கொப்புளம் போல் புடைத்த ஒரு காற்றுக் குமிழ் அல்லது புடைப்பு

(3) பிளாஸ்டிக் பரப்பில் மனிதரின் தோலில் உள்ள கொப்புளம் போல்தோற்றமளிக்கும் புடைப்பு. இந்தப் புடைப்பினைக் குத்தி விட்டுச் சமதளமாக்கலாம்

blister steel : (உலோ.) காய்ப்புடைய தகட்டிரும்பு : கடும்பதப்படுத்துதல் மூலம் தயாரிக்கப்பட்ட கச்சா எஃகுச் சலாகைகள்

block (engine) : (தானி; எந்.) அடி முட்டுப்பாளம் : பன்முக நீர் உருளை வாயு எஞ்சினின் நீர் உருளை வார்ப்புரு. இதில் நீர் உருளைத் துளைகளும், குளிர்விப்பதற்கான அமைவும் இருக்கும். இது நீர் உறைகளாகவோ குளிர்விக்கும் தடுப்புகளாகவோ அமைந்திருக்கும்

block : வார்ப்புப் பாளம் : மூலத் தோரணியிலிருந்து செய்யப்ப்ட்ட ஒரு வார்ப்புப் பாளம்

block and tackle : நிருத்துகப்பி கலன் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கப்பிப் பள்ளங்கள் அல்லது கப்பித் தொகுதிகள் மற்றும் அதற்கு இணைவாகப் பயன்படுத்தப்படும் கயிறு, சங்கிலி அல்லது வடம்

blocking capacitors : (மின்.) தடைக்கொண்மி : நேர்மின் அழுத்தத்தைத் தடுப்பதற்குப் பயன்படும் ஒரு கொண்மி

block chain : (எந்.) தொடர் சங்கிலி : மிதிவண்டியினது போன்று கண்ணியும் பொருத்தமாகத் தொடர்ந்த வளையம்

blocking condenser : தடையுறுத்து விசையேற்றி : வானொலி மின் சுற்றில், குறுக்கு வெட்டாக மின்விசை பாய்வதைத் தடுப்பதற்காக நேர் எதிரான இரு நேர் மின்னோட்ட முனைகளுக்கிடையில் பயன்படுத்தப்படும் ஒரு விசையேற்றி

blocking course : (க.க.) புறந்தடுப்பு அடுக்கு : கட்டிடச் சுவர்களின் உச்சியிலுள்ள எழுதகத்தின் முகட்டில் பொருத்தப்படும் அடுக்குக் கற்கள்

blocking out : ஒளித் தடையுறுத்தம் : ஒளியை ஊடுருவிச் செல்ல விடாதபடி ஒளிப்பட் மறி நிலைப் படிவத்திலிருந்து பின்னணி வண்ணத்தை அல்லது வகை நுணுக்கங்களை நீக்கிவிடுதல்

blockhouse : (விண்.) தடுப்புக் கட்டுமானம் : ராக்கெட் செலுத்தும்போது வடிப்பு, வெப்பம், காற்றுவீச்சு இவற்றிலிருந்து ஆட்களைப் பாதுகாபபதறகான கான்கிரீட் தடுப்புக் கட்டுமானம்

block letter : (அச்சு.) முதலுரு எழுத்து வடிவம் : தடித்த தனித்தனி அச்சுருப்போன்ற முதலுரு எழுத்து வடிவம

பார்க்க : பழம்படிவ அச்சுரு.

block plane : (மர. வே.) புரந்தடுப்புத் தளம் : 5"-7" நீளமுள்ள ஒரு சிறிய சமதளப் பரப்பு விளிம்பு அடுக்கு வரிகளை அமைக்க முக்கியமாகப் பயன்படுகிறது. இது மற்றத் தளத்திலிருந்து வேறுபட்டது. இதில் முகட்டு இரும்பு இல்லை. வெட்டும் சாய்தளம் கீழே இருப்பதற்குப் பதிலாக மேலே அமைந்திருக்கும்

block tin : (கம்.) வெள்ளியம் : தூய வெள்ளியம். (தகரம்)

blood groups : குருதிப் பகுப்பினங்கள் : மனித இரத்தத்தின் நான்குவகைப் பகுப்பினங்கள். ஒவ்வொரு வருடைய இரத்தமும் ஒரு குறிப்பிட்ட இன்த்தைச் சேர்ந்ததாக இருக்கும். நோயுற்றவருக்கு தவறான இன இரத்தத்தைச் செலுத்தினால், அவரது உடல்நிலை மோசமடையும். ஏனெனில், ஓர் இனத்தைச் சேர்ந்த இரத்தமானது இன்னொரு இன இரத்தத்தின் உயிரணுக்களுடன் ஒட்டிக் கொண்டு, பின்னர் கரைந்துவிடும்

bloom : (உலோ.) புடமிடுதல் :

(1) தேனிரும்புத் தயாரிப்பில் இரும் புக் குழம்பு, ஒரு பிழிவு எந்திர்த்தினுள் செலுத்தப்பட்டு அல்லது ஒரு நீராவிச் சம்மட்டியால் அடிக்கப் பட்டு, அதில் படிந்திருக்கும் கசடுகள் நீக்கப்படுகின்றன. இதனைப் ‘புடமிடுதல்’ என்பர்

(2) கட்டுமானத்தில், ஒரு செங்கற் சுவரின் மேற்பரப்பின் மீதுள்ள பொலிவமைப்பு

(3) தொலைக்காட்சியில், படநுட்பங்களை மறைத்திடும் வகையில் படக்குழலில் தோன்றும் ஒளிப் பிரகாசம். இது ஒரு வெண்பகுதி துள்ளுகின்றபோது நிகழ்கின்றது

blower : (எந்.) காற்றோட்டமியக்கும் பொறி : இழுக்கப்படும் சுமையினை அதிகரிக்கப் பயன்படும் ஒரு சாதனம். இது காற்றோட்டம் ஏற்படுத்துவதற்காக அல்லது கடுங்காற்று உண்டாக்குவதற்காகப் பயன்படுகிறது

blow hole : (வார்.) உலோகக் குமிழி : வார்ப்படத்தில் அல்லது வாயு இருப்பதன் காரணமாக வார்ப்படத்தில் உண்டாகும் ஓர் உட்குழிவு

blow horn stake : (உலோ.) ஊது கொம்பு ஆதாரக் கம்பம் : உலோகத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஒரு கம்பம், இதில் ஒரு செங்குத்தான் கம்பத்தின் நுனியில் இருபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும் புயங்கள் அமைந்திருக்கும். இந்தப் புயங்களில் நீளமாகவும், நுனி நோக்கிச் சிறுத்ததாகவும், மற்றொன்று குறுகலாகவும் பட்டையாகவும் இருக்கும்

blowing : (மின்.) ஒளிமங்கள் : சமிக்கைச் செறிவு அதிகமாவதன் காரணமாக தொலைக்காட்சியில் படம் முனைப்பழிந்து படலமாகத் தெரிதல்

blowing : ஊதிவெடித்தல் : மிக விரைவாகச் சூடாக்குவதில் நீராவி உண்டாவதால் செய்கலம் வெடித்துச் சிதறிவிடுதல்

blow molding : (குழை.) ஊதுவார்ப்படம் : பிளாஸ்டிக் புட்டிகள், புழையுள்ள செய்கலன்கள் செய்வதற்கான ஒருமுறை. இதில், புறந்துருத்திய பிளாஸ்டிக் குழலினை அல்லது குமிழினைக் காற்றறை ஊதி ஒர் உலோக வார்ப்புப் படிவத்தின் குளிர்ச்சியான பரப்பில் பதியும்படி செய்து வார்ப்புப் படிவம் உருவாக்கப்படுகிறது

blown fuse : (தானி. எந்.) அவிந்த மின்காப்பு எரியிழை : எரிந்து போன மின்காப்பு எரியிழை

blowoff : (பொறி) ஊது உறிஞ்சி : ஒரு நீராவி அல்லது கொதிநீர் கொதிகலத்தில் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஒரதர் அல்லது வடிகால். இது கலத்தில் சேர்ந்துள்ள எண்ணெய், மசகு, கசடு ஆகியவற்றுடன் சேர்த்து நீரையும் நீராவி யையும் உறிஞ்சி வெளியே இழுப்பதற்குப் பயன்படுகிறது

blowout : (எந்.) வெடிப்பு : ஒரு சக்கரத்தின் டயரிலிருந்து காற்றினை உடனடியாக வெளியேற்றும் வகையில் ட்யரின் உட்குழாயி லும், வெளிப் பொதியுறையிலும் ஏற்படும் வெடிப்பு

blowout coils : (மின்.) வெடிப்புச் சுருள்கள் : ஒரு காந்த விசையின் வரிசைச் சுற்றிலுள்ள மின் காந்தச் சுருள்கள். இந்த விசையினால் இணைப்பினை ஏற்படுத்தும்போது, தொடர்புகளுக்கிடையிலான சுடரினை அணைக்கும் விதத்தில் காந்த அழுத்தம் உண்டாகிறது

błowout patch : (தானி.) புடைப்பு ஒட்டுப்பட்டை : ஒரு டயரின் பலவீனமான பகுதியை வலுப்படுத்துவதற்காக அந்தப் பகுதியில் கித்தான் அல்லது ரப்பர்த் துண்டினைச் செருகிக் காற்றடைத்துப் புடைக்கச் செய்தல்

blowpipe : ஊதுகுழல் : சூடாக்குதல், உருக்குதல் காய்ச்சுதல் ஆகிய வற்றுக்கான தீப்பிழம்பினை ஊதி விடுவதற்காக காற்று அல்லது வாயுவுைச் செலுத்துவதற்கான ஒரு குழல்

blowtorch : (பட்.) ஊது பந்தம் : குறிப்பிட்ட இடத்தில் தீவிரமாக வெப்பம் உண்டாக்குவதற்குரிய கையடக்கமான சாதனம். இதனைக் குழாய்-தொட்டி வேலை செய்வோரும், வண்ணம் பூசுவோரும் பயன்ப்டுத்துகின்றனர்

blow up : (அச்சு.) அச்சுப்பட விரிவாக்கம் : அச்சுப் படங்களைப் பெரிதாக்குதல்

blub : (குழை.) புடைப்பு : பிதுக்கம் அல்லது புடைப்பு

blue : நீலம் : மண்பாண்டங்களுக்கு மிகவும் உகந்த வண்ணம்: பச்சைக்கும் செங்கரு நீலத்திற்கும் இடைப்பட்ட ஒர் அடிப்படை வண்ணம்

blue annealing : (உலோ.) நீலப்பதனாக்கம் : கண்ணாடி, உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ, நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கடும் பதப்படுத்துதல்

blueprint : முதனிலைப் படிவம் : நீலத்தில் வெண்கோடாக உருப்படி வமுறும் ஒளிப்பட அச்சுப்படிவம். இந்த முறையை “முதனிலைப் படிவ அச்சடிப்பு" என்பர்

blue stain : நீலப் பூஞ்சணம் : பக்குவப்படுத்தப்படாத வெட்டு மரத்தில் ஒரு வகைக் காளானால் உண்டாகும் பூஞ்சணம். இதன் தோற்றம் அருவருக்கத்தக்கதாக இருப்பினும், வெட்டு மரத்தின் வலுவை இது பாதிப்பதில்லை

blue stone, blue vitriol, or copper sulphate : (வேதி.) மயில் துத்தம்/நீலக் கந்தகத் திராவகம் / செப்புக் கந்தகி : இது நீல நிறமுடையது; படிக வடிவிலுள்ளது; நச்சுத் தன்மையுடையது; திறந்த வெளிக்காற்றுப்பட பொடிப் பொடியாகக் கூடியது; நீர்த்த கந்தக அமிலத்தை தாமிர ஆக்சைடு மீது வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. பஞ்சாலைத் தொழில், மின்கலங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. பூச்சிக் கொல்லியாகவும் காளான் கொல்லியாகவும் பயன்படுகிறது

blunging machine : மண்பிசையும் பொறி : மண்பாண்டத் தொழிலுக்காகக் களிமண்ணையும் கற்பொடியையும் சக்கரப் பொறியில் சுழற்றி நீரில் பிசையும் எந்திரம்

blushing : (வண். அர.) கன்றுதல் : வெப்பமான, ஈரப்பதன் மிகுந்த நாட்களில் படச்சுருளின் மீதும் வெண்மையான அல்லது பழுப்பு மேகம் போல் படியும் ஒருவகை மேற்படிமானம். இது கரைப்பான்கள் துரிதமாக ஆவியாவதால் ஏற்படுகிறது board : பலகை அட்டை : மெல்லிய மரத்தகடு. இது மென் தகடுகள் அல்லது கட்டை வார்த்துணுக்குகளிலிருந்து வேறுபட்டது. மீ.க்குக் குறைவான கனமும், 10செ. அகலமும் கொண்ட நீண்ட துண்டுகள், பலகைகள் எனப்படுகின்றன

அட்டைப் பெட்டிகள் தயாரிக்கப் பயன்படும் கனத்த அட்டைப் பலகைகள்

board foot : பலகை அளவை : பலகை அளக்கும் மூல அளவு. 30 செ.மீ. சதுரமும், 2.5 செ.மி. அல்லது அதற்குக் குறைவான கனமும் கொண்ட அளவு

board measure : (மர. வே.) பலகை அளவீடு : கவட்டு மரங்களை வடிவுறுத்தி விலைகளை அறுதியிடப் பயன்படும் அளவீடு

board rule : (மர. வே.) பலகை அளவு கோல் : வெட்டுமரத் தரத்தைச் சோதனை செய்வதற்கான அளவுக் கூறுகள் குறிக்கப்பெற்ற அளவுகோல்

boasting : செதுக்குருவாக்கம் : திருத்தமின்றி வெட்டிச் செதுக்கி உருவாக்கம் செய்தல்

boat tail : (விண்.) படகு வால் : ஏவுகணையின் நீள் உருளைப் பகுதி, வாலை நோக்கி விட்டத்தில் குறுகிச் செல்லுதல். இதனால் வளி இயக்க இழுவை விசை குறைகிறது

bobbin : (குழை.) கம்பி இழையுருளை : ஒரு காந்தத்தின் கம்பிச் சுருள் சுற்றப்பட்டிருக்கிற மைய உட்புரி

bodkin : (அச்சு.) அச்சு இடுக்கி : திருத்துவதற்காக அச்சுருவைப் பற்றி எடுக்கும் ஒரு நீண்ட கூர்மையான இடுக்கி

bodoni : (அச்சு.) போடோனி அச்சுரு : போடோனி என்பவர் உருவாக்கிய முதலாவது நவீனப் பொதுமுறை அச்சுரு மாதிரி

body : (வானூ.)

(1) விமானக் கட்டுமானச் சட்டம் : எந்திரத்தின் மேல் மூடியும் கவசமும் கொண்ட விமானத்தின் கட்டுமானச் சட்டம்

(2) மட்கலம் : மெருகிடப்படாத அல்லது அலங்கார வேலை எதுவும் செய்யப்படாத வெறும் மட்கலம்

(3) தோரணி வார்ப்படம்

(4) திட்ப ஆற்றல் : பிளாஸ்டிக் தொழிலில், பிசைவுப் பொருளின் திட்ப ஆற்றலைக் குறிக்கும் சொல். இதைப் பொறுத்து அந்தப் பொருளை "மென் பொருள்" அல்லது 'திண்மப் பொருள்' என்பர்

bodying in : திண்மையாக்கம் வெட்டுமரத்தின் உள்ளணுத் துகளினை நிரப்பி மெருகேற்றுதல்

body matter : (அச்சு.) அச்செழுத்து வாசகம் : விளம்பரத்தில், காட்சியமைவு செய்யாமல் அடுக்கப்பட்ட அச்செழுத்து வாசகப் பகுதி

body type : (அச்சு.) வாசக அச்செழுத்து : நூல்கள் முதலியவற்றில் படிப்பதற்குரிய வாசகங்களுக்குப் பயன்படுத்தப்படும் அச்செழுத்து

bog ore : சதுப்புத் தாது : சதுப்பு நிலங்களில் காணப்படும் மென்மையான இரும்புத் தாது

boiled oil : (வண்.) கொதிநிலை எண்ணெய் : விதை எண்ணெய் 400° முதல் 500° பா. வரை கொதிக்க வைக்கப்பட்டு அதனுடன் காரீய அல்லது மாங்கனிஸ் டையாக்சைடு சிறிதளவு சேர்க்கப் படுகிறது. இந்த எண்ணெய் வண்ணங்களை விரைவாக உலரச் செய்வதற்குப் பயன்படுகிறது, பழம் பொருள்களுக்கு இது மிகச்சிறந்த மெருகு எண்ணெயாகும் boiler : கொதிகலன் :

(1) தொழிற்சாலைகள், கப்பல்கள், வீடுகள் முதலியவற்றுக்கான வெப்பத்தை அல்லது விசையை உண்டாக்கு வதற்காக நீராவியை உற்பததி செய்யும் ஒர் ஊதுலையின் பகுதி

(2) வீடுகளில் வெந்நீர் போடுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கொள்கலம். திறந்தகலங்கள் அல்லது கொள்கலங்களிலிருந்து வேறுபட்டது

(3) பயன்பாடு, கட்டுமானம் ஆகியவற்றையொட்டி வெப்பு மூட்டு வதற்கும் திறனுாட்டுவதற்கு மான கொதிகலங்கள் நான்குவகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன

(1) வார்ப்பிரும்புப் பகுதிக் கொதி கலம்; (2) எஃகு நெருப்புக் குழாய் கொதிகலம்; (3) எஃகு நீர்க்குழாய் கொதிகலம், (4) சிறப்பு வகைக் கொதிகலம் (பார்க்க : வார்ப்பிரும்புக் கொதி கலம்; கிடைநிலை மீள் வரவுக் குழாய்க் கொதிகலன்; நெருப்புக் குழாய்க் கொதிகலம்; எஃகுக் கொதிகலம் முதலியன)

boiler horse power : (பொறி.) கொதிகலக் குதிரைத்திறன் : ஒரு கொதிகலத்தில், 212° பா. வெப்ப நிலையில் ஒரு மணிநேரத்தில் 15 கிலோ நீர் ஆவியாகும் திறன், ஒரு மணி நேரத்தில் 33, 471.9 B.T. W. அளவுக்குச் சமமானதாகும்

boiler plate : (பொறி.) கொதிகலத் தகடு : தொட்டிகள் அல்லது கொதிகலங்கள் செய்வதற்குப் பயன்படும் எஃகுப் பாளங்கள் அல்லது தகடுகள்

boiler room : (பொறி.) கொதிகல அறை : வெப்ப மூட்டுவதற்கும் விசையூட்டுவதற்கும் கொதிகலமும் அதன் துணைக் கருவிகளும் வைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையின் அல்லது வேறு கட்டிடத்தின் ஒரு பகுதி

boiler scale : கொதிகலப் படலம் : ஒரு கொதிகலத்தினுள் உள்ள கார்பனேட்டு வண்டல், கால்சியம் மக்னீசியப் சல்பேட்டுகள், மற்ற மிதக்கும் பொருட்களின் படலம்

boiling point : கொதிநிலை : ஒரு திரவம் கொதித்து ஆவியாகக் கூடிய உச்ச வெப்ப நிலை. இது வாயுமண்டலக் காற்றின் அழுத்தத்திற்கேற்ப மாறுபடுகிறது. ஒரு மலையின் உச்சியில் நீர், கடல் மட்டத்தை விடக் குறைந்த வெப்ப நிலையில் ஆவியாகிறது. ஒரு குறிப்பிட்ட வாயு மண்டலக் காற்றழுத்தத்தில் (பாரமானியில் பாதரசம் 76 செ.மீ. அளவு) ஒரு திரவம் ஆவியாவதைப் பொறுத்து அதன் கொதிநிலை நிருணயிக்கப்படுகிறது

bold : (அச்சு.) திண்மை அச்செழுத்து : கனத்த முகப்புடைய அச்செழுத்து. முனைப்பான தோற்றமுடைய எதுவும்

bold face : (அச்சு.) திண்மை முகப்பு : வாசக எழுத்துக்களை விடத் தடித்த தோற்றமுடைய அச்செழுத்து. தலைப்புகளை முனைப்பாகக் காட்டுவதற்கு இந்த வகை அச்செழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன

bole : செங்களிமண் : எளிதில் சுடத்தக்க செந்நிறக் களிமண் வகை. இது மஞ்சள், பழுப்பு, கருமை நிறங்களிலும் கிடைக்கிறது. முன்னர் சாயப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது

bolection : வார்ப்படப் புடைப்பு : சுவர், கதவு முதலியவற்றின் பரப்பிலுள்ள தனி முகப்புக் கூறுகளின் விளிம்பைச் கற்றியுள்ள ஒரு வார்ப்படம்

bollard : கட்டுத்தறி : கப்பலிலோ துறையிலோ கயிறுகள் கட்டுவதற் குரிய வார்ப்பிரும்பினாலான அல்லது மரத்தினாலான கட்டுத்தறி

bolometer : (மின்.) வட்டலையியக்க மானி : இது ஒர் அனல் துலாக்கோல். மின்விசைத் தடை மாறுபாடுகளால் ஏற்படும் வெப்ப ஆற்றலின் மிக நுண்ணிய அளவுகளை அளவிடக் கூடிய ஒரு நுட்பமான கருவி

bolster : (க.க.) தாங்குமூட்டு : பண்டைக் காலக் கிரேக்கக் கட்டிடக்கலையில் தூண் தலைப்பின் இருபுறச்சுருள் அணி அமைப்பின் திருகுசுருள் வடிவ முகட்டின் பக்கக் கிளைப் பகுதி. ஒரு கவானின் மையத்தில் உத்தரத்திலிருந்து மறு உத்தரம் வரை ஒடும் குறுக்குச் சட்டம். ஒர் அலைவாய்க் குறட்டின் மீதுள்ள ஒரு தாங்கிணைவுப் பாலத்தின் அண்டைக் கொடுத்துத் தாங்கும் இடம். ஒரு தூலத்தின் தாங்கணைவை நீட்டிப்பதற்கு ஒரு கம்பத்திலுள்ள முகடு அல்லது மேல் விளிம்பு

"அச்சு வார்ப்புக் கட்டை" என அழைக்கப்படும் பட அச்சுக்கட்டை. இதில் வார்ப்புருவத் தாய்ப்படிவம் அழுத்தும் பொறி வைக்கப் பட்டிருக்கும். இது தலைப்புடன் இருமுனைகளிலும் மரையாணிகளால் இணைக்கப்பட்டிருக்கும்

bolster : முட்டுக்கொடு : அண்டைக் கொடுத்துத் தாங்குவதற்குமுட்டுக் கொடுத்தல். பொதுவாக இது ஓர் அடிக்கட்டையாக அல்லது ஆதாரக்கட்டையாக அமைந்திருக்கும். இது திண்டுக் கட்டை நெடுகிலுங்கூட அமைந்திருக்கும்

bolt : (எந் ) தாழ்ப்பாள் : பூட்டுவதற்கான ஒரு தாழ். பொதுவாக இது ஒர் உச்சித்தலையும், திரு கிழையுடைய உடற்பகுதியும் கொண்ட ஒர் உலோகத் துண்டாக அமைந்திருக்கும். நீள் சதுர மரச்சில்லேடு போன்று, துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட வெட்டுமரத்துண்டு

bolt cutter or bolt shear : மறையா வட்டி அல்லது மறையானி கத்திரி : மறையாணிகள் சங்கிலிக் கண்ணிகள் முதலியவற்றை வெட்டுவதற்குத் கையினால் இயக்கப்படும் கத்திரிப்பான்

bomarc : (விண்.) போமார்க் : தரையிலிருந்து வானத்திற்கு ஏவக் கூடிய ஒர் ஏவுகணை. இதனை 320-640 கி.மீ. உயரம் வரைச் செலுத்தலாம்

bombardment : (மின்.) அணுத்தகர்ப்பு : அதிவேக எலெக்ட்ரான்கள், அயனிகள் போன்ற விசைத்துகள்களின் ஒழுக்கால் அணுவைத் தகர்த்துத் தாக்குதல், இதனால், பல வண்ணப் பகட்டொளி வீசுகிறது

bombe : (க.க.) புடைப்புக் கூம்பு : புடைப்பாக, வட்டமாக அல்லது புறங்குவிந்த கூம்பு வடிவம்

bond : பிணைப்பு : கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு

சாணை உருளையில் உராய் பொருளின் துகள்களை ஒன்றாகப் பிணைப்பதற்குப் பயன்படும் பிணைப்புப்பொருள்

bonded lining : (தாணி; எந்.) பிணைப்பு உள்வரிப் பூச்சு : தரையாணிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காகத் தடுப்புக் கட்டைகளில் அல்லது கட்டுக் கம்பிகளில் பூசப்பட்டுள்ள உள்வரிப் பூச்சு

bond paper : ஆவணக் காகிதம் : பத்திரங்கள், பங்குச் சான்றிதழ்கள் முதலியவற்றை எழுதுவதற்குப் பயன்படும் உயர்தன்மைத் தாள். இது கந்தல்கள், விலங்குத் தோல்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கடிதத் தாள்களுக்கும் இது பயன்படுகிறது

bond stone : ஊடுகள் : சுவரின் ஊடே நீண்டு செல்லும் கல்

bone black : (வேதி.) எலும்புக் கரி எச்சம் : மூடிய கலத்தில் வெப்பூட்டிக் கருக்கப்பட்ட எலும்பின் கரி எச்சம். வண்ணம் போக்கவும், சர்க்கரைக்கு மெருகேற்றவும், வண்ண நிறமியாகவும் பயன்படுத்தப்படுகிறது

bonet : (கம்.) மேல்மூடி : ஒர் ஒரதர் நூற்புக் கதிரின் வால் முனையை மூடி வைப்பதற்குப் பயன்படுகிறது

book binder’s wire : (அச்சு.) புத்தகம் கட்டுவோர் கம்பி : திறந்த உலையில் தயாரிக்கப்பட்டு ஈயம் பூசிய எஃகினாலான கம்பி. 18 முதல் 30 கடிகை அளவுகளில் உருண்டை வடிவிலும் 18X20 முதல் 25X32 கடிகை அளவுகளில் தட்டையான வடிவிலும் தயாரிக்கப்படுகிறது. 10 செ.மீ. கண்டுகளில் அல்லது காகிதக் கூம்புகளில் விற்கப்படுகிறது

book binding : புத்தகக் கட்டுமானம் : நூலின் பகுதிகளை ஒருங்கிணைத்து, அதன் மேல் உறையிட்டுக் கட்டுதல்

book paper : புத்தகக் காகிதம் : புத்தகங்களை அச்சிடுவதற்குப் பயன்படும் மெருகேற்றிய அல்லது மெருகேற்றாத காகிதம். இது அட்டை உறைகளுக்குப் பயன்படும் முரட்டுக் காகிதத்திலிருந்து வேறுபட்டது

boom : குறுக்கு விட்டம் : பாரங்களைத் தூக்கி ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்தில் வைப்பதற்குப் பயன்படும் பாரந்துக்கியின் நகரும் புயம்

boost : (வானூ.) மேலேற்றி : விமானத்தில் கடல் மட்டத்தில் எஞ்சினுள் சாதாரணமாகச் செலுத்தப்படும் காற்றின் அல்லது கலவையின் அளவைவிட அதிக அளவு உட்செலுத்தி மேலே ஏற்றுதல்

boost control automatic : (வானூ.) தானியங்கி மேலேற்றுக் கட்டுப்பாடு : மேலே ஏற்றும் அழுத்தத்தைத் தானாகவே முறைப்படுத்தும் அமைவு

booster : (மின்.) நிரவி : மின்னினியக்கம் செறிவுறுத்துவதற்கான ஒரு மின்னாக்கி. பொதுவாக ஒரு சேமக்கலம் ஒரு பகுதியாகவுள்ள ஒர் இணைப்பு முன்றயில் இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு மின் கலத்திற்கு மீண்டும் மின்னூட்டம் வேண்டியிருக்கும் ஒரு நிலையில் இந்த நிரவி பயன்படுத்தப்படுகிறது

booster brake : (தானி; எந்.) நிரவித் தடை : தடைக் கால்மிதியுடன் இணைக்கப்பட்டுள்ள, உட்கொள் பெருங்குழல் வெற்றிடத்திலிருந்து செயற்படும் ஒரு துணையான காற்று அறை. இது குறைவான கால் மிதி அழுத்தத்துடன் அதிகத் தடை விளைவினை உண்டாக்க உதவுகிறது

booster coil : (மின்.) நிரவிச் சுருள் : விமானம் புறப்படும்போது அதன் எஞ்சினின் சுடர்ச் செருகிக்கு நேரடியாக மின் விசையூட்டுவதற்குப் பயன்படும் ஒரு தூண்டு சுருள்

booster-glide vehicle : (விண்.) மின்னியக்கச் சறுக்கு ஊர்தி : ராக்கெட்டினால் உந்து செலுத்தப் படும் இறகுடைய ஊர்தி. இது வளியியக்கக் கட்டுப்பாட்டின்கீழ் வாயு மண்டலத்தை விட்டுச் சென்று மீண்டும் வாயுமண்டலத்திற்குள் திரும்பி வரக்கூடியது booster magneto : (வானூ.) நிரவி நிலைக் காந்தப் புலம் : கிளம்புவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு நிலைக் காந்தப் புலம்

booster pump : (தானி.) நிரவி இறைப்பான் : எரிபொருள் இறைப்பானுடன் ஒருங்கிணைவாக அமைக்கப்பட்டுள்ள ஒரு துணை இறைப்பான். உட்கொள் பெருங்குழல் வெற்றிடம் செயற்படாதிருக்கும் போது, காற்றுக் கவசம் போன்ற சாதனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு இது வெற்றிடத்தை அளிக்கிறது

booster rocket : (வானூ.) நிரவி ஏவுகணை : ஒர் ஏவுகணையின் அல்லது பிற விண்வெளிக் கலத்தின் உந்துவிசையினை ஊக்கு விக்க உதவும் ஒர் ஏவுகணை உந்து

boost voltage : (மின்.) உந்து மின்னழுத்தம் : தொலைக்காட்சிப் பெட்டியில், ஒடுக்க மின்சுற்றுவழியில் உண்டாகும் கூடுதலான மின்னழுத்தம். இது உந்து கொண்மியில் சராசரி மின்னேற்றத்தைக் குறிக்கிறது

boot : புதையரணம் : தூசுக்கும் பருவ நிலைக்கும் எதிரான பாதுகாப்பாகப் பயன்படும் ஒரு புதையுறை

borax : (வேதி.) பொரிகம்/போரக்ஸ் : Na2B4C7 நீருடைய உவர் உப்புவகை. வெண்படிகக் கூட்டுப் பொருள். இயற்கையாகக் கிடைக்கிறது. நோய் நுண்மக் கொல்லியாகவும், இரும்பு-எஃகுக் கலவை பற்றவைப்புகளிலும் வெண்கலம், செம்பு உலோகங்களுக்குப் பித்தளை வண்ணமூட்டுவதற்கும் நீரை மென்மைப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது

Borcher's metal : (உலோ.) போர்ஷர் உலோகம் : அமிலம் அரிக்காத, அரிமானமாகாத ஒரு பயனுள்ள உலோகக் கலவை. இதில் முதன்மையாகக் கலந்திருக்கும் அமைப்பான் குரோமியம்

border : அருகு : ஒருங்கிணைக்கப்பட்ட மேற்பூச்சு தோரணிகளின் புற விளிம்பு வடிவமைப்பு அச்சுக் கலையில், அச்செழுத்துக்களை உள்ளடக்கியுள்ள வரம்புக் கோடு அல்லது அலங்கார வேலைப்பாடு

bore : துளை : ஒரு குழாயின் நீள் உருளையின் அல்லது தண்டின் துவாரத்தின் உட்புழையின் குறுக்களவு. துளையிடுதல்மூலம் துவாரம் ஏற்படுத்த வேண்டும் என்பதை இது குறிக்கிறது

bore : (தானி.) நீள்துளை : ஓர் எஞ்சின் நீள் உருளையின் விட்டம்

boric acid : (வேதி.) போரிக் அமிலம் : பொறிகத்தை ஒர் அமிலத்துடன் வினைபுரிய வைத்துத் தயாரிக்கப்படும் ஒர் வேதியியற் கலவைப் பொருள் (H3BO3). இது நிறமற்ற படிக வடிவமுடையது. மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. மண்பாண்டத் தொழில், கண்ணாடித் தொழில்களில் பயன்படுகிறது

boring : (எந்.) துளையிடுதல் : மரம் அல்லது உலோகத்தில் வட்ட வடிவத் துளைகளையிடுதல்

boring bar : (எந்.) அகழ்வுத் தண்டு : வெட்டு முனையையுடைய ஒரு நீள் உருளைத் தண்டு. இது கடைசல் எந்திரங்களிலும் துரப்பன எந்திரங்களிலும், மற்றத் துளையிடும் சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது

boring machines : (எந்.) அகழ்வு எந்திரம் : நீள் உருளைகள், புடைப்புகள், படுகை வளையங்கள் போன்றவற்றைக் குடைவதற்குப் பயன்படும் எந்திரம் boring mill : (எந்.) அகழ்வு பொறி : சுழலும் மேடையுடைய ஒரு செங்குத்தான சாதனம். பல வேலைகளை ஒரு கடைசல் எந்திரத்தைவிட அதிக எளிதாக இதில் செய்து முடிக்கலாம்

boring tool : அகழ்வு சாதனம் : மரவேலைகளுக்கான ஒரு சாதனம் உலோகங்களுக்கான வெட்டு எந்திரங்களும் இதில் அடங்கும்

boron : (வேதி.) போரோன் : உலோகச் சார்பற்ற கருந் தவிட்டு நிறத் தனிப்பெர்ருள் வகை. இது மின்பகுப்பு முறை மூலம் பெறப்படுகிறது. இது சிலிக்கன் தனிமத்தை ஒத்திருக்கும். எஃகினை வலுப்படுத் துவதற்கும், கலவைப் பொருள்களில் உருக்கும் பொருளாகவும், ஆக்சைடு நீக்கும் பொருளாகவும் பயன்படுகிறது

boron carbide : (வேதி.) போரோன் கார்பைடு : நொய்மையான கருமை நிறப்படிகத் துாள். கடினத்தில் வைரத்திற்கு நிகரானது. உராய்வுப் பொருளாகப் பயன்படுகிறது

bort : வைரத்துண்டு : உராய்வுப் பொருளாகப் பயன்படுத்தும் வைரத்துண்டு

boss : (க.க.) குமிழ் :

(1) அலங்காரக் கவிகை மாட மையக் குமிழ் (2) ஒரு சக்கரத்தின் மையக் குடம் (3) ஒர் எத்திரத்தின் உறுப்புடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு வட்ட வடிவத் தகடு

Boston hip roof : (க.க.) இரட்டை மோட்டு இணைப்பு வாரி முகடு : மோட்டு இணைப்பு வாரி நெடுகிலும் சில்லோடுகளை அல்லது பலகைக் கற்களை நீள வாக்கில் இரட்டை வரிசையில் அமைத்தல். நீர் புகாதவாறு இணைப்புகள் இறுக்கமாக அமைக்கப்பட வேண்டும்

botany: தாவரவியல் : செடியினங்கிளின் வாழ்க்கை முறை பற்றி ஆராயும் அறிவியல்

botch : கரனை : அரைகுறையாகவும், மோசமாகவும் செய்யப்படும் வேலைப்பாடு

bottled : (அச்சு.) புட்டி வடிவ அச்செழுத்து : குறைபாடான வார்ப்படம் காரணமாக அடியில் அகன்றும் உச்சியில் குறுகியும் புட்டி வடிவில் அமைந்திருக்கும் அச்செழுத்து

bottom anchored core : (வார்.) அடிநங்கூர உட்புரி : ஒரு வார்ப் படத்தில் வார்ப்படப் பொருளை ஊற்றும்போது, அது மிதக்காமல் தடுப்பதற்காக், வார்ப்படத்தின் அடியில் நங்கூரமிட்ட உட்புரி, இதனை இயன்ற அளவுக்குப் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்

bottom board : (வார்.) அடித்தகடு : இழுவையின் நுனியில் வைக்கப்பட்டு, உருட்டுவதற்கு முன்னர் கட்டிப் பிணைக்கப்படும் பலகை அல்லது தகடு. இது எஞ்சிய வார்ப் பட மற்றும் வார்ப்புரு வேலைகளின் போது வார்ப்படத்தின் அடிப்பகுதியாகச் செயற்படும்

bottom clearance : (பல்.) அடித்தட்டு இடைவெளி அக இணைப்புக்கும் பல் இணைப்புக்குமிடையிலான வேறுபாடு இதுவாகும். இது பற்சக்கரக் கொளுவிணைப்பில் பல்லிணையின் நுனிக்கும் அடிக்கு மிடையில் இடைவெளியை உண்டாக்கும்

bottom rail : (க.க.) அடிநிலை அழிக்கம்பி : ஒரு பலகணிச் சட்டத்தின் கதவிலுள்ள அடிமட்டக் கிடைநிலைக் கம்பி

bottom stake : (உலோ; வே.) அடிநிலை ஆதாரக் கம்பம் : ஒரு செங்குத்தான் ஆதாரக்கழி; இதன் மேல் முனை செயல் விளிம்பு உடையதாக இருக்கும்

bott stick : (வார்.) உலோகத் தடுப்புக்கோல் : ஒருமுனையில் ஒரு சீர்மையற்ற விரிவாக்கத்தைக் கொண்டுள்ள 23 அல்லது 12 செமீ நீளமுள்ள இலேசானதொரு இரும்புக் கோல், இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பிலிருந்து வழியும் உலோகத்தை நிறுத்துவதற்காக இதில் ஒரு களிமண் உருண்டை வைக்கப்பட்டிருக்கும்

boundary : வரம்புக்கோடு : வரையறை செய்கிற அல்லது பிரிவினை செய்கிற ஒரு கோடு

boundary light : (வானூ.) எல்லை விளக்கு : ஒரு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் பரப்பளவின் எல்லைகளைக் குறிப்பதற்கு அமைக்கப்பட்ட விளக்குகளில் ஒன்று

boundary marker : (வானூ.) எல்லை வட்டம் : விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்குரிய பரப்பளவின் எல்லைகளைக் குறிப்பதற்காகப் பயன்படும் வண்ணம் பூசிய ஒரு கூம்பு, ஒரு திண்மையான வட்டம். வட்டத்தகடு அல்லது வேறு சாதனம்

Bourdon tube : (தானி, எந்.) அளவீட்டுக் குழாய் : மிக விரைந்து ஆவியாக்கக் கூடிய ஒரு வாயு அடங்கிய முத்திரை மாட்டப்பட்ட குழாய். இதில் வாயு விரிவடையும் போது, அளவு குறிக்கப்பட்ட ஒரு சுழல் வட்டின் மீது இயங்கும் ஒரு முள் அளவினைக் குறித்துக் காட்டும்

bourgeois : (அச்சு.) ஈடுத்தர அச்சு எழுத்துருப் படிவம் : ஏறத்தாழ 9 புள்ளி வடிவளவுள்ள ஒர் அச்சு எழுத்துருவுக்குரிய பழைய பெயர்

bow : (க.க.) வில் வளைவு : ஒரு கட்டிடத்தில் ஒரு வளை வரைவு. அல்லது ஒரு பல்கோணக் கட்ட வடிவம் அமையும் வகையில் முன் பிதுங்கியுள்ள பகுதி

bow compass : வில் வளைவுத் திசைகாட்டி : இது வில்வளைவு அமைப்பு மீது சுழலும் ஒரு சிறிய கவராயம், இதனை உருவரைப் பட வரைவாளர்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் இருகால்களையும் இணைக்கும் ஒரு திருகின் மூலம் ஆக்க முறையான சரியமைவு செய்யப்படுகிறது

bow - heavy : (வானூ.) கீழ்நோக்கிப் பாய்வு : ஒரு விண்கலம் வானில் அசையாத காற்றில் இயங்காமலிருக்கும்போது, கீழ்நோக்கிப் பாயும் அதன் அச்சுடன் சீரமைவாக இருக்கும் நிலை

bow pen : வில் வளைவுப் பேனா : சிறிய வில்வளைவுகளை அல்லது வட்டங்களை மையால் வரைவதற்காகப் பயன்படும் ஒரு கவராயம். மற்ற வில்வளைவுக் கருவிகளில் உள்ளது போலவே இதிலும் கால்களை இணைக்கும் ஒரு திருகின் மூலம் சரியமைவுகள் செய்யப்படுகின்றன

bow pencil : வில்வளைவு வரை கோல் : சிறிய வில்வளைவுகளை அல்லது வட்டங்களைப் பென்சிலால் வரைவதற்குப் பயன்படும் ஒரு வரைமானக் கருவி

bow saw : (மர.வே.) வில் வாள் : வில் போன்ற சட்டத்தில் உள்ள நாண்போல் ஏற்றப்பட்ட ஒடுங்கிய அறுப்பு வாள்

box an-nealing : (உலோ.) பெட்டியில் பதப்படுத்துதல் : மூடிய உலோகப் பெட்டியில் எஃகினைக் கட்டுப்படுத்தி ஆற வைத்தல் மூலமோ, நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கடும் பதப்படுத்தும் முறை boxboard : பெட்டி அட்டை : அட்டைப் பெட்டிகள் செய்வதற்குப் பயன்படும் மடங்கும் தன்மையுடைய கணத்த காகித அட்டை

box column : (க.க.) பெட்டித் தூபி : புகுமுக மண்டபக் கட்டுமானத்தில் பயன்படும் சதுரப்பகுதியில் அழைக்கப்படும் உட்புழைவான தூபி

ox connector : (மின்.) பெட்டி இணைப்பான் : கம்பிவடத்தின் நுனிகளை ஒரு பெட்டியுடன் இணைப்பதற்குப் பயன்படும் மரையுடன் கூடிய உட்குடைவான ஒருவகைக் கோல்

box frame : (க.க.) பெட்டி வரிச் சட்டம் : பலகணிச் சட்டத்தின் பாரங்களுக்காகப் பெட்டிகளையுடைய ஒரு பலகணிச் சட்டம்

box girder : (பொறி.) பெட்டித் தூலம் : இணையான இரு உத்தர்ங்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு துலம். இந்த உத்தரங்களில் உச்சியிலும் அடியிலும் தகடுகள் இணைக்கப்பட்டிருக்கும்

boxwood : (மர.வே.) பெட்டி மரம் : இளமஞ்சள் நிறமுள்ள கடினமான, கரடுமுரடான, மேற்கரண் பரப்புடைய மரம். வரையுருளை, அளவுகோல் போன்ற சிறிய சாதனங்களையும், கருவிகளின் கைபிடிகளையும் தயாரிக்கப் பயன்படுகிறது. இது பயன் படுத்தப்படுவதற்கு முன்பு பல ஆண்டுகள் பதப்படுத்தப்பட வேண்டும். பூக்கக்கூடிய செம்மரமும் பெட்டிமரம் எனப்படும்

Boyle's law : (இயற்.) பாயில் விதி : "வெப்பநிலை மாறாமலிருக்கும் போது ஒரு வாயுவின் கன அளவு, அதன் அழுத்தத்திற்கு நேர்மாறாக மாறுதலடையும்" என்பது இந்த விதியாகும்

brace : (மர.வே.) பற்றிறுக்கி : ஆதாரமாக அல்லது இறுக்கிக் கெட்டிப்படுத்தும் சாதனமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சாய்தளமான வெட்டு மரத்துண்டு

பற்றிறுக்கி

brace bit : (மர.வே.) பற்றிறுக்கித் துண்டு : மரத்தில் துளையிடுவதற்குப் பயன்படும் சாதாரணத் துண்டு. இதில் ஒரு சாதாரணப் பற்றிறுக்கியின் குதை குழியில் பொருத்துவதற்குச் சதுரமான நுனிநோக்கிச் சிறுத்துச் செல்கிற காம்பினைக் கொண்டிருக்கும்

brace frame : (க.க.) ஆதாரச் சட்டம் : இது ஒரு கட்டிடத்தின் வரைச் சட்டம். இதில் மூலைக் கம்பங்கள், பலகணப்படிக் கற்களாலும், தகடுகளாலும் வலுவூட்டப்பட்டிருக்கும்

brace jaws : (மர.வே.) பற்றிறுக்கி அலகுகள் : ஒரு மரத்துண்டின் நுனிநோக்கிச் செல்கிற காம்பினைச் சுற்றி இறுகப் பற்றிக் கொள்கிற ஒரு துண்டுப் பற்றிறுக்கியின் குறடுகள்

bracing : (க.க.) வலிமையூட்டுதல் : ஒரு தட்டுமானத்திற்கு வலுவூட்டுவதற்காகக் கோல்களாலும் கட்டைகளாலும் தாங்கு ஆதாரம் அமைததல்

bracket : தண்டயம் : ஒரு சுவர் மாடத் தண்டயப் பலகைக்கு அல்லது அலங்காரப் பேழைக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் ஒரு ஏந்தற் பலகை

bracket cornice : தண்டய எழுதகம்: வெளியே தெரியும்படி அடுச் குத் தண்டயங்களின் ஆதாரத்தில் நிற்கும் ஒர் எழுதகம்

bracketing : முட்டுக்கொடுத்தல் : மரச்சட்டத் துண்டுகளால் ஏந்து வளை கொண்டு தாங்கி நிறுத்துதல். இதனுடன் ஒர் எழுதகத்தின் மேற்பரப்பாக அமையும் அரை சாந்தும், மென்மரப் பட்டிகையும் இணைக்கப்பட்டிருக்கும்

brad : (மர.வே.) குறுந்தலை ஆணி : சிறுபக்கத் திருப்பமுடைய தட்டையான சிறு தலையுடைய ஆணி

bradawl : (மர.வே.) துளைக்கருவி : திருகு சுருளற்ற சிறியதுளையிடு கருவி.

Bragg's law : பிராக் விதி : ஒரு படிகம் எந்தச் சூழ்நிலைகளில் ஊடுகதிர்களை (எக்ஸ்-ரே) மிக வலுவாகப் பிரதிபலிக்கும் என்பதைக் கூறும் விதி: "படிகத்தின் தளங்கள் (படுகைகள்) இடையிலான தூரம்...... ஆகவும், ஊடு கதிர்களின் அலை நீளம்...... ஆகவும் இருக்குமானால், அதன் மிக்ச் சிறந்த கோணம்......ஆகும்"

Bragg's method : பிராக் முறை : ஒரு படிகத்தின் கட்டமைப்பை ஊடு கதிர்கள் மூலம் ஆராய்ந்தறியும் முறை

braided wire : (மின்.) பின்னல் கம்பி : பல சிறிய கம்பிகளை ஒன்றாகச் சேர்த்துப் பின்னிய மின் கம்பி

brain : (விண்.) விண்வெளிக்கல மூளை : விண்வெளிக் கலங்களிலுள்ள மின்னணுவியல் செய்திப் பகுப்பாய்வுச் சாதனம்

brake band : (தானி. எந்.) தடைக் கட்டுக் கம்பி : நெகழ்திறமுள்ள உலோகக் கட்டுக்கம்பி. இதனுடன் தடை உள்வரி இணைக்கப்பட்டிருக்கும்

brake drum : (தானி. எந்.) தடைவட்டுருளை : இது சாதாரணமாக 25 முதல் 45 செ.மீ. விட்டமும், 5 முதல் 7 செ.மீ. அகலமும் உடைய எஃகுக் கால்மிதியாகும். இது காரின் சக்கரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும், இது தடையுறுத் தத்தை ஏற்றுக் கொள்ளும்

brake fluid : (தானி.) தடைப்பாய்மம் : பல்வேறு பருவ நிலைகளில் அபரிமிதமான வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் வகையில் தடையமைப்பில் முறையான பாய்மத் தன்மையை நிலை நிறுத்தும் வகையில் அமைந்த கிளிசரின், எண்ணெய்கள், சேர்மானப் பொருள்கள் ஆகியவற்றின் ஒரு கலவை

brake horse-power : (தானி.) தடைக் குதிரைத்திறன் : ஒரு பொறியுடன் இணைந்த ஒரு தடையமைவிலிருந்து எடுக்கப்பட்டு, ஒரு திறன் மானியால் பதிவு செய்யப்படும் பொறியமைவின் குதிரைத் திறன்

brake lever : (தானி.எந்.) : தடைநெம்புகோல் : ஒர் எந்திரத் தடையமைப்பில் தடைக்கோல்கள் இணைக்கப்பட்டுள்ள ஒரு நெம்பு கோல்

brake lining : (தானி.எந்.) தடைஉள்வரி : தடைக்கட்டுக் கம்பிகளுடன் பொருத்தப்பட்டுள்ள பஞ்சு, கல்நார், மெல்லிய செம்புக்கம்பி போன்ற பின்னற்பொருள்

brake ratchet : (தானி.எந்.) தடைக் கால்மிதி : தடையமைவினைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படும் கால்மிதியமைவு

brake rod : (தானி.) ஒரு வழிப் பற்சக்கரத் தடையமைவு : சலாகை மீது அமைந்த பற்களின் இயக்கத்துடன் ஒருவழி அசைந்து மறு வழித் தடுக்கும்தடைக்கோலமைவு

brake shoe : (தானி.எந்.) தடைக்கோல் : எந்திரத் தடையமைவில் பிணைப்பின் ஒரு பகுதியாக அமைந்துள்ள புழை வாயிலில் அல்லது கயிறு கப்பி இணைப்பதற்காக விட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள இருப்பு வளை கம்பியால் முடிவுறும் ஒரு கோல்

brake shoe : (எந்.) தடை உராய்வு : தடைப்பொறியின் உராய்வுக்குரிய பகுதி. உலோக வார்ப்படத்தில் அமைந்த இது சக்கரத்தின் வளைவுடன் பொருத்தப்பட்டிருக்கும்

braking ellipses : (விண்.) கொள அணுகுவழிகள் : தரையிறங்குவதற்கு ஆயத்தமாக ராக்கெட்டின் வேகக்தைக் குறைக்கும் நோக்குடன் பூமியின் அல்லது வேறேதேனும் கோளத்தின் வாயுமண்டலத்திற்குள்ள புல கோளப் பாதை அணுகுவழிகள்

braking surface : (தானி.) தடையுறுத்தப் பரப்பு : ஒரு சக்கரத்தின் வளைவுடன் பொருத்தப்பட்டுள்ள பரப்பு. இது சக்கரத்தில் அழுத்தப்பட்டு தடையுறுத்தப்படும்

braking tin : (உலோ.வே.) தடையுறுத்தத் தகரம் : ஒரு பொறியின் மீதுள்ள தகரத் தகடுகளின் விளிம்பின் திருப்பம் அல்லது வளைவு. இது தடை என அழைக்கப்படுகிறது

braking with compreseion : (தானி. எந்) அழுத்தத் தடையுறுத்தம் : காரினை முதலாவது அல்லது இரண்டாவது இயக்க இணைப்பில் வைத்துவிட்டுக் கால்மிதியை முடுக்கிப் பொறியிலிருந்து எடுத்துவிட்டால், பொறியமைவின் அழுத்தும் விளைவினால் காரின் வேகம் குறையும். வேகத்தைத் திடீரெனக் குறைப்பதற்காக மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும்

branch : (கம்.) கிளைக்குழாய் : குழாய் அமைப்பில் கவர்விட்டுப் பிரிந்து செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ள உட்செல் அல்லது வெளிச்செல் குழாய்

branch circuit : (மின்.) கிளைச்சுற்று வழி : மின் சுற்று வழியைப்பாதுகாக்கிற இறுதி அதி மின்னோட்டச் சாதனத்திற்கு அல்லது உறுகிகளுக்கு அப்பால் நீண்டிருக்கும் ஒரு கம்பியிட்ட அமைப்பின் பகுதி

branch cutout : (மின்.) கிளை மின்விசை வழி : முதன்மையான மின் வழங்குச் சுற்று வழியிலிருந்து கிளையாகப் பிரிந்து பல்வேறு மின் சுமைச் சாதனங்களுக்கு மின்விசையைப் பிரித்து வழங்குதல்

branch ell : (கம்.) கிளை வளைவு : தொடர்பு அடுக்கின் வடிகால்களில் ஒன்றுக்கு இணைவாகப் பின் புற வடிகால் ஒன்றிணைக் கொண்டிருக்கிற ஒரு வளைவு. இதனைக் "குதிகால் வடிகால் வளைவு" என்றும் கூறுவர்

branch pipe : (கம்.) கிளைக் குழாய் : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள வார்க்கப்பட்ட அல்லது அடித்து உருவாக்கிய ஒரு குழாய்க்குப் பொதுவான பெயர்

branch splice : (மின்.) கிளைப் புரியிணைவு : ஒரு கம்பி அல்லது கடத்தியிலிருந்து மற்றொரு கம்பி அல்லது கடத்தி இணைப்பினை அமைத்தல்

கிளைப் புரியிணைவு
branch wire : (மின்.) கிளைக் கம்பி : முதன்மையான ஒரு கடத்தியிலிருந்து செல்லும் ஒரு சார்பு நிலைக்கம்பி

brass : பித்தளை : செம்பும், செம்புடன் துத்தநாகமோ, வெள்ளியமோ கலந்த ஒர் உலோகக் கலவை

brass foil : பித்தளைத் தகடு : இது டச்சு உலோகத்தைப் போன்றது. செம்பும் துத்தநாகமும் கலந்த எளிதில் தகடாக்கக் கூடிய ஒர் உலோகக் கலவை. இது மென்மை தகடுகளாக விற்கப்ப்டு கிறது. இது புத்தகக் கட்டுமானத்தில் பெருமளவில் பயன்படுகிறது

brass rule : (அச்சு.) பித்தளை இடைவரித் தகடு : அச்சில் வாசக இடைவெட்டு வரிக்கோடாகப் பயன்படும் ஒரு பித்தளைத் தகடு

brayer : (அச்சு) அச்சு மை பரப்பு கருவி : அச்சு வேலையில் அச்சுக்குரிய மையை பரப்புகிற கையால் உருட்டப்படும் ஒரு சிறிய உருளை

braze welding : (பற்.) பற்றாசுப் பற்றவைப்பு : பித்தளையும் துத்தநாகமும் சேர்ந்த கலவையைப் பற்றாசுவைத்துப் பற்றவைத்தல்

brazed joint : (உலோ.) பொடிவைத்திணைத்த பிணைப்பு : பித்தளையும், துத்தநாகமும் சேர்ந்த கலவையைப் பற்றாசு வைத்து இணைத்த பிணைப்பு

brazing : (உலோ.) உலோக இணைப்பு : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகத் துண்டுகளை ஒர் உலோகக் கலவையுடன் இணைத்தல். இதில் இணைப்புகள் தூய்மை செய்யப்பட்டு, கம்பியால் கட்டப்பட்டு, அதில் பொரிகம் தூவப்பட்டு, உலோகக் கலவை உருகும் வரையில் சூடாக்கப்படும்

brazing clamps : (பட்.) இணைப்புப் பிடிப்பான் : வாள் போன்று அறுப்பதற்குரிய பற்களிணைந்த வட்டச் சங்கிலியின் முனைகளைப் பிடித்துக் கொள்வதற்கான பற்றிரும்புகள்

brazing metal : ஓட்டவைப்பு உலோகம் : இரு பகுதி வெள்ளியமும், 98 பகுதி செம்பும் கலந்த ஒர் உலோகக் கலவை

brazing solder : (உலோ.) இணைப்புப் பற்றாசு : உலோகங்களைப் பற்றவைத்து இணைக்கப் பயன்படும் சிறுதிற உலோகம். இது 50 - 52% செம்பு, 0.55% ஈயம், 0.10% இரும்பு, எஞ்சியது துத்தநாகம் கலந்தது. தன் உருகுநிலை 1560° பா. முதல் 1600° பா. வரை

breadboard : (மின்.) மின்னணுவியல் பலகை : மின்னணுவியல் உறுப்புகளையும், மின் சுற்று வழிகளையும் ஒரு பலகையில் வைத்துப் பொருத்தியமைத்தல்

break : (க.க.) புறப்பிதுக்கம் : ஒரு சுவரின் அல்லது கட்டிடத்தின் பொதுப் பரப்பிலிருந்து துருத்திக் கொண்டிருக்கும் பிதுக்கம் எதனையும் இது குறிக்கும்

breakdown : (மின்.) மின் தடை : நிலைமின்னியல் அழுத்தம் காரணமாக மின்காப்பு செயலற்றுப் போவதன் காரணமாக மின்னோட்டம் திடீரெனத் தடைபடுதல்

brake pedal : (தானி.) தடுப்பு மிதிகட்டை : தடுப்புகளைக் கட்டுப்படுத்துகிற மிதிகட்டை

breaker : (தானி, மின்.) இது ஒர் அசையும் கரமும், ஒரு நிலைக்காலும் உடைய ஒர் எந்திர சாதனம்

breaker arm : (தானி.) இடையீட்டுப் புயம் : இது வார்த்தெடுக்கப்பட்ட ஒரு தட்டையான உலோகச் சலாகை. இதன் ஒரு முனையில் டங்க்ஸ்டனாலான தொடர்பு முனையும், மற்றொரு முனையில் இழை, பேக்கலைட், அல்லது இவைபோன்ற கடத்தாப் பொருள் கொண்டு பூசிய உருண்டையான திறப்பும் இருக்கும். இதில் ஒர் உலோக முனையிலிருந்து புயம் ஊசலாடுகிறது

breaker points : (தானி.) முறிப்பு முனைகள் : மின் முறிப்பானில் உள்ள உலோக இனைப்புத் தொடர்புகள்

breaker strip : (எந்.) இடையீட்டுப் பட்டை : ஒரு டயர் உறையின் பக்கச் சுவரிலுள்ள ஒரு கித்தான் பட்டை. இது தேய்மான்ப் பண்புகளை அதிகரிக்கிறது.

breaking joints : இடையீட்டு மூட்டிணைப்புகள் : மூட்டிணைப்புகளை ஊசலாடும்படி செய்தல், இது அவற்றை ஒரு நேர்க்கோட்டில் வருவதைத் தவிர்க்கும்

break iron : இடையீட்டு இரும்பு : ஒரு சமதள விசிப் பலகையின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள ஓர் இரும்பு. இது விசிப் பலகையினைத் திருக்கவும், பிளவுறுத்தவும் உதவுகிறது

break line : இடையீட்டுக் கோடு : அச்சுக்கலையில், ஒரு பத்தியின் கடைசி வரி

breaks : இடையீடுகள் : ஊசலாட்ட மூட்டிணைப்புகளுடன் கூடிய பட்டிகை அமைப்பு. இதில் எல்லா மூட்டிணைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக ஒரு செங்குத்துக் கோட்டில் அமைந்திருப்பதில்லை

breast drill : (பட்.) வெட்டுத் துரப்பணம் : உலோகத்தில் கையினால் துளைகளியிடுவதற்குப் பயன்படும் ஒரு சிறு எந்திரவியல் முறை. இதில் கையினால் திருப்பப்படும் ஒரு திருகு விட்டத்தின் குவட்டுத் துர்ப்பணத்திலிருந்து, சாய்வு இயக்கப் பல்லிணைப்புகள் வழியாகத் துரப்பண எந்திரத்திற்கு விசை செலுத்தப்படுகிறது

breast of a window : சன்னல் சாய் குவடு : உள்மாடத்தின் பின் புறமாகவும், பலகணி அடிக்கட்டையின் கைப்பிடிச் சுவராகவும் அமைந்த கட்டுமானம்

breast summer : (க.க.) உத்தரக் கட்டை : கட்டிட முகப்புத் தாங்கும் உத்தரக் கட்டை

breeder reactor : தொடர் வரிசை அணு உலை : ஒரே சமயத்தில் பிளவு படக்கூடிய பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு பிளவுபடாத பொருள்களை (யுரேனியம் தோரியம்) பிளவு படக்கூடிய பொருள்களாக மாற்றுகிற ஒர் அணு உலை. இதன்மூலம் பிளவு படக்கூடிய பொருள் அதிகமாகக் கிடைக்கிறது

Breguet spring : பிரகுவட் விற்சுருள் : ஒரு தனிவகையான கடிகாரச் சுருள்வில். இதில் புற்ச்சுருள் வளைந்து மற்றச் சுருள்களின் குறுக்கே மையத்திற் கொண்டு செல்லப்படுகிறது. சுருள்வில்லை முடுக்குவதன் மூலம் கடிகாரத்தை விரைவாகவோ தாமதமாகவோ ஒடச் செய்ய முடிகிறது

விற்கருள்


bre-vier : அச்சுருப்படிவ அளவு : இது 8-புள்ளி அளவு என அழைக்கப்படும் அச்செழுத்து

brick : செங்கல் : களிமண்ணால் செவ்வக வடிவில் வார்க்கப்பட்டு, சூளையில் எரித்துக் கடினமாக்கப்பட்ட பாளம். இது கட்டுமானத்திற்கும் தளம் பாவுவதற்கும் பயன்படுகிறது brick facing : (க.க.) செங்கல் மறைப்பு : பார்க்க செங்கல் மேலொட்டுமானம்

brick pier : (க.க.) செங்கல் தாங்கு தூண் : ஆதாரமாகப் பயன் படக்கூடியதின் கட்டுமானம்

brick trowel : செங்கற் சட்டுவம் : சாந்துக் கலவையை எடுத்து சுவரில் பூசுவதற்குப் பயன்படக்கூடிய தட்டையான முக்கோண வடிவச் சட்டுவக்கரண்டி. இது சாந்துச் சட்டுவத்தைவிடச் சற்றுப் பெரிதாக இருக்கும்

brick veneer : (க.க.) செங்கல் மேலொட்டுமானம் : ஒரு சட்டகத்தை அல்லது வேறு கட்டமைப்பினை மறைப்பதற்கான பகட்டு மேலாடை மென் பூச்சுமானம்

bridge circuit : (மின்.) இணைப்பு மின்சுற்றுவழி : ஒரு பொதுவான இணைப்பின் மூலம் இணைக்கப் பட்டுள்ள உறுப்புகளின் இணையான தொகுதி வரிசையினைக் கொண்ட ஒரு மின்சுற்றுவழி. அளவிடு கருவிகளில் இந்த இணைப்பு பெரும்பாலும் அளவு மானியாக இருக்கும்

bridge rectifier : (மின்.) இணைப்பு மின்மாற்றி : ஒர் இணைப்புத் தொகுதியில் நான்கு மின்மாற்றிகளைப் பயன்படுத்துகிற ஒரு முழு அலை மின்மாற்றி

bridge or structural engineer : பாலம் அல்லது கட்டுமானப் பொறியாளர் : பாலங்களையும், பெரிய கட்டிடங்களின் எஃகுப் பணிமாணங்களையும் வடிவமைப்பதிலும், கட்டுமானம் செய்வதிலும், நிறுவுவதிலும் முக்கியமாக ஈடுபடுகிற பொறியாளர்

bridging : (க.க.) குறுகலான பட்டைகளை அல்லது சட்டங்களைப் பயன்படுத்தித் துலாக் கட்டைகளுக்கு அல்லது குமிழ் முகப்புகளுக்கு வலிவூட்டும் ஒருமுறை

bridging : (மின்.) இணை மின் இணைப்பு : ஒரு மின்சுற்று வழியை இன்னொரு மின்சுற்று வழியுடன் இணையாக இணைத்தல்

bright annealing : (உலோ.) ஒளிர்வுப் பதனாக்கம் : கண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூல மாகவோ, நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் முலமாகவோ கடுமையாகப் பதப்ப்டுத்துதல். இதன் மூலம் ஆக்சிகரணமாவதும், வணண்ம் மங்குவதும் தடுக்கப்படுகிறது

bright dipping : (உலோ.) ஒளிர்வுத் தோய்வு : உலோகத்திற்கு ஒளிர்வர்ன மெருதினைக் கொடுப்பதற்காக அந்த உலோகத்தை ஒரு வேதியியல் கரைசலில் தோய்த் தெடுத்தல்

