ஆசிரியர்:குலாம் காதிறு நாவலர்

விக்கிமூலம் இலிருந்து
குலாம் காதிறு நாவலர்
(1833–1908)
குலாம் காதிறு நாவலர் (நாகூரில் 19ஆம் நூற்றாண்டு, 1833 - 1908) ஒரு தமிழ் புலவர் ஆவார். இவர் தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இவர் எழுதிக்குவித்த இலக்கியங்கள் அனேகம். கவிதை இலக்கியங்கள் பத்தொன்பது. உரைநடை இலக்கியங்கள் ஏழு. மொழிபெயர்ப்பு நூல்கள் மூன்று. இலக்கண நூல்கள் இரண்டு. இதர நூல்கள் இரண்டு. காப்பியங்கள், கலம்பகங்கள், கோவைகள், அந்தாதிகள், மாலைகள், உரை நூல்கள் என இவர் 24 நூல்களை எழுதியுள்ளார். அதனை தமிழக அரசு 2007 ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கியது.

படைப்புகள்[தொகு]


Public domain
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TamilNadu Logo