உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் அகராதி/Z

விக்கிமூலம் இலிருந்து

Z

zebra - வரிக்குதிரை: குதிரை போன்ற விலங்கு, ஆப்பிரிக்காவைச் சார்ந்தது. கறுப்பு வரிகளும் வெள்ளை வரிகளும் உடலில் மாறி மாறி இருப்பதால் இப் பெயர் வட்டக் காட்சியில் பயன்படுவது விலங்ககத்தில், காட்சிப் பொருள்.

Zeeman effect -சீமன்(எஃபெக்ட்) விளைவு: நிலைக்காந்தப் புலத்தில் மூலக்கூறுகள் அல்லது அணுக்களால் உமிழப்படும் கதிர்வீச்சிலுள்ள நிறமாலை வரிகள் பிரிக்கப்படுதலுக்குச் சீமன் விளைவு என்று பெயர். இது 1896இல் சீமனால் (1865-1943) கண்டுபிடிக்கப்பட்டது. இது இருவகைப்படும். 1. இயல்பான சீமன் விளைவு: இதில் காந்தப் புலம் ஒளிப்பாதைக்குச் செங்குத்தாக இருக்கும். ஒரு தனி வரி மூன்று வரிகளாகப் பிரியும், ஒரு போக்காக இருந்தால் இரண்டாகப் பிரியும். 2. இயல்பற்ற சீமன் விளைவு: இதில் வரிகள் சிக்கலாகப் பிரிக்கப்படுவதாகும்.சிப்ப எந்திரவியல் அல்லது விசைப்பொறி இயல் இவ்விளைவை மின்னணுச் சுழற்சிமூலம் விளக்குகிறது. (இய)

Zeeman energy -சீமன் (எனர்ஜி) ஆற்றல்: பயன்படுகாந்தப்புலத்திற்கும் மூலக்கூறு காந்தப்புலத்திற்குமிடையே ஏற்படும் வினையினால் உண்டாகும் ஆற்றல். (இய)

zeolite - சியோலைட்: நீரேற்றிய அலுமினோ சிலிகேட் தொகுதியில் ஒன்று. இயற்கையாகக் கிடைப்பது. சர்க்கரையைத் தூய்மைபடுத்தவும் கடினநீரை மென்னீராக்கவும் பயன்படுதல். பா.Permutit(வேதி)

zero - சுழி, இன்மை: எந்த அளவாக இருந்தாலும் அதன் தொடக்கம். இதன் சிறப்பு இந்திய வானநூலாரும் கணக்கியல் அறிஞருமான ஆரியப்பட்டாவினால் (476-520) சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவரைப் பெருமைப்படுத்தும் வகையில், இந்தியா தான் ஏவிய முதல் செயற்கை நிலாவிற்கு ஆரியபட்டா என்று பெயரிட்டது. இது 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள் சோவியத்து ஒன்றியத்திலிருந்து ஏவப்பட்டது. (வானி)

zero gravity -சுழி ஈர்ப்பு: எடையின்மை. இதில் ஈர்ப்பு அல்லது எந்திர விசையின் முடுக்கத்தை அறிய இயலாது. தவிர இது வானவெளிப் பயணிகளால் உணரப்படும் நிலையுமாகும்.பா. weightlessness. (இய)

Zero order-சுழிவரிசை: இது ஒரு வேதிவினை. இதில் வினைவீதம் வினைபடு பொருளின் செறிவைப் பொறுத்ததன்று. (வேதி)

zero point energy - சூழ்நிலை ஆற்றல்: ஒரு பொருளின் மூலக்கூறுகள் அல்லது அணுக்கள் 4° செ இல் பெற்றிருக்கும் ஆற்றல். (வேதி)

Ziegler process -சீக்ளர் முறை: உயரடர்த்தி பாலியீத்தின் தயாரிக்கும் தொழிற்சாலை முறை. வினையூக்கிகள்: டிட்டினியம் (w) குளோரைடு அலு மினியம் ஆல்கைல்கள். ஜெர்மன் வேதி இயலார் கார்ள் சீக்ளர் (1898-1973) என்பவரால் 1953இல் அறிமுகப்படுத்தப்பட்டது. (வேதி)

