அறிவியல் வினா விடை - விலங்கியல்/நோபல் பரிசுகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

15. நோபல் பரிசுகள்

1. தொண்டை அடைப்பானுக்கு எதிர் நச்சைக் கண்டறிந்தவர் யார்?

அடால்ப் வான் பெரிங் 1901 இல் நோபல் பரிசுப் பெற்றார்.

2. காலரா என்புருக்கி நோய் ஆகிய இரண்டையும் தோற்றுவிக்கும் நுண்ணுயிரைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

இராபர்ட் காச் 1905 இல் நோபல் பரிசு பெற்றார்.

3. பிளாஸ்மோடியத்தைக் கண்டுபிடித்தற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

லூயி லெவரன் 1907இல் நோபல் பரிசு பெற்றார்.

4. கட்டிலா நொதித்தல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

எட்வர்டு புக்னர் 1907 இல் நோபல் பரிசு பெற்றார்.

5. தடுப்பாற்றல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

பால் எரிலிச் 1908 இல் நோபல் பரிசு பெற்றார்.

6. கண்ணறை வேதியியலை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஆல்பிரட் கோசல் 1910 இல் நோபல் பரிசு பெற்றார்.

7. தடுப்பாற்றல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஜீல்ஸ் பார்டெட் 1919 இல் நோபல் பரிசு பெற்றார்.

8. தசையில் வெப்பம் உண்டாவதை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஆர்க்கிபால்டுவிவியன் 1922இல் நோபல் பரிசு பெற்றார்.

9. இன்சுலின் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற இருவர் யார்?

சர் பேண்டிங், மாக்லியாடு ஆகிய இருவரும் 1923இல் பெற்றனர்.

10. பித்தநீர்க்காடியை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஹெயின்ரிச் விலேண்ட் 1927இல் நோபல் பரிசு பெற்றார்.

11. வைட்டமின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

அடால்ப் ஆட்டோ ரெயின்சால் 1928இல் பெற்றார்.

12. நொதித்தல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

சர் ஹார்டன் ஆர்தர் 1929இல் நோபல் பரிசு பெற்றார்.

13. வளர்ச்சியை ஊக்குவிக்கும் வைட்டமின்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

சர் பிரடெரிக் கெனலாண்ட் ஹாப்கின்ஸ், சி.ஈ. எய்ஜக்மன் ஆகிய இருவரும் 1929இல் நோபல் பரிசு பெற்றனர்.

14. நரம்பு நோய் நீக்கும் வைட்டமின்களைக் கண்டுபிடித் ததற்காக (வைட்டமின் B தொகுதி) நோபல் பரிசுபெற்றவர் யார்?

கிறிஸ்டியன் எய்ஜக்மன் 1929இல் நோபல் பரிசுபெற்றார்.

15. நரம்பு முனைகளில் நீர்ச்செலுத்திகள் பற்றிக் கண்டறிந்த- தற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

டாக்டர் உல்ப் வான் யூலரி 1929இல் நோபல் பரிசு பெற்றார்.

16. நொதித்தல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

ஹேன்ஸ் வான் யூலர் செல்பின், ஹார்டின் ஆகிய இருவரும் 1929இல் நோபல் பரிசு பெற்றனர்.

17. மனிதக் குருதி வகைகளைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 1930இல் நோபல் பரிசு பெற்றார்.

18. மூச்சு நொதிக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

வார்பர்க் 1931இல் நோபல் பரிசு பெற்றார்.

நரம்பணு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

கோமகன் எட்கர் டவுக்லாஸ் ஆண்ட்ரியன் 1932இல் நோபல் பரிசு பெற்றார்.

20. கருவளர்ச்சி அமைப்பி விளைவைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஹேன்ஸ் ஸ்பெமன் 1935இல் நோபல் பரிசுபெற்றார்.

21. நரம்புத் துடிப்புகளில் வேதிச்செயல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர்கள் யார்?

ஆட்டோ லோவி, டேல் ஆகிய இருவரும் 1936இல் நோபல் பரிசுபெற்றனர்.