Bright's disease : (நோயி.) பிரைட் நோய் : சிறுநீரகத்தில் ஏற்படும் வீக்கநோய்

brightness : ஒளிர்வுத் திறன் : அலைபரப்புகளை ஒளியாக மாற்றுவதற்குரிய ஒளிப்படக் குழலின் ஒளிர்வுத் திறனளவு

brightness control : ஒளிர்வுக் கட்டுப்பாட்டு அமைவு : அலை பரப்புகளை ஒளியாக மாற்றுவதற்குரிய ஒளிப்படக் குழலில் படத்தின் மொத்த ஒளிர்வினைக் கட்டுப் படுத்துவதற்கான ஓர் அமைவு

brilliance : (மின்.) ஒளிர்வுத் திறன் : தொலைக்காட்சியில் உருவாகும் படம் தெளிவாகவும், ஒளிர்வுடனும் இருக்கும் அளவு

brine : (குளி.) உவர்நீர் : குளிர் பதனத்தில் வெப்பத்தை நிலை மாறுபாடு இல்லாமல் செலுத் துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு திரவம்

brine : உவர்நீர் : உப்பு பூரிதமான அல்லது உப்பு மிகுதியாகக் கலந்த நீர்

brinnel hardness : (உலோ.) திண்மைச் சோதனை : 10 மி.மீ. விட்டமுள்ள ஒர் எஃகுக் குண்டு 3,000 கி.கிராம் பளுவின் கீழ் 10 வினாடி நேரம் இருக்கும்போது ஊடுருவும் திறன் அடிப்படையில் உலோகங்களின் கடினத் தன்மையை அளவிடும் சோதனை

Brinell test : (பொறி.) பிரைனல் சோதனை : சோதனை செய்யப் பட வேண்டிய உலோகத்தினுள் குறிப்பிட்ட அழுத்தத்தில் ஒரு கடினமான எஃகு உருண்டையை, வைத்து அழுத்தப்படுகிறது. உலோகத்தில் படியும் படிவத்தின் விட்டத்தினை அளவிட்டு, ஒர் அட்டவணையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, கடினத்தன்மை கணக்கிடப்படுகிறது

briquette : கட்டிக்கரி : நிலக்கரிக் துளினாலான செங்கல் வடிவான சிறு கட்டி அல்லது பள்ளம்

bristle : முள் மயிர் : விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர். இது துரிகை, தீட்டுக் கோல் தயாரிக்கப்படுகிறது

Bristol głaze : பிரிஸ்டன் மெருகு : மட்பாண்டங்களுக்கு வண்ண மெருகிடுவதற்குப் பயன்படும், ஒளியை ஊடுருவிச் செல்லவிடாத ஒரு மெருகுப் பொருள்

Bristol board : அட்டை பலகை : படம் வரையப்படும் அட்டைப் பலகை. இது வெண்மையிலும், வண்ணங்களிலும் கிடைக்கும்

Britannia metal : (உலோ.) பிரிட்டானியா உலோகம் : இது வெள்ளி போன்ற வெள்ளிய நிமிளைக் கலவை உலோகம். இது நீல நிறத்தில் இருக்கும். இது பாத்திரங்கள் செய்யப்பயன்படும். இது மெருகு குலையாமல் இருக்கும்

Britannia splice : (மின்.) பிரிட்டானியாப் புரியிணைவு : புரியிணைவு முடிச்சின்றிப் புரிகளை இணைத்தே தடத்து கம்பிகளை இணைத்தல். இந்த முறை இப்போது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது

British thermal unit : (பொறி.) பிரிட்டிஷ் அனல் அலகு (B.T.U.) : ஒரு பவுண்டு தூய நீரின் வெப்ப நிலையை 1 பா. அளவுக்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்தின் அளவு

brittle : (இயற்.) நொய்மை : எளிதில் உடையக்கூடிய அல்லது நொறுங்கக்கூடிய தன்மை

Broca's area : புரோக்கா மண்டலம் : மூளையின் இடப்புறமுள்ள பேசுவதைக் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி

broach : (எந்.) துளைக் கருவி : உலோகத்தில் தேவையான வடிவத்தில் துளையிடுவதற்காக, அல்லது துளையினைப் பெரிதாக்குவதற்காகப் பயன்படும் இரம்பப் பல்விளிம்புடைய ஒரு நீண்ட கருவி

broaching : (எந்.) துளையிடுதல் : உலோகத்தில் வட்ட வடிவம் அல்லாமல் தேவையான வேறு வடிவத்தில் துளையிடுவதற்கு அல்லது துளையினைப் பெரிதாக்குவதற்குரிய முறை

broach spire : (க.க.) கூம்புக் கோபுரம் : கோபுரத்திற்கு மேலே கைப்பிடிச் சுவரின்றி, எழும் எண் கோண வடிவச் சிகரம். இதனை ஆதிகால ஆங்கிலேய தேவாலயங்களில் காணலாம்

broadcast : ஒலிபரப்புதல் : (1) வானொலி நிகழ்ச்சிக்ளை ஒலி பரப்புதல் (2) வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்தல்

broadfold : அகல் மடிப்பு : நார் வரியானது குறுகிய பரிமாணங்களில் ஒடுகிற காகிதத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்

broad side : (அச்சு.) ஒருபுறம் அச்சிட்ட தாள் : ஒரு புறத்தில் மட்டுமே அச்சடிக்கப்பட்ட அகன்ற தாள் வெளியீடு

brochure : துண்டு வெளியீடு : ஒரு சிற்றேடு அல்லது சிறிய புத்தகம்

bronchi : (உட.) காற்றுக் குழாய்கள் : நுரையீரல்களுக்குச் செல்லும் காற்றுக் குழாயின் இரு பிரிவுகள்

காற்றுக் குழாய்

broad tuned : (மின்.) விரிவு இசைவிப்பு : அலை வெண்களின் விரிவான அலைவரிசையிலும் சம அளவில் மாறக் கூடிய வகையில் இசைவிப்பு செய்யப்பட்ட ஒரு மின் சுற்றுவழி

bronze : (உலோ.) வெண்கலம் : செம்பும் வெள்ளியமும் கலந்த உலோகக் கலவை. நாணயம் தயாரித்தல், மணிகள், சிலைகள் செய்தல் ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது. பார்க்க: கருங்கலம்

bronse gauze : வெண்கல அளவி : திரவங்களைப் பிழிந்தெடுப்பதற்குப் பயன்படும் நுண்ணிய கம்பி வலைச் சல்லடை

bronzing : (அச்சு.) வெண்கலங்றமிடல் : அச்சிட்ட பரப்புக்கு வெண்கலப் பொடியினை வெண்கல வண்ணமாக்குதல். இது தங்கத்தில் அச்சிடப்பட்டது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்

Brown and Sharpe tapers : (எந்) பழுப்பு வண்ணத் திரி : அரைவைப் பொறிக் கதிர்களில் பயன்படுத்தப்படும் திரி

Brown and Sharpe wire gauge : (எந்.) பழுப்புவண்ணக்கம்பி அளவி : இதனை அமெரிக்க அளவி என்றும் கூறுவர். பித்தளை, செம்பு. அலுமினியம் போன்ற இரும்பு அல்லாத உலோகத் தகடுகளையும் கம்பிகளையும் அளவிடுவதற்குப் பயன்படும் கருவி

brownstone : (க.க.) பழுப்பு மணற்கல் : கட்டிடங்கள் கட்டுவதில் பயன்படுத்தப்படும் பழுப்பு நிற மணற்கல்

brush : (மின்.) இடைமின்னூடு : மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படவல்ல மின்பொறிக் கற்றை. இது பெரும்பாலும் கார் பனிலும், சில சமயம் செம்பிலும் அமைந்திருக்கும்.

brushability : (வன்.) வண்ணப்பூச்சுத்திறன் : ஒரு வண்ணத்தை எளிதாகப் பூசுவதற்குரிய திறன்.

brush effects : (மின்.) தொடு விளைவு : உயர் மின்னழுத்த மின்னோட்டத்தைக் கொண்டு செல்லும் மின்சுற்று வழிகளில் கூர் முனைகளிலிருந்து கசியும் நீலநிறப் பொருள்

bubble harbour : குமிழ் காப்புத் துறைமுகம் : நீருக்கடியில் அமைந்து குழாய்களிலிருந்து தடையின்றிக் கர்ற்றுக் குமிழ்களை வரச் செய்து அலைகளைச் சிதறடித்துத் துறை முகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முறை

brush holders : (மின்.) மின் பொறிக்கற்றைப் பிடிப்பான் : மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படவல்ல தூரிகை போன்ற உருவுடைய மின்பொறிக் கற்றை

brush loss : (மின்.) இடை மின்னூட்டு இழப்பு : இயங்குகிற இரு பரப்புகளை மின்சாரத்தின் மூலம் இணைக்கும் பொறிக் கற்றையின் தடையினால் மின்னாற்றல் விசையில் இழப்பு ஏற்படுதல்

brush roeker : (மின்.) மின் பொறிக்கற்றை ஊசல் : ஒரு மின்னாக்கியின் அல்லது மின்னோடியின் மின்பொறிக்கற்றைப் பிடிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ள ஒரு சுழலும் ஊசல். இதன்மூலம் ஒரு திசைமாற்றியின் மின்பொறிக் கற்றைகளை வேண்டியவாறு பொருத்திக் கொள்ளலாம்

brush spring : (தானி. மின்.) மின் பொறிக்கற்றை விற்கருள் : இது தட்டையான அல்லது சுருளான ஓர் அழுத்துவிசை விற்கருள். ஒரு மின்னாக்கியின் அல்லது தொடக்க மின்னோடியின் மின்னகத்தின், அல்லது ஒரு வழங்கீட்டுச் சுழலியின் சுழலும் பகுதியுடன் இணைந்துள்ள ஒரு கார்பன் கலவை. மின் பொறிக்கற்றையைப் பற்றிக் கொள்ளும் வகையில், இது வடிவமைக்கப்பட்டிருக்கும்

brush wire : (மின்.) மின்பொறிக் கற்றைக் கம்பி : பெரும்பாலும் விறைப்பாக்கம் செய்யப்பட்ட உயர்ந்த அல்லது தாழ்ந்த கார்பன் எஃகுக் கம்பி. இதில் மென்மையானவை. 0805 செ.மீ முதல் .0190 செ.மீ அளவு உருண்டையாக இருக்கும். தட்டையானவை .381X.045 செ.மீ.முதல் .096X.033 செ.மீ. வரை அளவுடையனவாக இருக்கும்

B-stage resins : (குழை.) B, - நிலைப் பிசின்கள் : சூட்டினால் நிலையாக உருகிவிடும் தன்மையுடைய பிசின்க்ள் திரவமாக இருக்கும்போது, மென்மையாக இருக்கும் ஒரு நிலையில் இவை வினைபுரியும், ஆனால், முழுமையாக உருகிவிடவோ கரைந்துவிடவோ செய்யாது. வார்ப்படப் பொருள்களுக்கு இது பயன்படுகிறது

bubble : (குழை.) குமிழ் : புடை பெயரும் அல்லது ஒளி ஊடுருவும் குழைமத்தில் சிக்கியுள்ள ஒரு கோள வடிவ வெற்றிடம் அல்லது ஒரு காற்று உருண்டை அல்லது வாயு உருண்டை

bu-binga : (மர. வே.) பூ பிங்கா : பூமத்தியரேகை ஆஃப்ரிக்காவில் வாழும் ஒரு பெரிய மரம். இதன் வெட்டு மரம் கடினமானது; கனமானது; இளம் ஊதாப் பின்னணியில் கருஞ்சிவப்பு நிறக்கோடுகளைக் கொண்டது. தளவாடங்களிலும், அறை கலன்களிலும் விசித்திரமான செக்கர் நிறவிளைவை உண்டாக்கப் பயன்படுகிறது

buþonic blague : (நோயி.) அரையாப்பு வீக்கம் : அக்குள்கட்டு அல்லது அரையாப்பில் ஏற்படும் நெறிக்கட்டு அல்லது வீக்கம். இது எலி உண்ணிகளினால் பரவுகிற்து. நிணநீர்ச் சுரப்பிகள் வீங்குவதால் இந்நோயினால் பெரும்பாலும் மரணம் விளைகிறது

bubonocele : (நோயி.) இடுப்புவாதநோய் : வயிறும் இடுப்பும் சேருமிடத்தில் அண்டவாதம் ஏற்படுதல்

bucket trap : வாளிமூடி : வெப்ப மூட்டிகளிலிருந்தும் குழாய்களிலிருந்தும், நீராவி புகாதவாறு செறிவாக்கத்தையும் காற்றையும் அப்புறப்படுததும் ஒரு வகை ஒரதர். இந்த ஒரதருடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு வாளி, ஒரு வெளியேற்று குழாயை இயக்குகிறது

buck eye : (மர.வே.) மான் விழி மரம் : வழவழப்பான பழுப்பு வண்ணமுடைய கொட்டையுடைய அமெரிக்க நாட்டு மரம். இதனைக் 'குதிரைக்கால் படைப்பு' மரம் என்றும் கூறுவர். இந்த மரம் மென்மையானது. வெண்மை அல்லது இளம் மஞ்சள் நிறமுடையது. காகிதக் கூழ் மரச் சாமான் கள் செயற்கை உறுப்புகள் தயாரிக்கப் பயன்படுகிறது

bucking bar : வளை தண்டு : தரையாணியைப் பொருத்தும் போது அதன் தலைக்கு எதிராக வைத்துப் பிடித்துக் கொள்ளப்படும் ஒரு தண்டு

buckled : வளைவுடைய : மடக்கிச் சுருக்கிய; வளைக்கப்பட்ட அல்லது உருக்கோணலாக்கிய

buckle plate : (பொறி.) திரிபுத்தகடு : அதிக வலிவும், விறைப்பும் அளிப்பதற்காக உட்குழிவாக்கிய அல்லது வளைத்து நெளிவாக்கிய ஒரு தகடு

buckling : (வண். அர.) வண்ண முறுக்கம் : எண்ணெயை ஓர் அடிப்படையாகக் கொண்ட ஒர் அடிப் பூச்சு வண்ணம் காய்வதற்கு முழு அவகாசம் அளிக்காதபோது, அதன் மீதான பிராக்கிலின் மெருகு சுருங்குவதால் உண்டாகும் விளைவு

buckling coil : (மின்.) கூன் கம்பிச்சுருள் : ஒலிபெருக்கியில் முதன் மைக்கம்பிச் சுருளின் காந்தப் புலங்களுக்கு எதிரான காந்தப் புலங்களை உண்டாக்கக்கூடிய ஒரு வகைக் கம்பிச் சுருள்

buckram : முரட்டுத் துணி : கஞ்சி அல்லது பசை ஊட்டப்பட்ட விறைப்பான முரட்டுத் துணி. இது புத்தகங்களைக் கட்டுமானம் செய்யப் பயன்படுகிறது

buckskin : மான் தோல் : மான் வகையின் தோல். இது மென்மையானது; பழுப்பு மஞ்சள் நிற முடையது

buff : (எந்.) தோல் சக்கரம் : தோல் போர்த்த ஒரு சக்கரம். உலோகப் பரப்புகளுக்கு மெருகேற்றுவதற்குப் பயன்படும் ஒரு சாணைக் கருவி. இதன் சாணைச் சக்கரத்தில் பல மென்தோல் வட்டத் தகடுகள் இணைக்கப்பட்டிக்கும்

buffer : (மின்.) உதைதாங்கு மின்காப்பு : பெருக்கம் செய்யப் பட்ட ஒரு மின் காப்பு. இதில் அடுக்கு வரிசைகளிடையே எதிரெதிர் வினை ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஒர் எலெக்ட்ரான் குழல்வரிசை அமைக்கப்பட்டிருக்கும்

buffet : சிற்றுண்டிப் பலகை : இது ஒரு ஃபிரெஞ்சுச் சொல். இது சிற்றுண்டிகளை வைப்பதற்குப் பயன்படும் நிலையறைப் பெட்டியை அல்லது பக்கப் பலகையைக் குறிக்கிறது

buffeting : (வானூ.) அலைமோதல் : சீரற்ற ஒழுகியக்கம், காற்றுவீச்சு காரணமாக விமானத்தின் கட்டுமானத்தில் அல்லது மேற்பரப்பில் ஏற்படும் அலைக் கழிப்பு. கொந்தளிப்பான காற்று வீச்சினால் ஏற்படும் விமானத்தின் ஒழுங்கற்ற அசைவையும் ஊசலாட்டத்தையும் குறிக்கும்

buffing : முரட்டுத்தோல் : இது பதனிட்ட மெத்தென்ற முரட்டு வெண் தோலினைக் குறிக்கும். உலோக எந்திரங்களை இவ்வகைத் தோலினால் தேய்த்து மெருகிடு வதையும் குறிக்கும்

buffing leather : உள்வரித் தோல் : உரித்த தோலைவிட வலுவாக இருக்கக்கூடிய மென்மையான தோல். இது பெரிய பொருள்களுக்கு உள்வரியிடுவதற்குப் பயன்படுகிறது

buffing wheels : (பட்.) சாணைச் சக்கரம் : மெருகேற்றுவதற்குப் பயன்படும் சாணைச் சக்கரம். இது பஞ்சு அல்லது கம்பளித் துணியாலான பல வட்டத்தகடுகளைக் கொண்டிருக்கும். இதில் சானைப் பொடிகள், உராய்பொருள்கள் இருக்கும் bug : (மின்.) விரைவுச் செய்திச் சாதனம் : குறியீட்டு முறையில் செய்திகளை அனுப்புவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒர் அதிவேகப் பகுதித் தானியங்கிச் சாதனம்

buhl work : ஆமையோட்டில் வேலைப்பாடு : ஆமையோட்டில் பல் வண்ணப் பொன், வெள்ளி, தந்த உலோக வேலைப்பாட்டுடன் கூடிய உட்செதுக்கிய வேலைப்பாடு

buhrstone : படிகக்கல் : திரிகையாகப் பயன்படும் ஒருவகைப் படிகக்கல். சொரசொர்ப்பான இந்தப் படிகக்கல் மணிகளைத் தேய்த்துப் பொடியாக்குவதற்குப் பயன்படுகிறது. இது எந்திரக் கல் போன்றது

builders tape : அளவை நாடா : நெகிழ்வுடைய உலோகம் அல்லது துணிப்பட்டையிலான அளக்கும் நாடா. இது வட்டவடிவ உறையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். இது பொதுவாக 127 முதல் 254 செ.மீ. நீளமுடையதாக இருக்கும். இதனைக்கட்டிடக் கலைஞர்கள் பயன்படுத்துவார்கள்

building : கட்டிடக்கலை : கட்டுமானப் பொருள்களைக் கொண்டு ஒரு கட்டிடத்தை எழுப்பும் கலை

building line : கட்டிட வரம்புக் கோடு : ஒரு கட்டிடச் சுவரின் புற முகப்பு எல்லைக் கோடு. சட்டப் படி எந்த வரம்புக்கு அப்பால், கட்டிடம் நீட்டிக் கொண்டிருக்கலாகாதெனத் தடைசெய்யப்பட்டிருக்கிறதோ அந்த வரம்புக்கோடு

building materials : (க.க.) கட்டுமானப் பொருள்கள் : கட்டிடம் கட்டுவதற்குப் பயன்படும் பொருள்கள் அனைத்தையும் குறிக்கும்

building paper : (க.க.) கட்டிடக் காப்புக் காகிதம் : பருவ நிலையின் பாதிப்பிலிருந்து சுவர்களையும் மேல் முகடுகளையும் பாதுகாப்பதற்கு மேற்கவசமிடுவதற்குப் பயன்படும் கனமான காகிதம்

building stone : (க.க.) கட்டுமானக் கல் : கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் எல்லா வகை கற்களையும் குறிக்கும். பளிங்குக் கல், கருங்கல், மாககல், சுண்ணாம்புக்கல் முதலியவை இதில் அடங்கும்

building up : (மின்.) மின்னழுத்தப்பெருக்கம் : மின்னகத்தின் தற் கிளர்ச்சி காரணமாகத் தொடக்க நிலையிலிருந்து இறுதி மின்னழுத்தம் வரையில் ஒரு மின்னாக்கியில் உண்டாகும் தீவிர மின்னழுத்த ஆக்கம். முதல் நிலை மின்னழுத்ததம், எஞ்சிய காந்த ஆற்றலால் உண்டாகிறது, இந்த மின்னழுத்தம் காந்தப் புலங்களுக்குப் பரவும் போது, அந்தப் புலங்கள் வலுவடைந்து முழுமையான மின்னழுத்தம் உண்டாக உதவுகின்றன

built up member : (பொறி.) கட்டுமானத் தொகுதி : சிறிது சிறிதாகக் கட்டியமைத்த கட்டுமானத் தொகுதி. இந்தக் கட்டுமான முறையை டச்சுக்காரர்கள் புகுத்தினர்

bulbar : பின்மூளைக் குமிழ்முனை : பின் மூளையின் புடைத்த பகுதி. மூளையின் கீழ்ப் பகுதியான இது முதுகந்தண்டு வடத்துடன் இணைந்திருக்கும்

bulk : பருமன் : சாதாரணமாகக் காகிதத்தின் கனத்தைக் குறிக்கும் சொல். ஒரு பொருளின் எடைக் கேற்ப அதன் கனத்தைக் குறிக்கவும் இது பயன்படுகிறது

bulk factor : (குழை.) பருமக்காரணி : அடர்த்தியற்ற வார்ப் படத்தூளின் கன அளவுக்கும் இறுதியாக உருவாகும் பொருளின் கன அளவுக்குமிடையிலான விகிதம்

bulk head : தடுப்பறை : சுரங்கத்தில் அல்லது குடைவு வழியில் அல்லது நீரோடையில் மண்ணைத் தடுப்பதற்குரிய கல்லாலான அல்லது மரத்தாலான ஒரு தடுப்பு. ஒரு கப்பலிலுள்ள எஃகினாலான அல்லது மரத்தாலான அறைத் தடுப்பையும் குறிக்கும்

bull block : (பட்.) இலக்கு மையப் பாளம் : கம்பி அல்லது சலாகை களின் வடிவளவைக் குறைப்பதற்காக உட்செலுத்தி எடுக்கப் பயன்படும் ஒரு பாளம்

bulldozer : (எந்.) சமன்பொறி : இரும்பையும் எஃகையும் வளைத்துச் சமன் செய்வதற்காகப் பயன்படும் ஒரு கனமான வடிவமைப்புப் பொறியமைவு

bull gear : (எந்.) இயக்கப் பல்லினை : உலோகத்தைச் சமன்படுத்தும் பொறியிலுள்ள மேசைக்கு இயக்கத்தைக் கொடுக்கும் ஒரு பெரிய பல்லிணை

bull header : (க.க.) உருண்டை முனைச் செங்கல் : ஒரு பக்கம் உருண்டை முனையுடைய ஒரு வகைச் செங்கல். இதன் குறுகிய முகப்பு வெளியில் தெரியும்படி வைக்கப்படும். சன்னல் சட்டங்களுக்கும், கதவு நிலைகளுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது

bullion : (வேதி.) பொன் - வெள்ளிக் கட்டி :

(1) தங்கம் அல்லது வெள்ளிக் கட்டிகள் அல்லது சலாகைகள்

(2) வெள்ளி பிளாட்டினம் அல் லது வேறு விலையுயர்ந்த உலோ கங்களுடன் தங்கம் கலந்த ஒர் உலோகக் கலவை

(3) தங்க, வெள்ளி நாணயங்களையும் இது குறிக்கும்

bull ladle : (வார்.) பெருஞ் சட்டுவம் : உருகிய உலோகத்தை எடுத்துச் செல்வதற்குப் பயன்படும் இருவர் எடுத்துச்செல்லக்கூடிய பெரிய அகப்பை

bull pine : (மர.வே.) எருத்துத் தேவதாரு : அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலுள்ள ஒருவகை மரம். இது 46-76 மீட்டர் வரைஉயரமாக, வளரும் இதன் அகலம் 1.5 - 3 மீட்டர் இருக்கும். இதன் வெட்டுமரம் நடுத்திரமான வலுவுடையது; அதிகப் பிசின் தன்மை கொண்டது. கட்டிடங்கள் கட்டுவதில் உள்முக மற்றும் வெளிப்புற அலங்கார வேலைப்பாடுகள் செய்யப் பயன்படுகிறது. இதனைக் கலிபோர்னியா வெண் தேவதாரு என்றும் அழைப்பர்

bull's-eye: (க.க.) சாளரம் : முழு வட்ட வடிவில் அமைந்திருக்கும் வட்டமான திறப்பு

buli's-nose (க.க.)

(1) எருத்து மூக்கு : புறநிலை விரிந்த அல்லது உருள் வடிவக் கோணம்

(2) (மர.வே.) நீட்டிக் கொண்டிருக்கும் பகுதிகளுக்கு நெருக்கமாக உள்ளவற்றைச் சமன்படுத்துவதற்கான ஒரு சிறு சாய்தளம்

bull stretcher : (க.க.) நீள்முனைச் செங்கல் : நீண்ட முனை வெளியே தெரியும்படி வைக்கப்படும் ஒரு வகைச் செங்கல்

bull wheel : (எந்.) பளுதூக்கிச் சக்கரம் : உலோகத்தைச் சமன்படுத்தும் பொறியமைவிலுள்ள ஒரு பெரிய பல்லிணை. இது மேசையை இயக்குகிறது. இந்தச் சக்கரத்தைச் சுற்றி ஒரு கயிறு சுற்றப்பட்டிருக்கும். இதனைத் கொண்டு கனமான பொருள்களைத் தூக்கலாம்

bump : (வானூ.) திடீர்க் குலுக்கம் : வாயுமண்டலத்தில் ஏற்படும் திடீர் மாறுதல் காரணமாக விமானத்தில் ஏற்படும் திடீர் உந்தல் அல்லது குலுக்கம்

bumper : (தானி; எந்.) முட்டுத் தாங்கி : உந்து வண்டிகளின் முன்னும் பின்னும் மோதலைத் தாங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள முட்டுத் தாங்கி

bumper bag : (வானூ.) முட்டுத் தாங்குங் திண்டு : விமானம் தரை யிறங்கும்போது அதன் அடிப் பகுதிக்குச் சேதம் ஏற்படாதவாறு தடுக்கக்கூடிய ஒருவகைத் திண்டு

bumper blocks : (தானி. எந்.) முட்டுத்தாங்கு பாளங்கள் : கடும் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்வதற்காக உந்து வண்டியின் அச்சுகளுக்கும் சட்டகத்திற்குமிடையே வைக்கப்பட்டுள்ள ரப்பர்ப் பாளங்கள்

bumping hammer : (உலோ.) முட்டுச் சம்மட்டி : கழிவுப்பொருள் கொள்கலன்கள் போன்ற பெரிய கலன்களில் மூட்டுவாய்களை மூடுவதற்குப் பயன்படும் ஒருவகைச் சம்மட்டி

bunching : (மின்.) விரைவு வேக மாற்றம் : ஒர் எலெக்ட்ரான் கதிர்க் கற்றையின் விரைவு வேக ஏற்றத் தாழ்வு காரணமாக எலெட்ரான் அனுப்புகை நேரத்தில் உண்டாகும் வேறுபாட்டினால் ஒரு மாற்று மின்னோட்டக் கூறு உண்டாதல்

bundling machine : (அச்சு.) முடுக்குக் கருவி : அச்சு முழுமடித் தாள் வரிசை, கைப்பிடி நிலை மாட்டி முதலியவற்றை நெருக்கி அழுத்தி முடுக்குவதற்குப் பயன்படும் ஒரு பற்றுக் கருவி

bun foot : குட்டை வட்டக்கால் : குட்டையாகவும் வட்டமாகவும் அமைந்த தட்டையான பந்து வடிவக் கால்

bung : அடைப்பான் : செங்கற் சூளையிலுள்ள சுடுசெங்கல் களி மண் பெட்டிகள்

bungalow : (க.க.) ஒற்றைமாடி இல்லம் : சுற்றுத் தாழ்வாரத்தோடு கூடிய ஒரடுக்கு வீடு

bunker : (பொறி.) எரிபொருள் அறை : எரிபொருள், பெரும்பாலும் நிலக்கரி சேமித்து வைக்கப் பட்டிருக்கும் அறை

Bunsen burner : புன்சென் வாயு அடுப்பு : ஆய்வுத் கூடங்களில் பயன் படுத்தப்படும். ஒருவகை வாயு அடுப்பு. இதில் வாயுவும், காற்றும் கலந்த ஒரு கலவை எரிபொருளாகப் பயன்படுகிறது

பன்சென் வாயு அடுப்பு

buoyancy : மிதப்பாற்றல் : நீர்மத்துள் அழுத்துவதால் எடை குறைவாகக் கானும் இயல்பு, பொருளின் எடையால் வெளியேற்றப்படும் காற்றின் எடைக்குச்சமமானதாக மேலழுந்தும் விசை அமைந்திருக்கும்

burette : (வேதி.) வடியளவைக் குழாய் : சிறுநிற நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக் குழாய். இதன்மூலம் ஒரே சமயததில் ஒரு கரைசலில் மிகச் சிறிய அளவைக் கூட எடுக்கலாம்

burl : (மர. வே.) மரக்கரணை :

(1) ஒரு மரத்தின் தூர்ப்பகுதியில் அளவுக்கு மீறிய காரணமாக உண்டாகியிருக்கும் கரணை

(2) அலங்காரத் 'திரைச் சீலை' களிலுள்ள அழகிய நூல் வேலைப்பாடு

burlap : பருக்கன் துணி : சணலில் நெய்யப்பெற்ற கரடுமுரடான துணி. இது திரைச்சீலைகள், சிப்பங்கட்டும் துணிகள் முதலியன தயாரிக்கப் பயன்படுகிறது burling : சிக்கு வாருதல் : கம்பளித் துணியிலுள்ள முடிச்சுகளையும் சிக்குகளையும் அகற்றும் ஒரு முறை

burn : நிலையுருக்காட்சி : பொருளிலிருந்து ஒளிப்படக் கருவியை வேறு பக்கம் திருப்பிய பின்னரும், சூழலில் நின்லத்து நிற்கும் ஓர் உருக்காட்சி

burned bearing : (தானி. எந்.) தீய்வுத் தாங்கி : ஒரு தாங்கியின் கரடுமுரடான மேற்பரப்பு. இது பெரும்பாலும் மோசமான உயவிடல் காரணமாக ஏற்படுகிறது

burned metal : (பற்.) எரி உலோகம் : ஒர் உலோகத்தில் சிறிதளவு கார்பன் எரிந்து கார்பன்டை யாக்சைடும், சிறிதளவு அயம் எரிந்து இரும்பு ஆக்சைடும் உண்டாதல்

burnet's process : (மர. வே.) பர்னட் மரக்காப்பு முறை : மரங்களைப் பாதுகாக்க சர் வில்லியம் பர்னட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட நீர்ம மருந்தைப் பூசி வெட்டு மரங்களைப் பாதுகாக்கும் முறை. இதில் துத்த நாகக் குளோரைடு காப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது

burning : (வேதி.) எரியழிவு : வெப்பமும், ஒளியும் வெளிப்படும் வகையில் மிக விரைவாக ஆக்சிகரணம் நடைபெறும் நிகழ்வு

burnout : (விண்.) எரிபொருள் : தீர்வு : விண்வெளிக் கலத்தில் எரிபொருள் தீர்ந்து போதல் அல்லது எரிப்பொருள் பாய்தல் நின்று போதல்

burnish : (எந்.) மெருகிடுதல் : ஒர் உலோகப் பரப்பில் மற்றோர் உலோகப் பரப்பினை உராயச் செய்து பளபளப்பாக்கி மெருகேற்றும் முறை

மரச்செதுக்கு வேலைகளுக்கு மெருகிடும் முறை

burnisher : (பட்.) மெருகிடுகருவி : உலோகங்களுக்கு, உராயச் செய்து மெருகேற்றுவதற்குப் பயன்படும் ஒர் எஃகுச் சாதனம்

burr : (பட்.) சாணை விளிம்பு : ஒர் உலோகத் துண்டின் கரடுமுரடான விளிம்பு. இது வெட்டுவதற்கும், துளையிடுவதற்கும் பயன்படுகிறது. அச்சுக் கலையில் மங்கலான மைக்கறை உண்டாக்கும் வகையில் வரி உருக்கச்சுப் பொறியிலுள்ள வரிப்பாளத்துடன் ஒட்டியிருக்கும் மழுங்கிய உலோகம்

burring machine : (உலோ:) சானைப் பொறி : உலோக உருளைகளின் அல்லது வட்டத்தகடுகளின் விளிம்புகளின் முரமுரப்பான வெட்டுவாயைச் சாணை பிடிக்கப் பயன்படும் பொறியமைவு

burring reamer : சாணைத் துனைப்பான் : குழாய்களை வெட்டும்போது ஏற்படும் கரடுமுரடான விளிம்புகளை அகற்றுவதற்குப் பயன்படும் கருவி

சாணைத் துனைப்பான்

bursting strenth : தாங்கு வலிமை : அழுத்தத்தைத் தாங்குவதற்குக் காகிதத்திற்குள்ள ஆற்றல். இதனை முல்லன் சோதனைக், கருவியில் ஒரு சதுர செ.மீ.க்கு இத்தனை கி.கிராம் என்ற வீதத்தில் கணக்கிடப்படுகிறது

bus bar : (மின்.) மின்வாய்க் கட்டை : பல மின்சுற்றுகளோடு இணைந்துள்ள செப்பு மின்னேகி

bush : (தானி; எந்.) இருசு உருளை : இருசு பதிந்து சுழல்வ தற்குரிய உருளை வடிவ உலோகக் கட்டை. இது தாங்கிபோல் பயன்படும்

(1) பொதுவாக, உள்வரி விட்டத்தைக் குறைப்பதற்காகப் பயன் படுத்தப்படும் உலோகத் துண்டு

busheled iron : (உலோ.) கலவை உலோகம் : கூட்டுக் கலவை செய்யும் ஊதுலையில் இரும்புத் துண்டுகளிலிருந்து தயாரிக்கும் வகை இரும்பு

bushing : (எந்.) செருகு குழல் : துல்லியமான சரியமைவுக்கும் பழுது பார்த்தலுக்கும் ஒரு தாங்கி இடமளிப்பதற்குப் பயன்படும் கம்பியுருளை அகஞ்செருகப்பட்ட குழல்

butt : (மர; வே.) மூட்டு வாய் : பொதுவாக, கதவின் மூட்டுவாய்: இது வார்க்கட்டை முட்டு வாயைக் குறிக்காது

butterfly table : சிறகு வடிவமேசை : வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளைப் போல் இரு புறமும் மடித்திடக்கூடிய வகையில் அமைந்த மேசை

butterfly valve : (தானி; எந்.) சிறகு வடிவ ஓரதர் : நடுவிலுள்ள ஒர் ஆதாரத்தில் இரு புறமும் மடிந்து விரிந்திடக்கூடிய வகையில் அமைந்த ஒரதர்

buttering : (க.க.) சாந்துக் கலவை பூசுதல் : கட்டுமானத்திற்கு செங்கல்லை அதன் நிலையில் வைப்பதற்கு முன்னர் அதன் விளிம்புகளில் சாந்துக் கலவையினைப் பூசுதல்

buttering trowel : (க.க.) சாந்து சட்டுவக் கரண்டி : சாந்து பூசுவதற்குப் பயன்படும் சட்டுவக் கரண்டி

butternut : (மர. வே.) வெண்மரம் : இது எண்ணைய்ப் பசையுடைய கொட்டை தரும் ஒரு வகை மரம். இது அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் காணப்படுகிறது. நடுத்தர வடிவளவுடையது. இதன் வெட்டுமரம் மென்மையானது; மென்சாயல் நிறமுடையது; நுண்துவாரங்கள் கொண்டது. அறைகலன்கள் செய்யவும், உள்முக அலங்கார வேலைப்பாடுகளுக்கும் பயன்படுகிறது

butt hinge : (மர. வே.) மூட்டுவாய்க் கீல் : ஒரு கதவின் விளிம்புடன் பொருத்தப்பட்ட ஒரு கீல். இதில் குடியிருக்கும்போது கதவின் பக்க நிலைக்கதவின் விளிம்புடன் பொருந்தியிருக்கும். இது வார்க் கட்டைக்கீலிருந்து வேறுபட்டது

butting or butt ramming : (வார்.) இடித்து இறுக்குதல் அல்லது திமிசு அடித்து இறுக்குதல் : ஒரு திமிசுக் கட்டையின் உருண்ட முனையின் தட்டையான மேற்பரப்பை இடித்து அல்லது திமிசு அடித்து இறக்குதல்

butt joint : (க.க; மரவே.) முளை மூட்டு : இரு வெட்டு மரத் துண்டுகள் ஒன்றன் மேல் ஒன்று மேவாதவாறு விளிம்புகளை இணைத்தல்

முளை மூட்டு

button machine : குமிழ்ப் பொறியமைவு : ஒரு சிறிய, கையால் இயக்கக்கூடிய சாதனம். பொத்தான்களைப் பொருத்துவதற்கும் கொளுவிகளையும் கயிற்றுத்துளைகளையும் இணைப்பதற்கும் பயன்படுகிறது button-wood : பொத்தான் மரம் : பார்க்க : அத்திமரம்

butt ramming : (வார்.) திமிசு அடித்து இறுக்குதல் : (வார்.) திமிசுக் கட்டையின் பெரிய உருண்டையான முனையினால் அடித்து இறுக்குதல்

buttress flying : (க.க.) உதைகால் வளைவு : உயர் கட்டுமானங்களுக்குச் சுவர் மேற்பகுதியிலிருந்து ஆதாரம் கொண்டு செல்லும் அடிவளைவுடன் கூடிய உதை கட்டுமானம்

buttess thread : (எந்.) மூட்டுத் திருகிழை : குறுக்கு வெட்டு முக்கோண வடிவத்திலுள்ள ஒரு திரு கிழை. இதன் ஒருமுகப்பு திருதின் அச்சுக்குச் செங்கோணத்தில் அமைந்திருக்கும். இரண்டாம் முகப்பு சாய்வாக இருக்கும். பீரங்கி போன்ற அவற்றில் அளவுக்கு மீறிய அதிர்ச்சியைத் தாங்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது

butt welding : (பட்.) மூட்டுப் பற்றவைப்பு : இரு துண்டுகள் ஒன்றன் மேல் ஒன்று மேவாதவாறு, இரு முனைகளும் நேரடியாகப் பொருந்தியிருக்கும்படி பற்றவைக்கும் முறை. மின்னியல் முறையில் பற்ற வைப்பதற்காகப் பொதுவாகப் பயன்படும் முறை

buzzer : (மின்.) மின் ஒலிக்கருவி : வண்டு போன்று முரலும் ஒலி எழுப்பும் மின்சார அறிவிப்புக் கருவி

buzz saw : (மர.வே.) வட்ட இயக்கம் : ஒரு வட்ட வடிமவான ரம்பம்

by pass : (கம்.) இடைகடப்பு வழி : நீரோட்ட மின்னோட்டங்களில் இடைத்துரடு கடக்கும் சுற்று வழி
C


C-battery : (மின்.) 'C' மின்கலம் : வெற்றிடக் குழலில் முறையான வலைக் கசிவினை ஏற்படுத்தி, அதன் மூலம் ஒரு மின்சுற்றில் சரியான அளவுக்கு 'B' மின்னோட்டம் பாயும்படி செய்வதற்காகப் பயன்படும் மின்கலம். இது திரிபு ஏற்படாதபடி தடுக்கிறது. 'B' மின் கலங்கள் க்கனமாகப் பயன்படுத்தத்தக்கன

C - Clamp : (எந்.) "C" வடிவ பிடிப்பான் : இது 'C' என்ற எழுத்து + வடிவில் அமைந்த ஒரு வகை இறுக்கிப் பிடிக்கும் கருவி. இதில் இறுகப் பற்றுவதற்கான அழுத்தம் கட்டை விரல் திருகாணி மூலம் பெறப்படுகிறது

பிடிப்பான்

C.P. : (வேதி.) வேதியியல் தூய்மை : வேதியியல் கோட்பாடுகளுக்குத் தக்கவாறு தூய்மையாக இருத்தல்

C-scroll : 'C' வடிவச் சுருள் : “C” செதுக்குருவாக்கப்பட்ட ஒரு வடிவமைப்பு. இதனை ஃபிரெஞ்சுக் காரர்கள் புகுத்தினர்

C-stage resins : (குழை.) "C' நிலைப் பிசின்கள் : குழைம வகையில் வெப்ப மூட்டப்பட்ட நிலையில் உருக்கொடுப்பதற்கான இறுதி நிலையிலுள்ள பிசின்கள். இந்தப் பிசின்கள், உருக்க முடியாதவாறும் கரைக்க இயலாதபடியும் இருக்கும்

ç-supply : (மின்.) C-மின் வழங்கீடு : வலைச் சார்பு எலெக்ட்ரான் குழல்களுக்கு வழங்கப்படும் மின்னழுத்தங்கள். பொதுவாக இவை எதிர் மின்னழுத்தங்களாக இருக்கும்

C-washer : (எந்.) 'C' வடிவ வளையம் : ஒரு பக்கம் திறப்புடன் 'C' எழுத்தின் வடிவத்தில் அமைந்திருக்கும். இதனை சுரியாணியை முற்றிலுமாக வெளி எடுக்காமல் அந்த ஆணியின் மரைக்குக் கீழை நுழைக்கலாம்; அல்லது அதிலிருந்து எடுக்கலாம். இதனைக் காடி வளையம் அல்லது திறந்த வளையம் என்று கூறுவர்

cabane : (வானூ.) ஆதாரக்கட்டு : விமானக் கட்டுமானச் சட்டத்தில் இறகுகளைத் தாங்குவதற்கான ஒரு கட்டமைப்பு, ஒர் இறகில் புறந்துருத்திக் காண்டிருப்ப வறறுககு ஆதாரமாகப் பயன்படும் தாங்கணைவும் இவ்வாறு அமைக்கப்படுகிறது

cabbaging press : (எந்.) அரிமான அழுத்தப் பொறி : உதிரியான தகட்டு உலோகத் துண்டுகளை நெருக்கிச் செறிவாக்குவதற்கான ஒர் அழுத்தப் பொறி. இதன் மூலம் அந்த உலோகத் துண்டுகளைக் கையாள்வதற்கும் மறுபடி உருக்குவதற்கும் ஏற்ற வடிவத்தில் உருவாககலாம்

cabinet : (மர.வே.) நிலைப் பெட்டி : இழுப்பறைகளும், நிலையடுக்குத் தட்டுகளும் கொண்டு கதவுகளால் மூடப்பட்ட ஒர் இழுப்பறைப் பெட்டி பல்வேறு பொருள்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு இது பயன்படுகிறது

cabinet burnisher : (மர.வே.) நிலை பெட்டிக் கைப்பிடி : 10 முதல் 15 செ.மீ. வரைநீளமுள்ள கடினமான எஃகுத் துண்டு. இது நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும். இது ஒரு மரக் கைப்பிடியில் செருகப் பட்டிருக்கும். இதுசெதுக்குக் கருவியின் விளிம்பினைத் திருப்புவதற்குப் பயன்படும்

cabinet latch : நிலைப் பெட்டித் தாழ்ப்பாள் : பயன்பாட்டுக்குத் தக்கபடி அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வகைத் தாழ்ப்பாள்களுக்குள்ள பெயர். ஒரு குளிர்பதன்ச் சாதனக் கதவு முதல் சமையலறை நிலைப் பெட்டிகளிலுள்ள கிடை நிலைக் கைப்பிடிப் பூட்டுகள் வரைப் பல்வேறு தாழ்ப்பாள்கள் இதில் அடங்கும்

cabinet projection : ஒளிநிழல் எரிவுரு : ஒருவகைப் படம் வரையும் முறை. இதில் வரையப்படும் பொருள் நோக்குவோருக்கு இணையாக வரையப்படுகிறது. அதற்குச் செங்குத்தாக இருக்கும் முகப்புகள் 45° சாய்கோணத்தில் வரையப்பட்டிருக்கும்

cabinet scraper : (மர.வே.) நிலைபெட்டி செதுக்குக் கருவி : ஒரு தட்டையான எஃகுத் துண்டு. இதன் ஒரு விளிம்பு கரடுமுரடான மரப்பர்ப்பில் வைத்து இழைக்கும் போது இழைப்புழி போன்று கரடு முரடுகளை நீக்கி வழவழப்புண்டாக்கும்

cabinet work : (மர.வே.) நிலைப்பெட்டி வேலைப்பாடு : நேர்த்தியான மரவேலைப்பாடுகளைச் செய்யப் பயன்படும் முறை

cabin hook : நிலைப்பெட்டி கொக்கி : நிலைப்பெட்டி வேலையில் கதவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய கொக்கியும் புழையும்

cable : (மின்.) கம்பிவடம் : (1) நீர்புகாமல் பாதுகாப்புச் செய்யப்பட்ட, மின் காப்பிடப்பட்ட மின் கடத்தி அல்லது கடத்திகளின் தொகுதி

(2) பொறியியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வடக் கயிறு அல்லது நங்கூரச் சங்கிலி

cable box (மின்.) கம்பிவட பெட்டி : கம்பி வடங்களுக்கிடையிலான புரியிணைவுகள் அல்லது இணைப்புகள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெட்டி

cable entrance : (மின்.) நுழைவுவுக் கம்பிவடம் : முதன்மை மின் விழியிலிருந்து ஒரு கட்டிடத்திற்கு மின்னியல் தெர்டர்புகள் ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் கனமான மின் கம்பிவடம்

cable-laid rope : (பொறி.) வளம் புரி வடக்கயிறு : வலம்புரி முறையில் கம்பி வடப்புரி முறுக்கிய வடக்கயிறு

cable length : கம்பிவட நீள அளவு : கப்பல் துறை நாழிகை நீளத்தில் பத்தில் ஒரு பகுதி. இது அமெரிக் காவில் கையாளப்படும் ஒர் அளவு முறையாகும். இது 220 மீட்டர் அல்லது 120 கடலியலளவுக்குச் சமம்

cable non metallic : (மின்.) அலோக மின்கம்பிவடம் : நெகிழ் திறனுடைய துணி உறைகளில் பெர்தியப்பட்டுள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின் காப்பிடப்பட்ட மின்கம்பிகள். இது வீடுகளில் உட்புறம் மின்கம்பியிடுவதற்குப் பயன்படுகிறது

cable rack : (மின்.) கம்பிவடச் சட்டம் : மின்கம்பி வடங்களைச் சுற்றி வைக்கப்படும் ஒரு சட்ட அமைப்பு

cable, shielded : (மின்.) காப்பிட்ட மின்கம்பி வடம் : மின்காந்தக் காப்பு போன்று செயற்படும் ஒர் உலோக உறையினுள் பொதியப் பட்டுள்ள மின் கட்த்திகள்

cable turning : கம்பிவடத்திருக்கு : திண்மையான உருவமைவில் சுருட் டப்பட்ட கயிற்றுச் சுருள்களைப் போன்றிருக்கும் ஒரு திருக்கு வடிவம்

cabling : (க.க.) மணிவட வார்ப்புரு : தூண் முதலியவற்றில் செதுக்கப்படும் செங்குத்தான வரிப் பள்ளம்

தூணின் செவ்வுயரக் குழு வினைக் கம்பி வார்ப்புருவால் நிரப்பும் அணி அமைப்பு

cabochon : உருள்மட்டை வடிவு : முகடு உருண்டையாகவும் அடி தட்டையாகவும் இருக்குமாறு ஒரு பணிக்கல்லின் தோற்றத்துட்ன் செதுக்கு வேலைப்பாடு செய்யப் பட்ட ஒரு வட்டவடிவப் பரப்பு

cabriole : (மர.வே.) வளைகால் : தட்டுமுட்டுப் பொருள்களில், முழங்கால்பகுதி குழிவாகவும் கணுக்கால் பகுதி உட்குழிவாகவும் அமைக்கப்படும் ஒருவகை வளைகால் பாணி

cadmium : (வேதி.) காட்மியம் : தகரம் போன்ற வெண்ணில உலோகத் தனிமம் (Cd), துத்தநாகக் கனிமங்களில் சிறிதளவு கிடைக்கிறது. அதிலிருந்து வடித்துப் பிரித்தல் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. உருக்கி உலோகக் கலவைகள் செய்யப்பயன்படுகிறது

cadmium lithopone : (வன்.) காட்மியம் வண்ணப் பாளம் : மஞ்சளும் சிவப்பும் வரிசையாக அமைந்த காட்மிய உலோகப் பாளம். இது ஒளியால் சேதமடையாது காரங்களை எதிர்க்கக் கூடியது

cadmium plating : (உலோ.) காட்மிய முலாமிடல் : இரும்புப் பொருள்களுக்கும், மற்றப் பகுதிகளுக்கும் அரிமானத்திலிருந்து பாதுகாப்பதற்காக மின்பகுப்பு முறை மூலமாக காட்மிய முலாமிடுதல்

cadmium silver : (தானி.எந்.) காட்மிய வெள்ளி : தாங்கிகள் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒர் உலோகக் கலவை. தகரம்-செம்பு-அஞ்சனம் கலந்த பப்பிட் உலோகம் என்னும் உலோகக் கலவையை விட இது அதிகப் பளு அழுத்தத்திலும் அதிவெப்ப நிலையிலும் எளிதாகக் செயற்படவல்லது

caduceus : கட்டியக் கோல் : கிரேக்கத் தெய்வங்களின் துதரான ஹெர்மிசின் கையிலுள்ள கட்டியக் கோல். இது பாழ்ப்போல் நெளிந்திருக்கும். இதில் இறகும் இருக்கும். இது அலங்காரப் பொருளாகப் பயன்படுகிறது

Caecum : (உட.) பெருங்குடல் வாய் : பெருங்குடலின் முற்பகுதி இங்குதான் சிறுகுடல் இதனுள் நுழைகிறது. பெருங்குடல் வாயின் பக்கத்திலிருந்து குடல் முளை வெளியே வருகிறது

பெருங்குடல்

cage-type valve : (தானி.எந்.) கூண்டு வகை ஒரதர் : முகப்பு உந்துகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை ஒரதர். இதில் தலைக் தொண்டை வடிவிமுள்ள ஓர் ஒரதர், ஒரு நீள் உருளைததண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய உருளையினுள் அல்லது கூண்டினுள் இயங்கிக் கொண்டிருக்கும். இந்த ஒரதரையும் கூண்டையும் தனி அலகாக அகற்றிவிடலாம்.

cairo : (அச்சு.) கெய்ரோ அச் செழுத்து : வரி உருக்கச்சுப் பொறியிலிருந்து கிடைக்கும் ஒருவகை அச்செழுத்து முகப்பு

caisson : நீர்புகாப் பெரும் பேழை : நீரின் கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீர்புகாத பெரும் பேழை. நீருக்கடியில் பர்லங்களுக்கு அடித்தளங்கள் அமைக்க இது பயன்படுகிறது caisson disease : (நோயி.) காற்றழுத்த நோய் : மிகுந்த அழுத்த முடைய காற்றினூடாக உழைப்ப வர்களுக்கு வரும் நோய். மிகுந்த காற்றழுத்தத்தில் இரத்தத்தில் நைட்ரஜன் கரைந்து விடுகிறது. காற்றழுத்தம் குறையும்போது, நைட்ரஜன் குமிழ்களாக வெளி வரும். அப்போது மிகுந்த வலி உண்டாகும்; சிலசமயம் மரணமும் விளையும்

caking coal : பசை நிலக்கரி : சூட்டால் பசை கட்டியாகிற நிலக்கரி வகை

calamine : (வேதி.) துத்தநாகக் கரிகை : Zn(OH)2 ZnSiO8 துத்த நாகம் கலந்த சுரங்கக் கணிப் பொருள் வகை. துத்தநாகம் கிடைக்கும் ஒரு கனிமம்

calcimine : நீற்று சுன்னகம் : நீற்றுச் சுண்ணக நீறாக்கிச் சுவர்களில் வள்ளையடிப்பதற்குப் பயன்படும் சுண்ணகம்

calcine : (வேதி.) புடமிடுதல் : நெருப்பில் சுட்டுப் புடமிட்டு மாறாச் சுண்ணமாக்குதல்

calcined bone : பபுடமிட்ட எலும்பு : உலர் வெப்பமூட்டுதல் மூலமாகத் தயாரிக்கப்பட்ட, எளிதில் தகர்ந்து விடக்கூடிய தூளாக மாற்றப்பட்ட எலும்பு

calcined kaolin : புடமிட்ட பீங்கான் : இது பீங்கான் செய்யும் மென்மையான வெண்ணிறக் களிமண் வகை. இது அலுமினியம் சிலிக்கேட் எனப்படும். புடமிட்ட பீங்கான் செய்யப் பயன்படுகிறது

calcining : புடமிடுதல் : உலோகக் கனிமங்களைப் புடமிட்டு அதிலிருந்து தீங்கான அன்னியப் பொருள்களை நீக்குவதற்குச் சூடாக்குதல்

calcite : சுண்ணகக் கரியகை : தேனிரும்பு, எஃகு ஆகியவற்றைத் தயாரிப்பதில் உருக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படும் சுண்ணாம்புக்கல். அமெரிக்காவில் பென்சில்வேனியா, மிச்சிகன், மேற்கு வர்ஜினியா, இலினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் மிகுதியாகக் கிடைக்கிறது

calcium : (வேதி.) கால்சியம் (Ca) : சுண்ணகம்-கண்ணக்கல் - களிக்கல் ஆகியவற்றிலுள்ள ஒரு மூல உலோகம். வெள்ளி போன்ற வெண்மை நிறமுடையது. மென்மையான உலோகம். புதிதாக எடுக்கும் போது ஒளிர்வுடையதாக இருக்கும். காற்றுப் பட்டதும் ஆக்சிகரணத்தின் மூலம் விரைவாக மங்கி உலோகக் கலவைகள் தயாரிப்பதிலும், பள்ளி ஆய்வுக் கூடங்களில் நீரிலிருந்து ஜன் வாயு தயாரிப்பதற்கும் பயன்படுகிறது

calcium chloride : (க.க.) கால்சியம் குளோரைடு : ஈரத்தை உறிஞ்சுவதற்குப் பயன்படும் ஒரு வேதியியல் பொருள்

calcium corbide : (வேதி.) கால்சியம் கார்பைடு : (CaC2) சுண்ணாம்புக்கல்லும் சுட்ட கரியும் கலந்த ஒரு கலவையை மின் ஊதுலையில் சூடாக்கி இது பெறப்படுகிறது. நீருடன் கலந்து, அசிட்டி லின் வாயு தயாரிக்கப் பயன்படுகிறது

calcium corbonate : கால்சியம் கார்போனேட் : சுண்ணாம்புக்கல் வகை. சுண்ணாம்புக் கல்லாக மிகுதியாகக் கிடைக்கிறது. பளிங்கு ஒரு தூய்மையான சுண்ணாம்புக்கல், சுண்ண ஓடுகள், பவளம் போன்றவை முக்கியமாக கால்சியம் கார்பனேட்டுகளாம்

calcium oxide : கால்சியம் ஆக்சைடு : சுண்ணாம்பு தூய்மையான கால்சியம் ஆக்சைடு ஆகும்

calculagraph : கணிப்பு வரை வான் : கடிகாரமும், நேர முத்திரை யும் உடைய ஒரு சாதனம். இது விலைச் சீட்டு முதலியவற்றுக்குப் பணம் செலுத்தப்படும் நேரத்தைத் துல்லியமாக முத்திரையிடப் பயன்படுகிறது

calculus : (நோயி.) கல்லடைப்பு : சிறுநீரகம், சவ்வுப்பை போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் உண்டாகும் கல் போன்ற தடிப்பு

calculus : (கணி.) கலன கணிதம் : ஐசக் நியூட்டனும், லைப் னிட்சும் தனித்தனியே ஆராய்ந்து இந்தக் கணித முறையைக் கண்டு பிடித்தனர். இந்த முறை மூலம் கணித ஆாாய்ச்சியில் ஒரு புதிய ஆராய்ச்சித் துறையே உருவாகியது

caldron : கால்ட்ரான் : ஒரு பெரிய உலோகக் கொதிகெண்டி அல்லது கொதிகலன்

calender : மெருகேற்றும் உருளை : துணி, காகிதம் முதலியவை படிந்து உருவாக்கும்படி உருளை எந்திரத்தில் அழுத்தி மெருகேற்றுவதற்குப் பயன்படும் உருளை

calendered : மெருகேற்றிய : மெருகேற்றி வடிவாக்கம் செய்யப்பட்ட காகிதத்தைக் குறிக்கிறது

calendering : (குழை.) மேருகேற்றுதல் : துணி, காகிதம், பிளாஸ்டிக் தகடுகள் முதலியவற்றுக்கு படிந்து உருவாக்கும்படி உருளை எந்திரத்தில் அழுத்தி மெருகேற்றுதல்

caliber : குழல்விட்டம் : ஒரு குழலின் உள்விட்டம்

calibration : திருத்தளவுக் கணக் கீடு : அறிவியல் கருவிகளில் குறுக்களவுக் கூடுதல் குறைவுகளைத் துல்லியமாகக் கணக்கிடுதல்

calico : காலி கோதுணி : சொர சொரப்புள்ள பஞ்ச்த்துணி, கள்ளிக்கோட்டையிலிருந்து முதலில் கொண்டு வரப்பட்டதால் இப்பெயர் பெற்றது

california job case : (அச்சு.) கலிபோர்னியா அச்செழுத்து அறைப் பெட்டி : கையினால் அடுக்கப்படும் அச்செழுததுகளை வைப்பதற்கான ஒர் அறைப்பெட்டி

calin : கேலைன் : ஈயமும் வெள் ளியமும் கலந்த ஒர் உலோகக் கலவை. கொள்கலன்களுக்கான உள்வரிப்பூச்சு போன்றவற்றுக்கான மெல்லிய தகடுகள் தயாரிக்கப் பயன்படுகிறது

caliper : (பட்.) விட்டமானி : வட்டமான பொருள்களில் அகப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவு கருவிக் கோலில் இழையும் அளவுக் காய்களையுடைய விட்டமானி இதன்மூலம் சென்டி மீட்டர் கனமுள்ள காகிதத்தின் கனத்தையும் துல்லியமாக அளவிடலாம்

விட்டமானி

caliper rule : விட்டமானி அளவு கோல் : அகப்புற விட்டங்களை அளவிடுவதற்குப் பயன்படும் அளவுகோல். இதில் அளவுகள் பகுத்துக் குறிக்கப்பட்டிருக்கும். இதன் நிலையான தலை பூச்சிய வரையீடுகளையுடைய ஒரு வரிப் பள்ளத்தின் வழியே நகர்ந்து செல்லும்

caliper Square : (எந்.) விட்டமானி அளவு கருவி : பிழம்புகளின் அகப்புற விட்டங்களை அளக்கும் முறையில் அளவுகோலின் மீது இழையும் அளவு காய்களை உடைய அளவுக் கருவி

விட்டமானி அளவு கருவி

calking : நீர்க்காப்பு : நார்க் கயிறு உருகிய நிலக்கீல் போன்றவற் றைக் கொண்டு பலகைகளின் சந்திப்பு இடைவெளியை அடைத்து நீர் உட்புகாமல் செய்தல். மரக்கலங்களில் பலகை மூட்டுக்களை நீர்க் காப்புடையதாகச் செய்ய இது பயன்படுகிறது

calking tool : நீர்க்காப்புக் கருவி : சந்துகளை அடைத்து நீர் உட் புகாமல் செய்வதற்குப் பயன்படும் கருவி

calorie : (வேதி; பொறி, எந்: இயற்.) கலோரி / கனலி : வெப்ப அளவைக்கூறு, கனலி. ஒரு கிராம் நீரின் வெப்ப நிலையை ஒரு சென்டிகிரேடு அளவுக்கு உயர்த்துவதற்குப் பயன்படும் வெப்பத்தின் அளவு

calorific value : (தானி.) வெப்ப ஆளவு : உணவு அல்லது எரிபொருள் தரும் வெப்பத்தின் அளவு

calorimeter : கனல்மானி : சூட்டின் அளவு காட்டும் கருவி. ஒரு மின்கடத்தியிலுள்ள மின்னேர்ட்டத்தினால் உண்டாகும் வெப்பத்தை அளவிடுவதற்கான கருவி. உராய்வு, உள்ளெரிதல், வேதியியல் மாற்றம் போன்றவற்றால் உண்டாகும் வெப்பத்தை அளவிடும் கருவி

calorizing : (உலோ.) கனல் முலாமிடல் : இரும்பு, எஃகு போன்றவற்றிற்கு அலுமினியம் அல்லது அலு மினிய-இரும்பு உலோகக் கலவைகளால் முலாமிடும் முறை

cam : (எந்.) எந்திர முனைப்பு : இயக்கும் சக்கரத்தின் சுற்று வட்டம். கடந்த முனைப்புச் சாதனம். இது சுழல் இயக்கத்தை மாற்று, எதிர்மாற்று அல்லது முன்பின் இயக்கமாக மாற்றக்கூடிய ஒரு சுழல் தண்டில் பொருத்தப்பட்டிருக்கும்

எந்திர முனைப்பு

cam and sever steering gear : (தானி;எந்.) முனைப்பு நெம்புகோல் செலுத்தும் பல்லிணை : இதில் ஒரு குறுக்குச் சுழல் தண்டுடன் ஒரு வகை விரல் சக்கரம் இணைக்கப் பட்டிருக்கும். இது செலுத்துப் பல்லிணைச் சுழல் தண்டின் கீழ் முனையிலுள்ள மாறுபடும் இடைகொண்ட புரியுடைய திருகில் பொருந்திக் கொள்கிறது. திருகின் புரியானது மையத்தில் குறுகலாகவும் முனைகளில் அகன்றும் இருப்பதால், மிகக் குறைந்த அளவு அதிர்ச்சியுடனும் மிக விரைவாக சுற்றி இடமளிக்கிறது

camber : (வானூ.) கோட்டம் : விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் ஒரு பகுதியின் வளைவு. அதன் நாணிலிருந்து வளைவின் மேல்வாட்டமாக உயர்ந்து செல்லும் கோட்டம். இது வழக்கமாக, நாணிலிருந்து விளைவின் விலகலுக்கும், நாணின் நீளத்திற்கு மிடையிலான விகிதமாகக் குறிப்பிடப்படுகிறது. மேல்கோட்டமானது, விமானக் காற்றழுத்தத் தளத்தின் மேற்பரப்புடன் தொடர்புடையது. கீழ்க்கோட்டமானது, இவ்விரண்டின் சராசரி அளவாகும்

கட்டிடக்கலையில், மேல்வளைவுள்ள உத்திரத்தின் அல்லது காலத்தின் மேல் வட்டமான வளைவின் அளவு உந்துவண்டிகளில்அடிப்புறத்தில் முன் சக்கரங்களை நெருக்கமாகக் கொணர்ந்து உந்துவண்டியை எளிதாகச் செலுத்துவதற்கு உதவும் அமைப்பு

cambium layer : கேம்யம் அடுக்கு : மரங்களில் மரத்திற்கும், பட்டைக்கு மிடையிலான உயிரனு மண்டலம். இந்த அடுக்கிலிருந்து வளர்ச்சி ஏற்படுகிறது. எலுமிச்சை மர இனத்தில் இதனைக் காணலாம்

