அறிவியல் வினா விடை-இயற்பியல்/நிலைஇயல்
1. விசை என்றால் என்ன?
- அசைவிலா நிலையிலோ சீரான விரைவு நிலையிலோ உள்ள ஒரு பொருளின் மீது செயற்பட்டு, அந்நிலையை மாற்ற முயலுவது விசை. அலகு நியூட்டன்.
2. விசை இணைகர விதி என்றால் என்ன?
- ஒரு புள்ளியில் செயற்படும் விசைகளை ஒர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்களில் குறிக்க இயலுமானால், அப்புள்ளியிலிருந்து அவ்விணை கரத்திற்கு வரையப்பட்ட மூலைவிட்டம், அவ்விரு விசைகளின் தொகுபயனைக் குறிக்கும்.
3. உராய்வு விசை என்றால் என்ன?
இரு பரப்புகளுக்கிடையே உராய்வினால் ஏற்படும் விசை,
4.உராய்வு எதற்குத் தேவை?
ஓடும் பேருந்துகளுக்கு உராய்வு தேவை.
5.உராய்வு எதற்குத் தேவையில்லை?
சுற்றும் உருளைக்கு உராய்வு கூடாது.
6.உராய்வை எவ்வாறு குறைக்கலாம்?
உயவுப் பொருளைக் கொண்டு போக்கலாம் - மசகு.
7.வழவழப்பான தரையில் உராய்வு இருக்குமா?
இராது.
8.உராய்வு விதிகள் யாவை?
1. உராய்வு விசை எப்பொழுதும் பொருள் நகர முயலும் திசைக்கு எதிராகச் செயற்படும்.
2. பொருள் எல்லாச் சமநிலைகளிலும் உள்ளபோது, உராய்வுவிசை பொருளை நகரா வண்ணம் சிறிதே தடுக்கும் நிலையிலுள்ளது.
3. உராய்வு வரம்புக்கும் செங்குத்து எதிர் வினைக்கும் இடையே உள்ள வீதம் மாறாதது. இது தொடர்புள்ள இரு பரப்புகளின் தன்மையைப் பொறுத்தது.
4. எதிர்வினை மாறாத வரை பொருளின் உருவம், பருமன், பரப்பு ஆகியவற்றைப் பொறுத்து உராய்வு வரம்பு மாறுவதில்லை.
9. உராய்வுக் கோணம் என்றால் என்ன?
தொகுபயன் விசைக்கும் செங்குத்து எதிர் விசைக்கும் இடையே உள்ள கோணம்.
10. விசைவீதம் என்றால் என்ன?
எந்திர இலாபமாகும். எந்திரத்தின் பளுவிற்கும் முயற்சிக்குமுள்ள வீதம்.
11. ஈர்ப்பு அல்லது ஈர்ப்பு விசை என்றால் என்ன?
- ஒரு பொருள் மற்றொரு பொருள்மீது ஏற்படுத்தும் கவர்ச்சியினால் பொருளில் உண்டாகும் விசை. இது பொருள்களுக்குத் தகுந்தவாறு மாறுபடும்.
12. எடைமிகுநிலை என்றால் என்ன?
- முடுக்கத்தால் ஏற்படுவது இது ஜி எனப்படும். ஏவுகணையில் செல்லும் வானவெளி வீரர் இதை உணர்வர்.
13. எடையின்மை நிலை என்றல் என்ன?
- சுழி ஈர்ப்பு நிலை. வான வெளியில் வான வெளி வீரர்கள் உணர்வது, உட்படுவது.
14. ஈர்ப்புப்புள்ளி என்றால் என்ன?
- ஒரு பொருளின் எடை முழுதும் தாக்கும் புள்ளி. பொருளுக்குத் தகுந்தவாறு இது மாறுபடும்.
15. சில பொருள்களின் புவி ஈர்ப்பு புள்ளியைக் கூறு.
- வட்டம் - மையப் புள்ளி, உருளை - மைய அச்சின் நடுப்புள்ளி. கோளம் - அதன் மையம். இணைகரம், செவ்வகம் - மூலைவிட்டங்கள் சேருமிடம்.
16. ஈர்ப்பு மாறிலி என்றால் என்ன?
- நியூட்டன் ஈர்ப்பு விதி மாறிலி.
17. தனி எந்திரம் என்றால் என்ன?
- ஒரு கருவியில் ஒரிடத்தில் செயற்படும் விசை வேறோரிடத்தில் அளவும் திசையும் மாறிச் செயற் படுமானால், அது தனி எந்திரம்.
18. தனி எந்திரத்திற்கு எடுத்துக்காட்டுகள் தருக.
