அறிவியல் வினா விடை-வேதியியல்/வேதியியல் துறைகள்
அறிவியல் வினா விடை
வேதியியல்
1. வேதியியல் என்றால் என்ன?
தனிமம், சேர்மம் ஆகியவற்றின் பண்புகளையும் இயல்பையும் ஆராயும் துறை. தவிர இது பொருள்களின் சேர்க்கையையும், அவை ஒன்றின் மீது மற்றொன்று ஆற்றும் வினை ஆகியவற்றையும் ஆராய்வது.
2. இது எவ்வகை அறிவியல்?
ஓர் அடிப்படை அறிவியல்.
3. இதன் முக்கியப் பிரிவுகள் யாவை?
இயற்பியல் வேதியியல், கனிம வேதி இயல், கரிம வேதி இயல் எனப் பலவகை.
4. இரசவாதம் என்றால் என்ன?
இரும்பைப் பொன்னாக்கும் கலை. இடைக்கால வேதி இயல். இதுவே பின் வேதியியலாக வளர்ந்தது.
5. இரசவாதி என்பவர் யார்?
இரும்பைப் பொன்னாக்குபவர். சித்தர்கள் இதில் வல்லவர்கள்.
6. மருந்து வேதிஇயல் என்றால் என்ன?
இடைக்கால வேதி இயல்.சில்வியஸ் என்பவரால் ஆய்ந்து அறிமுகப்படுத்தப்பட்டது. மருத்துவத்தில் மருந்துகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை முதன்மையாக ஆராய்ந்தது.
7. திண்ம வேதியியல் என்றால் என்ன?
மூலக்கூறுகளில் அணுக்களின் இட அமைவு பற்றி ஆராயுந் துறை.
8. தனிம அளவை இயல் என்றால் என்ன?
தனிமங்கள் சேர்மங்களை உருவாக்கும் அளவுகள். 9. இயற்பியல் வேதிஇயல் என்றால் என்ன?
வேதி இயைபில் இயற்பியல் பண்புகளின் சார்பு மற்றும் வேதி வினையில் நிகழும் இயற்பியல் மாற்றங்கள் ஆகியவற்றை ஆராய்வது.
10. கனிம வேதியியல் என்றால் என்ன?
உலோக அலோகத் தனிமங்களையும் அவற்றின் சேர்மங்களையும் ஆராயும் துறை.
11. கரிம வேதியியல் என்றால் என்ன?
அய்டிரோகார்பன்கள் அவற்றின் வழிப்பொருள்கள் ஆகியவற்றை ஆராயும் இயற்பியலின் சிறந்த பிரிவு. கரி வேதியியல் என்றுங் கூறலாம்.
12. உலோகவியல் என்றால் என்ன?
தாதுக்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும் முறைகளை ஆராயும் துறை.
13. தூள் உலோகவியல் என்றால் என்ன?
உயர் வெப்ப நிலைகளில் பல வடிவங்களில் துள் உலோகங்கள் அல்லது கலவைகள் அமைக்கப்படுதலை ஆராய்வது.
14. மின் உலோவியல் என்றால் என்ன?
ஒர் உலோகத்தை அதன் தாதுவிலிருந்து பிரிக்கும் மின் முறைகளை ஆராயுந்துறை.
15. மின் வேதியியல் என்றால் என்ன?
வேதி மாற்றங்களுக்கும் மின்சாரத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை ஆராயுந்துறை.
16. உயிர் வேதிஇயல் என்றால் என்ன?
உயிர்களின் வேதிச்செயல்களையும் வேதிப் பொருள்களையும் ஆராயுந்துறை.
17. கதிரியல் வேதியியல் என்றால் என்ன?
கதிரியக்க ஒரிமங்களை (ஐசோடோப்புகள்) ஆராயுந் துறை.
18. கதிரியக்கத் தனிமம் என்றால் என்ன?
கதிர்வீச்சு ஒரிமம் (ஐசோடோப்பு) எ-டு. சோடியம்-24, அயோடின்-131. ________________________________________________________________________________________________________________________________________________________
19. கதிரியல் ஓரிமம் என்பது என்ன?
நிலையான தனிமத்தின் ஓரிமம்.
20. வெப்ப வேதியியல் என்றால் என்ன?
வெப்ப வினைகளை ஆராயும் வேதியியல் பிரிவு.
21. ஒளிவேதியியல் என்றால் என்ன?
ஒளி அல்லது மின்காந்தக் கதிர்வீச்சினால் உண்டாக்கப்படும் வேதிமுறையை ஆராயுந்துறை.
22. தொழிற்சாலை வேதியியல் என்றால் என்ன?
தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களை ஆராயுந்துறை. ஒரு பயனுறு அறிவியல்.
23. புலி வேதிஇயல் என்றால் என்ன?
புவியின் வேதி இயைபை ஆராயும் புவி அறிவியல்.
24. வேதிப்பொறிஇயல் என்றால் என்ன?
வேதி நிலையங்களை வடிவமைத்து அவற்றைப் பேணுவதை ஆராயுந்துறை.
25. நுண்வேதியியல் என்றால் என்ன?
நுண்ணிய வேதிப் பொருள்களை ஆராயும் வேதியியலின் ஒரு பிரிவு.
26. கண்ணறை வேதிஇயல் என்றால் என்ன?
உயிரணுக்களின் வேதிச் செயல்களை ஆராயும் வேதியியல் பிரிவு.
27. தொழில்நுட்ப வேதியியல் என்றால் என்ன?
நொதித்தல் தொடர்பான சாராயம் காய்ச்சுதல், வடித்தல் முதலிய செயல்களை ஆராயுந்துறை.
28. வேளாண் வேதியியல் என்றால் என்ன?
இது ஓர் பயன்படு அறிவியல். வேளாண்மைக்கு வேதியியலைப் பயன்படுத்துதல். வேதி நோக்கங்களுக்காக வேளாண்மை நடைபெறுதல். எ-டு. தொழிற்சாலைச் சாராயம் தயாரிக்க உருளைக் கிழங்கு பயிர் செய்தல்.
29. வானவெளி வேதிஇயல் என்றல் என்ன?
வான வெளியில் வேதி நிலைமைகளைப் புவித்தொடர்பாக ஆராயுந் துறை. இது 1960களில் தோன்றியது.
30. நிலைத்த விதிகள் வகுத்துத் தந்த வேதியியல் அறிஞர்கள் சிலரைக் கூறுக.
ஆவோகடரோ, டியுலாங்-பெட்டிட் இலவாசியர், ஜான் டால்டன், மெண்டலீஃப்.
31. வேதியியலுக்கு முதன்முதலில் நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஆலந்தைச் சார்ந்த ஜே. எச். வாண்ட் ஆஃப் என்பார் 1901இல் வேதியியல் நோபல் பரிசு பெற்றார்.
32. தற்கால வேதியியல் தந்தை யார்?
இலவாசியர். ஆக்சிஜனுக்கும் அய்டிரஜனுக்கும் அப்பெயரிட்டவர். பிரஞ்சு வேதியியலார்,18ஆம் நூற்றாண்டு.
33. பெம்டோ வேதிஇயல் என்றால் என்ன? இதற்கு நோபல் பரிசு பெற்றவர் யார்?
மீவிரைவு வேதி வினைகளை ஆராய்வது. பேரா. அகமது செவெயில் 1999இல் இதற்காக நோபல் பரிசு பெற்றார்.