அறிவியல் வினா விடை - விலங்கியல்/விலங்குகளின் தொழில் நுட்பவியல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

13. விலங்குகளின் தொழில்நுட்பவியல்

1. படியாக்கம் என்றால் என்ன?

ஓர் உயிரின் நகலை டிஎன்ஏ வழி கருப்பையிள் வளர்த்து உண்டாக்கல். எ-டு டோலி செம்மறியாடு.

2. சார்லஸ் வெயிஸ்மன் செய்த அரும் பணி யாது?

குச்சி வடிவ உயிரியல் மனித இண்டர் பெரானை வெற்றி தரும் வகையில் 1980 இல் உருவாக்கிக் காட்டினார்.

3. ஸ்டீன் வில்லாட்சன் செய்த அருந்செயல் யாது?

1984 இல் வெற்றிதரும் வகையில் செம்மறியாட்டைப் படியாக்கம் செய்தார்.

4. முதன் முதலில் படியாக்கம் செய்யப்பட்ட விலங்கு யாது?

டோலி என்னும் செம்மறியாடு. 1997 இல் படியாக்கம் செய்யப்பட்டது.

5. இதைச் செய்தவர் யார்?

பேரா. அயன் வில்மட் எடின் பர்க்கிற்கு அருகிலுள்ள ரோக்லின் நிறுவனத்தைச் சார்ந்தவர்.

6. முதன் முதலில் படியாக்கம் செய்யப்பட்ட வீட்டுப் பூனைக் குட்டி எது?

ஆமை ஒட்டுப்பூனைக்குட்டி ஆகும். இது 2002 ஜனவரி யில் உருவாக்கப்பட்டது.

7. இதுவரை படியாக்கம் செய்யப்பட்டுள்ள விலங்கினங்கள் யாவை?

செம்மறியாடு, பன்றி, சுண்டெலி, பசு.

8. மாற்ற மரபணு பெற்ற விலங்குகள் யாவை?

டோலி, நோயா, பூனைக்குட்டி

9. படியாக்கம் செய்யப்பட்ட உலகின் முதல் கன்றுக்குட்டி எது? இதைச் செய்தவர்கள் யார்?

ஜெபர்சன் என்னும் ஆண் கன்றுக்குட்டி இதன் எடை 44.1 கிகி. 1998 பிப்ரவரி 16 ஆம் நாள் பிறந்தது. இதைச் செய்தவர்கள் அமெரிக்க அறிவியலார்.

10. படியாக்க முறையில் உருவாக்கப்பட்ட வேறு பாலூட்டிகள் யாவை?

அமெரிக்காவில் தனியார் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இரு குரங்குகளை 1997 இல் உருவாக்கியது.

11. நோயா என்பது யாது?

நோயா என்பது முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஆண் கன்றுக்குட்டி ஒரு பசுவின் கருப்பையில் படியாக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்பட்டது. (2002)

12. தைவான் செய்த படியாக்க ஆய்வுகள் யாவை?

தைவான் மூன்று பன்றிக்குட்டிகளைப் படியாக்கம் செய்துள்ளது. இவை மனிதக் கண்ணறைகளிலிருந்தும் பன்றிக் கண்ணறைகளிலிருந்தும் மரபுப்பொருட்களை கொண்டுள்ளவை.(2002)

13. இவ்வாய்வுகளின் சிறப்பென்ன?

குருதி உறையாமை நோய்க்கு இதன் மூலம் குணமாக்கும் மருத்துவமுறை கண்டறிய இயலும்.

14. முதல் மனித படியாக்கம் எப்பொழுது செய்யப்பட்டது? செய்தது யார்?

2001 அக்டோபர் 10 இல் செய்யப்பட்டது. செய்தது ஜோஸ் சிபெலி. இவர் அர்ஜண்டினாவில் பிறந்த அறிவியலார்.

15. மனிதப் படியாக்க ஆய்வைத் தொடங்க இருப்பவர் யார்?

இத்தாலிய இன வள மருத்துவர் டாக்டர் செவினோ ஆண்டினோ இதைத் தொடங்கியுள்ளார். இதற்கு ஆங்கில தம்பதியர்கள் ஆயத்தமாக உள்ளனர். இந்த ஆய்வில் 200 இனவளமற்ற தம்பதியர்களை இவர் பயன்படுத்துவார். (2001)

16. மனிதப்படியாக்கம் செம்மறியாட்டுப் படியாக்கம் இவ்விரண்டில் எது செய்வதற்கு எளிது?

மனிதப்படியாக்கம்.

17. மனிதப்படியாக்கம் ஒழுக்கச் சிக்கலை உருவாக்குமா?

முழு மருத்துவப் பயனோடு நின்றால் ஒழுக்கச் சிக்கலை உருவாக்குவதற்கில்லை.

