அறிவுக்கு உணவு/வாங்க மனமானால்
Appearance
பிறரிடத்தில் நீ என்ன எதிர்பார்க்கிறாயோ அதையே நீ பிறருக்குக் கொடு!
பிறர் உன்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நீ ஆசைப்படுகிறாயோ, அப்படியே நீ பிறரிடம் நடந்துகொள்!
நீ போற்றப்பட வேண்டுமானால், போற்று! தூற்றப்பட வேண்டுமானால், தூற்று ! பிறர் உன்னை வாழ்த்த வேண்டுமானால் நீ பிறரை வாழ்த்து! உன்னைப் பிறர் வைய வேண்டுமானால், நீ பிறரை வைதுகொண்டிரு!