Ziesel reaction -சீசல் வினை: ஒரு கரிமச் சேர்மத்திலுள்ள முத்தாக்சைல் தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்யும் முறை. 1886இல் சீசெல் என்பவரால் உருவாக்கப்பெற்றது. (வேதி)

zinc துத்தநாகம்: Zn. கடின உலோகம். நீலமும் வெண்மையும் கலந்தது. வெண்கலம் செய்யவும் இரும்புத்தகடுகளுக்கு நாக முலாம் பூசவும் பயன்படுவது. (வேதி)

zinc blende-துத்தக் குளோரைடு: ZnS. துத்தநாகத்தின் முதன்மையான தாது (வேதி).

zinc carbonate -துத்தக் கார்பனேட்டு: ZnCO3 மென்மையான வெண்ணிறத்தூள், நீரில் கரையாதது. இயற்கையில் காலமைனாகக் கிடைப்பது காலமைன் கரைசலில் பயன்படுவது. தோல் நோய்களுக்கு மருந்து. (வேதி),

zinc chloride -துத்தக் குளோரைடு: ZnCl2 வெண்ணிறப் பொருள். அதிகம் நீர் ஈர்க்கக் கூடியது. அதிகம் நீரில் கரைந்து காடிக் கரைசலைக் கொடுப்பது. நீர் நீக்கும் பொருள். மரப்பாதுகாப்புப் பொருள். துத்தநாக ஆக்சைடுடன் சேர்ந்த பசை. பற்காரையாகப் பயன்படுவது. (வேதி)

zinc oxide -துத்தாக்சைடு: ZnO, வெண்ணிற நார்ப்பொருள். துத்தக் கார்பனேட்டைச் சூடாக்கிப் பெறப்படுவது. கண்ணாடி செய்வதிலும் மட்பாண்டங்களுக்கு மெருகேற்றவும் பயன்படுவது. தவிர, சீன வெள்ளையாகவும் துத்தநாகக் களிம்புகளில் சீரான புரை எதிர்ப்பியாகவும் பயன்படுதல். பழைய பெயர் மெய்யறிவாளர் கம்பளம். (வேதி)

zinc sulphate-துத்தச் சல்பேட்டு: ZnSO4 வெண்ணிறப் படிகம். நீரில் கரைவது. சீரான வெப்பநிலையில் காற்றில் சல்பைடு தாதுவை வறுத்துப் பெறப்படுவது. மின்முலாம் பூசுவதிலும் வெள்ளை வண்ணக் குழம்பிலும் பயன்படுவது. (வேதி)

zirconium -சிர்கோனியம்: Zr. அரிய உலோகம். மென்மையானது. பளபளப்பானது. தகடாக்கலாம். எஃகுத் தோற்றமுடையது. உலோகக் கலவைகள் செய்யவும் தீச்சுடர்த்தடைச் சேர்மங்கள் செய்யவும் பயன்படுவது. (வேதி),

zirconium silicate -சிர்கோனியம் சிலிகேட்டு: ZrSiO4 நிறமற்றது. அல்லது சிறிது மஞ்சள் நிறமுடையது. நீரில் கரையாப் பொருள். வெள்ளையாக இருப்பின் மணிக்கல், நிறமாக இருப்பின் உருகாப் பொருள். (வேதி)

Zodiac உருவட்டம்: வானத்திலுள்ள கற்பனை வளையம், 18° அகலமுள்ளது. இதன்வழியே பெருவட்டம் (எக்ளிப்டிக்) மையமாகச் செல்கிறது. இவ்வட்டமே கதிரவன், திங்கள், கோள்கள் ஆகியவற்றின் இயக்கங்களுக்குப் பின்னணியாக அமைவது. இவ்வளையம் 30° உள்ள 12 சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை உருவட்டக் குறிகள் (சைன்ஸ் ஆஃப் தி சூடியாக்) எனப்படும். சோதிடத்தில் இப்பகுதி இராசிகள் என்று கூறப் பெறும், அவையாவன: 1. மேஷம் (செம்மறியாடு) 2. ரிஷபம் (எருது) 3. மிதுனம் இரட்டையர்) 4. கடகம் (நண்டு) 5. சிம்மம் (அரிமா) 6. கன்னி (இளம்பெண்) 7. துலாம் (ஆரை) 8. விருச்சிகம் (தேள்) 9. தனுசு (வில்) 10. மகரம் (வெள்ளாடு) 11. கும்பம் (குடம்) 12. மீனம் (மீன்) (வானி)