Cambric : அலங்காரத் துணி : நயமான வெண்ணிற இழைத் துணி வகை அறைகலன்களின் அலங்காரத்துணியாகப் பயன்படுகிறது. வெண்துணி மெத்தைத் திண்டுகளுக்கு உறையாகவும், கறுப்புத் துணி திண்டுகளுள்ள அறைகலன் உட்புற ஒட்டிணைப்பாகவும் பயன்படுகிறது

cam drive : முனைப்பியக்கம் : முனைப்புச் சக்கரங்கள் மூலமாகப் பெறப்படும் ஒருவகை இயக்கம். இதில் ஒரு வகை இயக்கத்தை, உந்துவண்டியில் உள்ள சுழல் தன்டில் உள்ளது போன்று, துல்லிய மான நேரத்தில் அல்லது வேறொரு இயக்கத்துடன் தொடர்புடையதாக நிகழுமாறு செய்யலாம்

cam engine : முனைப்பு எஞ்சின் : ஒரு முனைப்பு மற்றும் சுழல் இயக்கம் மூலமாக உந்து தண்டுகள் மாறிமாறி எதிரெதிர் இயங்கக் கூடிய ஒரு வகை எஞ்சின்

cameo : புடைசெதுக்கு மணி : உள் வண்ணம் வேற்றுப் பின்னணி வண்ணமாக அமையுமாறு புடைப் புருவாகச் செதுக்கப்பட்ட மணி. பதினெட்டாம் நூற்றாண்டுப் பாணியிலமைந்த நாற்காலிகளில் இதனைக் காணலாம்

camera boom : ஒளிப்பட இயக்கி : ஒளிப்படக் கருவிக்கு இயக்கத் திறனை அளிக்கும் ஒரு சாதனம். இதன்மூலம் ஒளிப்படக்கருவியைக் கீழே இறக்கலாம்; மேலே உயர்த்தலாம்; இடப்பக்கம், வலப்பக்கம் நகர்த்தலாம். ஒரு சக்கர அடித்தளத்தின் மீது இதனை இயக்கலாம். இதனை பளுதூக்கி என்றும் கூறுவர்

camara tube : ஒளிப்படக் குழல் : தொலைக்காட்சி ஒளிப்படக் கருவிகளில் ஒளியும் நிழலுமான ஒரு காட்சின்ய மின்னியல் தூண்டு விசைகளாக மாற்றுவதற்குப் பயன்படும் மின்னணுவியல் குழல்

campenile : மணிக்கூண்டு : தூய திருக்கோயிலினின்றும் பிரிந்துள்ள மணிக்கூண்டு

camphor : கற்பூரம்/சூடம் : ஒளியுருவான, விரைந்து ஆவியாகக்கூடிய வெண்ணிறப் பிசின், வெடி பொருள்கள், செல்லுலாய்டு, தொற்றுத் தடைமருந்துகள் தயாரிக்கப்படுகிறது

camshaft : (தானி.எந்.) முனைப்புச் சுழல் தண்டு : வரிசையான முனைப்புச் சக்கரங்கள் கொண்ட ஒரு சுழல் தண்டு. இதிலுள்ள முனைப்புச் சக்கரங்கள் உந்துவண்டி எஞ்சின் ஒரதர்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இடைவெளிகளில் அமைந்திருக்கும்

கழல் தண்டு

cam vise : (எந்). முனைப்புக்குறடு : இயக்கத்தின் சக்கரத்தின் சுற்று வட்டம் கடந்த முனைப்பு இயக்கத்தின் மூலம் திறக்கவும் மூடவும் கூடிய ஒருவகைப் பற்றுக் குறடு

can : (விண்.) ஏவுகணைக்கலம் : ஏவுகணையை வைப்பதற்குரிய ஒரு காப்பு அல்லது கலம். இதன் மூலம் அதன் சுற்றுச் சூழலைக் கட்டுப்படுத்தலாம்

canard airplane : (வானூ.) கேனார்டு விமானம் : இது ஒருவகை விமானம். இது கிடைநிலை உறுதிப்பாடு உடையது. பிரதான ஆதார மேற்பரப்புகளுக்கு முன்னதாகவுள்ள மேற்பரப்புகளைக் கட்டுப்படுத்துகிறது

cancer : (நோயி) புற்றுநோய் : உடலின் உயிரணுக்களில் ஏற்படும் தாறுமாறான வளர்ச்சி

புற்று நோய்

candelabrum : கொத்து விளக்குத் தண்டு : அழகிய மெழுகுவர்த்திக்கொத்து

candle foot : (மின்.) ஒளிர்வுத் திறன் : ஒளிர்வுத் திறனின் ஓர் அலகு. ஒரு பிரிட்டிஷ் திட்ட அளவு மெழுகுவர்த்தி, ஒர் அடி தூரத்திலிருந்து அளிக்கும் ஒளியின் அளவு

candle mold stake : (உலோ.) மெழுகுதிரி முனை முளை : ஒடுங்கிய காம்புகளுடைய ஒரு அடைகல். இது தகட்டு உலோகத்தில்வளைவுகள் உண்டாக்கப் பயன்படுகிறது

candle power : திரி திறன் : ஒளிரும் பொருள்களின் ஒளிரும் திறனை அளவிடுவதற்குப் பயன்படும் ஒளி அலகுக் கூறு

cane : (மர.வே.) பிரம்பு : இருக்கைகளின் இருக்கைப் பகுதிகளுக்கும், முதுகுப்பகுதிகளுக்கும் பயன்படும் நெகிழ் திறமுடைய மெல்லிய பிரம்பு வகை. இது 18ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது

cannel coal : எரிமூட்டு நிலக்கரி : நிலக்கீலார்ந்த ஒருவகை நிலக்கரி. இது விறகுபோல் எரியக்கூடியது: இது சிறுசிறு கட்டிகளாக விற்பனை செய்யப்படுகிறது

cannon-bone : (உயி.) பாலுண்ணிப் பாத எலும்பு : குதிரைக் காலின் அடிப்பாகத்தில் உள்ள நீண்ட உருண்டைய எலும்பு. இது மனிதனின் கை அல்லது காலின் மத்திய நீண்ட எலும்பை ஒத்ததாகும்

பாலுண்ணிப் பாத எலும்பு

canopy : (க.க) விதானம் : உருவச்சிலை, கல்லறை பலிமேடை, சாவடி ஆகியவற்றின் மேற்கட்டுமானம்

canopy switch : (மின்.) விதானவிசை : ஒரு மின்சார இணைப்பின் விதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய விசை

cant : (மர.வே.) சாய்தளக் கட்டை : சாய்தளமாக அமைக்கப்படட ஒரு கட்டை. சாய்தளங்களையும், வளைவுகளின்றி கோணங்களையும் கொண்ட ஒரு வார்ப்படத்தையும் குறிக்கும்

canteen : (மர.வே.) உணவுக் கலப் பேழை : சிற்றுண்டிச் சாலைகளில் உணவுக் கலங்களை வைப்பதற்குரிய அறைகளுடைய பேழை அல்லது பெட்டி

வெட்டுக் கருவிகளை வைப்பதற்குரிய ஒரு பெட்டியையும் இது குறிக்கும்

cant hook : இரும்புக் கொக்கி : வெட்டு மரங்களை உருட்ட உதவும் நீண்ட கைக்கோலின் நுனியிலுள்ள இரும்புக் கொக்கி. தொலைபேசிக் கம்பங்களை உருட்டுவதற்கு இது பயன்படுகிறது

கொக்கி

cantilever : பிடிமானம் : சுவர் களிலிருந்து கைபோல் நீண்டு பாரத்தினைத் தாங்கும் வகை

பிடிமானம்

cantilever spring : (தானி;எந்.) பிடிமான விற்கருள் : ஒரு முனை அச்சுடன் பொருத்தப்பட்டு மறுமுனை சட்டகத்துடன் பொருத்தப்பட்டுள்ள ஒரு விற்கூருள்

canting strip : (க.க.) சாய்வுப் பாட்டை : கட்டிடத்திலிருந்து நீரை வெளியேற்றுவதற்கு உள்ள சுவர்த் தளவரி போன்ற ஓர் அமைப்பு

cap : (க.க.) முகடு : ஒரு சுவரின் முகட்டுக் கவிகை, கட்டிட உச்சியின் சிற்ப வேலைப்பாடு அமைந்த பிதுக்கம்; வாயில் பலகணி ஆகியவற்றின் மேற்கட்டை திருகாணி அல்லது மறையாணிகளின் அடிப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள சுழல் தண்டு தாங்கிகளின் மேற்கூம்பு

அச்சுக்கலையில் பெரிய தலைப்பெழுத்தைக் குறிக்கும் சொல்

capacitance : (மின்.) கொண்மம் : மின் தகையாற்றலுக்கும் அழுத்தத் திற்கும் உள்ள வீத அளவு

capacitive (மின்.) : கொண்ம எதிர் வினைப்பு : ஒரு கொண்மியின் வழியாகச் செல்லும் மாற்று மின்னோட்டத்திற்கும் தடைக்கும் உள்ள வீத அளவு

capacity : (மின்.) கொண்மைத் திறன் : மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம். இதனை 'நிலை மின்னியல் கொண்மைத் திறன்' என்றும் கூறுவர்

capacitor : (மின்னி.) கொண்மி : மின்னியல் உறைகலம். இது கொண்மம் உடையது; ஒர் எளிய கொண்மியில், மின் காப்பினால் பிரிக்கப்படும் இரு உலோகத் தகடுகள் அடங்கியிருக்கும்

capacitor input filter : (மின்.) கொண்மி உட்பாட்டு வடிப்பான் : தனது உட்பாட்டுச்கு ஒரு கொண்மியைப் பயன்படுத்தும் ஒரு வடிப்பான்

capacitor motor : (மின்.) கொண்மி மின்னோடி : பிளவு நிலை மின்னோடியின் ஒரு திருத்தப் பட்ட வடிவம். இதில் ஒரு தொடர் கொண்மிகள் பயன்படுத்தப்படுகின்றன

capacity load : மின்னோட்ட அளவு : மின்விசை ஆக்கப் பொறியால் குறித்த காலத்தில் பாதுகாப்பாக வெளியேற்றப்படும் மின்னோட்டத்தின் அளவு

cape chisel : ( உலோ .வே.) சீற்றுளி : வரிப் பள்ளங்கள் அல்லது சாவிழிகள் வெட்டுவதற்குப் பயன்படும் குறுகிய அலகுள்ள சிற்றுளி

cape kennedy : (விண்.) கென்னடி முனை : அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரையிலுள்ள முனை. இங்கு ஏவுகணைகளையும் விண் வெளிக்கலங்களையும் செலுத்துவ தற்கான விமானப்படைச் சோதனை மையம் உள்ளது. இதன் முந்தையப் பெயர் கேனவரால் முனை. முன்னாள் குடியரசுத் தலைவர் கென்னடியின் நினைவாகக் கென்னடி முனை என்று பெயர் சூட்டப்பட்டது

capillarity : (குளி.) நுண்புழை ஈர்ப்பாற்றல் : மயிரிழை போன்ற நுண்துளையின் ஈர்ப்பொறிவாற்றல்

capillary attraction : (குளி.) நுண்துளை ஈர்ப்பாற்றல்

capillary repulsion : (S smfl.) நுண்துளை எறிவாற்றல்

capillary action : (வேதி.) நுண்துளை வினை : மயிரிழை போன்ற நுண்ணிய குழாய்களின் வழியே திரவங்கள் செல்லும்போது ஏற்ற இறக்கத்தை உண்டாக்குகிற ஒட்டிணைப்பு மேற்பரப்பு விறைப்புக் கூட்டு வினைவாக்கம்

capillary tube : (குளி.) நுண்புழைக் குழல் : குளிரால் உறைபதனம் ஊட்டும் பொருள் பாய்வதைக் கட்டுப் படுத்தப் பயன்படும் சிறிய விட்ட முடைய குழல்

capital : (க.க.) தூண் தலைப்பு : அலைமேடை, சதுரத் தூண் அல்லது தூபியின் உச்சிப் பகுதி

capping : (மர.வே.) மூடுகை : வலைப்பாடமைந்த மரத்தின் மொந்தைப் பகுதியில் முடியிடல் அல்லது தொப்பியிடல்

cap screw : தலையணித் திருகாணி : ஒரு சுரையுடனோ சுரையின்றியோ பயன்படுத்தப்படும் முடிவாக்கம் செய்யப்பட்ட எந்திரமரையாணி

capstan : (மின்.) தோல் பட்டை இயக்கி : தோல் பட்டையை இயக்கப் பயன்படும் ஒரு சக்கரம் அல்லது பீப்பாய்

cap stone : (க.க.) தலையணிக்கல் : ஒரு கட்டுமானத்திற்கு தலையணியாக அல்லது மணிமுடியாகப் பயன்படுத்தப்படும் கல்

cap strip : (வானூ.) தலையணி சிம்பு : ஒர் இறகின் ஆதாரப் பட்டி கையின் புறவிவளிம்பிலுள்ள தொடர்ச்சியான உறுப்பு

capsule : (விண்.) விண்வெளிக் கூண்டு : விண்வெளியில் சுற்றி வருவதற்குச் செலுத்தப்படும் கலத்தில் மனிதர் அல்லது விலங்கு இருப்பதற்கு ஏற்ற சூழலுடன் அமைக்கப்பட்டிருக்கும் கூண்டு வடிவக் கொள்கலம்

caption : (அச்சு.) தலைப்பு : ஒர் அத்தியாயத்தின் அல்லது கட்டுரையின் மேலுள்ள தலைப்பு

captive balloon : (வானூ.) கட்டப்பட்ட ஆவிக்கூண்டு : கட்டுப்பாடில்லாமல் பறந்துவிடாதபடி பூமியுடன் ஒரு வடத்தினால் பிணைக்கப்பட்ட ஒர் ஆவிக் கூண்டு

captive firing : (விண்.) சோதனை வெடிப்பு : ஒரு முழு ஏவுகணையைச் சோதனை முறையில் வெடித்துப் பார்த்தல். இந்தச் சோதனை வெடிப்பின்போது உந்து விசையமைப்பு முழுமையாக இயங்குகிறதா எனச் சோதித்துப்பார்க்கப்படுகிறது

carat : மாற்று : ஏறத்தாழ 3.2 குன்றிமணி நிறையுள்ள மணிக்கல் எடை

carbide tools : கார்பைடு கருவிகள் : ஆதாரத்திற்காக எஃகுத் தண்டிலுள் செருகப்பட்ட கார்பைடு முனைகளைக் கொண்ட கருவிகள். இவை உலோகவேலைப் பாடுகளுக்குப் பயன்படுபவை

carbohydrate : (Gag.) கார்போஹைட்ரேட் : கார்பன் ஹைட்ரஜன், ஆக்சிஜன் அடங்கிய ஒரு கூட்டுப்பொருள். இதில் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் 2:1 என்ற விகிதத்தில் அடங்கியிருக்கும். முக்கியமான கார்போஹைட்ரேட்டுகளில் கார்பனின் அணுக்கள் அல்லது அணுக்களின் மடங்குகள் அடங்கியிருக்கும்

carbolic acid : (வேதி.) கார்பாலிக் அமிலம் : இதனை ஃபினால் என்றும் அழைப்ப்ர். கீலெண்ணெய் வடிப்பினின்று எடுக்கப்படும் இந்த நச்சுப் பொருள் தொற்றொழிப்புப் பொருளாகப் பயன்படுகிறது

carbon : (வேதி.) கார்பன் (கரியம்) :(1) கரிமப் பொருள்கள் அனைத்திலும் காணப்படும் உலோகத் தனிமம் (C) (2) விளக்கு என்னும் மின்விளக்கில் பயன்படும் சரிமுனைக்கோல்

(3) கனற்சியில் திடத் தனிமமாக இருக்கும் தனிமம்

carbon arc : (மின்.) கார்பன் சுடர் : சுடர் விளக்குச் செயல் முறையில் உள்ளது போன்று இரு கார்பன் துருவங்களுக்கிடையில் தோன்றும் ஒளிவட்ட்ப் பகுதி. இதில் ஒரு கார்பன் மின்முனை அல்லது காரீயக மின்முனை நிரப்பு உலோகத்துடனோ இல்லாமலோ பயன்படுத்தப்படுகிறது

carbon black : கார்பன் மை : இயற்கை வாயுப் பிழம்பிலிருந்து படியும் அடர் கறுப்பு மை

carbon brush : (மின்.) கார்பன் தூரிகை : பார்க்க தூரிகை

carbon button : (மின்.) கார்பன் பொத்தான் : கார்பனால் செய்யப்படும் ஒரு பொத்தான். சிலவகைத் தொலைபேசிச் செலுத்திகளிலும், சிலவகைத் தடை மாற்றிகளிலும் தடை ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது

carbon contact : (மின்.) கார்பன் தொடு முனைகள் : பார்க்க தொடு மனைகள்

carbon deposit : (தானி.} கார்பன் படிவு : உந்து வண்டிகளில் உள்ளெரி அறையிலும், சில சமயம் ஒரதர்களையும். உந்து தண்டு வளையங்களையும் சுற்றிப் படியும் கார்பன். இது தரக்குறைவான பெட்ரோல், உராய்வு எண்ணெய் ஆகியவற்றினால் உண்டாகிறது

carbon di-oxide : (வேதி.) கார்பன் பன்டையாக்சைடு : (CO2) கார்பன் எரிபொருள்கள் முழுமையாக உள்ளெரிவதால் உண்டாகும் பொருள். இது திரவவடிவில் எஃகு நீள் உருளைகளில் கொண்டு செல்லப்படுகிறது. தீயணைப்புக்கு வாயு வடிவிலும், உலர் பனிக்கட்டி என்ற வகையில் திடவடிவிலும் பயன்படுகிறது

carbon disulphide : (வேதி.) கார்பன் டைசல்பைடு : (CS2) தூய்மையாக இருக்கும்போது இது நிற மற்ற திர்வம்; விரைவில் ஆவியாகக் கூடியது; வெள்ளைப்பூண்டு போன்ற கார்நெடியுடையது. கந்தகம், பாஸ்வரம், அயோடின், சோரிகை. கோந்து, பிசின், மெழுகு, கொழுப்பு முதலியவற்றைக் கரைப்பதற்கான கரைப்பானாகப் பயன்படுகிறது. கார்பன் பைசல்பைடு போன்றது

carbon filament : (மின்.) கார்பன் இழை : வெண்சுடர் வீசி எரிகிற விளக்கின் இழை. இது கார்பனாக்கப்பட்ட ஒரு சரடு அல்லது இழையிலானது

carbon holder : (மின்.) கார்பன் பிடிப்பான் : ஒரு சுடர் விளக்கில் கார்பன்களைப்பிடித்துக்கொண்டு உளட்டுவ கற்கான ஒரு சாதனம்

carbonization : கார்பனாக்கம் : தரங் குறைந்த கார்பன் எஃகினை வெப்பப் பதனாக்கத்திற்காக ஆக்கமைவு செய்தல். இதில், மரக்கரி, அல்லது இதற்கெனத் தயாரிக்கப் பட்ட ஒரு வாணிகப் பொருள் போன்ற கார்பனாக்கப் பொருளுடன் ஒரு கொள்கலத்தில் தரங் குறைந்த கார்பன் எஃகினைப்பொதித்து வைத்து அதனைப் பல மணி நேரம் வரை 2000° ஃபா. வரைச் சூடாக்கி, பின்னர் அதனை மிக மெதுவாகக் குளிர வைக்கப்படுகிறது

carbonizing : (மின். பொறி.) கார்பனாக்குதல் : ஒரு பொருளை ஒரு முடிய கலத்தினுள் இட்டுத் விரமாகச் சூடாக்குதல் மூலம் அதனை கார்பனாக ஆக்குதல்

carbon monoxide : (வேதி.) கார்பன் மோனாக்சைடு. இது நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற ஒரு வாயு கொடிய நச்சுத் தன்மை வாய்ந்தது. கார்பன் எரிபொருள்களின் முழுமையற்ற உள்ளெரிவால் இந்த வாயு உண்டாகிறது

carbon paper : படிவுத் தாள் : மெழுகையும் கார்பனையும் சேர்த்து கலவை பூசப்பட்ட, படியெடுக்க உதவும் மெல்லிய தாள்

carbon piles : (மின்.) கார்பன் மின் நிரைகள் : மின்னோட்டம் விளைவிப்பதற்கான வகை மாறி அடுக்கி வைக்கப்படும் கார்பனாலான தகடுகளின் நிரை. இவை மிக அதிக மின்னிறக்கச்சோதனை தொகுதியில் தடை அலகுகளாகப் பயன்படுகிறது

Carbon remover : (தானி.) கார்பன் அகற்றி : கையினால் பயன் படுத்துவதற்கு அல்லது பொறியமைவில் பயன்படுத்துவதற்குப் பயன்படும் உரசித் தேய்த்து அகற்றும் ஒரு கருவி; கார்பன் படிவுகளை அகற்றுவதற்கு பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்தப்படும் ஒரு திரவம்

Carbon "rheostat : (மின்.) கார்பன் தடைமாற்றி : தடையாகச் செயற்படும் கார்பன் தகடுகளைப் பயன்படுத்தும் ஒரு தடைமாற்றி

Carbon steel : கார்பன் எஃகு : அதிவேக எஃகு அல்லது உலோகக் கலவை. எஃகு அல்லாத பிற கருவி எஃகுகளைக் குறிக்கும் சொல். 50 புள்ளி கார்பனுக்குக் கீழ்ப் பட்ட இது கடினப்படவில்லை என்றால், அது குறைந்த கார்பன் எஃகு என்று அழைக்கப்படும். 75 புள்ளி கார்பனால் கடினமாக்க முடியும். எனினும், சிறந்த கார்பன் எஃகில் சுமார் 100 புள்ளி கார்பன் அடங்கியிருக்கும்

Carbon tetrachloride : (வேதி.) கார்பன் டெட்ராகுளோரைடு : இது எளிதில் தீப்பற்றாத ஒரு திரவம். துப்புரவு செய்யும் பணிகளில் எண்ணெய், பிசுக்கு போன்றவற்றைக் கரைப்பதற்கு ஒரு கரைப்பானா கப் பயன்படுத்தப்படுகிறது. பல வகைத்தீயணைப்புக் கருவிகளிலும் தீயணைப்புப் பொருளாகவும் பயன்படுகிறது

Carborundum : தோசைக் கல் : சிலிக்கன் கார்பைடு போன்ற உராய்வுப் பொருள்களைக் குறிக்குல் ஒரு வாணிகப் பொருள்

Carboy : (வேதி.) கண்ணாடிப் புட்டி : மூங்கிற்கூடை அன்னப்புடைய பெரிய உருண்டைக் கண்ணாடிப் புட்டி. இது அமிலங்களின் கொள்கலமாகப் பயன்படுகிறது. இதனை ஒரு மரப்பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்

Carburetor : (தானி; எந்.) ஏரிவளி கலப்பி : உள் வெப்பாலையில் எரி பொருளாவியோடு காற்றைக் கலக்கச் செய்யும் அமைவு

எரி வளி கலப்பி

carburetor barrel : (தானி; எந்.) எரி-வளி கலப்பி உருளை : எரி-வளி கலப்பியில் உறிஞ்சும் காற்றறையைச் சுற்றியிருக்கும் உலோகப் பகுதி. அடைப்பானிலிருந்து விளிம்புப் பட்டைக்குச் செல்லும்பாதை முழுவதற்கும் ஒரு சுவராக அல்லது உருளையாக அமைந்திருக்கும்

Carburetor bowl : (தானி; எந்) எரி-வளி கலப்பிக்கலம் : எரி-வளி கலப்பியில் திரவ பெட்ரோலை அல்லது எரிபொருளைத் தேக்கி வைத்திருக்கும் கொள்சலப்பகுதி Carburetor float : (தானி. எந்.) : எரி-வளி கலப்பி மிதவை . இது காற்றுப் புகாத ஒரு உலோகக் கொள்கலம். இது எரி-வளி கலப்பிக் கலத்தில் எரிபொருளின் மீது மிதந்து கொண்டிருக்கும். இது பிரதான எரிபொருள் குழாயிலிருந்து பெட்ரோல் பாய்வதைக் கட்டுப்படுத்துகிறது

Carburizing : ஏரி-வளி : இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளை, கார்பன் போன்ற பொருள்களுடன் இணைத்து உருகுநிலைக்குக் கீழே சூடாக்குவதன் மூலம் கார்பனுடன் இணைத்தல்

Carburizing flame : ஏரி-வளி கலப்புப் பிழம்பு : வாயுப் பற்ற வைப்புப் பிழம்பு. இதில் நடு நிலைப் பிழம்பினை உண்டாக்குவதற்குத் தேவைப்படுவதைவிட அதிகமான கரிய எரி வாயு அடங்கியிருக்கும்

Car card : கார் விளம்பரம் : கார்கள், பேருந்துகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படும் விளம்பரங்கள்

carcase : கார் சட்டம் : வீடு கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம்

carcinogen : (நோயி.) புற்றுத் தூண்டு பொருள் : புற்று நோய் வளரத் தூண்டுதல் செய்யும் பொருள்

Carcinoma : (நோயி.) எலும்புத் தசைப் புற்று : எலும்புத்தசை, உயிரணுக்கள், உள்ளுறுப்புகள் ஆகியவற்றில் உண்டாகும் புற்று நோய், இதில் சுற்றுப்புறத் திசுக்களைப் புறத்தே தள்ளிவிட்டு, அதில் புற்று தானே வளர்கிறது. இதனால் தாறுமாறான தசை வளர்ச்சி உண்டாகிறது

cardboard : (அச்சு.) தாள் அட்டை : தரங்குறைந்த கனத்த தாள் முதல் சீட்டுகள் வெட்டி எடுப்பதற்கான கெட்டித்தாள் வரைப் பல்வேறு கனத்த விறைப்பான காகித அட்டைகளைக் குறிக்கும் சொல்

card compass : (வானூ.) முகப்புத் திசைகாட்டி : ஒருவகை காந்தத் திசைகாட்டி. இதில், சுழல் முளை மீது திருகி இயங்கும் அட்டையுடன் இணைந்த ஒரு காந்தத் திசை காட்டி. இந்த அட்டைகளில் திசைகள் குறிக்கப்பட்டிருக்கும்

card-cut : முகப்புச் சித்திரைவேலை : சீன பாணியிலான் ஒருவகை பின்னல் வேலைப்பாட்டமைப்பு

carding : சிக்கெடுப்பு : சணல் கம்பளி இழைகளை நூற்பதற்கு முன்னர் அவற்றிலுள்ள சிக்கினை எடுத்து ஆயத்தம் செய்தல்

cardioid : (மின்.) நெஞ்சுப்பை வளைவு : நெஞ்சுப்பை வடிவான விளைவு

Carnot’s cycle : கார்னாட் சுழற்சி : துல்லியமான பொறிச் சுழற்சி ஆல்லது தொடர் வெப்ப மாறுதல். இந்த முறையினை கார்னாட் என்ற ஃபிரெஞ்சு விஞ்ஞானி கண்டுபிடித்தார்

Carnot's principle : (இயற்.) கார்னாட் தத்துவம் : ஒர் அனல் பொறியினால் செய்யப்பட்ட வேலையின் அளவு, அதன் வெப்ப அளவை மட்டுமே பொறுத்தது. இது பயன்படுத்தப்படும் இடைக்காரகியின் சார்பற்றது

Carotid artery : (உட.) தலைத் தமனி : தலைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் இருபெரும் தமனிகளில் ஒன்று

Carpentry : தச்சு வேலை : கட்டிடங்கள், படகுகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுவது போன்ற வெட்டு மரங்களை வெட்டி ஒருங்கிணைக்கும் வேலைப்பாடு

Carpet strip : (க.க.) தலப்பட்டை : கதவுக்கு அடியில் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு நீள்வரிப்பட்டை

carriage : (க.க.) தாங்கு சட்டம் : மரப்படிக்கட்டின் படிகளைத் தாங்கி நிற்கும் மரச்சட்டம் அல்லது எஃகுத் துலாக் கட்டை. கடைவானிலுள்ள ஏந்தி என்ற பகுதி. இது பொறியின் சுழலும் பகுதிகளிலுள்ள உராய்வு தாங்கி உருளைகளின் தொகுதிக்கும், இறுதித் தொகுதிக்குமிடையே நகர்கிறது. இதனைக் குறுக்காகவும் நெடுக்காகவும் நகருமாறு கட்டுப்படுத்தலாம்

Carriage bolt : தாங்கு சட்ட மரையாணி : நீள் உருளை வடிவுடைய அல்லது பொத்தான் போன்ற தலையுடைய கறுப்பு மரையாணி.இதன் கழுத்து சதுரமாக இருக்கும். இதனால் மரையாணியை முடுக்கும்போது அது திரும்பிவிடாமல் தடுக்கப்படுகிறது

மரையாணி

Carrier wave : ஊர்தி அலை வரிசை : தொலைக்காட்சி தூண்டு விசைகளை அனுப்புவதற்கான வானொலி அலைவரிசை. தொலைக்காட்சியில், ஒளிக்காகவும், ஒலிக் காகவுமாக இரண்டு அலைவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன

Carron oil : (வேதி.) கலப்பு எண்ணெய் : ஆளிவிதையும் கண்ண நீரும் கலந்த ஒரு கலவுைத் தைலம். இது தீப்புண்களை ஆற்றக் கூடியது

carrying capacity : எற்பளவு : ஒரு மின் கடத்தி மூலம் பாதுகாப்பாக மின்னோட்ட்த்தைச் செலுத்தக்கூடிய மிக அதிக அளவு. இதனை "ஆம்பியர்' என்ற மின்னோட்ட அலகில் குறிப்பர். பல்வேறு வடிவளவுகளிலுள்ள கம்பிகளின் ஏற்பளவுத் திறன் தேசிய மின்னியல் அட்டவணையில் தொகுக்கப்பட்டுள்ளது

carter process : (வேதி.) கார்ட்டர் செய்முறை : அணுவாக்கச் செய்முறை ஒன்றின் மூலம் வெள்ளியம் தயாரிக்கும் முறை. இது பழைய டச்சுச் செய்முறைப்படி தயாரித்த வெள்ளியத்தின் வேதியியல் பண்புகளையே கொண்டிருக்கும்

cartoon : (அச்சு.) வரைபடம் : வண்ணப்படம் எழுததற்கு மாதிரியாகத் தடித்க . தாளில் எழுதப்படும் வரைபடம்

car-touche : (க.க.) சுருல்வலயம் : அரசர் பெயர்களையும் தெய் வப் பெயர்களையும் கொண்டுள்ள நீள்வட்ட வளையம்

cartridge fuse : (மின்.) வெடியுறை உருகி : உருகி வெடிக்கும் போது சுடரைக் கட்டுப்படுத்துதற்காக ஒரு காப்புக் குழலில் அடைத்து வைக்கப்படும் ஓர் உருகி

carving : செதுக்கு வேலைப்பாடு : மரத்தில் அல்லது தந்தத்தில் இழைக்கப்படும் செதுக்குச் சித்திர வேலைப்பாடு

case : புத்தகத்தை மேலட்டை : (1) புத்தகத்தை அச்சிட்டுத் தைத்த பிறகு அதற்குப் போடப்படும் மேலட்டைப்பகுதி

(2) அச்சுக்கலையில் அச்சுப் பொறுக்குத் தட்டு

(3) ஒரு வார்ப்படத்தின் அரைச்சாந்துத் தோரணை case hardening : (நோயி.) கரியகக் கடும்பதப்படுத்தல் : பரப்பில் கரியக மூட்டுவதன் மூலம் இரும்பைக் கடும்பதப்படுத்துதல்

casein : (வேதி.) பால் புரதம் : உறைபாற்கட்டியின் அடிப்படைக் கூறாக அமைந்துள்ள பால் புரதம். காலிக்கோ அச்சிடும் முறையில் பயன்படுகிறது. நீர் வண்ணங்கள், வண்ணமெரு கெண்ணெய்கள், தோல் பதனிடல் முதலியவற்றில் ஒட்டுப் பசையாகப் பயன்படுகிறது

casein plastics : (வேதி.) பால்புரதக் குழைமங்கள் : பால் புரதத்திலும் மற்றப் புரதங்களிலும் உள்ள அடிப்படையான மூலப் பொருள். இது தகடுகளாகவும், சலாகைகளாகவும், குழாய்களாகவும் வட்டுருளைகளாகவும் தயாரிக்கப்படுகிறது. இது பொத்தான்கள், பால் காம்புகள் புதுமைப் பொருள்கள், அணிமணிகள், முதலியன தயாரிக்கப் பயன்படுகிறது

casement window : (க.க.) வடக்குப் பலகணி : உட்புறமாக அல்லது வெளிப்புறமாகத் திறக்கும் வகையில் அமைந்த மடக்குப் பலகணி வெளிப்புறமாகக் காற்று, மழை, வெப்பக் காப்புடையதாக இருக்கும்

case rack : (அச்சு.) அச்சுத்தட்டு அடுக்குச் சட்டம் : அச்சகப் பொறுக்குத் தட்டு வைப்பதற்குப் பயன்படும் ஒர் அடுக்குச் சட்டம்

Casing : (க.க.) கவிகை : ஒரு சன்னலை அல்லது கதவினைச் சுற்றியுள்ள கவிகை அமைப்பு

casket : பேழை : விலையுயர்ந்த பொருள்களை வைப்பதற்குரிய சிறிய பெட்டி அல்லது பெட்டகம்.

casion : (அச்சு.) காஸ்லான் அச்சுருப்படிவம் : வில்லியம் காஸ்லான் என்பவர் உருவாக்கிய அச்சுருப் படிவம்

cassiterite : (உலோ.) காசிட்டரைட் : வெள்ளியம் எடுக்கப்படும் கனிமப் பொருள்

cast : (அச்சு.) வார்ப்பட அச்சு : வார்த்து உருவாக்கப்பட்ட அச்சு உருவம்

cast brass : (உலோ.) வார்ப்புருப் பித்தளை : இது ஒர் உலோகக் கலவை. இதில் 65% செம்பும், 35% துத்தநாகமும் கலந்திருக்கும். கடினததன்மையை அதிகரிப்பதற்காக இது சிறிதளவு சேர்க்கப்படுகிறது

cas'tellated : (பொறி.) அரண்மாடம் போன்ற : அரண்மாளிகை போன்று கோட்டை கொத்தளக் கூட கோபுரங்களையுடைய கட்டமைப்பு

அரண்மாடம் போன்ற அமைப்புடைய ஒரு மரையாணி. இதன் நீளத்தில் ஒரு பகுதி, கடையாணிகளை ஏற்பதற்கு ஏற்றவாறு வளைக்கப்பட்டு, துளை விளிம்பும் அமைக்கப்பட்டிருக்கும்

caster : (தானி:எந்.) சாய்வுப் பொறிப்பு : இருசின் இணைப்புக் கொண்டியின் தலைப்பக்கம் கீழ் முனையின் பின்புறமாக இருக்குமாறு அமைத்து, நூற்புக்கதிரின் உடற்பகுதிக்கு 2o-3o சாய்வாக இருக்குமாறு இருசினை அமைக்கும் விளைவினை இது குறிக்கிறது. இந்த விளைவின் மூலம் முன் சக்கரங்கள். கார் செல்லும் திசையிலேயே ஒருங்கிசைவதற்கு வழி உண்டாகிறது

caster cup : சாய்வுப் பொறிப்புக் குவளை : ஒரு சாய்வு பொறிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி அல்லது மரக்குவளை. இது தளத்தைப் பாழ்படுத்தி விடாமல் தவிர்ப்பதற்காக ஒரு விரிந்த பரப் பளவில் ஒரு அறைகலன் நிற்குமாறு அதன் பளுவைப் பரவலாக்குவதற்கு உதவுகிறது

casting : (வேதி.) வார்ப்பு : களி மண்ணிலிருந்து வார்ப்படங்களில் மட்பாண்டங்கள், செய்யும் முறை. உலோகக் கலையில் திர்வ நிலையிலுள்ள உலோகத்தை வார்ப்படத்தில் ஊற்றி உலோகப் பகுதிகளை உருவாக்குதல். இயைபியக்கத்திற்கு உள்ளாக்கப்பட்ட பிசினைத் திரவ வடிவில் வார்ப்படத்தில் ஊற்றிக் கெட்டியாக்குதல்

casting copper : (உலோ.) வார்ப்புச் செம்பு : இது மின்பகுப்புச் செம்பையும், ஏரிப் படுகையில் கிடைக்கும் செம்பையும் விடத் தரத்தில் குறைந்தது. இது பல்வேறு செம்புக் கனிமங்களிலிருந்தும், பித்தளை வார்ப்படத் தொழிற் சாலைகளில் துணைப் பொருளாகவும் பெறப்படுகிறது

casting off : (அச்சு.) வார்ப்புப் பகுப்பீடு : பக்கங்களாகப் பகுப்பீடு செய்வதை அளவீடு செய்வதற்கான அளவீட்டுமுறை

casting strains : (உலோ.) வார்ப்பு இழுவிசை : வார்ப்படத்தில் குளிர்விக்கும் போது ஏற்படும் சுருக்கத்தால் உண்டாகும் விளைவு

casting up : (அச்சு.) வார்ப்புக் கணிப்பு : அச்சுக்கோப்புக்கான செலவினைத் தீர்மானிப்பதற்காக அச்சுக்கோப்பின் அளவை அளவிடுதல்

cast iron : வார்ப்பிரும்பு : கரிமம், பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதிலும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப் பாட்டுக்கு உதவாத நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை

cast iron boiler : வார்ப்பிரும்புக் கொதிகலன் : வார்ப்பிரும்பினால் கிடைமட்டத்திலோ செங்குத்தாகவோ உருவாக்கப்படும் கொள்கலம். குறைந்த அழுத்த நீராவி அல்லது வெந்நீர் தயாரிக்க இது பயன்படுகிறது. சிறிய வடிவள்விலான கொதிகலன்கள் வட்ட வடிவளவிலான நெருப்பு வைக்கும் கணப்புத் தட்டுடனும், இணைப்புத் தட்டுகளுடனும் இணைக்கப்பட்ட கிடைமட்டப் பகுதியுடனும் தள்ளு காப்புகளுடனும் அமைந்திருக்கும். பெரிய வடிவளவிலானவை பெரும்பாலும் செவ்வக வடிவில் செங்குத்தாக அமைந்திருக்கும், இந்தப் பகுதிகளை நீராவி அல்லது நீர் செல்வதற்கான தள்ளு காம்புகளுடன் உட்புறமாக இணைத்திருப்பார்கள்

cast phenolic resins : (வேதி.) (குழை.) வார்ப்புக் கரியப் பிசின் : கரியகக்காடி, ஃபார்மால்டிஹைடு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகைப் பிசின். இது எளிதில் தீப்பற்றுவதில்லை. இது எந்திரத்தின் உதவியால் எளிதில் வினையாற்றக் கூடியது. இது, சேண அணை துணிகள், அலங்காரப் பொருள்கள், ஒளிரும் வண்ணங்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது

cast resinoids : (குழை.) வார்ப்புப் பிசின் பொருள்கள் : வார்ப்பட முறை மூலமாக உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்கள்

cast steel : (எந்.) வார்ப்பு உருக்கு : வார்ப்பட முறை மூலமாக தேவையான வடிவத்தில் உருவாக்கப்படும் எஃகு

Cat : கோக்காலி : முக்காலி இணைந்த ஒரு கோக்காலி இதில் நெருப்பில் சூடாக்குவதற்காகப் பண்டம் பாத்திரங்களைத் தாங்கும் ஒரு முக்காலி மேற்பகுதியில் அமைந்திருக்கும் Catalpa : (மர.வே.) காட்டால்பா மரம் : நெஞ்சுப்பை போன்ற இலைகளையும், ஊது கொம்பு போன்ற மலர்களையும் உடைய ஒருவகை மரம். இதனை அவரை என்றும், சுருட்டுமரம் என்றும் அழைப்பர். இதன் வெட்டுமரம் மென்மையான்து; சொரசொரப் பானது. ஆயினும், மண்ணுடன் இணைந்திருக்கும் போது நெடு நாட்களுக்கு உழைக்கக்கூடியது. இதனை, கம்பங்கள், ஆதாரக்கட்டைகள் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்

cataract : (நோயி.) கண்புரை நோய் : முதுமை காரணமாகக் கண்ணின் விழித் திரையில் வெண் படலம் ஏற்படுவதால் பார்வை மங்குதல்

catalyst : (வேதி.) வினையூக்கி : தான் எவ்வித மாறுதலோ மாற்றமோ அடையாமல் ஒரு வேதியியல் மாற்றத்தை உண்டாக்குவதற்குத் துணை செய்கிற ஒரு பொருள்

பிளாஸ்டிக்கில் வேதியியல் வினையைத் தூண்டிவிடுகிற ஒரு திரவப் பிசினுடன் அல்லது பிசின் கூட்டுப் பொருளுடன் சேர்க்கப்படும் ஒரு வேதியியல் பொருள். இது மூலக்கூறுகளை ஒருங்கிணைத்து ஒரு சங்கிலி போல் பிணைக்கும். வினை முடிந்ததும் பிசின்

catapult : (வானூ.) எறிவிசைப் பொறி : கப்பல் தளத்திலிருந்து ஆகாய விமானத்தைப் பறக்கச் செய்வதற்கான பொறியமைப்பு

catch basin : நீர்தேக்கக் குழி : சாக்கடையில் கசடு பிரித்து நிறுத்தும் குழியமைவு

catch line : (அச்சு.) கொளுவரி : ஒரு விளம்பரத்தில் பிரதான வரிகளைக் கட்டிப் பிணைப்பதற்குத் தேவையான ஒரு வரி. எனினும் இதில் தேவையற்ற சொற்களும் அடங்கியிருக்கும்

catenary : (கணி.) சங்கிலி வளைவு : செங்குத்துக் கோட்டில் அமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாகத் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நெளிவு

cathead : (எந்.) கேட்ஹெட் : ஒரு சுழல் தண்டுடன் பொருத்தப்பட்டுள்ள ஒருவளையம். குதிகால் இல்லாத அடுக்குத் திருகுகள்மூலம் இந்த வளையம் இணைக்கப்பட்டிருக்கும். இது ஒரு நிலையான ஆதாரத்தினால் வேலைப்பாட்டில் குறி எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது

cathode follower : (மின்.) எதிர் முனைப் பின்னோடி : ஒரு சுற்று வழியல்லாத எதிர்முனை தடுப்பானின் குறுக்காக மின்விசையை எடுத்துச் செல்லும் மின்பெருக்கி

cathode rays : (மின்.) எதிர்மின் கதிர்கள் : மின்வெடி நிகழும் காற்றொழி குழலின் எதிர்மின் வாயிலிருந்து செல்லும் எதிர்மின் ஆற்றல் செறிவற்ற துகள்களின் மின்னோட்டம்

cathode-ray screen : எதிர்மின் கதிர்த் திரை : எதிர்மின் கதிர்க் கொடியைத் திருப்பி ஒளியியக்கத் திரை மீது விழச்செய்ய உதவும் அமைவு

cathod-ray tube : (மின்னி.) எதிர்மின் முனைக் கதிர்க்குழல் : எதிர்மின் கதிர்க் கொடின்யத் திரும்பி ஒளியியக்கத் திரைமீது விழச்செய்யும் ஒரு மின்னணுவியல் குழல்

cation : (மின்.) எதிர்க்குறையணு : ஒரு மின்கலத்தில் எதிர்மின் முனையில் தோன்றும் தனிமம் அல்லது நேர்மின் அயனி catwalk : (வானூ.) ஒடுங்கு பாதை : கட்டிறுக்கமான விண்கலத்தின் அடிக்கட்டை நெடுகிலும் உள்ள ஒடுங்கிய நடை பாதை

cat-whisker : (மின்.) இழைத் தந்தி : கம்பில்லா உருமண் இல் வாங்கிக் கருவியில் வேண்டியவாறு அமைத்துக் கொள்ளக் கூடிய இழைத் தந்தி

caul : (பட்) வளைதண்டு : ஒரு வளைவு மேற்பரப்பு வடிவில் மேலோட்டுப் பலகையாக அமைக்கப் பயன்படும் ஒரு கருவி

caulicuius : (க.க.) தூண் தண்டு : கொரிந்திய பாணியிலுள்ள தூண் தலைப்பில் முதன்மையான தண்டுகளில் ஒன்று

caulking : கீர்காப்புச் செய்தல் : பலகை மூட்டுக்களை நீர்க்காப்புடையதாகச் செய்தல்

நார்க்கயிறு - உருகிய நிலக்கீல் ஆகியவற்றைக் கொண்டு பலகைகளின் சந்திப்பு இடைவெளியை அடைத்து நீர் புகாதவாறு செய்தல்

caustic soda : (வேதி.) கடுங்காராத் தீயதை : (NaOH) சோடியம் ஹைடிராக்சைடு - பஞ்சாலைகளில் தூய்மைப்படுத்துவதற்கும் ஆடைகளைத் துய்மை செய்வதற்கும் பயன்படும் பொருள்

cavetto : (க.க.) குழிவார்ப்பு : கால் வட்ட வடிவமான உட்குவான வார்ப்படம்

cavil : குழிவுச் சம்மட்டி : ஒரு முனை மங்கலாகவும் ஒரு முனை உட்குழிவாகவும் உள்ள ஒரு வகைக் கனமான சம்மட்டி, வடி சுரங்கங்களில் கற்களை வடிவமைப்பதற்குப் பயன்படுகிறது

cavitation : (விண்.) நீர்மக்குமிழ் : மிகக் குறைந்த அழுத்த நிலையில் ஒரு பாயும் திரவத்தில் காற்றுக் குமிழிகள் உண்டாதல்

cavity : (குழை.) உட்குழி : எந்திரத்தைப் பயன்படுத்தி அல்லது பல்வெட்டுச் சக்கரத்தின் மூலம் வார்ப்படத்தில் செய்யப்படும் குழிவுகளின் எண்ணிக்கையிைல் பொறுத்து, "ஒரே உட்குழிவு அல்லது பல் உட்குழிவுகள்" கொண்ட வார்ப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன

cavity resonator : (மின்.) புழை ஒலியதிர்வி : ஒரு குறிப்பிட்ட அலை வெண்ணில் இசைவிப்பு செய்யப்பட்ட மின் சுற்றுவழியாகச் செயற்படும் ஓர் உலோக உட்புழை

cedar chest : தேவதாரு பேழை : வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வடிவளவுகளிலுள்ள ஒரு வகைப் பேழை. இதில் கம்ப்ளி ஆடைகளைப் பல மாதங்கள் கெடாமல் பாதுகாப்பாக வைக்கலாம்

cedilla : (அச்சு.) ஒளிக் குறியீடு : 'சி' (C) என்ற எழுத்தின் கீழ் இடப்படும் ஒலி வேறுபாட்டுக் குறியீடு

ceiling : (வானூ.) விமான மேல் வரம்பு : விமானம் பறக்கக் கூடிய உயரத்தின் எல்லை

ceiling balloon : (வானூ.) மேல் வரம்பு ஆவிக்கூண்டு : சுதந்திரமாக மேலேறிச் செல்லும் சிறிய ஆவிக்கூண்டு. இது மேலேறிச் செல்லும் வேகத்தை அறிந்து கொள்ளலாம். விமானம் பறக்கக் கூடிய உயரத்தின் மேல் எல்லையை இதன் மூலம் அறுதியிடலாம்

ceiling - height indicator : (வானூ.) மேல் வரம்பு உயரங் காட்டுங் கருவி . மேல் முகட்டின் மீது ஒளி நிழல் வடிவங்களைப் படிய வைக்கும் கருவியினால் உண்டாக்கப்பட்ட ஒளிரும் திட்டினை ஒரு குறிப்பிட்ட நிலையிலிருந்து பார்க்கும்போது கிடை நிலையிலிருந்து அந்தத் திட்டின் உயரத்தை அளவிடக்கூடிய ஒரு சாதனம்

ceiling joist : (க.க.) முகட்டுத் தூலக் கட்டை : முகட்டில் தாங்கி நிற்கும் மரத்தினாலான குறுக்குக் கட்டை. இது வரிச்சல், சாந்துக் கலவை போன்றவற்றின் மூலம் முகட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்

ceiling projector : (வானூ.) மேல் வரம்பு ஒளியுருப்படிவக் கருவி : ஒரு மேகக் கூட்டத்தின் அடியிலுள்ள ஒளிரும் மண்டலம் ஒன்றை உண்டாக்கும் ஒர் ஒளியுருப்படிவக் கருவிக்கு மேலே மேகக் கூட்டத்தின் அந்தப் பகுதியின் உயரத்தை நிருணயிப்பதற்கு இது பயன்படுகிறது

celestial guidance : (விண்.) விண்வெளி வழிகாட்டி : விண்ணகப் பொருள்களைப் பொறுத்து ஏவுகணையை அல்லது வேறு கலத்தை வழிகாட்டிச் செலுத்தும் அமைவு

celestial mechanics (விண்.) விண்ணக எந்திரவியல் : ஈர்ப்புப் புலங்களின் பாதிப்பின் கீழ் விண்ணகப் பொருள்களின் இயக்கங்களை ஆராய்தல்

cell : (மின்.) மின்கலம் : மின் ஆற்றல் உண்டாகும் மின்கல அடுக்கில் அல்லது வேதியியற் செயற்பாட்டினை நேர்மாறாகத் தாக்கக்கூடிய மின்கல அடுக்கின் ஒற்றை அலகு

cellar : (க.க.) நிலவறை : ஒரு கட்டிடத்தின் முக்கியப் பகுதிக்கு அடித்தளத்திலுள்ள அறை அல்லது அறைகள். இதில் வெப்ப மூட்டும் சாதனமும் அதன் துணைக் கருவிகளும் வைக்கப்பட்டிருக்கும். பொதுவாகத் தரைமட்டத்திலிருந்து தாழ்ந்த மட்டத்தில் முழுவதுமாக அல்லது பகுதியாக நிலவறை தாழ்ந்திருக்கும்

cellaret : புட்டிப் பெட்டி : புட்டிகள் வைப்பதற்கான ஒரு இழுப்பறைப் பெட்டி

cellophane : (வேதி.) செலோஃபேன் : மரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்கு நிறத்தாள் போன்ற பொதிபொருளின் வாணிக உரிமைப் பெயர்

cellule : (வேதி.) கண்ணறை அல்லது சிற்றறை : ஒரு விமானத்தில், இற்குகளின் கட்டமைப்பு முழுவதும் உடற்பகுதியின் ஒரு புறமுள்ள இறகின் தாங்கணைவும் அமைந்துள்ள பகுதி

cellulith : மரக்கூற்றுப் பொருள் : மரக்கூழை ஒரு சீரான பிண்டமாகத் திரட்டி. பின்னர் அதனை உலரவைப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. இதில் மரத்தில் செய்வது போன்று வேலைப்பாடுகள் செய்யலாம். இது வன்கந்தகத்திற்கு மாற்றுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது

celluloid (வேதி.) செல்லுலாய்டு நெகிழ்பொருள் : தற்பூரத்தையும் பருத்தி இழைமத்தையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலவை நெகிழ்பொருள். மிக எளிதில் தீப்பற்றக் கூடியது

உள் இழைப்பு வேலைப்பாடுகளில் தந்தத்திற்குப் பதிலாகப் பயன்படும் தந்தம் போன்றநெகிழ் பொருள்

cellulose : (வேதி.) செல்லுலோஸ் : செடியினங்களின் மரக்கட்டைகளுக்கும், பருத்தி போன்ற இழை மங்களுக்கும், உயிர்மங்களின் புறத்தோட்டுக்கும் மூலமான பொருள் celulose acetates : (வேதி ;குழை) செல்லுலோஸ் அசிட்டேட் : இது சூட்டால் நிலையாக இறுகிவிடும் தன்மையுடைய ஒரு பிளாஸ்டிக் பொருள். வலிமையும், உரப்பும் இதன் சிறப்பியல்புகள். பல்வேறு வண்ணங்களில் இது கிடைக்கிறது. உந்துகலத்தின் இயக்குச் சக்கரங்கள், அலங்காரப் பொருள்கள், ஊற்றுப் பேனாக்கள், மின் கருவிகள் முதலியன தயாரிக்கப் பயன்படுகிறது. இது மென்மையான உலோகங்களைப் போலவே செயற்படுகிறது

cellulose acetate butyrate : (வேதி;குழை ) செல்லுலோஸ் அசிட்டேட் பூட்டைரேட்டு : செல்லுலோஸ் அசிட்டேட் தயாரிக்கும் அதே செய்முறைப்படி பூட்டைரிக் அமிலத்தையும், அசிட்டிக் அமிலத்தையும், நீர் நீக்கப்பட்ட காடிகளுடன் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த வகைப் பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படும்பொருள்கள் ஈரத்தைக் குறைவாக ஈர்க்கிறது செல்லுலோஸ் அசிட்டேட்டால் செய்த பொருள்களைவிட அதிகமாக வெப்பத்தைத்தாங்கும் திறன் வாய்ந்தவை. கைப்பிடிகள், பெட்டிகள் முதலியன செய்வதற்கான வார்ப்படக் கலவைப் பொருளாகப் பயன்படுகிறது

cellulose nitrate :(வேதி;குழை.) செல்லுலோஸ் நைட்ரேட் : மிகப் பழமையான பிளாஸ்டிக்குகளில் ஒன்று. செல்லுலாயிடு, பைர்லின், அமரித் போன்ற பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. மெருகெண்ணெய்கள்; பசைக் குழம்புகள், சலாகைகள், குழாய்கள், தகடுகள் வடிவில் கிடைக்கும். இது பல்வேறு வண்ணங்களில் பயன்படுகிறது

cellulosic : (குழை.) மரக்கூற்றுத் தன்மையுடையது : இது வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய பிளாஸ்டிக் குடும்பத்தைக் குறிக்கிறது. செல்லுலோஸ் அசிட்டேட் போன்ற பழக்கமான பிளாஸ்டிக்குகள் இந்த வகையைச் சேர்ந்தவை. சிப்பங்கள் கட்டும் பொருளாகப் பெருமளவில் பயன்படுகிறது. தோல் சிப்பங்கட்டுதல், கைவினைக் காகித மேலுறைகள். வார்ப்படக் கொள்கலங்கள் முதலியன தயாரிக்கப் பெருமளவில் பயன்படுகிறது

cell vent : (மின்.) மின்கலப்புழை : மின்கலத்திலுள்ள ஒரு புழைவாய். இது மின்கலத்தில் உண்டாகும் வாயுக்கள் வெளிச் செல்வதற்கு இடமளிக்கிறது

celotex : செலோடெக்ஸ் : கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை இழைம அட்டையின் வாணிகப்பெயர். சுவர் மறைப்பு, மின்காப்பு முதலியவற்றுக்குப் பயன்படுகிறது

celsius scale : செல்சியஸ் அளவை : இது சென்டிகிரேடு அளவையாகும். நூற்றளவையாகப் பகுக்கப் பட்ட நூற்றியல் வெப்பமானியைக் கண்டுபிடித்த ஆண்டர்ஸ் செல்சியஸ் (1701-44) என்பவரின் பெயரில் அழைக்கப்படுகிறது

cement : சிமென்ட் : பொருள்களை ஒட்டவைப்பதற்காக மென் பதமாகப் பயன்படுத்தப்படும் சாந்துப் பொருள். தமிழ் வழக்காகச் "சிமிட்டி" எனவும் அழைக்கப்படுகிறது

cementation steel : (உலோ.) படிக எஃகு : படிக உலையில் தயாரிக்கப்படும் ஒரு வகை எஃகு வெட்டுக் கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதைத் தயாரிக்கச் செலவு அதிகம் பிடிப்பதால் இது மிகக் குறைந்த அளவிலயே பயன்படுத்தப்படுகிறது

cemented carbide tools (எந்.) ஒட்டு கார்பைடுக் கருவிகள் : தூளாக்கிய கார்பைடுகளைக் கடினமான முனையுடன் பற்ற வைத்துத் தயாரிக்கப்படும் கருவிகள். உலோகங்களை விரைவாக வெட்டுவதற்குப்பயன்படுகின்றன

cementing trowel : சாந்துப் பூச்சுச் சட்டுவம் : கொத்தனார்கள் பயன்படுத்தும் சட்டுவக்கரண்டி போன்ற கருவி. இது அதைவிடக் கனமானது

cementite : (பொறி.) சிமென்ட்டைட் : கார்பனுடன் இணைந்திருக்கும் இரும்பு. இது கடினமாவதற்கு முன்பு எஃகில் இருக்கும் இரும்பு போன்றது

Center : மையப்புள்ளி : ஒரு வட்டத்தின் ஆரம் அல்லது ஒரு வட்டரையின் ஆரம் எந்தப் புள்ளியின் வழியாக நகர்ந்து செல்கிறதோ அந்த நிலையான புள்ளி

Center distance : மையத் தொலைவு : (1)ஒருபொறியின் பகுதியிலுள்ள துளைகளின் மையங்களுக்கும், (2) ஒரு சுழல் தண்டின்னத் தாங்கும் தாங்கிகளுக்கும், (3) ஒர் ஒவியத்தின் மையத் கோடுகளுக்கும் இடையிலான தொலைவு

Center drill (எந்.) மையத் தூரப் பணம் : ஒரு குறுகலான துரப் துரப்பணக் கருவி பணம். கடைசல் எந்திரங்களில் மையத்துளையிடும் பணிக்குப் பயன்படுகிறது. மையத் துரப் பணம் ஒரு திருகாணித் தலைப்புடன் சேர்த்துச் செய்யப்படுகிறது. இது ஒரே கருவி மூலம் இரண்டு வேலைகளைச் செய்ய உதவுகிறது

தூர்ப்பணக் கருவி

Centered : (அச்சு.) மையம் வைத்தல் : அச்சுக்கோத்த ஒரு வரியின்மை இருபுறமும் சம அளவு இடைவெளி இருக்குமாறு மையத்தில் வைத்து அமைத்தல்

center frequency : (மின்னி.) மைய அலைவெண் : அலைவெண் மாற்ற ஒலிபரப்பு நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைவெண், அலைவெண் மாற்றத்தில் மாறாத ஊர்தியின் அலைவெண்

center gauge : மைய அளவு கருவி : ஒரு தட்டையான அளவு கருவி, இது 'V' வடிவ திருகிழைகளை வெட்டுவதற்கும் ஒரு கருவியை அமைப்பதற்கும் பயன்படுகிறது

Center head : (எந்.) மையக் கொண்டை : ஏதேனும் உருண்டையான பொருளின் மையத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஒர் அளவு கோலுடன் அல்லது ஒர் அலகுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு சாதனம்

Centering : (க.க) பொருத்துச் சட்டம் : மேல் வளைவு அல்லது கவிகையோடு கட்டும்போது பயன் படுத்தப்படும் தற்காலிகமான பொருத்துச் சட்டம்

Centering work : (எந்.) மையக் குறியீடு : கடைசல் கருவியில் கடைசல் பணி செய்வதற்காக ஒரு பொருளின் மையப் புள்ளியைத் துல்லியமாகக் கண்டுபிடித்தல், உருளைகளின் மையப் புள்ளியைக் கண்டுபிடிக்க முரண் விட்டமானியைப் பயன்படுத்தலாம்

centerless grinding : (எந்.) மைய மிலாச்சாணை : அதிவேகமாக இயங்கும் ஒரு சாணைச் சக்கரம், எதிர்மாறான திசையில் மெதுவாக நகர்கின்ற அமைப் பினையுடைய ஒரு பொறியினால் இது நடைபெறுகிறது. இரு சக்கரங்களுக்குமிடையிலான இடுக்கமான பகுதியில், இந்த வேலைப்பாட்டுக்கான ஆதாரம் அமைந்திருக்கிறது Center line : (வரை.) மையக் கோடு : ஒரு பொருளின் மையத்தைக் குறிக்கின்ற புள்ளிகளும், சிறு சிறு கோடுகளும் கொண்ட ஒரு கோடு

center of altraction : கவர்ச்சி மையம்

Center of buoyancy : (வானூ.) ஈர்ப்பு மையம் : மிதக்கும் பொருளால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீர்மத்தின் ஈர்ப்பு மையம்

center of gravity : புவியீர்ப்பு மையம் : ஒரு பொருளை ஒத்த ஒரு நிலையிலும் சம நிலையிலும் வைக்கக் கூடிய புள்ளி

center of inertia / centre of mass : பொருண்மை மையம்

center of percussion : தாங்குதள மையம்

center of pressure : (வானூ.) அழுத்த மையக் குணகம் : விமானச்சிறகின் முன் விளிம்பிலிருந்து அழுத்த மையத்தின் தொலைவுக்கும் நாண் நீளத்திற்குமிடையிலான விகிதம்

center of pressure of an air foil section : (வானு.) விமானக் காற்றழுத்தத் தளத்தின் அழுத்த மையம் : விமானத்தின் காற்றழுத்தத் தளப்பகுதியின் நாணில் உள்ள ஒரு பகுதி. இந்தப் பகுதி தேவையானால் நீட்டப்பட்டிருக்கும். இந்தப் புள்ளி, நானும், காற்றுச் சக்தி பின்கூட்டு விளைவாக்கத்தின் செயலியக்கக்கோடும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கும்

center piece : (க.க) மைய அணியொப்பனை : மாடியின் மைய அணி ஒப்பனை உறுப்ப

center punch : (உலோ. வே) மையத் தமருசி : இது ஒர் எஃகுத் தமருசி. இது தோல்-உலோகம்-தாள் முதலியவற்றில் துளையிட உதவுகிறது

மையத் தமருசி

center reamer : (பட்.) உலோக மையத் தமருசி : சுழல் தண்டுகள் போன்ற உலோகப் பொருள்களின் மையத்தில் துளையிடுவதற்குப் பயன்படும் உலோகத் தமரூசி அல்லது திருகாணி. இது சாதாரணமாக 60° சாய்வாக இருக்கும். துரப்பண வேலைகளுக்கு இது பெருமளவில் பயன்படுகிறது

தமருசி

center rest : (எந்.) மைய ஆதாரம் : கடைசல் வேலைப்பாடுகளுக்கான ஒர் ஆதாரம். நீண்ட சுழல் தண்டுகள், கதிர்களுக்குத் துளையிடுதல் போன்ற பணிகளில் பயன்படுத்தப்படுகிறது

centers : (எந்.) ஊடச்சுகள் : கடைசல் எந்திரங்களிலுள்ள கூம்பு வடிவ முனைகளையுடைய அச்சுகள். இதில் கடைசல் வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருள்களை தாங்கி நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்

center section : (வானூ.) மையப்பகுதி : தொடர்ச்சியான இறகினைக் கொண்டிருக்கும் விமானத்தில், சிறகின் மைய ஆயம்; மைய ஆயம் இல்லையெனில் ஏதேனும் இறகு மையப் பகுதியின் வரம்புகிள், இணைப்புப் புள்ளிகள், உடற் பகுதியிலிருது உள்ள தூரத்தைப் பொறுத்து நிருணயிக்கப்படுகிறது

centering control : குவிமையக் கட்டுப்பாடு : தொலைக்காட்சியில் செங்குத்தாக அல்லது கிடைமட்டத்தில் படத்தை குவிமையத்தில் வைக்கும் கட்டுப்பாடு

center square : (உலோ, வே.) மைய அளவி : ஒரு வட்டத்தின் மையத்தை அல்லது ஒரு வட்டத்தின் வில்லின் மையத்தைக் கண்டு பிடிக்கப் பயன்படும் ஒரு கருவி. கடைசல் செய்யப்பட வேண்டிய ஒரு சுழல் தண்டின் அல்லது நீள் உருளையின் முனையின் மையப் புள்ளியைக் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது

centre of suspension : தொங்கல் மையம்

center table : (மர, வே.) மைய மேசை : ஓர் அறையின் மையத்தில் வைப்பதற்கு ஏற்ற வகையில் எல்லாப் பக்கங்களிலும் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு மேசை

centigrade scale : சென்டிகிரேட் அளவை : நீர் உறைநிலை ௦ பாகையாகவும், கொதிநிலை 100 பாகையாகவும் வகுக்கப்பட்டுள்ள வெப்ப மானி. அமெரிக்காவில் முக்கியமாக அறிவியல் பணிகளுக்காகப் பயன்படுகிறது

centimeter : சென்டிகிரேட் : மெட்ரிக் முறையில் குறைந்த நீள அலகுஃபிரெஞ்சு நாட்டின் நீட்டல் அளவையில் நூற்றில் ஒரு கூறு. 0.3937 அங்குல நீளம்

central station : (மின்.) மைய மின் நிலையம் : மின்னொளி வழங்கப்படும் ஒரு மின்னாக்க நிலையம். இங்கிருந்து நுகர்வோருக்கு மின்னொளியும், மின்விசையும் வழங்கப்படுகிறது

centrifugal : (பட்.) மையம் விட்டோடும் விசை : மையமொன்றைச் சுற்றிச் சுழலும் பொருள்களில் மையத்துக்கு எதிர்திசையில் செயற்படும் விசையாற்றல்

centrifugal flow engine : (வானூ.) விரி மையப் பாய்வு எஞ்சின் : மையம் விட்டோடும் அழுத்துப் பொறியையுடைய , சாற்று விசை உருளி எஞ்சின்

centrifugal spark advance : விரிமையச் சுடர்ப்பொறி வளர்ச்சி : உந்துவண்டியில் எஞ்சின் வேகம் மாறுபடுகிறபோது சுடர்ப்பொறி ஏற்றம் பெறுகிற அல்லது குறைகிற அமைவுடைய காலக் கணிப்பான், பகிர்ப்பான், வேகங்காக்கும் விசையமைவு

centrifugal switch : (மின்.) மையம் விலகு இணைப்பு விசை : ஒற்றை நிலைப்பிளவு நிலை மின்னோடியில் பயன்படுத்தப்படும் ஒருவகை இணைப்பு விசை. மின்னோடி இணக்க வேகத்தை எட்டிய பிறகு தொடக்கச் சுருணையை இயக்கி வைக்க இது பயன்படுகிறது

centrifugal type super charger : மையம் விலகு வகை மீவிசைக் காற்றடைப்பான் : விமானத்திலுள்ள மீவிசைக் காற்றடைப்புக் குழாய். இதிலுள்ள ஒன்று அதற்கு மேற் பட்ட அலகுள்ள தூண்டு தட்டங்கள், மையம் விட்டோடும் செயல் மூலமாக, ஒரு தூண்டு கருவியில் காற்றினை அல்லது கலவையை அழுத்திச் செறிவாக்குகிறது

century (அச்சு.) நூற்று முகப்பு அச்செழுத்து : புத்தக வேலையில் பயன்படுத்தப்படும் அச்செழுத்தின் முகப்பு

ceramics : மட்பாண்டத் தொழில் வேட்கோவர் கலை : சுட்ட களி மண்ணிலிருந்து பாண்டங்கள் செய்யும் கலை. அவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களையும் இது குறிக்கிறது

cerasin : (வேதி.) மரப்பிசின் : மர வகைப் பிசினின் கரையாமலிருக்கும் ஒரு பொருள். இது மஞ்சள் அல்லது வெண்ணிறத்தில் மெழுகு போல் இருக்கும். மெழுகுத் திரி மின்காப்பு ஆகியவைகளில் பயன்படும் புதைபடிவ அரக்குப் பொருளைத் துய்மைப்படுத்துவதன் மூலம் இது பெறப்படுகிறது. இது தேன்மெழுகுக்கு மாற்றாகப் பயன்படுகிறது

cerebellum : (உட.) சிறுமூளை : தலையின் பின்பக்கத்தில் உள்ள சிறுமூளை

cerebrum : (உட.) பெரு மூளை : தலையின் முன்பக்கத்திலுள்ள பெரு மூளை

தண்டு வடம்

cerebro - spinal fluid : (உட.) மூளை - முதுகந்தண்டுத் திரவம் : மூளையைச் சுற்றிலும் முதுகத்தண்டிற்குள்ளேயும் உள்ள திரவம்

cerium : சீரியம் : (இயற்.) அணு எண் 58 உள்ள உலோகத் தனிமம்

cerium : (வேதி.) சீரியம் : இது ஒர் உலோகத் தனிமம். அணு எண் 58 உடையது. இதன் வீத எடை மானம் 6.92. இது நிறத்திலும் பளபளப்பிலும் இரும்பை ஒத்தது. ஆனால் மென்மையானது; எளிதில் வளைந்து கொடுக்கக் கூடியது; கம்பியாக இழுத்து நீட்டக் கூடியது. இதனாலான பொருள்கள், சாய வேலையிலும், வாயு ஒளித்திரை வலைகள் செய்வதிலும் சிகரெட்டுப் பற்றப்வைப் பான்கள், எரிவாயுப் பற்றவைப் தண்டு வடம் பான்கள் செய்வதிலும் பயன்படுத்தப்படுகின்றன

Certificate : சான்றிதழ் : சில சாதனைகளில் மெய்ம்மைக்கு அளிக்கப்படும் ஒரு நற்சான்று ஆவணம் அல்லது எழுத்துச் சான்று நற்சான்று ஆவணம் அல்லது நற்சான்றிதழ் வழங்குதல்

cerussite : செருசைட் : (PbCo3) ஓர் ஈயக் கனிம வகை. நிறமற்றதாக அல்லது வெண்மை அல்லது மஞ்சள் நிறத்தில் ஒளி ஊடுருவக் கூடிய படிகங்களாகக் கிடைக்கிறது

cesium : (வேதி.) சீசியம் : வெள்ளி போல் வெண்மையான உலோகத் தனிமம்.ஒளிமின்கலங்களில் பயன்படும் செயலுக்கம் மிகுந்த ஒரு பொருள்

cesspool : (கம்.) வடிகுட்டை : மலக்கழிவின் வண்டல் பிரித்து நீர் உள்வாங்கும் பள்ளம்

cetane rating : சீட்டேன் வீத அறுதி எண் : டீசல் எந்திர எரி பொருளின் எரிபண்பளவைக் கூற்றெண் 30-50 வீத அறுதி எண்னுடைய எரிபொருள்கள் வழ வழப்பற்ற (உராய்வுடைய) டீசல் எரிபொருள்கள் என்றும், 50-80 வீத அறுதி எண்ணுடையவை வழ வழப்பான (உராய்வற்ற) டீசல் எரிபொருள்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன

Chafe : உரசித் தேய்த்தல் : உரசித் தேய்த்துத் தேய்மானம் செய்தல்

Chain drive : (தானி; எந்.) சங்கிலி ஆற்றல் தொடுப்பு : சங்கிலி மூலமான ஆற்றல் தொடுப்பு. இதில் சங்கிலித் தொடர் போன்ற வார்ப் பட்டை மூலம் மின்விசை அனுப்பப்படுகிறது. உந்துவண்டிகளில் சக்கரங்களை இயக்குவதற்கும் இது பயன்படுகிறது

Chain hoist : (பொறி.) சங்கிலி உயர்த்தி : கயிற்றுக்குப் பதிலாகச் சங்கிலியைப் பயன்படுத்தி பாரத்தை மேலே தூக்குவதற்குப் பயன்படும் எந்திரம்

Chain pipe vise : சங்கிலிக் குழர்ய்க் குறடு: எந்திரத்தின் குறடுபோல் புற்றிக்கொள்ளும் ஆலகில் ஒரு கனமான சங்கிலியைப் ப்யன்படுத்திக் குழாயைப் பிணைப்பதற்குரிய இடம் விட்டு இடம் செல்லக்கூடிய ஒரு வகைக் குறடு

Chain pulley : (எந்.) சங்கிலிக் கப்பி : கப்பியில் கயிறு ஓடுவதற்கான பள்ளம் உடைய ஒரு சக்கரம் அல்லது கப்பி, இதில் ஒரு சங்கிலியின் கண்ணிகள் நுழைத்துக் கொள்வதற்கான பள்ளங்கள் இருக்கும்.