22. நரம்புத் துடிப்புகள் வேதிமுறையில் செயற்படுவதை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

சர் ஹென்றி ஹேலப்ட் 1936இல் நோபல் பரிசு பெற்றார்.

23. உயிரியல் கனற்சிச் செயல் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

வான் நாகிரியாடோல்ட் 1937இல் நோபல் பரிசுபெற்றார்.

24. வைட்டமின் A1 B2 ஆகியவற்றை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

பால் கேரர் 1937இல் நோபல் பரிசு பெற்றார்.

25. வைட்டமின் C ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

சர் வால்டா நார்மன் ஹாவொர்த், பி. பால்ஹேரர் ஆகிய இருவரும் 1937இல் நோபல் பரிசு பெற்றனர்.

26. வைட்டமின் B2 ஐ முதன் முதலில் ஆராய்ந்து நோபல் பரிசு பெற்றவர் யார்?

ரிச்சர்டுசன் 1938இல் நோபல் பரிசு பெற்றார்.

27. ஜி வடிவப் புரதங்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

ஆல்பிரட் கில்மன், ராட்பெல் ஆகிய இருவரும் 1941இல் நோபல் பரிசு பெற்றனர்.

28. வைட்டமின் K இன் வேதித்தன்மையைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

எட்வர்டு அடல்பெர்ட் டாய்சி 1943இல் நோபல் பரிசு பெற்றார்.

29. வைட்டமின் K கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஹென்ரிக் கார்ல் பீட்டர் டேம் 1943இல் நோபல் பரிசு பெற்றார்.

30. ஒரு தனி நரம்பிழையின் வேலை வேறுபாட்டைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

ஜோசப் எர்லேங்கர் 1944இல் நோபல் பரிசு பெற்றார்.

31. ஒற்றை தரம்பிழைகளின் வேறுபட்ட வேலைகளைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசுபெற்ற இருவர் யார்?

ஹெர்பர் ஸ்பென்சர் காசர், எல்லிங்கர் ஆகிய இருவரும் 1944இல் நோபல் பரிசு பெற்றனர்.

32. ஊட்ட இயல் வேளாணியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

ஆர்ட்டுரி இல்மாரி விர்டானன் 1945இல் நோபல் பரிசு பெற்றார்.

33. பெனிசிலின் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசுபெற்ற மூவர் யார்?

சர் அலெக்சாண்டர் பிளிமிங், செயின், புளோரே ஆகிய மூவரும் 1945இல் நோபல் பரிசு பெற்றனர்.

34. தூய வடிவத்தில் நச்சுயிர்ப் புரதங்களையும் நொதிகளையும் உருவாக்கியதற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

வெண்டல் மெரிடித் ஸ்டேன்லி, சம்னர் ஆகிய இருவரும் 1946இல் நோபல் பரிசுபெற்றனர்.

35. சடுதி மாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

ஹெர்மன் ஜோசப் முல்லர் 1946இல் நோபல் பரிசு பெற்றார்.

36. கிளைகோஜன் என்னும் ஸ்டார்ச்சை நொதிமூலம் மாற்றியதற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

கார்ல் பாடினாண்ட் கோரி 1947 இல் தம் மனைவி தெரசாவுடன் நோபல் பரிசு பெற்றார். அதாவது இப்பரிசு இருவருக்கும் கிடைத்தது.

37. மூளையடிச் சுரப்பி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

பர்னார்டோ ஆல்பர்ட்டோ ஹவ்சே, சிடி கோரி, சிஎப். கோரி ஆகிய மூவரும் 1947இல் நோபல் பரிசு பெற்றனர்.

38. டீடீடி கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

பால் ஹெர்மன் முல்லர் 1948இல் நோபல் பரிசு பெற்றார்.

39. நடுமூளை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

ரூடால்ப் வால்டர் ஹெஸ் 1949இல் நோபல் பரிசு பெற்றார்.

