உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியர்:வை. மு. கோதைநாயகி அம்மாள்

விக்கிமூலம் இலிருந்து
வை. மு. கோதைநாயகி
(1901–1960)
வை. மு. கோதைநாயகி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர் ஆவார். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். இவரைச் சமகால எழுத்தாளர்கள், ‘‘நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி’’ என்று போற்றினர்.

வாழ்க்கை

[தொகு]

பிறப்பு: 01.12.1901 மறைவு: 20.02.1960 பிறப்பிடம்: நீர்வளூர், செங்கல்பட்டு தந்தை: என்.எஸ். வெங்கடாச்சாரி தாய்: பட்டம்மாள் துணைவர்: வை.மு.பார்த்தசாரதி

வை. மு. கோதைநாயகி (திசம்பர் 1, 1901 - பெப்ரவரி 20, 1960), தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர் ஆவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூக நல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். இவரைச் சம கால எழுத்தாளர்கள், “நாவல்ராணி, கதா மோகினி, ஏக அரசி” என்று போற்றினர். இது வரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் இவரைச் சரியாக அடையாளம் காட்டவில்லை. 115 புதினங்களை எழுதியவர். தாம் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று இயங்கினார்.

கோதைநாயகி, திசம்பர் 1, 1901ஆம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம், நீர்வளூரில் வாழ்ந்த என்.எஸ். வெங்கடாச்சாரி, பட்டம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். வைணவ குடும்பத்தைச் சேர்ந்த இவரைச் சிறு வயதில் கோதை என்றும் ஆண்டாள் என்றும் செல்லமாக அழைத்தனர். பிறந்த ஒரு வயதிலேயே தம் தாயை இழந்தார். அதனால், அவரது பாட்டி வேதவல்லி அம்மாளும், அவரது சிற்றப்பா மனைவியான கனகம்மாளும் அவரை வளர்த்தனர். தம் சிற்றப்பா திருத்தேரி ராகவாச்சாரியாரிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்ப ராமாயணம், திருவாய் மொழி முதலிய பல தமிழ் இலக்கியங்களைக் கற்றார்.

சமூக மறு மலர்ச்சிக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவருடைய கற்பனை வளமும் சேர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டின. அவருக்கு ஓரளவு மட்டுமே எழுதத் தெரிந்ததால், இவர் கூறியதை அவரது தோழி பட்டம்மாள் எழுத, இந்திர மோகனா என்ற நாடகத்தை உருவாக்கினார். இந்நாடகத்தை 1924-ஆம் ஆண்டு நோபில் அச்சகத்தார் மூலம் நூலாக வெளியிட்டார். இந்நாடகத்தை இந்து, சுதேசமித்திரன், நியூ இந்தியா உள்ளிட்ட அக்கால இதழ்கள் பாராட்டி எழுதின. இந்நாடகத்தைப் பலர் கேட்டு வாங்கி நடித்தனர். இவ்வாறு தம் முதல் நூலுக்குக் கிடைத்த வெற்றி கோதைநாயகியை மேலும் எழுதத் தூண்டியது எனலாம். அதனைத் தொடர்ந்து ஒரு நாடகத்தையும் எழுதி முடித்தார். அதன் பிறகு பட்டம்மாளிடம் தமிழை எழுதவும், படிக்கவும் கற்கத் தொடங்கினார்.

அம்மையார் இலவசமாகக் குழந்தைப் பேறு மருத்துவம் பார்ப்பதும் உண்டு. தமது உறவினர்களுக்கு மட்டுமின்றித் தம்மை நாடி வந்து குழந்தைப் பேறு பார்க்க வேண்டும் என்று யார் அழைத்தாலும் சாதி சமய வேறுபாடின்றி அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவம் பார்ப்பார். இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று அம்மையார் அதனைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தார்.

1956-ஆம் ஆண்டில் அம்மையாரின் ஒரே மகனான ஸ்ரீநிவாசன் திடீரென்று இறந்தார். அவரது மறைவு அம்மையாரை நிலை குலைய வைத்தது. பெண்களின் வழிகாட்டியாக, சிறந்த விடுதலைப் போராட்ட வீராங்கனையாக, நாடக ஆசிரியராக, நாடக இயக்குநராக, இசை வல்லவராக, பத்திரிகை ஆசிரியராகப் பன்முக ஆற்றலுடன் விளங்கிய நாவல் ராணின வை.மு.கோதைநாயகி அம்மாள், தம் மகன் இறந்து, தாம் மட்டும் இருக்கிறோமே என்று வருந்தி, சரியாக உணவு உண்ணாமல், உறக்கமின்றி உடம்பை வருத்திக் கொண்டார். அதனால், அம்மையார் கொடிய காச நோய்க்கு ஆளானார். தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற்றும், பலனின்றி 1960-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் நாள் மருத்துவமனையிலேயே இறந்தார்.