zodiacal light - உருவட்ட ஒளி: வானத்தின் மங்கலான ஒளிர்வு. இரட்டைக் குவி வடிவத்தில் இருக்கும். கதிரவனின் இருபக்கத்திலுமுள்ள பெருவட்டத் திசை யில் நீண்டிருக்கும். அவ்வட்டத்திலிருந்து 90° அளவில் மங்கலாகிச் செல்லும். கதிரவன் தோன்றுவதற்கு முன்போ பின்போ வெப்ப மண்டலங்களில் பார்க்கலாம். (வானி)

Zone refining-மண்டலத் தூய்மையாக்கல்: சில உலோகங்கள், உலோகக் கலவைகள், அரைகுறைக் கடத்திகள் முதலியவற்றிலுள்ள மாசுகளின் அளவைக் குறைக்கப் பயன்படும் நுணுக்கம். (வேதி)

zoologist-விலங்கியலார்: விலங்குகளை ஆராய்பவர். (உயி)

zoom lens-சூம் (லென்ஸ்) வில்லை: திரைப்பட ஒளிப்பெட்டியில் பயன்படும் வில்லைத் தொகுப்பு. ஒரே உருத்தலத்தில் உரு இருக்கக் குவிய நீளம் தொடர்ச்சியாகவும் குவிய இழப்பு இல்லாமலும் சரி செய்யப்படுதல். (இய)

zoo - விலங்ககம்: விலங்குகள் காட்சிக்காக வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுமிடம். (உயி)

zoology - விலங்கியல்: விலங்குகளை ஆராயும் துறை. உயிரியலின் ஒரு பிரிவு. இது மேலும் பல பிரிவுகளைக் கொண்டது. (உயி)

zootaxy - விலங்கு வகைப் பாட்டியல்: விலங்குகளை வகைப்படுத்தும் அறிவியல். (உயி)

Zwitterion -ஈரயனி: இரு முனை அயனி. நேர் மின்னேற்றமும் எதிர் மின்னேற்றமும் கொண்டது. (உயி)

zygantrum - குழி எலும்பு: பல்லி, பாம்பு முதலிய விலங்குகளில் முன் வளைவான பின்பகுதியில் காணப்படும் ஓரிணைக் கூடுதல் முள் எலும்பு. (உயி) zygodactyl-இருகூறு விரலுள்ள: பறவையின் கால் இருவிரல்களைக் கொண்டிருப்பது.ஒன்று முன்னோக்கியும் மற்றொன்று பின்னோக்கியும் இருத்தல். இந்த அமைப்பு பிடிப்பிற்குப் பயன்படுவது. (உயி)

zygoma - கன்ன எலும்பு: முகஎலும்புகளில் ஒன்று. (உயி)

zygote-கருவணு: முட்டையும் சிதலும் சேர்வதால் உண்டாகும் அணு (உயி)

zygotene - இணைநிலை: குன்றல் பிரிவில் முதல்நிலை - 1இல் உள்ள துணை நிலை. இப்பொழுது ஓரக நிறப்புரிகள் இணை இணையாகச் சேர்வதற்குக் கூடல் (சினாப்சிஸ்) என்று பெயர். இச்சேர்க்கை முடிந்ததும் உட்கரு அடுத்த நிலைக்கு ஆயத்தமாகும். (உயி)

Zymology -நொதித்தலியல்: நொதித்தல் என்னும் வேதிச் செயலை ஆராயும் தொழில் நுணுக்கத்துறை. (வேதி)

zymometer -நொதிமானி: நொதித்தல் அளவை அளக்கப் பயன்படும் கருவி. (வேதி)

zymurgy - தொழில்நுட்ப வேதியியல்: நொதித்தல் தொடர்பான சாராயங் காய்ச்சுதல், வடித்தல் முதலிய செயல்களை ஆராயும் துறை. (வேதி)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/Z&oldid=1040382" இலிருந்து மீள்விக்கப்பட்டது