அறிவியல் வினா விடை-வேதியியல்/அடிப்படைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2. அடிப்படைகள்

1. பொதுப் பெயர், வேதிப் பெயர் என்றால் என்ன?
ஒரு வேதிப் பொருளுக்குப் பொதுவாக வழங்கும் பெயரும் வேதித் தன்மை அடிப்படையில் வழங்கும் பெயரும் ஆகும். சாப்பாட்டு உப்பு பொதுப் பெயர்.
2. சோடியம் குளோரைடு வேதிப்பெயர். வேதிக்குறிகள் யாவை?
சேர்தல் (+), கொடுத்தல் (-), வெப்பம் (A), கனமுள்ளது (↓), கனமற்றது (↑).
3. வேதிக்குறியீடு என்றால் என்ன?
1. அணுவின் பெயரை ஒன்று அல்லது இரண்டு எழுத்துகளில் சுருக்கமாகக் குறித்தல். எ-டு. ஆக்சிஜன், 0. வெள்ளி Ag.
2. குறிப்பிட்ட அலகைக் குறிப்பது. எ-டு. அடர்த்தி, d. நிறை m.
4. வாய்பாடு என்றால் என்ன?
ஒரு வேதிச் சேர்மத்தின் இயைபைத் தெரிவிக்கும் முறை. அதிலுள்ள அணு எண்ணிக்கையைக் காட்ட மேலே குறி எண்களையும், குறிகளையும் பயன்படுத்த வேண்டும். எ-டு. சோடியம் சல்பேட்டு Na2SO4.
5. இவ்வாய்பாடு உணர்த்தும் உண்மைகள் யாவை?
1.சேர்மத்தில் அடங்கியுள்ள தனிமங்களையும் அவற்றின் குறியீடுகளையுங் காட்டும்.
2. சேர்மத்திலுள்ள தனிமங்களின் தகவை அது காட்டும்.
3. சேர்மத்தின் ஒரு மூலக்கூறிலுள்ள தனிமங்களின் எடையை அது காட்டும்.
4. சேர்மத்தின் மூலக்கூறு எடையைக் கணக்கிட உதவும்.
6. மூலக்கூறு வாய்பாடு என்றால் என்ன?
ஒரு சேர்மத்தின் மூலக்கூறு ஒன்றிலுள்ள அணுக்கள், அயனிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் குறியீடுகளால் குறிக்கும் அமைப்பு. எ-டு. நீரின் மூலக்கூறு வாய்பாடு, H2O. ஒரு மூலக்கூறில் 2 அய்டிரஜன் அணுக்களும் ஒர் ஆக்சிஜன் அணுவும் உள்ளன.
7. அமைப்பு வாய்பாடு என்பது என்ன?
வேதி வாய்பாடு. ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களைக் காட்டுவதோடு கூட அதன் அமைப்பையும் தெரிவிப்பது. இது மூலக்கூறு வாய்பாடு ஆகும்.
8. சமன்பாடு என்றால் என்ன?
ஒன்றுக்கு மற்றொன்றுக்குச் சமம் என்னும் கூற்று.
வேதியியல் Mg+ 02→2MgO.
9. சமன்பாட்டின் வகைகள் யாவை?
1. முற்றுறுசமன்பாடு - சமன் செய்யப்பட்டது.
Mg+ 02→2MgO.
2. முற்றுறாச் சமன்பாடு - சமன் செய்யப்படாதது.
Mg+ 02→MgO
10. மின்னணுப்புள்ளி வாய்பாடு என்றால் என்ன?
வேதிப் பிணைப்புகளின் போது இணைதிறன் மின்னணுக்களே கலந்து கொள்கின்றன. ஆகவே,
அணுக்களை எழுதும் பொழுது குறியீட்டைச் சுற்றி இணைதிறன் மின்னணுக்களை மட்டும் புள்ளியிட்டுக் காட்டினால் போதும். அயனிச்சேர்மங்கள் தோன்றுவதை இவ்வகையில் காட்டுவதே புள்ளி வாய்பாடு ஆகும்.
11. சைன் என்பது என்ன?
இது ஒரு நிலை எண். குறிப்பிட்ட கோணத்தின் எதிர்ப்புயத்திற்கும் கர்ணத்திற்கும் உள்ள வீதம். 1 - 90 பாகைகளுக்குச் சைன்களை அட்டவணையிலிருந்து அறியலாம்.
12. பிஎச் என்பது என்ன?
ஒரு கரைசலிலுள்ள அய்டிரஜன் அயனிச்செறிவின் பத்தடிமானமுள்ள எதிர் மடக்கை (PH+=log10H+)
13. இதன் தன்மை யாது?
ஒர் ஊடகத்தின் காரத்தன்மையையோ காடித் தன்மையையோ காட்டுவது. பிச்7க்குக் கீழிருந்தால் அது காடித் தன்மை.7க்கு மேலிருந்தால் அது காரத் தன்மை.
14. பி.எச். மதிப்பு என்றால் என்ன?
ஒரு கரைசலின் காடித் தன்மையை அளக்கப் பயன்படுவது. நீரின் பி.எச். 7.
15. பிஎச் மதிப்பை எவ்வாறு காணலாம்?
இம் மதிப்பைத் தோராயமாக நிலைகாட்டிகளைக் கொண்டு பெறலாம். மின்வாய் தொகுதிகளைப் பயன்படுத்தி துல்லியமாகக் காணலாம்.
16. பிஎச் மானி என்பது என்ன?
ஒரு கரைசல் அல்லது ஊடகத்தின் பிஎச்சைக் கண்டறியப் பயன்படுவது.
17. பிகே (Pk) என்பது யாது?
பத்தின் அடிமானமுள்ள காடியின் பிரிகை மாறியின் எதிர் மடக்கை. pk=log101/K