துணுக்குச் செய்திகள்

[தொகு]
  • புதின எழுத்தாளர்; மேடைப் பேச்சாளர், கவிஞர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர்.
  • இவருடைய முதல் நாடகம் இந்திர மோகனா, 1924ஆம் ஆண்டு நோபில் அச்சகத்தார் மூலம் வெளி வந்து பெரும் வரவேற்பினைப் பெற்றது.
  • அவருடைய அருணோதயம், வத்சகுமார், தயாநிதி ஆகிய நாடகங்கள் பல முறை மேடை ஏற்றப்பட்டுப் பலரது பாராட்டையும் பெற்றவை.
  • முதல் நூல் தந்த ஊக்கத்தால், வைதேகி எனும் புதினத்தை இயற்றினார். அதனை வடுவூர் துரைசாமி ஐயங்கார் திருத்தம் செய்து கொடுத்ததுடன், தாமே, தம் மனோரஞ்சனி இதழில் வெளியிட்டு ஊக்கம் தந்தார்.
  • நின்று போயிருந்த ஜகன்மோகினி மாத இதழை, 1925ஆம் ஆண்டு விலை கொடுத்து வாங்கி அதே பெயரில் வெளியிடத் தொடங்கினார். இவ்விதழ் அவர் இறப்பதற்குச் சில ஆண்டுகள் முன்பு வரை 35 ஆண்டுகள் வெளி வந்தது குறிப்பிடத் தக்கது.
  • மொத்தம் 115 புதினங்களை இவர் எழுதினார். அவற்றுள் இந்து–இசுலாமியர் ஒற்றுமை, பெண் விடுதலை, நாட்டுப் பற்று, மதுவிலக்கு, விதவைத் திருமணம் ஆகியவற்றை வலியூட்டினார்.
  • 1937ஆம் ஆண்டு சொந்த அச்சகம் ஒன்றை நிறுவி, அச்சுத் தொழிலிலும் சிறந்து விளங்கினார்.
  • இசையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அவரது குரல் வளம், உச்சரிப்பு, பாடும் திறன் ஆகியவற்றாலும் புகழ் பெற்றிருந்தார். காங்கிரஸ் மேடைகள் தோறும் நாட்டுப் பற்றினை வலியுறுத்தும் பாடல்களைப் பாடினார்.
  • பாடல்கள் புனைவதிலும் வல்லவர். இவர், அம்பா மனோஹரி, கங்கணாலங்காரி, அம்சப்ரமாரி, தவளி ஹம்சி போன்ற சில அபூர்வ ராகங்களில் இயற்றிய கிருதிகள் எல்லாம் ‘இசை மார்க்கம்’ என்ற புத்தகமாக வெளி வந்துள்ளன.
  • இவருடைய நாவல்கள் பல திரைப் படமாகவும் வெளி வந்தன. அநாதைப் பெண், தயாநிதி, ராஜமோகன், தியாகக் கொடி, நளின சேகரன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. சித்தி படத்துக்காக சிறந்த கதையாசிரியர் விருது அவருக்கு அவர் இறந்த பின் வழங்கப்பட்டது.
  • கள்ளுக் கடை மறியலுக்காகவும், லோதியன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்திலும், அந்நியத் துணி எதிர்ப்பு இயக்கத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். சிறையில் இருந்தபடியே சோதனையின் கொடுமை, உத்தமசீலன் ஆகிய புதினங்களை எழுதினார்.

