தமிழறிஞர். டாக்டர் வ. சுப. மாணிக்கம் (ஏப்ரல் 17.1917 – ஏப்ரல் 25.1989) (வ.சுப. மா) தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்து பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்த மூதறிஞர். தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் தமிழ் இமயம் என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மா. பன்முக ஆற்றல் உடையவர். மிகச் சிறந்த சிந்தனையாளரான இவர் எழுதிய நூல்கள் இவரைச் சிறந்த கவிஞராகவும், உரைநடை ஆசிரியராகவும், உரையாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், ஆய்வாளராகவும் நமக்குச் சுட்டிக் காட்டும் தன்மை உடையன.
421653Q16311197மாணிக்கம் வ. சுப.மாணிக்கம்வ. சுப.வ. சுப.,_மாணிக்கம்19171989வ. சுப. மாணிக்கம்தமிழறிஞர். டாக்டர் வ. சுப. மாணிக்கம் (ஏப்ரல் 17.1917 – ஏப்ரல் 25.1989) (வ.சுப. மா) தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்து பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்த மூதறிஞர். தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் தமிழ் இமயம் என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மா. பன்முக ஆற்றல் உடையவர். மிகச் சிறந்த சிந்தனையாளரான இவர் எழுதிய நூல்கள் இவரைச் சிறந்த கவிஞராகவும், உரைநடை ஆசிரியராகவும், உரையாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், ஆய்வாளராகவும் நமக்குச் சுட்டிக் காட்டும் தன்மை உடையன.
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.