18. பிகே மதிப்பு என்றால் என்ன?
மடக்கை வேறுபட்ட காடிகளின் வலுக்களை ஒப்பிடப் பயன்படுவது.
19. பிடிப்பு என்றால் என்ன? ஒரு துகளை மற்றொரு துகள் கவரல் எ-டு. நேர் அயனி மின்னணுவைக் கவர்ந்து அல்லணுவை உண்டாக்குதல்.
20.வடிவமைப்பு (சிஸ்) என்றால் என்ன?
இதில் ஒத்த தொகுதிகளில் ஒன்று மற்றொன்றுக்கருகில் இருக்கும்.
21. உருவமைவு என்றால் என்ன?
1. ஒர் அணுவின் கருவைச் சுற்றி மின்னணுக்கள் அமைந்திருக்கும் முறை. உருவ அமைவுகளில் பல குறியீடுகளால் குறிக்கப் பெறுபவை.
2. ஒரு மூலக்கூறில் அணுக்கள் அணுத்தொகுதிகள் அமைந்திருப்பதையும் இச்சொல் குறிக்கும்.
22. அமைப்பாக்கம் என்றால் என்ன? ஒற்றைப் பிணைப்புகளைச் சுற்றி ஒரு மூலக்கூறின் அணுக்கள் அல்லது அணுத்தொகுதிகள் இயல்பாகச் சுழல்வதால் ஏற்படும் அம்மூலக்கூறின் குறிப்பிட்ட வடிவமே அமைப்பாக்கம் ஆகும். எ-டு பூட்டேனில் இந்த அமைவு காணப்படுகிறது.
23. அமைப்பாக்கி என்றால் என்ன?
அமைப்பாக்கத்தை உண்டாக்கும் வேதிப்பொருள். எ-டு. பூட்டேன்.
24. சுழித்திறன் என்றால் என்ன? இடப்பக்க வடிவமாகவும் வலப்பக்க வடிவமாகவும் இருக்கும் பண்பு. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கு மற்றொன்று ஆடி பிம்பங்கள் போல் தொடர்புடையவை. வேதியியலில் இச்சொல் ஒளி ஒரகச் சீரிகள் (ஆப்டிகள் ஐசோமர்ஸ்) இருப்பதைக் குறிக்கும்.
25. சுழிவரிசை என்பதென்ன?
இது ஒரு வேதிவினை. இதில் வினை வீதம் வினைபடு பொருளின் செறிவைப் பொறுத்ததன்று.
26. சுழிநிலை ஆற்றல் என்றால் என்ன?
ஒரு பொருளின் மூலக்கூறுகள் அல்லது அணுக்கள் 4°K இல் பெற்றிருக்கும் ஆற்றல்.
27. குறைபாடு என்றால் என்ன?
படிகப் பின்னல் அமைவில் துகள்களின் கட்டுக்கோப்பான அமைப்பில் காணப்படும் ஒழுங்கின்மை.
28. இதன் வகைகள் யாவை?
1. புள்ளிக் குறைபாடு.
2. வரிக்குறைபாடு.
29. வினைவளி என்பது யாது?
எரிபொருள். மிக வெப்பமுள்ள நிலக்கரியின் மீது சிறிது நீராவியையும் காற்றையும் செலுத்திப் பெறப்படுவது.
30. விளைபொருள் என்றால் என்ன?
வேதிவினையில் உண்டாகும் புதிய கூட்டுப் பொருள். மக்னீசியத்தைக் காற்றில் எரிக்க மக்னீசியம் ஆக்சைடு
31. இடப்பெயர்ச்சியின் வகைகள் யாவை?
1. காற்றின் கீழ்முகப் பெயர்ச்சி - காற்று கீழ்சென்று இலேசான வளி மேல் வருதல். எ-டு. அம்மோனியா.
2. காற்றின் மேல்முகப் பெயர்ச்சி - காற்று மேல் சென்று கன வளி கீழ்வருதல். எ-டு. குளோரின்.
3. நீரின் கீழ்முகப் பெயர்ச்சி - வளி மேல் சென்று நீரைக் கீழ்த் தள்ளுதல். எ-டு. அய்டிரஜன்.
32.மெழுகுவத்திச் சுடரிலுள்ள நான்கு மண்டலங்கள் யாவை?
1. கருநிற மண்டலம் இதிலுள்ள வளிகள் எரியுந்தன்மை உள்ளவை
2. ஒளிமண்டலம் - இங்குள்ள வளிகள் எரிந்து உண்டாகும் நுண்ணிய இம்மிகள் சூடடைந்து இம் மண்டலத்திற்கு ஒளியைத் தருகின்றன.
3. ஒளிர்வற்ற மண்டலம் - இங்கு வளிகள் முற்றிலும் ஆக்சிஜன் ஏற்றம் அடைகின்றன. ஒளிர்வு குறைவு.
4. நீலநிற மண்டலம் - வெப்பம் மிகுதி. இங்கு எரிதல் நிறைவு பெறுகிறது.
33. செந்தழல் நோக்கி என்றால் என்ன?
கதிர்வீச்சு வெப்பத்தின் செறிவை அளக்கப் பயன்படுங் கருவி.
34. செந்தழல் ஆய்வு என்றால் என்ன?
கனிமங்களைத் தீச்சுடர் மூலம் ஆய்ந்து பார்த்தல்.
35. செந்தழல் பகுப்பு என்றால் என்ன?

