அறிவியல் வினா விடை-வேதியியல்/தனிமம், சேர்மம், கலவை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

8. தனிமம், சேர்மம், கலவை

1. தனிமம் என்றால் என்ன?

மூலகம். ஒரே அணுஎடை கொண்ட அணுக்களால் முழுதுமான பொருள். பொதுவான வேதிமுறைகளால் எளிய பொருள்களாகச் சிதைக்க முடியாது.

2. இதன் வகைகள் யாவை?

1. உலோகம் - இரும்பு. 2. அலோகம் - கரி.

3. நீர்ம நிலையில் இருக்கும் ஒரே உலோகம் யாது?

பாதரசம்.

4. நீர்ம நிலையில் இருக்கும் ஓர் அலோகம் யாது?

புரோமின்

5. அண்மைக் காலம் வரை எத்தனை தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

118 தனிமங்கள்.

6. அன்னில் பெண்டியம், அன்னி ஹெக்சியம் என்பவை யாவை?

அன்னிஸ் பெண்டியம் தனிமம் 105.

அன்னிஸ் ஹெக்சியம் தனிமம் 106.

7. தனிமங்களின் பண்புகள் யாவை?

1. பெரும்பாலும் எளிதில் கடத்திகள்.

2. உலோகம் அலோகம் என இருவகை.

3. திண்ம, நீர், வளி நிலைகளில் இருப்பவை.

4. உலோகப்போலி உண்டு. புறவேற்றுமையும் உண்டு.

5. கம்பிகளாக்கலாம், தகடாக்கலாம்.

8. தனிம இணைவு என்றால் என்ன? மூலக்கூறுகள் உண்டாகத் தனிமம் தன்னை இணைத்துக் கொள்ளுதலும் அவ்வாறு செய்தலுக்குரிய பண்பும் ஆகும்.

9. அல்லோபார் என்றால் என்ன?

இயற்கையில் இல்லாத ஒரு தனிமத்தின் ஒரிமங்களைக் (ஐசோடோப்புகள்) கொண்ட கலவை.

10. ஒப்பளவு என்றால் என்ன?

தனிமங்களிடையே ஒரு தனிமம் இருக்கும் சார்பளவு. காட்டாகப் புவிஒட்டில் ஆக்சிஜனின் அளவு 50%

11. பயனுறுதனிமம் என்றால் என்ன?

உயிரியின் இயல்பான வளர்ச்சிக்குத் தேவையான தனிமங்களுக்குத் தேவையான தனிமங்களில் ஒன்று.

12. ஓரிமம் (ஐசோடோப் என்றால் என்ன?

ஓரிடத்தனிமம். வேறுபட்ட நிறையும் ஒரே அணு எண்ணுங் கொண்ட தனிமத்தின் அணுக்கள். எ-டு செனான் - 135. செனானுக்கு 22 ஓரிமங்கள் உண்டு.

13. ஓரிமத்தின் பயன்கள் யாவை?

1. வேதிவினைகளை ஆராய. 2. மருத்துவத்துறையிலும் வேளாண்துறையிலும் பயன்படுதல். 3. குழாய்களில் எண்ணெய்க் கசிவைக் கண்டறியப் பயன்படுகின்றன. 4. இயக்க ஆய்வுகளில் பயன்படுதல்.

14. ஆஸ்டன் என்பவர் யார்?

1912இல் இவர் தாம் புதிதாகப் புனைந்த நிறை நிறமாலை வரைவியைக் கொண்டு ஓரிமங்களைக் (ஐசோடோப்புகள்) கண்டறிந்தார்.

15. சேர்மம் என்றால் என்ன?

கூட்டுப்பொருள். இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட வீதத்தில் சேர்ந்து உண்டாகும் ஒருபடித்தான கலவை. இதன் பகுதிப் பொருள்களை எளிய இயற்பியல் முறைகளால் பிரிக்க இயலாது. இது வேதிமாற்றத்திற்கு உட்பட்டது. எ-டு நீர், H20. பொதுவாகத் தனிமத்தின் உப்புகள் கூட்டுப் பொருள்களே.

16. சேர்மத்தின் இரு வகைகள் யாவை? 1. கனிமச் சேர்மம் - சோடியம் குளோரைடு.

