அறிவியல் வினா விடை-வேதியியல்/பல் வகை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

14. பல்வகை

1. கிமு 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய வேதியியலார் யார்?

நாகார்கனர்

2.இந்தியத் தொழில் துறை வேதியியலின் தந்தை யார்?

பி. சி. ரே

3. இவர் கண்டுபிடித்த வேதிப்பொருள் என்ன?

மர்க்குரஸ் நைட்ரேட்

4. இவர் எழுதிய சிறந்த வேதிநூல் எது?

இந்து வேதியியல்

5. குறிப்பிடத்தக்க இந்திய வேதியியலார் யார்?

சி.என். இராவ். திண்ம வேதியியலை ஆராய்ந்தவர்.

6. ஜி. என். இராமச்சந்திரன் பங்களிப்பின் சிறப்பு என்ன?

நோபல் பரிசு பெறத்தக்க அளவுக்குச் சிறப்பு வாய்ந்த தமிழ் நாட்டு இயற்பியலார். இவர் ஆராய்ந்த துறை மூலக்கூறு உயிர் இயற்பியல். கொல்லேஜன் என்னும் புரதத்தை ஆராய்ந்து புகழ் பெற்றவர். இவர் சர். சி. வி. இராமனின் மாணாக்கர்.

7. ஆக்சிஜனைக் கண்டறிந்தவர் யார்?

பிரிஸ்ட்லி , 1774.

8. இலவாசியர் பெயரிட்ட வளிகள் யாவை?

ஆக்சிஜன், 1779. ஈலியம், 1786.

9. குளோரின் ஒரு தனிமம் என்று காட்டியவர் யார்?

டேவி, 1810.

10. வெப்ப வேதியியலை நிறுவியவர் யார்?

ஹென்றி ஹெஸ், 1840,

11. ரேடியத்தை கண்டறிந்தவர் யாவர்?

குயூரி தம்பதிகள், 1898.

12. கதிரியக்கம் என்னும் சொல்லை உருவாக்கியவர் யார்?

மேரி குயூரி, 1898.

13. மேரி குயூரி பிரித்தறிந்த உலோகம் எது?

பொலோனியம், 1898.

14. ஹென்றி மோஸ்லி ஆய்வுகள் உறுதி செய்தது என்ன?

தனிம வரிசை அட்டவணையில் ஓர் ஒழுங்குள்ளது, 1913.

15. ஆஃபினியத் தனிமத்தைக் கண்டறிந்தவர் யாவர்?

டிர்க் காஸ்டர், ஜியார்கி ஹெவிசே, 1923.

16. செயற்கை உலோகங்கள் யாவை?

இவை நாடா போன்ற பலபடிச்சேர்மங்கள். ஆய்வு நிலையில் உள்ளவை. எதிர்காலத்தில் உலோகங்களையும் அரைகுறைக்கடத்திகளையும் மின்னணுக் கருவிகளில் மாற்றிடு செய்ய வல்லவை (1994)

17. மூலக்கூறு உலோகக் கலவைகள் என்றால் என்ன?

கரிம மூலக்கூறுகளிலிருந்து பெறப்படுபவை. நிலை வெப்பக்கருவி ஒன்று இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

18. கூடுகை வேதியியல் என்றால் என்ன?

இது ஒரு நுணுக்கம். மூலக்கூறுகள் வரம்பற்றுச் சேர்வதை அனுமதிப்பது. இதனோடு தொடர்புடையவை கூடுகை முறையும் கூடுகை நுணுக்கமும் ஆகும்.

19. நுண்ணலை வேதியியல் என்றால் என்ன?

நுண்ணலைகள் பற்றி ஆராயும் துறை.

20. மீமூலக்கூறு வேதியியல் என்றால் என்ன?

முழு மூலக்கூறுகளுக்கிடையே உள்ள விசைகளை ஆராயும் துறை.

21. ஹூண்ட் விதி யாது?

ஒரு வெற்றுப் பரிதியம் (ஆர்பிட்டல்) கிடைக்கும் வரை, எந்த ஒரு முன்னனுவும் முன்னரே ஒரு மின்னணு இடங்கொண்ட பரிதியத்தில் சென்று இரட்டையாகாது.

22. பொது உப்பு என்றால் என்ன?

சாப்பாட்டு உப்பு, சோடியம் குளோரைடு.

23. சல்பைடு என்றால் என்ன?

கந்தகக் கூட்டுப்பொருள். எ-டு கரி இரு சல்பைடு.

24. சல்பைட் என்றால் என்ன?

கந்தசக் காடி உப்பு. எ-டு கால்சியம் இரு சல்பைட்

25. சல்பேட் உப்பு என்றால் என்ன?

கந்தகக் காடி உப்பு. எ-டு துத்தநாகச் சல்பேட் சிலி வெடியுப்பு என்றால் என்ன? சோடியம் நைட்ரேட் உரம்.

26. சயனோதூள் என்றால் என்ன?

கால்சியம் சயனைடு உள்ள நேர்த்தியான கறுப்புத்தூள் எலிவளைகளில் புகையூட்டும் பொருள்.

28. உலர்த்தும் எண்ணெய் என்றால் என்ன?

தாவர அல்லது விலங்கெண்ணெய்கள் காற்றில் பட்டு உறைபவை. இவை இயற்கை எண்ணெய்கள். வண்ணக்குழைவுகளில் பயன்படுபவை.

29. பண்படா எண்ணெய் என்றால் என்ன?

தூய்மை செய்யப்படாத பெட்ரோலியம் ஆகும்.

30. கிரிப்டால் என்றால் என்ன?

கிராபைட் குருந்தக்கல், களிமண் ஆகியவை சேர்ந்த கலவை. மின் உலைகளில் மின்தடையாகப் பயன்படுவது.