மீஉயர் வெப்பநிலைகளுக்கு உட்படுத்தி, வேதிப் பொருள்களைச் சிதைத்தல்.

36. செந்தழல்மானி என்றால் என்ன?

கதிர்வீச்சு விதிகளைப் பயன்படுத்தித் தொலைவிலிருந்து மீவெப்ப நிலைகளைப் பதிவு செய்தல்.

37. செந்தழல் அளவை என்றால் என்ன?

செந்தழல்மானியைக் கொண்டு கதிர்வீச்சு உமிழும் உயர் வெப்பநிலைகளை அளப்பது.

38. அணு என்றால் என்ன?

ஒரு வேதிவினையில் கலந்து கொள்ளும் ஒரு தனிமத்தின் மிகச் சிறிய பகுதி.

39. மூலக்கூறு என்றால் என்ன?

ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மிகச் சிறியதும் அதன் பண்புகளைப் பெற்றதும் தனித்தியங்குவதுமான நிலைத்த துகள் மூலக்கூறுவாகும். எ-டு. நீர். இதில் அய்டிரஜனும் ஆக்சிஜனும் (2:1) உள்ளன.

40. அனுப்பிணைவு என்றால் என்ன?

பருப்பொருள் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள கவரும் ஆற்றல் அவற்றை ஒன்றுபடுத்துகின்றன. பாதரசம் கையில் ஒட்டாததற்கு இதுவே காரணம்.

41. அலகுச் செயல்முறைகள் யாவை?

வேதிமுறைகளில் நன்கு அறியப்பட்ட படி நிலைகளாவன: 1. காய்ச்சி வடித்தல். 2. உப்பீனி ஏற்றம். 3. ஆல்கைலாதல் 4. நைட்ரோ ஏற்றம். 5. வெந்தழல் சிதைவு. 6. தொழிற்சாலை முறையாக்கல். 7. வடிவமைப்பிற்குரிய பயன்பாடு.

42. கருவிவயமாக்கல் என்றால் என்ன?

ஒரு வேதிநிலையத்தினுள் செயல்முறைகளைக் கட்டுப்படுத்தலும் நிலைமைகளை அளத்தலும் ஆகும்.

43. இச்செயலிலுள்ள மூவகைக் கருவிகள் யாவை?

1. நடப்புச் செய்திக்குரிய கருவிகள். பாதரச வெப்பநிலை மானி, எடைமானி, அழுத்த அளவிகள். 
2. பாகியல் பதிவுக் கருவிகள். பாய்ம ஒட்டம், அழுத்தம், வெப்பநிலை ஆகியவற்றை அளப்பவை.
3. நிலைமைகளைக் கட்டுப்படுத்துங் கருவிகள். பருப்பொருள் ஒட்டம், பி.எச். முதலிய நிலைமைகளைக் கட்டுப்படுத்துங்கருவிகள்.

44. தாங்குகரைசல் என்றால் என்ன?

வீறுள்ள காடியையோ படிக மூலியையோ சேர்த்தாலும் பிச் மதிப்பு மாறாத கரைசல். எ-டு. அம்மோனியம் அய்டிராக்சைடு, அம்மோனியம் குளோரைடு.

45. இக்கரைசலின் பயன்கள் யாவை?

1. பிச் மதிப்பை நிலை நிறுத்தும் ஊசி மருந்துகள் செய்ய. 2. தோல் பதனிடும் தொழிலில் பயன்படுதல். 3. உயிரிகளில் தங்கிப் பிஎச் மதிப்பில் ஏற்படும் திடீர் மாற்றங்களுக்கு எதிராகப் பாதுகாப்பளிப்பது.

46. பெல்லிங் கரைசல் என்றால் என்ன?

ஆல்டிகைடு (-CHO) தொகுதியைக் கண்டறிப் பயன்படுவது.