அறிவியல் வினா விடை-வேதியியல்/காடியும் காரமும்

விக்கிமூலம் இலிருந்து

7. காடியும் காரமும்

1. காடி(அமிலம்) எனறால் என்ன?

புளிப்புச் சுவையும் அரிக்குந் தன்மையும் பூஞ்சுத்தாளைச் சிவப்பாக்கும் தன்மையும் கொண்டது.

2. பொதுவான மூன்று காடிகள் யாவை?

அய்டிரோ குளேரிகக் காடி, கந்தகக் காடி, நைட்ரிகக் காடி

3. காடியின் இரு வகைகள் யாவை?

1.கனிமக்காடி - கந்தக அமிலம். 2. கரிமக்காடி - பினாயில்.

4. கனிமக்காடி என்றால் என்ன?

கனிம உப்பைக் கொடுப்பது. கந்தக் அமிலம்.

5. சல்பேட் கரிமக்காடி என்றால் என்ன?

கரிமச் சேர்மம். உப்புமூலிக்கு முன்னணுவை ஈனுவது. எ-டு பினால்.

6. கரிம உப்பு மூலி என்றால் என்ன?

ஒரு தனி இணை மின்னணுக்கள் பெற்றிருக்கும் அயனி அல்லது மூலக்கூறு. ஒரு முன்னணுவோடு இணைய வல்லது.

7. கார உப்பு என்றால் என்ன?

இயல்பான உப்புக்கும் அயடிராக்சைடு அல்லது ஆக்சைடுக்கும் இடைப்பட்ட பொருள். எ-டு அய்டிரோ ஆக்சியுப்பு.

8. காடிமை என்றால் என்ன?

புளிப்புத்தன்மை.

9. காடிமை மாறிலி என்றால் என்ன?

காடிப் பிரிகை மாறிலி. பிரிகை வினையின் நடுநிலை மாறிலி.

10. காடிப் பகுப்பு என்றால் என்ன?

காடி வாயிலாக நீரால் பகுத்தல்.

11. காடிமானி என்றால் என்ன?

ஒரு சேமக்கலத்திலுள்ள மின்பகுளியின் ஒப்படர்த்தி காணும் நீர்மானி. 12. காடி எண் என்றால் என்ன?

ஒரு கிராம் பொருளில் தடையில்லாமலுள்ள காடிகளை நடுநிலையாக்கத் தேவைப்படும் பொட்டாசியம் அய்டிராக்சைடின் மில்லிகிராம் எண்ணிக்கை.

13. காடியளவை என்றால் என்ன?

கரைசலிலுள்ள காடியளவை உறுதிசெய்தல்.

14. இது எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது?

கரைசலின் வலுவை அளப்பதன் வாயிலாக இதனை உறுதி செய்யலாம்.

15. அடர்மிகுகாடி என்றால் என்ன?

நீர் சேராத அமிலம். எ-டு அடர் கந்தக அமிலம்.

16. நீர்த்தகாடி என்றால் என்ன?

நீர் சேர்ந்த காடி நீர்த்த கந்தகக் காடி.

17. அரசநீர்மம் (ராஜ திரவம்) என்றால் என்ன?

அடர்அய்டிரோ குளோரிகக் காடியும் அடர்நைட்டிரிகக் காடியும் 3:1 என்னும் வீதத்தில் சேர்ந்த கலவை.

18. இதன் பயன் யாது?

அதிக அரிப்புத்தன்மை உள்ளதால் பொன், பிளாட்டினம் ஆகிய உலோகக் கலவைகளைக் கரைக்கப்படுவது.

19. நைட்டிரிகக் காடி என்பது யாது?

புகையும் நிறமற்ற நீர்மம், மருந்துகள், சாயங்கள், வெடிமருந்துகள் செய்யப் பயன்படுவது.

20. நைட்ரேட்டாதல் என்றால் என்ன?

நைட்ரசமோனாஸ் என்னும் நச்சியம், அம்மோனியாவை நைட்ரேட்டு உப்பாக மாற்றும் செயல்.

20. வெடிகாடி என்பது யாது?

நைட்டிரிகக்காடி

22. வெடிபஞ்சு என்பது யாது?

நைட்ரிகக் காடியையும் கந்தகக் காடியையும் பஞ்சில் சேர்த்துச் செய்யப்படுவது. தரையில் அடித்தாலோ வலுவாக வெப்பப்படுத்தினாலே எளிதில் எரிந்து வெடிப்பது. வெடிபொருள்களில் பயன்படுவது. 23. பிஏஎச் அல்லது பாரா அமினோ கிப்பூரிகக் காடியின் பயன் யாது?

1. கணிம (பிளாஸ்மா) ஒட்டத்தை அளக்க, 2. பொருளின் கணிமச் செறிவையும் சிறுநீர்ச் செறிவையும் உறுதிசெய்யப் பயன்படுவது.

24. காரம் என்றால் என்ன?

கரிப்பு, காரச்சுவை, சிவப்புப் பூஞ்சுத்தாளை நீலமாக்குதல் கொண்ட கனிம வேதிப்பொருள்.

25. காரத்தின் இருவகைகள் யாவை?

1. வன்காரம்- சோடியம் அய்டிராக்சைடு.

2. மென்காரம்- அம்மோனியம் அய்டிராக்சைடு.

26. காரமை என்றால் என்ன?

காரத்தன்மை.

27. பூஞ்சு (லிட்மஸ்) என்றால் என்ன?

தாவரத்தோற்றமுள்ள கருஞ்சிவப்புப் பொருள். காடியில் சிவப்பாகும் காரத்தில் நீலமாகும் இதனால் செய்யப்பட்ட தாள் பூஞ்சுத்தாள் ஆகும்.

28. நடுநிலையாக்கல் என்றால் என்ன?

காடியும் காரமும் ஒன்றை மற்றொன்று சிதைத்துக் கொள்ளும் வினை. இதனால் கிடைப்பது உப்பு.

29. நடுநிலையாக்கி என்றால் என்ன?

காடியை நடுநிலையாக்கும் பொருள். எ-டு சோடியம் இரு கார்பனேட்

30. இதன் பயன் யாது?

பொதுவாக இது காரப்பண்பு அளிக்கும். இரைப்பைத் தூள்களிலும் கலவைகளிலும் பயன்படுவது.

31. உப்பு என்பது என்ன?

காடியும் காரமும் ஒன்றுடன் மற்றொன்று வினைப்படும்பொழுது உண்டாகும் கரிப்புப்பொருள்.

32. உப்பின் வகைகள் யாவை?

1. இயல்பான உப்புகள் - பொட்டாசியம் குளோரைடு.

2. காடியுப்புகள் - சோடியம் இரு கார்பனேட் 3. கார உப்புகள் - காரக்காப்பர் கார்பனேட்

4. கலப்பு உப்புகள்--சோடியம் பொட்டாசியம் சல்பேட்

5. இரட்டை உப்பு - பொட்டாஷ் படிகாரம்.

6. அணைவு உப்புகள் -பொட்டாசியம் பெரோசயனைடு.

33. உப்புத்துண்டு என்பது என்ன?

தொழிற்சாலைச் சோடியம் சல்பேட்