- நெம்புகோல், கப்பி, சாய்தளம்.
19. எந்திர இலாபம் என்றால் என்ன?
- எடைக்கும் (பளு) திறனுக்கும் உள்ள வீதம்.
- எடைதிறன் = WP
20. நெம்புகோல் என்றால் என்ன?
- நிலைத்த ஒரு புள்ளியைத் தாங்கு புள்ளியாகக் கொண்டு சுழலும் உறுதியான கோல்.
21. நெம்பு கோலின் நெறிமுறை என்ன?
- பளு X பளுக்கை = திறன் x திறன்கை.
22. நெம்புகோலின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் கூறுக.
- முதல் வகை நெம்புகோல் - ஏற்றம், கத்தரிக்கோல், நீர் உருளை. எ.இ.1. இரண்டாம் வகை - பாக்கு வெட்டி, கதவு, இயங்குகப்பி, எ.இ. 1க்கு மேல். மூன்றாம் வகை - இடுக்கி, மீன்தூண்டில். எ.இ.1க்குக் குறைவு.
23. நெம்பு கோலின் எந்திர இலாப வாய்பாடு என்ன?
- எ.இ. = பளுதிறன் = திறன்கைபளுக்கை
24. கப்பி என்றால் என்ன?
- ஓர் அச்சில் தங்குதடையின்றிச் சுழலக்கூடிய ஒர் உருளை.
25. கப்பியின் வகைகள் யாவை?
- 1. நிலைக் கப்பி கிணற்றில் நீர் இழுக்கும் உருளை. எ.இ.1.
- 2. இயங்கு கப்பி எ.இ. 2.
26. கப்பித் தொகுதி என்றால் என்ன?
- கப்பிகள் பல சேர்ந்தது.
27. கப்பித் தொகுதியின் வகை யாது?
- 1. நிலைக்கப்பித் தொகுதி.
- 2. இயங்குகப்பித் தொகுதி.
28. கப்பியும் பட்டையும் என்றால் என்ன?
- ஒரு தண்டிலிருந்து மற்றொரு தண்டிற்குத் திருப்பு விசையினைச் செலுத்தும் எந்திர ஏற்பாடு.
29. சாய்தளம் என்றால் என்ன?
- இது ஒரு தனி எந்திரம். சாய்வை அதிகமாக்கி எந்திர இலாபத்தைக் கூட்டலாம்.
- எந்திர இலாபம் = எடைதிறன் = நீளம்உயரம்
30. சாய்தளம் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பயன் படுகிறது?
- பளுவை வண்டியில் ஏற்ற இறக்கப் பயன்படுதல். படிக்கட்டுகள், திருகுகள், ஆப்பு ஆகியவை சாய்தளத்தின் அடிப்படையில் அமைந்தவை.
- அது ஒர் இரட்டைச் சாய்தளம்.
32. சாய்வுக் குறைவான படிக்கட்டு, சாய்வு அதிகமுள்ள படிக் கட்டு. இவ்விரண்டில் எதில் எந்திர இலாபம் அதிகம்?
- சாய்வு அதிகமுள்ள படிக்கட்டு.
33. சாய்வுக் கோணம் என்றால் என்ன?
- புவி மேற்பரப்பில் குறிப்பிட்ட புள்ளியிலுள்ள கிடைத் தளத்திற்கும் புவிக்காந்தப் புலத்திற்கும் இடையிலுள்ள கோணம்.
34. சாய்வுக் கோணத்தை எவ்வாறு அளக்கலாம்?
- சாய்வுமானியால் அளக்கலாம்.
35. சமநிலை என்றால் என்ன?
- ஒரு பொருள் கீழே விழாத நிலை.
36. சமநிலை எத்தனை வகை?
- உறுதிச் சமநிலை - பம்பரம் நேராக இருத்தல். புவி ஈர்ப்பு புள்ளி தாழ்வு. உறுதியிலாச் சமநிலை - பம்பரம் தலைகீழாக நிறுத்தும் பொழுது கீழே விழுதல். புவி ஈர்ப்புப் புள்ளி உயர்ந்திருத்தல். நடுநிலைச் சமநிலை - பம்பரம் படுக்கை நிலையில் இருத்தல். புவி ஈர்ப்புப் புள்ளி உயர்வதுமில்லை தாழ்வதுமில்லை.
37. முறுக்கம் என்றால் என்ன?
- ஒரு முறுக்கு அல்லது இரட்டையினால் உண்டாக்கப் படும் திருகிய உருத்திரிபு.
38. முறுக்குத்தராசு என்றால் என்ன?