2. கரிமச் சேர்மம் - சாராயம்

மற்றும் பல சேர்மங்களும் உண்டு.

17. முனைப்படாச் சேர்மம் என்றால் என்ன?

இருமுனைத் திருப்புத்திறன் இல்லாத சேர்மம். எ-டு பென்சீன், கார்பன் நாற்குளோரைடு.

18. நிறைவுறு சேர்மம் என்றால் என்ன?

கட்டவிழ் இணைதிறனில்லாத கரிமச் சேர்மம். இதில் பதிலீட்டுச் செயலினால் அணுக்கள் சேர்தல் நடைபெறுகின்றன.

19. இருபடிச்சேர்மம் என்றால் என்ன?

இருமூலக் கூறுகள் இணைவதால் உண்டாகும் கூட்டுப் பொருள். எ-டு. அலுமினியக் குளோரைடு.

20. முத்தனிமச் சேர்மம் என்றால் என்ன?

மூன்று தனிமங்களிலிருந்து உண்டாகும் கூட்டுப் பொருள். எ-டு சோடியம் சல்பேட்டு.

21. முப்படிச் சேர்மம் என்றால் என்ன?

ஒத்த மூன்று மூலக்கூறுகளைச் சேர்ப்பதால் உண்டாகும் மூலக்கூறு அல்லது சேர்மம்.

22. இடையீட்டுச் சேர்மம் என்றால் என்ன?

இத்தொகுதியில் மாறுநிலைத் தனிமத்தின் ஓர் அணு. இரு ஒருபோக்கு பென்சீன் வளையங்களோடு சேர்க்கப்படுகிறது. எ-டு. பெரோசீனும் அதன் ஒப்புருக்களும்.

23. கரிமக் குளோரின் சேர்மம் என்றால் என்ன? கரி, அய்டிரஜன், குளோரின் ஆகியவற்றைக் கொண்டது.

24. இதில் பூச்சிக்கொல்லிகள் யாவை? BHC, DDT

25. கரிம உலோகச் சேர்மம் என்றால் என்ன?

ஓடும் நிறமற்ற நீர்மம். குறைந்த கொதிநிலை, உலோகம் நேரிடையாகக் கார்பனோடு சேரும்.

26. நுண்படலச் சேர்மம் என்றால் என்ன? மெலிந்த அடுக்குகளைக் கொண்ட படிக அமைப்புள்ள கூட்டுப் பொருள். சிலிகேட்டுகள் இத்தகைய கூட்டுப் பொருள்களை உருவாக்குபவை. எ-டு. டால்க், பைரோபைலட்

27. பலபடிச் சேர்மம் என்றால் என்ன? எளிய மூலக்கூறுகளின் நீள்வரிசை கொண்ட சேர்மம். ஒரே செயல்நிலை வாய்பாடு. ஆனால் அதிக மூலக்கூறு எடை கொண்டது.

28. இதன் வகைகள் யாவை?

1. இயற்கைப் பலபடிச் சேர்மம் - புரதங்கள்.

2. செயற்கைப் பலபடிச் சேர்மம் - பாலிதிலீன்.

29. நீரின் வேதிப்பெயர் என்ன? அய்டிரஜன் ஆக்சைடு, H,O.

30. நீர் என்றால் என்ன? அய்டிரஜனும் ஆக்சிஜனும் 2:1 என்னும் வீதத்தில் கலந்துள்ள கூட்டுப் பொருள்.

31. நீரின் பயன்கள் யாவை?

1. அனைத்துக் கரைப்பான், 2. குளிர்விப்பி. 3. ஆக்சிஜன் கரைந்துள்ளதால் நீர்வாழ் உயிர்களை வாழவைக்கிறது. 4. வேளாண்மைக்குப் பெரிதும் உதவுவது.

32. டியூட்ரியம் என்றால் என்ன? D. இது கன அய்ட்டிரஜன் ஆகும்.

33. கடினத்தன்மை என்றால் என்ன?

கால்சியம், மக்னீசியம் ஆகிய இரு உலோகங்களின் உப்புகள் நீரில் கரைந்திருப்பதால் ஏற்படுவது கடினத்தன்மை.

34. கடினத்தன்மை எத்தனை வகைப்படும்?

இருவகைப்படும். 1. தற்காலிகக் கடினத்தன்மை. 2. நிலைத்த கடினத்தன்மை.