40. அட்ரினல் சுரப்பி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

பிலிப் ஷோ வால்டர் ஹென்ச், ஈசி. கெண்டால், டி ரிச்டெ யின் ஆகிய மூவரும் 1950இல் நோபல் பரிசுபெற்றனர்,

41. ஸ்டெப்டோமைசின் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

வாக்ஸமன் 1952இல் நோபல் பரிசு பெற்றார்.

42. இடைநிலை வளர்சிதை மாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

பிரிட்ஸ் ஆல்பர்ட் லிப்மன் 1953இல் நோபல் பரிசு பெற்றார்.

43. ஆக்சிஜன் ஏற்ற நொதிகளின் செயல் பற்றிய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஆக்சல் ஹீயுகோ தியோடர் தியோரெல் 1955இல் நோபல் பரிசு பெற்றார்.

44. பாலிஸப்டைடு வளர்தூண்டியை முதன்முதலாகத் தொகுத்தவர் யார்? இதற்காக நோபல் பரிசு எப்பொழுது பெற்றார்?

வின்சண்ட் டியு விக்னியாட்டு. 1955இல் நோபல் பரிசு பெற்றார்.

45. நம் உடல்பொருள்களை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

டேனியல் போவட் 1957இல் நோபல் பரிசு பெற்றார்.

46. மரபணுக்களின் வேதிநிகழ்ச்சி ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

ஜாஜ்வெல்ஸ் பீடில் 1958இல் நோபல் பரிசுபெற்றார்.

47. மரபணுக்கள் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

டாட்டம், பீடில், லெடர்பாக் ஆகிய மூவரும் 1958இல் நோபல் பரிசு பெற்றனர்.

48. செயற்கைத் தடுப்பாற்றல் தாங்குதிறனைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

சர் பிராங்க் மாகபர்லேன் பர்னே 1960இல் நோபல் பரிகபெற்றார்.

49. ஈட்டிய தடுப்பாற்றலை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

சர் பீட்டர் பிரையன் மெடவார், பாடைட் ஆகிய இருவரும் 1960 நோபல் பரிசு பெற்றனர்.

50. காதுநத்தை எலும்பின் தூண்டுதல் பொறிநுட்பத்தைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர்.

ஜாஜ் வான் பொக்சி 196இல் நோபல் பரிசுபெற்றார்.

51. கோளவடிவப் புரதங்களை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

சர் ஜான் கௌடெரி கெண்ட்டு, பெருட் ஆகிய இருவரும் 1962இல் நோபல் பரிசு பெற்றனர்.

52. நரம்பணுப் படலத் தூண்டல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

சர் ஜான் கேரியூ எக்லெஸ் 1963இல் நோபல் பரிசு பெற்றார்.

53. கண்ணறைப் படல ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஆலன் லாய்டு ஹாட்கின் 1963இல் நோபல் பரிசு பெற்றார்.

54. கொழுப்பு வளர்சிதை மாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

பியோடர் லைனன், பிளாக் ஆகிய இருவரும் 1964இல் நோபல் பரிசுபெற்றனர்.

55. ஹரிகோவிந்து கொரோனா செய்த அரும்பணி யாது?

ஒரு செயற்கை மரபணுவை முதன்முதலில் உருவாக்கினார். இது நல்ல செயற்பாடு உடையது. இதற்காக இவர் 1968இல் நோபல் பரிசு பெற்றார். இவர் இந்திய அறிவியலார் என்பது குறிப்பிடத்தக்கது.

56. புரதத் தொகுப்பில் மரபுக்குறித் தொகுதியின் வேலை பற்றி ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

மார்ஷல் நிரன்பர்க், ஹாலி, கொரேனா ஆகிய மூவரும் 1968இல் நோபல் பரிசு பெற்றனர்.

57. மரபணுவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

சால்வேடார் லூரியா, டெல்பிரக், ஹெர்ஷே ஆகிய மூவரும் 1969இல் நோபல் பரிசு பெற்றனர்.

58. வளர்தூண்டிகளின் பொறிநுட்ப ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஏர்ல் சதர்லேண்டு 1971இல் நோபல் பரிசுபெற்றார்.

59. ரிபோ உட்கரு மூலக்கூறின் வினையூக்கம், வேதியமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்ததற்காக, நோபல் பரிசு பெற்றவர் யார்?

