அறிவியல் வினா விடை-வேதியியல்/படிகம்

விக்கிமூலம் இலிருந்து

9. படிகம்

1. படிகம் என்றால் என்ன?

திண்மப் பொருள். இதன் அணுக்கள் திட்டமான வடிவியல் கோலத்தில் இருக்கும்.

2. படிகமாதல் என்றால் என்ன?

படிகம் உண்டாகும் முறை.

3. படிகவியல் என்றால் என்ன?

படிகங்களின் அமைப்பு, வடிவம், பண்புகள் ஆகியவற்றை ஆராயுந்துறை.

4. படிகத்தொகுதி என்றால் என்ன?

படிகங்கள் தம் அலகு அணுக்களின் வடிவ அடிப்படையில் பிரிந்திருத்தல்.

5. படிகமாதல் நீர் என்றால் என்ன?

பலபடிகங்களில் வேதிமுறையில் நீர் சேர்ந்திருத்தல் - வெப்பப்படுத்தல் மூலம் இதை நீக்கலாம். படிகம் தன் பண்பை இழக்கும்.

6. குறிக்கோள் படிகம் என்றால் என்ன?

இது ஒரு பின்னல் கோவை. ஒழுங்காகவும் அயலணுவாகவோ அயனியாகவோ இல்லாமலிருக்கும் படிகம்.

7. குறிக்கோள் கரைசல் என்றால் என்ன?

கலக்கும்பொழுது உள்ளாற்றல் மாற்றமில்லாமலும் அதன்பகுதிகளுக்கிடையே கவர்ச்சி விசை இல்லாமலும் இருக்கும் கரைசல்.

8. தாய்நீர்மம் என்றால் என்ன?

படிகங்கள் தோன்றிய பின் எஞ்சியுள்ள கரைசல்.