Chain riveting : (பொறி.) சங்கிலிப் பிணைப்பு : இரட்டை அல்லது பல வரிசைகளில் ஆணிகளைக் கொண்டு இணைத்தல், அல்லது பிணைத்தல். இதில் குடையாணிகள் ஒன்றுக்கொன்று நேர் எதிராக இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும்

Chain tongs : (கம்.) சங்கிலிப் பற்றுக் குறடுகள் : குழாய் திரும்பி விடாமல் பிடித்துக்கொள்வதற்கு அல்லது குழாயைத் திருப்புவதற்குப் பயன்படும் ஒரு வகைக் குறடு. இது கனமான இரும்புத்தண்டினாலானது. இதன் ஒரு முனையில் கூர்மையான பற்கள் அமைந்திருக்கும். இந்தப் பற்கள் குழாயை இறுகப்பற்றிக் கொள்ளும்

Chain transmission : (எந்.) தொடர் விசையியக்கம் : விசையை அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு முறை. எந்திர உறுப்புகளிடையே விசையுறுப்பின் விசைஏற்று இயங்குறுப்பினை தொடர்ச்சியாக இயங்கச் செய்வதற்குப் பயன்படுகிறது

Chair glide : நாற்காலிக் கவிகை : இதனை ஒலியற்ற கவிகை என்றும் அழைப்பர். இது அறைகலன்களின் காலடியில் மேலுறையாக இறுகலாகச் செருகப்பட்டிருக்கும். இதனால் அறைகலன்களை சத்தமின்றி தரையிலும் விரிப்புகளின் மேலும் நகர்த்தலாம்

Chair rail : (க.க.) சாய்வுக் கம்பியழி : சுவரின் சாந்துக்குச் சேதம் எற்படாதவாறு காப்பதற்காக நாற்காலியின் பின்புற உச்சியின் அளவுக்குசுவரில் இணைக்கப்பட்டுள்ள மரத்தாலான பட்டை அல்லது வார்ப்பட வார்ப்பட்டை

Chaise longue : சாய்விருக்கை : ஒரு புறச்சாய்வு வசதியுள்ள நீளச் சாய்விருக்கை. இது ஃபிரெஞ்சுப் பாணியிலமைந்த் நீள் சாய்விருத்கை. 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் முதன் முதலாக இது தயாரிக்கப்பட்டது. அப்போது இது இருகை நாற்காலிகளையும், ஒரு முத்காலியைக் கொண்ட மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தது

chalcedony : வேன்மணிக்கல் : நீலச்சாயலுடைய வெண்ணிற மணிக்கல் வகை

Chalcocite : (உலோ.) சால்கோசைட் : (Cu2S) இது செப்புக்கனிமம். இது ஒருவகை செப்புச் சல்பைடு

Chalcopyrite : (உலோ.) சால்கோபைரைட் : (CuFeS2) இது ஒரு செம்புக் கலவை வகை. செம்பும் இரும்பும் கலந்த ஒரு மஞ்சள் நிறச்சல்பைடு

Chalk : (கணி.)சீமைச் சுண்ணாம்பு : நுண்ணிய கடல் உயிரிகளின் நுண்துளைகளைக் கொண்ட சிப்பிகளினாலான மென்மையான வெண்சுதைப் பாறை

Chalking : (குழை.)வெண்சுதையாக்கம் : பிளாஸ்டிக் மேற்பரப்புக்களை வெண்சுதை போன்று தோன்றுமாறு செய்தல்

Chalk line : நொடிப்புக் கோட்டு இழை : சுழல் தண்டு, எந்திரம் முதலியவற்றை தரையில் பொருத்துவதற்காகத் தரையில் ஒரு நேர் கோடு போடுவதற்காகப் பயன்படும் வெண்சுதை பூசப்பட்ட ஒரு கம்பித்துண்டு. இதனைத் தரையில் இரு முனைகளுகிடையே விறைப்பாகப் பிடித்துக் கொண்டு இந்தக் கோடு போடப்படுகிறது. இந்தக் கம்பியை நடுவில் பிடித்து ஒரு நொடிப்பு நொடித்துத் தரையில் படிய வைத்தால் தரையில் ஒரு கோடு படியும்

chalk over-lay : அச்சுப் படிவம் : அச்சுப்படியெடுப்பதற்காக அச்சுத் தகடுகளையும், அச்செழுத்துகளையும் ஒரு வழவழப்பான பரப்பில் படிய வைப்பதற்கான ஒர் எந்திரவியல் செய்முறை

Chalk plate : சுண்ணத்தகடு : செய்தியிதழ் பணியில் பயன்படுத்துவதற்காகப் பவளத் தகட்டு அச்சிடுவோரால் வார்த்தெடுக்கப்படும் ஒருவகைத் தகடு

Chamber : உட்புழை : உட்புழையுள்ள ஒரு தோரனி அல்லது வார்ப்படம். ஒரு நீண்ட உள்ளிடம்

Chamber : கண்ணறை : மேல் வளைவுடைய கண்ணறை

chamois leather : மான் தோல் : ஆட்டின் இயல்புடைய ஐரோப்பிய வரை மானின் மென்பதமுடைய தோல்வகை

Chandelle : திடீர்த் திருப்ப ஏற்றம் : விமானம் திடீரெனத் திரும்பி உயரத்தில் ஏறுதல். ஒரே சமயத்தில் திசை திருப்பி உயரத்தில் ஏறுவதற்கு இந்த நுட்பம் பயன்படுத் தப்படுகிறது

Change gears : நிலைமாற்றுப் பல்லிணைகள் : உந்து வண்டியிலுள்ள விசை ஊடிணைப்புச் சாதனம். கடைசல் எந்திரத்தில் திருகின் இழைகளை வெட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பல்லிணைகளின் அமைப்பு. பல்வேறு அளவுப் புரிகள் வெட்டும் வகையில் பல்லிணைகள் அமைக்கப்படுகின்றன

Change over cues : நிலை மாற்று கோல் : திரைப்படச் சுருள் தொடர்ந்து ஓடுமாறு செய்வதற்காக ஒரு திரைப்பட ஒளியுருப் படிவுக் கருவியிலிருந்து மற்றொரு கருவிக்குக் கையினால் மாற்றுவதற்கு உதவியாக இருக்கும் திரைப் படச் சுருளிலுள்ள் தடக் குறிகள்

Channel : (I) கால்வரி : மேற்பரப்பில் பதிக்கப்பட்டுள்ள கால் வரிக்கோடு. வார்ப்படங்களிலும், அறைகலன்களிலும் அலங்கார வேலைப்பாடாகப் பயன்படுத்தப்படுகிறது

(2) அலைவரிசை : வானொலி-தொலைக்காட்சி அலை அடையாளக் குறியீடுகளை இடையீடின்றி அனுப்பத்தகும் அலை இடைவெளிப் பகுதி

Channel iron : கால்வரி இரும்பு : தகட்டுப் பாளங்கள், இதில் ஒரு கால்வரி இரும்பு சுழல்விசிறி அலகும், இரு தட்டையான விளிம்புகளும் அடங்கியிருக்கும். இது ஒரு பக்கம் விட்டுவிடப்பட்ட உட்புழையான சதுரமாக இருக்கும்

Chapel : அச்சு அலுவலகம் : நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம்

Chaplet : அடி தாங்கி : குழாயின் உலோக இடிதாங்கி

Chapter head : அத்தியாயத் தலைப்பு : ஒர் அத்தியாயத்தின் தொடக்கத்திலுள்ள தலைப்பு

Chaptrel : (க.க.) தூண் தலைப்பு : கட்டிடக் கலையில் வளைவினைத் துணின் தலைப்புப் தாங்கும் பகுதி

Characteristic : (எந்.) மடக்கைக் கூறு : ஒரு மடக்கையின் கூறு

Characteristic curve of dynamo (மின்.) மின்னாக்கப் பொறியின் தனிப்பண்பு வளைவு : மின்னாக்கப் பொறியில், மின் வலி அலகுகளும், மின்னோட்ட அலகுகளும் வேகத்திற்கும் வெளியேற்றப்படும் மின்னோட்ட அளவுக்கும் எந்த விகிதத்தில் இருக்கின்றன என்னும் தொடர்பு முறை

ஒர் இயக்கு பொறியில் அதன் வேகத்திற்கும் அதில் ஏற்றப்பட்டுள்ள மின்னோட்ட அளவுக்கு மிடையிலான விகிதத் தொடர்பு ஒரு சோதனை மூலமாக இந்த வளைவு வரையப்பட்டால் இந்த மதிப்புகளைக் கண்டறியலாம்

charcoal : மரக்கரி : தீய்ந்து கரியான மரக்கட்டை

Charcoal iron : (உலோ. வே.) மரக்கரி இரும்பு : மிக உயர்தரமான இரும்பு. இது மரக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி உருக்கி எடுக்கப்படுகிறது. இதில் கந்தகம் கலக்காமல் இருப்பதால் இதன் தரம் மிகுதியானதாகும்

Charge : (மின்.) நிலை மின்னியல் : முறைப்படி மின்னேற்றம் செய்யப்பட்ட ஒரு பொருளில் ஏறியிருக்கிற மின் விசையின் அளவு

Charged cell : மின்னேற்றிய மின்கலம் : இது ஒரு சேமக்கலம், இதில், வேதியியல் முறையில் PbSO4 லிருந்து PbSO2 ஆகவும், எதிர்மின் தகடு PbSO4-லிருந்து Pb ஆகவும் மாறுகிற வரையில் இதில் நேர்மின்னோட்டம் பாய்ந்து கொண்டிருக்கும்

Charging : (மின்.) மின் செறிவூட்டுதல் : ஒரு மின் சேமக்கலத்தில் மின் தகடுகளையும் மின் பகுப்பானையும் வேதியியல் முறையில் மாற்றுகிற செய்முறை

Charging current (மின்.) செறிவூட்டு மின்னோட்டம் : மின்கலத்திற்கு மின்விசைச் செறிவூட்டுவதற்கான வேதியியல் வினையை உண்டாக்குவதற்கு ஒரு மின்சேமக்கலத்தில் செலுத்தப்படும் நேர் மின்னோட்டம்

Charging rate : (மின்.) மின் செறிவூட்ட் வீதம் : ஒரு மின் சேமத்கலத்திற்கு மின்விசைச் செறிவூட்டும் போது அந்தக் கலத்தின் வழியாகப் பர்யும் மின்னோட்டத்தின் வீதம். இது ஆம்பியர்களில் கனக்கிடப்படும்

Charles law : சார்லஸ் விதி : 'கன அளவு ஒரே அளவினதாக இருக்கும்போது, அழுத்தக் குணகம் எல்லா வாயுக்களிலும் ஒரே அளவினதாகவே இருக்கும்' என்னும் விதி

1

————— = 0.00366C.

273

Charring : (பட்.) தீய்த்தல் : ஒரு மேற்பரப்பினை எரித்தல் அல்லது கரியாக்குதல்

Chase : (எந்) (1) இணைப்புச் சட்டம் (2) இழைவெட்டுதல் : மழை திருகாணியின் இழைகளை வெட்டுதல்

(3) வார்ப்படப் பள்ளத்தில் உறுப்புகளை உரிய இடத்தில் பொருத்தி வைப்பதற்கும் சக்கரப் பல் வெட்டுவதில் விரிவடைவதை அல்லது திரிபடைவதைத் தடுப்பதற்கும் ஒரு வார்ப்படப் பள்ளத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை ஒருங்கிணைப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஓர் இணைப்புச் சட்டம்

(4) இரும்புச் சட்டம் : அச்சுக் கலையில் அச்செழுத்துக்களைப் பிணைத்துப் பிடிக்கும் இரும்புச் சட்டம்

chaser : (உலோ.) செதுக்குக் கருவி : வெட்டுக்கருவிகளில் இழைகளைச் செதுக்குவதற்குப் பயன்படும் கருவி

chasing : செதுக்கு வேலைப்பாடு : உலோகத்தில் ஓரம் வெட்டுதல் போன்ற அலங்காரச் செதுக்கு வேலைப்பாடுகளைச் செய்தல்

chasing threads : (எந்.) செதுக்கு இழைகள் : செதுக்குக் கருவி மூலம் இழைகளை வெட்டுதல் தேவையான இடைவெளித் தொலையளவுகள் கொண்ட பல்வேறு பற்களையுடைய ஒரு தட்டையான கருவியாக இது அமைந்திருக்கும்

chassis : (தானி. எந்.)அடிச்சட்டம் : உந்துவண்டியின் உடற் பகுதி தவிர, அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியிருக்கும் அடிச்சட்டம்

chatter : (உலோ.வே.) நறநறப்பு : ஒரு பொறியில் வெட்டும் கருவிகளில் அல்லது பொறியின் உறுப்புகளில் போதிய கட்டிறுக்கம் இல்லாமையால் உண்டாகும் நறநறவெனும் ஒலி

check : சதுரவரைச் சட்டம் : குறுக்கும் நெடுக்குமாகக் கட்டங்கட்டவுமான அமைவுடைய சதுரவரைச் சட்டம்

checker : ஆய்வாளர் : இவர் மிகவும் கவனமாக இருந்து வரை படங்களைப் பிழையில்லாது கண்காணித்து, அவை குறிப்பிட்ட அளவுகளில் அமைந்திருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்தல் வேண்டும். இவர் கவனக் குறைவால் செய்யும் சிறு பிழைகூட பேரிழப்பை ஏற்படுத்திவிடும்

checking of wood : (பட்.) மரப் பிளவு : சீராயிராத பதப்பாடு காரணமாக வெட்டு மரத்தில் உண்டாகும் விரிசல்கள் அல்லது வெடிப்புகள்

check nut : (எந்.) தடுப்பு மரை : மரை கழன்று போகாதவாறு அதன் மேல் இறுக்கமாகத் திருகப்படும் மற்றோர் அமைவு. இதனைப் பூட்டுமரை என்றும் கூறுவர்

check valve : (கம்.) அமைப்பு ஓரதர் : குழாயில் நீர்ப்பின்னோக்கிப் பாயாதவாறு தானாகவே அடைத்துக் கொள்கிற ஒரு வகை ஓரதர்

cheek : (வார்.) நிலையலகு : மூன்று பகுதிகளைக் கொண்ட ஒரு குடுவையின் நடுப்பகுதி

cheltenham : (அச்சு.) செல்டன்ஹாம் அச்செழுத்து : பல்வேறு முகப்புகளிலுள்ள ஒரு வகை அச்செழுத்துகளின் பெயர்.

chemical : (வேதி.) வேதியியல் பொருள் : ஒரு வேதியியல் செய்முறை மூலம் பறப்பட்ட பொருள்.

chemical action : வேதியல் வினை : இது ஒரு வகை வேதியியல் மாற்றம் அல்லது செயல் முறை. இந்த வினையினால் இருக்கும் பொருள் அல்லது பொருள்கள் புதிய பொருளாக அல்லது வேறு பொருள்களாக மாறிவிடும்

chemical change : (வேதி.) வேதியியல் மாற்றம் : ஒரு பொருளின் நற்பண்பினை அடியோடு மாற்றிவிடக்கூடிய ஒரு மாற்றம். எடுத்துக்காட்டு மரக்கரித் துண்டை எரிப்பதால் அது சாம்பலாக மாறிவிடுகிறது

chemical dip brazing : வேதியியல் அமிழ்வு ஒட்டவைப்பு : இதில் குறை நிரப்பு உலோகம் மூட்டிணைப்பில் சேர்க்கப்பட்டு, குழம்பு வேதியியல் பொருளில் அமிழ்த்தி எடுக்கப்படுகிறது

chemical engineer : வேதியல் பொறியாளர் : இவர் ஒரு வேதியியல் தொழிற்சாலைகளை வடிவமைத்து நிறுவுவதும், தொழில் துறை வேதியியலில் ஆராய்ச்சியினையும், பொதுப்பணிக்ளையும் செய்வதும் இவரது பணிகளாகும்

chemical fuel : (விண்.) வேதியியல் எரிபொருள் : உள்ளெரிதலுக்காக ஒர் ஆக்சிகரணியை நம்பியிருக்கும் ஒர் எரிபொருள். திரவ அல்லது திட ராக்கெட் எரி பொருள், தாரை எரிபொருள், உள்ளெரி எஞ்சின் எரிபொருள் இவ்வகையைச் சேர்ந்தவை

chemical metallurgy : (உலோ.) வேதியியல் உலோகவியல் : உலோகங்களை உருக்குவதிலும், சுத்தி கரிப்பதிலும் உலோகக் கலவை தயாரிப்பதிலும் ஏற்படும் வேதியியல் வினைகள் பற்றி ஆராய்தல்

chemically pure : (இயற்.) வேதியியல் செயல்முறையில் தூய்மையான : வேதியியல் செயல்முறைப் பொருள்கள் எதுவும் சிறிதும் இல்லாத முற்றிலும் தூய்மையான பொருள். ஆனால், நடைமுறையில் இது இயல்வதன்று. எனவே, பொதுவாக மிகக் குறைந்த அளவு வேதியியல் மாசுபாடுகள் இருப்பதையே வேதியியல் செயல்முறையில் தூய்மையானது என்கிறோம்

chemical pulp : (உலோ.) வேதியியல் மரக்கூழ் : மரக்கூழைக் குறிக்கும் சொல். அகன்ற இலை மரங்களின் வெட்டு மரங்களிலிருந்து உவர்க்காரச் செய்முறை மூலம் இந்தக்கூழ் தயாரிக்கப்படுகிறது

chemistry : வேதியியல் : பொருள்களின் இயைபின்னயும், அமைப்பு முறையினையும், புதிய பொருள்கள் உண்டாக்கும் பொருள்களில் ஏற்படும் மாறுதல்களையும் ஆராயும் அறிவியல்

chemosphere : (விண்.) வேதியியல் மண்டலம் : மேல் வாயு மண்டலத்தில் ஒளி வேதியியல் வினைகள் நடைபெறும் மண்டலம்

chemotheraphy : (நோயி.) வேதியியல் நோய்ச் சிகிச்சை : நோய் உண்டாக்கும் நுண்மங்களை அழிக்கும் திறனுள்ள வேதியியல் சேர்மத்தைக் கொண்டு நோயைக் குணப் படுத்தும் முறை

chemurgy : ஆக்கப் பொருள் வேதியியல் : வேதியியல் கழிவுப்பொருள்களையும், உழவுத் தொழில் மூலப் பொருள்களையும் தொழிலுக்குப் பயன்படும் புதிய ஆக்கப்பொருள்களாக மாற்றுவதற்குரிய செயல் முறை வேதியியல் பிரிவு

chemille : மென்பட்டிழைக் கச்சை : ஆடைகளின் ஒரக் கரை புனையணியாகப் பயன்படும் மென்பட்டிழைக்கச்சை வகை. அறைகலன் அலங்காரத் துணியாக இது பயன்படுகிறது

chequer : பல வண்ணச் சதுரம் : சதுரங்கப் பலகையில் உள்ளது போல் நிறங்கள் மாறி மாறி வரும் சதுரங்களின் அமைப்பு

cherry : (உலோ.) செர்ரி :(1) ஒரு வகை அமைப்பு வெட்டுக்கருவி. கருவிகள் செய்வதற்கான படிவ அச்சின் அல்லது அது போன்ற கருவியின் உள்முகத்திற்கு மெரு கூட்டுவதற்கு இது பயன்படுகிறது. (2) சிறு கொட்டையுடைய சிவந்த கனி தரும் மரவகை

chestnut : (மர.) செம்புங்கமரம் : செந்தவிட்டு நிறமான கொட்டையுடைய மரம். இது நடுத்தரமான கடினத் தன்மையுடையது. இதன் வெட்டுமரம் சொரசொரப்பாக இருக்கும். மலிவான அறைகலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது chestnut oak : (மர.) செம்புங்கக் கருவாலி : நடுத்தர வடிவளவுடைய மரம். இதன் வெட்டுமரம் கரும்பழுப்பு நிறமுடையதாக வழு வழுப்பாக இருக்கும். நெருக்கமான கரண்களைக் கொண்டிருக்கும். வெண் கருவாலி பயன்படுத்தப் படும் அதே நோக்கங்களுக்கு இதுவும் பயன்படுத்தப்படுகிறது. தோல் பதனிடுவதற்கு இதன் பட்டை பயனாகின்றது

chevron : (க.க.) உத்திரம்/கைம் மரம் : (1) இடம் வலம்ாக அல்லது மேலுங் கீழுமாக வளைந்து செல்லும் அமைப்புடையது. இது ரோமானிய வழிப் பாணிக் கட்டிடக் கலையில் பயன்படுத்தப்பட்டது

(2) வீட்டின் இரண்டு கைம் மரங்கள் உச்சியில் ஒன்று கூடுவதாக காட்டும் அமைவு

chewed : (அச்சு.) அரிமானம் : அச்சுத் தகட்டில் வரிகளில் ஏற்பட்டுள்ள தாறுமாறான விளிம்பு விளைவினைக் குறிக்கும் சொல். இந்த விளைவு, போதிய பாதுகாப்பின்றி அமிலத்தைப் பயன்படுத்துவதால் உண்டாகிறது

chief chemical engineer : தலைமை வேதியியல் பொறியாளர் : வேதியியல் செயல்முறை நுட்பங்களிலும் நிருவாகத்திலும் வல்லுநராகவுள்ள முக்கியமான அலுவலாளர்

chief drafts' man : தலைமை வரைவாளர் : வரைவுப் பணியறைக்கும் நிருவாகத்திற்குமிடையில் ஒரு தொடர்பாளராக விளங்குபவர். வரைவுப் பணியறை திறம்பட இயங்குமாறு பார்த்துக் கொள்வது இவரது பொறுப்பு, இவரது துறையிலுள்ள அனைத்து ஊழியர்களும் இவருடைய நேரடிக் கண்காணிப்பின் கீழ் இருப்பார்கள்

chicken pox : (நோயி.) சின்னம்மை : குழந்தைகளுக்கு ஏற்படும் ஒருவகைத் தொற்றுநோய். இதனால் உடலில் புள்ளிகள் ஏற்படும். இதனைத் தட்டம்மை, பயற்றம்மை என்றும் கூறுவர்

chief engineer : தலைமைப் பொறியாளர் : ஒரு தொழிற்சாலையில், ஒரு தலைமைப் பொறியாளரை கண்காணிப்பாளர் அல்லது பணிமேலாளர் என்று அழைப்பர். தொழிற்சாலையின் கொள்கைகள் சரிவரச் செயற்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து வருவது இவரது பொறுப்பு. மற்ற பொறியாளர்களின் பணிகளைத் திறமையாக இயக்குவதற்கு இவர் போதிய திறமையும் அனுபவமும் உடையவராக இருத்தல் வேண்டும்

chief of party : குழுத்தலைவர் : களப்பணியில் ஈடுபட்டுள்ள குழுவினருக்குப் பொறுப்பாக உள்ள ஒரு பொதுப் பணிப்பொறியாளருக்குப் பொறுப்பானவராக இருப்பார்

chiffonier : (மர.வே.) சிங்கார நிலைப் பெட்டி : கண்ணறைகளும், இழுப்பறைகளும் உள்ள ஒர் அலங்கார்ப் பெட்டி. வண்ண வேலை அடுக்கு மேடை

chil : அச்சுருப்படிவம் : இது ஒரு உலோக அச்சுருப்படிவம். இதில் உருகிய இரும்புக் குழம்பினை ஊற்றிக் கடினமான வார்ப்புருக்கள் செய்யப்படுகின்றன

chilled casting : (எந்.) அச்சுருப் படிவ வார்ப்படம் : இரும்பு அல்லது எஃகு முகப்புடைய வார்ப்படத்தில் செய்யப்பட்ட_வார்ப்பு. இந்த வார்ப்படத்தில் மிக விரைவாகக் குளிரூட்டப்படுவதால், வார்ப் படத்தின் கடினத்தன்மை அதிகரிக்கிறது

chimera : கதம்ப உருவம் : பழம் புராணக் கதைகளுக்குரிய சிங்கத் தின் தலையும், வெள்ளாட்டின் உடலும், பாம்பின் வாலும் உடைய கதம்ப உருவங் கொண்ட வேதாள விலங்கு

chimney : (க.க; பொறி.) புகை போக்கி : அடுப்பிலிருந்து எழும் புகையினை வெளியேற்றுவதறகு மோட்டின் மேலுள்ள மேற்கூடு

chimney breast : (க.க.) புகைபோக்கிச் சாய்குவடு : ஒரு புகை போக்கி அறையினுள் நுழையும் இடத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் சுவரின் பரப்பு. இந்தச் சாய்குவடு பெரும்பாலும் புகைபோக்கியை விட அகலமுடையதாக இருக்கும். இந்த அகலம் அடுப்பங்கறைத் தண்டயப் பலகையை வைப்பதற்கு இடமளிப்பதாக அல்லது அறை பின் தோற்றத்திற்கு அழகூட்டுவதாக அமைந்திருக்கும்

chimney lining : (க.க.) புகைபோக்கிக் குழல் : புகைபோக்கியினுள் புகை வெளிச் செல்வதற்காக உள்ள குழல்

china : பீங்கான் கலம் : பீங்கான் கலங்களைக் குறிக்கும் சொல்

china clay : பீங்கான் களிமண் : மங்கு செய்வதற்கு உதவும் ஒரு வகைக் களிமண். இது மிக நயமான தூள் வடிவில் தூயவெண்ணிறத்தில் இருக்கும். காகிதத்தில் நிரப்புவதற்கும், பூச்சுக் கலவைகள் செய்வதற்கும் இது பயன்படுகிறது

chinoi serie : சீன வேலைப்பாடு : சீன பாணியிலான அலங்கார வேலைப்பாடுகள்

chip : (பட்.) சிம்பு செதுக்கு : சுத்தியல், உளி கொண்டு சிம்புகள் செதுக்குதல்

கடைசல் எந்திரம் போன்ற வற்றிலிருந்து அகற்றப்படும் சிம்புகளையும் இது குறிக்கும்

chip board : ஒட்டு மரக்கட்டை : மரத்துரள், சிம்பு செத்தைகளுடன் மெழுகிணைத்து ஆக்கப்படும் கட்டை. மடிப்புப் பெட்டிகள் போன்ற கொள்கலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

chip breaker : (எந்.) சிம்பு உடைப்பான் : ஒரு வெட்டுங் கருவியில் சிம்புகள் சுருண்டு உடைவதற்கு அமைக்கப்பட்டுள்ள ஒரு வரிப்பள்ளம்

chip carving : செதுக்கு வேலைப்பாடு : இடையிடையே சிம்பு செதுக்குவதன் மூலம் இயற்றப்படும் செதுக்கு வேலைப்பாடு

chippendale : சித்திர வேலை அறைகலன் : 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தச்சு விற்பன்னர் சிப் பென்டேல் (1718-1779) என்பவர் வகுத்தமைத்த உயர்தர சித்திர வேலைப்பாடுடைய மரத்தாலான தட்டுமுட்டு அறைகலன் வகை

chipping : (பட்.) கொத்துவேலை : சுத்தியல், கொத்துளி கொண்டு உலோகத்தை வெட்டி எடுக்கும் வேலை

chip space : சிம்பு இடைவெளி : பிடிப்புச் சாதனங்கள், வெட்டுக் கருவிகள் போன்றவற்றில், கருவியின் இயக்கத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு அமைக்கப்பட்டுள்ள இடைவெளி

chisel : (பட்.) உளி/சிற்றுளி/கொத்துளி : கொத்தி இழைப்பதற்கும், செதுக்கி உருவாக்குவதற்கும் பயன்படும் பல்வேறு வெட்டு வளிம்புகள் உள்ள உளிகளின் வகை

கொத்துளி

chisel cape : (பட்) நுண் சிற்றுளி : குறுகிய அலகுள்ள ஒரு சிற்றுளி. இது திறவுகோல் துளைகள் வெட்டுதல் போன்ற உலோக வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது

chisel cold : (பட்.) வல்லுளி : அனலிடாமலே உலோகங்களை வெட்டுவதற்குப் பயன்படும் வல்லுளி வகை

chisel diamond or lozenge : (பட்.) வைரச் சிற்றுளி : வைர வடிவில் சாய்சதுர உருவமுடைய ஒரு சிற்றுளி, இது நுண் சிற்றுளியைப் போன்றது. கூர்மையான ஆடிப்பள்ளங்களை வெட்டுவதற்கு இது பயன்படுகிறது

chisel round : (பட்.) வட்டுருளைச் சிற்றுளி : ஒரு முனை வட்டுருளை வடிவமான ஒரு சிற்றுளி, இதில் வெட்டு அலகு ஒரு கோணத்தில் அமைந்திரும். மென்தகடுகளில் வரிப்பள்ளங்கள் வெட்டுவதற்குப் பயன்படுகிறது

chloride : (வேதி.) குளோரைடு/பாசிகை : மற்றொரு தனிமத்துடன் அல்லது மூலகத்துடன் குளோரின் கலந்த ஒரு கூட்டுப் பொருள். இது ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் ஒர் உப்பு அல்லது கூட்டுப் பொருள்

chloride of lime : (வேதி.) வண்ணகக் காரம் : (CaOCL2) கால்சியம், குளோரின், ஆக்சிஜன் மூன்றும் கலந்த ஒரு கூட்டுப் பொருள். இதனை வெளுப்புக்காரம் என்றும் கூறுவர். சலவைக்கும், நச்சுத் தடைக் காப்புப் பொருளாகவும் பயன்படுகிறது

chlorinate : (குழை.) பாசிகக் செயற்படுத்து : நீரின் நுண்ம அழிப்புவகையிலும், கனிமவிளைவிலிருந்து தங்கம் பிரிப்பதிலும் குளோரினைப் (பாசிகம்) ஈடுபடுத்துதல்

chlorinated wool : பாசிகக் செயற்படுத்திய கம்பளி : மெருகும் ஒளிர்வும் அளிப்பதற்காக வெளுப்புக் காரத்துடனும், பிற பொருள்களுடனும் சேர்ந்துப் பதப்படுத்திய கம்பளி. இதனால் சில சாயங்களைப் பற்றிக் கொள்ளும் கம்பளியின் திறன் அதிகமாகிற்து. மற்றும் அதன் பசை இயல்பும் நீக்கப்படுகிறது

chlorine : (வேதி.) குளோரின் பாசிகம் : (Cl2) இது பசுமஞ்சள் நிறமுடைய ஒரு நச்சுவாயு, நிற நீக்கம், நுணமத தடைக் காப்பு. போருக்கான் நச்சு ஆயுதங்கள் ஆகியவற்றில் பயன்படும் நெஞ்சைத் திணறடிக்கும் கார மணமுடைய வாயுத் தனிமம். சோடியம் குளோரைடுக் கரைசலை மின்னால் பகுப்பதன் மூலம் இது பெறப்படுகிறது. துணிகளைச் சலவை செய்வத்ற்கும், நீரினைத் தூய்மையாக்குவதற்கும், நச்சு வாயுவாகவும் பயன்படுத்தப்படுகிறது

chloro-form : (வேதி.) குளோரோஃபார்ம் : (CHCI2) இது ஒரு மயக்க மருந்து. எளிதில் ஆவியாகும். இனிமை கலந்த சுவையுடைய நிறம்ற்ற உணர்ச்சியகற்றும் நீர்மம்

chlorophyill : (தாவர.) பச்சையம் : தாவரங்களின் இலை, தழை, தண்டுகளில் பசுமையூட்டும் பொருள். இது சூரிய ஒளியில், கார்பன் - டை - யொக்சசைடிலிருந்தும், நீரிலிருந்தும் ஒளிச்சேர்க்கை மூலம் சர்க்கரை தயாரித்துக் கொள்ள தாவரத்திற்கு உதவுகிறது

chock : முட்டுக்கட்டை : நிற்கும் ஊர்திகள் நகர்ந்துவிடாமல் தடுப்பதற்காக சக்கரங்களில் அடியில் போடப்படும் அடைப்புக்கட்டை

choke : (தானி.) அடைப்பான் : உந்து வண்டியின் எரி-வளி கலப்பியில் காற்றைக் குறைத்து வாயுக் கலவையின் செழுமையை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு நிலையான அல்லது மாறக்கூடிய சாதனம்

choke coil : (மின்.) தூண்டு சுருள் : மின்னோட்ட வேகத்தைத் தடுத்தாளும் திருகு கம்பிச்சுருள் அமைப்பு

choke damp : (வேதி.) சுரங்க நச்சு ஆவி : சுரங்கங்களில் உள்ள கார்பன்டையாக்சைடு என்னும் நச்சுத் தன்மையுடைய ஆவி

cholera : (நோயி) வாந்தி பேதி : வெப்ப நாடுகளில் உணவாலும், நீராலும் பரப்பப்படும் பாக்டீரியா மூலம் - உண்டாகும் நோய். வாந்திபேதி இதனால், தொடர்ச்சியாக வாந்தியும் பேதியும் ஏற்பட்டு, உடலில் நீர் வற்றிப் போய் மரணம் உண்டாகிறது

வாந்திபேதி

cholesterol : (உட.) கொழுப்பினி : உடலின் அனைத்து உயிரணுக்களிலும், குறிப்பாக நரம்பு உயிரணுக்களிலும், காணப்படும் ஒரு பொருள். பித்தப்பையில் விளையும் கல் போன்ற கடும் பொருள் மற்றப் பொருள்களுடன் கொலஸ்டிராலாகிய கொழுப்பினி அடங்கியுள்ளது. தொழுப்புப் பொருளைக் கொண்டு செல்வதற்கும், தோலிலும் முடியிலும் எண்ணெய்ப்பசை ஏற்படுவதற்கும் கொழுப்பினி உதவுகிறது. உடலைக் கட்டுப்படுத்தும் இயக்குநீர்கள் (ஹார்மோன்கள்) உண்டாவதற்கு இது பயன்படுகிறது

chopper : (மின்.) மின்னோட்டத் தறிப்பான் : ஒரு மின்சுற்று வழியைத் தானாகவே முறிப்பதற்கான ஒரு சாதனம். ஒரு தேர் மின்னோட்டச் சுற்றுவழியில் இது நேர் மின்னோட்டத்தை ஒரு துடி நேர் மின்னோட்டமாக மாற்றுகிறது

chord : (வாணூ.) நாண்வரை : விழானத்தின் கற்றழுத்தத் தளத்தின் ஆயத் தொலைவுகளையும் கோணங்களையும் கணக்கிடுவதற்குரிய விருப்பப்படியான ஒரு தொடக்கக் கோடு கணிதத்தில் வில் வளைவின் வரை

எந்திரத்தில் உச்சியிலோ அடியிலோ உள்ள ஆதாரக் கட்டின் முதன்மையான பகுதி

chordal pitch : நாண்வரை வெளி : ஒரு பல்லிணையின் ஒரு பல்லிலுள்ள் நேரிணையான புள்ளியின் தூரம். இது இடைவெளி வட்டத்தின் ஒரு நாணாக அளவிடப்படுகிறது

chord length : (வாணூ.) நாண்வரை நீளம் : விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் புறம் நீட்டிய நீளம்

chroma : வண்ணச் சாயல் : இது ஒரு வண்ணத்தின் ஒளிர்வு, வலிமை, அல்லது தன்மையைக் குறிக்கிறது. வண்ண்த்தை மட்டுப்படுத்துதல் அல்லது மங்கலாக்குதல் மூலம் வண்ணச் சாயலைக் குறைக்கலாம்

chromaluminium : (உலோ.) குரோமா அலுமினியம் : மிகவும் வலுவான அலுமினிய உலோகக் கலவை

chromate : (வேதி.) குரோமேட் : குரோமிக் அமிலத்தின் உப்பு

chromaticity : (மின்.) வண்ண முனைப்புத் திறன் : ஒளியின் நிற முனைப்புத் திறன்

chrome nickel steel : (உலோ.) குரோம் நிக்கல் ஏஃகு : இது விலை மதிப்புடைய ஓர் எஃகுக் கவசம். இது எந்திரங்களை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்கான கவச மாகப் பயன்படுகிறது. பெரும்பாலான நேர்வுகளில், குரோம வனேடியம் எஃகு அல்லது நிக்கல். எஃகு குறைந்த செலவில் இதே நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது

chrome tannage : குருமத்தோல் பதனீடு : குரோமிக்படும் குரும உப்புகளின் உதவியால் தோல் பதனிடு செய்வதற்கான ஒரு முறை

chrome vanadium steel : குரோம் வனேடியம் எஃகு : இது ஒரு வகை வலுவான எஃகு, இதில் 0.87% குரோமியம் 0.18% வனேடியம் கலந்திருக்கும். வெப்பமூட்டிப்பதப்படுத்திய பிறகு, இதன் வலிமையில் ஒரு சதுர அங்குலத்திற்கு 9080 இலோ என்ற அளவில் இருக்கும் வரம்பில் இந்த அளவு ஒரு சதுர அங்குலத்திற்கு 86941 கிலோ என்ற அளவில் இருக்கும்

chrominance : (மின்.) நிறக்வைத் திறன் : வண்ணத்தின் பூரித மற்றும் நிறக்கலவைத் திறன்

chromium : (உலோ.) குரோமியம் குருமம் : (Cr) இது அழகிய வண்ணங்கள் வாய்ந்த சேர்மானங் களையுடைய ஒர் உலோக வகை. இது பழுப்பு வெள்ளை நிறத்திலுள்ள ஒரு தனிமம். இதன் வீத எடைமானம் 6.50; உருகுநிலை 2939°ஃபா. எஃகு உலோகக்கலவைகளிலும் முலாமிடுவதிலும் பயன்படுகிறது

chromium oxide : குரோமியம் ஆக்சைடு : பச்சை நிறமுள்ள வண்ண மூட்டும் ஒரு காரகி

chromium plated tools : (உலோ.) குரோமியம் முலாமிட்ட கருவிகள் : கருவிகளிலும் கணிப்புக் கருவிகளிலும் குரோமியம் முலாமிடுவதன் மூலம் பளபளப்பாக இருக்கும்படி செய்யப்படுகிறது

chromium plating tools : குரோமியம் முலாமிடுதல் : சாதகமில்லாத பருவ நிலைகளுக்கு உட்படும் உந்து வண்டிகளின் உறுப்புகள் சேதமடைந்துவிடாமல் தடுத்து. பளபளப்பாக இருக்கும்படி செய்வதற்காகக் குரோமியம் முலாமிடுதல் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. நிக்கல் முகாமிடுதலுக்குப் பதிலாகக் கையாளப்படுகிறது

chromium steel : (உலோ.) குரோமியம் எஃகு : 1%-2% வரை குரோமியம் அடங்கியுள்ள எஃகு. இது மிகக் கடினமானது, வலுவானது. இது உந்து வண்டி உறுப்புகள் தயாரிப்பதற்கான உலோகக் கலவையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏவுகணைகள் தயாரிக்கவும் கவச தகடுகளாகவும் பயன்படுகிறது

chromodizing : (உலோ.) குரோமியப் படலமேற்றுதல் : அலுமினிய உலோகக் கலவைகளில் கடினமான மேற்படலம் ஏற்படும்படி செய்வதற்கான ஒரு வெப்ப அமிழ்வுச் செயல் முறை

chronometer : நுண் காலக் கணிப்பான் : நுட்பமாகவும் துல்லியமாகவும் காலத்தைக் கணிக்கக் கூடிய ஒரு கருவி

chrysotile : இழைம மணிக்கல் : பாம்புத் தோல் போன்ற புள்ளிகள் வாய்ந்த இழைம இயல்புடைய பச்சை மணிக்கல் வகை

chuck : (பட்.) சுழல்வார் : பணிக் குரிய பொருள்களை ஏந்தி வாகாகச் சுற்ற வல்ல எந்திரப்பணி ஏந்தமைவுத் தோல்வார். இது பல் வேறு நோக்கங்களுக்காகவே பல்வேறு வகைகளில் உள்ளது

chucking : (எர்.) சுழல்வார் பணியாக்கம் : கடைசல் எந்திரத்தில் சுழல் வாரில் பணிக்குரிய பொருள் களை ஏற்றிக் கடைசல் வேலைப்பாடுகள் செய்தல்

chucking reamer : (பட்.) சுழல் துளைப்பான் : செங்குத்தான வரிப் பள்ளங்களுடைய திருகுச்சுருளாகச் செல்கிற சுழல் துளைப்பான்கள். இதில் மூன்று மற்றும் நான்கு வரிப்பள்ளங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் வழியாகத் துளைப்பான் ஊர்ந்து செல்லும். இது எஃகில் செயற்படுவதற்கு ஏற்ற தழுவையாக அமையும். சொர சொரப்பான துளைகளைச் செப்பம் செய்வதற்கு மற்றொரு கூர் முனைக்கோல் பயன்படுகிறது

chuffing : (விண்.) திரிபு எரிதல் : சிலவகை ராக்கெட்டுகள் இடை யிடையே நின்று, சிக்கென்ற ஒழுங்கற்ற ஊதல் ஒலியுடன் எரிகின்ற பண்பு

churning : (வார்.) கடைதல் : ஒரு வார்ப்படத்திலுள்ள திரவ உலோகத்தை சூடாக்கிய ஒரு சிறு இரும்புக்கோல் கொண்டு மேலும் கீழுமாகக் கடைந்து வார்ப்புப்படிவம் திண்மையாக அமையும்படி செய்தல்

churn moulding : கடைசல் வார்ப் படம் : நார்மன் கட்டிடக் கலையில் காணப்படும் வளைவு நெளிவுடைய வார்ப்படம்

chute : சாய்வுக் குழாய் : குப்பை கழிபொருள்களைத் தொலைவுக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படும் சாய்சரிவுடைய குழாய்

cincture : சுற்று வளையம் : சுழல் தண்டினை அதன் ஆதாரத்திலிருந்தும் அடித்தளத்திலிருந்தும் பகுப்பதற்காகப் பயன்படும் பத்தியின் உச்சியிலும் அடியிலும் உள்ள ஒரு வளையம்

cinder bed : (வார்.) கனல் படுகை : ஒரு வார்ப்படத்தின் அடியிலுள்ள ஒரு கனல் படுகை. இது வாயு வெளியேறுவதற்கு உதவும்

cinder notch : (உலோ.) கனல்துளை : ஊதுலையின் பக்க வாட்டில், உருகிய உலோகத்தை அப்புறப்படுத்துவதற்காக உள்ள ஒரு துளை

cine camera : திரை ஒளிப்படக் கருவி : திரைப்படத்திற்குரிய ஒளிப்படக் கருவி

Cinna-bar : (உலோ.) இரசக் கங்தகை : இது ஒரு சிவப்பு நிறமான பாதரசக் கணிப்பொருள் வகை. இது சாயவேலைகளில் வண்ணப் பொருளாகவும் (நிறமி)அணுகலன்கள் தயாரிப்பதிலும் பயன்படுகிறது

cinque foil : (க.க.) இயிதழ் அணி : ஐந்து இதழ்களையுடைய மலர் முகப்பு உருவம்

cir-cassian walnut : சர்கேசிய வாதுமை மரம் : இது இளமஞ்சள் நிறமான வாதுமை மரம். இதில் கருநிறக் கோடுகளும் இருக்கும். இதன் வெட்டு மரம் 1900 முதல் முதல் உலகப் போரின் தொடக்கம் (1914) வரையில் அறைகலன்கள் தயாரிப்பதற்குப் பெருமளவு பயன் படுத்தப்பட்டது

circle : (கணி.) வட்டம் : ஒரு மையப் புள்ளியிலிருந்து சுற்று வரையிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் சம தூரத்தில் இருக்குமாறு அமைந்த ஒரு வட்டமான சுற்று வரை. ஒரு வட்டத்தின் பரிதி 360 பாகங்களாகப் பகுக்கப்படுகிறது. இதன் ஒரு பாகம், பாகை எனப்படும்

circle marker : (வானு) வட்ட மையக் குறியீடுகள் : (விமான) நிலையத்தில் தரையிறங்கும் பரப்பிடத்தின் மையத்தை அல்லது பிரதானத் தரையிறங்கு தளங்களின் குறுக்கு வெட்டினை ஏறத்தாழக் குறித்திடும் ஒரு வட்ட வடிவமான கட்டுக் கம்பி

cicircle shear : (உலோ.) வட்டக் கத்திரிப்பான் : உலோகத் தகடுகளிலிருந்து வட்டங்களை வெட்டி எடுப்பதற்கான ஒர் எந்திரம். இதனைத் தேவையான விட்டத்திற்கு அமைத்துக் கொள்ளலாம்

circle trowel : (குழை.) வட்டச் சட்டுவம் : சாந்து பூசுபவர்கள் (கொத்தனார்கள்) பயன்படுத்தும் உட்குழிவான அல்லது புடைப்பான அலகுடைய ஒரு சட்டுவக் கரண்டி. இது வளைவான மேற் பரப்புகளில் பூச்சு வேலைகள் செய்வதற்குப் பயன்படுகிறது

circuit (மின்.) மின் சுற்றுவழி : ஒரு மின்னோட்டம் அதன் ஆதாரத்திலிருந்து அடுத்தடுத்து மின் கடத்திகள் வழியாகச் சென்று, மீண்டும் அது தொடங்கிய இடத்திற்கே திரும்பும் நெறிவழி

circuit breaker : (மின்.) மின்னோட்ட முறிப்பான் : மின்னோட்டத்தைத் தடுக்கும் பொறி அமைப்பு. இது பொதுவாகத் தானியங்கும் விசைப் பொறியாக இருக்கும். இந்த விசை திறந்து, மின்னோட்டம் பாய்வதைத்தடுத்துவிடும்

circuit, etched : (மின்.) செதுக்கு மின்சுற்று வழி : அமில அரிமானம் மூலம் உலோகத்தில் செதுக்கு வேலைப்பாடுகள் செய்வதற்குரிய மின் சுற்றுவழி.

circuitry : (விண்.) மின்சுற்றுவழி அமைவு : ஒர் ஏவுகணை அமைப்பில் பயன்படுத்தும் மின்னியல் அல்லது மின்னணுவியல் சுற்று வழிகளின் நெறியமைவு

circular and angular measure : ஆரவட்ட மற்றும் கோண அளவை:

60 வினாடி () = 1 நிமிடம் (')

60 நிமிடம் = 1 பாகை (10)

90 பாகை = 1 குவாட்ரண்ட் (வட்டகோணப் பகுதி)

4 குவாட்ரண்ட் = 1 வட்டம் (பரிதி)

circular function : (கணி.) வட்டச் சார்பலன் : கணிதத்தில் வட்டச் சார்பு செங்கோண முக்கோணப்பக்கத் தகவு

circular loom : (மின்.) வட்டமின்காப்பு : கூடுதலான மின்காப்புச் செய்வதற்கான அலோகக் குழாய். இந்தக் குழாய் அலோகப் பொருளால் செய்யப்பட்டது; தீப்பிடிக்காதது; இந்தக் குழாயினுள் மின் கம்பிகள் செலுத்தப்பட்டிருக்கும்

circular measure : (கணி) ஆரவட்ட அளவை : ஆர அளவான நாண் வரையுடைய வில் வளைவுக் அளவை.

circular mill : (மின்.) விட்டஅலகு : கம்பி முதலியவற்றின் விட்டத்தை அளப்பதற்கான அங்குலத்தில் ஆயிரத்தொரு பங்குடைய அலகு

circular milling machine (எந்.) வட்டத் திருவு கருவி : உலோகத் தகடுகளில் பள்ளங்களை வெட்டுவதற்கான கருவி

circular pitch : (பல்.) வட்ட இடைவெளி : பல்லிணைல் ஒரு பல்லின் மையத்திலிருந்து அடுத்த பல்லின் மையத்திற் உள்ள தொலைவு

circular saw : வட்ட ரம்பம் :ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம்

circulating current : (மின்.)

சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள்

circumference : பரிதி-சுற்றளவு : ஒரு வட்டத்தின் சுற்றளவு

circumlunar: (விண்.) நிலவு வலம் : ஒரு விண்வெளிக்கலம் நிலவை வலம்வந்து பூமிக்குத் திரும்பும் பயணம்

circumscribe : சுற்றி வட்டமிடுதல் : வெட்டாத் தொடு வரையாகச் சுற்றுவட்டமிடுதல். சுற்று வட்ட எல்லைக்குட்படுத்துதல்

ciseleur : (உலோ.) செதுக்கு ஒப்பனையாளர் : உலோக வேலையில் செதுக்கி ஒப்பனை செய்பவர்

cisiunar : (விண்.) நிலவிடை வெளி : பூமிக்கும் நில்வின் சுற்று வழிக்குமிடையிலான இடைவெளிப்பரப்பு

citizens band : (மின்.) குடி அலை வரிசை : தனிப்பட்ட குடி மக்கள் இயக்கும் இருவழி வானொலிச் செய்தித் தொடர்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைவெண் அலைவரிசை. இதனை இயக்குபவர்கள் தொழில்நுட்ப ஆய்வுகளைத் தெரிவித்தல் ஆகாது

citric acid : (வேதி.) சைட்ரிக் அமிலம் : நாரத்தை வகையைச் சேர்ந்த எலுமிச்சம்பழம், நாரத்தங்காய் போன்றவற்றிலிருந்து வடித்திறக்கிய ஒரு வகை அமிலம். இது காடிப் பொருள்கள் வகையில் பதனிடு செய்யதக்க மூன்று நீரக அணுக்களையுடையது. இது புளிப்புச் சுவையுடையது. இது மருந்துகளிலும் நறுமணப் பொருள்களிலும், ரொட்டித் தொழிலிலும் பயன்படுகிறது

civil enginear : பொதுப்பணி பொறியாளர் : கட்டிடங்கள்,நெடுஞ்சாலைகள், இருப்புப்பாதைகள், எஃகுக் கட்டுமானங்கள் போன்ற பொதுப்பணிகளை வடிவமைத்து கட்டுமானம் செய்யும் பொறியாளர்

clamp : (எந்.) பற்றுக் கருவி : வேலைப்பாடு செய்வதற்குரிய பொருள்களின் பகுதியைப் பற்றிக் கொள்வதற்கான ஒரு கருவி. இது இரும்பிலும் மரத்திலும் அமைந்திருக்கும்

clamp coupling : (எந்.) பற்று இணைப்பிகள் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பகுதிகளை கொண்ட ஒரு சுழல் தண்டு இணைப்பி. இது குறுக்காயமமைந்த மரையாணிகள் மூலமாக இறுகப் பற்றும்படி செய்யப்படுகிறது

clamp dog : (எந்.) பற்று வளை இருப்பாணி : கடைசல் வேலை செய்ய வேண்டிய பொருள்களைப் பற்றி இணைத்துப் பிடித்துக் கொள்ளும் பகர வடிவ வளை இருப்பாணி. இதில் இரு குறட்டு அலகுகளும் இருமரையாணிகளும் பற்றிக் கொள்வதற்காக அமைந்திருக்கும்

clamping bars : (வார்.) பற்றுச் சலாகைகள் : வார்ப்படத்தில் வாயுக்களின் விரிவாக்கத்தினால் விரிசல் ஏற்படாதவாறு தடுத்து வார்ப்படத்தின் பகுதிகளை ஒருங்கிணைத்துப் பற்றிக் கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் சலாகைகள். இந்தச் சலாகைகளைத் தக்கவாறு அமைத்து கொள்ளலாம் அல்லது திண்மையாக வைத்துக் கொள்ளலாம்

clamping screw : பற்றுத் திருகு : வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருள்களை நெருக்கிப் பிடித்துக் கொள்கிற அல்லது ஒருங்கிணைத்துப்_பற்றிக் கொள்கிற ஒரு வகைத் திருதி, இறுகப் பற்றிக் கொள்கிற ஒரு திருகினையும் இது குறிக்கும்

clap board : (க.க.) சாரல் தடுக்கு : மழைச் சாரல் அடிக்காதபடி கதவின் மீது சாய்வாகப் பொருத்தப்படும் பலகை

clapper box : (எந்.) இழைப்புப் பெட்டி : ஒரு வார்ப்புப் பொறியில் உள்ள கருவியைப் பற்றிக்கொள்ளும் சாதனத்தின் ஊசலாடும் உறுப்பு. இது வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருளின் மீது திரும்பும் இழைப்பின் போது சரளமாகச் சாதனங்கள் செல்வதற்கு இடமளிக்கிறது

clap post : மூடு நிலைக்கால் : ஒரு நிலையடுக்கின் கதவு மோதி மூடிக் கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள செங்குத்தான நிலைக்கால்

classical : (க.க.) செவ்வியல் : பண்டைய கிரேக்க, ரோமானியக் கட்டிடக் கலையினைக் குறிக்கும் சொல்

classic moulding : (க.க) செவ்வியல் வார்ப்படம் : பண்டைய கிரேக்க, ரோமானியச் செவ்வியல் பாணிக் கட்டிடக் கலையில் பயன்படுத்தப்பட்டது போன்ற வார்ப்படம்

classification : வகைப்படுத்துதல் : எளிதாக அடையாளங்கண்டு கொள்வதற்காக வகையியல்புகள் அல்லது பண்பியல்புகள் வாரியாக வகைப்படுத்துதல்

clavi chord : இசைக்கருவி : இக்காலப் பியானோவுக்கு முன்னோடியாக விளங்கிய ஆதி இசைக்கருவி

claw coupling (எந்.) வளைநக இணைப்பி : சுழல் தண்டுகளை உடனடியாக இணைக்க வேண்டியிருக்கும் நேர்வுகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகைத் தளர்வான இணைப்பி. இதில் வளைந்த நகம் போன்ற உகிருகள் அமைந்திருக்கும.

claw hammer : (மர.) வார்சுத்தியல் : ஆணி பற்றி இழுக்கும் அமைவுடைய சுத்தியல். தச்சு வேலை செய்பவர் இதனை முக்கியமாகப் பயன்படுத்துகின்றனர்.

clay (க.க.) களிமண் : இது சாதாரண மண் வகையைச் சேர்ந்தது. இது காய்ந்தால் இறுகலாக இருக்கும்; ஆனால் எனிதில் உடைந்துவிடும். ஈரமாக இருக்கும்போது குழைமத் தன்மையுடையது. செங்கல் தயாரிக்க இது உதவுகிறது

clay wash : (வார்.) களிமண் வண்டல் : நீரில் கரைந்த களிமண் வண்டல். வாயடைப்பான்கள்; குடுவைகள் போன்றவற்றில் மேற்படலப் பூச்சுக்குப் பயன்படுத்தப்படுகிறது

clean: (அச்சு.) துப்புரவான பணி : நன்கு அச்சிடப்பட்ட காகிதம்; அச்சுப் பணி; கறைபடியாமல் தூய்மையாக முத்திரையிடப்பட்ட மேலுறை

clean cut: மாசு மருவற்ற வேலைப்பாடு : எந்திரத்தில் மாசு மருவற்றிருக்கும் மேற்புரப்பு மாசு மருவின்றிச் செய்யப்படும் வேலைப்பாடு

clean proof : (அச்சு.) மாசற்ற பார்வைப்படி : திருத்தங்கள் அதி கம் இல்லாத தெளிவான பார்வைப்படி

இது திருத்தங்கள் மிகுந்த தெளிவற்ற பார்வைப்படிகளுக்கு நேர்மாறானது

clean thread : (எந்.) மாசற்ற இழை : திருகில் கூர்மையாகவும், வழுவழுப்பாகவும், மாசு மருவின்றியும் இருக்கும் இழை

clearance : (எந்.) இடைவெளி : (1) கடைசல் எந்திரத்தில் வெட்டு முனைக்கும், கடைசல் செய்ய வேண்டிய பொருளின் செங்குத்து நிலைக்கும் இடையிலான கோணம் 3° அளவுக்குக் குறையாமலும் 10° அளவுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்

(2) அண்மைப் பக்கங்களுக்கு இடையிலான திறந்த இடைவெளி அளவு

cleat : ஆப்பு : ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் பிணைக்கும் நோக்கத்திற்காக அதனுடன் பிணைக்கப்படும் அல்லது சுவரில் ஆணியால் அறைந்து இறுக்கப்படும் மரத்தினாலான அல்லது உலோகத்திலான ஒரு துண்டு

cleavage: பிளவு: பிளத்தல், பிரித்தல் அல்லது பிளவுறுத்தல். ஒரு பாறையில் ஒரு குறிப்பிட்ட முறையில் பிளவு ஏற்படும் போக்கு

cleft : (எந்.) வெடிப்பு : இதுவும் ஒருவகைப் பிளவுதான். இது ரம்பத்தால் அறுத்த அல்லது வெட்டிய பிளவைவிட வலுவானது. இது மரக் கைப்பிடிகள் திருகுகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகிறது

clevis : (எந்.) வளைகம்பி கயிறு கம்பி இணைப்பதற்காக விட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள இருப்புவளை கம்பி

climp cut : (எந்.) ஏற்ற முறை வெட்டுதல் : வெட்டு எந்திரத்தில் உலோகத்தை வெட்டுவதற்கான ஒரு முறை. இதில் வெட்டுங் கருவியின் சுழற்சித் திசையில் மேசை நகர்ந்து செல்கிறது

clinch : (பட்.) மடக்கி இறுக்குதல்; ஆணியை அடித்து மடக்கி இருக்குதல்

clinker rim : (தானி.) கட்டிருக்கு வட்ட விளிம்பு : இது ஒரு சக்கரத்தின் வட்ட விளிம்பு. இதன் இரு பக்கங்களிலும் விளிம்பு அல்லது வரிப்பள்ளம் அமைந்திருக்கும். அதில் டயரின் தட்டையான விளிம்பு பொருந்திக் கொள்ளும். காற்றடைக்கும்போது டயர் இந்த விளிம்பில் இறுக்கமாக அழுந்திக் கொள்ளும்

clinker : சாம்பறகட்டி : கொல்லுலைச் சாம்பற்கட்டி

clip angles : (பொறி.) பிடிப்புக் கோணங்கள் : இரு உறுப்புகளை இணைப்பதற்குப் பயன்படும் சிறு தூண்களின் கோணங்கள்

clipper : அதிர்வுப் பிரிவு : வீடியோபடத் தகவலிலிருந்து ஒரே கால நிகழ்வு அதிர்வுகளைப் பிரிப்பதற்குப் பயன்படும் ஒரு முறை

clipping : கத்தரித்தல் : சில வகைத் துணிகளில் மேற்பரப்பு சமநீளத்திற்கு வெட்டச் செம்மைப்படுத்துதல்

clock wise : வலஞ்சுழித்த : கடிகார முள்செல்லும் திசையில் வலஞ்சுழித்து இடமிருந்து வலம்செல்லுதல. clog : தடுப்பு : முட்டுக் கட்டையிடுதல்; பளுவினால் இயக்கம் தடித்தல்; அந்நியப் பொருளால் இயக்கம் தடைபடுதல்

close (க.க.) சுற்றெல்லை: தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை

closed circuit : (மின்.) முடிப்புச் சுற்றுவழி : (1) மின் விசை ஆதாரத்திலிருந்து ஒரு புறச் சுற்றுவழியாகச் சென்று மீண்டும் ஆதாரத்திற்குத் திரும்பி வருகிற முழுமையான சுற்றுவழி. இது ஒரு கட்டுப்பாட்டு விசையினை அமைத்து நிகழ்த்தப்படுகிறது

(2) வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு மட்டும் உரிய தொலைக்காட்சி முறை

closed lock joint : (உலோ. வே.) மூடிப்பூட்டிய இணைப்பு : இருமுனைகளைக் கொக்கியால் பிணைத்து ஏற்படுத்தப்படும் ஒரு வகைப்பிணைப்பு. இந்தப் பிணைப்பில் ஒட்டவைப்பு செய்யப்படுவதில்லை

close fit : அணுக்கத் திருகிழை : மிக நெருக்கமாவுள்ள இந்தத் திருகிழை மிகத்துல்லியம் தேவைப்படும் விமான உறுப்புகளில் பயன்படுத்தப்படுகிறது

close nipple : (கம்.) குறுகிய இழை : சாதாரணக் குழாய் இழையினைவிட இரண்டு முள்ள இழை. இதில், இரு தொகுதி இழைகளுக்கிடையே தோள்மூட்டு எதுவும் இருக்காது

closure : (க.க) அடைப்பு : ஒரு வழியின் முடிவிடத்தை அடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செங்கலின் பகுதி

cloth of estate : அலங்காரத் திரைச் சீலை : அரியணை மீது அல்லது சிம்மாசனத்தின் மீது அலங்காரமாகத் தொங்கவிடப்படும் திரைச் சீலை

cluster : (மின்.) சரவிளக்கு : இரண்டுக்கு மேற்பட்ட விளக்குகளையுடைய விளக்குச் சரம். இந்த விளக்குகள் நெருக்கமான இடைவெளிகளில் அமைந்திருக்கும்

clustered (க.க.) கொத்துச்சரம் : திரண்ட கொத்தாகச் சேர்க்கப்பட்டுள்ள சரம்

clutch : (தானி; எந்.) ஊடிணைப்பி : உந்து வண்டிகளில் இயங்குறுப்புகளை ஒடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு. இதிலுள்ள மிதி கட்டையை அழுத்த உந்துவண்டி சக்கரம் நிற்கும் மிதி கட்டையை விடுவிக்கும்போது சக்கரம் ஒடும்

சுழல் தண்டுகளுக்கிடையே தற்காலிக இணைப்பை ஏற்படுத்தும் சாதனம்

clutch pedal : (தானி; எந்.) ஊடிணைப்பி மிதிகட்டை : ஊடிணைப்பியை இணைக்கவும், துண்டிக்கவும் கூடிய இடதுகால் மிதிகட்டை

clutch pressure plate : (தானி; எந்.) ஊடிணைப்பி அழுத்தக் தகடு : ஊடிணைப்பியின் ஒருங்கின்ணப்பில், நெம்புகோல்களின் மீது ஏற்றப்பட்ட ஒர் உலோக வளையத்தின் பகுதி. திருகு சுழலான விற்சுருள்கள் இந்த ஊடிணைப்பித் தகட்டின் மீது அழுத்தம் உண்டாக்கி தேவையான உராய்வினை ஏற்படுத்தி விசையினை எஞ்சினிலிருந்து விசை ஊடிணைப்புக்கு அனுப்புகிறது

coal : நிலக்கரி : பூழியிலிருந்து தோண்டியெடுக்கப்படும் பழுப்பு நிறமான அல்லது கருநிறமான கணிமப் பொருள். இது எளிதில் தீப்பற்றத் கூடியூது. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய தாவரப்படிவு களால் இது உண்டாகிறது. சுரங்கங்களிலிருந்து தோண்டியெடுக்கப்படும் இது முக்கியமாக எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து பல முக்கிய வேதியியல் துணைப் பொருள்களும் கிடைக்கின்றன

coal gas : நிலக்கரி வாயு : நிலக்கீலார்ந்த நிலக்கரியைச் சிதைத்து வடித்தல் மூலம் பெறப்படும் வாயு. இது விளக்கு எரிப்பதற்கும் வெப்பம் உண்டாக்குவதற்கும் பயன்படுகிறது

coal sizes : நிலக்கரி வடிவளவுகள் : விற்பனை செய்யப்படும் நிலக்கீலற்ற நிலக்கரியின் வடிவளவுகள். இவை நிலக்கரி உட்செல்லக் கூடிய அல்லது மேற்செல்லக் கூடிய ஒரு துவாரத்தின் விட்டத்தின் அளவுகளில் அமைந்திருக்கும்

உட் செல்வது மேற் செல்வது
உடைந்தது 4 1/2" 3 1/4"
முட்டை வடிவம் 3 1/4" 2 5/6"
கணப்பகுப்பு 2 8/6" 1 5/8"
செஸ்ட் நட் 1 5/8" 7/8"
பட்டாணி 7/8" 1 9/9"
கோதுமை எண். 1 1 9/6" 1 9/6"

coat tar: கீல் கரி எண்ணெய் : கரு நிற நிலக்கீல். இது நிலக்கரி வாயு உற்பத்தியில் உறைவிக்கப்பட்ட நிலக்கீலார்ந்த நிலக்கரியிலிருந்து வாலை வடித்தல் மூலம் வடித்திறக்கப்பட்டது. இது கலைத் துறையில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது

coat : வண்ணப்பூச்சு : வண்ணம், அரைச்சாந்து போன்ற பொருள்களை ஒரே சமயத்தில் மேற்படலமாகப் பூசுதல்

coated lens : மேற்படல ஆடிகள் : சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சூடாக்குவதன் மூலம் உண்டாகும் மிக மெல்லிய மேற்படலம். இதன் மூலம் திறம்பாடு அதிகரிக்கிறது

coated paper : மேற்படலமிட்ட காகிதம் : மிகவும் பளபளப்பாக்கப்பட்ட காகிதம். மிக உயர்ந்த ரக நுண்பதிவுப் பட வேலைப்பாடுகளுக்குத் தேவையான வழுவழுப்புடன் அல்லது மங்கலான மெருகுடன் இது தயாரிக்கப்படுகிறது

coaxial : (கணி.) பொது ஊடச்சுடைய : நீள் வட்டம் அல்லது நிமிர் மாலை வட்டம் போன்ற ஒருங்கிணைகிற அச்சுக்களையுடைய எதுவும்

coaxial cable : பொது இருசுத் தந்திவடம் : தந்தி, தொலைபேசி அறிகுறியீடுகளுடன் தொலை நோக்கிக் குறியீடுகளையும் ஒருங்கே அனுப்பும்படி பொருந்திய தந்தி வட அமைவு

cobalt : (கணி.) கோபால்ட் : இது வெண்ணிறமான உலோகம். இது இரும்பு வகையைச் சேர்ந்தது. கடினமானது. இது அணு எண் 27 உடைய ஒரு தனிமம். உலோக வகையிலிருந்து நீல வண்ணப் பொருள் தயாரிக்க மிகவும் பயன்படுகிறது

cobalt blue : கோபால்ட் நீலம் : வெண்ணிற உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப் பொருள்

cobaltcrom steel : கோபால்ட் குரோம் எஃகு : இது ஒர் எஃகு உலோகக் கலவை. இதில் 1.5% கார்பனும் 12.5% குரோமியமும் 3.5% கோபால்ட்டும் கலந்திருக்கும். இது வெட்டுக் கருவிகள் தயாரிக்க ஏற்றது

cocaine : (மருந்.) கோக்கைன் : இதன் அமெரிக்காவைச் சேர்ந்த கோக்கரச் செடி வகையிலிருந்து எடுக்கப்படும், உடற்பகுதியை உணர்ச்சியிழக்கச் செய்யும் மருந்துச் சரக்கு. அறுவைச் சிகிச்சையின் போது வலி தெரியாமலிருக்க இது பயன்படுத்தப்படுகிறது

coccus : (உயி.) முட்டுப்பூச்சி : மூட்டுப் பூச்சித் தொடர்புடைய பூச்சி இனம்

çochineal : (வேதி.) செஞ்சாயம் : இந்திர கோபம் எனப்படும் செந்நிறப் பூச்சி வகையிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப் பொருள்

cock : அடைப்பு முளை : அடைப்பு முளை வடிவிலுள்ள ஒருவகை ஒரதர். இதில் திரவங்கள் அல்லது வாயுக்கள் செல்வதற்கான திறப்பு இருக்கும். இதனைக் கால் பகுதியளவு திருப்புவதன் மூலம் ஒரதர் திறக்கப்படுகிறது அல்லது மூடப்படுகிறது

cockle : மடிப்பு : புத்தகத்தில் அளவுக்கு அதிகமாக ஈரம் ஊடுருவிப் படிந்துவிடும்போது காகிதத்தில் ஏற்படும் மடிப்பு, தாறுமாறான வடிவாக்கத்தையும் இது குறிக்கும்

cockling : சுருள்வித்தல் தாறுமாறாக உலர்த்துவதால் காகிதத்தில் உண்டாகும் அலை போன்ற ஒர விளிம்புகள்

துணிகளின் மேற்பரப்பில் தாறுமாறாகச் சுருக்கம் உண்டாதல்

cockpit : (வானூ.) விமானி அறை : விமானத்தின் உடற்பகுதியில் விமானம் ஒட்டிகளுக்கு உரிய இருக்கைகள் அமைந்துள்ள அறை இந்த இருக்கைகள் முழுவதுமாகக் கொண்ட அறையைச் சிற்றறை என்பர்

cockpit cowling : (வானூ.) விமானி அறை மேல் மூடி : விமானி அறையைச் சுற்றியுள்ள உலோகத்தாலான அல்லது ஒட்டுப் பலகையிலான மேல் மூடி

cocobolo : (மர.) கோக்கோ போலோ : மத்திய அமெரிக்காவிலுள்ள செம்மரம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை மரம். இதன் வெட்டுமரம் செந்நிறமாக கரும்பட்டைகளுடன் இருக்கும். இது மிகவும் கடினமானது; எண்ணெய்ப் பிசுக்குடையது. இது சுழற்சியாட்டப் பந்துகள் செய்ய கத்தி கைப்பிடிகள் செய்யவும் பயன்படுகிறது

coconut oil : (வேதி.) தேங்காய் எண்ணெய் : தேங்காயிலிருந்து பெறப்படும் எண்ணெய், இது கடின நீர் சோப்புகள் செய்யப் பயன்படுகிறது

code : விதிமுறை : வேலைப்பாடுகளிலும், பயிற்சி முறைகளிலும் முறையான தரநிலையைப் பேணுவதற்காக வகுக்கப்பட்டுள்ள விதி முறைகளின் தொகுப்பு எடுத்துக் காட்டு: கட்டிட விதிமுறை

code beacon : (வானூ.) வழிகாட்டி ஒளி : குறிப்பிட்ட அடையாளக் குறிகளுட்ன் கூடிய விமானத்திற்கு விழிகாட்டுவதற்கான வழிகாட்டும் ஒளி விளக்குகள்

coefficient : (கணி.) குணகம் : கணிதத்தில் பெருக்கும் எண்ணாக பயன்படும் ஒரு முன்னடை எண்

இயற்பியலில் ஒரு பொருளின் தரநிலையைக் குறிக்கும் எண்

coefficient of expansion : (பொறி.) விரிவாக்கக் குணகம் : ஒரு பொருள் ஒரு பாதை வெப்பத்திற்கு எவ்வளவு நீளத்திற்கு விரிவடைகிறதோ அந்த அளவைக் குறிக்கும் காரணி

coefficient of friction : உராய்வுக் குணகம் : ஒரு பொருளை ஒரு பரப்பிலிருந்து மற்றொரு பரப்பிற்கு நகர்த்துவதற்குக்கிடை நிலையில் பயன்படுத்தப்படவேண்டிய விசைக்குப் அந்தப் பொரு

ளின் எடைக்குமிடையிலான விகிதம்

coeliac disease : (நோயி.) வயிற்று நோய் : சிறு குழந்தைகள் சில வகை உணவுகளைச் செரிக்க முடியாமல் ஏற்படும் வயிற்று நோய். இது ஒரு பரம்பரை நோய் என்பர்

coercive force : (மின்.) வல்லந்த விசை : எஞ்சிய காந்த சக்தியை பூச்சியத்திற்குக் குறைப்பதற்குத் தேவைப்படும் காந்த விசை

coffer : (க.க.) உட்கண்ணறை : தளமுகட்டின் உட்குழிவான கண்ணறை

coffer dam : காப்பனை : நீருக்கடியில் கடைகால் போட உதவும் நீர் புகாத கூண்டு அமைவு

cog : (எந்.) சக்கரப்பல் : இயக்க விசை படர்விக்கும் எந்திரச் சக்கரத்தின் பல். சில சமயம் பல்லிணைகளைத் தவறாகப் பற்சக்கரம் என்கிறார்கள்

cogging : (உலோ.) உலோகக் கட்டியாக்குதல் : உலோக வார்ப்புக் கட்டிகளை உருட்டுதல் அல்லது காய்ச்சி அடித்தல் மூலம் முழுதும் உருவாகாத உலோகக் கட்டிகளாக உருவாக்குதல்

cohesion : (இயற்.) அணுத்திரன் கவர்ச்சி : ஒரே வகையான மூலகங்களிடையில் உள்ள கவர்ச்சி

coil : (மின்.) திருகு சுருள் : வட்டத்திற்குள் வட்டமான வளைய அமைப்புடைய மின் இயக்கக் கம்பிச்சுருள். இதில் மின்னோட்டம் பாயும்போது ஒரு மின்காந்தப் புலம் உண்டாகிறது

coinage bronze : (உலோ.) நாணய வெண்கலம் : நாணயம் அடிப்பதற்குப் பயன்படும் ஒர் உலோகக் கலவை. செம்பும், 2.5% வெள்ளீயமும் 2.5% துத்தநாகமும் இதில் 95% வெள்ளியமும், கலந்திருக்கும்

coincidental starter : (தானி; எந்.) ஒருங்கியங்கு தொடக்கி : இது எந்திர இயக்கத்தைத் தொடங்கிவைக்கிற வகை அமைவு. இதில் கால்மிதி முடுக்குக் கட்டையின் மூலம் தொடக்க இயக்க விசையும், பெட்ரோல் பாய்வும் ஒரே சமயத்தில் கட்டுப்படுத்தப்படுகிறது

coining : (உலோ.) நாணயமடித்தல் : உலோகங்களில் முத்திரையிட்டு நாணயம் உண்டாக்குதல்

coir : நார் : கயிறு செய்யப்பயன்படும் தென்னை நார், கயிறு, கால் மிதி, வடம், தரைவிரிப்பு முதலியன செய்யப்பயன்படுகிறது

coke : கல்கரி : நிலக்கீலார்ந்த நிலக்கரியை அடைக்கப்பட்ட அடுப்புகளில் இட்டு சூடாக்குவதன் மூலம் வாயுக்களையும், மற்றத் தனிமங்களையும் எரித்து அகற்றிய பின் எஞ்சி நிற்கும் சுட்ட நிலக்கரி. ஒரு டன் நிலக்கரியிலிருந்து மூன்றில் இரண்டு டன் கல்கரி தயாரிக்கலாம். இதில் 90% கார்பன் கலந்திருக்கும். இது எரிபொருளாகப் பயன்படுகிறது

cold chisel : (உலோ.வே.) வல்லுளி : அனலிலிடாமலேயே உலோகங்களை வெட்டும் ஒருவகை வல்லுளி. இது உலோகச் சிம்புகள் வெட்டுவதற்குப் பயன்படுகிறது

cold drawn : (உலோ.) தண் நீட்டல் : அனலிலிடாமலே உலோகங்களைத் துளைப் பொறியிலிட்டு இழுத்து நீட்டுதல்

cold flow : (குழை.) உருமாற்றம் : நெகிழ்திற வரம்புக்கு அதிகமான ஒரு விசையை இடைவிடாது பயன்படுத்துவதன் மூலம் உண்டா



கும் பரிணாம மாற்றம் அல்லது உருத்திரிபு

cold forming : (உலோ.) உலோக உருவாக்கம் : உலோகத்தை வெட்டாமல் அதனைத் தேவையான வடிவத்தில் உருவர்க்குதல். உலோகத்தை நிலைகுலைத்தல், புறம் உந்தித் தள்ளுதல், பதிவச்சு செய்தல், சம்மட்டியால் ஆடித்தல், உருட்டுதல், வளைத்தல், இழுத்தல், சுழ்ற்றுதல் ஆகியவற்றின் மூலம் உருவாக்கம் செய்யலாம்

cold moulding : (குழை.) தன்வார்ப்படம் : சாதாரண வெப்ப நிலைகளில் வடிவங்களை உருவாக்கி, பின்னர் சூடாக்குவதன் மூலம் கடினமாக்குகிற ஒரு செய்முறை.

cold moulding compounds : (குழை.) தண்வார்ப்படக் கூட்டுப் பொருள் : சாதாரண அறை வெப்பநிலையில் வடிவங்களை உருவாக்கி, பின்னர் சூளைகளில் சூடாக்கி கடினமாக்கப்படும் வார்ப்படங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் கூட்டுப் பொருள்

cold rolled steel : (உலோ.) தண் உருட்டு எஃகு : இதனை ஆழமற்ற மூட்டு அனல் உலையில் எஃகு செய்யும் முறையிலோ (திறந்த உலை), காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடாகத் காற்றோட்டக் கீற்றுக்களைப்பாயவிட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்கும் பெஸ்ஸமர் முறையிலோ தயாரிக்கலாம். இதில் கார்பன் 0.2% முதல் 0.20% வரைக் கலந்திருக்கும். வெண்மையான பளபளப்பான பரப்புடையதாக இந்த எஃகு விற்பனை செய்யப்படுகிறது. எந்திர உதவியில்லாமலே இதனை வேண்டிய வடிவங்களில் அமைக்கலாம். இது கடினமானதாயினும் உறுதியானதன்று

cold rolling : தண் உருட்டல் : எஃகினைத் தண் உருட்டல் செய்வதன் மூலம் அதற்கு மிக அதிகமான விறைப்புத் திறனை அளிக்கலாம். ஆனால் அப்போது அதன் உரப்பும், ஒசிவுத் திறனும் போய் விடும். தண் உருட்டல் எஃகு, வெப்ப உருட்டல் எஃகை விட அதிக வளவளப்புடையதாக இருக்கும்

cold saws : தண் ரம்பங்கள் : உலோகங்களை சுழல் ரம்பங்களால் அறுப்பதற்கான விசைப்பொறி

cold storage : (குளி.) குளிர் சேமிப்பு : காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன் போன்ற அழுகும் பொருள்கள் பெருமளவுக் குளிர்பதன முறை மூலம் பாதுகாப்பாகச் சேமித்துவைத்தல்

collapsing tap : (எந்.) மடங்கு இழைப்புக் கருவி : எந்திர முறையில் புரியாணி உள்வரி இழைப்புதற்குப் பயன்படும் இது வகைக் கருவி. தானே திறந்திடும் வார்ப்புப் படிவங்களில் உள்ளது போன்ற அதே தத்துவமே இதிலும் பயன்படுகிற்து. ஆனால் இதில் வினைகள் எதிர்மாறாக நடைபெறும். இழைக்குச் சேதமின்றி அதிக விரைவாக உள்விரி இழைப்பதற்கு இக்கருவி பயன்படுகிறது

collar beam : (க.க) சாய்வு உத்தரம் : சாய்வான இரண்டு உத்தரக் கைகளை இணைக்கும் விட்டம்

collar oiling : (எந்.) வளைய எண்ணெய்ப் பூச்சு : அதிவேக எந்திரங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. தாங்கிகளிலுள்ள எண்ணெய்க் கலத்தில் செல்லும் ஒரு வளையம் இருசுக் கட்டையின் மீது கவிழ்க்கப்படுகிறது அல்லது அதனுடன் இணைக்கப்படுகிறது. வளையத்திலிருந்து எண்ணெயை



வழித்து, இருசுக் கட்டையின் மீது பரவலாகப் பூசுவதற்காகத் தாங்கியின் மேற்பகுதியில் துடைப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன

collar screw : (பட்.) வளையத் திருகு : இதுவழக்கமான கொண்டைத் திருகுபோலவே பயன்படுத்தப்படுகிறது

collar stud : (எந்.) வளையக் குமிழ் : இந்த வளையூத் குமிழ் ஒரு முனையில் குமிழையும் மறுமுனையில் ஒரு சுழல் தண்டினை அல்லது கதிரினையும் கொண்டிருக்கும். இவ்விரண்டினை குமிழின் உள்உறுப்பாகிய ஒரு வளையம் பிரிக்கிறது. இது பல்லிணைகளையும், தாங்கிகளையும் தாங்கிச் செல்ல உதவுகிநிறது

collector : ஒப்பாய்வாளர் : ஏடுகள். நூல்களின் பக்க ஒழுங்கு முதலியவற்றை ஆராய்ந்து ஒப்பிட்டுப் பார்ப்பவர்

collector ring : (மின்.) திரட்டு வளையம் : இது ஒரு வட்ட வடிவமான செப்புத்துண்டு. ஒரு நிலையான உறுப்பிலிருந்து ஒர் இயங்கும் உறுப்புக்கு மின்னோட்டத்தைக் கொண்டு செல்வதற்காக ஒரு தூரிகை இந்த வளையத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும்

collet : (எந்.) வளையம் : இது பற்றிக் கொள்வதற்கான ஒரு வளையம் அல்லது ஒரு பற்றுக் கருவி. கடைகளில் இதனைக் குதை குழிவுகளைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர்

collodion : கோலோடியோன் : ஒளிப்படத் தொழிலிலும், அறுவை மருத்துவத்திலும் பயன்படும் வெடியகக் கரைசல். இதில் ஆல்கஹாலும், ஈதரும் கலந்த ஒரு கலவையில் செல்லுலோசின் தரங்குறைந்த நைட்ரேட் கலந்திருக்கும். ஒரு பரப்பின் மீது ஒரு படலம் ஏற்படுத்துவதற்கு இது பயன்படுகிறது

colloid : (வேதி) கரை தக்கை : கரைந்த நிலையிலும், சவ்வூடு செல்லுமளவு கலவாப் பொருளாகவும் உள்ள ஒரு கூழ் நிலைப் பொருள். 5-100 மில்லி மைக்ரோன் வடிவளவுள்ள துகள்கள் சிதறச் செய்யப்படும்போது கரை தக்கை நிலையடைகின்றன. பல்வேறு செயற்கைப் பிசின்கள் இந்த வகையைச் சேர்ந்தவை

collotype : (அச்சு.) அச்சுமென் தகடு : புத்தகப் படங்கள், விளம்பரங்கள் முதலியவற்றை அச்சிடுவதற்காகக் கதிர்வேதி முறையில் உருவாக்கப்பட்ட மென்தகடு

colonial : (க.க.) குடியேற்றஞ் சார்ந்த : அமெரிக்காவில் ஆதிக்கக் குடியேற்றக் காலத்திலிருந்து ஐக்கிய அமெரிக்க அரசு அமைக்கப்படும் வரையிலான காலத்தின் போது கையாளப்பட்டு வந்த கட்டிடக் கலைப்பாணி. அமெரிக்கப் புரட்சிக்கு முந்தியகாலத்திய பாணி அறைகலன்களையும் இது குறிக்கும்

colonnade : (க.க.) தூண் வரிசை : சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்ட தூண் வரிசை

colophon : (அச்சு.) அணியுரை : ஏடு குறித்த தகவல்களைக் கொண்டிருக்கிற பழங்காலப் புற அணியுரை

colour : வண்ணம், நிறம் : ஒரு மாலையின் அல்லது வண்ணக் கரைசலின் நிறக் கலவைகளில் ஏதேனும் ஒன்று, சில வண்ணங்களை ஈர்த்துக் கொள்ளவும், வேறு



சிலவற்றை இடமாற்றி அனுப்பவும் இது பயன்படுத்தப்படுகிறது

colour filter : வண்ணத் திரைதகடு : வேண்டிய சில ஒளிக்கதிர்களை மட்டும் ஊடுருவி விட வல்ல திரைத்தகடு

colour picture tube : (மின்.) வண்ணப்படக் குழல் : தொலைக்காட்சியில், எதிர்மின் கதிர்க் கொடியைத் திருப்பி ஒளியியக்கத் திரைமீது வண்ணப்படமாக விழச்செய்யும் அமைவு

colour signal : (மின்.) வண்ணச் சமிக்கை : வண்ணத் தொலைக்காட்சிப் படத்தில் வண்ண முனைப்புத் திறனைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சமிக்கை முறை

colour for tempering : பதமாக்கும் வண்ணம் : எஃகு வகையினை அடுத்தடுத்து வெப்பமூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும், நீட்டிப்பு ஆற்றலும் உடைய நிலைக்குப் பதப்படுத்துங்கால், வெண்மை. இளம்பழுப்பு. அடர் நீலம், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்கள் தோன்றுகின்றன. தேவையான கடினத் தன்மையைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட நிறம் தோன்றும்போது எஃகின் பதனாக்கம் கண்டறியப்படுகிறது

colour form : (அச்சு.) வண்ண உருப்படிவம் : அச்சுப் பணியில் இரண்டாம் வண்ண அச்சுப்பதிப்பு உருப்படிவம்

colour-harden : (உலோ.) வண்ணச் செறிவூட்டுதல் : பரப்பில் கரியக மூட்டுவதன் மூலம் இரும்பைக்கடும் பதப்படுத்துவதன் வாயிலாக ஒரு கவர்ச்சியான வண்ணத்தை உண்டாக்குதல்

colour proof : (அச்சு.) வண்ணப் பார்வைப் படிகள் : அச்சுருப் பதிவு செய்யப்பட்ட வண்ண அச்சுப் பதிவுத் தகடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பார்வைப் படிகள்.

colour proofs - progressive : (அச்சு.) படிப்படியான வண்ணப் பார்வைப் படிகள் : ஒவ்வொரு வண்ணத்திற்கும் தனித்தனி அச்சுப்பதிவுத் தகடுகளை எடுத்து, ஒரு வரிசை முறையில் அடுத்தடுத்து வண்ணங்களை அச்சிட்டு ஒருங்கிணைவாக எடுக்கப்பட்ட தனிப்பார்வைப் படிகள்

colour scheme : நிற அமைப்புத் திட்டம் : ஒர் அச்சுப் பணிக்காக வண்ணங்களைப் பொதுவாகக் கலந்து அமைப்பதற்கான திட்டம்

colour work : (அச்சு.) வண்ண வேலைப்பாடு : பொதுவாக இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வண்ணங்களில் அச்சிடுவதற்கான வண்ண அச்சுப் பதிவுத் தகடுகளைக் குறிக்கும் சொற்றொடர்

colt’s armory press : (அச்சு.) கோல்ட் கட்டி அச்சு எந்திரம் : அச்சு தாள் அழுத்தும் தகட்டுப் பாள முறையில் அச்சிடக்கூடிய ஒரு வகைக் கனரக அச்சு எந்திரம்

column : (க.க.) (1) தூண் : நீள்வாக்கு அச்சின் திசையில் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய நிமிர் நிலையான தூண்

(2) பத்தி: பத்திரிகைகளில் பக்கத்தின் அகலக் கூறான பத்தி நிரல்

combination : (வேதி.) தனி இணைப்பு : இரண்டு அல்லது அதற்கு மேற்ப்ட்ட தனிமங்களின் இணைப்பு

combination chuck : (எந்.) இணைப்புக் கவ்வி : பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு பற்று கருவி. இது தற்சார்பான தடைச்செயல் முறையினையும் கொண்டிருக்கும் 

combination die : (எந்.) இணைப்பு வார்ப்புப் படிவம் : ஒரு பாளத்தில் கோட்டுக் குறிவெட்டுவதற்கும், அந்தப் பாளத்தில் தேவையான வடிவங்களை வரைவதற்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்ட வார்ப்புப் படிவம்

combination drill counter sink : இணைப்பு துரப்பணம் மற்றும் பள்ளம் : ஒரு கடைசல் எந்திரத்தின் மையங்களிடையே பிடித்துக்கொண்டு மையக் குறியிடுவதற்குப் பயன்படுகிறது. பார்க்க மையத் துரப்பணம்

combination halftone : (அச்சு.) இணைப்பு நுண்பதிவுப் படம் : இருமறி நிலைத் தகடுகள் தேவைப்படுகிற நுண்பதிவுப் படமும் வரித்தகவுகளும் கொண்ட ஒரு செதுக்குருவம்

combination plate : (அச்சு) இணைப்பு அச்சுத் தகடு : நுண்பதிவுப் படமும், கோட்டு வரியும் ஒருங்கிணைவாக ஒரே தகட்டில் செதுக்கப்பட்டுள்ள ஒரு தகடு

combination pliers : இணைப்பு சாமணம் : ஒரு நகரும் இணைப்பு மூலமாக வேண்டிய வடிவளவுக்கு வாய்திற்க்கச் செய்யும் வகையில் தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய ஒருவகைக் குறடு இதன் புற அலகில் அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உள் அலகு உருண்ட பொருள்களைப் பற்றக் கூடிய வகையில் தடங்கொண்டதாக இருக்கும்

combination square : (பட்.) இணைப்புச் சதுரச் சட்டம் : நகரக்கூடிய ஒரு சதுரக் கொண்டையுடன், சரியான காப்பு மட்டமும், மையக் கொண்டையும் உடைய ஒரு சதுரச் சட்டம்

combination switch : (மின்.) இணைப்பு விசை : அழல் மூட்டுவதையும், ஒளியையும் கட்டுப்படுத்துவதற்காக உந்து வண்டிகளில் பயன்படுத்தப்படுவது போன்ற ஒரு விசை

combustion : (வேதி.) கனற்சி : எளிதில் தீப்பற்றும் தன்மையுடைய ஒரு பொருள். ஆக்சிஜனுடன் வேதியல் முறையில் ஒருங்கிணைந்து வெப்பம் உண்டாக்கும் விளைவு

combustion chamber : (தானி.எந்.) கனற்சிக் கலம் : நீள் உருளையில் உந்து தண்டிற்கு நேர் மேலே நீள் உருளையின் கொண்டையில் உள்ள இடைவெளி

commericial efficiency of dynamo : நேர்மின்னாக்கி வாணிகத் திறம்பாடு : இது உட்பாட்டினை வெளிப்பாட்டினால் வகுப்பதன் மூலம் அறுதியிடப்படுகிறது. இது சதவீதத்தில் குறிப்பிடப்படும்

commercial efficiency of motor : (மின்.) மின்னோடியின் வாணிகத் திறம்பாடு : விசை தடுப்புக்கு திரைத் திறனை மின்விசைக் குதிரை திறனால் வகுப்பதால் கிடைக்கும் ஈவு, அல்லது வெளிப்பாட்டினை உட்பாட்டினால் வகுத்துச் சதவீதத்தில் குறிக்கும் அளவு

commercial flux : வாணிக இளக்கி : ஒரு வாணிகப் பெயரில் விற்பனை செய்யப்படும் ஓர் இளக்கும் பொருள். இது ஒட்டவைப்பு. பொடி வைத்திணைத்தல், பற்ற 

வைத்தல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது

comminute : நுண்துகளாக்குதல் : திடப்பொருள்களை அரைத்தல் அல்லது தூளாக்குதல் மூலம் நுண் துகள்களாகச் செய்தல்

common brick : பொது ஆதாரச் செங்கல் : கரடுமுரடான வேலைக்கு அல்லது பள்ளம் நிரப்புவதற்கு அல்லது சாய்வு அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் செங்கல்

common base : (மின்.) பொது ஆதாரம் : ஒரு மின்மப்பெருக்கி (டிரான்சிஸ்டர்) மின்சுற்று வழி. இதில் உட்பாட்டு, வெளிப்பாட்டு மின்சுற்றுவழிகள் பொதுவான ஆதாரத்தைக் கொண்டிருக்கும்

common collector : (மின்.) பொதுத் தொகுப்பான் : உட்பாட்டு, வெளிப்பாட்டு மின்சுற்று வழிகளுக்குத் தொகுப்பான் பொதுவாக அமைந்துள்ள ஒரு மின் பெருக்கிச் சுற்று வழி

command : (கணிப்.) ஆணைச் சமிக்கை : (1) ஒரு நிகழ்வை அல்லது செயல் முறையைத் தொடக்கி வைக்கிற ஆணைச் சமிக்கை. (2) கணிப்பொறியில், ஒர் அறிவுறுத்தத்தின் விளைவாக நிகழ்கிற பல சமிக்கைகளின் ஒரு தொகுதி

common emitter : (மின்.) பொது உமிழ்வான் : உட்பாட்டு, வெளிப்பாட்டு மின்சுற்று வழிகளுக்கு உமிழ்வான் பொதுவாக அமைந்துள்ள ஒரு மின்பெருக்கிச் சுற்றுவழி

common rafter : (க.க.) பொதுக் கைமரம் : ஒரு கூரையின் எந்தப் பகுதிக்கும் பொதுவான இறைவாரக் கைமரம்

commutating flux : (மின்.) திசைமாற்றுப் பெருக்கு : தன் தூண்டல் மின்னியக்க விசையைச் சமனப்படுத்துவதற்கான மின்னியக்க விசையை உண்டாக்குவதற்குத் தேவையான மின் பெருக்கு

commutating pole : (மின்.) திசைமாற்று முனை : மின்னக மின்னோட்ட்ங்களின் குறுக்குக் காந்த மூட்டுதலை ஒரு நேர் மின்னாக்கியின் இரு முனைகளுக்குமிடையில் செருகப்படும் ஒரு மின்காந்தச் சலாகை

commutation : (மின்.) திசை மாற்றம் / நுதல் : பார்க்க : திசை மாற்றி

commutator : (மின்.) மின்னோட்டத் திசைமாற்றி : மின்னோட்ட அலைகளைத் திசை மாற்றித் திருப்பி விடும் கருவி

compact car : (தானி.) கச்சிதமான கட்டமைவான உந்து வண்டி : எளிதாக நிறுத்தி வைப்பதற்கும், குறைந்த செலவில் பேணுவதற்கும் குறைந்த அளவு எரிபொருளில் அதிகதூரம் செல்வதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட கச்சிதமான உடலமைப்புக் கொண்ட ஓர் உந்துவண்டி

comparator : (பட்.) ஒப்பீட்டு அளவி : இது ஜேம்ஸ் ஹார்ட்னஸ் என்பவரால் விடிவமைக்கப்பட்ட பொறியமைவு. திருகிழைகளையும் அவை போன்ற உறுப்புகளையும் அளவிடுவதற்கு இது பயன்படுகிறது. திருகிழையை விரும்பிய அளவுடன் ஒப்பிடுவதற்கு ஒரு வரைபடத்தில் விழும் விரிவான நிழலை விழவைத்து இந்த அளவீடு செய்யப்படுகிறது

compass : திசைகாட்டி : வட்டமான மேற்பரப்பில் அளவுகள் குறிக்கப்பட்டு வட்டமாகச் சுழலும் முள்ளிணைக் கொண்ட ஒரு கருவி. முள்ளின் முன்யைக் கொண்டு திசையைன்றியலுாம். மின்னியலில், மையத்தில் சம நிலையிலுள்ள ஒரு நிரந்தரமான


காத்தமுள். பூமியின் மேற்பரப்பின் திசைகளை அறிவதற்காக இந்த முள் ஒரு வரைபடத்திற்கு மேலே அமைக்கப்பட்டிருக்கும்

compass plane : இழைப்புளி : வளைந்த மரத்தை மழமழப்பாக்கும் ஒரு கருவி

compass saw : (மர.வே.) வளைவு ரம்பம் : வளைவாக வெட்டும் ரம்பம். சிறுசிறு வட்டங்களை வெட்ட இது உதவுகிறது

compatibility : (மின்.) ஒத்தியல்பு : தொலைக்காட்சியில் நிறமிலி அமைவு ஒளிநிழல் வண்ணம் மட்டும் ஏற்கும் நிலை

compendium : செறிவடக்க ஏடு : ஒரு பெரிய ஏட்டின் சிறு சுருக்கப் புதிப்பு. இதில் ஏட்டின் நுதல் பொருள் விரிவாகல்லாமல் சுருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும்

compensated Wattmeter : (மின்.) ஈடுசெய் மின்விசை மானி : உள்நிலை மின் இயக்கக் கம்பிச் சுருளுடன் ஒரு தொடர் வரிசையில் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஈடு செய் மின் கம்பிச் சுருளையுடைய ஒரு மின் விசைமாணி. உள்நிலை மின் இயக்கக் கம்பிச் சுருளில் எந்திர இயக்கம் காரணமாக உண்டாகும் விசை உறிஞ்சலினால் ஏற்படும் பிழையைத் திருத்துவதற்கு உதவுகிறது

compensating coil : (மின்.) ஈடுசெய் மின்கம்பிச் சுருள் : ஒரு மின் மானியிலுள்ள மின்கம்பிச் சுருளில் ஏற்படும் எந்திர உராய்வினை ஈடுசெய்வதற்கு உதவும் ஒரு மின்கம்பிச் சுருள்

compansator : (மின்.) ஈடுசெய் கருவி: பெரிய மாற்று மின்னோட்டத் தூண்டு மின்னோடிகளை இயக்குவதற்கான ஒரு விசை அமைப்பினைக் கொண்ட தானியங்கி மின்மாற்றி

compensator : (மின்.) ஈடுகட்டு மின் மாற்றி : பெரிய மாற்று மின்னோட்டத் தூண்டு மின்னோடிகளின் இயக்கத்தைத் தொடங்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தானியங்கி மின்மாற்றி

complementary angles : (கணி.) நிரப்புக் கோணம் : செங்கோண அளவாகிய 90° கோணத்தில் குறைபடும் கோணத்தின் அளவு. (உ-ம்: 90° கோணத்தின் நிரப்புக் கோணம் 30° (90-60 = 30)

complementary colour : குறைநிரப்பு வண்ணம் : ஒருங்கிணைக்கப் படும்போது வெண்மையான அல்லது ஏறத்தாழ வெண்மையான ஒளியை உண்டாக்குகிற இரு வண்ணங்களில் ஒரு வண்ணம்

completed circuit : (மின்.) நிறைவுறு மின் சுற்றுவழி : மின்னோட்டத் தொடர்பு முற்றுவிக்கப்பட்ட ஒரு மின் சுற்றுவழி, இதனை முடிப்பு மின் சுற்றுவழி எனறும் கூறுவர்

complex : பல்திறக் கூட்டொருமை : பல்வேறு உறுப்புகளின் சிக்கலான பல்கூட்டுத் தொகுதி

complex steel : (உலோ.) கலவை எஃகு : இரண்டுக்கு மேற்பட்ட உலோகக் கலவைத் தனிமங்களை கொண்ட எஃகு

complicate : சிக்கலாக்கு : கையாள்வதற்கு கடினமாக இருக்கு மாறு குளறுபடியான சிக்கலாக்குதல்

compo board : காரை அட்டை : சுவரை அழகு செய்யப் பயன்படும் சிமிட்டி கலந்த காரை கொண்ட பசைக் கலவப் பொருள்

component : அமைப்பான் : இணை வாக்க விளைவினை உண்டாக்கு வதற்கு ஒருங்கிணைகிற பல்வேறு விசைகளுள் ஒன்று

composing machines : (அச்சு.) அச்சுக்கோப்பு எந்திரம் : எந்திர முறையில் அச்சுக் கோப்பதற்கான எந்திரங்கள். தனித்தனி அச்சுருவங்களை வார்த்து அமைக்கும் எழுத்துருக்கு அச்சுப்பொறி. அச்சுருக்கோப்பு இல்லாமலே எழுத்துருக்களை விரிப்பள்ளங்களாக உருக்கி வார்த்து அமைக்கும் வரி உருக்கு அச்சுப்பொறிபோன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை

composing room : (அச்சு.) அச்சுக்கோப்பு அறை : அச்சிடுவதற்காக அச்சுக்கோப்பு, செய்தலும்,அவற்றைப் பக்கப் படிவங்களாக உருவாக்குதலும் நடைபெறும் அறை

composing rule : (அச்சு.) அச்சுக்கோப்பு இடைவரித்தகடு : இது பித்தளையால் அல்ல்து எஃகினாலான ஒரு தகடு. இது சாதாரணமாக இரு புள்ளி கனமுடையதாக இருக்கும். இதில் அச்செழுத்துகளை அடுக்கி அச்சுக்கோப்புச் செய்வார்கன்

composing stick : (அச்சு.) அச்சுக்கட்டை : பெட்டி போன்ற அச்சுக்கோப்புக் கருவி. இதில் அச்செழுத்துகளை வரிவரியாக அடுக்குவர்

composite order : (க.க.) பல் வகைப்பாணி : கட்டிடக் கலையில் பல்வகைப் பாணிகள் மிடைந்து மிளிர்கிற கலவை

composite signal : (மின்.) கூட்டுச் சமிக்கை : படத்த்கவல்,வெறுமையாக்கம், ஒரு மித்த நிகழ்வுச் சமிக்கைகள் உட்பட தொலைக்காட்சிச் சமிக்கைகள்

composition : இணைப்பாக்கம் : பல உறுப்புகளை ஒருங்கிணைத்து ஒரு முழு உருவத்தை உருவாக்குதல் நுண்கலையில் கலைப்படைப் பின் பொதுவான அமைப்பு முறை. அச்கக்கலையில் அச்சுக்கோப்பு, அச்சுப்பக்கம் ஆக்குதல் முதலிய பணிகளின் ஒருங்கிணைப்பு

composition of forces : (எந்.) விசைகளின் இணைப்பாக்கம் : பல் திற விசைகள் ஒரு முகமாகச் செயற்படுமாறு செய்வதற்கான தனியொரு விசையினைக் கண்டறியும் முறை

compositor : (அச்சு.) அச்சுக் கோப்பவர் : அச்செழுத்துக்களை கையினால் அச்சுக் கோப்பவர்

compound : (வேதி.) கூட்டுப் பொருள் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒருங்கிணைந்து தம் இயல்புமீறிய புதுப் பண்புகளுடன் புதுப்பொருளாகும் நிலையுடைய கலவை

compound arch : (க.க.) கூட்டுக் கவான் : பொது மையமுள்ள பல கவான்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து அமைத்து அமைக்கப்பட்ட ஒருவகை கவான்

compound circuit : (மின்.) கூட்டு மின் சுற்று வழி : வரிசைத்தொடரில் இணையாக இணைக்கப்பட்ட தடையமைலுகளைக் கொண்ட மின்சுற்று வழிகள்

compound generator : (மின்.) கூட்டு மின்னாக்கி : பார்க்க; கூட்டுச் சுருணை

compound motor : (எந்) ரம்; கூட்டு மின்னோடி : பார்க்க; கூட்டுச் சுருணை

compound rest : (எந்.) கூட்டு ஆதாரம் : கடைசல் எந்திரத்தில் இரண்டாம் நிலைச் சறுக்குத்தளத் கருவி ஆதாரமும், குறுக்குச் சறுக குத் தளத்தின மேல் ஏற்றப்பட்டுள்ள சுழல் தகடும் ஆகும். இதன் மூலம் கடைசல் எந்திரததின் ஊட்டத்தினைச் சார்ந்திராமல் கையினால் ஊட்டுவதற்கு முடிகிறது. இது தேவையான கோணத்திற்குத் திரும்புவதற்கு இது உதவும்

compound sliding table : (எந்.) கூட்டுச் சறுக்குத் தளப் பலகை : வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருளை மரையானியால் பிணைத்து வைத்துக்கொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ள எந்திர சாதனத்தின் பலகை. இதில் நீளவாக்கிலும் குறுக்கு வாக்கிலும் நகர்வதற்கான இரு அமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கும்

compound wound : (எந்.) மின்வாய் முனைகள் ஒவ்வொன்றிலும் உள்ள இணைப்புலச் சுருணையின் ஒரு பகுதியின் உச்சியில் ஒரு தொடர்புலச் சுருணையின் ஒரு பகுதி சுற்றி வைக்கப்பட்டுள்ள ஒரு மின்னாக்கி அல்லது மின்னோடி

compound wound continuous current dynamo : (மின்.) கூடுச் சுருணை தொடர் மின்னோட்ட நேர் மின்னாக்கி : இது நேர் மின்னோட்டத்தை உண்டாக்கும் ஒரு மின்னாக்கி.இதில் அதன் இணைப் புலத்திற்கும் தொடர் புலத்திற்கும் இடையில் ஒரு திரள் இணைப்பு பயன்படுத்தப்படுகிறது. இதனால் புலத்தின் வலிமை அதிகரிக்கிறது, மின்னோட்ட அளவும் அதிகரிக்கிறது; சேர் முனையில் மின்னழுத்தம் இயல்பாகக் குறையும் போக்குத் தடுக்கப்படுகிறது

compressed air : அழுத்தியகாற்று : காற்றழுத்தத்தால் இயங்கும் கருவிகளுக்கு விசையளிக்கும் ஆதாரமாக இருக்கும் அளவுக்கு அழுத்த மூட்டிய காற்று

compressibility : (இயற்.) அழுத்ததிறன் : இது பருப்பொருள்களின் ஒரு பண்பு. அழுத்தத்தினால் பரும அளவு குறையும் தன்மை

compressing : அழுத்திச் செறிவாக்கம் : ஒரு புத்தகத்திற்கு உறையிட்டவுடன் அதனை ஒரு பெரிய அழுத்து கருவியில் வைத்து இறுக்கமாக அழுத்தி அது காயும் வரை வைத்திருப்பார்கள். இதனை 'அழுத்திச் செறிவாக்கம்' என்பர்

compression : அழுத்தம் : அழுத்தம் கொடுத்து அடர்த்திச் செறிவாத்குதல். இது இழுப்பு விசைக்கு நேர்மாறானது

compression braking : (தானி; எந்.) அழுத்தத்தடை : உந்துவண்டி ஒரு குன்றிலிருந்து இறங்கும் போது தடைவிசை ஏற்படுத்துவதற்காக எஞ்சினின் அழுத்தத்தைப் பொறுத்து எஞ்சினுக்குச் செல்லும் வாயுவின் அளவைக் குறைத்துத் தடையுண்டாகுமாறு செய்தல்

compression coupling : (எந்.) நுனிநோக்கிச் சிறுத்துச் செல்லும் பிணைப்பு உறுப்பு. இணைத் தண்டுக்கு இணையாகப் பல மரையாணிகள் வரிசையாக அடிக்கப்படும்போது இது இணைத் தண்டினை இறுக்ப் பற்றிக் கொள்கிறது

compression gauge : (தானி; எந்.) அழுத்த அளவி : கனற்சி அறையிலுள்ள வாயுக்களின் மீதான அழுத்தத்தினை ஒரு சதுர அங்குலத்திற்கு இத்தனைபவுண்டு என்ற் அளவில் பதிவுசெய்யக் கூடிய ஓர் அளவுமானி

compression ignition engine : (வானூ.) ஆழத்த சுடர் மூட்டு எந்திரம் : இந்த வகை எந்திரத்தில் எரிபொருள் நீள் உருளையில் தெளிக்கப்பட்டு, காற்றினை அழுத்துவதால் உண்டாகும் வெப்பத்தின் மூலம் சுடர் மூட்டப்படுகிறது

compression moulding : (குழை.) அழுத்த வார்ப்படம் : இது பிளாஸ்டிக்கில் வார்ப்படஞ் செய்வதற்கான ஒரு முறை. இது சூட்டால் நிலையாக் இறுகுந் தன்மையுடைய பிளாஸ்டிக் கூட்டுப் பொருள்களை ஆக்கப் பொருளாக வடிவாக்கம் செய்வதற்குப் பயன்படுகிறது. இந்த முறையில் முன்னரே சூடாக்கப்பட்ட வார்ப்படக் கூட்டுப் பொருள் ஒரு திறந்த வார்ப் படத்தில் ஊற்றப்பட்டு, வார்ப் படம் மூடப்படுகிறது. கீழ்நோக்கி இயங்கும் ஒர் அழுத்தக் கருவி மூலமாக வெப்பமும் அழுத்தமும் செலுத்தப்படுகிறது. இதனால் வார்ப்படக் கூட்டுப் பொருள் மென்மையடைந்து, பள்ளங்களில், அழுந்திப் பதிந்து வேதியியல் மாற்றத்திற்குள்ளாகி இறுக்கமடைகிறது

compression ratio : (தானி, எந்.) ஆழுத்த விகிதம் : உந்து வண்டியில் சுழல்தண்டு கீல்நிலை வீச்சின் இறுதியில் இருக்கும்போது உள்ள வாயுமண்டல அழுத்தத்திற்கும், அழுத்த வீச்சின் உச்சநிலையில் சுழல் தண்டு இருக்கும்போது உள்ள ஆழுத்தத்த்திற்குமிடிையிலான விகிதம். இது அழுத்த அளவுகளில் கணக்கிடப்படுகிறது

compression ring : (தானி, எந்.) அழுத்த வளையம் : இது சுழல் தண்டுக்கான ஒருவகை வளையம். இது அழுத்த இழப்பீட்டினைக் குறைப்பதற்கும் எண்ணெய் முத்திரையை நிலைப்படுத்தி வைப்பதற்கும் பயன்படுகிறது. சுழல் தண்டில் உச்சியிலும் இரண்டாவதாகவும் உள்ள வளையங்கள் இந்த வகையினதாக இருக்கும்

compression spring : (எந்.) அழுத்த விற்கருள் : இது திருகுகழலான ஒருவகை விற்சூருள்.இது அழுத்தத்தின் கீழ் செய்ற்படும்போது குறுகலாகும் தன்மையுடையது

compression stroke : (தானி, எந்.) அழுத்த வீச்சு : ஒரு நான்கு சுழற்சி எந்திரத்தில் உள்ள சுழல் தண்டின் இரண்டாவது வீச்சு. உள்ளிழுப்பு ஒரதர், வெளியேற்று ஒரதர் இரண்டும் முடியிருக்கும் போது இந்த வீச்சு உண்டாகிறது

compressor : (குளி.) அழுத்தி : ஒரு குளிர்பதனச் சாதனத்தில் அழுத்தப்பட்ட சூடான வாயு குளிர்பொருளைத் திரவ நிலைக்கு மாற்றுவதற்காக வடிகலத்திற்குள் செலுத்துவதற்கான இறைப்பான்

compressive strength : (பொறி.) அழுத்த வலிமை : குறுகலாக்குவதற்கு அல்லது நெருக்குவதற்கு அழுத்த முனையும் விசைகளுக்கான தடை

computer : (கணி.) கணிப்பொறி : சிக்கலான கணிதவியல் கணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய தகவல்களை உட்புறத்தில் சேமித்து வைத்திருக்கும் ஒரு பொறியமைவு. எண்மானக்கணிப் பொறிகள் எண்மான வடிவில் தகவல்களைக் கணிக்கின்றன. இவை ஒத்திசைவுக் கணிப்பொறிகளை விடத் துல்லியமாகக் கணிக்கக் கூடியவை. எழுத்தடுக்குப் பணிமுதலாக அனைத்துத் துறை பணிகளுக்கும் உதவும் உந்து சக்தியாக கணிப்பொறியின் பணி விரிந்துள்ளது

concave : உட்குழிவான / உட்குழி வாக்கு; உட்குழிவாக்கப்பட்டது; மேல் வளைவு; கிண்ணம் போன்ற வடிவுடையது: பள்ளமானது concealed wiring : (மின்.) மறை வடக்கக் கம்பியிணைப்பு : சுவரில் அல்லது தரையில் மின்கம்பி இணைப்புக் கொடுக்கும்போது, கம்பி வெளியே தெரியாதவாறு மறைவடக்கமாக அமைத்தல்

concentrated : (வேதி.) செறிவாக்கிய : கரைசலில் கரைபொருளின் அணுத்திரள் மிகு வீதத்தில் இருக்குமாறு செறிவாக்கம் செய்யப்பட்டது

concentrated load : (க.க.) ஒரு முகப்படுத்திய பாரம் : உத்தரத்தில் இரும்புத் துாலத்தில் அல்லது கட்டுமானத்தில் பாரம் ஒரிடத்தில் ஒரு முகமாகப் படியுமாறு அமைத்தல்

cencentric : பொது மையம் கொண்டுள்ள : ஒரு பொதுவான மையத்தைக் கொண்டிருப்பது

cencentric jaw chuck : (எந்.) பொதுமையத் தாடைக் கல்வி : தாடைகள் அனைத்தும் ஒரு பொதுவான செயல்முறை மூலம் மையத்தை நோக்கி அல்லது மையத்திலிருந்தும் சம அளவில் நகரும் வகையில் அமைப்புடைய ஒரு பற்றுக் கருவி

conception : புனை திட்டம் : மனத்தில் கருத்துருவாக உருவாகியுள்ள ஒரு திட்டம் அல்லது கருத்துப் படிவம்

concrete : திண்காரை/கான்கிரீட் : சிமென்ட், மணல், சரளை ஆகியன வேண்டிய வீத அளவுகளில் கலந்து தயாரிக்கப்படும் கட்டுமானக் காரை

concrete blocks : (க.க.) திண்காரைப் பாளங்கள் : குறுகிய இடை வெளிகளில் திண்காரையை இட்டு வார்த்தெடுக்கப்பட்ட பாளங்கள் சுவர்கள் கட்டுவதற்குப் பயன்படுகின்றன

concurrent forces : (எந்.) ஒருங்கிணைவு விசைகள் : ஒரு பொதுவான புள்ளியிலிருந்து புறப்படுகிற அல்லது ஒரு பொதுவான புள்ளியில் சென்று கூடுகிற விசைகள்

condensation pump : உறைமான இறைப்பி : நீராவி மீள்வரிவிலிருந்து திரவ உறைமானத்தை அகற்றுவதற்கான ஒரு சாதனம்

condensation resins : (குழை.) உறைமான பிசின்கள் : ஆக்சிஜன் ஊட்டப்படுவதால் இரு நீரக அணுக்கள் குறைவுபட்ட வெறிய மாகிய ஆல்டிஹைடு வகையில் ஒன்று. ஃபினோலால்டிஹைடு பிசின்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. இறுதியான ஆக்கப் பொருள் உறைமான மீச்சேர்மங்கள் எனப்படும்

condensation trail : செறிவுப் புகைத்தடம் : சில சூழ்நிலைகளில் பறக்கும் ஏவுகணை அல்லது வேறு கலம் பின்புறமாக உமிழ்ந்து செல்லும் மேகம் போன்ற வெண் புகைத்தடம். இது நீர்த்துளிகளால் அல்லது சிலசமயம் பனிக்கட்டிப் படிவங்களால் உண்டாகிறது

condensed : (அச்சு.) குறுக்கப்பட்ட : அச்சுக் கலையில் அச்செழுத்துக்களைக் குறுகிய முகப் புடையனவாகச் செய்திருப்பது. குறுகிய முகப்புடைய அச்செழுத்து என்பது அதன் உயரத்துக்குக் குறைந்த விகிதத்தில் கனம் உடைய அச்செழுத்தாகும்.

condenser : (மின்.) மின்விசையேற்றி வடிகலம் :

(1) மின் ஆற்றலின் வீறு பெருக்குவதற்கான அமைவு

(2) நீராவிப் பொறியில் ஆவியை நீர்ப்பொருளாக மாற்றுவதற்கான அமைவு

condenser : (குளி. பர.) வடிவாலை : குளிர்பதனச் சாதனத்தில் ஆவியாகிய குளிருட்டும்பொருளை வெப்பத்தை நீக்குவதன் மூலம் திரவமாக்குவதற்கான குழாய்களின் அமைவு

condenser antenna : விசையேற்ற உணர்கொம்பு: கம்பியில்லாத தந்தியில் வானலையை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் குறுகிய உணர்கொம்பின் அலை நீளத்தை அதிகரிப்பதற்குப் பயன்படும் ஒரு குறுகிய மின்சுற்று வழி

condenser capacity : (மின்) மின் விசையேற்றத் திறன்: பார்க்க: கொள்திறன்

condenser dielectric : (மின்) மின் விசையேற்றக் காப்பு: மின் விசையேற்றத் தகடுகளுக்கிடையிலான மின்காப்பாகப் பயன்படுத்தப்படும் பொருள்

condenser electrolyte : (மின்) மின்விசையேற்றப் பகுப்பான் : திரவ வகையான மின் விசையேற்றியில் பயன்படுத்தப்படும் கரைசல்

condenser plate : (மின்) மின் விசையேற்றுத் தகடு : பார்க்க : தகட்டு மின்விசையேற்றி

conductance : (மின்) மின் கடத்துத் திறன்: மின்னூடு கடத்தியின் மின்கடத்தும் ஆற்றல். இது மின்தடைத் திறனுக்கு நேர் எதிரானது

conduction: (மின்) மின் கடத்தல்: செம்புக் கம்பி போன்ற மின்கடத்தும் பொருளின் வழியாக மின்னோட்டம் செல்லும் அளவு

conduction band : (மின்) கடப்புத் திறன் : ஓர் அணுவின் புற ஆற்றல் திறன்

conductivity: (மின்) ஊடு கடத்தும் ஆற்றல் : மின்னோட்டத்தைக் கொண்டு செல்லுவதற்கு ஒரு பொருளுக்குள்ள திறன்

conductor : (மின்) மின் கடத்தி: மின்னிசையை எளிதாகக் கடத்தக் கூடிய ஒரு பொருள்

conductor or leader : (பட்) நீர்,நெறி அல்லது முன்னோடி : மழை நீரைக் கொண்டு செல்வதற்கான் ஒரு குழாய்

conductor stake : (பட்) ஊடு முளை : வெவ்வேறு விட்டங்களுள்ள நீண்ட நீள் உருளையான முனைகளையுடைய ஒரு முனை. இது வட்டமான உலோகத் தகடுகளையும், குழாய்களையும் வளைப்பதற்குப் பயன்படுகிறது

conduit : காப்புக் குழாய் : மின் கம்பிகளின் காப்புக் குழாய். இந்தக் குழாய் நெகிழ்வுடையதாகவோ, விறைப்பானதாகவோ இருக்கும்

conduit box (மின்) காப்புக் குழாய்ப் பெட்டி: இது ஓர் எஃகுப் பெட்டி. இதன் முனைகளில் ஒரு காப்புக் குழாய் இணைக்கப்பட் டிருக்கும். இது ஒரு வெளியேற்றுச் சந்திப்பாக அல்லது இழுப்புப் பெட்டியாக பயன்படுத்தப்படுகிறது

conduit bushing: (மின்) காப்புக் குழாய் செருகி: ஒரு காப்புக் குழாய் வரியின் முனையுடன் இணைக்கப்பட்டுள்ள இழையுள்ள மூடி. இது ஊடுசெல்லும் கடத்திகள் மாறுவதைத் தடுக்கிறது

conduit coupling : (மின்) காப்புக் குழாய் இணைப்பு : காப்புக் குழாயின் இழையுள்ள முனைகளை இணைப்பதை ஏற்பதற்கு உள்முக இழைகள் உள்ள ஒரு குறுகிய உலோகச் செருகு குழல்

conduit wiring : (மின்) காப்புக் குழாய்: கம்பியிணைப்பு: காப்புக் குழாயினுள் மின்கம்பி இணைப்புகளை அமைத்தல்

condulet (மின்.) காப்புக் குழாய்க் கருவி : காப்புக் குழாய் இணைப்புக் கருவிகளின் வாணிகப் பெயர் cone : கூம்பு : ஒரு வட்டமான அடித்தளத் திலிருந்து ஒரு சீராக நுனிநோக்கிச் சிறுத்துச் செல்கிற ஒரு திடவடிவம். இதன் புறங்குவிந்த மேற்பரப்பின் பரப்பளவு = அடித்தளத்தின் சுற்றளவு x ½ x சாய்வு உயரம்; முழுப்பரப்பளவு புறங்குவிந்த மேற்பரப்பின் பரப்பளவு+ அடித்தளத்தின் புரப்பளவு. இதன் கன அளவு= அடித்தளத்தின் பரப்பளவு x ½ x செங்குத்து உயரம் மட்பாண்டக் கலையில் சூளையின் குவி முகடு.