35. தற்காலிகக் கடினத் தன்மை என்றால் என்ன?

கால்சியம், மக்னிசியம் ஆகியவற்றின் இரு கார்பனேட்டுகள் நீரில் கரைந்திருப்பதால் உண்டாகும் கடினத்தன்மை.

36. தற்காலிகக் கடினத்தன்மையை எவ்வாறு போக்கலாம்?  கொதிக்கவைத்தல் மூலமும் கால்சிய அய்டிராக்சைடைச் சேர்ப்பதின் மூலமும்போக்கலாம்.

37. நிலைத்த கடினத்தன்மை என்றால் என்ன?

கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் குளோரைடு, சல்பேட்டு உப்புகள் நீரில் கரைவதால் உண்டாவது.

38. நிலைத்த கடினத்தன்மையை எவ்வாறு போக்கலாம்?

சோடியம் கார்பனேட் பெர்முடிட் ஆகிய இரண்டின் மூலம் போக்கலாம்.

39. கடினத்தன்மையைப் பொறுத்து நீர் எத்தனை வகை?

1. மென்னிர் 2. கடினநீர்.

40. மென்னிர் என்றால் என்ன?

சவர்க்காரத்தைச் சேர்க்க நுரை கொடுக்கும் நீர்.

41. கடினநீர் என்றால் என்ன?

சவர்க்காரத்தைச் சேர்க்க நுரை கொடுக்காதது கடினநீர்

42. கனநீர் என்றால் என்ன? அதன் பயன் யாது?

டியூட்டிரியம் ஆக்சைடு. இதில் அய்டிரஜன் டியூட்டிரியத்தினால் பதிலீடு செய்யப்படுகிறது. н,o+ D,<> D,o +н, அணுஉலைகளில் சீராக்கியாகவும் வளர்சிதைமாற்ற ஆய்வுகளில் துலக்கியாகவும் பயன்படுகிறது.

43. கலவை என்றால் என்ன?

இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் வீத அளவு மாறிச் சேர்ந்தது. தகுந்த இயற்பியல் முறைகளில் இதிலுள்ள பகுதிகளைப் பிரிக்கலாம். எ-டு உப்புக்கரைசல்.

44. காற்று ஒரு கலவையா கூட்டுப் பொருளா?

கலவை

45. கலவைக்கும் சேர்மத்திற்குமுள்ள முக்கிய வேறுபாடுகள் யாவை?

கலவையில் பகுதிகள் குறிப்பிட்ட வீதத்தில் இரா. சேர்மத்தில் குறிப்பிட்ட வீதத்தில் இருக்கும். கலவையில் நடைபெறுவது இயல்பு மாற்றம். சேர்மத்தில் நடைபெறுவது வேதிமாற்றம்.

46. இயைபுறுப்பு என்றால் என்ன? ஒரு கலவையிலுள்ள தனிம வேதிப் பொருள்களில் ஒன்று. இக்கலவையில் வேதிவினை நிகழாது. எ-டு நீர் பனிக்கட்டி சேர்ந்த கலவை. ஒர் இயைபுறுப்பு கொண்டது. நைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்த கலவை. இரு இயைபுறுப்புகள் கொண்டது.

47. ஊறித்தல் (லீச்சிங்) என்றால் என்ன?

கரைபொருளைக் கரைப்பானைக் கொண்டு வெளுத்தல்.

48. நீர்மக் காற்று என்றால் என்ன?

வெளிறிய நீலநிறமுள்ள காற்று. முதன்மையாக நீர்ம ஆக்சிஜனையும் நீர்ம நைட்ரஜனையும் கொண்டது.

49. நற்கலவை என்றால் என்ன?

உறைநிலை மாறாக் கலவை. இரு பொருள் குறிப்பிட்ட வீதத்தில் அமைந்திருப்பதால், அதே பொருளைக் கொண்ட மற்ற எந்தக் கலவையும் குறைந்த உருகுநிலையைக் கொண்டிராது.

50. கரைசல் என்றால் என்ன?

கரைப்பானும் கரைபொருளும் சேர்ந்த ஒருப்படித்தான கலவை.

51. கரைசலின் வகைகள் யாவை?