படைப்புகள்

[தொகு]
  • ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக சாந்தியின் சிகரம்
  • சாருலோசனா ( முதல் பாகம் ) (மெய்ப்பு செய்)
  • இந்திர மோகனா (மெய்ப்பு செய்)
  • அநாதைப் பெண் (1936 – 4 பதிப்புகள்)
  • அபராதி (1946 – 2 பதிப்புகள்)
  • அமர த்யாகி
  • அமிர்த தாரா (1935 – 4 பதிப்புகள்)
  • அமுத மொழி (1944)
  • அமைதியின் அஸ்திவாரம்
  • அருணோதயம்
  • அன்பின் சிகரம் (1937 – 2 பதிப்புகள்)
  • ஆசை ப்ரவாகம்
  • ஆண்டவனின் அருள்
  • ஆத்ம சக்தி
  • ஆனந்த ஸாகர் (1935 -3 பதிப்புகள்)
  • இசைப்புயல்
  • இதய ஒலி
  • இனிய முரசு
  • இன்ப ஜோதி (1936 – 2 பதிப்புகள்
  • உணர்ச்சி வெள்ளம்
  • உண்மைச் சித்திரம்
  • உத்தம சீலன் (1932 – 3 பதிப்புகள்)
  • உளுத்த இதயம் (1938)
  • ஓவியப் பரிசு
  • கடமையின் எல்லை
  • கதம்ப மாலை (1932 – 2 பதிப்புகள்)
  • கருணாலயம்
  • கலா நிலையம் (1941 – 4 பதிப்புகள்)
  • கஸ்தூரீதிலகம்
  • காதலின் கனி (1933 – 2 பதிப்புகள்)
  • காலக்கண்ணாடி
  • கானகலா (1950)
  • கானல் நீர்
  • கிழக்கு வெளுத்தது (1958)
  • கோபாலரத்னம் (1929)
  • கௌரிமுகுந்தன் (1928 – 2 பதிப்புகள்)
  • க்ருபா மந்திர் (1934 -4 பதிப்புகள்)
  • சண்பகவிஜயம் (1927 – 2 பதிப்புகள்)
  • சந்திர மண்டலம் (1937 – 2 பதிப்புகள்)
  • சந்தோஷ மலர்
  • சாந்தகுமாரி
  • சியாமளநாதன் (1930 -2 பதிப்புகள்)
  • சிலாசாஸனம்
  • சுகந்த புஷ்பம் (1930)
  • சுகுணபூஷணம்
  • சுடர் விளக்கு
  • சுதந்திரப் பறவை (1953)
  • சோதனையின் கொடுமை (1933 – 2 பதிப்புகள்)
  • சௌபாக்கியவதி (1950)
  • ஞான தீபம்
  • தபால் வினோதம் (1945 – 2 பதிப்புகள்)
  • தயாநிதி
  • தியாகக் கொடி (1934 – 2 பதிப்புகள்)
  • தூய உள்ளம் (1950)
  • தெய்வீக ஒளி (1947 -2 பதிப்புகள்)
  • தைரியலக்ஷ்மி (1952)
  • நம்பிக்கைப் பாலம் (1951 -2 பதிப்புகள்)
  • நவநீதகிருஷ்ணன் (1928 – 2 பதிப்புகள்)
  • நளினசேகரன் அல்லது செருக்காலழிந்த சீமாட்டி (1930)
  • நியாய மழை (1950)
  • நிர்மல நீரோடை(1953)
  • பக்ஷமாலிகா
  • படகோட்டி
  • படாடோபத்தின் பரிபவம் (1933 -2 பதிப்புகள் )
  • பட்டமோ பட்டம்(1935 – 2 பதிப்புகள்)
  • பத்மசுந்தரன் (1926 – 3 பதிப்புகள்)
  • பரிமள கேசவன் (1932 – 2 பதிப்புகள்)
  • பவித்திரப்பதுமை
  • பாதாஞ்சலி (1951)
  • பிச்சைக்காரக் குடும்பம் (1935 – 2 பதிப்புகள்)
  • பிரதிக்ஞை
  • பிரார்த்தனை (1945 )
  • பிரேம பிரபா (1936 – 2 பதிப்புகள்)
  • புகழ் மாலை
  • புதுமைக் கோலம் (1947)
  • புத்தியே புதையல் (1934 – 2 பதிப்புகள்)
  • பெண் தர்மம்
  • பொங்கும் காதல் அல்லது மங்களபாரதி (1935 – 2 பதிப்புகள்)
  • ப்ரதிபலன்
  • ப்ரபஞ்ச லீலை (1950)
  • ப்ரேமப்ரபா
  • ப்ரேமாஸ்ரமம் (1950)
  • மகிழ்ச்சி உதயம் (1938 – 4 பதிப்புகள்)
  • மங்கள பாரதி
  • மதுர கீதம் (1943 – 4 பதிப்புகள்)
  • மலர்ந்த இதழ்
  • மனசாட்சி (1950)
  • மனத் தாமரை
  • மாதவமணி
  • மாயப் பிரபஞ்சம் (1937 – 2 பதிப்புகள்)
  • மாலதி (1938 – 3 பதிப்புகள்)
  • மூன்று வைரங்கள் (1932 -2 பதிப்புகள்)
  • ராதாமணி (1927 – 4 பதிப்புகள்)
  • ராஜமோஹன் (1936 – 2 பதிப்புகள்)
  • ருக்மணிகாந்தன் (1930)
  • ரோஜா மலர் (1951)
  • வத்ஸகுமார் (1938 )
  • வாத்சல்யம் அல்லது வாக்குத் தத்தம் (1943 – 3 பதிப்புகள்)
  • வாழ்க்கை தோட்டம்
  • வாழ்க்கையின் நாதம் அல்லது வானக்குயில் (1938 )
  • வீர வசந்தா அல்லது சுயேச்சையின் பரிபவம் (1930)
  • வீராங்கனை
  • வெளுத்த வானம்
  • வெற்றிப் பரிசு
  • வைதேகி (1925 – 4 பதிப்புகள்)
  • ஜயசஞ்சீவி (1934 – 4 பதிப்புகள்)
  • ஜீவநாடி (1950)
  • ஜீவியச்சுழல் (1938 -2 பதிப்புகள் )
  • ஜெயபேரிகை
  • ஸரஸராஜன்
  • ஸாரமதி

வெளி இணைப்புகள்

[தொகு]

வை.மு.கோதைநாயகியம்மாள்


Public domain
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TamilNadu Logo