வில்லியம் ஸ்டெயின் 1972இல் நோபல் பரிசு பெற்றார்.

60. எதிர்ப்புப் பொருள்களின் வேதியமைப்பை ஆராய்ந்த தற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஜெரால்டு டெல்மன் 1972இல் நோபல் பரிசு பெற்றார்.

61. உயிரணு பற்றிப் புது உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

ஆல்பர்ட் கிளாடி 1974இல் நோபல் பரிசு பெற்றார்.

62. கண்ணறை அமைப்பு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஜார்ஜ் பேலேடு 1974இல் நோபல் பரிசு பெற்றார்.

63. உயிரணுவின் மரபுப்பொருள், கட்டி நச்சுயிரி ஆகிய இரண்டிற்குமுள்ள தொடர்பை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ரெனட்டே டல்பெக்கோ 1975இல் நோபல் பரிசுபெற்றார்.

64. மூளையில் பெப்டைடு தூண்டி உண்டாவதைக் கண்ட றிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

ரோஜர் கில்லிமின், ஷேலி ஆகிய இருவரும் 1977இல் நோபல் பரிசு பெற்றனர்.

65. பெப்டிக் தூண்டியின் கதிரியக்கத் தடுப்பாற்றலை மதிப்பீடு செய்ததற்காக நோபல் பரிசு பெற்ற பெண்மணி யார்?

ரோசலின் யாலோ 1977இல் நோபல் பரிசுபெற்றார்.

66. வரம்பு நொதிகள் மற்றும் மூலக்கூறு மரபணுவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

வெர்னர் ஆர்பர் 1978இல் நோபல் பரிசு பெற்றார்.

67. மரபுவழிப் பொருள் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

பருஜ் பெனாசரப் 1980இல் நோபல் பரிசுபெற்றார்.

68. உயிரணு மேற்பரப்பில் மரபணு வழியமைந்த அமைப்பைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஜீன் டாசெட் 1980இல் நோபல் பரிசுபெற்றார்.

69. உட்கரு காடிகள் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

வாலர்டர் கில்பர்ட் 1980இல் நோபல் பரிசு பெற்றார்.

70. பெருமூளை அரைக்கோள ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

ரோஜர் ஸ்பெரி, ஹியூபல், டார்ஸ் ஆகிய மூவரும் 1981இல் நோபல் பரிசு பெற்றனர்.

71. வினையாற்றலுள்ள உயிரியல் பொருள்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

சர் ஜான் வேன் 1982இல் நோபல் பரிசு பெற்றார்.

72. வளர்ச்சிக் காரணிகள் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஸ்டேன்லி கோகன் 1986இல் நோபல் பரிசுபெற்றார்.

73. நச்சுயிரித் தன்மையுள்ள கட்டிகளை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

ஹேரோல்டு லார்மஸ், பிஷன் ஆகிய இருவரும் 1989இல் நோபல் பரிசு பெற்றனர்.

74. உயிரணுக்களின் தனி அயனி வழி வேலைக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

எர்வின் நெதர், சாக்மன் ஆகிய இருவரும் 1991இல் நோபல் பரிசுபெற்றனர்.

75. கண்ணறை வளர்சிதை மாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

பிஷர், கிரப்ஸ் ஆகிய இருவரும் 1992இல் நோபல் பரிசு பெற்றனர்.

76. பாலிமரேஸ் தொடர்வினைக்காக நோபல் பரிசு பெற்றவர் யார் ?

கேரி மில்லிஸ் 1993இல் நோபல் பரிசுபெற்றார்.

77. பிளவு மரபணுக்களைத் தனித்தனியாகக் கண்டறிந்தவர்கள் யார்? இவர்களுக்கு இதற்காக எப்பொழுது நோபல் பரிசு கிடைத்தது?

பிலிப் ஷார்ப், இராபர்ட்ஸ் ஆகிய இருவரும் 1977இல் கண்டறிந்தவர். இதற்காக 1993இல் 16 ஆண்டுகள் கழித்து நோபல் பரிசு பெற்றனர்.