cone of silence: (மின்) மோனக்கூம்பு : ஒரு வானலை வாங்கியின் மேலுள்ள கூம்பு வடிவப்பகுதி. இதில் கதிரியக்கப் புல வலிமை மிகக்குறைவாக இருக்கும்

cone clutch : (எந்) கூம்பு ஊடிணைப்பி : இது ஒரு வகை உராய்வு ஊடிணைப்பி. இதில் தோலாலான கடைசல் செய்த கூம்பு வடிவ மேற்பரப்புள்ள வழுவழுப்பான உராய்வு மூலமாக இயக்குவதற்குத் தேவையான விசை உண்டாக்கப்படுகிறது

conetrad கூம்பு ஒளிக்கதிர் வீச்சு: இது விமானத் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு வகை வானொலி எச்சரிக்கைச் சாதன மாகும். இதனை 1951ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு நிறுவியது. இது மின்காந்த ஒளிக் கதிர்வீச்சுக் கட்டுப்பாடு மூலம் இயங்கக் கூடியது

cone mandrel : (எந்) கூம்புக் குறுகு தண்டு : இது ஒருவதைக் குறுகு தண்டு. இதில் இரு கூம்புகளின் இறுகப் பற்றும் வினையின் மூலம் வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருள் மையமிடப்படுகிறது. இந்தக் குறுகு தண்டில் ஒரு கூம்பு நழுவிச் செல்லாதபடி தடுப்பதற்கு ஒரு குறுக்குப் பட்டை இருக்கும் இதில் இரண்டாவது கூம்பினை இறுகப் பற்றிக் கொள்வதற்கான இழைகளும் இருக்கும்

cone pulley : கூம்புக் கப்பி : இது ஒரு படியிட்ட கப்பித் தொகுதி, இதில் இரண்டு அல்லது ஆவற்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு விட்டமுடைய முகப்புகள் இருக்கும். இது இரண்டு கொண்ட இணையாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரிய முனைக் கப்பிக்கு நேர் எதிராக சிறிய முனைக்கப்பி அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் வேகத்தை அதிகரிக்க முடிகிறது

cone pulley lathe : கூம்புக் கப்பிக் கடைசல் எந்திரம்: கூம்புக் கப்பிகளைக் கடைசல் செய்வதற்கான ஒரு தனிவகைக் கடைசல் எந்திரம்

cone speaker : (மின்) கூம்புத் தொடர்புக் குழல் : இதில் நகரும் கம்பிச் சுருள் ஒரு விறைப்பான காகிதக் கூம்பின் மேல் நுனியுடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும்

conic section : (கணி) கூம்பு வளைவு : ஒரு நேர்வட்டக் கூம்பினை ஒரு சமதளம் குறுக்காக வெட்டுவதால் உண்டாகும் ஒரு வளை வடிவம்

coniferous : குவிந்த காய் காய்ப்பவை: குவிந்த காய் காய்க்கிற மர வகையைச் சேர்ந்தவை

coning angle : (வானூ) கூம்பு கோணம்: விழானத்தின் சுழல் இறகின் ஓர் அலகின் சுழல் அச்சுக்குப் அந்தச் சுழல் அச்சுக்குச் செங்குத் தாகவுள்ள ஒரு சமதளத்திற்கு மிடையிலான சராசரி கோணம்

conjugate axis : இணை அச்சு: ஒரு நீள்வட்டத்தின் மிகக்குறைந்த விட்டம் conjugate diameters : இணை விட்டங்கள்: கூம்பு வெட்டில் ஒன்று மற்றொன்றின் கோடியியிலுள்ள தொடுவரைக்கு ஒரு போகு ஆக அமையும்படி உள்ள இரண்டு விட்டங்கள்

conjugate foci : இணை குவியங்கள்: ஒன்றிலிருந்து புறப்படும் கதிர்களுக்கு மற்றது குவியமாக மாறிமாறி அமையும் இரு குவியப் புள்ளிகள்

conjugate mirrors : இணை ஆடிகள்: ஒன்றன் குவியத்திலிருந்து வெளிப்படும் கதிர்கள் மற்றொன்றின் குவியத்துக்கு மீளும்படி அமைக்கப்பட்ட கண்ணாடிகள்

connecting rod : (தானி) இணைப்புத் தண்டு : இரு முனைகளிலும் தாங்கிகளுள்ள ஒரு தண்டு, அல்லது ஆயம். இது வணரி அச்சுத் தண்டுக்கும் சுழல் தண்டுக்குமிடையில் இணைப்பு ஏற்படுத்துகிறது

connecting rod bearing : (தானி.) இணைப்புத் தண்டு தாங்கி: இணைப்புத் தண்டின் பெரிய முனையிலுள்ள தாங்கி. இது பெரும்பாலும் உலோகத்தாலானது. சிறிய முனையிலுள்ள தாங்கி, உலோக உள்வரி வகையைச் சேர்ந்தது

connection : (மின்) இணைப்பு : ஒரு மின்சுற்றுவழியின் பகுதிகளை இணைக்கிற மின் கடத்தி

connector: (மின்) இணைப்பான்: மின் தொடர்பில் மின் கடத்தும் கம்பிகளைப் பற்றிக் கொள்வதற்கான ஒரு சாதனம். மின் கடத்தும் கம்பிகளைத் தேவையானபோது துண்டித்துக் கொள்ளும் வகையில் இந்த இணைப்பானின் பிடித்துக் கொண்டிருக்கும்

conoid: கூம்புவடிவமுள்ள': ஏறத்தாழக் கூம்பு வடிவமைந்த பொருள்

conservation of energy : ஆற்றல் நிலைப்பாடு : தனிப்பட்ட அமைப்பில் உள்ள முழு ஆற்றலும் நிலைபெயராத் தன்மையுடையது என்னும் கொள்கை

conservatory : (க.க) இசைப்பள்ளி/கண்ணாடி வீடு:

(1) இசைச் சொற்பொழிவு ஆகியல்ற்றில் பயிற்சி அளிக்கும் பொதுப் பள்ளிக் கூடம்

(2) அருமையான செடி கொடிகளை வளர்க்கும் கண்ணாடி வீடு

consistency : (இயற்) அடர்த்தி அளவு : நெருக்கத்தின் அளவு

console : (க.க) சுவரொட்டு : நெஞ்சளவுச் சிலை, மலர்க்குவளை, சிற்ப உருவம் போன்ற அலங்காரப் பொருள்களைத் தாங்கும் மூல இணைப்பு

console : (விண்.) தளக் கட்டுப்பாடு : ஏவுகணைகளின் குறிப்பிட்ட செயற்பணிகளைக் கட்டுப்படுத்துவதற்காகத் தரையிலுள்ள மின்னியல் அல்லது எந்திரவியல் சாதனங்கள்

console model : சுவரொட்டு வானொலிப் பெட்டி மாதிரி வடிவம்: நான்கு கால்களில் நிற்கும் ஒரு பெட்டியினுள் உள்ள ஒரு பெரிய வானொலிப் பெட்டி. இதில் ஒளிக் கருவி முதலிய அனைத்துக் கட்டுப்பாட்டுச் சாதனங்களும் உள்ளடங்கி இருக்கும்

constant : (கணி) நிலை எண் : கணிதத்தில் மாறா மதிப்பளவு, இது கணிப்புக்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகிறது

constant current : (மின்) மாறா மின்னோட்டம் : மின்னோட்ட அலகு மாறாமலிருக்கும் ஒரு மின்னோட்டம் constant-mesh transmission : (தானி.) இடையறா வலைப் பின்னல் இயக்கம் : முதன்மைச் சுழல் தண்டிலும் எதிர்சுழல் தண்டிலும் பல்லிணைகள் எப்போதும் வலைப் பின்னல் அமைப்பில் அமைந்துள்ள இயக்கம்

constant potential : (மின்) மாறா மின்னழுத்த நிலை : ஒரு மின் விசை மற்றும் ஒளிச்சுற்று வழியில் பாயும் நிலையான மின்னழுத்த அல்லது மின்னூட்ட அளவு

constant pressure : (தானி.எந்) நிலை அழுத்தம் : மாறாத எதிர்ப்பழுத்த வீதம் அல்லது இயலாற்றல் அளவு

constant speed motor: (தானி) நிலைவேக மின்னோடி : மின்னழுத்தம் அதிகமாகும் போது வேகம் குறையாதிருக்கிற ஒரு மின்னோடி

constant vacuum carburetor : (தானி.) நிலை வெற்றிட எரி-வளி கலப்பி : இதில் ஒரு கனமான ஓரதர் அடங்கியிருக்கும். அது உள்ளிழுப்பு அறையின் வெற்றிடத்தின் இழுவை மூலமாக இயங்குகிறது. இந்த இழுவை விசை, காற்றுக்கு எரிபொருளின் அளவின் விகிதத்தில் அமைந்திருக்கும்

constant voltage or potential : (மின்.) மாறா மின்னழுத்தம் : மின் சுமை அளவு மாறும் போது மாறாத மின்னழுத்தத்தைப் பராமரிக்கிற ஓர் ஆதாரம்

constellations : (விண்) விண் மீன் குழுமம் : நிலையான விண் மீன்களின் தொகுதியுடன் சுற்றி விண்மீன் குழுமங்களில் ஒன்று. இது போன்ற 90 குழுமங்கள் இருப்பதாக இதுவரைக் கண்டறியப்பட்டுள்ளது

constituent : (வேதி) அமைப்பான் : ஒரு பொருளில் அமைந்திருக்கும் தனிமங்களின் அல்லது கூட்டுப்பொருள்களின் ஒரு கூறு

construction : கட்டுமானம்: கட்டிடங் களைக் கட்டியெழுப்புதல். மரம், இரும்பு அல்லது எஃகு பயன்படுத்திக் கட்டப்படும் கட்டிடங்களின் பாணியையும் இது குறிக்கும்

consulting engineer ; ஆலோசனைப் பொறியாளர் : பொறியியல் தொடர்பான பொருட்பாடுகளில் ஆலோசனைகள் கூறுவதற்கு ஏற்ற அனுபவமும் தொழில் நிபுணத்துவமும் வாய்ந்த ஒரு பொறியியல் வல்லுநர்

contact : (மின்.) மின் தொடர்பு: இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மின்கடத்திகளை ஒரு முழுமையான மின்சுற்று வழி உண்டாகும் வகையில் தன்முறையில் அடுக்கி வைத்தல்

contact breaker : (மின்) தொடுமுனை முறிப்பான் : ஒரு மின் சுற்று வழியை விரைவாகவும் தானாகவும் முறிப்பதற்குரிய ஒரு சாதனம்

contact flight : காட்சி இயக்கம்: நிலப்பரப்பின் காட்சியறிவின் மூலம் விமானத்தை இயக்குதல்

contact forms: (மின்) தொடர்பு விசை : மின் உணர்த்தியில் உள்ள மின்தொடர்பு விசைகளின் வரிசை

contact-lens : விழியொட்டுக் கண்ணாடி : கண் பார்வைக் கோளாறு திருத்தக் கண் விழியோடு ஒட்டி அணியப்படும் குழைமக் கண்ணாடி வில்லை

contact potential : (மின்) தொடர்பு மின்னோட்ட வேறுபாடு : பல்வேறு எலெக்ட்ரான் தொடர்புடைய உலோகப் பரப்புகள் ஒன்றோடொன்று தொடர்புகொள்ளும் போது அல்லது அவற்றைப் புறச் சுற்றுவழி மூலம் இணைக்கும் போது, அவற்றுக்கிடையே ஏற்படும் உச்சநிலை மின்னோட்ட வேறுபாடு

contactors : (மின்) தொடர்பான்கள் : மின்காந்த முறையில் அல்லது கையால் இயக்கப்படும் மின் தொடர்புகள்

contact point pressure: (தானி;மின்.) தொடர்பு முனை அழுத்தம்: தொடர்பு முனைகளை மூடிய நிலையில் வைத்திருக்கும் விற்சுருள் அழுததம்

contact points (தானி:மின்) தொடர்பு முனைகள் : குறைந்த அழுத்த மின்சுற்று வழியை உண்டாக்குவதற்கும் முறிப்பதற்கும் பயன்படும் இரிடியம், பிளாட்டினம் அல்லது உலோகக் கலவை எஃகினாலான சிறிய உலோகத் தகடுகள் அல்லது முனைகள்

contact print : தொடர்பு ஒளிப்படப் பதிப்பு : ஒளிப்படக் கலையில் எதிர்ப்படச் சுருளையும். படப் பதிவுக் காகிதத்தையும் நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு செய்து எடுக்கப்படும் ஒளிப்படப் பதிவுப் படம்

continental code: (மின்.) பெருங்கண்டக் குறியீடு : வானொலிச் செய்திகளை அனுப்புவதற்கு பயன்படும் புள்ளிகளும், கோடுகளும் அமைந்த தந்திக் குறியீடு

continuous beam : (க.க) தொடர் நிலை உத்தரம் : இரண்டுக்கு மேற்பட்ட ஆதாரங்களைத் தாங்குவதற்கான ஓர் உத்தரம்

continuos current : (மின்) தொடர் மின்னோட்டம்: துடிப்புகள் இல்லாத நேர்மின்னோட்டம்

continuous duty: (மின்) இடைவிடா மின்னோட்டம் : இடைவிடாமல் மின்னோட்டம் பாயுமாறு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள மின்னோட்ட அமைப்பு

continuous Wave : (மின்.) இடையறா மின்னலை : விண்வெளியில் இடையறாது வீசப்படும் மின்னலை. இந்த அலை அனைத்தும் சம வீச்சளவிலும், கால இச்சு நெடுகிலும் சம இடைவெளியிலும் அமைந்திருக்கும்

contour : வடிவ விளிம்பு வரை : வார்ப்படத்தின் மேடுபள்ள மட்ட நிலை அடுக்கு

contour line : வடிவ விளிம்பு வரைக்கோடு : தள எல்லை வேறுபாடு குறித்த நிலப்படத்தில் மேடுபள்ளங் காட்டும் கோடுகள்

contraction : (வார்) இறுக்கம்; குளிர்விக்கும் போது கன அளவு சுருங்கி இறுக்கம் ஏற்படுதல்

contractor : (க.க) ஒப்பந்தக்காரர் : குறிப்பிட்ட வீதத்தின்படி வேலை செய்து அல்லது சரக்குகளைத் தருவித்துக் கொடுக்க ஒப்பந்தம் செய்து கொள்பவர்

contra-rotating propellers : (வான) எதிர் சுழல் விசிறிகள் : விமானத்தில் ஒன்று மற்றொன்றுக்கு எதிர் திசையில் சுழலும் விசிறிகள். இவை ஒன்றன்பின் ஒன்றாரு அமைந்திருக்கும்

contrast : வேறுபாட்டு முனைப்பு: இது தொலைக்காட்சிப் படங்களில் இருள் பகுதிக்கும் ஒளிப்பகுதிக்கு மிடையிலான விகித்தத்தைக் குறிக்கிறது. மிக அதிகமான வேறுபாட்டு முனைப்புடைய படம் மிக அடர்ந்த கருமை யினையும், பிரகாசமான வெண்மையினையும் கொண்டிருக்கும். குறைந்த வேறுபாட்டு முனைப்புடைய படங்கள் ஒட்டு மொத்தப் பழுப்பு நிறத் தோற்றமுடையதாக இருக்கும் contrast control : வேறுபாட்டு முனைப்புக் கட்டுப்பாடு: தொலைக்காட்சியில், ஒரு படத்தின் இருள் பகுதிக்கும், ஒளிப்பகுதிக்குமிடை யிலான விகிதத்தை மாற்றி, தொலைகாட்சிக் சைகை வலிமையினை முறைப்படுத்துவதற்காக ஒளிவாங்கிப் பெட்டியிலுள்ள ஒரு கட்டுப்பாட்டு அமைவு

control cable : (வானூ) கட்டுப் பாட்டுக் கம்பி வடம் : கட்டுப் பாட்டு நெம்புக்கோல் களிலிருந்து கட்டுப்பாட்டு மேற்பரப்புகளுக்கு செல்கிற அல்லது அவற்றை இணைக்கிற கம்பி அல்லது புரியிழை வடம்

control column : (வானூ) கட்டுப்பாட்டுத் தூண் : ஒரு விமானத்தில் நீளப்பாங்கானதும், பக்கநிலைப் பாங்கானதுமான கட்டுப்பாட்டு மேற்பரப்புகளை இயக்குவதற்காக அதன் மேல் முனையில் ஒரு சுழலும் சக்கரத்தைக் கொண்டுள்ள ஒரு நெம்புகோல். இதனைச் சக்கர நெம்புகோல் என்று கூறுவர்

control grid : (மின்) கட்டுப் பாட்டு மின்கம்பி வலை : ஒரு வெற்றிடக் குழாயில் எதிர்மின் வாய்க்கு அருகிலுள்ள மின்கம்பி வலை. இதன் வழியாக வெற்றிடக் குழாய்க்கு உட்பாட்டுச் சைகைகள் செலுத்தப்படுகின்றன

controllability: (வானூ) கட்டுப்படுத்துத் திறன் : விமானம் பறக்கும் உயரத்தை எளிதாகவும், மிகக் குறைந்த விசையைப் பயன்படுத்தியும் மாற்றுவதற்கு விமானியை இயல்விக்கக் கூடிய விமானத்தின் தன்மை

controllable propeller: (வானூ) கட்டுப்படுத் தத்தக்க முற்செலுத்தி : விமானத்தை முற்செலுத்தும் சுழல் விசிறி சுழலும்போது அதன் உந்து அளவினை மாற்றக் கூடிய வகையில் அலகுகள் பொருத்தப்பட்டிருக்கிற ஒரு முற்செலுத்தி அல்லது சுழல் விசிறி

controller : (மின்) கட்டுப்பாட்டுப் பொறி : ஒரு மின்னோட்டத்தை தானாகவே முறைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் அமைந்துள்ள ஒரு காந்தக் கருவி

controller resistance : (மின்) கட்டுப்பாட்டு மின்தடை : இது ஒரு மின்னோடியில் ஒரு குறிப்பிட்ட வேகத்தை அடையும் வரையில் மின் வழி மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தி வைக்கிற ஒரு மின்னோடி தொடக்கியின் மின் தடையினை இது குறிக்கிறது. இந்த மின்தடை, ஒரு மின்னோடியின் வேகத்தை மாற்றுவதற்குப் பயன்படுகிறது

control panel (தானி) கட்டுப்பாட்டுச் சட்டம் : தானியங்கியில் பயன்படும் பல்வேறு மின்விசைச் சாதனங்களையும் எந்திரங்களையும் கட்டுப்படுத்துகிற ஒரு தொகுதி

control rod : (மின்) கட்டுப்பாட்டுச் சலாகை : ஓர் அணு உலையின் மின்னாற்றலைக் கட்டுப்படுத்தப் பயன்படும் ஒரு சலாகை. இந்தச் சலாகை நியூட்ரான்களை ஈர்த்துக்கொள்வதால் அணு உலையின் மின்விசை வெளிப்பாட்டு அளவு குறைகிறது

control stick : (வானூ) கட்டுப்பாட்டுக் கோல் : விமானத்தில் நீளவாக்கிலும், பக்கவாட்டிலும் உள்ள கட்டுப்பாடுகளை இயக்குவதற்குரிய செங்குத்தான நெம்பு கோல், இந்தக் கோல் ஒரு பக்கத்திலிருந்து சென்று நகர்வதன் மூலம் ஏற்படும் விசையினால் முன் உந்து அளவினைக் கட்டுப்படுத்த முடிகிறது control surface : (வானூ.) கட்டுப்பாட்டு மேற்பரப்பு : விமானத்தில், பறக்கும் உயரத்தை மாற்றுவதற்காக விமானியால் நிலை மாற்றம் செய்யக்கூடிய ஒரு நகரும் விமானக் காற்றழுத்தத் தளம்

controls : (வானூ.) கட்டுப்படுத்துக் கருவி : விமானத்தின் விசையையும், வேகத்தையும், பறக்கும் உயரத்தையும் கட்டுப்படுத்துவதற்காக அமைந்துள்ள கருவி

control system : (தானி.) கட்டுப்பாட்டு அமைப்பு : உந்து வண்டியில் அமைந்துள்ள இயக்குபிடி, எரிபொருள் கட்டுப்பாட்டுக் கருவி சுடர்ப்பொறிக் கட்டுப்பாடு, தடை நெம்புகோல், பல்லிணை மாற்று நெம்புகோல், கால்மிதி கட்டைகள் தடை அமைப்பு ஆகியவற்றை இது உள்ளடக்கும்

convection : (மின்.) உகைப்பியக்கம் : கூர்மையான மின்கடத்திகளி லிருந்து வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினால் பரவுதல்

ஒரு திரவத்தின் அல்லது வாயுவின் வழியாக அதன் துகள்களின் இயக்கம் காரணமாக வெப்பம் பரவுதல்

convectorv (எந்.பொறி.) உகைப்பான் : உகைப்பியக்கத்தால் வெப்பமூட்டும் கருவி

convector : (குளி.ப.த.) உகைப்பியக்கி : வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் உகைப்பினால் பரவிவெப்ப மூட்டும் கருவி

convenience outlet (மின்.) தகவுப் புறவழி : மின்கம்பி இணைப்பில், சலவைப் பெட்டி, வாட்டு கரண்டி முதலிய கையடக்கச் சாதனங்களுக்கு மின்னோட்டம் எடுக்கப்படும் இடம்

converter : (மின்.) மின்மரி : இதனை மின்மாற்றி என்றும் அழைப்பர். இது மின்னோட்டத்தை ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாற்றியமைக்கும் ஒரு பொறியமைவு

conversion hysteria: (உள.) நிலைமாற்ற மனக்கோளாறு : எதிர்மாறான வேட்கைகளுக்கிடையிலான முரண்பாடு காரணமாக ஏற்படும் ஒருவகை மனக்கோளாறு. இதில் ஒரு வகை மனக்கோளாறு, ஒரு வகை உடற்கோளாறு மூலம் வெளிப்படுகிறது. அதாவது, மனக்கோளாறு, ஒருவகை உடற்கோளாறாக மாறுகிறது

converter tube: (மின்.) ஒரு போக்கிக் குழாய் : ஒரு பல உறுப்பு வெற்றிடக் குழாயில் அல்லது டிரான்சிஸ்டரில் ஒரு சைகைகள் ஒன்றாகக் கலக்கப்பட்டு அல்லது ஒரு போக்கியாக்கப்பட்டு ஒர் இடைநிலை அலைவெண் உண்டாக்கப்படுகிறது. இதனை ஒரு போக்கிக் குழாய் என்பர்

convertible : (தானி. எந்.) மாற்றிக்கொள்ளக்கூடிய உந்து : இது பயணிகள் செல்லும் வகையைச் சேர்ந்த ஒரு உந்துவண்டி. இதன் மேல்மூடியை வேண்டும்போது முழுவதுமாக அகற்றிவிடலாம்; அல்லது கையினாலோ மின் விசையிலோ இயங்கக்கூடிய நீரியல் அமைப்பு மூலமாக மேல்மூடியை மேலே ஏற்றவோ, கீழே இறக்கவோ செய்யலாம்

convex: புறங்குவிக்த: ஒரு கோ ளத்தின் மேற்பரப்பினைப் போன்று புற வளைவுடைய

convey : அறிவி / ஆனுப்பு : செய்தியை அறிவித்தல்; கொண்டு செல்லுதல்

conveyors : செல் ஊர்தி : தொழிலகத்தில் தொழிற்படும் பொருள்களை வார்ப்பட்டைகள் வாயி லாக இடம்விட்டு இடம் கொண்டு செல்லும் கருவி

convolute: சுருண்ட: ஒன்றன் மேல் ஒன்றாக ஒன்று சேர்த்து சுருட்டிய அல்லது மடித்துச் சுருட்டிய

convulsion therapy: (மருத்) அதிர்ச்சி மருத்துவம்: மன நோயாளிகளுக்கு மருந்து அல்லது மின் விசைமூலம் திடீரென உணர்வற்ற நிலையை உண்டாக்கி மனநோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவ முறை, முக்கியமாகப் பித்து நிலைச் சேர்ர்வு, முரண்மூளை நோய் போன்ற மனக்கோளாறுகளைக் குணப்படுத்த இந்த முறை பயன்படுகிறது

coolant : வெப்பாற்றி: வெட்டுப் பொருள்களின் விளிம்பில் உராய்வு, வெப்புத் தணிப்பதற்குரிய திரவம், சோடா நீர், கொழுப்பு எண்ணெய், மண்ணெண்ணெய், கர்ப்பூரத் தைலம் ஆகியவை அல்லது இவற்றின் கலவைகள் பெரும்பாலும் வெப்பாற்றிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன

cooling fixture; (குழை) குளிர் காலம்: வார்ப்படம் செய்த வடிவினை நிலை நிறுத்தி வைத்துக் கொள்ளக்கூடிய உலோகத்தாலான அல்லது மரத்தாலான ஓர் அச்சுக் கட்டை, ஒரு வார்ப்படத்தை வார்ப்பிலிருந்து அகற்றிய பிறகு, அது மேலும் உருத்திரிபு கொள்ளாமல் தனது வடிவை நிலை நிறுத்தி வைத்துக் கொள்கிற வரையிலும் உரிய வடிவில் அல்லது துல்லியமான பரிமாணத்தில் அதனை வைத்திருக்க இது பயன்படுகிறது

coolings system: (தானி) குளிர்விப்பு அமைப்பு : எஞ்சினில் கனற்சியினால் உண்டாவதை விரைவாக வெளியேற்றுவதன் மூலம் எஞ்சினில் அளவுக்கு அதிகமாக வெப்பம் உண்டாகாமல் தடுக்கும் சாதனங்கள், கதிர்வீசிகள், விசிறிகள், இறைப்பிகள், நீர் காப்பு மேலுறைகள் முதலியவை இந்தச் சாதனங்களாகும்

coordinate: (கணி) ஆயத் தொலைவு: கட்டநிலை அளவையின் ஒரு கூற்றளவை

Cooper-Hewitt lamp : கூப்பர் ஹெவிட் விளக்கு : 110 மின்னழுத்த நேரடி மின்னோட்டச் சுற்றில் இயங்கும் ஒரு திறன் வாய்ந்த விளக்கு. இதில் குறைந்த ஆவி அடர்த்தியுள்ள பாதரச ஆவியைக் கொண்ட பல அடி நீளமுடைய ஒரு கண்ணாடிக் குழாய் இதில் அமைந்திருக்கும்

copal varnish: குங்கிலிய வண்ண மெருகெண்ணெய்: வெப்பமண்டல மரவகைகளின் பிசினிலிருந்தும், புதை படிவமாகவும் கிடைக்கும் கடினமான ஒளி ஊடுருவக்கூடிய குங்கிலியத்திலிருந்து தயாரிக்கப்படும் வண்ண மெருகெண்ணெய்

cope: மேற்கட்டி : களிமண் வார்ப்படத்தின் மேற்பகுதி அல்லது பசு மணல் வார்ப்படத்தின் மேலுறை

Coped joint: (க.க) முகட்டு இணைப்பு: வார்ப்படம் செய்து இணைக்கப்பட்ட பகுதி களிடையே ஒர் உறுப்பின் வார்ப்புப் பகுதியை ஏற்றுக்கொள்ளும் வகையில் மற்றொரு உறுப்பின் பகுதியைச் செதுக்கி அமைக்கப்பட்ட ஓர் இணைப்பு

copper clad : (மின்.) செப்புப் பொதிவு : மின் கடத்து திறனை அதிகரிப்பதற்காக எஃகுக் கம்பியை செம்புப்படலத்தால் பொதிவு செய்தல்

copper engraving : (வரை) செப்புச் செதுக்கு வேலைப்பாடு : செப்புத் தகடுகளில் செதுக்கு வேலை மூலம் கலை வேலைப்பாடுகளைச் செய்தல் coppered joint : (வார்.) செம்பு பொதி இணைப்பு : உருள் தொட்டிகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்ட இணைப்பு. இது வளைவான பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது

copper losses : (மின்.) செப்பு இழப்பீடு : மின்னோடிகள், மின்னாக்கிகள், மின்மாற்றிகள் ஆகியவற்றில் கம்பித்தடை காரணமாக வெப்ப இழப்பு ஏற்படுதல்

coping : (க.க.) சாய்முகடு : மதிலின் சாய்வான மேல் முகடு

coping machine : (பட்.) சமன எந்திரம் : உத்தரங்களின் விளிம்புகளையும் முனைகளையும் செதுக்கிச் சமனப்படுத்தவும், முனைகளை வளைக்கவும் பயன்படும் எந்திரம்

coping out : (வார். ) சமனச் செதுக்கல் : வார்ப்படத்தை முறையான பிரிக்கும் கோட்டிற்குக் கொண்டு வருவதற்காக அதன் இழுவைப் பகுதியின் மணல் முகப்பினைச் செதுக்கிவிடுதல், இவ்வாறு செய்யப்படும் பள்ளத்திற்கு நேரிணையான மணற் பிதுக்கம். மேற்கட்டியின் முகப்பிலிருந்து அமைந்திருக்கும்

coping saw : (மர; வே.) சமன ரம்பம் : இது 3 செ.மீ. அகலமும் 16.5 நீளமும் உடைய ஒரு குறுகிய அலகினைக் கொண்டிருக்கும். இது வில் போன்ற எஃகுச் சட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இது வளைவுகளை வெட்டவும் வார்ப்படங்களைச் செதுக்கிச் சமனப்படுத்தவும் பயன்படுகிறது

copolymer : (குழை.) கூட்டு மிச்சேர்மம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பொருள்களின் ஒரே சமயத்து மீச்சேர்ம இணைவு மூலமாக உண்டாகும் பொருள். இது தனித்தனி மீச்சேர்மங்களின் கலவை அன்று. மாறாக, ஒரே வகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம்

copoly - merization : (வேதி. குழை.) கூட்டு மீச்சேர்ம இணைவு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட எண்முகச் சேர்மங்கள் வேதியியல் வினைபுரிந்து அவற்றின் மூலக்கூறுகளை ஒருங்கிணைத்து பெரிய மூலக்கூறுகளாக உருவாதல் (பார்க்க: மீச்சேர்ம் இணைவு)

copper : (உலோ.) செம்பு/தாமிரம் : இது மென்மையான எளிதில் கம்பியாக நீட்டக்கூடிய,தகடாக்கத்தக்க ஒர் உலோகம். இது கடினமானது. ஆனால் வலுவானது அன்று; உலோகக் கல்வைகள் தயாரிப்பதற்கு மிகவும் பயன்படுகிறது. கலை வேலைப்பாடுகளில் பயன்படுகிறது

copper bit : (கம்.) பற்றாசுக் கோல் : பற்றவைப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி

copper gasket : (தானி.மின்.) செப்பு முத்திரை : ஒன்றாக இணைக்கப்படும் இரு உலோக முகப்புகளுக்கு முத்திரையிட்டு மூடுவதற்காகப் பயன்படும் செம்பினாலான் அல்லது செம்பும் கல்நாரும் கலந்த கலவையினாலான அல்லது ஒரு வளையும் தகடு

copper lead (உலோ.) செப்பு ஈயம் : இது ஒர் உலோகக் கலவை, இது அதிக அழுத்தத்தையும் அதிக வெப்பத்தையும் தாங்குவதில் தகரம்-செம்பு-அஞ்சனம் கலந்த 'பாபிட்' உலோகக் கலவையைவிட மிகச் சிறந்தது

copper pipe : (கம்.) செப்புக் குழாய் : இதன் உட்புற அல்லது வெளிப்புற விட்டங்களைக் கொண்டு இதன் வடிவளவு தீர்மானிக்கப்படுகிறது. இதன் கவரின் கனம், பிதுக்கக் கம்பி அளவி மூலம் அளவிடப்படுகிறது. ஈயக் கம்மிய வேலைகளிலும் இது பயன்படுகிறது

copper plate : (அச்சு.) செப்புத் தகடு : பட்டயம் செதுக்குவதற்குரிய மெருகிட்ட செப்புத் தகடு. இந்தத் தகடு செப்பம் செய்யப்பட்டு இதில் எழுத்துக்கள் செதுக்கப்படுகின்றன

copper plating : செப்பு முலாமிடுதல் : மற்றொரு உலோகத்தில் செப்பு முலாமிடுவதற்கான முறை. இதில் பொட்டாயசிம் சையனைடு முக்கியமாகப் பயன்படுகிறது. அமிழ்த்துதல், மின் முலாமிடுதல் ஆகிய இருமுறைகளிலும் இந்த முலாமிடுதல் செய்யப்படுகிறது (பார்க்க : மின்முலாமிடுதல்)

copper steel : செப்பு எஃகு : குறைந்த அளவு கார்பன் கொண்டுள்ள ஒருவகை எஃகு. இதில் 0. 25% செம்பு கலந்திருக்கும். அரிமானத்தைத் தடுக்கும் காப்பு தேவைப்படும் கட்டுமானப் பணிகளில் இதில் பயன்படுத்தப்படுகிறது

copper sulphate : (வேதி.) மயில்துத்தம்; காப்பர் சல்பேட் : பார்க்க; மயில் துத்தம்

copraloy : (உலோ.) செப்பு உலோகக் கலவை : பார்க்க; செப்பு எஃகு.

copy : சார் படிவம், எழுத்துப் படிவம் : வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த அறைகலன்களின் ஒத்த வடிவங்களை உருவாக்குதல்.அச்சுக் கலையில் அச்சுக்கான எழுத்துப்படி

copy holder : (அச்சு.) படி வாசிப்பவர் : அச்சுத் திருத்துபவருக்கு உடனிருந்து வாசித்து உதவுபவர்

coquina : (வேதி.) கோக்கின : கடலிலுள்ள ஒடுகள் ஒட்டிக் கொள்ளும் தன்மையினால் உண்டாகும் ஒருவகைப் பாறை. இது கால்சியம் கார்போனேட் மூலம் உண்டாகிறது

coral : (வேதி.) பவழம் : கடலுயிர் வகையின் தோட்டின் செறிவடுக்கால் வளரும் பாறை. இது கால்சியம் கார்போனேட் மூலம் உண்டாகிறது

carbel : (க.க.) தண்டையக் கட்டு : பொருள்களை வைப்பதற்காக அல்லது பளு தாங்குவதற்காகச் சுவரில் ஏந்தலாக வைத்திணைக்கப்பட்ட கல் அல்லது கட்டை

cord : (மர.வே.) வெட்டு மர அளவை : 1.21 மீ.நீளம், 1.21 மீ. உயரம், 2.42. மீ. நீளம் (3.63 க.மீ.) உடைய வெட்டு மர அளவை

cordierite : (மின்.) கார்டியரைட்: மக்னீசியம், அலுமினியம் சிலிக்கேட்டுகளினாலான மின்காப்புப் பொருள்

core : மைய உட்புரி : வார்ப்படத்தின் உருச்செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல்

பிளாஸ்டிக்கில் வார்ப்பட உட்பொள்ளலிடத்தில் வார்த்து உருவாக்கப்பட்ட பகுதி

core box : (வார்.) மைய உட்புரிப் பெட்டி இது பொதுவாக மரத்தினாலானது. இதில் மைய உட்புரி இறுக்கிப் பொருத்தப்பட்டிருக்கும்

core-box plane : மைய உட்புரிப் பெட்டி / இழைப்புளி : மைய உட் புரிப்பெட்டிகள் செய்வதற்கான ஒா இழைப்புளி, இழைப்புளியின் செங்கோணப் பக்கங்கள் வெட்டு விளிம்புகளில் படிந்திருக்கும்போது இழைப்புளியின் நுனி வட்டத்தின் சுற்ற்ளவின் மீது வெட்டிச் செல்லும்

cored carbon : (மின்.) உள்ளீடகற்றிய கார்பன் : நீள்வாக்கில் மென்மையான உட்புரி கொண்ட ஒரு கார்பன். இது மாறு மின்னோட்டத்தில் மின்சுடரின் திறமையான செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது

cored hole : (வார்) உட்புரித் துவாரம் : வார்ப்பட முறையில் நேரடியாக அமைக்கப்பட்ட உட்புரித் துவாரம். வார்ப்படத்தில் துளையிடுதல் அல்லது துரப்பணமிடுதல் இல்லாமல் அமைக்கப்படும் துவாரம் எதனையும் இது குறிக்கிறது

core disks: (மின்.) உட்புரித் தகடுகள் : மென் தகட்டு மின்னக உட்புரிகள் அமைப்பதற்கெனப் பயன்படுத்தப்படும் இரும்புத் தகட்டினாலான மெல்லிய வட்ட வடிவத் தகடுகள்

core drier: (வார்.) உட்புரி உணக்கும் பொறி : சுடுகின்றபோது உட்புரியின் வடிவத்த்தை அப்படியே இறுத்தி வைத்துக் கொள்ளும் பொறியமைவு

core drili : (உலோ.வே.) உட்புரித் துரப்பணம் : இது உட்குழியுள்ள ஒரு துரப்ப்ண்ம். இது உலோகத்தைச் சிம்பு சிம்பாக அல்லாமல் துண்டு துண்டாக வெட்டக் கூடியது. ஒரு வார்ப்படத்திலிருந்து சோதனைக்கான மாதிரிகளை எடுப்பதற்கு இது பயன்படுகிறது

core iron : (மின்) தேனிரும்புச் சலாகை : மின்காந்த விசைச் சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச் சலாகை

core loss : (மின்.) உட்புரி இழப்பு : ஒரு மின்னகத்தின் அல்லது மின் மாற்றியில் சுழல் மின்னோட்டங்கள், காந்தத்தியக்கங்கள் போன்ற விளைவுகள் காரணமாக உட்புரியில் ஏற்படும் மின்விசை இழப்பு

core machine : (வார்.) உட்புரிப் பொறி : ஒரு பெய் குடுவையினைக் கொண்டுள்ள கையினால் அல்லது விசையினால் இயக்கக்கூடிய ஓர் எந்திரம். இது வட்டமான மற்றும் சதுரமான அடிமுனை உட்புரிகள் அமைப்பதற்குப் பயன்படுகிறது

core oils : (வார்.) உட்புரி எண்ணெய்கள் : வார்ப்பட வேலைப் பாடுகளில் உட்புரிகள் செய்வதற் குப் பயன்படும் எண்ணெய்கள், ஆளிவிதை எண்ணெய் அல்லது மலிவான பிற எண்ணெய்களுடன் கலந்த ஆளிவிதை எண்ணெய் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது

core oven : (வார்.) உட்புரி அடுப்பு : உட்புரிகளைச் சூடாக்கி வார்ப்பதற்குப் பயன்படும் அடுப்பு

core pin : (குழை.) உட்புரி முளை : வார்ப்படம் செய்த பொருளில் ஒரு துவாரத்தை அல்லது துளையை உண்டாக்கப் பயன்படும் முளை

core prim : (வார்.) உட்புரி வடிவம் : வார்ப்படப் பொருளை ஊற்றுகின்றபோது, மணற்கட்டி வார்ப்புச்சுருளில் ஒரு வடிவத்தைப் பதித்து அதன் உட்புரியை உரிய இடத்தில் நிலையாகப் பிடித்து வைத்துக் கொள்கிற ஒரு வடிவப் புடைப்பு

core sand : (வார்.) உட்புரி மணற்கட்டி வார்ப்பு : வார்ப்புக்குப் பயன் படுத்தப்படும் மணற்கட்டி வார்ப்புரு core saturation : (மின்.) உள்ளீட்டுச் செறிவு : ஓர் இரும்பு உள்ளீட்டில் நேரடியாக மின்னோட்டம் காரணமாக மூலக்கூறுகள் ஒரே திசையில் ஒருமுகமாகும் போக்கு

core wash : (வார்.) உட்புரிப் பூச்சு : உட்புரிகளின் வண்ணம் பூசுவதற்குப் பயன்படும் ஒரு கலவை

coring out: (வார்.) உள்ளிடகற்றுதல் : வார்ப்படங்களில் உட்புரிகள் மூலம் உட்பகுதிகளை அமைத்தல்

coring up: உட்புரியாக்கம் : வார்ப்பட வேலையில், வார்ப்புக்கு ஆயத்தமாகவுள்ள வார்ப்படத்தில் உட்புரிகளை அதனதன் இடத்தில் அமைத்தல்

corinthian order : (க.க.) கோரிந்து பாணி : கிரீஸ் நாட்டிலுள்ள கோரிந்து நகரத்தைச் சார்ந்த கட்டிடக் கலைப்பாணி. இதில் தூண் தலைப்புகளை அலங்காரம் செய்வதற்கு முள்ளிலை வடிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன

corner bead : (க.க.) மூலைக் குமிழ்மணி : சாந்து பூசிய மூலைப் பகுதிகளில் பதிக்கப்படும் ஒரு உலோகக் குமிழ்மணி. சாந்துப் பூச்சு உடைந்து விழாமல் தடுக்க இது பயன்பட்டது

corner bit brace : (மர.வே.) மூலைத் திருப்புளி : வழக்கமான திருப்புளியினை வைத்துச் செயற்பட முடியாத கடினமான நிலைகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திருப்புளி

corner clamp : (மர.வே.) மூலைப் பற்றுக் கட்டை : பசையிட்டு ஒட்டுதல் அல்லது ஆணியடித்தல் போன்றவற்றுக்கு செங்கோண இணைப்புகளை உரிய இடத்தில் பிடித்துக் கொள்வதற்கான ஒரு பற்றுக்கட்டை

corner rounding cutter : (எந்.) மூலை உருளை வெட்டி : உருளை வடிவான முனைகளை வெட்டுவதற்கு உலோகத் தகட்டில் பள்ளங்கள் வெட்டுவதற்கான எந்திரத்தில் பயன்படும் சாதனம்

corner trowel : (குழை.) மூலைச் சட்டுவக் கரண்டி : மூலைகளில் பயன்படுத்துவதற்க்காக V - வடிவ அலகுடைய சாந்து பூசும் சட்டுவக்கரண்டி. இதில் உட்புறமும் வெளிப்புறமும் தோரணிகள் அமைந்திருக்கும்

cornice : (க.க.) எழுதகம் : கட்டிட உச்சியின் சிற்ப வேலைப்பாடு அமைந்த பிதுக்கம்

cornice brake : எழுதகத் தடைக்கருவி : திறப்புடைய குறுக்கு அடிக் கட்டையும், அலகுகளும் உடைய ஒரு தரைத் தடைக் கருவி. இதில், ஒரு கட்டுத் தளையினை அல்லது ஒரு மடிப்புச் சலாகையினைச் சார்ந்து ஒர் உறுதியான நிலையில் உலோகத் தகடு அமைந்திருக்கும். அதனைக் கொண்டு உலோகத்தை வளைக்கவோ மடிக்கவோ செய்யலாம்

cornucopia : வளமார் கொம்பு ': மலர்-கனி-பயிர் வளம் பொங்கி வழிவதாக வளமார் கொம்பு வடிவாகப் புனையப்பட்ட அழகுக் கலம்

corollary : துணை முடிபு : தெளியப்பட்ட முடியிலிருந்து எளிதில் உய்த்தறியப்படும் ஒரு துணை முடிபு

corona : (க.க.) ஒளிவட்டம் ': (1) தூணின் அகல் நெடுந் தலைப்பு (2) ஒர் உந்து ஊர்தியின் மூட்ட அமைப்பின் துணை மின்சுற்று வழியிலிருந்து உயர் அழுத்த மின்னோட்டம் கசிதல்

corona : (விண்.) ஒளி வட்டம் : சூரியனை அல்லது சந்திரனைச் சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம்

coronary arteries : (உட.) நெஞ்சுப்பைக் குருதி நாடி: நெஞ்சுப்பைத் தசைத்குக் குருதி வழங்கும் நாடி

coronary circula : (உட.) நெஞ்சுப்பைக் குருதியோட்டம்: நெஞ்சுப்பை சுற்றிய குருதியோட்டம்

corridor : (க.க) நடைக் கூடம்: இரண்டு அறைகளுக்கு இடையேயுள்ள இடைவழி நடைக்கூடம்

corosion : அரிமானம் : ஈரப்பதமான சூழலில் உலோகங்களுடன் ஆக்சிஜன் கலந்து உலோகங்களின் மீது துருப்பிடித்தல் அல்லது ஆக்சிகரணமாதல்

Corrosion resistant alloys : துருப்பிடிக்காத உலோகக் கலவை : இரும்பு, நிக்கல், கோபால்ட், செம்பு, சில சமயம் மாலிப்டினம். டங்ஸ்டன் இந்த வகையின் பாற்படும். இந்த உலோகக் கலவைகள் பல குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வாணிகப் பெயர்களுடன் விற்பனை செய்யப்படுகின்றன

corrugated board : (தாள்) மடிப்பு அட்டை : அட்டைத் தாளாகப் பயன்படும்படி மடிப்புச் சுருக்கம் செய்யப்பட்ட வைக்கோல் அட்டைத் தாள்

corrugated iron : நெளிவு இரும்புத் தகடு: வலிவு மிகும் பொருட்டு நெளி நெளியாக வளைக்கப்பட்ட இரும்புத் தகடு

corrundum : (எந்.பட்) கோரண்டம் : இது மிகக் கடினமான அலுமினியம் ஆக்சைடு ஆகும் போது ஓர் உராய்வுப் பொருளாகப் பயன்படுகிறது

cosine : (கணி.) கோணக் கிடக்கை: செங்கோண சாய்வரை மீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு

cosmic rays: (இயற்) மின்காந்த நுண்ணலைகள்: புறவெளியிலிருந்து வாயு மண்டலத்திற்கு உயர் ஆற்றல் ஊடுருவும் துகள்கள் அல்லது நுண்ணலைகள்

cotter: (எந்.) கவர்முள் கொளுவி: எந்திரப் பகுதிகளை இறுக்கும் முள் கொளுவி

cotter pin : (எந்) கடையாணி :

சுரையாணி கழன்று விடாமல் தடுப்பதற்கு ஒரு மரையாணியின் முனைகளின் அருகேயுள்ள ஒரு துவாரத்தினுள் செருகப்படும் ஒரு வகை ஆணி

cotton gin : பஞ்சு கடையும் பொறி : பஞ்சு வேறு கொட்டை வேறாக்கும் ஒரு வகை எந்திரம். இதனை 1793 இல் இலி விட்னி கண்டுபிடித்தார். இது பஞ்சாலைத் தொழில் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தது

cotton waste : கழிவுப் பஞ்சு : பஞ்சாலைகளிலிருந்து வெளியே தள்ளப்படும் கழிவுப்பஞ்சு. எந்திரங்களைத் துடைக்க இது பயன்படுகிறது

cotton wood : பஞ்சு மரம்: இது மென்மையான மரம். இது 15-23.மீ. வரை வளரும். 1.8 மீ வரை விட்டமுடையதாக இருக்கும். இது காகிதக்கூழ், பெட்டிகள் முதலியன செய்யப்பயன்படுகிறது coulomb: (மின்) கூலம் : ஒரு நொடியில் மின் அலகால் ஈர்க்கப்படும் மின் ஆற்றல் அலகு

coumarone-indene resin : கூமரோன் இண்டெண் பிசின்: மற்றப் பிசின் பொருள்களின் அல்லது அவற்றின் அடிப்படையிலான கூட்டுப் பொருள்களின் இயல்புகளை மாற்றமைவு செய்வதற்கு இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பிசின் தன்மையுள்ள திரவமாகவும் உருகக்கூடிய இடப்பொருளாகவும் இளமஞ்சள் நிறம் முதல் கருமை நிறம் வரைப் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. மஞ்சள் நிறத்தள ஓடுகள்,காப்புப் பூச்சுகள் ஆவணங்களை படியெடுத்தல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது

'counter: கணக்கிடு பொறி: ஓரிரு எந்திரத்தில் எத்தனை உறுப்புகள் செய்யப்பட்டுள்ளன என்றும் எண்ணிக்கையினைப் பதிவு செய்யும் ஒரு சாதனம்

counter balance : (எந்) சரிசம எதிர் எடை : ஒரு சக்கரத்தை அல்லது திருகு விட்டத்தைச் சமநிலையில் வைப்பகற்காகச் சேர்க்கப்படும் கூடுதல் எடை

count down : (விண்) இறங்குமுகக் கணிப்பு : குறித்த நேரச் செயல் நடைமுறையில் செயல் நேரம் இன்மை எண் (0) ஆக வர வரக் குறையும்படி இடைநேரம் அமைத்தல்

counter bore: (எந்) எதிரிடைத் துளை: ஒரு துளையை அதன் ஒரு நீளப்பகுதியில் துளையிட்டு விரிவாக்கம் செய்தல்

வெட்டும் சாதனத்தில் சில சமயம் வெட்டு முனைகளைச் செலுத்துவதற்கும், மையக் குறியி டுவதற்கும் ஒரு தலைப்பான் அல்லது முனைப்பான் பொருத்தப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு திருகாணியின் தலை,உலோகப் பரப்பில் விசையுடன் பாயும் வகையில் துரப்பணம் செய்த ஒரு துவாரத்தின் தொடக்கத்தை விரிவாக்குதல்

counter bracing or cross bracing : (க.க) குறுக்கு இணைக் கவிகை : உத்திரத்திற்குக் கூடுதல் முட்டுக் கொடுத்து, குறுக்கு பார விசையினைத் தளர்த்துவத்ற்காக ஓர் ஆதாரக் கட்டில் அல்லது தூலத்தில் பயன்படுத்தப்படும் மூலைவிட்ட இணைக் கவிகை

counter clockwise : (தானி) இடஞ்சுழித்த/ இடஞ்சுழியாக: ஒரு கடிகாரத்தின் முட்கள் சுற்றுற திசைக்கு எதிர்த்திசையில் சுற்றுகிறது

counter E. M. F. : (மின்) எதிரிடை மின்னியக்க விசை : ஒரு மின் சுற்றுவழியில் மின்னோட்டத்தை எதிர்க்கிற எதிரிடை மின்னியக்க விசை

counters : (பொறி) துணை முகப்புகள் : ஓர் ஆதாரக் கட்டில் பாரவிசையின் புற மறிப்பினை எற்பதற்காக உள்ள துணையான மூலை விட்ட உறுப்புகள்

counterflow: (குழை: பத.) எதிர்பாய்வு: இரு திரவங்களிடையில், பாய்வுத் திசைக்கு எதிர்த் திசையில் வெப்பப் பரிமாற்றம் நடைபெறுதல்

counter photo electric: (மின்) ஒளிமின் எதிர்விசை : ஓர் ஒளிக்கற்றையை இடையீடு செய்வதன் மூலம் ஊக்குவிக்கப்படும் எதிர் விசை

counter shaft ; (எந்) இடைச் சுழல் அச்சு : எந்திரத்தில் தலைமையான சுழல் அச்சினால் ஒட்டப்படும் இடைச்சுழல் அச்சு

counter sink : (எந்) சரிவுப் பள்ளம் செய்தல்/ சரிவுப்பள்ளம் செய் கருவி :

(1) திருகாணித் தலைப்புப் பதியும்படி துளையின் விளிம்பினைச் சுற்றிச் சரிவாகப் பள்ளம் செய்தல்

(2) அவ்வாறு பள்ளம் செய்வதற்கான கருவி

counter vveight : சரி எதிரெடை: சமநிலை ஏற்படுத்துவதற்காக இணைக்கப்படும் ஓர் விளிம்புடன்,பொருத்தப்படும் ஓர் எடைஇதற்கு எடுத்துக்காட்டு

count of cloth : நூலிழைத் தரக் குறிப்பெண் : ஒரு சதுர அங்குலத் துணியில் உள்ள பாவு நூல், நிரப்பு இழை ஆகியவற்றின் எண்ணிக்கை

country beam : (தானி,எந்.) நாட்டுப்புற ஒளிக்கதிர் : உந்து வண்டிகள் நெடுஞ்சாலை களில் செல்லும் போது, ஓட்டுநருக்கு நோாக ஒளிக்கதிர் பாயுமாறு வடிவமைக்கப்பட்ட மேல் நிலை ஒளிக் கதிர். இது நாட்டுப்புறப் பகுதிகளில் செல்லும் போது, எதிரில் ஊர்திகள் வராத போது பயன்படுத்தப்படுகிறது

coupe : (தானி) தனியறைப் பெட்டி வண்டி: இரு பயணிகளுக்கு மட்டும் இடவசதியுள்ள ஒரு தனியறைப் பெட்டி வண்டி. இதன் பின்புறத்தில் சாமான்கள் அறை யொன்று இருக்கும்

couple . (எந்) ஈரெதிர் விசை : ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் சமமான இரண்டு ஆற்றல்களின் இணைவு

coupled inductance : (மின்) இணைவு மின்தூண்டல் : ஒரு மின் சுற்று வழியில்,ஓர் இரண்டாம் மின்சுற்று வழியில் மின்னோட்ட மாறுதல்கள் வாயிலாகத் தூண்டப்பட்ட மின்விசை அழுத்த அளவு

coupler : (மின்.) இணைப்பான் ஒன்றுக்கொன்று இணைந்து இயக்கும் இசைப்பொறியமைப்பு

coupling : (கம்.) இணைப்புக் கொக்கி: இரு குழாய்த் துண்டுகளை இணைப்பதற்குப் பயன்படும் இணைப்புக் கொக்கி, இதில் உட்புறத்தில் புரியிழைகள் அமைக்கப்பட்டிருக்கும்

course: அடுக்கு வரிசை : அடுக்கு வரிசையாக அல்லது தளவரிசையாக அமைத்தல். ஒரு சுவரில் அடுக்கப்படும் ஒரு செங்கல் வரிசை ஓர் அடுக்கு வரிசை எனப்படும்

course light: (வானூ) ஓடுபாதை விளக்கு : விமான நிலையத்தின் ஓடுபாதை நன்கு புலனாகுமாறு அமைக்கப்படுள்ள ஒளி விளக்கு

court : (க.க.) சதுக்கக் கூடம்: நாற்புறமும் கட்டிடங்கள் சூழ்ந்த அல்லது ஓரிரு பக்கங்களில் மட்டும் கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம்

court cupboard : காட்சிக் கூட அடுக்குப் பலகை : இது ஒரு குட்டையான அடுக்குப் பலகை. முதலில் இது ஒரு பக்கமே பையாக அமைக்கப்பட்டது. பின்னர் தனி அடுக்காக அமைக்கப்பட்டது

cove : வளைவிடம் : ஒரு பெரிய உட்குடை வான் எழுதகம், ஒரு சுவர் மாடத்தினையும் குறிக்கும்.

cove ceiling : (க.க) வளைவு விதானம் : சுவர்களிலிருந்து எழுந்து வளைவாக உளள ஒரு விதானம்

cove mouding : (க.க) வளைவு மேல் தளம் : உட்குழிவான மேல் தளம்

cover mould: (குழை) பொதி வார்ப்படம் : ஓர் உட்செலுத்து வார்ப்படத்தில் நிலையிருப்பாக உள்ள ஒரு பாதி cover papers ; (அச்சு) அட்டைத் தாள்கள் : துண்டு வெளியீடுகளுக்கு அட்டைகளாகப் பயன்படுத்துவதற்கான கனத்த தாள்கள் அஞ்சலில் அனுப்புவதற்குத் தேவைப்படும் வலுவான தாளாக பயன்படுத்தப்படுகிறது

cover plate : (பொறி) கவசத் தகடு : ஒரு தூணின் அல்லது தூலத்தின் பக்கப் பகுதியில், வளைவினைத் தாங்குவதற்காகச் சேர்க்கப்பட்டுள்ள ஒரு தகடு

cowl : (தானி.எந்.) கவிகை மூடி : உந்துவண்டியில் பிடருக் கவிகைக்கும், கருவியறைக்குமிடையில் கவிகை போல் அமைந்திருக்கும் பகுதி

cowling : (வானூ.) விமான எங்திரக் கவிகை மூடி : விமான எந்திரத்தின் மேல்மூடி. இதனை அகற்றவும் மீண்டும் நீட்டிக் கொள்ளவும் செய்யும் வகையில் இது அமைந்திருக்கும்

cracking. (வேதி.) பிளப்பு முறை: மண்ணெண்ணெய். எரியெண்ணெய் போன்றவற்றில் வெப்ப மூட்டி, அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல் எடுக்கும் அளவினை அதிகரிப்பதற்குரிய ஒரு செய்முறை. இதில் பெட்ரோலியம் தனி மூலக்கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது

crackle : பீங்கான் அழகு வேலைபாடு: அழகுக்காக வேண்டுமென்றே வெடிப்புடையதாகச் செய்யப்படும் சீனப் பீங்கான் கலத்திலுள்ள நுட்ப வேலைப்பாடுகள்

craft : கைவினை : கைவேலைப் பாடுகளை நுட்பமாகச் செய்திடும் தேர்ச்சித் திறன். கைத் திறனுள்ள தொழில்; செய்தொழில்

crafts man : கைவினைஞர் :தேர்ச்சித் திறன் வாய்ந்த ஒரு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்

crampiron : (வார்.) இரும்புப் பற்றிணைப்பு : பகர வடிவான வளைவுடைய இரும்பாலான பற்றிணைப்பு.இது வார்ப்படத் தொழிலில் பயன்படுகிறது

crane : பாரந்தூக்கிப் பொறி: பற்சக்கரங்கள், கம்பி வடங்கள் பீப்பாய் வடங்கள் முதலியவற்றின் மூலமாக பெரும் பாரங்களைத் தூக்குவதற்குப் பயன்படுகிற, கையினால், மின்விசையினால் இயக்கப்படுகிற ஒரு பொறியமைவு

crane ladle: பாரந்துக்கி அகப்பை: உருக்கிய உலோகத்தை எடுத்துச் செல்வதற்குரிய பெரிய அளவு அகப்பை. இது மிகப் பெரியதாக இருப்பதால் இதனை ஒரு பாரந்துக்கியினால் மட்டுமே தூக்க முடியும்

crank : (எந்.) திருகு விட்டம் : ஒரு சுழல் தண்டின் அச்சினைச் சுற்றி சுழல்கிற ஒரு நெம்புகோல்

crankcase : (தானி.) உராய் பொருட்கலம் : ஓர் உந்துவண்டியின் அடிப்பகுதி. இது உராய்வு எண்ணெய் வழங்குவதற்கான ஒரு சேமிப்புக் கலமாகச் செயற்படுகிறது.

crank case ventilator : (தானி) உராய் பொருட்கலப் பலகணி : உராய் பொருட் கலத்தில் உண்டாகும் ஆவிகளை உறிஞ்சி வெளியேற்றுவதற்கான சாதனம். இவ்வாறு வெளியேற்றாவிட்டால், நீராவியாலும், பெட்ரோலியம் ஆவியாலும் எண்ணெய் நீர்த்துப் போய்விடும்

crank shaft : (எந்.பொறி.) திருகு வட்ட சுழல்தண்டு : ஓர் எஞ்சினின் பிரதான சுழல் தண்டு. இதனுடன் இணைப்புச் சலாகைகள் பொருத்தப்படிருக்கும். இது உந்து தண்டுகளின் விரைசூழல் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது crank shaper: (எந்.) திருகு விட்ட கரைசற் பொறி : ஒரு திருகு விட்ட இயக்க்த்தினால் செயற்ப்டும் திமிசு உடைய ஒரு கடைசல் பொறி

creator of an arc : (மின்.) சுடர் விளக்கு வளைவுக் குழி : ஒரு சுடர் விளக்கில் நேர்மின்வாய்க் கார்பனில் மின்னோட்டச் செயலினால் உண்டாகும் உட்புழையான துணி

crazing :வெடிப்பு :

(1) மட்பாண்டத்தில் ஏற்றத் தாழ்வான சுரிப்பு காரணமாக உண்டாகும் நுண்ணிய வெடிப்புத் தடங்கள். இது முறையின்றிச் சூடாக்குவ தாலும் உண்டாகிறது

(2) அதிக வண்ணமேற்றிய பூச்சு வண்ணம் அல்லது இனாமல் இன்னும் அதிக நெகிழ்வுடைய மேற்பரப்பில் பூசப்படும்போது ஏற்படும் மயிரிழை போன்ற வெடிப்பு. இது பின்னர் ஆழமான பிளவாக ஆகக்கூடும்

(3) பிளாஸ்டிக் பொருள்களின் மேற்பரப்பில் அல்லது உட்பகுதியில் உண்டாகும் நுண்ணிய வெடிப்புகள்

creasing' ; (அச்சு.)மடிப்பு வரையிடுதல் : கனமான அட்டையினை அல்லது மேலட்டையினை உடைந்துவிடாமல் மடித்து வரையிடுதல்

credence : குறுமேசை : திருக் கோயிலில் முந்திரித் தேறலும், ரொட்டியும் வைக்கப்படும் பலிபீடத்திற்கு முன்னுள்ள சிறு மேசை

creep : (உலோ.) உருத்திரிபு : உயர்ந்த அளவு வெப்ப நிலையில், நிலையான பாரத்தில் எஃகு மெல்ல மெல்ல உருத்திரிபு கொள்ளுதல

creeper : (தானி. எந்.) தாழ் மேடை : உந்து வண்டியைப் பழுது பார்ப்பவர். உந்து வண்டியில் அடியில் வேலை செய்யும்போது படுத்துக் கொள்வதற்குப் பயன்படும் ஒரு தாழ்வான மேடை

creo-sote : (வேதி.). கீலெண் ணெய் : கீலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் விடிவான ஆற்றல் வாய்ந்த நச்சரி. இது தொற்று நீக்கியாகவும் மரக்காப்புப் பொருளாகவும் பயன்படுகிறது

creo-soting : கீலெண்ணெய்ப் பக்குவம் : மரக்கீலிலிருந்து வடித்திறக்கப்படும் நெகிழ்ச்சிப் பொருள் கொண்டு வெட்டு மரத்தினைப் பக்குவம் செய்தல். இதன் மூலம் வெட்டுமரத்தின் உழைப்புக் காலம் அதிகரிக்கிறது

creo soting cylinder : கீலெண்ணெய்ப் பக்குவ நீள் உருளை இது வலுவான தேனிரும்பு நீள் உருளை யாகும். இதில் ரயில்_தண்டவாள்ங்களில் ஈரம் வெளியேற்றப்பட்டு, அழுத்தத்தின் கீழ் கீலெண்ணெய் நிரப்பப்படுகிறது

crepe grain : கரண்பரப்பு : மெல்லிய சுருக்கமுடைய மேற்பரப்பு

cresting : (க.க.), :முகடு:ஒரு கட்டிடத்தின் சுவரில் அல்லது மோட்டுவரையில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார வேலைப்பாடு

crest of screw thread : (எந்..) திருகிழை முகடு : ஒர் இழையின் இரு பக்கங்களையும் இணைக்கும் உச்சப் பரப்பு

cretonne : முரட்டுத்துணி; சலவை யற்ற முரட்டு அச்சடித்த துணி

crewel work : திரைச் சித்திர வேலைப்பாடு : முறுக்கப்பட்ட மெல்லிய கம்பிளி நூலைக் கொண்டு துணி மீது செய்யப்படும் சித்திர வேலை

crimping : (பட்.) சுருள்வித்தல்: விரும்பிய வடிவில் சுருட்டி வளைத்து மடித்தல் crimping machine : சுருள் விப்புக் கருவி : குஞ்சங்களின் மேல் மடிப்புகள் அல்லது சுருள்கள் உண்டாக்குவதற்கான எந்திரம்

cripple rafter : ( க.க. ) சார இறைவாரக் கைமரம் : கட்டிடத்தின் பக்கத்துக்கு இடப்படும் மூட்டு

criterion : அளவைக் கட்டளை : ஒப்பீடு செய்வதற்குரிய ஒரு கட்டளை விதி

critical altitude : (வானூ.) மாறுநிலை உயரம் : ஒர் எஞ்சினின் உள்ளிழுப்பு பல்வாயிற் குழாயில், மதிப்பீடு செய்த விசை அளவுடனும், கடல்மட்ட வேகத்திலும் சாதாரணமாக இயங்கும் அளவுக்குச் சமமான ஒர் அழுத்தத்தை நிலைநாட்டும் வகையில் ஓர் அதிவேகப் போர் விமானம் பறக்கும் உச்ச அளவு உயரம்

critical angle : (வானூ.) மாறு நிலைக் கோணம் : ஒளிக்கதிர் கோடு நிலையிலிருந்து திரிநிலைக்கு மாறும் கோணம்

critical speed : (வானூ.) மாறு நிலை வேகம் : கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு இயல்விக்கும் வகையில் ஒரு விமானம் பறக்கின்ற மிகக் குறைந்த வேகம்

critical temperature: (எந்.) மூட்டு பதன்: அழுத்தத்தால் மட்டும் நீர்மமாக்க முடியாத நிலையுடைய வாயுவின் தட்பவெப்ப நிலையளவு

critical angle : மாறுநிலைக் கோணம் : ஒளிக்கதிர்க் கோடு, நிலைலயிலிருந்து திரிநிலைக்கு மாறும் கோணம்

crockery : மட்பாண்டம் : சுட்ட களிமண் கலங்களின் தொகுதியைக் குறிக்கும் சொல்

crocking : சாயத்தேய்ப்பு: சாயம் தோய்த்த பொருளிலிருந்து திருத்தமாக இல்லாத சாயத்தைத் தேய்த்து அப்புறப்படுத்துதல்

crocus cloth : மெருகுத் துணி:தூளாக்கி இரும்பு ஆக்சைடு ஒட்டப்பட்டுள்ள துணி. இது மெருகேற்றுவதற்குப் பயன்படுகிறது

crookes tube; (மின்.) ஒளிக்கதிர்க் கோட்டக் குழாய் : ஒளிக்கதிர் உயர் கோட்ட நிலையை எடுத்துக் காட்டுவதற்கான காற்றில்லாக் கண்ணாடிக் குழல்

crookes's vacuum : முனைப்பு வளி நீக்க இடைவெளி

crookes rays: எதிர்மின் வாய்க் கதிர்கள்

crop; (தோல்.) பதனிட்ட மாட்டுத் தோல் :