1. நிறைவுறுகரைசல் - குறிப்பிட்ட வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் கரைப்பானில் கரைய வேண்டிய அளவுக்குக் கரைபொருள் கரைந்து அதில் கொஞ்சம் கரைபொருள் தங்குதல்.

2. நிறைவுறாக் கரைசல் - அவ்வாறு தங்காத கரைசல்.

52. கரைப்பான் என்றால் என்ன?

கரையவைக்கும் பொருள். நீர்.

53. கரைபொருள் என்றால் என்ன?

கரைப்பானில் கரையும் பொருள்.

54. உப்பு கரைப்பான் விரும்பும் கூழ்மம் என்றால் என்ன?

ஒரு நீர்மத்தில் கூழ்மத் தொங்கலில் எளிதில் சேரும் பொருள்.

55. கரைப்பான் வெறுக்கும் கூழ்மம் என்றால் என்ன?

கூழ்ம நிலையில் இருக்கும் பொருள். ஆனால், நீர்மங்களை விலக்குவது.

56. இயல்பு வெப்பநிலையும் அழுத்தமும் என்றால் என்ன?

இயல்பு வெப்பநிலை 273"°, அழுத்தம் 76 செ.மீ. NTP.

57. அனைத்துக் கரைப்பான் என்பது எது? நீர்.

58. சில கரைப்பான்கள் கூறு.

பெட்ரோல், கார்பன் இரு சல்பைடு, ஆக்சாலிகக் காடி

59. கையில் வண்ணக்குழைவு பட்டுள்ளது. அதைப் போக்கும் கரைப்பான் யாது?

மண்ணெண்ணெய்.

60. கரைசலை விரைவாக்கும் வழிகள் யாவை?

1. கரைபொருளைப் பொடி செய்து நீரில் போடுதல், 2. குலுக்குதல். 3. வெப்பப்படுத்தல்.

61. கரைவை என்றால் என்ன?

இதில் கரைபொருளும் கரைப்பானும் திட்டமாகச் சேர்ந்திருக்கும்.

62. கரைதிறன் என்றால் என்ன? குறிப்பிட்ட வெப்பநிலையில் 100 கிராம் கரைப்பானை நிறைவுள்ள கரைசலாக்குவதற்குத் தேவையான கரைபொருளின் கிராமின் எடை.

63. கரைவை நாட்டம் என்றால் என்ன?

கரைப்பானிலுள்ள மூலக்கூறுகளைக் கரைசலிலுள்ள அயனிகள் கவர்தல்.

64. கரைப்பான் பகுப்பு என்றால் என்ன?

ஒரு சேர்மத்திற்கும் கரைப்பானுக்கும் இடையே நடைபெறும் வினையில் சேர்மம் கரைதல்.

65. சால்வே முறை என்பது யாது?

அம்மோனியா சோடா முறை. சோடியம் கார்பனேட்டை உருவாக்கும் தொழில்முறை.

66. கொதிநிலை மாறாக் கரைசல் என்றால் என்ன?

நீரில் அய்டிரோகுளோரிகக் காடிக்கரைசல். இது இயைபில் மாற்றமின்றிக் கொதிப்பதால் அதன் கொதிநலையிலும் அதைத் தொடர்ந்து எவ்வகை மாற்றமும் இல்லை.

67. நீரற்ற கரைசல் என்றால் என்ன?

கரைப்பான் நீராக இல்லாத கரைசல். இக்கரைப்பான் கனிமமாகவே கரிமமாகவோ முன்னணு சார்ந்ததாகவோ

68. திட்டக்கரைசல் என்றால் என்ன?

பருமனறிபகுப்பில் பயன்படும் செறிவு தெரிந்த கரைசல்.

69. சுல்லட் கரைசல் என்றால் என்ன?

பொட்டாசியம் அயோடைடும் துத்தக்குளோரைடும் அயோடினும் சேர்ந்த கரைசல்.

70. வெடிதூள் என்றால் என்ன?

வீட்டுக்கரி, கந்தகம், பொட்டாசியம் நைட்ரேட் சேர்ந்த வெடிகலவை.

71. உருகுகலவை என்றால் என்ன?

நீரற்ற பொட்டாசியம் கார்பனேட்டு, சோடியம் கார்பனேட்டு ஆகிய இரண்டும் சேர்ந்த கலவை.