- முறுக்குக் கோணத்தை ஏற்படுத்தும் சிறிய விசைகளை (ஈர்ப்புவிசை) அளக்க இத் தராசு பயன்படுவது.
39. முறுக்க நெறிமுறை எதில் பயன்படுகிறது?
- மின்னோட்டத்தை நுட்பமாக அளக்கும் ஆடி மின்னோட்டமானியில் பயன்படுகிறது.
40. முறுக்குத் தராசைப் பயன்படுத்திய இரு அறிவியலார் யார்?
- காவண்டிஷ், கூலும்.
41. விரிவுமானி என்றால் என்ன?
- ஒரு பொருளில் தகைவை ஏற்படுத்தி அது உண்டாக்கும் திரிபை அளக்கப் பயன்படுங் கருவி.
42. தனி ஊசல் என்றால் என்ன?
- முறுக்கற்ற மெல்லிய நூலில் பளுவாகத் தொங்கவிடப் பட்டிருக்கும் குண்டு.
43. தொங்குபுள்ளி என்றால் என்ன?
- ஊசல் தொங்கவிடப்படும் புள்ளி. இது தக்கைக்கு அடியில் உள்ளது.
44. அலைவுப்புள்ளி என்றால் என்ன?
- ஊசல் குண்டின் மையம்.
45. ஊசலின் நீளம் என்றால் என்ன?
- தொங்குபுள்ளி, அலைவுப் புள்ளி ஆகிய இரண்டிற்கு மிடையிலுள்ள தொலைவு.
46. அலைவு என்றால் என்ன?
- ஊசல் ஒரு திரும்பு புள்ளியிலிருந்து எதிர் திரும்பு புள்ளிக்குச் சென்று மீண்டும் அதே திரும்பு புள்ளிக்கு வரும் வரை ஏற்படுகின்ற அசைவு.
47. ஊசலின் அலைவு நேரம் என்றால் என்ன?
- ஊசல் ஒர் அலைவுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம்.
48. அதிர்வு என்றால் என்ன?
- அலைவில் பாதி அதிர்வு.
49. ஊசலின் சம அலைவு நேரம் என்றால் என்ன?
- வீச்சு குறைந்தாலும் கூடினாலும் ஊசலின் அலைவு நேரம் மாறாது.
50. இந்த அடிப்படை எதில் உள்ளது?
- ஊசல் கடிகாரங்களில் உள்ளது.
51. வினாடி ஊசல் என்றால் என்ன?
- 2 வினாடி அலைவு நேரமும் 100 செமீ. நீளமுமுள்ள ஊசல்.
52. ஈடு செய்த ஊசல் என்றால் என்ன?
- சூழ்நிலையில் வெப்பம் ஏறினாலும் இறங்கினாலும் அதன் நீளம் மாறா ஊசல்.
53. தற்கால ஊசல்கள் எவ்வாறு ஈடு செய்யப்பட்டுள்ளன?
- பொதுவான வெப்பநிலையில் நீள் பெருக்கம் அடையாத இன்வார் என்னும் உலோகக் கலவையால் செய்யப்படுகின்றன.
54. தனி ஊசலின் நீளத்திற்கும் அலைவு நேரத்திற்குமுள்ள தொடர்பு யாது?
- தனி ஊசலின் நீளமும் அலைவு நேர வர்க்கமும் ஒன்றுக்கொன்று நேர் வீதத்திலிருக்கும் அல்லது lt²= மாறா எண்.
55. நீர் இறைக்கும் உருளை எவ்வகை சார்ந்தது? அதன் எந்திர இலாபம் என்ன?
- முதல் வகை. எந்திர இலாபம் 1.
56. காற்று எக்கியைப் புனைந்தவர் யார்?
- 1645இல் ஜெர்மன் இயற்பியலார் ஆட்டோ வான் கிரிக்.
57. தனி ஊசலை முதன்முதலில் ஆராய்ந்தவர் யார்? எவ்வாறு?
- கலிலியோ தம் 17ஆம் வயதில் பைசா நகர ஆலயத்தில் ஆடிய ஒரு விளக்கின் இயக்கத்தைத் தம்முடைய நாடித்துடிப்பைக் கொண்டு அளந்தார்.
58. இலேமியின் தேற்றம் என்றால் என்ன?
- ஒரு புள்ளியில் செயற்படும் மூன்று விசைகள் சமநிலையில் இருந்தால், ஒவ்வொரு விசையும் ஏனைய இரு விசைகளுக்கு இடையே உள்ள கோணத்தின் சைன் மதிப்பிற்கு நேர் வீதத்திலிருக்கும்.