18. மரபணுபாக்கம் அல்லது மரபாக்கம் என்றால் என்ன?

இது 1977 வாக்கில் தோன்றிய புதிய அறிவியல் துறை. இது ஒரு தொழில் நுணுக்கமும் ஆகும்.

19. இந்நுட்பத்தில் அடங்கும் செயல்கள் யாவை?

தேவைப்படும் மரபணுக்களை அடையாளங் கண்டறிந்து பிரிப்பதும், பின் ஆய்வக வளர்ப்புக் கரைசல்களுக்கு அவற்றை மாற்றுவதும் இதில் நடைபெறும் செயல்கள். வேறு உயிரிகளுக்கு மாற்றப்படும் வரை அவை வளர்ப்புக் கரைசலிலேயே இருக்கும்.

20. மரபணுவாக்கத்தின் பெரும் பயன் என்ன?

புற்றுநோய் முதலியவற்றைக் குணப்படுத்தவும் புதிய எதிர்ப்பு பொருள்களை உண்டாக்கவும் பயன்படுவது.

21. மரபணுவாக்கத்தின் அதிக அக்கறை காட்டும் அறிவியலார் யாவர்?

ஆங்கில நாட்டு அறிவியலாரும், அமெரிக்க நாட்டு அறிவியலாரும் ஆகும்.

22. மரபணுவாக்கத்தின் வேறு பெயர் என்ன?

மீன் சேர்ப்பு டி என் ஏ தொழில் நுணுக்கம்.

23. மரபணு நடுநிலை என்றால் என்ன?

ஓர் உயிர்த் தொகுதியில் காணப்படும் நிலைமை. இதில் அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் குறிப்பிட்ட மரபணுக்களைப் பொறுத்த வரை, ஒரே மரபு முத்திரையை ஒரே நிகழ்தகவுடன் கொண்டிருக்கும்.

24. மரபாக்கத்தில் உருவாக்கப்படும் இரு வளர்தூண்டிகள் யாவை?

இன்சுலின், இண்டர்பெரான்.

25. மரபணுப் புரட்சி என்றால் என்ன?

மரபாக்கம் மூலம் வேளாண்மை, மருத்துவம் முதலிய துறைகளில் அமைதியாக நடைபெற்று வரும் முன்னேற்றம்.

26. மரபணுப்பண்டுவம் என்றால் என்ன?

மரபணுக் குறை நீக்கம். குறைபாடுள்ள மரபணுக்களை மரபணுவாக்க நுணுக்கங்கள் மூலம் மாற்றியமைத்தல். ஆய்வுநிலையில் உள்ளது. இறுதியான நோக்கம் 5000 அளவுக்கு மேற்பட்ட மரபணு நோய்களைப் போக்குவதே.

27. மரபுக்குறியம் என்றால் என்ன?

ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மரபு வழிப்பண்புகள் செல்வதைப் பற்றிய நெறிப்பாடு. உயிரணு நிறப்புரியின் மூலக்கூறு அமைப்பினால் இது வெளிப்படுகிறது.

28. டாக்டர் வெர்மா அவர்களின் பங்பளிப்பு யாது?

இவர் அமெரிக்கச் சார்க் நிலையத்தைச் சார்ந்தவர். நச்சிய ஊடக மரபணு மாற்றுகையைப் பயன்படுத்துவதில் முன்னோடி. இது மரபணுப் பண்டுவத்திற்கு ஓர் அணுகுமுறையாகும். இவர் கருத்துப்படி மரபணுக்கள் நோய்வாய்படுவதால் ஏற்படுவதே புற்றுநோய்.

29. மரபணுப் பிணைவு என்றால் என்ன?

ஓர் மரபணு மற்றொரு மரபணுவுடன் நொதியின் மூலம் இணைதல்.

30. உயிரியல் கட்டுப்பாடு என்றால் என்ன?

வேதிப்பொருள்களைத் தவிர்த்து, இரையாக்கிகளைக் கொண்டு தொற்றுயிர்களைக் கட்டுப்படுத்துதல். எ-டு. மீன்களால் கொசுக்களை அழித்தல், பாம்புகளால் எலிகளைக் கொல்லுதல்.

31. உயிரி வன்முறை என்றால் என்ன?

தொண்டையடைப்பான் நோய்ச்சிதல்களை பயன்படுத்துவது ஆகும். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பின் இது வன்முறையாளர்களால் பயன்படுத்தப்பட்டது. இது ஓர்
உயிரி படைக்கருவி ஆகும்.

32. உயிர் ஒழுக்க உடன்பாடு என்றால் என்ன?

இதை 20 ஐரோப்பிய நாடுகள் செய்துள்ளன. மரபாக்கத்தை மனிதன் மீது பயன்படுத்துவதைத் தடுப்பது இதன் முதன்மையான நோக்கம். (1997)