(1) செருப்பு முதலானவற்றின் காலடித் தோலுக்காகத் தயாரிக்கப்படும் பதனிட்ட முழு மாட்டுத் தோல்

(2) விளிம்புவெட்டு : அச்சு மறுபடி எடுப்பதற்காக ஒர் அச்சுத் தகட்டினை தேவையான வடிவளவுடன் வெட்டி எடுத்தல்

cropper : (எந்.) கத்தரிப்பான் : சலாகைகள் முதலியவற்றை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு வகைக் கத்தரிப்பான்

cropping: கத்தரித்தல்: துணியின் மேற்பரப்பினைக் கத்தரித்தல்

cross (கம்.) குறுக்கு வெட்டுக் குழாய் : இரு இனைக் குழாய்களை அவற்றின் செங் கோணங்களில் இருக்குமாறு நான்கு கிளைகளாகக் குறுக்கு வெட்டாகப் பொருத்துதல்

cross belt;(எந்.) குறுக்குப்பட்டை: ஒரு கப்பியின் மேற்பகுதிக்கு மாறி திசையை எதிர்மாறாக்கும் வகையில் ஒடுகிற பட்டை Crosscut Saw: (மர.வே.) குறுக்குவெட்டு ரம்பம் : உத்தரங்களைக் குறுக்காக வெட்டுவதற்கான பெரிய ரம்பம்

cross feed: (எந்) குறுக்கு ஊட்டம் : ஒரு கடைசல் எந்திரத்தில் குறுக்காக ஊட்டுதல், இந்தக் கடைசல் எந்திரம், வேலைப்பாடு செய்யப்படும் பொருளின் அச்சுக்குச் செங்கோணத்தில் இயங்கும்

cross grain : நுண் இழைவரி : நுண் இழைவரிக்கெதிரான நுண் இழைவரி

crosshatch generator : (மின்) வலைக்கோட்டு மின்னாக்கி : தொலைக்காட்சியைப் பழுது பார்ப்பதில் பயன்படுத்தப்படும் ஒரு சோதனைக் கருவி. குழாயில் வலைக்கோட்டு பின்னல் தோரணியை உண்டாக்குகிறது. வண்ணத் தொலைக்காட்சியில் மூன்று எலெக்ட்ரான் ஒளிப் பாய்ச்சு கருவிகளிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் ஒரு முகப்படுவதைச் சீராக அமைப்பதற்குப் பயன்படுகிறது

cross hatching: வளைக்கோட்டுப் பின்னல் : வலைக்கோடுகளிட்டு நிழற்சாயல் காட்டும் வலைக்கோட்டுப் பின்னல்

cross head : (பொறி) விட்டக் கோல் : நீராவிப் பொறி போன்றவற்றில் முகட்டுக் குறுக்கு விட்டக் கோல்

crossing file: (கணி) கூம்பு அரம்: தட்டையான பக்கங்கள் பின்புறமாக ஒட்டியுள்ள இரு அரை வட்டங்கள் போல் அமைந்த பகுதியைக் கொண்ட ஒரு கூம்பு அரம்

crosslab (மர.வே.) குறுக்கு வட்டத் தகடு : இரு துண்டுகள் ஓரிடத்தில், இணையும் போது ஒரே சமதளத்தில் படிந்திருக்குமாறு இரு துண்டுகளும் பாதிபாதியாகப் பொருத்துகிற குறுக்கு இணைப்பு

cross member: குறுக்கு உறுப்பு: ஓர் உந்துவண்டிச் சட்டகத்தின் ஒரு கட்டமைவுப் பகுதி. இது பக்கக் கம்பிகளை, செங்கோணங்களை இணைக்கும்

cross modulation : (மின்) முரண் அலை மாற்றம் : வானொலி அலைவெண் மிகைப்பின் உட்பாட்டின் சைகை காரணமாக ஏற்படும் திரிபாக்கம்

crossover ; (கம்) மேற்கவி குழாய்: "U" என்ற எழுத்தின் வடிவில் வளைந்து பொருத்தப்பட்டி ருக்கும் குழாய் அமைப்பு. குழாய்கள் ஒரே சமதளத்தில் இருக்கும் போது ஒரு குழாய் மற்றொரு குழாயைக் கடந்து செல்வதற்கு இது பயன்படுகிறது

cross section : குறுக்கு வெட்டு: வேலைப்பாடு செய்யப்படும் பொருளின் நீளவாக்கு அச்சுக்குச் செங்கோணங்களில் உள்ள ஒரு குறுக்கு வெட்டுப் பகுதி

cross slide : (எந்) குறுக்கு சறுக்கிழைவு : கிடைமட்டமான சறுக் கிழைவுத் தடம் அல்லது இணைப்பான். இது ஓர் உருவரை எந்திரத்தில் கருவிப் பெட்டியைத் தாங்கிச் செல்கிறது. ஒரு கடைசல் எந்திர ஊர்தியின் சேணத்தின் மீது இந்தச் சிறுக்கிழைவுத் தடம் இயங்கி குறுக்கிட்டு ஊட்டத்தை அளிக்கிறது. இது சூட்டு ஆதாரத்தையும் தாங்கி நிற்கிறது

cross-stitch : குறுக்குத் தையல்: பின்னல் போல் அமையும் இரட்டைத் தையல்

cross talk : (மின்) குறுக்கு உரையாடல் : தொலைபேசி உரையாடலில் குறுக்கீடு ஏற்படுதல்

cross tap : (மின்) குறுக்கு இணைப்பு: ஒரு குறுக்கு இணைப்பு போன்ற ஓர் இணைப்பு, இதில் தனியொரு கம்பிக்குப் பதிலாக இரு கம்பிகள் பிரதானக் கடத்தியில் நுழைக்கப்பட்டிருக்கும்

crosstying springs : ஆதாரக்கட்டு சுருள்வில் : கரடுமுரடான திரைச்சீலைகளில் தொய்வு ஏற்படாமல் தடுப்பதற்காக அமைக்கப்படும் சுருள்வில் அமைப்புமுறை. இது திண்டுமெத்தை அமைப்புக்கு உறுதிப்பாட்டினை அளிக்கிறது

cross valve : (எந்) குறுக்கு ஓரதர் : ஒரு குறுக்குக் குழாயில் பொருத்தப்பட்டுள்ள ஓரதர். இணையாக உள்ள இரு குழாய் இளுக்கிடையில் வேண்டுகிற போது தொடர்பு ஏற்படுத்துவதற்கு இது பயன்படுகிறது. எண்ணெய் மற்றும் நீர் இறைப்பு நடவடிக்கைகளில் மிகுதியாகப்பயன்படுகிறது

cross-wind force: (வானூ) குறுக்குக் காற்று விசை : விமானத்தின் மீது அல்லது அதன் ஏதேனும் பகுதி மீது தாக்கும் மொத்தக் காற்று விசையின் உயர்த்து விசைக்கும் இழுவை விசைக்கும் செங்குத்தாகச் செயற்படும் அமைப்பான்

crotch vaneer: (மர.வே.) கவட்டு மேலொட்டுமானம் : மரக் கவட்டிலிருந்து அல்லது ஒன்றாக இணையும் நூதனமான கரண்பரப்பினைக் காட்டும் இரட்டை மரங்களிலிருந்து வெட்டப்பட்ட மேலோட்டுமானப் பலகை

crowbar : கடப்பாரை : நெம்பு கோலாகப் பயன்படும் இறுதி வளைந்த இரும்புக் கம்பி

crown : மேற்கு வடு: (1) தளமட்டத்தின் உயர்ந்த பகுதி. சாலைமையம் என்றும் கூறப்படும்

(2) கட்டிடக் கலையில் எழுதகத்தின் உச்சி உறுப்பு

(3) குழாய் அமைப்பு வேலையில், குழாயில் நீர்பாயும் திசையினை மேல்நோக்கி பாயச் செய்யும் பொறியமைப்பின் பகுதி

(4) மட்பாண்டக் கலையில், சூளையின் மேற்கவிந்த கூரை

crown molding: (க.க) இரட்டை முகப்பு வளைவு : வளைவான இரட்டை முகப்புடைய ஒரு வளைவு. இதில் அடைப்புடைய எழுதகத்தில் மேல் உறுப்பு, மேற் கூறையை அடுத்துக் கீழே அமைந்திருக்கும்

crown pulley:(எந்) மையக் கப்பி: முகப்பின் விளிம்புகளைக் காட்டிலும் மையத்தில் அதிக விட்ட முடைய ஒரு கப்பி. இந்த மையம், வார்ப்பட்டை கப்பியிலிருந்து நழுவிச் செல்லாமல் தடுக்கிறது

crow’s foot : (வானூ. )காகக் காற்குறி : தனியொரு வடத்திலுள்ள பாரத்தைப் பரவலாகப் பகிர்ந்தளிப்பதற்காகப் பல குறுகிய வடங்களை அமைக்கும் முறை

crucible : (வேதி) புடக்குகை: உலோகங்களை உருகவைக்கும் மட்கலம்

crucible furnace : (உலோ) புடக்குகை உலை : அலுமினியம். வெண்கலம், செம்பு போன்ற அறமல்லாத உலோகங்களை உருக்குவதற்குப் பயன்படும் வாயுவினால் எரியூட்டப்படும் உலை

crucible steel : மூசை எஃகு : ஒரு புடக்குகையில் (மூசை) மெல்லிரும்பினைக் கட்டு, அதனுடன் கட்டைக்கரியினை அல்லது தேனிரும்பு அல்லது கார்பன் நிறைந்த வேறு பொருளைச் சேர்த்து உருக்கித் தயாரிக்கப்படும் உயர்ந்த ரக எஃகு. இவ்வாறு தயாரிக்கப்படும் எஃகில் 0.75% முதல் 1.50% வரை கார்பன் கலந்திருக்கும். இந்த எஃகு வெட்டுக் கருவிகள், வார்ப்படங்கள் முதலியன தயாரிக்கப் பயன்படுகிறது

Crude oil : கச்சா எண்ணெய் : பூமியிலிருந்து இயற்கை நிலையில் எடுக்கப்படும் பெட்ரோலியம் இது பக்குவப்படுத்தப்படாமல் இருக்கும்

crushing strain; நொறுங்கு விசையழுத்தம் : ஒரு பொருள் அழுத்தப்படும் போது அதனை நொறுங்கச் செய்யும் விசையழுத்தம்

cryogenic propellamt : (விண்) உறைகலவை முற்செலுத்தி : மிகத்தாழ்ந்த வெப்ப நிலையில் மட்டுமே திரவ நிலையில் இருக்கும் ஒரு ராக்கெட் எரிபொருள்

cryogenics : (மின்,) தாழ்வெப்ப இயற்பியல் : மிகவும் தாழ்ந்த வெப்ப நிலையில் அதிகத் திறம் பாட்டினைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மின்னணுவியல் சுற்று வழிகள்

cryohydrate : (குளி.பத.) கிரையோ ஹைட்ரேட்: உப்பும் நீரும் கலந்த ஓர் உறை கலவை

cryometer: தாழ் வெப்பமானி: தாழ்நிலைத் தட்பவெப்பமானி

cryolite: பனிக்கல்: கிரீன்லாந்தில் எடுக்கப்படும், தொழில் துறைக்குப் பெரிதும் பயன்படும் பயனுடைய படிகக்கல்வகை. இது அலுமினியம், கண்ணாடி தயாரிக்கப் பயன்படுகிறது

crystal : (வேதி,) படிகக்கல்: மறை வெளிக்காட்சி காணப் பயன்படும் படிகக் கற்பாறைக் கோளம்

crystal control (மின்னி) படிகக் கட்டுப்பாடு : அமுக்க மின்னியல் படிகத்தைப் பயன்படுத்தி ஓர் அலைப்பியின் அலைவெண்ணைக் கட்டுப்படுத்துதல்

crystal diode : (மின்) படிக இருமுனையம் : நுண்ணலை நிகழ்வுகளில் திருத்தியமைக்கும் கருவியாகப் பயன்படுகிறது

crystal filter : (மின்) படிக வடிகட்டி : படிகக்கல் படிகங்களைப் பயன்படுத்தி மின்சுற்று வழியினை மிகத் துல்லியமாக ஒத்தியைவு செய்தல்

crystal lattice : (மின்) படிகப் பின்னல் : புறக்கோடி எலெக்ட்ரான்கள் இணை மின்மப் பிணைப்புகள் மூலம் பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருளின் கட்டமைப்பு

crystallization : (வேதி) படிக உருவாக்கம் : உருகிய அல்லது கரைந்த நிலையிலுள்ள ஒரு வேதியியற் பொருளைப் படிக வடிவில் தனியாகப் பிரித்தெடுத்தல்

crystallization of iron : இரும்புப் படிக உருவாக்கம்: முறையற்ற குளிர்விப்பு அல்லது சம்மட்டியடி காரணமாக இரும்பு உடையும் இயல்புடையதாதல்

c-stage resins: சி-நிலைப் பிசின்கள் : வெப்பமூட்டிய நிலையில் உருக்கொடுத்த பிசின்கள், எதிர் விளைவுகளின் இறுதிக்கட்டத்தை எட்டுதல். இந்த நிலையில்,உருக்க முடியாததாகவும், கரைக்க இயலாததாகவும் இருக்கும்

cuban mahogany : கியூபா சீமை நூக்கு: வாணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வகைச் சீமை நூக்கு மரம். இதன் வெட்டு மரம் மிகக் கடினமானதாயும், அடர்கரிய நிறமுடனும் இருக்கும். அறைகலன்கள் தயாரிக்க மிகுதியும் பயன்படுகிறது cube : கனசதுரம் : (1) ஆறு சம சதுர முகங்களையுடைய திண்ம உரு. இதில் எல்லாக் கோணங்களும் செங்கோணங்களாக இருக்கும்

(2) மும்மடிப் பெருக்கம் : கணிதத்தில் ஓர் எண்ணின் மும்மடிப் பெருக்கமாகிய எண்

cube root : மும்மடிப் பெருக்க மூலம் : மூன்று காரணிகளாகக் கொண்டு பெருக்கிய ஓர் எண். இந்த மூன்று காரணிகளின் பெருக்கல் எண் மும்முடி எனப்படும்

cubical content : கனசதுரக் கொள்ளளவு: ஒரு கலம் உட்கொள்ளும் கன அளவு, கட்டிடங்களின் கட்டுமானச் செலவினைக் கணக் கிடுவதற்கு அடிப்படையாகவும் இது பயன்படுத்தப்படுகிறது

cubic measure: கன அளவு:

1728 கன அங்குலம் = 1 கன அடி

27 கன அடி = 1 கன கஜம்.

231 கன அங்குலம் = 1 காலன்

128 கன அடி = 1 கார்ட்

cubic meter : கன மீட்டர் : மெட்ரிக் அளவை முறையில் கன அளவின் அலகு. இது m3 எனக் குறிக்கப்படும்

cueing : (மின்) ஒருவழித் தொலைபேசி : செயல் திட்டங்களைக் கட்டுப்படுத்தவும், தொழில்நுட்ப அலுவலர்களுக்கு அறிவுறுத்தவும் பயன்படும் ஒரு வழித் தொலைபேசித் தொடர்பு

culm நிலக்கரித் தூள் : நிலக்கரிச் சுரங்கத்தில் நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் தூசு மற்றும் அயல் பொருள்கள்

cultivator: சாகுபடிக் கருவி: நிலத்தைக் கிளறிக் களையகற்றும் வேளாண்மைக் கருவி

culvert : பாலம் : ஒரு சாலையின் கீழ் தண்ணீர் செல்வதற்காக அமைந்த மூடிய கால்வாய்

cumar : கூமர் : கீல் எண்ணெய் வடிபொருளிலிருந்து கிடைக்கும் செயற்கைப் பிசின். இது மின்காப்பியாகவும், வண்ணப் பொருள்களிலும், அச்சு மையிலும் பயன்படுத்தப்படுகிறது

cumulative : அடுக்குத் திரள்: அடுக்கடுக்காகச் சேர்த்துப் படிப்படியாகத் திரண்டு வளர்கிற

cup center : (எந்) கிண்ண மையம் : மரக்கடைசல் எந்திரத்தில் கடை முளையில் பயன்படுத்தப்படும் மையம். இதனை இறுதி மையம் என்றும் கூறுவர்

cup chuck: கிண்ண ஏந்தமைவு: முனை நுண்கடைசல் வேலையில் பயன்படுத்தப்படும் ஆழமான உட்புழைவுடைய, கடைசற் பொறியின் ஏந்தமைவு

cup grease : கிண்ண மசகு: ஓர் உராய் பொருளாகப் பயன்படும் கனத்த உடலுடைய, ஓரளவுத் திடமான மசகுப் பொருள்

cup joint : கிண்ண மூட்டு : அண்டைக் குழாயின் கூர்நுனியைப் பொருத்துவதற்கு ஏற்ற அளவுக்கு வாய் அகன்று இருக்கிற குழாயில் ஒரு குழாயினை இணைத்தல்

cupola : (க.க.) தூபிமாடம் : (1) ஒரு கட்டிடத்தின் கூரைக்கும் மேலுள்ள ஒரு கீறிய தூபி

(2) வார்ப்பட அடுப்பு : இரும்பு வார்ப்படத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் அடுப்பு

cup leather: (எந்) உறைத் தோல்: நீரியல் எந்திரங்களின் உந்து தண்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் தோலுறை cuprite - செம்புக் கனிமம்: (Cu2O) சிவந்த செம்பு உலோகக் கனிமம். இது அரிசோனாவிலும், பல தென் அமெரிக்க நாடுகளிலும் கிடைக்கிறது

cupro-nickel: செம்பு நிக்கல்: செம்பும் நிக்கலும் சேர்ந்த கலவை. இது எளிதில் கம்பியாக நீட்டக் கூடியது. தகடாக்கக் கூடியது. இதில் 10%க்கு மேல் நிக்கல் கலந்திருந்தால் அரிமானத்தைத் தடுக்கும்

cup shake : (தச்சு.) வெட்டுமரப் பிளவு: வெட்டுமரத்தில் இரு வளையங்களிடையே காணப்படும் பிளவு

cup wheel : கிண்ணச் சக்கரம் : விளிம்பினால் வெட்டுமாறு ஒரு கிண்ண வடிவில் வடிவமைக்கப்பட்ட ஓர் அரைவைச் சக்கரம்

curb box : ( கம்.) விளிம்புக் குழாய்ப் பெட்டி : ஒரு விளிம்புக் குழாய் மீது வைக்கப்பட்டுள்ள குழாய் வடிவிலான அல்லது குழல் போன்ற நீண்ட பெட்டி வடிவிலான ஒரு சாதனம், இதனுள் ஒரு சாவியை நுழைத்து விளிம்புக் குழாயைத் திருப்பலாம்

curb cock : விளிம்புக் குழாய்: ஒரு குழாயின் விளிம்பின் அருகில் பொருத்தப்பட்டுள்ள ஓர் ஒரதர்

curb roof (க.க.) சரிவு மோடு: இரு பக்கச் சரிவுகளிலும் மேற்பகுதிச் சாய்வைவிடக் கீழ்ப்பகுதிச் சாய்வு கீழ்நோக்கிச் செங்குத்தாகச் சரிந்திருக்கும்படி அமைக்கப்பட்ட மோடு

பார்க்க: இரு சரிவு மோடு.

curdling : கெட்டியாக்கம் : அரக்குச் சாய இனாமல் பொருளில் விரைவில் உலர்ந்துவிடக் கூடிய மிகக் குறைந்த தரமுடைய, வலுக்குறைந்த கரைமத்தைச் சேர்த்தல்

cure : (குழை) பதனமுறை : பிசினுடன் ஒரு கிரியா ஊக்கியைச் சேர்ப்பதன் மூலம், அல்லது வெப்பத்தையும் அழுத்தத்தையும் அதிகரிப்பதன் மூலம் சில சமயம் அழுத்தம் இல்லாமல், வேதியியல் வினைகளை உண்டாக்கி, அந்தப் பிசினின் இயற்பியல் வடிவத்தையும் வேதியியல் குணங்களையும் மாற்றுதல். மாறுதல்களின் சுழற்சியின் இறுதியில் விளிம்பில் உண்டாகும் பொருள்

cure time:(குழை,) பதனக் காலம்: பிளாஸ்டிக் உற்பத்தியில் வார்ப்படப் பொருளை மூடுவதற்கும், அழுத்தத்தை விடுவிப்பதற்குமிடையிலான இடைவெளிக் காலம். பிளாஸ்டிக்குகளை மென்தகடுகளாக்கும் போது, கிரியா ஊக்கியைச் சேர்ப்பதற்கும், கெட்டிப்படுவதற்கு மிடையிலான இடைவெளிக்காலம்

curie point : (மின்) காந்த மறைவு நிலை : ஓர் அயக்காந்தப் பொருளில் எஞ்சியிருக்கும் காந்தத் தன்மை மறைந்துபோகிற வெப்ப நிலை.

curing : (குழை) பதனஞ் செய்தல் : ஒரு கெட்டிப்படுத்தும் பொருளை வேதியியல் வினை மூலமாக கரையக்கூடிய அல்லது உருகக் கூடிய நிலையிலிருந்து கணிசமான அளவுக்குக் கரையாத அல்லது உருகாத வடிவத்திற்கு மாற்றுதல். இந்த வினை ரப்பரைக் கந்தகம் கலந்து வலிவூட்டுவதற்கு ஒப்பானது

curl : சுருள்வு : வெட்டுமரத்தின் கரண் பரப்பில் காணப்படும் உள் வரி

curled hair: சுருள் முடி: குதிரை வால்மயிர், பிடரிமயிர், கால்நடைகளின் வால்மயிர், பன்றி வால் மயிர் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் சுருண்ட முடி. இதனைப் பல செய்முறைகள் மூலம் சுருள் சுருளாக்கி, மெத்தை திண்டு வேலைகளில் பயன்படுத்துகிறார்கள். குதிரை வால்முடி இந்த வேலைக்கு மிகவும் ஏற்றது

curling die : (எந்) சுருள் வார்ப்புரு : உலோகத் தகட்டிலிருந்து தயாரிக்கப்படும் கிண்ணத்தின் மேற்பகுதியில் சுருள் முனை அமைப்பதற்குப் பயன்படும் வார்ப்புரு

current : (மின்.) மின்னோட்டம் : வெவ்வேறு ஆற்றல் திறனுள்ள இரு முனைகளில் மேல் முனையிலிருந்து கீழ் முனைக்கு ஒரு கடத்தியின் வழியாகப் பாயும் மின்னாற்றல்

current density : (மின்) மின்னோட்ட அடர்த்தி: மின்கடத்தியின் குறுக்கு வெட்டுப் பகுதியின் ஓர் அலகுக்கான ஆம்பியர் அளவு

current limit thermostat; மின்னோட்ட வரம்பு வெப்ப நிலைப்பி: மிகையாக மின்னோட்டம் பாய்வதன் காரணமாகச் சேதம் ஏற்படுவதை தடுப்பதற்கு, ஓர் உருக்கிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஒரு மின் விசைச் சாதனம். இது வெப்பத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது

current node : (மின்) மின்னோட்ட மையமுனை: நிலையான அலைகளையுடைய மின்செலுத்துக் கம்பியில் பூஜ்ய மின்னோட்டம் உண்டாகும் புள்ளி

current regulator : (தானி.எந்) மின்னோட்டச் சீர்தூக்கி: இது காந்தத்தினால் கட்டுப்படுத்தப்படும் ஓர் உணர்த்தி. இதன்மூலம் மின்னாக்கியிலிருந்து மாறாத மின்னோட்ட அளவினைப் பெறுவதற்கு மின்னாக்கியின் புலமின் சுற்றுவழி உண்டாக்கப்பட்டு முறிக்கப்படுகிறது

current strength ; மின்னோட்ட வலிமை : பாயும் மின்னோட்டத்தின் அளவு. இது ஆம்பியர்களில் அளவிடப்படுகிறது

current transformer : (மின்) மின்னோட்ட மாற்றி : பார்க்க : மாற்றி

current - voltage regulator : (மின்.) மின்னோட்ட அழுத்த ஒழுங்கியக்கி: ஒரு மின்னாக்கியின் களச்சுருணையின் தடையை ஒழுங்குபடுத்துகிற, அதிர்வு வகையான உண்ர்த்தி. இது மாறுபட்ட மின்னோட்ட அளவுகளில் ஒரு சீரான மின்னழுத்த வெளிப்பாட்டை உண்டாக்குகிறது

currying: தோல் மெருகிடல்: பதனிட்ட தோலுக்குப் பயன்படுத்துவதற்கேற்ப மெருகூட்டுதல்

curtain wall: (க.க) இட நிரப்பும் சுவர்: கட்டிடத்திலிருந்து கட்டுமான எஃகு அல்லது கான்கிரீட்டு மூலம் ஆதாரம் பெறும் சுவரைச் சார்ந்திராத கீழுள்ள ஒரு மெல்லிய சுவர்

curve: வளைகோடு: தொடர்ந்து திசைமாற்றிச் செல்லும் ஒரு கோடு

curved plate: வளைவு அச்சுத் தகடு: ஒரு சுழல் அச்சு எந்திரத்தின் நீள் உருளையில் பொருத்தும் வகையில் அமைந்து முதுகு வளைந்த அச்சுத் தகடு

curvilinear: வரைகோடு வரம்புடைய : வளைகோடுகளை வரம்புகளாகக் கொண்ட

cushioned frieze: நீண்டுக் கம்பளித் துணி: மறுமலர்ச்சிக்கால மேற்குவிந்த திண்டுக் கம்பளித் துணி

cushioning: திண்டுறையிணைத்தல்: அதிகமான அழுத்தத்தை அல்லது தாக்கத்தைத் தாங்கக் கூடிய வகையில் விற்கூருள் திண்டு களை அல்லது வேறேதேனும் அதிர்ச்சி தாங்கிகளை அமைத்தல்

cusp: சாய்முகடு: மத்திய காலத்து கல்சித்திர வேலைப்பாடுகலுள்ள ஒரு கவடு அல்லது முனை

cut (அச்சு.) செதுக்குச் சித்திரப் பாளம்:

(1) செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கிய பாளம் அல்லது தகடு

(2) மரத்தில் அல்லது உலோகத்தில் வேலை செய்வதற்குரிய எந்திரங்களில் வெட்டப்பட்ட துண்டு களிலிருந்து சிம்புகளைச் சீவி எடுத்தல்

cut cards: (அச்சு) வெட்டிய அட்டைகள்: வேண்டிய வடிவளவுகளில் வெட்டப்பட்ட அட்டைகள்

cut flush: செப்பமாக்குதல்: துண்டு வெளியீடுகளின் அட்டை விளிம்புகளைச் சீராக வெட்டிச் செப்பமாக்குதல்

cut gears: வெட்டுப் பல்லிணைகள்: எந்திரத்தினால் வெட்டப்பட்ட பற்களைக் கொண்ட பல்லிணை. இது வார்ப்புப் பல்லிணைகளிலிருந்து வேறுபட்டது

cut-in note or side note: (அச்சு) ஓரக் குறிப்பு: அச்சடித்த பக்கத்தின் ஓரத்தில் சிறிய எழுத்தில் அச்சிடப்படும் குறிப்பு.பொதுவாகப் பாடநூல்களை அச்சிடுவதில் இது கையாளப்படுகிறது

cutlery: வெட்டுக் கருவிகள்: வெட்டுக் கருவிகளின் தொகுதியை இது குறிக்கிறது. எனினும்,பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் கருவிகளையே இது குறிக்கும்

cut nails : (தச்சு) வெட்டு ஆணிகள்: எந்திரத்தினால் வெட்டப்பட்ட இரும்பு ஆணிகள். இது இப்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படும் கம்பி ஆணிகளிலிருந்து வேறுபட்டது

cut of file : அரத்தின் வெட்டு முறை : ஓர் அரத்தின் முகப்பு வெட்டப்படும் முறை. இதனைக் கொண்டு ஓர் அரம், சமதள அரம், உராய்வு அரம் போன்ற பெயர்களைப் பெறுகிறது

cut off : இணைவுக் கோடு : ஒரு வார்ப்படத்தின் இரு பகுதிகளும் ஒன்றாக இணையும் கோடு. இதனைக் கூடல் கூர்வரை அல்லது கூடல் சால்வரி என்றும் கூறுவர்

cut off rule: (அச்சு) இடைவரித் தகடு : செய்தி இதழ்களில் அல்லது பருவ இதழ்களில் விளம்பரங்களைத் தனியே பிரித்துக்காட்டப் பயன்படும் இடைவரித் தகடு

cutout : (மின்.) வெட்டுவாய் : ஒரு மின்சுற்று வழியில் மின்னோட்டம் பாதுகாப்பு வரம்புக்கு மேல் உயரும்போது அந்தச் சுற்று வழியினைத் திறப்பதற்கான ஒரு சாதனம். இது இரு வகைப்படும்

(1) மின்காந்தம். இது முறிப்பான் என்றும் அழைக்கப்படும்

(2) வெப்பத் தடை. இது பல்வேறு வகை உருகிகளில் ஒன்று

cutout box: (மின்.) வெட்டுவாய்ப் பெட்டி : உருகித் தொகுதிகளைக் கொண்டிருக்கிற ஒரு பெட்டி

cutout relay : (தானி.எந்) வெட்டுவாய் உணர்த்தி : ஒரு மின்னாக்கியுடன் இணைக்கப்பட்டுள்ள தானியங்கும் காந்த விசை. மின்கலத்தில் அளவுக்கு அதிகமாக மின்னேற்றம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக மின்னாக்கி மின்சுற்று வழியின் இணைப்பைத் துண்டிக்க இது பயன்படுகிறது

cutter : (எந்.) வெட்டுக் கருவி : மரத்தை அல்லது உலோகத்தைத் தானாகவே வெட்டுவதற்காக, ஓர் எந்திரத்துடன் அல்லது பிடிப்பானுடன் பொருத்தப்பட்டுள்ள ஏதேனும் வெட்டுக்கருவி cutting angle : (எந்) வெட்டுக் கோணம் : ஒரு கருவியின் வெட்டு முகத்திற்கும், அந்தக் கருவி எந்தப் பொருளின் மேல் இயங்குகிறதோ அந்தப் பொருளின் மேற்பரப்புக்கு மிடையிலான கோணம்

cutting compound : (வெப்) வெப்பாற்றுக் கூட்டுப் பொருள்: வெட்டுப் பொருள்களின் விளிம்பில் உராய்வு வெப்பத் தணிப்பதற்குப் பயன்படும் பன்றிக் கொழுப்பு எண்ணெய், சோடா நீர் போன்ற பல்வேறு வகை வெப்பாற்றிப் பொருள்களில் ஒன்று

cutting face : (எந்) வெட்டு முகப்பு : வெட்டப்படும் பொருள் எந்த வெட்டுக்கருவிக்கு எதிராக நகர்த்தப்படுகிறதோ அந்த வெட்டுக் கருவியின் முகப்பு

cutting gauge : வெட்டு அளவி : வெட்டுக் கருவியில் ஒரு குறியீடு கருவிக்குப் பதிலாகப் பொருத்தப்பட்டுள்ள ஓர் அளவு கருவி

cutting nippers : வெட்டுப்பற்றுக் குறடு : பல்லால் பற்றிக் கொள்ளும் அமைப்புடைய ஒருவகைச் சாமணம்

cutting oils : (எந்) வெப்பாற்று எண்ணெய்கள்: வெட்டுப் பொருள்களின் விளிம்பில் உராய்வு வெப்பத் தணிப்பிற்குப் பயன்படும் கனமான எண்ணெய்கள் அல்லது எண்ணெய்களின் கலவைகள். வெப்பாற்றுப் பொருள்களாக பயன்படும் நீர்கரைசல்கள் இதில் உள்ளடங்காது

cutting out ; (தானி.எந்) மின்சுற்று முறிப்பு: (1) ஒரு மின்சுற்று வழியில், முன்னரே தீர்மானிக்கப்பட்ட மின்னழுத்தம் அல்லது மின்னோட்டம் எட்டியது. சுற்றுவழியினை முறிக்கிற உணர்த்துச் செயல்

(2) அழுத்தத்தை அல்லது தொடர்பினை மையவிலக்கு ஊடிணைப்பி விடுவிக்கிற முனை

cutting pliers: வெட்டுச் சாமணங்கள் : குறடு போல் பற்றிக் கொள்வதற்கான தட்டையான தாடைளுடன்,கம்பிகளை வெட்டுவதற்கான வெட்டு அலகுகளையும் கொண்ட சாமணங்கள்

cutting rule : (அச்சு) வெட்டுப்பட்டை : தாள்,அட்டைகள் முதலியவற்றை வெட்டுவதற்கும், அச்சுப் பக்கங்களைத் தயாரிப்பதற்கும் பயன்படும் எஃகினாலான பட்டைகள்

cutting tools: வெட்டுச் சாதனங்கள் : எந்திரங்களில் பயன்படும் கூர் விளிம்புகளுள்ள சாதனங்களை முக்கியமாகக் குறிக்கும்

cutting up : (எந்) குறுகத் தரித்தல்: அறுக்கும் எந்திரத்தில் அறுக்கப்படும் பொருளின் குறுக்காக வெட்டுக் கருவி கீழிருந்து மேலாகச் சென்று குறுக்காகத் தரித்தல்

cyanide : (வேதி.) சயனைடு ; பொதுவாகப் பொட்டாசியம் சயனைடு என்னும் வேதியியற் பொருளைக் குறிக்கும்.மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. வெள்ளைத் தூளாக அல்லது துண்டுகளாகக் கிடைக்கும். தாதுப் பொருள்களிலிருந்து தங்கத்தையும் வெள்ளியையும் பிரித்தெடுக்கவும், மின்முலாம் பூசுவதிலும், எஃகினை வெப்பத்தால் பக்குவப்படுத்துவதிலும் பயன்படுகிறது.

cyaniding : பரப்புக் கடினமாக்கல்: ஓர் உலோகக் கலவையின் மேற்பரப்பினை ஓர் இரும்பு ஆதாரப் பொருளுடன் சேர்த்து கடினமாக்கும் செய்முறை. இதில் உலோகக் கலவை, சயனைடு உப்புடன் சேர்த்து பொருத்தமான வெப்ப நிலையில் சூடுபடுத்தப்பட்டு, பின்னர் குளிர்விக்கப்படுகிறது

cybernetics : (மின்) சைபர்னெட்டிக்ஸ் : சிக்கலான கணிப்பொறி அமைப்புகள் குறித்தும், மனித மூளையுடன் அவற்றின் தொடர்பு பற்றியும் ஆராய்தல்

cycle : (மின் எந்.) சுழற்சி : (1) ஒரு முடிவுற்ற வட்டமாக அமைகிற முழுநிலைத் தொடர் வரிசை. இதில் இரண்டு அல்லது நான்கு சுழற்சி இயக்கியில் இருப்பது போன்று, ஒரு வரிசை முடிகிற போது மற்றொரு வரிசை தொடங்கும். ஒவ்வொரு நேர்விலும் ஒரு தொடரினை முழுமையாக்குவதற்குத் தேவைப்படும் உந்து தண்டின் வீச்சுகளின் எண்ணிக்கையினைப் பொறுத்து இரு சுழற்சி அல்லது நான்கு சுழற்சி என்று அழைக்கப்படுகிறது

(2) பிளாஸ்டிக் வேலையில், ஒரு செய்முறையின் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த நடவடிக்கையின் அதே கட்ட வரையிலான முழுமையான நிகழ்ச்சி

cyclogiro : (வானூ.) நிமிர் விமானம் : தலைக்கு மேலே விரைவாகச் சுற்றும் காற்றாடிப் பொறிகளின் இயக்கத்தால் செங்குத்தாக மேலெழுந்து உயர்ந்து செல்லும் விமானம்

cycloid : வட்டப்புள்ளி நெறி வளைவு : வட்டத்தின் மீதோ, எல்லையிலோ, உள்ளோ உள்ள புள்ளி வட்டம் நேர்வரை மீது உருளும் போது செல்லும் நெறிவட்டம்

cyclothymiz: (உள.) சைக்ளோத் திமிஸ்: மிகுந்த மனக்கிளர்ச்சியையும் பின்னர் மிகுந்த மனச் சோர்வையும் மாறி மாறி உண்டாக்கும் மனக்கோளாறு

cyclo-tron : (மின்) சைக்ளோட்ரான் : அனுப்பிளப்பிலும் செயற்கைக் கதிரியக்க ஆக்கத்திலும் பயன்படுத்தப்படும் மின்காந்த விரைவூக்கக் கருவி

cylinder: நீள் உருளை: இரு கோடிகளும் இடைவெட்டும் பரப்புகளும் வட்டமாகவோ ஒழுங்குடைய பிற வளைவாகவோ அமையும் நீள் தடி உருளை

cylinder block : (தானி) நீள் உருளை உறை : (1) உந்துதண்டுகளை ஏற்பதற்குத் துளையிடப்பட்ட எஞ்சினின் பிரதான உடற்பகுதி. நீள் உருளைக் கட்டையும், வணரிப்பெட்டி ஆகியவை ஒரே தொகுதி நீள் உருளைத் துளையாக வார்க்கப்படுகின்றன

(2) ஓர் எஞ்சின் நீள் உருளையின் உட்புற விட்டம்

cylinder bore: (தானி) நீள் உருளைத் துளை: எஞ்சின் நீள் உருளையின் விட்டம்.

cylinder head: நீள் உருளை மேல் மூடி: உள்வெப்பாலை நீள் உருளையின் மேல்மூடிப் பகுதி

cylinder oil : நீள் உருளை எண்ணெய்: 5%-15% விலங்கு அல்லது தாவர எண்ணெய்கள் கொண்ட கனிம எண்ணெய்களின் கலவை

cylinder press : (அச்சு) நீள் உருளை அச்சு எந்திரம் : நீள் உருளை, தட்டையான படுகை, தானே மைபூசும் சாதனம் ஆகியவற்றைக் கொண்ட ஓர் அச்சு எந்திரம்

cylindrical gauge : (எந்) நீள் உருளை அளவி : இரு உறுப்புகளைக் கொண்ட ஓர் அளவி. இதில் ஒரு கைபிடியுள்ள ஓர் அடைப்பு அளவியும், அந்த அடைப்பு அளவியைப் பொருத்தி வைக்கக்கூடிய ஒரு குளிர்ப்பி அளவியும் அமைந்திருக்கும். துளையிட்டு, கடைசல் செய்யப்பட்ட உறுப்புகள் ஒன்றோடொன்று பொருந்துகின்றனவா எனச் சோதிக்க இந்த அளவிகள் பயன்படுகின்றன

cylindroid : (வேதி) நீள் உருளை உரு: நீள் உருளை போன்ற வட்டுரு

cyma : (க.க.) பாம்பு முகப்பு : பாம்பு வளைவுடைய முகட்டுச் சிற்ப உறுப்பு. இதில் உள்வளை பாம்பு முகப்பு புறவளை பாம்பு முகப்பு என இருவகை உண்டு. உள்வளை பாம்பு முகப்பில், உள்வளைவில் மேலே தொடங்கும் பாம்பு வளைவுடைய முகட்டுச் சிற்ப உறுப்பு அமைந்திருக்கும். புறவளை பாம்பு முகப்பில், புற வளைவில் மேலே தொடங்கும் பாம்பு வளைவுடைய முகட்டுச் சிற்ப உறுப்பு அமைந்திருக்கும்

cymatium : (க.க.) புறவரை முகடு : ஒரு புறவரை வளைவினையுடைய ஓர் எழுதகத்தின் பகுதி

cypress : சைப்ரஸ் மரம் : கெட்டியான கட்டையும் திண்பச்சை இலைகளுமுள்ள குவிந்த காய் மரம். இது தென்அமெரிக்காவில் வளர்கிறது. நெடுங்காலம் உழைக்கும் வெட்டுமரம் உடையது. கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுகிறது

D

dado : (க.க) பீட இடைக்கட்டு : (1) ஒரு பீடத்தின் அடிப்பகுதிக்கும் எழுதகத்திற்கும் இடையேயுள்ள இடைக்கட்டுப் பகுதி.

(2) ஒரு பீடத்தின் முகப்புகளில் ஒனறு.

(3) மூலைப் பொருத்துவாய் விளிம்பில் இசைப்பு வாய்வெட்டு.

dado and rabbet : (மர. வே.) இடைக்கட்டு மூலைப் பொருத்து வாய் : ஒரு பீட இடைக்கட்டுப் பகுதியுடன் பொருந்துமாறு விளிம்பில் இசைப்புவாய் வெட்டப்பட்ட ஓர் இணைப்பு.

dado saws : (மர. வே.) கொத்துரம்பம் : பீடத்தின் இடைக்கட்டுப் பகுதிகளை வெட்டுவதற்குப் பயன்படும் ரம்பங்களும் கொத்துக்கருவிகளும் இணைந்த ஒரு வெட்டுக் கருவி. இதனை குறிப்பிட்ட அளவு கனத்திற்கு ஒருங்கிணைத்துக் கொள்ளலாம்.

daguerreo-type : (ஒ. க) பாதரச ஆவி ஒளிப்படம் : பாதரச ஆவி மூலம் ஒளிப்படம் எடுக்கும் முறை. இந்த முறையைக் கண்டுபிடித்த ஃபிரெஞ்சுப் புத்தமைப்பாளர் டாகர் என்பாரின் பெயரினைக் கொண்டது.

dais : (க.க.) மேடையரங்கம் : அமரும் இடமும் மேற்கட்டியுமுள்ள தரைமட்டத்திலிருந்து சற்று உயர்வாகவுள்ள மேட்டிருக்கை.

dama-scening : இழைப்பு வேலைப்பாடு : எஃகு மீது செதுக்கு வேலைப்பாட்டுடன் உள்ளீடாகத் தங்கம் அல்லது வெள்ளி பதித்து இழைத்திடும் வேலைப்பாடு.

dammar : (வண்;அர.) சாயப்பிசின் : ஊசியிலை மரங்களினின்று எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டு சாயஎண்ணெய் உருவாக்கப்பயன்படும் கெட்டிப்பிசின். இது ஆஸ்ரேலியாவிலும், தென் அமெரிக்காவிலும், உள்ள மரங்களிலிருந்து கிடைக்கிறது. இது சூடான ஆல்கஹால், பென்சீன், குளோரோபார்ம், ஈதர் ஆகியவற்றில் கரையும் தன்மையுடையது. இது வண்ணச் சாயங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

damper : காற்றுத் தடுப்பான் : காற்று வீச்சினை முறைப்படுத்துவதற்குரிய ஒரு தகடு, காலதர், மூடி அல்லது வேறு சாதனம்.

damping : (மின்.) ஒடுக்கல் : மின்னியல் ஒலிப்பதிவு இசைக்கருவிகளில் ஒலியை இடுக்கி அல்லது திண்டு போன்ற பொருள் கொண்டு அடக்குதல்.

damping coil : (மின்.) ஒடுக்கு கம்பிச் சுருள் : ஒடுக்கு விளைவினை உண்டாக்குவதற்காக ஒரு மின்னோட்ட மானிக்கு அருகே பொருத்தி வைக்கப்படும் ஒரு கம்பிச் சுருள். இது,ஊசிமுனை பிறழ்வுற்ற பின்பு ஊசியை ஒரு நிலைப் புள்ளிக்குக் கொண்டுவர உதவுகிறது.

damping control : ஒடுக்கக் கட்டுப்பாடு : தொலைக்காட்சித் திரையில் இடதுபுறம் காணப்படும் கிடைமட்டத் திரிபினை அல்லது புடைப்பினை அகற்றுவதற்கு உதவுகிற ஒரு கட்டுப்பாட்டு அமைவு.

damp proofing : ஓதத் தடுப்பு : சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு

dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சனக்கல், 10% வெள்ளீயம் அடங்கியுள்ளன

dandy mark : காகித நீர்க்குறி : தாள் செய்யும் தொழில் நீரெழுத்துப் பதிவு செய்யும் உருளை மூலமாகக் காகிதத்தில் பதிக்கப்படும் நீர்க்குறி

dandy roll : நீரெழுத்துப் பதிவு உருளை : தாள் செய்யும் தொழிலில் நீரெழுத்துப் பதியச் செய்யும் உருளை

daniell cell : (மின்.) டேனியல் மின்கலம் : அடிப்படை மின்கலத்தின் ஒரு முடிப்புச் சுற்றுவழி வகை

dardelet thread : (எந்.) கோணத் திருகிழை : ஃபிரெஞ்சு வடிவமைப்பைக் கொண்ட ஒருவகைத் திருகிழை. இது 29° கோணமுடையது. இது நுனி நோக்கிச் சிறுத்துச் செல்லும் தொடு நிலையினைக் கொண்டது. இது இதனைத் தானே பூட்டிக்கொள்ள உதவுகிறது

dark current : (மின்.) இருள் மின்னோட்டம் : ஒளிக்குழாயினுள் அல்லது மின்கடத்தாத் திண்மப் பொருளிலுள்ள ஒளியின்றிச் செல்லும் மின்னோட்டம். தொலைக்காட்சி ஒளிப்படக் கருவியில் முழுமையாக ஒளியின்றி சைகை வெளிப்பாடு ஏற்படுகிறது

D Arsonval galvanometer : டி. ஆர்சோன்வால் மின்னோட்ட மானி : இது மிகுந்த உணர்திறனுடைய, சுழற்சியோட்டமுள்ள அல்லது தீர்க்களைப்புடைய ஒரு மின்னோட்டமானி. இதில் குறியீட்டுக் கம்பிச்சுருள், ஆற்றல் வாய்ந்த குதிரைலாடக் காந்தப்புலத்தில் தொங்க விடப்பட்டிருக்கும்

darwinian theory : (உயி.) டார்வினியக் கோட்பாடு : "அனைத்துப் பிராணிகளின் வழித்தோன்றல்களும் தங்கள் பெற்றோர்களிலிருந்து சற்றே வேறுபட்டிருக்கும்' என்று சார்லஸ் டார்வின் (1809-1882) வகுத்த உயிர் மலர்ச்சிக் கோட்பாடு.அவ்வாறு மாறுபட்ட வழித் தோன்றல்களில் தங்கள் சூழல்களுக்கேற்பத் தங்களைத் தகவமைத்து கொள்ளும் திறனுடையவை உயிர் வாழ்கின்றன: மற்றவை இறந்து விடுகின்றன

darwin's tubercle : (உயி.) டார்வின் எலும்புப் புடைப்பு : காதின் மேலுள்ள எலும்புப் புடைப்பு. இது மனிதரிடம் சிறிதாகவும், குரங்குகளிடம் பெரிதாகவும் இருக்கும்


dash : (தானி.) தகர்வுத் தடுப்பான் :

(1) ஒட்டுநரின் பகுதியிலிருந்து எஞ்சினின் பகுதியினைத் தனித்துப் பிரிக்கும் ஒரு பிரிவினை

(2) இடைக்கோடு : அச்சுக் கலையில் எழுத்துருப் பொருளுக்கிடைலான ஒரு சாதாரண அல்லது அலங்கார வரி. இதனை நிறுத்தற் குறியீடாகவும் பயன்படுத்துவர்

dashboard instruments : கருவித் தட்டுச் சாதனங்கள் : ஒர் உந்து வண்டியில் கருவிகளுக்கர்ன பகுதியில் ஏற்றப்பட்டுள்ள் மின்னோட்டமானி, என்ணெய் அளவி, வேகமானி, பெட்ரோல் அளவி, வெப்பமானி போன்ற சாதனங்கள்

dashpot : (தானி.) உந்துகட்டை : நீர் கொண்ட பெருங்குழாய் அலம்புறாமல் தடுக்கும் உந்து கட்டை அமைவு data : (தானி.) செய்திக் குறிப்பு : எந்திரத்தின் இயக்கத்தைக் கணித முறையில் அல்லது அளவையியல் முறையில் உய்த்துணரப் பயன்படும் மூலகாரணத் தகவல்கள்

datamation : (தானி.) தகவல் இயக்கப்பொறி : கணிப்பொறிகள் அலுவலக தானியங்கியியல் பொறிகள் உட்படத் தகவல்களைத் தானாகக் கையாள உதவும் தானியங்கிப் பொறியமைவு

data processing : (தானி.) தகவல் பகுப்பாய்வு : தகவல்களைத் தேவையான நோக்கத்திற்குப் பயன்படும் வகையில் பகுப்பாய்வு செய்தல்

data reduction : (விண்.) செய்திக் குறைப்பு : செய்திக் குறிப்புகளைப் பயன்படுத்தக் கூடிய அளவுக்குக் குறைத்தல்

date datum : ஆதாரச் செய்தி : ஒரு பணியாற்றிய அட்டவணைப்படுத்திய புள்ளி விவரத் தகவல்களைக் குறிப்பவை

date line : தேதி எல்லைக் கோடு : உலக ஒப்பந்தப்படி ஏறத்தாழ 180° நிரை கோட்டினூடே செல்கிற நாள் கணிப்புத் தொடக்கக் கோடு. இதன்படி, உலகைச் சுற்றிக் கிழக்கு நோக்கிச் செல்பவர் நேரம் கூடுவதாகக் காண்பார். மேற்கு நோக்கிச் செல்பவர் நேரம் குறைவதாகக் காண்பார். கிரீன் விச்சிவிருந்து ஏறத்தாழ 180° நிரை கோட்டில் உள்ள இந்தக் கோட்டிலிருந்து கிழக்கே செல்பவர் ஒரே தேதியில் இரண்டு நாட்கள் பெறுகிறார். மேற்கே செல்பவர் ஒரு நாளை இழக்கிறார்

datum : குறிப்புச் செய்தி : செய்திக் குறிப்புகளின் தொகுதி

datum line : ஆதாரக்கோடு : பரிமானங்கள் எடுக்கப்படுகிற அல்லது விளக்கவுரைக் கணிப்புகள் செய்யப்படுகிற் ஆதார அல்லது அடிப்படைக் கோடு

daubing : (வார்.) அரவை வண்ணப் பூச்சு : இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பில் சூடாக்கிய பிறகு உள் மையப் பகுதியிலுள்ள வெடிப்பு வண்ணம் பூசி அடைத்தல்

Davis apparatus : டேவிஸ் சாதனம் : நீரில் ஆழத்திலிருந்து வெளியே வருபவருக்குக் காற்று அளிப்பதற்குப் பயன்படும் கருவி. கடலில் ஆழத்தில் மூழ்கிய நீர் மூழ்கிக் கப்பல்களிலிருந்து வெளிவருபவர்களுக்குக் காற்று வழங்க இது பயன்ப்டுகிறது

Davy safety lamp : டேவி காப்பு விளக்கு : நிலக்கரிச் சுரங்கத்தினுள் வேலை செய்பவர்களுக்குரிய கம்பி வலையுள்ள காப்பு விளக்கு

D-C : (மின்.) நேர் மின்னோட்டம் : இதனைப் பொதுவாக டி. சி. எனக் குறிப்பிடுவர்

Dc generator : (மின்.) மின்னாக்கி : பொறி விசையை மின் விசையாக்கி மின்னாற்றல் உண்டாக்கும் பொறி. இதில் உண்டாகும் மின்விசை நேர் மின்னோட்டமாகும்

Dcww : (மின்) நேர் மின்னோட்டச் செயல் மின்னழுத்தம் : இது ஒரு கொண்மியின் தனிக் குறிப்பீடு ஆகும்

D.D.T : (மருந்.) டி.டி. டி : டைகுளோரோ - டைஃபினைல் டிரைகிரோத்தோன் என்ற பூச்சி கொல்லி மருந்தின் சுருக்கப்பெயர். இதனை டைக்கோஃபோன் என்றும் அழைப்பர். இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அழிக்கிறது. மிகவும், ஆற்றல் வாய்ந்த் பூச்சி கொல்லி மருந்து

dead axle : (தானி) நிலை இருசு : சுழலாமல் நிலையாக இருக்கும் இருசு

deadbeat : (மின்.) தீரக்களைத்த : கருவிகளில் குறியீட்டு முள்கள் ஒய்வுநிலைக்கு வரும் நிலை

dead center : (எந்.மர.வே.) அடைப்பு மையம் : ஒரு கடைசல் எந்திரத்தின் வால்முனையுடன் சுழல முடியாதபடி பொருத்தப்பட்டுள்ள மையப்பகுதி

dead end : (கம்.) ஒருமுக அடைப்பு வழி : ஒரு முனை அடைக்கப்பட்டு விட்ட குழாய்

deadening : (க.க.) ஒதக்காப்பு : காப்புப் பொருட்களைப் பயன்படுத்தி தரைத்தளங்களிலும் சுவர்களிலும் ஒதக்காப்புச் செய்தல்

dead level : பாழ்மட்டம் : மேடுபள்ளமின்றி வேறுபாடற்ற நெடு மட்டநிலை

dead line :

(1) கடைசிக் கோடு : ஒரு நீள் உருளை அச்சுப்பொறியில் அச்சுப் படிவங்களை வைப்பதற்கு வழிகாட்டுவதற்காகக் குறிக்கப்பட்ட கோடு

(2) இறுதிநேரம் : செய்தியிதழ்களின் கடைசிக் கொடுக்கவேண்டிய கடைசிநேரம்

dead load : (பொறி.) நிலைச்சுமை : அழுத்தம் சீராகவும், நிலையாகவும் இருக்கும் ஒரு சுமை

dead matter : (அச்சு.) பயனற்ற செய்தி மூலம் : பயன்படுத்தப்படா திருக்கிற அல்லது பகிர்ந்தளிக்கப் படவிருக்கிற அச்செழுத்துத் தொகுதி

dead rear axle : (தானி.) நிலைப் பின்னணி இரசு : திருப்பிட முடியாத ஒரு நிலையான பின்னணி இருசு. இது இரட்டைச் சங்கிலியால் ஒடும் உந்துகளிலும், உள்முகப் பல்லிணைகளால் இயங்கும் பார உந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது

dead rise : (வானூ.) நிலையேற்றம் : ஒரு மிதவையின் அல்லது பறக்கும் படகின் உடற்பகுதியின் குறுக்குவெட்டுப் பகுதியில் இரும்பு அடிக்கட்டையின் உயரத்திலிருந்து எந்திரத்தின் உயரம் வேறுபடுகிற அளவு

dead smooth file : (எந்.) உராய்வற்ற நிலை அரம் : மிக நேர்த்தியாக வெட்டும் அரம்

dead spot : செயலற்றக் குறியிடம் : சில அலைவரிசைகளில் வானொலி அலைகளைப் பெறுவதைக் தடுக்கிற இயற்கை நிகழ்வுகள் உள்ள ஏதேனும் இடம்

dead weight : (பொறி.) பாழும்பளு : ஒர் ஊர்தி அல்லது பார ஊர்தி ஏற்றிச் செல்லும் சுமையிலிருந்து வேறுபட்ட அதன் சொந்த எடை

deal : (தச்சு.) மரப்பலகை : பலகை அல்லது பலகை இணைப்பு செய்ய பயன்படும் ஒரு மரப்பலகை அல்லது பலகைப் பாளம்

decade resistance box : (மின்.) பதின்மானத் தடைமாற்றிப் பெட்டி : இது ஒரு எளிமையான தடைப் பொறியமைவு. இதில் ஒவ்வொன்றும் பத்துக் கம்பிச் சுருள்களைக் கொண்ட இரு தொகுதிகள் அமைந்திருக்கும். ஒரு தொகுதி ஒவ்வொன்றும் ஒரு 'ஓம்' தடைத் திறனுடையது. மற்றொரு தொகுதி ஒவ்வொன்றும் '10' ஓம், தடைத் திறன் கொண்டது

decalage : சிறகத் தளக்கோணம் : இரு தளத்தின் அல்லது பன்முகத் தளத்தின் சிறகு நாண்களுக்கிடையிலான கூர்ங்கோணம் decalcomania : ஒளிப்படமாற்று : கண்ணாடி, பளிங்கு, மரம், போன்ற ஏதேனும் வழிவ்ழப்பான பரப்புக்கு ஒளிப்படங்களை மாற்றுவதற்கான ஒரு செய்முறை.

decalin : டிகாலின் : இது ஒரு வகை கற்பூரத் தைலப் பொருள். கொழுப்புப் பிசின்கள், எண்ணெய்கள் ஆகியவற்றைக் கரைப்பதற்குப் பயன்படுகிறது. வேதியியலில் இது டெக்காஹைடி ரோன்பாப் தாலீன் என்று அழைக்கப்படும்.

decalescence points : (உலோ.) வெப்பத் தாழ்வுநிலை : எஃகின் கட்டமைப்பில் ஒரு மாறுதலை உண்டாக்குகின்ற தாழ்ந்த வெப்ப நிலை.

decantation : (வேதி.) வடித்திறுத்தல் : நீர்மத்தில் மேலுமில்லாமல் கீழுமில்லாமல் இடைமிதவலாக உள்ளவற்றை நீக்கி, தெளிய வைத்த திரவத்தை ஒரு கலத்தினின்றும் மற்றொரு கலத்தில் வடித்திறுத்தல்.

decarburization : கரியமகற்றுதல் : உலோகங்களுடன் இணைத்துள்ள கார்பனை அகற்றுதல். தகடாக்கக் கூடிய இரும்பு தயாரிக்கும் செய் முறையில் இது பயன்படுத்தப்படுகிறது.

decastyle : (க.க.) மூடு முன்றில் : பத்துத் தூண்களைக் கொண்ட ஒரு புகுமுக மூடு முன்றில்.

decay : (மர.வே.) பதனழிவு : மரத்தைப் பதனழியச் செய்யக்கூடிய காளானின் செயலினால் மரத்தின் சாரம் சிதைந்து போதல். இதனை 'மட்குதல் மற்றும் அழுகுதல்’ என்றும் கூறுவர்.

decay : (மின்.) மின் பதனழிவு : மின்னோட்டம், மின்னழுத்தம் ஆகியவற்றின் மதிப்பளவுகள் படிப்படியாகக் குறைவதைக் குறிக்கும் சொல்.

decay time : (மின்.) மின்பதனழிவு நேரம் : ஒரு மின் கொண்மியானது, தனது மூல மின்னேற்றத்தில் ஒரு குறிப்பிட்ட வீத அளவை வெளியேற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம்.

deceleration : (விண்.) வேகத்தணிப்பு : வேகம் குறைந்து கொண்டு வருதல்.இது வேக முடுக்கத்திற்கு எதிர்மாறானது.

decelerometers : (தானி.) வேகத்தணிப்பு மானி : ஒடும் காரின் வேகத் தணிப்பு வீதத்தைப் பதிவு செய்வதற்கும், வேகத்தடைகளின் நிறுத்தும் திறனைக் குறித்துக் காட்டுவதற்குமான ஒரு சாதனம்.

decibel : ஒலியலகு : (டெசிபெல்) ஒலியின் முனைப்புத் திறனை அளவிடுவதற்கான ஒர் அலகு. அலெக்சாண்டர் கிரகாம்பெல் என்பாரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஒலி அல்லது ஓசை உண்டானதும் அது ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அந்த ஆற்றல் டெசிபெல் அளவுகளில் அளவிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு விமானத்தின் எஞ்சின் உண்டாக்கும் ஓசை 120 டெசிபல் அளவுடையது.

deciduous : இலையுதிர்க்கக் கூடிய : ஆண்டுதோறும் குறிப்பிட்ட பருவத்தில் இலைகளை உதிர்க்கக்கூடிய மரங்கள் தொடர்பானவை.

decimal : தசம / பதின்மானம் : பின்னப்பகுதிகளைப் பத்தின் பகுதி, நூறின் பகுதி முதலிய புத்தடுக்கு வரிசை முறையில் குறிப்பிடும் முறை.

decimal code: (கனி.) தசமக் குறியீடு : எண்மான முறையில் பதின்கூற்று அடுக்குக் குறியீடு.

decimal equivalent : தசமக் சம மதிப்பு : தசம மதிப்பில் குறிப்பிடப்படும் பின்னத்தின் மதிப்பு. 212

decimal fraction : (கணி.)தசமப் பின்னம் : பதின்கூற்றுப் பின்னம்.

decimal notations : (கணி.)தசம இலக்கம் : பதின்மான இலக்கம்.

decimal system : (கணி.)தசம முறை : பதின்மான முறை.

decking : (க.க.)அழகொப்பனை : ஒரு படகின் தளம், சமதளக்கூரை, புகுமுக மண்டபம் போன்ற சமதள மேற்பரப்பு எதனையும் தட்ப வெப்ப மாறுதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான பொருள். இந்த அழகொப்பனைக்கான பொருள், மரம், கித்தான் அல்லது கூரைப் பொருட்களாக இருக்கலாம்.

deckle : திருந்தா ஒரம் : கையினால் தாள் செய்யும் தொழிலின் தாளின் செப்பமற்ற ஒரம். இது எந்திரத்தின் மூலம் தாள் செய்வதில் தாளின் அகலத்தை உறுதி செய்வதற்காக உதவும் அமைப்பும் ஆகும்.

deckle edge : திருந்தா தாள் விளிம்பு : கையினால் செய்த தாளில் வெட்டப்படாத செப்பமற்ற தாள் விளிம்பு. எந்திரத்தில் செய்ய சில தாள்களிலும் திருந்தா விளிம்பு உண்டு.

declination : (மின்.) கீழ்நோக்கிச் சரிவு : உண்மையான வடக்குக்கும் காந்த வடக்குக்கும் இடையிலான கீழ்நோக்கிய பிறழ்ச்சிக் கோண அளவு.

decomposition : பகுத்துச் சிதைத்தல் : இயற்கையாக அழுகுதல் மூலமாக அல்லது வேதியியல் வினை மூலமாக கூட்டுப்பொருட்களை ஆக்கக் கூறுகளாகச் சிதைத்தல்.

decompression : அழுத்தத் தளர்வு : விமானத்தில் உயரே செல்லும் போதும், மிகுந்த ஆழத்திலிருந்து மேலே வரும்போதும் உடலின் அழுத்தத்தை மெல்ல மெல்லக் குறைத்தல்.

decompression sickness : (விண்.) அழுத்தத் தளர்வு நோய் : ஆழ்கடலில் மூழ்கியவர்களுக்கும், மீகாமர்களுக்கும் அழுத்தக் குறைவினால் உண்டாகும் ஒருவகை நோய்.

decoration : ஒப்பனை செய்தல் : சித்திரம் செதுக்குதல் ஒவியந் தீட்டுதல், உள்ளிழைத்தல் போன்ற வேலைப்பாடுகளைச் செய்து அறைகலன்களில் அலங்கார அணி வேலைப்பாடுகளைச் செய்தல்.

decouple : (மின்.) பிணையவிழ்ப்பு : ஒரு மின்சுற்றுவழி இன்னொரு மின்சுற்றுவழியைப் பாதிப்பதைத் தடுப்பதற்காக இரு மின்னோட்டங்களை இடைத் தடுத்திணைப்பதன் மூலம் கிளைவழியில் திருப்பி விடுதல்.

decrement : (மின்.) குறைமானம் : குறைவதன் மூலம் ஏற்படும் இழப்பு.

dedendum : அகம் (பல்லிணை) : சக்கரப் பற்களின் இடைத்தொலைவுக்கும் ஆதாரக் கோடுகளுக்கு மிடையிலுள்ள ஒரு பல்லிணைப் பல்லின் பகுதி.

de-energize : (மின்.) மின்னிறக்கம் : ஒரு மின்சுற்று வழியிலிருந்து மின் விசையை அகற்றிவிடுதல்.

deeping : குறைபாடு : உருக்குறைவாகவுள்ளது அல்லது முழுமை நிலை குன்றியதாகவுள்ளது.