78. பெருமூலக்கூறுகளின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

பால் ஜே. புஸோரே 1994இல் நோபல் பரிசு பெற்றார்.

79. தொடக்கக் கருவளர்ச்சியின் மரபுக் கட்டுப்பாட்டை அறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

வோல்கார்டு, டாக்டர் கிறிஸ்டியானி லூயிஸ், வீசக்ஸ் ஆகிய மூவரும் 1995இல் நோபல் பரிசு பெற்றனர். இவர்களில் கிறிஸ்டியாணி நோபல் பரிசு பெற்ற பத்து மகளிரில் ஒருவர்.

80. கருவளர்ச்சி மரபணுக் கட்டப்பாடு குறித்து ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

எட்வர்டு பி. லூயிஸ், வோல்கார்டு, வீசக்சு ஆகிய மூவரும் 1995இல் நோபல் பரிசு பெற்றனர்.

81. உயிரணுவழி அமையும் தடுப்புப் பாதுகாப்பைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்?

பீட்டர் டோகெர்டி 1996இல் நோபல் பரிசு பெற்றார்.

82. நோய்த் தடுப்பாற்றல் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

சிங்கர்னாஜெல், டெகார்டி ஆகிய இருவ்ரும் 1996இல் நோபல் பரிசு பெற்றனர்.

83. நொதிகளின் மூலக்கூறு தன்மையை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

வாக்கர், பாயர் ஆகிய இருவரும் 1997இல் நோபல் பரிசு பெற்றனர்.

84. புரதங்களின் உள்ளார்ந்த குறிகாட்டு இயல்பு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

டாக்டர் குன்டர் புளோபல் 1999இல் நோபல் பரிசு பெற்றார்.

85. நரம்பு மண்டலக் குறிபாட்டு ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற மூவர் யார்?

பால் கிரின்லாண்ட், கார்ல்சன், கண்டல் ஆகிய மூவரும் 2000இல் நோபல் பரிசு பெற்றனர்.

86. கண்ணறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்ற மூவர் யார்?

லீலேண்ட் ஹார்ட்வெல், டிமோதி, பால் நர்ஸ் ஆகிய மூவரும் 2001இல் நோபல் பரிசு பெற்றனர்.

சில பறவைகளின் பொதுப்பெயர்கள்

அடைக்கலாங் குருவி, ஊர்க்குருவி- Indian house sparrow

அண்டங்காகம்-Jungle crow

ஆட்காட்டி- Indian courser. lapwing

ஆந்தை-Bay owl

ஆலா-Fishing eagle, White bellied sea-eagle

ஆறுமணிக் குருவி தோட்டக்கள்ளன்- Indian pitta

ஆற்றுக்குருவி-Tern

இரட்டைச் சொண்டுக்குருவி இருவாய்க்குருவி-Hornbill

இராசதாரா-Quacking duck, Cotton teal

இராசாளி கழுகு- Hawk eagle

ஈப்பிடிப்பான்- கட்டலான் குருவி உண்ணிக்கொக்கு, குருட்டுக்கொக்கு-Cattle egret; Heron or paddy bird

உப்புக்கொத்தி-Little ringed plover

உமிப்புறா- சாம்பற்புறா உழவாரக்குருவி- Palm Swift

உள்ளான்குருவி- Snipe

ஊதியக்காரக்குருவி (குயில்)-Common hawk Cuckoo

ஊமத்தங்கூவை- Browb fish owl

ஊர்க்குருவி எருத்துவால் குருவி கொண்கை கரிச்சான்- Drongo

கடல் ஆலா- White-billed sea eagle

கடல் குருவி-Tern, Gull

கட்டலான் குருவி-பஞ்சாங்கம் பிராமணக்குருவி-Blue tailed bee eater

கரிக்குருவி-Ceylon blackbird

கருங்குருவி-Indian robin

கருநாரை-Open bill

கல்லுக்குருவி-Pied bush-chat

கல்லுப்பொறுக்கி- Stint

கவுதாரி-Patridge