defacement : (மர.வே.) உருவழித்தல் : ஒரு மேற்பரப்பினை அல்லது ஒரு தோரனியின் பகுதியை துடைத்தழித்தல் அல்லது தோற்றங் கொடுத்தல்.

defect : ஆழத்திலிடுதல் : சுற்றுப் பரப்பிலிருந்து மிகுந்த ஆழத்தில் இடுதல்.

deficiency disease : (நோயி.) பற்றாக்குறை நோய் : தேவையான சத்துப் பொருட்கள் உணவில் இல்லாமையால் உண்டாகும் நோய், மாலுமிகளுக்கு ஏற்படும் எகிர்வீக்க நோய் (ஸ்கர்வி), குழந்தைக் கணை (ரிக்கெட்ஸ்), தவிட்டான் (பெரிபெரி) போன்றவை இவ்வகை நோய்கள்.

definition : தெளிவுத் திறன் : தொலைக்காட்சிப் படம் தெளிவாகத் தெரியும் அளவு.

deflection : கோட்டம் : (1) அழுத்தும் பாரம் காரணமாக ஒரு தூலம் அல்லது கட்டமைப்பு கோட்டமடைதல். (2) தொலைக்காட்சியில் நிலை மின்னியல் அல்லது காந்தப் புலன்களின் வாயிலாகப் பட அல்லது ஒளிப்படக் குழாயின் எலெக்ட்ரான் கற்றை கோட்டமுறுதல்.

deflection : (மின்.) கோட்டம் : ஒரு மானியில் முள் நேர்வழியிலிருந்து விலகிச் செல்லுதல். ஒர் எலெக்ட்ரான் கற்றை நகர்ந்து அல்லது வளைந்து செல்லுதல்.

deflection factor : (மின்.) கோட்டக்காரணி : ஒர் எதிர்முனைக் கதிர்க் குழலிலுள்ள கோட்டத் தகடுகள், ஒரு குறிப்பிட்ட முடுக்க மின்னழுத்தத்தில் திரையில் ஒர் அங்குலம் மின்கதிர்க் கோட்டத்தை உண்டாக்குகிற நேர் மின்னோட்ட மின்னழுத்தம்.

deflection sensitivity : (மின்.) கோட்டமின் தூண்டு திறன் : ஒர் எதிர் முனைக் கதிர்க் குழலில், கோட்டத்தகடுகளில் செலுத்தப்படும் ஒரு வால்ட் மின்னழுத்தத்திற்கு எலெக்ட்ரான் கதிர்க்கிற்றையில் ஏற்படும் கோட்டத்தின் அளவு.

deformation : உருத்திரிபு : ஒரு பாரம் அழுத்தும்போது ஒரு கட்டமைப்பின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம்.

deformed bars : (பொறி). ) உருத்திரிபுச் சலாகை : சலாகைகளுக்கும் கான் கிரீட்டுக்குமிடையில் மேலும் வலுவான பிணைப்பு உண்டாக்குவதற்காக ஒழுங்கற்ற வடிவுகளில் செய்யப்படும் வலுவூட்டும் சலாகைகள்.

defrosting cycle : (குளி.பத.) உறைவுத் தடுப்புச் சுழற்சி : குளிர்பதனச் சாதனத்தில், அது வேலை செய்யாதிருக்கும்போது உறையாமலிருப் பதற்கான செய்ல் முறை.

degeneration : (உயி.) இனச்சிதைவு : உயிர்கள் இனப்பண்பு அழிந்து கீழ்நோக்கி மடங்கிச் செல்லுதல். இது மேல் நோக்கிய உருமலர்ச்சிக்கு எதிர் மாறானது.

degradation : (குழை.) தரங்குறைத்தல் : சிக்கலான பொருளைச் சிதைத்து எளிய பொருளாக மாற்றுதல். எடுத்துக்காட்டாக, பிளாஸ்டிக் கொதி நிலையை அடையும்போது அதன் நீண்ட மூலக் கூற்றுச் சங்கிலிகள் சிதை வுற்று சங்கிலித் தொடராக இல்லாத பல எளிய மூலக்கூறுகளாக மாறுகிறது.

degras : கம்பளப்பசை : கம்பளத்தைத் தேய்ப்பதால் கிடைக்கும் பசையுள்ள எண்ணெய்ப் பொருள். இது உராய் பொருள்களின் குழைமத் திட்ப ஆற்றலை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

degree : பாகை : ஒரு வட்டச் சுற்றில் 360 இல் ஒரு பங்கு.

dehumidifying : ஈரநப்பு நீக்குதல் : காற்றிலுள்ள ஈரப்பதனளவைக் குறைத்தல். சில தொழிற்சாலைகளில் சில உற்பத்திச் செய்முறைகளில் ஈரப்பதனற்ற காற்று தேவைப்படும்.

dehydrator : (தானி.) ஈரமகற்று சாதனம் : காற்றிலிருந்து ஈரத்தை அகற்றும் ஒரு சாதனம் அல்லது உறை குளிரூட்டி. deicer : (வானூ.) பணித்தடுப்புச் சாதனம் : பனிக்கட்டிகள் விமானச் சிறகுகளில் உருவாகாமல் தடுக்கப் பயன்படுத்தப்படும் சாதனம்.

deionzation potential : (மின்.) அயனி நீக்கத் திறன் : ஒரு வாயு நிரப்பிய குழலில் அயனி நீக்கம் நிகழ்ந்து, மின்கடத்தல் நின்று போகிற மின்னழுத்த நிலை.

delaminate : (குழை.) அடுக்குப் பகுப்பு : மென் தகடுகளாக்கிய பிளாஸ்டிக் பொருளை அதன் அடுக்குகளிலிருந்து பிரித்தெடுத்தல்.

delete : நீக்கல்/நீக்கல் குறி : அச்சுப் பார்வைப் படியில் எழுத்தை அல்லது எழுத்துக்களை நீக்கி விடும்படி பிழைதிருத்துபவர் இடும் குறி.

delineate : வரைவு : உருவப்படம் எழுதுதல் அல்லது சித்திரம் வரைதல்.

deliquescence : ஈரக் கசிவு : காற்று வெளியில் ஈரம் உறிஞ்சி உப்புப் போலக் கசிவுறுதல். எடுத்துக்காட்டு; கால்சியம் குளோரைடு.

delta : டெல்ட்டா : கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வடிவுடைய (Δ) நான்காவது எழுத்து.

delta connection : (மின்.) முக்கோண இணைப்பு : கிரேக்கஎழுத்து டெல்ட்டா போன்று முக்கோண வடிவிலுள்ள சேர்முனைகளை இணைத்து அமைத்த மின் சுற்று வழிகள்.

delta metal : (உலோ.) டெல்டா உலோகம் : இது ஒர் உலோகக் கலவை. இதில் செம்பும், துத்தநாகமும், சிறிதளவு இரும்பும் கலந்திருக்கும்.

deluxe : கேர்த்திப் பதிப்பு : ஒரு நூலின் நேர்த்தியான அல்லது அலங்கார வேலைப்பாடுடைய பதிப்பு.

demagnetization : (மின்.) காந்தம் நீக்குதல் : காந்தமாக்கப்பட்ட பொருளிலிருந்து காந்தத் தன்மையை நீக்கும் முறை.

demand factor : (மின்.) கோரிக்கைக் காரணி : ஒரு மின் வழங்கீட்டு முறையில் பெரும் அளவுக் கோரிக்கைக்கும், அந்த முறையின் மொத்த இணைப்புப் பளுத்திறனுக்குமிடையிலான விகிதம்.

demarcation line : எல்லைக் கோடு : எல்லைப் பிரிவினையாகக் குறிக்கப்பட்ட வரம்பு அல்லது கோடு.

demodulation : (மின்.) அலையதிர்வு மாற்ற நீக்கம் : வானொலிப்யில் ஊர்தி அலையிலிருந்து அலையகல அதிர்வு மாற்றச் சைகைத் திறனை அகற்றிவிடும் முறை.

demodulator : (மின்.) மின்னலை உணர் கருவி : வானொலியில் மின் னலைகளைத் தடங்கண்டு காட்டும் கருவி.

demountable rim : (தானி.) இறக்கிடும் சக்கர வளையம் : டயரிலிருந்து காற்றை வெளியேற்றாமல் அப்புறப்படுத்தத்தக்க சக்கர வளையம்.

demurrage : சுணக்கக் கட்டணம் : கப்பலிலோ புகை வண்டியிலோ லாரியிலோ சரக்கேற்றத்தில் அல்லது இறக்கத்தில் ஏற்படும் காலத் தாழ்வுக்குரிய கட்டண விகிதம்.

demy : அச்சுத்தாள் :(1)38 செ.மீ. -க்கு 51 செ.மீ.அளவுடைய படம் வரையும் தாள். (2) 41 செ.மீ.க்கு 53 செமீ அளவுடைய அச்சுத்தாள். இவ்வகைத்தாள் இப்போது இந்தியாவில் பயன் படுத்தப்படவில்லை.

denaturants : (வேதி.) இயல்பு மாற்றுப் பொருள் : பொருளின் இயல்பை மாற்றி விளைவற்றதாக் கப் பயன்படுத்தப்படும் பிறிதொரு பொருள். மதுபானங்களில் பயன்படுத்தப்படும் ஆல்ககாலின் இயல்பை மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் பைரிடின், பென்சீன், மண்ணெண்ணெய் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

denatured alcohol : இயல்பு திரிந்த ஆல்ககால் : தொழில்களில் பயன்படுத்துவதற்காக பைரிடின், மெத்தைல் ஆல்ககால் போன்ற இயல்பு மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தி இயல்பு மாற்றப்பட்ட ஆல்ககால்,உறையாத கரைசல்கள் தயாரிக்க இது பயன்படுகிறது.

denim : வண்ணச் சாய்வரித் துணி : முழு மேலங்கி தைக்கப் பயன்படும் சாய்வரி வண்ணப் பருத்தித் துணிவகை. இது திரைகளுக்கும் அறைகலன் அலங்காரத் துணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

dengue : (நோயி.) “டெங்கு’ காய்ச்சல்:

தலைவலியும், கண் சிவப்பாதலும், முதுகிலும் மூட்டுகளிலும் கடுமையான வலியம் உண்டாக்கும் கொள்ளைக் காய்ச்சல் டெங்கு வகை. இந்நோய் காய்ச்சல் ஒவ்வொரு முறை கொசு தாக்கும்போது 3-6 நாட்கள் நீடிக்கிறது. ஒருவகைக் கொசுவினால் இது பரவுகிறது. இதே கொசு மஞ்சள் காய்ச்சலையும் உண்டாக்குகிறது.

density : அடர்த்தி : நெருக்கம், செறிமானம். பரும அளவுடன் எடைமானத்திற்குள்ள விகிதம்.

density altitude : (வானூ.) அடர்த்தி உயரம் : ஒரு தர அளவு வாயு அழுத்தத்தில் குறிப்பிட்ட அடர்த்திக்கு நேரிணையான குத்துயரம்.

density, gasoline : (தானி.) கேசோலின் அடர்த்தி : 60(F) ஃபா. வெப்ப நிலையில் கன அளவு கேசோலின் எடைக்கும் 39' (F) ஃபா. வெப்பநிலையில் அதே கன அளவு கேசோலின் எடைக்கு மிடையிலான விகிதம் அல்லது வீத எடைமானம்.

dentil : (க.க.) செவ்வகப் பாளம் :

தூண் முகட்டு மேல்தட்டின் சூழ் வரையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள செவ்வகப் பாளம்.

dentine : (உள.) பல் திசு : பற்களில் உண்டாக்கப்பட்டிருக்கும் எலும்பு போன்ற பல் திசு.

depolarization : (மின்.) முனைப்பாடு அகற்றுதல் : ஒரு மின்னழுத்த மின் கலத்தின் மின்காந்த முனைப்பியக்கம் அகல்வதைத் தடுத்து அதன் வினைத் திறனைப் பாதுகாக்கும் செய்முறை.

depolarizer : (மின்.) முனைப்பாடு அகற்றி : அடிப்படை மின்கலத்தில் துத்தநாகத்தினால் அமிலம் பகுத்துச் சிதைவதால் உண்டாகும் ஹைட்ரஜனை நிலைப் படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஆக்சிகரணப் பொருள்.

deposit : (தானி.) படிவுப் பொருள் : (1) பணி முடித்த மேற்பரப்புகளில் படியும் உள்ளெரிபொருள். (2) பல்வேறு தகடாக்கும் செய் முறைகளின் போது ஒர் உலோகத்தின் முகப்பில் திரளும் திடப்பொருள். கொதிகலன் முதலியவற் றில் திரளும் கருகிய பொருளையும் குறிக்கும்

depression : (இயற்).) கற்றழுத்தத் தாழ்வு : வாயு மண்டலத்தில் காற்றழுத்தத் தாழ்வாக இருக்கும் பகுதி, பூமியின் வடபகுதி காற்றழுத்தத் தாழ்வு ஏற்படும்போது, காற்று ஒரு வட்டத்தில் சுழல்கிறது. காற்றழுத்தத் தாழ்வு காரணமாக மோசமான பருவ நிலை உண்டாகும்

depression : (உள.) மனச்சோர்வு : நம்பிக்கையிழந்து, சோகம் குடி கொண்டு சோர்வு உண்டாகும். உணர்வு மிகுந்த மனக்கிளர்ச்சிக்கும் ஓர் முழு விரக்திக்குமிடையிலான பல்வேறு மனமாறுதல்களை உண்டாக்கும் மனக்கோளாறு

deposit : (தானி.) படிவு :

(1) சுண்ணக் கரியகை படிந்த மேற்பரப்புகளில் படியும் உள்ளெரி பொருள்

(2) முலாமிடும் செய்முறையில் உலோக மேற்பரப்பில் படியும் திடப்பொருள்

deposition : படியவிடல் : படிய விடுதல் அல்லது ஒரு பரப்பின் மீதும் ஒரு படலம் படியச்செய்தல்

depreciation : தேய்மானம் : காலக் கழிவினாலும், தேய்மானத்தினாலும் எந்திரங்களின் மதிப்பில் ஏற்படும் குறைவு

depth gauge : (எந்.) ஆழ அளவி : துவாரங்களின் ஆழத்தையும் உள்ளிடப் பகுதிகளின் ஆழத்தையும் உலோக மற்றும் மரவேலை நிபுணர்கள் பயன்படுத்தும் அளவி


depth micrometer : (எந்.) ஆழ நுண்ணளவை மானி : நுண்பொருள்கள், தொலைவுகள், கோணங்கள் ஆகியவற்றை அளந்து காட்டும் கருவி

derrick : (பட். வே.) பாரந்துக்கும் பொறி : பளு நகர்த்துவத்ற்கும், ஏற்றி, இறக்குவதற்கும் உரிய வாய்ப்பு வன்மைகளைக் கொண்ட அமைவு

descaling : (உலோ.) செதிள் நீக்கம் : உலோகங்கள் மிக உயர்ந்த வெப்ப நிலைகளில் ஆக்சிகரணமாகும் சூழல்களுக்கு உள்ளாகும் போது உலோகங்களில் படியும் செதில்களை நீக்குதல்

descender : (அச்சு.) கீழ்நோக்கிய எழுத்து : அச்சுத் துறையில் நெடுங் கணக்கின் சிற்றெழுத்து வடிவுகளில், எழுத்தின் உடலிலிருந்து கீழ்நோக்கி செல்கின்ற p,y.j போன்ற எழுத்துக்கள்

describe : வரை : வரைந்து காட்டு; வரை வடிவம் கொடு; விரித்துரை, குறித்துரை

description : வருணனை : பொருள் எதனையும் சொல்லால் அல்லது எழுத்தால் விரித்துரைத்தல்

desiccate : உலர்த்து : ஈரம் நீங்க உலர்த்துதல்; உலர்பதனஞ் செய்தல்; காய்ந்து போகச் செய்தல்

desiccant : (குளிர்.பத.) உலர்த்து பொருள் : ஈரப்பதனை அகற்றி உலர்த்துவதற்குப் பயன்படும் துணைப் பொருள்

design : வடிவமைப்பு : கட்டிடம் கட்டுவதற்கு அல்லது எந்திரம் தயாரிப்பதற்கு முன்மாதிரியாக வகுக்கப்படும் உருவரைப்படம். எந்திரவியலில் எந்திர இயக்க முறைகளை உருவரைப்படமாகத் தீட்டுதல் designer or layout man : வடிவமைப்பாளர் : தமது நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் வகை பற்றிய வடிவமைப்புகளைத் தயாரிக்கத் தகுதி வாய்ந்த வடிவமைப்பாளர்.

designing engineer : வடிவமைப்புப் பொறியாளர் : ஒரு குறிப்பிட்ட பணிக்குரிய பொறியியல் மற்றும் உருவமைப்பு நுட்பங்களைத் கவனிக்கும் வல்லுநர். தம்மிடம் அளிக்கப்படும் வடிவமைப்புகளைச் சிக்கனமாகவும், திறம்படவும் தயாரிக்க வழிவகுத்துக் கொடுக்கும் பொறுப்பும் இவருடையது.

destructive distillation : (வேதி.) சிதைத்து வாலைவடித்தல் : ஒரு பொருளைக் காற்றுடன் கலக்காமல் சூடாக்கிச் சிதையுமாறு செய்து, புதிய பயனுள்ள பொருள்களை ஆக்குதல். இது சாதாரண வாலை வடித்தலிலிருந்து வேறுபட்டது. இதில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால், சாதாரண வாலை வடித்தலில் இயற்பியல் மாற்றங்கள் மட்டுமே நிகழும்.

detach : தொடர்பறு : பட்டறை நடவடிக்கைகளில் மற்ற செயற்பாடுகளுக்கு மாற்றுவதற்காகத் தொடர்பறுத்தல் அல்லது இணைப்பகற்றுதல்.

detail : தனிக்கூறு : அமைப்பான் பகுதிகளின் ஒரு தனிக்கூறு. ஏதொன்றிலும் அமைந்துள்ள சிறிய ஆனால் இன்றியமையாத ஒர் அமைப்புக்கூறு.

detail drawing : வகை நுணுக்க வரைபடம் : ஒர் எந்திரத்தின் அல்லது வேறு பொருட்களின் வகை நுட்பங்கள், பரிமாணங்கள், பயன்படும் பொருட்கள், உறுப்புகளின் எண்ணிக்கை, செயற்பாடுகள் ஆகிய விவரங்கள் அடங்கிய வரைபடம்.

detailer : வரைவாளர் : வகை நுட்ப வரைபடம் வரைபவர்.

detector : (மின்.) ஒலியலை மாற்றி : கேட்க முடியாத ஒலியலை அதிர்வுச் சைகைகளைக் கேட்கக் கூடிய ஒலியலை அதிர்வுச் சைகைகளாக மாற்றுவதற்கான ஒரு சாதனம்.

detergent : சலவைப் பொருள் : அழுக்கு,எண்ணெய்ப் பசை முதலியவற்றைத் கரைத்துத் துப்புரவு செய்யும் திறமுடைய பொருள்.

detergent oils : (தானி.) சலவை எண்ணெய்கள் : துப்புரவுத் திறனை அதிகரிக்கும் நோக்குடன் சலவைப் பொருள்களுடன் சேர்க்கப்படும் எண்ணெய்கள்.

deterioration : அழிகேடு : அழி கேடாக்குகிற அல்லது படிப்படியாக தரக்குறைவு உண்டாக்குகிற நிலை.

determine : அறுதியிடல் : துல்லியமான அளவீடுகள் மூலம் கணித முறையில் மதிப்புக்களைக் கணக்டுதல்.

detonate : (தானி.) வெடிக்கச் செய் : வெப்ப மூட்டி அல்லது தீ மூட்டி அழுத்தத்திலுள்ள வாயுக்களை விரைவாக விரிவடையச் செய்தல்.

detonation : (தானி.) வெடிப்பு : உள் வெப்பாலை எந்திரங்களில் சுத்தி ஓசை போன்ற அதிர்வுடன் வெடிப்பு உண்டாதல்.

detonator : வெடிப்புப் பொருள் : வெடிகுண்டுகளில் பெருத்த விசையுடன் வெடிப்பைத் தூண்டிவிடும் வெடிப்புப் பொருள்.

deuterium : (வேதி.) டியூட்டெரியம் : இரண்டு புரோட்டான்களும். எலெக்ட்ரான்களும் அடங்கியுள்ள கனமான ஹைட்ரஜன் அணுக்கள். சாதாரண ஹைட்ரஜன் அணுக்களில் ஒரு புரோட்டானும், எலெக்ட்ரானும் மட்டுமே இருக்கும்.

deuterium : (மின்.) டியூட்டெரியம் : ஹைட்ரஜனின் இருமடித்திரி பெடைப் பொருள்; கன ஹைட்ரஜன். இரு புரோட்டான்களும் எலெக்ட்ரான்களும் இந்த ஹைட்ரஜன் அணுக்களில் அடங்கியிருக்கும்.

deuteron : (மின்.) டியூட்டெரான் : ஒரு புரோட்டானும், ஒரு நியூட்ரானும் அடங்கிய வெளிப்படு துகள்.

develop : மேம்படுத்து : படிப்படியாக உயர்நிலையடைவித்தல்.

வெளிக்கொணர் : உள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர்.

உரு விளக்கம் செய் : ஒளிப்படக் கலையில் உருவிளக்கம் செய்தல்.

development : உருவிளக்கப் படம் : ஒரு தோரணியை அல்லது அமைப்பு முறையை விளக்கிக் காட்டும் உருவிளக்கப்படம்.

development engineer : விரிவாக்கப் பொறியாளர் : இவர் பரிசோதனைகள் செய்யும் ஒரு பொறியாளர். இவர் தமது துறையில் எல்லா நுட்பங்களையும் நன்கறிந்தவராக இருப்பார். இவர் தமது நிறுவனததின் உற்பத்திப் பொருளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனைகள் கூறுவார்.

deviation : திசை திரும்புதல் : திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல், பிழைபாடு; மாறுபாடு.

deviation ratio : (மின்.) கோட்ட விகிதம் : அலை சேர்த்தியில் மிக உயர்ந்த அளவு அலைவெண் கோட்டத்திற்கும் மிக உயர்ந்த அளவு அலைமாற்ற அலைவெண்ணுக்கு மிடையிலான விகிதம்.

deviation sensitivity : (மின்.) கோட்டப் பதிவுத்திறன் : பண்பலை வானொலியில் மிகக் குறைந்த அளவு அலைவெண் கோட்டத்தினால், ஒரு குறிப்பிட்ட வெளிப்பாட்டு விசை உண்டாதல்.

device : சாதனம் : ஒரு பணியை மேலும் சிறந்த முறையில் செய்வதற்கு உதவக்கூடிய ஓர் எந்திர சாதனம் அல்லது கருவி.

dextrin : (மர.வே.) டெக்ஸ்டிரின் : இது ஒரு செயற்கைப் பசை வகை. இது தாவரங்களிலிருந்து இயற்கையாகக் கிடைக்கும் நிறமற்ற கூட்டுப் பொருள்; நீரில் கரையக் கூடியது. இது கோந்துக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.

diagnosis : (நோயி.) நோய் நாடல் : நோயாளியின் புறக்குறிகளின் உதவியால் அவர் எந்த நோயினால் அவதியுறுகிறார் என்பதை அறுதியிடுதல்.

diagonal : (கணி.) மூலை விட்டம் : ஒரு செல்வகத்தில் எதிரெதிர் மூலைகளை இணைக்கும் நேர்கோடு.

diagonal bond : (க.க.) மூலை விட்டக் கட்டுமானம் : ஒரு சுவரில் மூலைச் சாய்வாகச் செங்கற்களை அடுக்கிக் கட்டுதல்.

diagonal parting : (மர. வே.) மூலைவிட்டப் பிரிவினை : ஒரு செவ்வகக் குறுக்கு வெட்டுத் தோரணியை அதன் மூலைவிட்ட வாக்கில் பிரிவினை செய்தல்.

diagram : விளக்க வரைபடம் : ஒரு புனையா ஒவியம் அல்லது சித்திர வரையுரு.

dial : வட்ட முகப்பு : அளவை மதிப்புகள் குறிக்கப்பட்டுள்ள வட்ட வடிவமான அல்லது நீள்வட்ட வடிவமுடைய ஒரு முனைப்புத் தகடு.

dial bridge : (மின்.) முகப்புடை இணைப்பு : சுருள் கம்பிகள் முகப்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தடை இணைப்பு. இதில் செருகிகளை நுழைப்பதற்குப் பதிலாக இரு நகரும் புயத்தின் மூலமாகத் தொடர்புகள் ஏற்படுத்த்ப்படுகின்றன.

dial gauge : முகப்புடை அளவி : இது ஒரு வளைந்து விற்சுருளினால் இயக்கப்படும் குறியீட்டு முள் கொண்ட ஒரு வட்டமுகப்பு ஆகும். இது அழுத்தத்தின் அளவை அல்லது வெற்றிடத்தின் அளவைக் குறித்துக் காட்டுகிறது. இந்த அளவிகள் அனைத்தும் போர்டான் விற்சுருள் தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்படுகின்றன.

dialysis : கலவைப் பிரிப்பு : கரைந்த பொருளிலிருந்து இடைச் சவ்வூடாகப் பரவச் செய்து கூழ்ப் பொருள்களைப் பிரித்தல்.

diamagnetic : (மின்.) குறுக்குக் காந்த விசை : காந்த அச்சுக்குக் குறுக்காகக் கிழக்குமேற்குத் திசையில் இயங்கும் இயல்புடைய காந்த ஆற்றல்.

diameter : விட்டம் : வட்டத்தின் குறுக்களவு. ஒரு வட்டத்தின் மையப் புள்ளி வழியாகச் சென்று வட்டத்தின் பரிதியில் முனைகள் முடியும் ஒரு நேர்கோடு விட்டம் ஆகும். கணிதத்தில், விட்டம்= பரிதி x 0.3183.

diametral pitch : (பல்லி.) விட்ட இடைத் தொலையளவு : ஒரு பல்லிணையில் பற்களின் எண்ணிக்கைக்கும், அதன் இடைத்தொலையளவு விட்டத்திற்கு மிடையிலான தொடர்பளவு அல்லது விகிதம். 40 பற்களைக் கொண்ட ஒரு பல்லிணையில் இடைத்தொலையளவு விட்டம் 10 என்றர்ல், விட்ட இடைத் தொலையளவு 4 ஆகும்.

diamond : (வேதி.) வைரம் : கார்பனின் படிக வடிவம். கனிப் பொருள்களிலேயே மிகவும் உறுதி வாய்ந்தது. ஆங்கில அச்செழுத்தில் 4 1/2 புள்ளிக் குறிப் பருமனுள்ள சிறு எழுத்து வகை.

diamond-point chisel : (எந்.) வைரமுனைச் சிற்றுளி : இது கொண்டைச் சிற்றுளி போன்றதேயாகும். இதில் வெட்டுமுனை வைரவடிவில் அமைந்திருக்கும். இது கூரிய அடிப்பக்கமுடைய வரிப்பள்ளங்களை வெட்டுவதற்கு ஏற்றது.

diamond point tool : (மர.வே.) வைர முனைக் கருவி : இரு வெட்டு முனைகள் கொண்ட ஒரு கருவி; இந்த முனைகள் ஒன்றுக்கொன்று சாய்வாக அமைந்து ஒரு கூர்ங் கோணத்தில் சந்திக்கும். இக்கருவியின் ஒருமுகப்பு தட்டையாகவும். இன்னொரு முனை சாய் கோணத்திலும் இருக்கும்.

diamond wheel dresser : (பட்.) வைரச் சக்கர செதுக்குளி : அரைப்புச் சக்கரத்தை இயைவுறுத்துவதற்குப் பயன்படும் தொழில் வைரம்.

diaper : சித்திர வேலைப்பாடு : கலை வேலைப்பாடுகளிலும் கட்டிடக் கலையிலும் மேற்பரப்பினை அழகுபடுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் வடிவகணித வடிவமைப்புகளுடைய சித்திரச் சிற்ப வேலைப்பாடு.

diaper work : செதுக்குக் சித்திர வேலை : அறைகலன்களில் செய்யப்படும் செதுக்குச் சித்திரச் சிற்ப வேலைப்பாடு. ஆங்கில அச்செழுத்தில் 4 1/2 புள்ளிக் குறிப் பருமனுள்ள சிறு எழுத்து வகையுடைய உலோகத் தகடு. இது ஒளிப்படக் கருவியில் பயன்படுத்தப்படுகிறது

diathermy : (மின்.) உள் வெப்ப மூட்டுதல் : மின்னோட்ட இயக்கத்தினால் பொருள்களின் உட்பகுதிகளுக்கு வெப்பமூட்டுதல்

die : (உலோ.) வார்ப்புருப் படிவம் : உலோகங்களை வடிவமைக்கவும், வார்க்கவும், முத்திரையிடவும் வெட்டவும் பயன்படும் கருவி

die casting : (எந்) அச்சு வார்ப்பு : உருகிய உலோகத்தை அல்லது உலோகக் கலவையை அழுத்த நிலையில் ஒரு வார்ப்பினுள் ஊற்றித் தயாரிக்கப்பட்ட மிகத் துல்லியமானதும் வழவழப்புடையதுமான ஒரு வார்ப்பு

die-casting metal : (உலோ.) அச்சு வார்ப்பு உலோகம் : அச்சு வார்ப்பு தயாரிப்பதற்குப் பயன்படும் உலோகக் கலவை. இதில் அலுமினியம், ஈயம், துத்தநாகம், செம்பு போன்ற உலோகங்களில் ஏதேனும் ஒன்று ஆதாரமாக அமைந்திருக்கும். உந்து வண்டிகளுக்கான கருவிகளுக்கு 90% நிக்கலும் 2% சிலிக்கனும் கலந்த உலோகக் கலவை பயன்படுத்தப்படுகிறது

die-chaser : (எந்.) அச்சு வார்ப்புப் பொதி தகடு : ஒரு திருகு வெட்டு அச்சு வார்ப்பிலுள்ள பொதி தகடு

die clearance : அச்சு வார்ப்பு இடைவெளி : வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய உலோகத்தின் கனத்திற்கு இடமளிப்பதற்காக வார்ப்புருவத் தாய்ப் படிவ அழுத்தும் பொறிக்கும் அச்சு வார்ப்புக்குமிடையிலுள்ள இடைவெளி

die forging : அடித்துருவாக்குதல் : அச்சு வார்ப்புக்ளில் உலோகங்களை உருக்கிக் காய்ச்சி அடித்து உருவாக்குதல், குறைந்த செலவில் தரமான வேலைப்பாடுகளுக்கு இது உதவுகிறது

diehead : (எந்.) அச்சு வார்ப்புத் தலை : ஒரு திருகு வெட்டு எந்திரத்தில் இழைகளைத் தாங்கியுள்ள சாதனம்

dielectric : (மின்.) மின்னழுத்தத் தாங்கு பொருள் : மின்விசையைக் கடத்தாமல் மின்விசை விளைவுகளை மட்டும் கடத்துகிற பொருள்

dielectric constant (மின்.) மின்னழுத்தத் தாங்கு பொருள் நிலையெண் : ஒரு விசையின் நிலைமின்னியல் தொடருக்கான மின்னழுத்தத் தாங்கு பொருளின் கடத்தும் ஆற்றலுக்கும் காற்றழுத்தத்திற்கு மிடையிலான விகிதம்

dielectric strength : (மின்.) மின்னழுத்தத் தாங்கு பொருள் வலிமை : இரு மின்வாய்களுக்கிடையில் ஒரு பொருளை வைக்கும் போது உண்டாகும் மின்னழுத்த அளவுக்கும் அதன் மின்ன்னுாட்ட அளவு வேறுபாட்டுக்குமிடையிலான மின்னழுத்த மாறுபாட்டளவு

diesel engine : டீசல் பொறி : வெப்பமூட்டிய அழுத்த மிக்க காற்றில் எண்ணெய்க் காற்று கலந்து செலுத்தப்பெற்று எரியூட்டப் பெறும் பொறிவகை. இதனை டாக்டர் ஆர். டீசல் என்பார் கண்டுபிடித்தார். அவர் பெயரிலேயே இப்பொறி அழைக்கப்படுகிறது

die stamping : (உலோ.வே.) அச்சு வார்ப்பு முத்திரை : (1) ஒர் அச்சு வார்ப்பில் வெட்டப்பட்ட ஒர் உலோகத் துண்டு.

(2) வண்ணத்துடன் அல்லது வண்ணமின்றி எழுத்துகள் புடைப்பாக இருக்குமாறு அச்சிடும் முறை.

die stock : (எந்.) அச்சு வார்ப்புக் குறடு : இழையூட்டு அச்சு வார்ப்புகளைக் கையால் இயக்கும்போது பயன்படுத்தப்படும் நெம்புகோல் அல்லது திருக்குக் குறடு.

dietatics : பத்திய உணவியல்: பத்திய உணவு பற்றிய உடல்நல இயல்.

differential (எந். பொறி) வேறுபாட்டு நுட்பம் : இயக்கும் இரு விசைகளின் வேறுபாட்டுக்கு ஒப்பான இயக்கமுடைய அமைவு. இந்த அமைவு உந்துவண்டிகளில் உள்ளது.

differential block : வேறுபட்ட இணைப்புத் தொகுதி: ஒரே இயக்கத்தை இருவேறு இயக்கமாகப் பிரித்தியக்குவிக்கும் இயக்க இணைப்புத் தொகுதி அமைவு.

differential calculus : (கணி.) வகையீட்டுக் கலனம் : இது கலன கணிதத்தின் ஒரு பகுதி. இதில் சார்பலன் கொடுக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து அதன் வகையீடு கண்டுபிடிக்கப்படுகிறது. இந்தக் கணித முறை, காலம், வீத அளவு, முடுக்கம், உச்ச நீச முதலியவை பற்றிய கணக்குகளில் பயன்படுத்தப்படுகிறது.

differential gearing : (தானி.எந்.) வகையீட்டுப் பல்லிணைப்பு: இது பல்லிணைப்பு ஏற்படுத்தும் ஒரு வகை முறை. இது ஒர் உந்து வண்டியில் ஒரு பின் சக்கரம் மற்ற தன் சார்பின்றி தனியாக நகர்வதற்கு அனுமதிக்கிறது. இதனால் டயர் அதிக அளவில் தேய்வது தடுக்கப்படுகிறது. எந்திரப் பகுதிகளின் மீதும் இதனால் அழுத்தம் குறைகிறது.

differential heating : (உலோ.) வகையீட்டு வெப்ப மூட்டல்: ஒரு பொருளின் பல்வேறு பகுதிகளும் வெவ்வேறு அளவுகளில் சூடாகுமாறு அதற்கு வெப்ப மூட்டுதல், இதனால், அந்தப் பொருளைக் குளிர்விக்கும் பொழுது வெவ்வேறு குண இயல்புகள் உண்டாகின்றன.

differential Indexing : ( எந்..) வகையீட்டுக் குறியீடு : துளையிடு எந்திரத்தில் வகையீடு செய்யும் போது, குறியீட்டுத் தகடு, வேலைப்பாடு செய்யப்படவேண்டிய பொருள் ஏற்றப்பட்டுள்ள கதிருடன் மாற்றுப் பல்லிணைகள் மூலமாக இணைக்கப்படுகிறது. இதனால், தகடும் பல்லிணைகளும் சுழன்று முறையாகக் குறியீடு செய்வதற்கு முடிகிறது.

differential motor (மின்.) வகையீட்டு மின்னோடி: இந்த வகை மின்னோடியில், கூட்டுச்சுருணை மின்னோடி அமைந்திருக்கும். இதில் தொடர் வரிசைகளும், இணைச் சுருள்களும் ஒன்றுக் கொன்று எதிர்மறையாக அமைந்திருக்கும்.

differential compounding : (மின்.) எதிர்மறைக் கூட்டு: வரிசையான சுருணைகள் இணைக்கப்பட்ட ஒரு கூட்டு மின்னோடி. இதில் காந்தப் புலங்கள், இணைத்சுருணைகளின் புலங்களுக்கு எதிராக இருக்கும்.

differentiate : வகைப்படுத்து / வேறுபடுத்து : வகை வேறுபாடு காணுதல்; வகைப்படுத்திக் கூறுதல்.

diffraction : (மின்.) ஒளிக்கதிர்ச் சிதைவு : ஒளிக்கதிர் நிறச்சிதைவு உண்டுபண்ணுதல். diffuse: ஊடு பரவச்செய் : பரந்து விரிவுறச் செய்தல்: சிதறலுறச் செய்தல்; விரவிப் பரவச் செய்தல்

diffusion : (மின்.) சிதறிப் பரவுதல் : ஒரு திரவத்தில் செறிவில்லாத ஒரு பொருள் சிதறிப் பரவுதல், எடுத்துக்காட்டாக, நீரில் மையும், காற்றில் வாயுவும் விரவிப் பரவுகிறது

digest : (உட.) செரிமானம்: உணவின் சாரத்தை வயிற்றினுள் ஈர வெப்ப நிலைகளில், தக்கவாறு பக்குவம் செய்து செரிமானம் செய்தல்

digest : (குழை ) பக்குவமாக்கு : ஒரு பொருளைச் சூடாக்குதல், ஈரமாக்குதல், அழுத்தததிற்குட்படுததுதல் மூலம் மென்மையாக்குதல். தாவரப்_பொருள்களை அகற்றுவதற்கு இது பயன்படுகிறது

digester : செரிமானக்கலம் : மரத்துண்டுகளை அழுத்தத்தின் கீழ்வேதியியற் பொருட்களுடன் சேர்த்துச் சூடாக்கிச் செரிமானம் செய்து நுண்ணிழைகளாக மாற்றுவதற்குரிய ஒரு கொள்கலம்

digit : (கணி.) இலக்கம்: 0 முதல் 9 வரையுள்ள எண்களில் ஒன்று. இந்த எண்கள், தனியாகவும் இணைவாகவும் எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன

digital computer : (விண்.) எண்மானக் கணிப்பொறி : அளவுகள் இலக்கங்களில் குறிப்பிடப்படும் கணிப்பொறி. இது ஏவுகனை பறக்கும் பாதை தொடர்பான சிக்கலான கணக்குகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுகிறது

digital signal : ( தானி.) எண்மானச் சைகை : கணிப்பதற்கும் கட்டுப்பாடுகள் செய்வதற்கும் பயன்படும் சைகை

dihedral angle: (வானு.) இருசமதள முக்கோணம்: இரு சமதள முகங்களிடைப்பட்ட கூர்ங்கோணம். விமானத்தில் ஒர் இறகுக்கும் கிடைமட்டத்திற்கு மிடையிலான கோணம்.இந்தக் கோணம், குறுக்காகக் காற்று வீசும்போது, கிடைமட்ட உறுதிப்பாட்டினை அதிகரிக்கிறது

dilate: விரிவாக்கு: பெரிதாக்குதல் விரிவாக்குதல்; அகலமாக்குதல்

diluent : (மர.வே.) நீர்ப்புப் பொருள் : கலவையின் செறிவைத் தளர்த்தும் பொருள். சாயங்களில் வண்ணமுனைப்புக் குறையச் செய்வதற்கு இது பயன்படுகிறது. வண்ணச் சாயங்களில் ஆளிவிதை எண்ணெயும், கற்பூரத் தைலமும், அவலரக்கில் ஆல்ககாலும், வ்ண்ணங்களில் கற்பூரத்தைலமும் நீர்ப்புப் பொருளாகப் பயன்படுத்தப்கின்றன

dilute : (வேதி.) நீர்த்தல் செய் : கலவையில் நீர்கலந்து செறிவு குன்றச் செய்தல்

dimension : பரிமாணம் : நீளம், அகலம், உயரம் அல்லது கனம் ஆகிய அளவுத் தொகுதிகளைக் காட்டும் உருவளவைக் கூறு

dimensional stability: (குழை.) பரிமாண உறுதிப்பாடு: ஒரு பிளாஸ்டிக் பொருள், குறிப்பிட்ட சூழ் நிலைகளில் குறிப்பிட்டகால அளவுக்குத் தனது துல்லியமான வடிவளவைப் பேணிக் காத்துக் கொள்ளும் திறன்

dimensioning : உருவளவைப்படுத்துதல் : உருவ வரைபடங்களில் பல்வேறு பகுதிகளின் வடிவளவுகளைக் குறிப்பிடுதல்.

dimension line :பரிமாணக் கோடு : பரிமாணம் எந்தப் பகுதியை அல்லது கோட்டினை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதை ஒரு வரைபடத்தில் காட்டும் கோடு

dimension shingles : (க.க.) பரிமாண மரப்பாவோடு : ஒரு சீரான வடிவுள்ள மரப்பாவோடுகளிலிருந்து வேறுபட்டது

dimmer : (தானி.) ஒளி குறைப்பான்: உந்து வண்டிகளின் வெளிச்சமிக்க முகப்பு விளக்குகளில் கண் கூச வைக்கும் ஒளியைக் குறைப்பதற்கான ஒரு சாதனம். இது காலடியிலுள்ள விசையின் மூலம் முகப்பு ஒளிக்கற்றையினை உயர்த்தித் தாழ்த்துவதன் மூலம் செய்யப்படுகிறது

மின்னியலில் மின் விளக்கின் ஒளியைக் கட்டுப்படுத்துவதற்காக வரிசையில் வைக்கப்பட்டுள்ள ஒரு தடைமாற்றி

dimming resistor : (மின்.) மங்கு தடுப்பான்: முகப்பு விளக்குகளில் ஒளியின் செறிவினைக் குறைப்பதற்காக விளக்கின் சுற்றுவழியில் செருகப்பட்டுள்ள ஒரு சாதனம்

dimpling : குழிகுடைதல் : ஒரு குடையாணி தலை பொருந்தும் வகையில் ஒரு மெல்லிய உலோகத்தில் ஒரு குழி உண்டாக்கும் முறை

dinging hammer : ( உலோ. ) நெளிவெடுக்கும் சுத்தி : உலோகத் தகட்டிலுள்ள பள்ளங்களையும், நெளிவுகளையும் அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கை நெளிவெடுக்கும் சுத்தியல்

dinking die : (பட்.) துளையிடு கருவி : துணி, தோல், காகிதம் முதலியவற்றில் துவாரமிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய துளையிடுங்கருவி அல்லது தமரூசி. இதனை ஓர் எந்திரத்திலோ, சுத்தியால் அடித்துக் கைத்தமருசியினாலோ இயக்கலாம்

diode: இரு முனையம்: ஒரு வெற்றிடக் குழாய் இரு மின் முனையங்கள் கொண்ட மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுங்கருவி

diode detector (மின்.) இருமுனையக் கண்டறி கருவி : இரு முனையத்தின் ஒரு முகக் கடத்துந்தன்மையைப் பயன்படுத்தும் கண்டறி மின் சுற்றுவழி

dip : (மின்.) காந்த ஊசி இறக்கம்: அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் கீழ்நோக்கிய இறக்கக்கோணம்

dipangle இறக்கக்கோணம் : மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கக் கோணம்

dip brazing: (பற்.) தோய்வுப் பற்ற வைப்பு : இரு பகுதிகளைப் பற்ற வைப்பதற்கு, இருபகுதிகளையும் ஒன்றாக இணையும் வரையில் போதிய அளவு சூடாக்கி உருக்கிய துத்தநாக்த்தில் தோய்த்து வைககும் முறை

diphthorg: இணையுயிர் : ஓரசையாக ஒலிக்கப்படும் இரண்டு உயிரெழுத்தொலிகள். Phoenix என்னும் சொல்லில் "oe" என்பது ஒரே உயிரொலியுடைய ஈரெழுத்து இணையுயிர் ஆகும்

dipole antenna : இரு கம்ப விண்ணி: ஒரே நேர்கோட்டில் சமநீளமுள்ள இரு மின்கடத்திகளைக் கொண்ட விண்ணி. இது உள் முனைகளில் இணைக்கப்பட்டுள்ள இரு ஈயக்கம்பிகளைக் கொண்டிருக்கும்.இது ஈரினை அல்லது இரு கம்ப விண்ணி என்றும் அழைக்கப்படும். சிற்றலைகளுக்கு தானே தாங்கிக் கொள்ளும் உலோகச் சலாகைகள் அல்லது குழாய்கள பயன்படுத்தப்படுகின்றன direct action : (மின்.) நேரடி இயக்கம் : எந்திரவியல் இயக்கத்தில் இடையீட்டுப் பொருள் இல்லாமல் நேரடியான இயக்கம்

direct current : (மின்.) நேர் மின்னோட்டம் : ஒரு திசைப் போக்குடைய மின்னோட்டம். ஒரு மின்னாக்கப் பொறியில் உற்பத்தியாகும் மின்னோட்டம் மாறுமின்னோட்டமாக அமைகிறது. ஆயினும், அதனைத் திசைமாற்றியின் உதவியால் நேர் மின்னோட்டமாக மாற்றலாம்

direct current arc welding : நேர்மின்னோட்டச் சுடர் பற்றவைப்பு: சுடரில் உண்டாகும் மின்விசை நேர் மின்னோட்டமாக இருக்கும் வகையில் செய்யப்படும் ஒரு சுடர் பற்றவைப்பு முறை

direct drive : நேரடி இயக்கி : சுழல் தண்டுகளையும் வார்ப்பட்டைகளையும் பயன்படுத்துவதைத் தவிர்த்து, முதன்மை இயக்கியுடன் நேரடியாக இணைப்பதன் மூலம் ஒரு மின்னாக்கப் பொறியினை இயக்கும் அமைவு

direct dyes : நேரடி சாயங்கள் : நிறம் கெட்டியாக்கும் பொருள் எதனையும் பயன்படுத்தாமலேயே கெட்டியாக உள்ள சாயங்கள்

direct indexing : (எந்.) நேர்பகுப்பு : துளையிடு எந்திரத்தில் இந்த நேர்பகுப்பு செய்யப்படுகிறது. கதிரும் அதில் ஏற்றப்பட்டுள்ள வேலைப்பாட்டுக்குரிய பொருளும் பகு தகட்டுடன் ஒத்த கோணங்களில் சுழல்வதன் மூலம் இவ்வாறு செய்யப்படுகிறது

direction : திசை :ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை உள்ள நிலை

directional . gyro (வானு.) திசை காட்டும் சுழலாழி : திசையினைக் காட்டக்கூடிய ஒரு சுழலாழிக் கருவி. இதில் சுழல் பொருள்களின் இய்க்க விளக்கும் ஒரு தங்கு தடையற்ற சுழலாழிக் கருவியும் அமைந்திருக்கும். இது வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு நிலையிலே இருக்கும். இதன் கோணம் பிறழ்வினைக் காட்டுகிறது

directional radio : திசைநோக்கு வானொலி : விண்ணியிலிருந்து வானொலி ஆற்றலை முன்னரே நிர்ணயிக்கப்ப்ட்ட ஒரு குறிப்பிட்ட திசையில் அனுப்பும் வானொலி ஒலிபரப்பு

directional stability : (வானு.) திசை நோக்கிய உறுதிப்பாடு : வழக்கமான அச்சில் சுழலும் உறுதிப்பாடு, ஒரு விமானம் இத்தகைய உறுதிப்பாட்டினை பக்கம் நோக்கிய நிலையில் எளிய வடிவில் உடையதாகும்

direction of force : (இயற்.) விசையின் திசை : ஒரு பொருளின் மீது செயற்படும் விசை நகர்ந்து செல்லும் அல்லது நகர்ந்து செல்ல முனையும் திசை

direction of magnetic flux : (மின்.) காந்தப் பெருக்கத் திசை : ஒரு காந்தப்புலத்தில் இந்தத் திசை எப்போதும் வடக்கிலிருந்து தென் துருவத்தை நோக்கியதாக இருக்கும்

direction signal (தானி.) திசைச் சைகை : உந்துவண்டிகள் திரும்பவிருக்கும் திசையினை ஒட்டுநர் குறித்துக் காட்ட உதவும் ஒரு மின் விசைச் சாதனம்

direct rediation : (இயற்.) நேரடிக் கதிர்வீச்சு : ஒர் அறையை நீராவியால் அல்ல்து அறையிலுள்ள வென்னீர்க்கதிர்வீசிகளால் சூடாக்கும் முறை நேரடிக் கதிர் வீச்சு எனப்படும் direct polarity : (பற்.) நேர்துருவமுனைப்பு : நேர் முனையிலிருந்து (அடிப்படை உலோகம்) எதிர் முனைக்கு (மின்முனை) மின்னோட்டம் நேரடியாகப் பாய்தல். மின்முனை எதிர்முனையாகவும், அடிப்படை உலோகம் நேர் முனையாகவும் செயற்படுகிறது

dirigible: (வானூ.) பறவைக் கப்பல்: வானில் வழிப்படுத்திச் செலுத்தப்படக்கூடிய ஒரு வகைக் கூண்டு

discharge header : (வானூ.) வெளியேற்று குழாய் : உந்துகலம், விமானம் முதலியவற்றின் மீவிசைக் காற்றடைப்புக் குழாயிலிருந்து எஞ்சினுக்குக் கர்ற்று கொண்டு செல்லப்படும் குழாய் வழி

dirty proof : (அச்சு.) மட்டமான பார்வைப் படி : பல பிழைகளைக் கொண்ட திருத்தத்திற்கான அச்சுப் பார்வைப் படி

discriminator : (மின்.) பிரித்துணர் கருவி : ஒருவகைப் பண்பலை உணர்கருவி

discharging or relieving arch : வெளியேற்று அல்லது தளர்த்து கவான் : வாயில்-பலகணி ஆகியவற்றின் மேற்கட்டையின் பாரத்தைத் தளர்த்துவதற்காக ஒரு கதவில் அல்லது பலகணியிலுள்ள திறப்புக்கு மேல் அமைக்கப்படும் கவான்

discoloration : (குழை.) நிறம்வேறாக்குதல் : பிளாஸ்டிக் பொருள் முதலில் கொண்டிருக்கும் நிறத்தை மாற்றுதல்

disconnect : இணைப்பு நீக்கு : இணைப்பைப் பிரித்துவிடுதல்; கழற்றிவிடுதல்; பிரித்து வேறாக்குதல்

disengaging clutch : (எந்.) விடுவிப்பு ஊடிணைப்பி : சக்கரங்களை பல்லிணையின் தொடர்பிலிருந்து விடுவிக்கக்கூடிய ஒர் ஊடிணைப்பி

dished : உட்குழிவு : சீட்டாட்ட மேசைகளின் மேற்பரப்பில் பணம் போட்டு வைப்பதற்காக உட்குழிவாக அமைக்கப்படும் பள்ளம்

dished wheel: (தானி; எந்.) உட்குழிவுச் சக்கரம் : உட்குழிவாக அல்லது குவியாக அமைக்கப்படும் ஒரு சக்கரம்

disinfectant : (வேதி.) தொற்றுத்தடை மருந்து : நச்சுத்தடைக் காப்புப் பொருளாகப் பயன்படும் வாயு திரவம் அல்லது திடப் பொருள்

disinfection: (வேதி.) தொற்றுத் தடைக்காப்பு : தொற்றுத் தடைப் பொருட்களாகிய வாயு அல்லது திரவத்தைப் பயன்படுத்தித் தொற்று நோய்களுக்கு எதிராகத் தடைக்காப்புச் செய்தல்

disintegration : சிதைவுறுதல்: பாறைகள் முதலியவை சிதைவுற்று ஆக்கக் கூறுகளாகப் பிரிதல்

disk : (பட்.) வட்டத் தகட்டு : ஒரு பட்டறையிலுள்ள வட்டத் தகடு. இது ஓர் எந்திரத்தின் அல்லது வேலைப்பாட்டின் ஒரு பகுதியாக இல்லாதிருக்கலாம்

disk clutch : (தானி; எந்.) வட்டத் தகட்டு ஊடிணைப்பி : இது ஒற்றையாகவும், பல்லுறுப்புகளாவும் அமைந்திருக்கும். இதில் ஒரு வட்டத்தகடு ஒரு தகட்டுப்பாளத்திற்கு நேராக விற்சுருள் மூலம் மடித்து வைக்கப்படுகிறது. இதனால் ஊடிணைப்பி மூலம் விசையை அனுப்பும்போது, உறிஞ்சப்படுவதில்லை. ஊடிணைப்பிக்கால்மிதிகள் மூலம் ஊடிணைப்பிகளை இணைக்கலாம் அல்லது பிரிக்கலாம் disk ruling machine : ( அச்சு. ) வட்டத்தகட்டுக் கோடுவரை கருவி: எஃகுப் பேனாக்களுக்குப் பதிலாக வட்டத்தகடுகள் கொண்டு கோடுகள் வரையும் ஒரு பொறியமைவு

disk wheel ; (தானி.) வட்டத்தகட்டுச் சக்கரம் : இது எஃகுப் பொறிப்பீடுகளாகச் செய்யப்பட்டிருக்கும். சிலவற்றில் பிரித்தெடுக்கக்கூடிய வெளிவளையங்கள் இருக்கும். மற்றவற்றில் சக்கரமும் வெளிவளையமும் ஒரே அலகாக அமைந்திருக்கும். டயரை மாற்றும் போது சக்கரத்தையும் மாற்றி விடுவது வழக்கம்

dismantle : உறுப்புகளைக் கழற்றுதல்: துணையுறுப்புகளைப் பிரித்தெடுத்தல்; பூட்டுப் பொருத்துக் கழற்றி

dispersion : (குழை.) சவ்வூடுசெல்லாக் கரைசல் நிலை: பிளாஸ்டிக்கில் சீரான பரப்பீடாகவுள்ள மற்றொரு நேர்த்தியான பொருளின் மிதவல். இது பிசின் துகள் ஊடே கிடக்கும் பால்மம் போன்றது

displacement current : (மின்.) பெயர்ச்சி மின்னோட்டம் : மின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஒரு பொருளில் எலெக்ட்ரான்களின் பெயர்ச்சி நேர் மின்னேற்றத்தை நோக்கி நடைபெறுதல்

display : (தானி.) காட்சி : எண் வட்டுகள், வரைபடங்கள், எண் மானக் குறியீடுகள் மூலமாக எந்திர இயக்கு பொறியில் காட்சியாகக் கிடைக்கும் தகவல்கள்

display type: (அச்சு.) அலங்கார அச்செழுத்து : அச்சிடப்படும் சில வாசகங்களை முனைப்பாகக் காட்டக்கூடிய அச்செழுத்து வகை

dissect : அறுவைப் பகுப்பாய்வு : தாவரத்தின் அல்லது விலங்கின் உடல் உறுப்புகளைக் கூறுகளாக அறுத்துப் பகுப்பாய்வு செய்தல்

dissipate : சிதறடி நச்சு: வாயுக்களைச் செலவழிப்பதற்காகச் சிதறடித்தல், கலைத்தல் அல்லது குலைததல

dissipation of energy : (எந்.) ஆற்றல் அழிவு : சக்தியைப் படிப்படியாக இழத்தல்

dissociation: (வேதி.) சேர்மானச் சிதைவு : வெப்பத்தின் மூலமாக வேதியியல் வினையை எதிர் மாறாக்குதல். எடுத்துக்காட்டாக அம்மோனியம் குளோரைடைச் சூடாக்கும்போது, அது ஹைட்ரஜன் குளோரைடாகவும் அம்மோனியாவாகவும் சிதைந்து, அந்தக் கூட்டுப் பொருட்கள் ஒருங்கினைந்து அம்மோனியம் குளோரைடு உண்டாகிறது

dissolve : கரையச்செய் : ஒரு பொருளுடன் வேறொரு பொருளைச் சேர்த்து, அதனைத் திட நிலையிலிருந்து திரவ நிலையடையச் செய்தல் தொலைக்காட்சியில் ஒலியை அல்லது படத்தைத் தேய்ந்து மறையச் செய்தல்

distemper :பற்றொவியம் : உட்சுவர்களில் சுண்ண்ப் பரப்பின் மீதும் நீற்றுப் பரப்பின் மீதும் முட்டைக் கருவுடன் கஞ்சிப்பசை கலந்து தீட்டப்படும் வண்ண ஒவியமுறை

distend : விரிவாக்கு: விரிவாக்குதல்; நீட்டுதல்; பரப்பி விரிவுறச் செய்தல்

distillation : (வேதி.) வாலை வடித்தல் : சூடேறி ஆவியாகும் இயல்புடைய_கலவைத் கூற்றினை ஆவியாகப் போகவிடுதல். இதன் மூலம் அதிக அளவில் ஆவியாகும் பொருளைக் குறைந்த அளவில் ஆவியாகும் பொருளிலிருந்து பிரித்தெடுக்கலாம்

distilled water : வாலை வடித்த நீர்: வாலை வடித்தல் மூலம் மாசுகள் அனைத்தும் நீக்கப்பட்ட நீர்

distortion:உருத்திரிபு:வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் அலைக்கோட்டங்களால் ஏற்படும் திரிபுகள்

distortion : (மின்.) ஒலித்திரிபு: வானொலியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் அலைக்கோட்டங்களால் ஏற்படும் ஒலிக்கோளாறு

distribute : (அச்சு.) சிதைத்துப் பிரித்திடு : அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளில் பிரித்திடுதல்

distributed load : பரவலாக்கிய பாரம் : ஒரு மேற்பரப்பில் பாரம் முழுவதும் ஒரே சீராகப் பரவி அழுந்துமாறு செய்தல்

distribution :(அச்சுச்.) சிதைத்துப் பிரித்திடுதல் : அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்து அதனதன் தனித்தனி அறைகளில் பிரித்திடுதல்

distribution box :(மின்.) பங்கீட்டுப் பெட்டி : மின்விசைப் பங்கீட்டு மையத்தில் குழாய் அமைப்பாகப் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய உலோகப் பெட்டி

'distribution line :(மின்.) பங்கீட்டுக் கம்பி : மின்விசையை பங்கீடு செய்யக் கொண்டு செல்லும் மின் கம்பி

distribution panel :(மின்.) பங்கீட்டு விசைப் பலகை: பிரதான மின்விசை வழங்கீட்டுக் கம்பிகளுடன் இணைக்கப்பட்டுள்ள மின் விசைப் பலகை

distributor ; (தானி.) விசைப்பங்கீட்டுப் பொறி : உயர் அழுத்த மின்னோட்டத்தைச் சுடர்ப்பொறிச் செருகிகளுக்குக் கொண்டு செல்லும் ஒரு சாதனம்

distributor: (குளி.பத. )பகுப்பான்: குளிர்பதனப்பெட்டியில் ஆவியாக்கியில் ஒரு போகு பாதைகளுக்கிடையில் திரவம் பாய்வதைப் பகுத்தளிப்பதற்கான ஒரு சாதனம்

distributor gear: (தானி.) பங்கீட்டுப் பல்லிணை : பங்கீட்டுச்சுழல் தண்டின் கீழ்முனையிலுள்ள ஒரு பல்லிணை. இது பங்கீட்டுச் சுழல் தண்டினை இயக்குகிறது

dive; (வானூ.) தலைகுப்புறப் பாய்தல்: விமானம் தலைகுப்புறப் பாய்ந்திறங்குதல். இது விசையுடனோ விசையின்றியோ நடைபெறலாம்

divergence: (வானூ.) திசை திரும்புதல்: விமானத்தில் சமநிலையிலிருந்து பிறழ்ந்து உடல் வேறு திசையில் திரும்புதல்

diversity reception : (மின்.) பன்முக ஏற்பு : சைகை மங்கல் விளைவினைத் தவிர்ப்பதற்காகப் பல்வேறு ஒலிவாங்கிகளையும், வானலைக் கொடிகளையும் பயன்படுத்துகிறவானொலி ஏற்பமைவு

diverter (மின்.) திசை திருப்பி : ஒரு மின்னாக்கியின் களச்சுருள் வரிசைகளுக்குக் குறுக்கே இணைக்கப்பட்டுள்ள மாறுபாடு இணைத்தடை அமைப்பு

divide : பகு : கூறுபடுத்துதல்; இரண்டு அல்லது அவற்றிக்கு மேற்பட்ட பகுதிகளாகப் பகுத்தல்

dividend : (கணி.) வகுபடு எண்: சரிசமமான பகுதிகளாகப் பகுக்கப்பட்ட ஒர் எண் அல்லது அளவு

dividers : கவராயம் : நீளங்களை அளவிடுவதற்குப் பயன்படும் கவைமுள் கருவி

dividing head, (எந்.) பகுப்புச் சாதனம் : ஒரு பொருளின் சுற்றளவை சரிசமமான பாகங்களாகப் பகுப்பதற்குப் பயன்படும் ஒர் எந்திர சாதனம்


divisor (கணி.) வகுக்கும் எண்: வகுக்கப்படும் எண்ணில் மீதமின்றி வகுக்கும் எண்

D layər : “D” அடுக்கு :பூமியின் மேற்பரப்பிலிருந்து 30-40 கி.மீ. உயரத்தில் உள்ள குறைந்த அயனியாக்கம் உடைய வாயுமண்டல அடுக்கு

doctor (பட்.) சீர்படுத்து கருவி : எந்திரக் கருவிகளைச் சீர்படுத்து வதற்கான கருவி. செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை

dodger : (அச்சு.) துண்டு வெளியீடு : வீட்டுக்கு வீடு வழங்குவதற்குரிய சிறிய அச்சிட்ட சுற்றறிக்கை அல்லது துண்டு வெளியீடு

doeskin : மான் தோல் : பக்குவப் படுத்தப்பட்ட பெண் மானின் தோல்

dog : (எந்.) வளையிருப்பாணி : வெட்டு மரங்களை இணைத்துப் பிடிக்கும் பகர வடிவ வளையிருப்பாணி

dogtooth: (க.க.) சித்திர வேலை: சதுரமோட்டுருவ நுட்ப வேலைப்பாடுள்ள நார்மன் கட்டிடக் கலையைச் சார்ந்த சித்திர வேலைப்பாடு

dolly_: (எந். திருகுப்பிடி : திருகுப் பிடிக்கருவி

dolomite: (கணி.) டோலோமைட்: சுண்ண வெளிமக் கரியகிகளின் கலப்புடைய பாறை வகை, இதில் மக்னீசியம் அதிக அளவில் அடங்கியிருக்கும். எஃகுத் தொழிலில் இது பயன்படுகிறது

domain theory : (மின்.)ஆள்வரைக் கோட்பாடு : காந்த விசை தொடர்பான ஒரு கோட்பாடு. கோள் நிலை எலக்ட்ரான்களின் இயக்கத்தினால் மையக் கருவைச் சுற்றி உண்டாகும் அணுவியல் காந்தங்கள், ஒருங்கிணைந்து குழுமங்களாக உருவாகும் வலுவான போக்கு உடையவை என்ற் அனுமானத்தின் அ டிப்படையில் அமைந்தது இந்தக் கோட்பாடு. இந்தக் குழுமங்கள் "ஆள்வரைகள்' எனப்படும்

dome : (க.க.) கவிகை மாடம் , கவிதை மாடத் தூபி

domed : (குழை.) கவிகை வடிவான : பிளாஸ்டிக் பொருளின் தட்டையான பகுதியை கவிகையுருவுடையதாகவும் தோன்றச் செய்யும் ஒரு சீரான உருத்திரிபு

domestic architecture : (க.க.) குடியிருப்புக் கட்டிடக்கலை : வீடுகள், தனியார் கட்டிடங்கள் தொடர்பான வடிவமைப்பு திட்டமிடுதல், கட்டுமானம் பற்றிய கலை

dominant colour : (விண்.) முனைப்பு வண்ணம் : முனைப்பாக விஞ்சி நிற்கும் வண்ணம்

dongola ; டோங்கோலா : கனிமப் பொருட்களையும் தாவரப் பொருட்களையும் பயன்படுத்திப் பக்குவம் செய்து ஒரு சிறுமரத் தொட்டி போன்ற வடிவில் அமைக்கப்பட்ட கன்றின் தோல், வெள்ளாட்டின் தோல் அல்லது செம்மறியாட்டின் தோல்

donkey : உள் இழைப்பு எந்திரம்: